Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் நிர்வாகப் பகுதியை பார்வையிடுகிறது பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு [வெள்ளிக்கிழமை, 4 மே 2007, 15:44 ஈழம்] [செ.விசுவநாதன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை செப்ரெம்பர் மாத இறுதியில் பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெய்த் வாஸ் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான மூன்று மணிநேர விவாதத்தின் போது கெய்த் வாஸ் கூறியதாவது:

இனப் பிரச்சனை தொடர்பில் நாம் மூன்றுவிதமான செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம்.

முதலாவதாக அனைத்துக்கட்சி குழுவின் பிரதிநிதிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குச் சென்று பேச்சுக்கள் நடத்தும்

இரண்டாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் புலிகளின் பேச்சுக்குழுத் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமது கருத்துகளை விளக்க அழைக்க ஒப்புக் கொண்டுள்ளோம்.

மூன்றாவது லண்டனில் எதிர்வரும் யூலை மாதத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் உச்சி மாநாடு ஒன்றை நடத்த உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான பிரித்தானிய தடை எவ்வளவு விரைவில் நீக்கப்படுமோ அவ்வளவு விரைவில் நீக்கப்படும். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அவர்.

நன்றி - புதினம்

நல்ல முயற்சி உலகம் என்ன நாடகமாடுதோ நமக்கு தெரியாது அதாவது இழுத்தடிப்பை மேற்கொள்ல செய்து ஆயுதம் கொடுக்க நினைக்குதோ தெரியாது ஆனால் தமிழ் செல்வன் அண்ணா பிரித்தானிய நாடாலமன்றத்தில் விளக்கம் கொடுப்பதானது பிரித்தானிய அரசின் அங்கீகாரத்துக்கு சமன்.அதற்கு முன்னம் புலிகளின் தடை நீக்கப்பட்டு விடும்

இது காலத்தை இழுத்தடித்து புலிகளை ஏதோவொருவகையில் பலவீனப்படுத்தும் நடவடிக்கையே அன்றி வேறொன்றுமில்லை.

காரணம் 1. செப்ரம்பரில் சுற்றிப்பார்ப்பு (இன்னும் 5 மாதங்களின் பின்பு)

2. புலிகள் தடைநீக்கம் (அதன்பின் எத்தனை மாதங்கள்?)

3. தமிழ்ச்செல்வன் உரை

4 இருதரப்பு சந்திப்பு

இதுவே இலகுவாக ஓரிரு வருடங்களைக்கடந்து விடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவரை போராளிகளின் இழப்புகள் இல்லாது அரச பொருளாதார மையங்கள்மீது வான்புலிகள் குண்டுகள் போட்டு பயிற்சி எடுக்க வேண்டியதுதான். :lol::lol::lol:

பிள்ளைகளுக்கு ஆசைப்பண்டத்தைக் காட்டி இனி சமத்தா இருக்கணும் எண்டு சொல்வது போல இருக்கிறது இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை. இறுதிச் சமருக்காக காத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஆசைகாட்டி ஓரங்கட்டவும் சிறிலங்கா அரசுக்கு மேலும் கால அவகாசத்தை தேடிக்கொடுக்கும் நடவடிக்கையுமாகவே இந்த முன்னெடுப்புகளை கதிகலங்கிப் போன உலகம் இங்கிலாந்து மூலமாக செய்ய முயற்சிக்கிறது. சிறிலங்காவின் இனப்பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் சிரத்தையும் இருந்தால் ஒரு நல்லெண்ண நோக்கில் இங்கிலாந்து இத் திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் இராணுவ நகர்வுகளை தந்திரமாகக் கையாண்டு பலத்தை தக்க வைத்துக் கொண்டு சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகளுக்கு இசையக் கூடிய அளவு இசைந்து போவதன் மூலமே சர்வதேச அங்கீகாரமுள்ள வகையில் தமிழர்கள் தேடும் தீர்வைப் பெற முடியும். சிறீலங்கா அரசுக்கு எதிரான போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசத்துக்கு தொடர்ந்து சாத்வீக மற்றும் சட்ட வழியில் போராட்டங்கள் மூலம் விளக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுடையது.

