Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்ட அபய குடியுரிமை வழக்கு - கோட்டாவுக்கு வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்ட அபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை செல்லாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பு இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தாவுக்கு சாதகமாய் முடியுமெண்டது ஊர் உலகத்துக்கு தெரிஞ்ச விசயம்தானே😂

நாமல் பணம் .... பாவம் 😞 

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கைப்போட்டவர்

தானாக போய் வெள்ளைவானில் ஏறி  உட்காருவது 

அவருக்கும் அவரது  குடும்பத்தாருக்கும்  நல்லது  😥

நீதிமன்ற தீர்ப்பையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுனவினர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று மாலை தீர்ப்பறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாப ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடங்கல் நீங்கியுள்ளது.

இந் நிலையில் இந்த வெற்றியினை கொண்டாடும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

72443188_474739066707055_539536054312291

71852243_2363499337201779_56870404480282

 

71382026_521941121927476_162024502908996

https://www.virakesari.lk/article/66233

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோத்தாவுக்கு சாதகமாய் முடியுமெண்டது ஊர் உலகத்துக்கு தெரிஞ்ச விசயம்தானே😂

அப்படி சட்டென்று சொல்ல முடியாது அண்ணர்.

மகிந்த இடையில பிரதமர் ஆகின நேரம் அவருக்கு சாதகமாக முடியேல்லத்தானே?

இந்த முறை சட்டம் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

3 hours ago, ampanai said:

நாமல் பணம் .... பாவம் 😞 

சாமல்

3 hours ago, விசுகு said:

வழக்கைப்போட்டவர்

தானாக போய் வெள்ளைவானில் ஏறி  உட்காருவது 

அவருக்கும் அவரது  குடும்பத்தாருக்கும்  நல்லது  😥

😂 அப்படிப்போய் இருந்தாலும், கேட்காம ஏண்டா வந்தனி எண்டு அடிப்பாங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாள் சொறீலங்கா வாழ் மக்களே.. நாங்களே எங்கள் மீது வழக்குப் போட்டு எங்கள் அதிஉத்தம.. மனுநீதிச் சிங்களவனான.. கோத்தாவை தூய திறமையான மிகவும் காருணியம் மிக்க மனிதன் என்று பிரகடனம் செய்கிறோம்.

உங்கள் பொன்னான வாக்குகளை அவருக்கு போட்டு அவரின் புனிதத்தை திருநிலைப்படுத்தி ஆசீர்வாதம் பெறக்கடவ. இன்றேல்.. வெள்ளைவான்கள் தமது கடமையை செய்யும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

72443188_474739066707055_539536054312291

இஞ்சை பார்ரா அண்ணை டக்ளசுவின்ரை முகத்திலை இருக்கிற சந்தோசத்தை.....😄

  • கருத்துக்கள உறவுகள்

சமல் கட்டுப்பணம் செலுத்தியது மாற்று ஏற்பாடு தான் – மகிந்த

 

chamal-rajapaksha-300x199.jpegசமல் ராஜபக்ச மாற்று ஏற்பாடாகத் தான் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபச்சவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமைந்தால், மாற்று ஏற்பாடாக, சமல் ராஜபக்சவை போட்டியில் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

எனினும், கோத்தாபய ராஜபக்சவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதை அடுத்து, சமல் ராஜபக்ச போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யமாட்டார் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாகவே சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார் என்று விமல் வீரவன்சவும் உறுதி செய்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/10/05/news/40412

On 10/4/2019 at 2:51 PM, goshan_che said:

கோட்ட அபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை செல்லாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பு இது.

1) இதற்கெதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார்கள்.

2) மனு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

3) இதையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.jvpnews.com/srilanka/04/240017?ref=recommended3

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.