Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் ; ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் ; ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

(எம்.மனோசித்ரா)

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாத பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாசாரம் தொடருவதை ஊக்கப்படுத்துவதாகவே அமையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

72577438_677349669340968_592653130337668

கடிதத்தில் சம்பந்தன் கூறியிருப்பதாவது : 

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவதினை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்

இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பின்வருமாறு,

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன கோவிலாகும். இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் முற்றிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்களாவர். 

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினை கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார். குறித்த நிலத்தினை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்து மக்கள் தொடந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியதோடு இது தொடர்பில் ஒரு முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.

குறித்த பௌத்த துறவி அண்மையில் கொழும்பில் காலமானார் அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வேண்டுமென்றே உணர்ச்சினைகளை தூண்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு செயலாகும். இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, செப்டம்பர் 22, 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் 23 செப்டம்பர் 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதனை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த இறுதிக் கிரிகைகள் அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெற வேண்டியதாயிருந்தது. நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. 

தீர்த்தக்கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனித நீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இச்செயலினால் ஆலயமும் அதன் பூமியும் தனது புனித தன்மையை இழந்துள்ளது. சைவ மக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்த பிறகு குறைந்தது 1 மாத காலம் வரையில் ஆலயத்தினுள்ளோ அதன் பூமிக்கோ செல்வதில்லை.

நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.

இதன்பிரகாரம், பின்வரும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன், 

நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்கள் முறையாக கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்ற தவறிய பொலிசாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கினை  நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது. இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

மேலும் அண்மைகாலங்களில் குற்றவாளிகளிற்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களிற்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தினை அவமதித்த  நபருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சட்டத்தினை மீறி செயற்பட்ட நபரொருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்ட மீறல்களிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் மேலதிக விபரங்களை தற்போது குறிப்பிட விரும்பவில்லை நான் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில்  மேதகு ஜனாதிபதி அவர்கள் விளங்கிக்கொள்வீர்கள் என அறிவேன்.

நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில்,  தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாச்சார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும் அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களிற்கும்  மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.

எனவே சட்ட ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களிற்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

https://www.virakesari.lk/article/65854

 

தமிழ் அரசியல்வாதிகளான இவர்கள் எமது மக்களை ஏமாற்றும் நோக்கம் காரணமாக இந்த கடிதம் எழுதுவதும் அதை ஊடகங்கள் ஊடாக தமிழ்  மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதும் வழமை. 

இந்த கடிதம் வாசிக்கப்படாமலேயே குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும். 

ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்த குற்ற தண்டனையில் இருந்து வெளியே வந்தவர். காரணம், சிங்கள அரசியல்வாதிகள்.  அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் மட்டும் சிறையில் இருந்தே சாகவேண்டும். 

கருணாநிதியின் பாணியில் சம்மந்தன் தமிழரை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

விரைவில் சம்மந்தன் 1 மணிநேர உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für envelope with srilanka stamp

இந்த வயதில்.... அவர் கை நடுக்கமில்லாமல், கடிதம் எழுதுவதே பெரிய விஷயம். :grin:

இதுக்காகத் தன்னும், சம்பந்தரை... அடுத்த முறையும், பாராளுமன்றத்துக்கு அனுப்பலாம் போலை இருக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, போல் said:

கருணாநிதியின் பாணியில் சம்மந்தன் தமிழரை ஏமாற்ற முயற்சிக்கிறார்.

விரைவில் சம்மந்தன் 1 மணிநேர உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாரவது இங்குவந்து சம்மந்தன் சும்மா இருக்கிறார் 
ஒன்றும் செய்வதில்லை அது இது என்று எழுதட்டும் 

இந்த திரியை போட்டே வாய் அடைக்கிறோமா இல்லையா என்று பாருங்கள். 

எவ்ளவு பெரிய லெட்டர் எழுதி இருக்காரு ...
தனக்காகவா எழுதினார்? .... ஊருக்காக எழுதினார் 

ஓ! சுத்துமாத்து சம்பந்தர் முழிப்போ?

இந்த வீரகேசரி செய்தியை பாத்து சம்பந்தன் யாரப்பா அந்த சம்பந்தன் என்டு யோசிக்காட்டி சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.