Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி. சிவசேகரம் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி

மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில்

கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்?

(கண்களால் மேலுங் கீழுந் துளாவல்)

இது உன்னுடைய கடவுச்சீட்டா?

விஸா எங்கு பெற்றாய்?

கொஞ்சம் பொறு

யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி?

எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு?

விமானப் பயணச்சீட்டை எடு

கொஞ்சம் பொறு

மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக

அடுத்த ஆள்

அடுத்த ஆள்

அடுத்த...

நீ வரலாம்

அந்தப் பக்கமாக

வைத்தியபரிசோதனைக்குப் போ

சட்டையைக் கழற்று

எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில்

மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில்

கொஞ்சம் பொறு

இந்தா உன் கடவுச்சீட்டு

நீ போகலாம்

பொதி மண்டபம் இவ்வழி

தனியே சுற்றி வரும் பெட்டி

தள்ளுவண்டில்

சுங்கப்பகுதி இவ்வழி

தீர்வைக்குரியது எதுவுமில்லையேல்

பச்சை வண்ணப் பக்கமாகப் போ

சற்றே நில்

உன்னைத் தான்

அங்கெயே நில்

எங்கிருந்து வருகிறாய்?

எங்கு விமானம் ஏறினாய்?

அதற்கு முன்பு எங்கு நின்றாய்?

இங்கு எத்தனை நாள்?

என்ன அலுவல்?

யாருக்காகவும் ஏதேன் கொண்டு

வருகிறாயா?

பெட்டியை நீயே அடுக்கினாயா?

பெட்டியைத் திற

எதையும் தொடாதே

பெட்டியை மூடு

என்னுடன் வா

இந்த அறைக்குள் நுழை

கைகளை உயர்த்து

சட்டையைக் கழற்று

எல்லாவற்றையும்

சப்பாத்தையும் தான்

கால்களை அகல விரி

(கைகளால் உள்ளும் புறமும் துழாவல்)

சரி, சட்டையை மாட்டு

நீ போகலாம்.

வெளியே செல்லும் வழி

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

கறுப்பு......!

http://www.noolaham.net/library/books/01/21/21.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாந் தெரிந்தவன்

அவனை

ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்தேன்.

பெண் விடுதலை பற்றியும்

பெண்களின் சமத்துவம் பற்றியும்

நீளமாய் நிறையவே பேசினான்.

ஆணாதிக்கம், வர்க்கச்சுரண்டல், ஒடுக்குமுறை,

போராட்டம், புரட்சி, சோஷலிஸம்,

பொதுவுடமைப் புதுவுலகம்

பற்றியும் பேசினான்.

பெண்களின் பிரச்சனைகள்

கருத்தடை, கருக்கலைப்பு,

ஆண்களின் அடியுதை, நிந்தனைகள்,

பாலியல் வன்முறை, பலாத்காரப் பாலுறவு

தொடர்பாகப் பேசப்

பெண்கள் வாய்திறந்த போது

அவர்கட்கு எதுவுமே தெரியாது என்றான்.

புரட்சி வந்தவுடன்

எல்லாமே சரியாகி விடுமென்று

மேசையிலே

ஓங்கி அடித்து உரக்கக் கூவினான்.

பெண்களின் பிரச்சனைகள் பற்றி

எந்தப் பெண்ணையும் விட

அவனே

நன்றாக அறிவான்.

அவன் சொல்லும் புரட்சி வந்தபின்

எல்லாமே சரியாகி விடும்.

மாத விடாயும்

பிரசவ வலியுங் கூட

இல்லாது போய்விடும்.

