Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’

Featured Replies

On 10/23/2019 at 7:31 AM, Jude said:

நன்றி லாரா. நீங்கள் Last Temptation of Christ என்ற படத்தை பாருங்கள். இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. கிறீஸ்தவர்களும் இப்படி கருத்துகளை பிரபலப்படுத்துவார்கள். இந்த விடயத்தில் கிறீஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் முற்றிலும் சுதந்திரமான இந்துக்களுக்கு கூட இல்லை.

Nikos Kazantzakis எழுதிய The Last Temptation of Christ என்ற நாவலை அடிப்படையாக வைத்தே Martin Scorsese இப்படத்தை எடுத்தார். Nikos Kazantzakis ஒரு Orthodox Christian. அத்துடன் யூதர்களுக்கு சார்பாக வேறு சில நாவல்களை எழுதியிருந்தார்.

நான் நாவலையும் வாசிக்கவில்லை, படத்தையும் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தில் என்ன கூறப்படுகிறது என தெரியாது.

ஆனால் Hollywood ஆகட்டும் Music industry ஆகட்டும் அங்கு பலரும் Illuminati, Freemasonry, Skull and Bones என ஏதேனுமொரு அமைப்பில் இணைந்திருப்பவர்கள். அங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிறிஸ்தவர்களாக இருக்கவோ, கருத்துரைக்கவோ முடியாது. கிறஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிரான செயல்களை செய்ய முடியும்.

இந்நாவலையும் படத்தையும் எதிர்த்தது கூட கிறிஸ்தவர்கள் தான். அப்படியிருக்க கிறிஸ்தவர்களுக்கு உள்ள சுதந்திரம் என கூறுகிறீர்கள். 🙃

கத்தோலிக்கரான Lady Gaga 15 ஏப்ரல் 2011 “Judas” என்ற பாடலை single ஆக வெளியிட்டார். அதற்கான வீடியோவை உயிர்த்த ஞாயிறான 24 ஏப்ரல் 2011 அன்று வெளியிடப்போவதாக கூறி கிறிஸ்தவர்கள் பலரும் எதிர்த்திருந்தார்கள். பின் மே மாத ஆரம்பத்தில் வீடியோவை வெளியிட்டார். இதில் அவர் Mary Magdalene ஆக வருகிறார். இது போன்ற பாடல்கள் கிறிஸ்தவத்தை கொச்சைப்படுத்த எடுக்கப்படுபவை.

 

Edited by Lara

  • Replies 412
  • Views 38.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மாங்குயில் said:


 

பன்னிரு வருடங்களாக இரத்தப்போக்கு இருந்தால், அந்தப் பெண் இறந்திருப்பாளே!

இயேசு இந்தப் பூமியில் அவதரித்தது, அற்புதங்களை செய்யவோ, பிறரின் நோய்களைக் குணமாக்கவோ அல்ல.

இயேசு கடவுளால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இறைத்தூதர்.  காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்.

ஓரிறைவனை வணங்க வேண்டும் என்பதைத்தான் இயேசு போதித்தார்.

இயேசுவை கடவுளாக வணங்குமாறு அவர் ஒருபோதும் போதித்ததில்லை.

ஓரளவு ஊர் தெரிந்து விளக்கம் கேட்டா வழி காட்ட முடியும்। ஊரே தெரியாது சொல்லுறதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  நான் கேள்விப்பட்ட ஊரை காட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்து நிக்கும் உங்களுக்கு விளக்கம் தர முடியாது உங்கள் கொள்கைகளை நம்புங்கள் மற்றவரின் நம்பிக்கையை விமர்சிக்க போனா உங்களுக்கு விடை கிடைக்காது।   நீங்களே தேடிப்பிடியுங்கள் விரும்பினால் நான் படித்ததை பகிர்ந்தேன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை

14 hours ago, குமாரசாமி said:

நல்ல கருத்து மல்லிகை வாசம்.👍
வாழ்த்துக்கள். 