சும்மா போர் போர் என்று முழங்கிக் கொண்டிருக்காமல் சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப தந்திரமான மற்றும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தாத பலப்படுத்தக் கூடிய வழிமுறைகளைத் தேர்வு செய்து காய் நகர்த்துவதே புலிகளுக்கு உள்ள தேர்வாக இருக்கும். அதை அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாகச் செய்தும் வருகின்றனர் தொடரவும் செய்வர்.அநாவசிய போர் முன்னெடுப்புக்களை புலிகள் சர்வதேச அணுகுமுறைகள் புறந்தள்ளி எடுப்பர் என்பதை தமிழர்கள் எதிர்பார்க்கக் கூடாது..! :lol:

Edited by nedukkalapoovan

இவ்வளவும் சொல்கிற பிரித்தானியா முதலில் தமிழ் பகுதிகளுக்கு ஒரு இடைக்கால நிர்வாக அலகை சிங்கள அரசிடம் இருந்து தமிழரிடம் கொடுக்கட்டும் பார்ப்பம்.

சும்மா வெறும் பம்மாத்து பேய்காட்டும் செயல்கள் தான் இப்போது இவர்கள் செய்வது எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசின் இராணுவ நகர்வுகளை தந்திரமாகக் கையாண்டு பலத்தை தக்க வைத்துக் கொண்டு சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகளுக்கு இசையக் கூடிய அளவு இசைந்து போவதன் மூலமே சர்வதேச அங்கீகாரமுள்ள வகையில் தமிழர்கள் தேடும் தீர்வைப் பெற முடியும். சிறீலங்கா அரசுக்கு எதிரான போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசத்துக்கு தொடர்ந்து சாத்வீக மற்றும் சட்ட வழியில் போராட்டங்கள் மூலம் விளக்க வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுடையது.

சும்மா போர் போர் என்று முழங்கிக் கொண்டிருக்காமல் சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப தந்திரமான மற்றும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தாத பலப்படுத்தக் கூடிய வழிமுறைகளைத் தேர்வு செய்து காய் நகர்த்துவதே புலிகளுக்கு உள்ள தேர்வாக இருக்கும். அதை அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாகச் செய்தும் வருகின்றனர் தொடரவும் செய்வர்.அநாவசிய போர் முன்னெடுப்புக்களை புலிகள் சர்வதேச அணுகுமுறைகள் புறந்தள்ளி எடுப்பர் என்பதை தமிழர்கள் எதிர்பார்க்கக் கூடாது..! :lol:

****************************

வணக்கம் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் இப்போது உங்கள் கருத்தைச் சொல்ல வாரீங்களா? அல்லது புலிகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சிக்கின்றீர்களா? இல்லையெனில் பொதுவான கருத்தை சொல்லுகின்ற மாதிரி வேறுவிடயத்தை சாதிக்க முற்படுகின்றீர்களா? உங்களைப் போன்ற பிரமுகர்களையும் ஆய்வாளர்களையும் சந்தித்தது தான் இந்தத் தமிழ்ச்சமூகம். இசைவு என்று எதைச் சொல்லுகின்றீர்கள்? நாங்கள் என்ன போர்வெறிபிடித்து அலைகின்றவர்களா? உங்கள் கருத்தைப் பார்க்கும்போது எம்மக்களை தினமும் சித்திரைவதை செய்துகொண்டு, அறிக்கைவிடும் பொறுக்கி டக்ளஸின் கொள்கை மாதிரியல்லவா தோன்றுகின்றது.