ஏனென்றால், அவன்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸம்பவாமி யுகே யுகே

வியூகத்தை உடைத்தல் அரிது

ஆயினும் இயல்வது

வெளிவரல் இயலாதது

அறிவாய் நீ

ஆயினும்

ஆயுதம் பூண்ட நாற்படைகள் இழைத்த

அரண் பிளந்து உட்புகுந்தாய்

சாவு பெரும்பாலும் நிச்சயம்

ஆயினும்

அக்களத்தில் அக்கணத்தின் தேவையும்

அக்கணத்தின் மனிதன் நீ என்பதும்

அறிவாய் நீ

ஆயுதங்களும் அத்திரங்களும் கை நழுவ

மாரதர்களின் மேனியை நடுக்கியது

உன் மனவுறுதி

சூழநின்று தாக்கிய மாவீரர் பலபேரைத்

தனியொருவனாய்த் தாங்குதல்

இயலுமோ என எண்ணாது

விழுந்த தேர்ச்சில்லையும் ஆயுதமாகத் தூக்கிற்று

உன் மனவுறுதி

ஏ அபிமன்யு

போரின் விதைகளைத் தூவிய

துகிலுரிதற் படலத்தின் கொடுமையுங் கோழைமையும்

மீளவும் நிகழ்ந்தன உனைச் சூழ

உன் மரணம்

அறம் பெயர்ந்தோர்க்குக் கூற்றானது

பாரதப் போரின் திருப்புமுனையானது

"தருமம் நலிந்து அதருமம் தழைக்குங்கால்

வருவேன் யான் யுகந்தொறும் யுகந்தொறும்"

எனக் கூறிப் போனான்

உன் மாமன் வரவில்லை

அவதார வேடங்கள் காவிபூணும் யுகமொன்றில்

ஏ அபிமன்யு

ஆர்ப்பாட்டமின்றி

அவதரித்துப் போகிறாய்

பெண்ணாக

ஆணாக

விடுதலைப் படையாக

பணிய மறுக்கும் தேசமாக

ஈற்றில்

இந்த யுகம் உன்னுடையது

http://www.noolaham.net/library/books/02/114/114.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உளவாளிகள்

வேலி முருக்கங்கொப்பை முறிச்சவன்

வெளிச் சிவர் மூலையில் ஒண்டுக்கிருந்தவன்

கொடியில தொங்கின சீலை எடுத்தவன்

வீடியோக் கசற்றைக் கொண்டு போனவன்

எல்லா விவரமும் நல்லாக் கேட்டு

விளம்பரமாக அறிஞ்சு சொல்ல

எங்கடை உளவுப் படையப் போல

எந்த இயக்கமும் செய்யமாட்டின

எங்களை நீங்கள் கவனிப்பியளெனில்

தண்டம் விதிச்சுக் களவு போனதைப்

பறிச்சுத் தருவம்

அவசரமெண்டால்

விளக்குக் கம்பில தொங்கவும் விடுவம்

சமூக விரோதியள் தலையளை வெட்டிச்

சந்தி நடுவில வரியா வைப்பம்

எதிரி இயக்க ஆக்கள் செய்யுற

தூள் யாவாரம் கள்ளக் கடத்தல்

ஆர் ஆரோடை படுத்து எழும்பினை

எல்லாக் கதையும் நல்லா அறிவம்

கொழும்பில பஸ் ஸ்ற்றான்ட் குண்டு வைச்சது

சமூகத் தொண்டரைச் சாகக் கொண்டது

விரிவுரையாளரைத் தெருவில சுட்டது

எங்களக் கேட்டா என்ன தெரியும்?

அண்ணை

கோளி கீளி களவு போனதேல்

சொல்லுங்கோவன் பிடிச்சுத்தாறம்

Kirubans..சம்பவாமி யுகே யுகே.. எனக்கு மிகவும் பிடித்தது. இணைப்புக்கு நன்றிகள்.

:lol:

நல்வரவு

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி

மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில்

கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்?

(கண்களால் மேலுங் கீழுந் துளாவல்)

இது உன்னுடைய கடவுச்சீட்டா?

விஸா எங்கு பெற்றாய்?

கொஞ்சம் பொறு

யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி?

எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு?

விமானப் பயணச்சீட்டை எடு

கொஞ்சம் பொறு

மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக

அடுத்த ஆள்

அடுத்த ஆள்

அடுத்த...