நன்றி அண்ணை. இந்து மதம் என்ற பெருங்கடலில் நான் பொறுக்கிய ஒரு சில முத்துக்களின் அடிப்படையில் எழுதினேன். 😊

9 hours ago, மாங்குயில் said:

இந்தியாவில் இருந்த மதத்திற்கு ‘இந்து’ என்று பெயர்  வந்ததாகவும், நெடுங்காலமாக பெயரில்லாத மதமாகத்தான் ‘இந்து’ என்ற மதம் இருந்தது என்று ‘சோ’ ஒரு பேட்டியில் சொன்னார்.

இந்துப் பண்டிதர்கள் கூட இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

Comparative Religious studies experts பலரும் இதை உறுதிப் படுத்துகிறார்கள்.

ஆக, ஆதியற்ற தொன்மையானது ‘இந்து மதம்’ என்பது நீங்கள் சொல்வதுபோல் நம்ப கூடியதாக இல்லை.

மாங்குயில்,

சோ போன்றவர்களை நான் ஆன்மீகத் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர் ஒரு அரசியல் பத்திரிகையாளர். ஒரு நகைச்சுவை நடிகராக அவரை எனக்கேப் பிடிக்கும்.

தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும். இன்று எனது பெற்றோரும், சூழலும் தந்த வடிவத்தில் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்த அளவில் நான் திருப்தியாக இருக்கிறேன். வயது போகப்போக இந்த மதத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன, அவை எனது ஆன்மீக விருத்திக்கு வழித்துணையாக இருக்கும் எனவும் புரிகிறது. 😊

தவிரவும், இன்றுள்ள மதங்களில் தொன்மையான மதம் இந்துமதம் என்பதை மறுக்க முடியாது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மாங்குயில் said:


கிறிஸ்தவம் பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.

இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

கிறிஸ்தவம் என்ற மதம், இயேசுவிற்குப் பின்னால் தோற்றுவிக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

ஜேசுவே பைபிள். அவர் இருக்கும்போது பைபிள் தேவைப்படவில்லை. அவரின் பிற்பாடு அவரைப்பற்றி கூறுவது பைபிள்.  கிறிஸ்துவையும் அவரின் போதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள்.  

9 hours ago, Sasi_varnam said:

வணக்கம் துள்பென்,
உங்கள் கருத்துக்களை இங்கு ஆர்வமாக வாசிக்கும் பலரில் நானும் ஒருவன்.
பொதுவான  உங்கள் சமூகம் சார்பான பார்வை, தனி மனித சுதந்திரம், மூட பழக்கவழக்கங்கள், சமய அனுஷ்டானங்கள் போன்ற கருத்துகளில் நானும் ஒத்துப்போபவன் தான்.

இங்கே நடப்பது என்னவோ ஈழத்தில் சமயக் கோட்டபாடாக கடைபிடிக்கப்படும் "சைவ சமயம்" சார்ந்த காழ்ப்பு உணர்வுகளின் வெளிப்பிரவாகம் மட்டுமே. அதை நீங்கள் மிகவும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்வதாக நான் பார்க்கிறேன்!!

கிறீஸ்தவ , கத்தோலிக்க ஏனைய மதங்களில் பழுது இருப்பதாக மேலோட்டமாக கருத்து எழுதும் நீங்கள், சைவ சமயம் நோக்கி மட்டும் குறிபார்த்து  மிகவும் தாராளமாக கல்லையும் , பொல்லையும் வீசி எறிகிறீர்கள்.

யாவற்றையும் விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது துள்பென்.
மூட நம்பிக்கை களைவது வரவேற்கத்தக்கது ...அதுவே மூல வேரையும் பிய்த்து எறியும் அடாவடியாகவும் இருக்கக்கூடாது. 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, எல்லா மதங்களிலும் பல உயர்ந்த தத்துவங்களும், பல தற்போதைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் உள்ளன. இதை எல்லா மத, சமய, போதனைகள்,அனுஷ்டானங்களில் பார்க்கலாம்.
ஒருவன் தனிமனித உரிமை என்ற போர்வையில் திட்டமிட்ட பூர்வீக, அடையாள அழிப்புகளுக்கு என்னால் துணை போக முடியாது.

கிறிஸ்தவமும், கத்தோலிக்கமும், இஸ்லாமும் எங்கள் நாட்டுக்குள் இப்படித்தான் வந்தது.
அதை தருகிறேன், இதை தருகிறேன் , அது தவறு, இது பிழை இப்படி சொல்லி சொல்லியே மக்களையும் மாற்றி நாட்டையும் அபகரித்தார்கள்.