டக்கிளஸ் என்றாலும் பகிரங்கமா அறிக்கை விடுறார். நம்ம புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அசைலம் வாங்கிர ருசியில சொல்லுற வாக்கு மூலங்களோட ஒப்பிடேக்க....! சரி அதையெல்லாம் விடுவங்க.. எத்தனை பேர் அசைல அடிச்சு சொகுசைத் தேடிக் கொள்ள சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பினும்.. போராளிகளாக தாயகத்தில் உள்ள மக்கள் தான் எதையும் இறுதியாக தீர்மானிக்கப் போறவங்க... நீங்களோ நாங்களோ அவைக்கு அறிவுரை சொல்லவோ.. கட்டளை இடவோ அதிகாரமில்லை. அவங்க புலம்பெயர்ந்தவர்களை நோக்கிக் கேக்கிறது.. சுயநலத்தோடு மட்டும் கிடக்காம.. சொந்த மண்ணின் நிலை குறித்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துங்கள்.. சொல்லும் பொய்களை நிவர்த்திக்க வகை செய்யுங்கள் என்றுதான்..!

புலிகள் தீர்மானிப்பார்கள் எது எப்ப எங்க எப்படி நடக்கனும் என்றதை..! :P :lol:

Edited by nedukkalapoovan

எனக்கு ஏதோ இது ஒரு நல்ல விடயமாகவேபடுகின்றது. இது தமிழீழத்திற்கு பிரித்தானியாவிடம் இருந்து கிடைத்த ஒரு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தின் முதல்படி எனக்கூட சொல்லாம்.

நாங்கள் எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்ப்பது தவறு..

****************************

வணக்கம் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் இப்போது உங்கள் கருத்தைச் சொல்ல வாரீங்களா? அல்லது புலிகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சிக்கின்றீர்களா? இல்லையெனில் பொதுவான கருத்தை சொல்லுகின்ற மாதிரி வேறுவிடயத்தை சாதிக்க முற்படுகின்றீர்களா? உங்களைப் போன்ற பிரமுகர்களையும் ஆய்வாளர்களையும் சந்தித்தது தான் இந்தத் தமிழ்ச்சமூகம். இசைவு என்று எதைச் சொல்லுகின்றீர்கள்? நாங்கள் என்ன போர்வெறிபிடித்து அலைகின்றவர்களா? உங்கள் கருத்தைப் பார்க்கும்போது எம்மக்களை தினமும் சித்திரைவதை செய்துகொண்டு, அறிக்கைவிடும் பொறுக்கி டக்ளஸின் கொள்கை மாதிரியல்லவா தோன்றுகின்றது.

நெடுக்கால போவான் சொன்னதில் பிழையிருப்பதாக தெரியவில்லை.அவர் சொன்னது 100% உண்மை சர்வதேசத்தின் ஆட்டத்துக்கு ஏற்ப ஆடத்தன் வேணும் .அப்போதுதான் எமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.இன்று பண்டையகாலம் போல அல்ல சர்வதேச உறவுகள் முக்கியமானது.தனிநாடாகியவுடன

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கால போவான் சொன்னதில் பிழையிருப்பதாக தெரியவில்லை.அவர் சொன்னது 100% உண்மை சர்வதேசத்தின் ஆட்டத்துக்கு ஏற்ப ஆடத்தன் வேணும் .அப்போதுதான் எமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்.இன்று பண்டையகாலம் போல அல்ல சர்வதேச உறவுகள் முக்கியமானது.தனிநாடாகியவுடன
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகளாக தாயகத்தில் உள்ள மக்கள் தான் எதையும் இறுதியாக தீர்மானிக்கப் போறவங்க... நீங்களோ நாங்களோ அவைக்கு அறிவுரை சொல்லவோ.. கட்டளை இடவோ அதிகாரமில்லை