நீ வரலாம்

அந்தப் பக்கமாக

வைத்தியபரிசோதனைக்குப் போ

சட்டையைக் கழற்று

எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில்

மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில்

கொஞ்சம் பொறு

இந்தா உன் கடவுச்சீட்டு

நீ போகலாம்

பொதி மண்டபம் இவ்வழி

தனியே சுற்றி வரும் பெட்டி

தள்ளுவண்டில்

சுங்கப்பகுதி இவ்வழி

தீர்வைக்குரியது எதுவுமில்லையேல்

பச்சை வண்ணப் பக்கமாகப் போ

சற்றே நில்

உன்னைத் தான்

அங்கெயே நில்

எங்கிருந்து வருகிறாய்?

எங்கு விமானம் ஏறினாய்?

அதற்கு முன்பு எங்கு நின்றாய்?

இங்கு எத்தனை நாள்?

என்ன அலுவல்?

யாருக்காகவும் ஏதேன் கொண்டு

வருகிறாயா?

பெட்டியை நீயே அடுக்கினாயா?

பெட்டியைத் திற

எதையும் தொடாதே

பெட்டியை மூடு

என்னுடன் வா

இந்த அறைக்குள் நுழை

கைகளை உயர்த்து

சட்டையைக் கழற்று

எல்லாவற்றையும்

சப்பாத்தையும் தான்

கால்களை அகல விரி

(கைகளால் உள்ளும் புறமும் துழாவல்)

சரி, சட்டையை மாட்டு

நீ போகலாம்.

வெளியே செல்லும் வழி

லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு

கறுப்பு......!

சூப்பர், மணியாக எழுதப்பட்டுள்ளது, வாசிக்க, வாசிக்க சிரிப்புச் சிரிப்பாய் வருகின்றது. :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர், மணியாக எழுதப்பட்டுள்ளது, வாசிக்க, வாசிக்க சிரிப்புச் சிரிப்பாய் வருகின்றது. :o:( :(

சிரிப்புச் சிரிப்பாக இருக்கின்றதா? கடந்த பத்து நாட்களில் இருதடவைகள் லண்டன் ஹீத்ரோவை விட்டுப் பிற இடங்களிற்குப் போகும்போது எனக்கு நேர்ந்த அனுபவங்களின் எரிச்சலில் (எக்ஸ் கதிர் இயந்திரம் சத்தம் போடாதபோதும்) இணைத்த கவிதை அது! :angry:

பெட்டியை நீயே அடுக்கினாயா?

பெட்டியைத் திற

எதையும் தொடாதே

பெட்டியை மூடு

என்னுடன் வா

இந்த அறைக்குள் நுழை

கைகளை உயர்த்து

சட்டையைக் கழற்று

எல்லாவற்றையும்

சப்பாத்தையும் தான்

கால்களை அகல விரி

(கைகளால் உள்ளும் புறமும் துழாவல்)

சரி, சட்டையை மாட்டு

நீ போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதுல எல்லாந்தெரிஞசவன் ஆர்? கவிஞர் சிவசேகரமா?

அவர் அப்படிச் சொல்லவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய கவிதையில் அவர் சந்தித்ததாகக் கூறும் கற்பனைப் பாத்திரம் தனக்குத்தெரிந்த எல்லாவற்றையும் பற்றிக் கூறுகின்றது. ஆகவே அந்தப் பாத்திரம் அவரைப் பிரதிபலிப்பதாகவே உள்ளதோ என எண்ணினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலும் பல "எல்லாம் தெரிந்தவர்கள்" உள்ளனர்.. அவர்களுக்குச் சமர்ப்பணமாகத்தான் சிவசேகரத்தின் கவிதையைத் தெரிவு செய்தேன்! :unsure:

நல்ல கவிதைகள். இணைப்பிற்கு நன்றி கிருபன்.

அருமையான படைப்பு

உண்மைகள் தெளிவாக...

