Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு - த.தே.கூ.

Featured Replies

IMAGE-MIX.png
 
(ஆர்.யசி)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

sampanthan.jpg

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்து பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என வினவிய வேளையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்தித்து தீர்வுகளை வழங்கும் வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டும். 

அடுத்த  ஜனாதிபதியாக வரவுள்ளவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மக்களின் நீண்டகால  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கியேயாகவேண்டும். 

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை  கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள  முடியும். எனவே இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/65705

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:
IMAGE-MIX.pngஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

roflphotos-dot-com-photo-comments-20190713104359.jpg

சம்பந்தன்....  மீண்டும்,  எமது  காதிலை  "பூ"  வைக்க கிளம்பி விட்டார். 

சிங்களக் கட்சிகள் எதற்கும் ஆதரவளிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பது பலதடவைகள் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று நம்பிக்கையான சர்வதேச பங்களிப்புடன் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத எவருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆதரவளிப்பதில் எந்தவொரு பிரயோசனம் இல்லை.

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று பகிரங்கமாக அறிவிக்க வக்கில்லாமல் நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று முண்டியடித்து அலைந்து திரிந்த சிங்கள இனமதவெறி சஜித் பிரேமதாசவுக்கோ, மிலேச்ச பயங்கரவாதியும் போர்க்குற்றவாளியுமான கோட்டபாய ராஜபக்சவுக்கோ தமிழர்கள் வாக்களிப்பதில் எந்தப் பயனுமில்லை. இந்த இரண்டு இனமதவெறியர்களில் ஒருவர் மற்றவரைவிட சிறந்தவர் என்பது கடைந்தெடுத்த அரசியல் மூடர்களின் கருத்தாகவே இருக்கும்.

தமிழின படுகொலைகளுக்கு துணைபோன கொலைரார்களின் கும்பலான ஈபிடிபி போன்ற சில எடுபிடிகள், ஒட்டுண்ணிகள், கைக்கூலிகள் ஏற்கனவே சிங்கள-பௌத்த படுகொலைகாரர்களுடன் கைகுலுக்க முண்டியடித்து வருவதை காணலாம். அந்த வரிசையில் இணைய சம்மந்தனும் சுமந்திரனும் மாவையும் சரவணபவனும் ஆவலோடு காத்திருப்பது தெரிந்ததே.    

எனவே, ஈழத் தமிழர்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் கூடிப்பேசி பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தான் இப்போதைய சூழலில் தமிழரின் பலத்தை அதிகரிக்கும்.

பல்வேறு தமிழ் கட்சிகளிலுள்ள சுயநலவாதிகள், எடுபிடிகள், ஒட்டுண்ணிகள், கைக்கூலிகள் இதற்கு ஒத்துவரவில்லை என்றால் ஈழத் தமிழர்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் காலம் தாமதிக்காது கூடிப்பேசி பொதுவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தான் இப்போதைய சூழலில் உள்ள சிறந்த வழியாகத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை  கொண்டுவருவதன் மூலமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பெற்றுக்கொள்ள  முடியும். எனவே இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி உத்தரவாதம் வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

71 வருடங்களாக ஏமாற்றி வருகிறோம் அப்படியும் எங்களை நம்புறாங்களே!! 🤔

rajapakse1_18209.jpg

தமிழ் மக்களை பொறுத்தவரை வாக்களித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (1994 ஜனாதிபதித் தேர்தல்- சந்திரிகா)

வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (2005 ஜனாதிபதி தேர்தல்- மகிந்தா) 

வழிநடத்தும் அரசியல்  பிரதிநிதிகளின் பலமும் அந்த பலத்தை திறமையாக பயன்படுத்தும் அவர்களின் ராஜதந்திரத்திலும் தான் எல்லாமே உள்ளது. எமது சக்திக்கு மீறிய ஒரு  பாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் புரிந்து  தூக்கி ஒரு பலத்தை உருவாக்கிய எம்மால் அதை சரிவர முறையான உயரத்தில் தற்காலிகமாக  fix பண்ணி சற்று ஓய்வெடுத்து  புதிய Energie பெற்று மீண்டும்  உத்வேகத்துடன் தொடந்து தூக்கும் வழிமுறை தெரியாமல்,  அதன் உடனடிக்  கனதியை புரியாமல்,  மேலும் தலைக்கு மேல் தூக்கபுறப்பட்டு  பாரம் தாங்க முடியாமல் balance தவறி  வீழ்ந்தவர்கள் நாம். இன்றைய நிலையில் சிங்கள அரசை கையாள்வது இலகுவான காரியம் அல்ல என்பது தான் யதார்த்தம். 