நான் நெடுக்கின் கருத்தை 100 வீதம் ஏற்றுக் கொள்கின்றேன்

ஈழவன், என்ன இப்பிடி மாறியிட்டிங்கள்??? கோவிக்காதைங்கோ... சும்மா பகிடிக்குத்தான். நீங்களும் முந்தி அந்தாளோட ஏட்டிக்கு போட்டிய நிண்டமாதிரி இருந்திச்சு. :( :P

குறுக்ஸ் உம் நல்ல யதார்த்தமான கருத்துகளை வித்தியாசமான கோணங்களில் சிந்திக்கும் படியாக எழுதிவந்தார். ஆற்றை கண் பட்டுதோ, அந்தாளை இந்தப் பக்கமே காணவில்லை. :(

நான் அவருக்கு ஏட்டிக்கு போட்டியாக இருந்ததில்லை அவரது கருத்துகளுடன் முரன்பட்டு இருகின்றேன்.ஆனால் கருத்தை வாசிக்காமல் யார் எழுதியது என பார்த்து அதற்கு பதில் எழுதுவதை எதிரிகின்றேன்.நெடுக்கின் கருத்து யதார்த்தபூர்வமானது ஆக அவரின் கருத்துடன் உடன்படுகின்றேன் இதனால் நான் மாறவும் இல்லை மாறபோவதுமில்லை :o

நெடுக்காலபோவானின் கருத்தில் எந்த தப்பும் இல்லையே பிறகென்ன வம்பு

தமிழிழதின்ர இறுதி முடிவைப்பற்றி முடிவெடுக்கப்போவது புலிகளும் தமிழிழத்தில் வாழுகின்ற அல்லல்படுகின்ற மக்களுமே தவிர வேறெவருமில்லை அதற்காக புலம்பெயர் உறவுகள் தமது கடமை அல்ல என இருந்திடவும் முடியாது தொடர்நது சட்டரீதியில் போராடவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் இராணுவ பலத்தில் முன்னேறியிருக்கிறார்கள் என்பதுதான் இதற்கான காரணம். ஒவ்வொரு தடவையும் புலிகளின் இராணுவ பலம் அதிகரித்து அரசு அடிவாங்கும் சமயங்களில் எல்லாம் இவ்வாறு யாராவது ஓடிவருவது வழமைதான். இதுவே புலிகள் சிங்கள அரசுகளிடம் தோல்வியடைந்து கொண்டிருந்தால் எவரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். கொஞ்சக் காலமாக புலிகள் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த போது பேசாமல் இருந்தார்கள். இப்ப மீண்டும் வருகினம். எதுவோ புலிகள் தாம் வகுத்த செயற்திட்டத்திலேயே செயற்படுவார்கள். அதே நேரம் தமிழ்செல்வன் அவர்களை நாடாளுமன்றத்திற்கு வரசொல்லி கேட்டால் தடையை எடுக்க சொல்லி கேட்கலாம். வந்து கதைக்கிறதிலயும் பிரச்சனை இல்லை. ஏனெனில் லண்டன் தடை எடுக்குமானால் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் என்ன தந்திரம் மிக்கவர்கள் என்பதை நாங்களே இப்படிச் சிந்திக்கின்ற போது, தலைமை நிச்சயம் விரிவாகச் சிந்திக்கும்.

யப்பானில் நடந்த உதவிவழங்கும் மாநாட்டில், சில ஒப்பந்தங்களைத் திணித்து, போராட்டத்தை முடக்க சில வல்லரசுகள் முயன்றபோது, அங்கே செல்வதைப் புலிகள் முதலே புத்திசாலித்தனமாகத் தவிர்த்துக் கொண்டார்கள்.