இன்றும் கூட...நீங்கள் சிங்களனை எதுவும் செய்ய விட்டுவிட்டு கைகட்டி நின்று பாருங்கள் இன்னும் 50 வருடத்துக்குள் ஆயிரம் பௌத்த விகாரைகளோடு, குடியேற்றங்களோடு தமிழ் மண் அடையாளம் இழந்து பௌத்த பிரதேசமாக ஜொலிக்கும்.
மேலே சொன்ன செயலுக்கு வரும் எதிர்ப்பும், கண்டனமும் நிச்சயம் உள்ளூரில் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்துக்கும், மதம் பரப்பிகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

சைவ சமயம் நான் நானாக இருப்பதற்கு இடம் கொடுக்கிறது. ஆன்மீக தேடலை அடாவடியாய் புகுத்தவில்லை.  உனக்கான பக்குவம் வரும் பொழுது நீயாக வருவாய் என்றும், லௌகிக வாழ்க்கையின் பல உயர்த்த மாண்புகளை சொல்லித்தந்து இருக்கிறது.
இந்த சந்தடி சாக்கில் ஆங்காங்கே அவன், அவன்  படும் கஷ்டத்தை  தமக்கு சாதகமாக , அனுகூலமாக மாற்றிக்கொண்டு ஒருவனின் அடையாளத்தை அழிக்கும் இழி செயலே இந்த கூட்டம் செய்கிறது.
அம்மா பகவான் தொடங்கி ஆட்டுக்குட்டி பகவான் வரையிலும் இதை தான் செய்கிறார்கள்.
என்ன ஒரு வித்தியாசம் இவர்கள் பணம் கொடுக்காமல் செய்கிறார்கள்... மற்றையவர்கள் பணம் கொடுத்து, பள்ளி கொடுத்து, தொழில் கொடுத்து செய்கிறார்கள் (பல சந்தர்ப்பங்களில் அதுவும் கூட ஆசை காட்டி மோசம் செய்யும் விளையாட்டுத்தான்)
ஆகா மொத்தத்தில் நோக்கம் ஒன்று தான்...

மத கோட்பாடு, கோத்திரம்  பார்க்காமல் கர்மமே கண்ணாய் மண் படைக்கச்சென்ற கேணல் விக்டர் முதல், சிறுவன் போராளி விக்னேஷ் வரை பார்த்த மண்ணில் ...இப்படி ஒரு திரி இன்னும் தணலாய் கொழுந்துவிட்டெறிகின்றது.

மூட பழக்கங்களை களைவதற்கு முன்னர் நாம் தமிழராய் இருக்கப்போம்!!!

சசி! உங்கட கருத்துக்கள் அத்தனையும் அற்புதமானவை!

மதமாற்ற வெறி கொண்டவர்கள், சைவ சமய விரோதிகள் அவற்றை விளங்கினாலும் எப்பவும் விளங்காத மாதிரித் தான் நடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

ஓரளவு ஊர் தெரிந்து விளக்கம் கேட்டா வழி காட்ட முடியும்। ஊரே தெரியாது சொல்லுறதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  நான் கேள்விப்பட்ட ஊரை காட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்து நிக்கும் உங்களுக்கு விளக்கம் தர முடியாது உங்கள் கொள்கைகளை நம்புங்கள் மற்றவரின் நம்பிக்கையை விமர்சிக்க போனா உங்களுக்கு விடை கிடைக்காது।   நீங்களே தேடிப்பிடியுங்கள் விரும்பினால் நான் படித்ததை பகிர்ந்தேன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் வற்புறுத்தவில்லை


 

இயேசுவின் ஆடையைத் தொட்டாளாம் - அதுவும் இயேசுவிற்குத் தெரியாமல்.

பன்னிரண்டு வருடங்களாக இரத்தப் போக்காம்.  

இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன்,  இந்த நோய் நிவாரணமானதாம். 

இப்படியான கற்பனைக் கதைகளை சொல்லியே, மக்களை மாக்களாக மாற்றுகிறார்கள் இந்தக்கிறிஸ்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

வணக்கம் மகராஜ், 
புதிய உறூப்பினரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கல்.
ஒரு குற்றெழுத்தில் தான் நாங்கள் இருவரும் மாறுபடுகிறோம் :)
உங்கள் பார்வை:
ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ....