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2019 at 7:50 PM, போல் said:

தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய தீர்வு என்று நம்பிக்கையான சர்வதேச பங்களிப்புடன் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத எவருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆதரவளிப்பதில் எந்தவொரு பிரயோசனம் இல்லை.

"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.

20 hours ago, tulpen said:

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்"இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:

1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும். 

நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.

2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும். 

அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில  நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல். 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிழ ஆயுதப் போராட்டம் வெற்றியை அடையமுடியாது போனதற்கு சிங்களவனின் வீரமோ, அறிவோ அல்லது இந்தியனின் அனுசரனையோ காரணமில்லை. நாங்களும் தமிழரென்று போராடவெளிக்கிட்ட சில இயக்கங்களும் அவற்றிற்கு ஆதரவுகொடுத்த மக்களுமே முதன்மையான காரணமாகும். 

வெற்றியை நேர்வழியில் அல்லது குறுக்குவழியில் பெற்றாலும் அதனைப் பாராட்டுவதே இன்றைய உலக நியதி, அதற்குள் இருக்கும் கேடுகெட்ட செயற்பாடுகளை எல்லாம் வெற்றி என்ற ஒளி மறைத்துவிடும். ஆனால் தோல்லியடைந்தால் அந்தத் தோல்விக்குள் இருக்கும் நேர்மை, நியாயங்கள் எல்லாம் தூக்கியெறிப்பட்டு. தவறுகள்மட்டுமே பெரிதாக படம்போட்டு காட்டப்படும். ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத் தோல்வியையும் ஈனர்கள் இன்று அந்த நிலைக்குத்தான் கொண்டுவந்துள்ளனர். இத்தகய ஈனர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாது தாங்களும் தமிழர்கள் என்று இருக்கும்வரையில் எத்தனை தலைமுறைகள் சென்றாலும் ஈழத்தமிழர் விடுதலை கானல்நீரே. 😟 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவசர படாதீா்கள்..! ஜனாதிபதி தோ்தல் தொடா்பாக தீா்மானம் எதனையும் நாங்கள் எடுக்கவில்லை..!

Sumanthiran.jpg

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ்தேசியக்கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பிற்பாடே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், 29.09.2019 இன்று

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்கள் வருகின்றபோது அவர்களுக்கு நன்றி செலுத்தி பேசுவது வழக்கம்.

வேறொரு நிவாரணத்திற்கு ஒரு அமைச்சர் வந்தால், அவர்களையும் நன்றி செலுத்தி பேசுவது வழக்கம். அந்த விதத்தில், சில பொதுவான நல்லகருத்துக்கள் சில வேளைகளில் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரயாவது ஆதரிக்கவேண்டும் என்றுகூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் எல்லா வேட்பாளர்களுடனும், அவர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தை நடாத்துவதென தீர்மானித்திருக்கின்றோம்.

அப்படி சிலசில பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன. ஆகையினாலே அவ்வாறான பேச்சுக்கள முடிவடைந்த பின்பு, அவர்களும் பகிரங்கமான நிலைப்பாடுகளை அவதானித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானங்களும் எட்டப்படவில்லை. என்றார்.

https://jaffnazone.com/news/13726

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரயாவது ஆதரிக்கவேண்டும் என்றுகூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் முடிவெடுக்கப் பிந்தினால்.... சனாதிபதித் தேர்தல் பிற்போடப்படும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2019 at 9:51 AM, tulpen said:

தமிழ் மக்களை பொறுத்தவரை வாக்களித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (1994 ஜனாதிபதித் தேர்தல்- சந்திரிகா)

வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தும் பிரயோசனம் இருக்கவில்லை (2005 ஜனாதிபதி தேர்தல்- மகிந்தா) 

வழிநடத்தும் அரசியல்  பிரதிநிதிகளின் பலமும் அந்த பலத்தை திறமையாக பயன்படுத்தும் அவர்களின் ராஜதந்திரத்திலும் தான் எல்லாமே உள்ளது. எமது சக்திக்கு மீறிய ஒரு  பாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்கள் புரிந்து  தூக்கி ஒரு பலத்தை உருவாக்கிய எம்மால் அதை சரிவர முறையான உயரத்தில் தற்காலிகமாக  fix பண்ணி சற்று ஓய்வெடுத்து  புதிய Energie பெற்று மீண்டும்  உத்வேகத்துடன் தொடந்து தூக்கும் வழிமுறை தெரியாமல்,  அதன் உடனடிக்  கனதியை புரியாமல்,  மேலும் தலைக்கு மேல் தூக்கபுறப்பட்டு  பாரம் தாங்க முடியாமல் balance தவறி  வீழ்ந்தவர்கள் நாம். இன்றைய நிலையில் சிங்கள அரசை கையாள்வது இலகுவான காரியம் அல்ல என்பது தான் யதார்த்தம். 