பிரித்தானியா பாராளுமன்றத்தைப் பார்க்க வாங்கோ, என்று பிரித்தானியா அரசு அழைப்பதில் நிச்சயம் ஏதும் திட்டமிருக்கலாம். இல்லை... தமிழனுக்கு உதவ வேண்டும் என்ற மனசும் இருக்கலாம்( நம்புங்கோப்பா :P )

எது எப்படியோ, எதற்கும் விலை போகும் நிலையில் தமிழீழம் இல்லை என்பது மட்டும் தான் உண்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இராணுவ பலத்தில் முன்னேறியிருக்கிறார்கள் என்பதுதான் இதற்கான காரணம். ஒவ்வொரு தடவையும் புலிகளின் இராணுவ பலம் அதிகரித்து அரசு அடிவாங்கும் சமயங்களில் எல்லாம் இவ்வாறு யாராவது ஓடிவருவது வழமைதான். இதுவே புலிகள் சிங்கள அரசுகளிடம் தோல்வியடைந்து கொண்டிருந்தால் எவரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். கொஞ்சக் காலமாக புலிகள் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த போது பேசாமல் இருந்தார்கள். இப்ப மீண்டும் வருகினம். எதுவோ புலிகள் தாம் வகுத்த செயற்திட்டத்திலேயே செயற்படுவார்கள். அதே நேரம் தமிழ்செல்வன் அவர்களை நாடாளுமன்றத்திற்கு வரசொல்லி கேட்டால் தடையை எடுக்க சொல்லி கேட்கலாம். வந்து கதைக்கிறதிலயும் பிரச்சனை இல்லை. ஏனெனில் லண்டன் தடை எடுக்குமானால் ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றக் கூடும்.

****************************************************

ஜயா காவடி ஜயா கொஞ்சம் உறைக்கச் சொல்லுங்கோ...

இந்த உலகோட ஒத்துப்போகவேண்டும் என்பதிற்காகத் தான் விடுதலைப்புலிகள் போராடாமலே எத்தனையோ போராளிகளையும், பொது மக்களையும் இழந்துள்ளார்கள்.

அப்போதுஉங்களால் கூறப்படும் இந்த சர்வதேச நாடுகளுக்கில்லாத கரிசினை இன்று ஒரு சின்னத் தட்டல் தட்டியவுடன் ஓடிவருகினம் பார்த்தியலோ? இது எங்களிலை உள்ள கரிசினையோ? இல்லவே இல்லை சிங்களவனின் மனதைத் திருப்திப் படுத்த இவங்கள் என்ன வேஷமென்றாலும் போடுவாங்கள் ஏனய்யா நீங்களும் புரிந்துகொள்கின்றீர்களில்ல

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொன்னது சரி தான். புலிகளும் அப்படித்தான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தப் போகிறார்கள்.ஆனால் வல்வை காரமாகச் சொல்வதும் கடந்த காலப் பாடங்களை அடிப்படையாக வைத்துத்தான். அமெரிக்காவின் பின்னால் நாய்க்குட்டி போல செல்வது தான் பிரிட்டன். இது இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தனது வீரர்களைப் பலி கொடுத்து இங்கிலாந்தை ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியதால் விளைந்த நன்றியுணர்வு. பின்னர் அது பிரிக்க முடியாத நட்பாக மாறி விட்டது. புலிகள் ஒரு அவதானமான வரவேற்பை அவர்களுக்குக் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். அதற்கு முதல் பல தடைகள் வரப் போகின்றன. அவை அமெரிக்காவை விடவும் கடினமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, சிறி லங்கா இந்த ஆரம்ப அங்கீகாரத்தை ஆட்சேபிக்கும். ஆனால் பிரிட்டன் அதைச் செவிமடுக்குமளவுக்கு சிறி லங்கா பெரிய சக்தியுள்ள நாடல்ல.அதனால், சிறி லங்கா பிரிட்டனுடன் வர்த்தக உறவுகளுடைய பிராந்திய சக்தியின் தயவை நாடும். இப்பிராந்திய சக்திக்கும் புலிகளுக்கு சிறிதளவு அங்கீகாரமாவது கிடைப்பது பெரிய கொள்கை ரீதியான பின்னடைவாகி விடும். அதனால் பின்புலத்தில் காய் நகர்த்தி பிரிட்டனை மனம் மாறச் செய்யக்கூடும். அந்த நேரம் தான் அமெரிக்கா பிரிட்டனின் முடிவுக்கு ஒரு கடைசி நேர ஊக்கியாகத் தொழிற்படக்கூடும். ஆனால் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று, அமெரிக்காவுக்குப் புலிகள் மேலுள்ள பகையுணர்வு நேரடியான ஒன்றல்ல. அது இலங்கையுடனான ராஜதந்திர உறவை அடிப்படையாகக் கொண்டது. ஜனநாயகக் கட்சியின் கை ஒங்கும் இத்தருணத்தில் தமிழர் தரப்பு நியாயங்களைச் சில காங்கிரஸ் உறுப்பினர்களாவது விளங்கிக் கொள்ள ஒரு சிறிய வாய்ப்புள்ளது என்பது என் அப்பாவித்தனமான நம்பிக்கை. சுருக்கமாச் சொன்னால், இது நல்ல சந்தர்ப்பம்; துள்ளிக்குதிக்காமல் அமைதியாகக் காரியம் பார்ப்பார்கள் புலிகள்; இந்தியா தான் இதற்கு முதல் ஆப்பு வைக்கும் சாத்தியம் உண்டு; அமெரிக்கா துணை ஆப்பு வைக்கலாம் அல்லது வைக்காமல் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அவர்களே !