எனது பார்வை: 
ஏன் மதம் மாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ...

இல் தான் இருக்கிறது.
எனக்கு தெரிந்து, யாரும் சர்ச்சு வாசலில் நின்றுகொண்டு பாதிரிமாரிடமும், போதகரிடமும் ஐயோ என்னை உங்கள் மதத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சவில்லை, கூப்பாடு போடவில்லை.

மாறாக ...அவர்கள்தான் வீட்டு கதவுகளை தட்டியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,  ஆசை வார்தைகள் பேசியும் (சிலுக்கு சுமிதா ) போல் (சலுகை) கவர்ச்சி காட்டியும், மாற்ற முனைகிறார்கள்.

இதை தான் நான் தவறு என்று சொல்கிறேன்.
கனடாவில் கூட வெள்ளைக்காரர் இதை தான் செய்தார்கள்...பூர்வ குடி மக்களின் பாரம்பரியங்களை எல்லாம் கலையப்பண்ணி இப்போது அவர்கள் அடையாளம் இழந்த அன்னக் காவடிகளாக உலா வருகிறார்கள்.

வறுமை அனைவருக்கும் பொது ... இன்றைய நாளில் இலங்கையில் இருக்கும் எல்லா கத்தோலிக்கரும் , கிறீஸ்தவர்களும் செல்வம் நிரம்பி வழியவா வாழ்கிறார்கள்?
ஒருவேளை சோற்றுக்கு கை  ஏந்துபவர்கள் எத்தனை? இவர்கள் எல்லோருமே மத மாற்றம் பற்றி பிரச்சாரம் செய்யும்  மத ஸ்தாபனங்களால் இன்னுமே இரட்சிக்கப்படவில்லையே. அது ஏன்?

மதம் என்பது நம்பிக்கை. வெறும் பணத்தை எதிர்பார்த்து போனால், அது அங்கு கிடைக்காது தேவை முடிந்ததும் திரும்பி விடுவார்கள். கிறிஸ்தவர்கள் எல்லோரும் பணக்காரர் கிடையாது. அங்கும் ஒரு நேர உணவுக்கு அங்கலாய்ப்பாருமுண்டு.  நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது பைபிளோடு வருவார்கள். என் அப்பா சொல்வார், எங்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். உங்கள் கடவுளை  விரும்பும் ஆட்களுக்கு போதியுங்கள். என்று அனுப்பி விடுவார். அம்மாவோ சில கேள்விகளை அவர்களிடம் கேட்பார். மீண்டும் வருவதற்காகவோ அன்றி விடை கண்டு பிடிப்பதற்காகவோ இன்னொருநாள் விடையுடன் உங்களிடம்  வருகிறோம் என்பார்கள். அம்மாவோ இதற்கான விடையை நீங்கள் கண்டு பிடித்தால் மீண்டும் வர மாட்டிர்கள் என்று அனுப்பிவிடுவா. எங்களையும் வேறு கோவில்களுக்கு வேடிக்கை பாக்கவோ, அது பற்றி கதைக்கவோ, அது சம்பந்தமான புத்தகங்கள் வாசிக்கவோ விடமாட்டார்.  நாங்கள் மேற்படிப்பு படிக்கும்போது அவர் எம்மை தடுக்கவில்லை. காரணம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்.  நீங்கள் சிறுவராய் இருக்கும் போது, கண்டதையும் கேட்டு சரி பிழை தெரியாமல்,   விளக்கம் இல்லாமல்  தடுமாறக்கூடும். இப்போ உங்களுக்கு அறிவும் வயதும் காணும். மற்றய மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிவதில் தப்பில்லை. மதம் என்பது நம்பிக்கை.  அவர்களையும்  ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். சண்டை போடுவதற்கல்ல என்றார்.

2 minutes ago, மாங்குயில் said:

இயேசுவின் ஆடையைத் தொட்டாளாம் - அதுவும் இயேசுவிற்குத் தெரியாமல்.

பன்னிரண்டு வருடங்களாக இரத்தப் போக்காம்.  

இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன்,  இந்த நோய் நிவாரணமானதாம். 