இன்றய நிலையில் புதிய தலைமுறையினர் புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும். புதிய தலைமுறை என்று கூறும் போது பழைய தலைமுறையின் தோல்வியடைந்த உத்திகளை தமது மண்டைக்குள் முழுமையாக save செய்து வைத்திருந்து தன்னை update செய்யாமல் இருக்கும்  இளையோரைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வில்லை. 

4 hours ago, Jude said:

"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.

"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்"இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:

1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும். 

நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.

2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும். 

அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில  நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல். 

உங்கள் இருவர் கருத்திலும் நான் ஓரளவுக்கு உடன் படுகிறேன்.

காலம் காலமாக நம்மை ஏமாற்றி வரும் சிங்கள தலைமைகள் இந்த எலக்சன் வென்றதும் எமக்கு ஒரு கெளரவமான தீர்வை தரப்போவதில்லை. 

ஆனால் அதுக்காக நாம் தீர்வுக்கு முயற்சிக்காமலும் இருக்க முடியாது.

என்னை பொறுத்த வரை இப்போ இந்த தேர்தலில் எம்மக்கள் முன் உள்ள கேள்விகள் இவை. 

1. தமிழர்கள் குறுகிய கால நோக்கில் ஒப்பீட்டளவில் நிம்மதியாக வாழ யார் வெல்லவேண்டும்?

2. நீண்டகால நோக்கில் யாரை இலகுவாக நெருக்கி நாம் எமது உரிமைகளை முன் நகர்த்தலாம்?

கேள்வி 1 க்கான விடை இலகுவானது.

திலீபன், முள்ளிவாய்க்கால், மாவீரர் நாள் நினைவை அஞ்சலிக்க விட்டமை, காணிகள் கணிசமாக மீளளிக்கப்பட்டமை, ராணுவ பிரசன்னம், தலையீடு குறைந்தமை என்று, 2005-2015 ஐ விட, 2015-2019 இல் ஒப்பீட்டளவில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதே நான் கருதுவது.

இந்த அடிபடையில் கோட்ட வைவிட சஜித் வந்தால் பரவாயில்லை என நான் நினக்கிறேன். 

கேள்வி 2 க்கான விடை சற்றே சிக்கலானது.

சஜித், ஆட்சி ஏறினால், தமிழ் முஸ்லீம் வாக்குகள்தான் அவர் வெற்றியை தீர்மானித்திருக்கும். அடுத்த முறையும் இதுவே அவருக்கு தேவைப்படும். எனவே அவரை நெருக்கி ஒரு தீர்வை நோக்கித் தள்ளலாம். ஆனால் மறுவளமாக தீர்வை முன்வைக்காமல், மேலும் சிங்கள வாக்குகளை கவரும் நடவடிக்கையில் அவர் இறங்கக்கூடும்.

சஜித்தை யுத்த குற்றச்சாட்டு மூலம் தனிப்பட்டு நெருக்க முடியாது.

கோட்ட என்றால் - போர்குற்றசாட்டை வைத்து நெருக்கலாம் என்பது பேச்சளவில் சரியே. ஆனால் இத்தனை வருடமாக ஆளை என்ன செய்ய முடிந்தது. அமேரிக்கா, சிங்கபூர் என கோட்ட சுற்றி வந்தும்?

கோட்ட மீளவந்தால் என்ன தீர்வு என்பதில் ஒன்றுமே சொல்லவில்லை (சஜித் ஐக்கிய இலங்கைக்குள் அதிக உட்சபச்ச அதிகாரபகிர்வு என்கிறார்). கோட்டவின் நிலைப்பாடு, தீர்வா? கிலோ என்ன விலை? என்பதாகவே இருக்கிறது.

கூட்டமைப்பு ஏலவே சஜித்தை சந்தித்து விட்டார்கள். இப்போ இப்படி அறிக்கை விடுவது, அடுத்து வரப்போகும் சஜித்தை ஆதரிக்கும் அறிக்கைக்கான தயார்படுத்தலே.

ஆனால் கூட்டமைப்பை தாண்டி, நீண்ட. குறுகியகால நலனை, ஒவ்வொரு தமிழ் வாகாளரும் சீர்தூக்கிப் பாக்க வேண்டும்.

காலத்துக்கு அவசியமான விவாதம்!

யாழ்களம் ஒரு நிபுணர் குழுவை அமைச்சு "ஓரளவு நல்ல" அரசியல்வாதிகளை இணைச்சு தமிழினத்தின் இருப்பை தக்க வைக்க உதவலாம் என்டு எனக்கு தோணுது.

பூனைக்கு மணியை கட்டுவது யார் என்ட பிரச்சினை தமிழருக்கு இருக்கிற பெரிய ஈகோ பிரச்சினைகளில் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.