இன்று ஒரு வானொலியில் செய்தியின் ஆய்வு கேட்கக்கூடிய சந்தர்ப்பம் (5.5.2007) எனக்கு கிடைத்தது. அதில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விடயமே இது தான்.

அதைவிட முக்கியம் இதில் கலந்து கொண்டவர் தாயகத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் அவர்கள்.

இதில் அதிசயிக்கத்தக்க விடயம் என்னவென்றால் நான் வெளிநாட்டில் ஓரளவாவது பாதுகாப்பாக இருந்து கொண்டு என்ன கருத்தை முன்வைத்தேனோ, அதே கருத்தை அப்படியே வெளிப்படையா துணிச்சலாக கிட்டத்தட்ட 30 நிடங்கள் தெளிவு படுத்தியிருந்தார்.

நான் உங்களோடு விவாதிப்பதிற்காக இந்தக்கருத்தை திரும்பத் திரும்ப கூறவில்லை. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.

வித்தியாதரின் கருத்தின்படி பிரிட்டிஸ் அரசு முதலில் தன்னை தயார் படுத்த வேண்டும். எப்படியென்றால் இரண்டு தரப்பையும் சமதரப்பாக ஏற்கவேண்டும். இதற்காக எங்களுக்கெல்லாம் என்ன தடைகள் விதித்தீர்களோ அதே தடைகளை ஸ்ரீலங்கா அரசுக்கும் விதிக்க வேண்டும். அல்லது எங்கள்மீதுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நடு நிலைமையாக எப்படி எங்களால் ஏற்கமுடியும்?

இன்றைய இந்த திடீர் மாற்றங்கள் எல்லாம் எங்களின் பலம் தான் நிர்ணயிக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

Edited by Valvai Mainthan

மீண்டும் காலநீட்சீக்கான ஒரு தந்திரமே பிரித்தானியாவின் அறிவிப்புக்கள். இவர்களால் தமிழர்களுக்கு பேரினவாத சிங்கள அரசிடமிருந்து உருப்படியான தீர்வொன்றை பெறறுத்தருவது கடினமே. நம்மவர்கள் சுயாட்சி பற்றிப்பேசிக்கொண்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரின் கருத்தின்படி பிரிட்டிஸ் அரசு முதலில் தன்னை தயார் படுத்த வேண்டும். எப்படியென்றால் இரண்டு தரப்பையும் சமதரப்பாக ஏற்கவேண்டும். இதற்காக எங்களுக்கெல்லாம் என்ன தடைகள் விதித்தீர்களோ அதே தடைகளை ஸ்ரீலங்கா அரசுக்கும் விதிக்க வேண்டும். அல்லது எங்கள்மீதுள்ள தடையை நீக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நடு நிலைமையாக எப்படி எங்களால் ஏற்கமுடியும்?