இப்படியான கற்பனைக் கதைகளை சொல்லியே, மக்களை மாக்களாக மாற்றுகிறார்கள் இந்தக்கிறிஸ்தவர்கள்.

ம்ம்.

இந்த மதவெறிக் கும்பல்கள் போடுற நாடகங்களுக்கும், கட்டுக் கதைகளுக்கும் அளவு கணக்கே கிடையாது. இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு இவங்களுக்கு தேவையா என்டு நான் நினைக்கிறதுண்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, satan said:

ஜேசுவே பைபிள். அவர் இருக்கும்போது பைபிள் தேவைப்படவில்லை. அவரின் பிற்பாடு அவரைப்பற்றி கூறுவது பைபிள்.  கிறிஸ்துவையும் அவரின் போதனைகளையும் ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள்.  


 

இயேசுவிற்கு பைபிள் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது.

இயேசுவே பைபிள் என்று சொல்வது வடிகட்டிய  பாமரத்தனம்.

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால்கூட என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு எதிரானதுதான், பைபிள் என்ற இட்டுக்கட்டிய புத்தகம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மாங்குயில் said:


 

இயேசுவிற்கு பைபிள் என்றால் என்னவென்றுகூடத் தெரியாது.

இயேசுவே பைபிள் என்று சொல்வது வடிகட்டிய  பாமரத்தனம்.

இயேசுவிற்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 

இயேசுவிற்கு கிறிஸ்தவம் என்றால்கூட என்னவென்று தெரியாது.

இயேசுவிற்கு எதிரானதுதான், பைபிள் என்ற இட்டுக்கட்டிய புத்தகம். 

முதலில் பைபிளை வாசியுங்கள் அதன் பின் என்ன வாசித்தீர்கள் என்று பகிருங்கள் நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, satan said:

  நீங்கள் சிறுவராய் இருக்கும் போது, கண்டதையும் கேட்டு சரி பிழை தெரியாமல்,   விளக்கம் இல்லாமல்  தடுமாறக்கூடும். இப்போ உங்களுக்கு அறிவும் வயதும் காணும். மற்றய மதங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிவதில் தப்பில்லை. மதம் என்பது நம்பிக்கை.  அவர்களையும்  ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். சண்டை போடுவதற்கல்ல என்றார்.


 

அவர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டுமென்றால், தான் இருக்கும் மதத்தை சாத்தானிய மதம் என்று ஏற்று புறந்தள்ள வேண்டும்.  

இதுதான் மனப்பக்குவம்.

2 minutes ago, satan said:

முதலில் பைபிளை வாசியுங்கள் அதன் பின் என்ன வாசித்தீர்கள் என்று பகிருங்கள் நம்புகிறேன். 


 

பைபிள்தான் சொல்கிறது - கடவுளை மாத்திரம் வணங்க வேண்டுமென்று. 

இயேசு, ஒரு கடவுளை வணங்கினார் என்று பைபிள் சொல்கிறது.

கிறிஸ்தவர்களோ, இயேசு என்ற சாதாரண மனிதனை கடவுள் என்று கும்பிடுகிறார்கள்.

கிறிஸ்தவ சமயத்துல நல்ல கருத்துக்கள் உள்ளன. சைவ சமயத்துலையும் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ளன.

அதை மீறி ஈகோ பிரச்சினையாக இந்த திரியில் தேவையற்ற விதண்டாவாதம் ஒரு அர்த்தமும் இன்றி தொடர்வதாக நினைக்கிறன்.

இதில் உடன்படுபவர்கள் இந்த திரியில் கருத்தெழுவதை நிறுத்தலாமே!

நாங்கள் எங்கட சக்தியை தமிழர் உரிமைகளை வெல்லுறதுக்கு பயன்படுத்துவமே!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மாங்குயில் said:

அவர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டுமென்றால், தான் இருக்கும் மதத்தை சாத்தானிய மதம் என்று ஏற்று புறந்தள்ள வேண்டும்.

சுட்டி காட்டியதற்கு நன்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்ல மதிக்கும் மனப்பான்மை என்பதே சரியானது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

 

சோ போன்றவர்களை நான் ஆன்மீகத் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர் ஒரு அரசியல் பத்திரிகையாளர். ஒரு நகைச்சுவை நடிகராக அவரை எனக்கேப் பிடிக்கும்.