நல்ல கவிதைகள்.. இணைத்தமைக்கு நன்றிகள். :lol:

அழகான நியவரிகள் கொண்ட கவிதைகள் இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஸம்பவாமி யுகே யுகே

வியூகத்தை உடைத்தல் அரிது

ஆயினும் இயல்வது

வெளிவரல் இயலாதது

அறிவாய் நீ

ஆயினும்

ஆயுதம் பூண்ட நாற்படைகள் இழைத்த

அரண் பிளந்து உட்புகுந்தாய்

சாவு பெரும்பாலும் நிச்சயம்

ஆயினும்

அக்களத்தில் அக்கணத்தின் தேவையும்

அக்கணத்தின் மனிதன் நீ என்பதும்

அறிவாய் நீ

ஆயுதங்களும் அத்திரங்களும் கை நழுவ

மாரதர்களின் மேனியை நடுக்கியது

உன் மனவுறுதி

சூழநின்று தாக்கிய மாவீரர் பலபேரைத்

தனியொருவனாய்த் தாங்குதல்

இயலுமோ என எண்ணாது

விழுந்த தேர்ச்சில்லையும் ஆயுதமாகத் தூக்கிற்று

உன் மனவுறுதி

ஏ அபிமன்யு

போரின் விதைகளைத் தூவிய

துகிலுரிதற் படலத்தின் கொடுமையுங் கோழைமையும்

மீளவும் நிகழ்ந்தன உனைச் சூழ

உன் மரணம்

அறம் பெயர்ந்தோர்க்குக் கூற்றானது

பாரதப் போரின் திருப்புமுனையானது

"தருமம் நலிந்து அதருமம் தழைக்குங்கால்

வருவேன் யான் யுகந்தொறும் யுகந்தொறும்"

எனக் கூறிப் போனான்

உன் மாமன் வரவில்லை

அவதார வேடங்கள் காவிபூணும் யுகமொன்றில்

ஏ அவதரித்துப் போகிறாய்

பெண்ணாக

ஆணாக

விடுதலைப் படையாக

பணிய மறுக்கும் தேசமாக

ஈற்றில்

இந்த யுகம் உன்னுடையது

http://www.noolaham.net/library/books/02/114/114.htm

அபிமன்யு

ஆர்ப்பாட்டமின்றி

அவன் வரமாட்டான்

மாமன் வரமாட்டான்!

அதனால்தான் கர்ப்பத்திலே

வைத்தான் ஆப்பு!

அபிமன்யுவின் அபயக் குரலையும்

அப்பனை கேட்க விடாமல்

சாரதியாய் நின்று

சங்கூதியதும் அவனே!

அவனும் வரமாட்டான்

அப்பனையும் வரவிடமாட்டான்!!!.

பி.கு: கிருபன் கவிதைகள் யதார்த்தத்தை முகத்திலறைகின்றன.

தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமாதானப் புறாக்கள்

சமாதான தேவதையை அதிகாலையில் சந்தித்தேன்.

வாடிய முகத்துடன்

உழவர்களின் அரிவாள்களிற்

குருதி படிந்திருக்கக் கண்டதாய்ச் சொன்னாள்.

"உன் வெள்ளைப் புறாக்களை

அவர்களிடம் அனுப்புவாய்"

என ஆலோசனை சொன்னேன்.

அனுப்பினாள்.

உழவர்கள்

தங்களிடமிருந்த சொற்பத் தானியத்திற் பகுதியைப்

புறாக்களிடம் கொடுத்தார்கள்.

"உங்கள் அரிவாள்களில் ஏது இந்தக் குருதி?"

எனப் புறாக்கள் கேட்டன.

"எங்களது விளைச்சலைப் பறிக்க வந்த

ஏவலர்களது குருதிதான்" என்றார்கள்.

அது சரியா தவறா என விவாதித்தவாறு

புறாக்கள் மீண்டன.

சமாதான தேவதையை முற்பகலிற் சந்தித்தேன்.

முகவாட்டம் மாறாமல்

ஆதிவாசிகளின் கைக் கோடரிகளிற்

குருதி வழியக் கண்டதாய்ச் சொன்னாள்.

"உன் வெள்ளைப் புறாக்களை

அங்கேயும் அனுப்புவாய்"

என ஆலோசனை சொன்னேன்.

அனுப்பினாள்

ஆதிவாசிகள்

கிண்டியெடுத்த கிழங்குகளைப்

புறாக்களுடன் பகிர்ந்தார்கள்.

"உங்கள் கோடரிகளில் வழிவது எவரது குருதி?"