இன்றைய இந்த திடீர் மாற்றங்கள் எல்லாம் எங்களின் பலம் தான் நிர்ணயிக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இக்கருத்துத்துத்தான் என்னுடையதும்

ஆனால் நான் வெளிநாட்டில் வாழ்வதால் அதைச்சொல்லும் தகுதியை இழந்து விட்டேனா???

அப்படித்தானே குறுக்கால போவார் நினைக்கினம்

வெளியில போனாலும் பழசுகளை மறக்காமலிருக்கின்றானே என்றாவது

ஒரு பார்க்கின்றார்களா?

எதற்கெடுத்தாலும் ஓடினவ

ஓடினவ

ஓடினவ

விமானம் வந்து அடித்தபின்பும்

ஓடினவ

ஓடினவ

எங்கயிருந்து வந்து அடிக்கிது

புறஞ்சொல்வார் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். இங்கு நாம் எமது கருத்துக்களைத் தான் கூறுகின்றோம். அதை சொல்வதற்கு உரிமையில்லை என்பதற்கு இவர்கள் யார்? நாம் எங்கிருந்தாலும் எமது கடமைகளைச்சரிவரசெய்தால் எவருக்கும் அஞ்சத்தேவையில்லை. மற்றும்படி இவர்களை கருத்தில் எடுக்கத்தேவையில்லை. மாரித்தவளை தானே கத்திச்சாவும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

குகா அண்ணை! விவாதத் தலைப்புக்குப் பொருந்தாவிட்டாலும் இதைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். பல காரணங்களுக்காக நாங்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் நாம் இன்னும் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தான். தாயகத்தில் இருந்து துன்புறும் எமது சகோதரங்களுக்கு கருத்துச் சொல்ல உள்ள அதே உரிமை எங்களுக்கும் உண்டு. இதை யாரும் மறுத்து உங்களிடமிருந்து பறிக்க முடியாது. இவ்வுரிமை எமது பிறப்பால் வந்ததும் எமது தேசியத் தலைமையினால் அங்கீகரிக்கப்பட்டதுமாகும். இதை மறுத்துரைக்கும் பேர்வழிகளை நீங்கள் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம். போராட்டப் பங்களிப்பில் தாயகத் தமிழர்களையும் புலம் பெயர் தமிழர்களையும் வேறுபட்ட முக்கியத்துவத்துடன் பார்ப்பது மனித உடலில் கால்களையும் கைகளையும் வெவ்வேறாகப் பார்ப்பது போன்றது!

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் ஜஸ்ரின் மற்றும் சுபித்திரன் அவர்களே!

நாட்டில் சில மாற்றங்கள் ஏற்படுகின்ற போதெல்லாம் விடுதலைப் போராட்டத்தை நிமிர்த்தி விட்ட பெரும்பங்கு புலம்பெயர்ந்த தமிழர்களைத் தான் சாரும், இதை தலைவரே அடிக்கடி கூறுவார்.

அதே நேரத்தில் குறுக்ஸின் கருத்தையும், அவரின் ஆதங்கத்தையும் நாங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

அதாவது புலம்பெயர்ந்து வாழும் எங்களில் எத்தனை வீதத்தினர் சரியான முறையில் செயல்படுகின்றோம், பங்களிப்புச் செய்கின்றோம்.

எனது அனுபவரீதியாக சொல்லுகின்றேன் அதிகமாக பங்களிப்பு செய்கின்றவர்களே திரும்பத் திரும்பச் செய்கிறார்களே ஒழிய, பங்களிப்புச் செய்யாதவர்களே அதிகம் பேர் இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.