 

 


 

ஒரு மதத்தைப்பற்றிய அறிவு,  அந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சோ மட்டுமல்ல, இந்துப் பண்டிதர்கள்கூட 'இந்து மதம்' என்ற பெயரே வந்தது - இந்தியா என்ற நாட்டில் இருந்த ஒரு நம்பிக்கை என்றபடியால்.

சுவாமி விபுலாநந்தர்கூட,  'இந்து' மதத்தைப் பின்பற்றுபவரை 'இந்து' என்று அழைப்பதைவிட, 'Vedantist'  என்றழைப்பதுதான் பொருத்தம் என்று சொல்கிறார்.

ஆக, இந்து மதம் ஆதியில்லாத தொன்மையான மதம் என்று சொல்வது தப்பு - இந்துப்  பண்டிதர்களின் கூற்றின்படி.

7 minutes ago, satan said:

சுட்டி காட்டியதற்கு நன்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்ல மதிக்கும் மனப்பான்மை என்பதே சரியானது 


 

பிற மதங்களை மதிப்பது வேறு. 

பிற மதங்களை ஏற்றுக்கொள்வது வேறு. 

இரு முரண்பட்ட மதங்களை வெறுமனே ஏற்றுக்கொள்வது,  தான் சார்ந்த மதத்தையோ, பிற மதத்தையோ கொள்கைப் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Rajesh said:

கிறிஸ்தவ சமயத்துல நல்ல கருத்துக்கள் உள்ளன. சைவ சமயத்துலையும் நல்ல நல்ல கருத்துக்கள் உள்ளன.

அதை மீறி ஈகோ பிரச்சினையாக இந்த திரியில் தேவையற்ற விதண்டாவாதம் ஒரு அர்த்தமும் இன்றி தொடர்வதாக நினைக்கிறன்.

இதில் உடன்படுபவர்கள் இந்த திரியில் கருத்தெழுவதை நிறுத்தலாமே!

நாங்கள் எங்கட சக்தியை தமிழர் உரிமைகளை வெல்லுறதுக்கு பயன்படுத்துவமே!

தமிழராவது உரிமையை வெல்லுவதாவது,   எங்களுடைய நண்டு குணம் இருக்கும்வரையில். ( உங்கள் ஆசை நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் )

18 minutes ago, மாங்குயில் said:


 

ஒரு மதத்தைப்பற்றிய அறிவு,  அந்த மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

சோ மட்டுமல்ல, இந்துப் பண்டிதர்கள்கூட 'இந்து மதம்' என்ற பெயரே வந்தது - இந்தியா என்ற நாட்டில் இருந்த ஒரு நம்பிக்கை என்றபடியால்.

சுவாமி விபுலாநந்தர்கூட,  'இந்து' மதத்தைப் பின்பற்றுபவரை 'இந்து' என்று அழைப்பதைவிட, 'Vedantist'  என்றழைப்பதுதான் பொருத்தம் என்று சொல்கிறார்.

ஆக, இந்து மதம் ஆதியில்லாத தொன்மையான மதம் என்று சொல்வது தப்பு - இந்துப்  பண்டிதர்களின் கூற்றின்படி.

ஒரு மதத்தைப் பற்றி யாரும் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால், அதை எமது சுய அறிவு கொண்டு பரிசீலித்துத் தான் ஏற்றுக்கொள்வதா அல்லது மறுப்பதா என்று முடிவு செய்ய முடியும். அந்த அளவில் 'சோ'வின் போன்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு பத்திரிகையாளராகவும், சிறந்த நகைச்சுவை நடிகராகவும் மட்டுமே பார்க்கிறேன்.

இந்தியாவில் கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை நிலைத்திருக்கும் மதம் தான் இந்து மதம். அதை அழைக்கும் விதத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், உள்ளடக்கம் ஒன்று தான். இதன் ஓர் கிளை தான் சைவ சமயமாக ஈழத்தில் நாம் பின்பற்றுவது.

இதன் பழைமை பற்றிய ஆராய்ச்சிகள் சிக்கலானவை. கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், உலகில் இன்றுள்ள மதங்களில் இதுவே தொன்மையானது என்பது யாவரும் அறிந்ததே. 