எனப் புறாக்கள் கேட்டன.

"எங்களது மண்ணைப் பறிக்க வந்த

மூர்க்கர்களது குருதிதான்" என்றார்கள்.

அது நியாயமா இல்லையா என்று தர்க்கித்தவாறு

புறாக்கள் மீண்டன.

சமாதான தேவதையை நண்பகலிற் சந்தித்தேன்.

சோக மிகுதியுடன்

தொழிலாளர்களின் கருவிகளிற்

குருதி உறைந்திருக்கக் கண்டதாய்ச் சொன்னாள்.

"உன் வெள்ளைப் புறாக்களை

அவரிடத்தும் அனுப்புவாய்"

என ஆலோசனை சொன்னேன்.

அனுப்பினாள்.

தொழிலாளர்கள்

தங்கள் மதிய உணவுக்காய் வைத்திருந்த ரொட்டிகளிற்

புறாக்கட்கும் ஈந்தார்கள்.

"தொழிற்கருவிகளிலுங் குருதி ஏது?" எனப்

புறாக்கள் கேட்டன.

"எங்கள் உரிமைக்கான போராட்டத்தை

உடைக்க வந்த உலுத்தர்களது குருதிதான்"

என்றார்கள்.

கருத்து வேறுபாட்டுடன் புறாக்கள் மீண்டன.

சமாதான தேவதையை அந்தியிற் சந்தித்தேன்.

துயர் வழியும் முகத்துடன்

உலகமெல்லாம் போர் மூண்டு

மண்ணெல்லாம் குருதி பாய்ந்திருக்கக்

கண்டதாய்ச் சொன்னாள்.

"உன் வெள்ளைப் புறாக்களைப்

படையினரிடம் அனுப்புவாய்"

என ஆலோசனி சொன்னேன்.

அனுப்பினாள்.

புறாக்கள் வாய்திறக்கு முன்னமே

படையினர்

தமது தானியங்கித் துப்பாக்கிகளை ஒருகணம் நிறுத்தி

"இது நமது தொழில்ல்

எங்கள் எசமானர்களிடம் கேளுங்கள்" என்றார்கள்.

துவக்குகள் மீண்டும் இயங்கின.

புறாக்கள் போரின் எசமானர்களிடம் விரைந்தன.

நிலவுடமையாளர்களுடனும் முதலாளிகளுடனும்

முதலீட்டாளர்களுடனும் ஆயுத வியாபாரிகளுடனும்

விருந்தோம்பிக் கொண்டிருந்த எசமானர்கள்

புறாக்கட்கும் மதுபானங்களை வழங்கினார்கள்.

சமாதான தேவதையை நள்ளிரவிச் சந்தித்தேன்.

அழுத முகத்துடன்

"என் புறாக்கள் இன்னும் வரவில்லை" என்றாள்.

"தேடிப் போவோம்" என்றேன்.

வெண்ணிலவை விளக்காக்கி

இரவு முழுவதும்

நாலு திசைகளிலும் நன்றாகத் தேடினோம்.

விடியுவரை

சமாதான தேவதைக்குத் துணையாக நானிருந்தேன்.

விடியலில்

ஒரு சிறுவனுஞ் சிறுமியும்

தாங்கள் கண்டெடுத்த வெண்சிறகுகளைச்

சமாதான தேவதையிடம் நீட்டினார்கள்.

சுவர்களின் பின்னால்

எசமானர்களின் நாய்கள்

புறாக்களின் எலும்புகளைச் சுவைத்தன.

அக்காலைப் பொழுதில்

சமாதான தேவதை

என்னிடம் ஒரு போர்வாளைத் தந்தாள்.

http://www.noolaham.net/library/books/02/114/114.htm

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,இணைப்புக்கு நன்றி.

உங்கள் கோடரிகளில் வழிவது எவரது குருதி?"

எனப் புறாக்கள் கேட்டன.

"எங்களது மண்ணைப் பறிக்க வந்த

மூர்க்கர்களது குருதிதான்" என்றார்கள்.

அது நியாயமா இல்லையா என்று தர்க்கித்தவாறு

புறாக்கள் மீண்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.