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

இந்த அறிவியல் ஆராய்ச்சியில் மூழ்கினால், இன்று நாம் பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள எண்ணற்ற நல்ல விடயங்களை அனுபவித்து உணராது எம் வாழ்க்கை வரலாற்றைத் தேடுவதிலும், வீண் விவாதங்களுடனும் முடிந்துவிடும் என்பதே என் கருத்து. இந்த ஆராய்ச்சிகள் ஆன்மீகத் தேடலுக்கு உதவமாட்டா. ஆன்மீகத் தேடலுக்கும் உறுதுணையாக இருப்பதே மதங்களின் முக்கியமான இலக்காகும். இந்து மதம் இதைச் செவ்வனே செய்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு  மதமும்,  ஒவ்வொரு எண்ணமும் பண்பாடும் நாகரிகமும்,  தான் சார்ந்த மக்களுக்கு நம்பிக்கையை யும் பெருமிதத்தையும் (தன்னைச்சார்ந்த ) உண்டாக்கவேண்டும். அப்போதுதான் அப்பண்பாடும் நாகரீகமும் நிலைத்து நிற்கும்.  காட்டிக்கொடுப்போ துரோகத்தனமோ அதனை அழித்து விடாது. மாறாக நம்பிக்கையீனத்தையும் பிற நாகரீகங்களை உயர்ந்ததாகக் கருத்தும் மனப்போக்கையும் தருமானால்  அந்த மேகமும் நாகரீகமும் அழிவதை தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, மல்லிகை வாசம் said:

 

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

 

 


*****ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. *****

****
தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்****

இந்துப் பண்டிதர்களை விடுவோம். 
மேற்படி உங்களின் கூற்றுக்களின்படி, 'இந்து மதம்' தொன்மையான மதம் என்று உங்களுக்கே சந்தேகம் இப்போது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இதன் பழைமை பற்றிய ஆராய்ச்சிகள் சிக்கலானவை. கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம். 

 


 

புத்த மதம் கூட, கிறிஸ்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற மதம்தான்.

இப்போது நீங்கள் சொன்னதுபோல், இந்து மதத்தின் தோற்றம், தொடக்கத்தைப்பற்றி நிர்ணயுங்கள்.

 

10 minutes ago, மாங்குயில் said:


*****ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. *****

****
தவிர இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்****

இந்துப் பண்டிதர்களை விடுவோம். 
மேற்படி உங்களின் கூற்றுக்களின்படி, 'இந்து மதம்' தொன்மையான மதம் என்று உங்களுக்கே சந்தேகம் இப்போது.

மாங்குயில்,

நான் எழுதிய முழுப்பந்தியின் சில துண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி நான் சொல்லவந்ததைத் திரிப்பதில் பயனில்லை.

கிறிஸ்துவுக்கும், பௌத்தத்திற்கும், இஸ்லாத்திற்கும் முற்பட்டது என்பதே ஒரு தொன்மைக் காலம் தான். ஆதி எது  அதாவது தொடக்கம் எது என்பதைச் சொல்ல முடியாத தொன்மையானதே இந்து மதம் என்ற பொருளில் எழுதினேன். தொடக்கம் எது என்பதை நிச்சயிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பதே அல்லாமல் தொன்மை பற்றிய சந்தேகமல்ல. 

37 minutes ago, மல்லிகை வாசம் said:

தொன்மையானது என்பது வேறு; ஆதியில்லை என்பது வேறு. எல்லாத்துக்கும் ஒரு தொடக்கம் உண்டு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

 

நான் எழுதிய முழுப்பந்தியின் சில துண்டுகளை மட்டும் மேற்கோள் காட்டி நான் சொல்லவந்ததைத் திரிப்பதில் பயனில்லை.

 


 

நீங்கள் இங்கு வடித்ததைத்தான் நான் மேற்கோள் காட்டினேன்.

உங்களது எழுத்துக்களை திரிவு படுத்துவதால், எனக்கென்ன  இலாபம்?

நான் ஏன் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்பதன் அடுத்த காரணத்தை முன்வைக்கவே "இந்து மதத்தின் ஆரம்பம் எப்படியாவது இருக்கட்டும்" என்று தொடங்கினேன். 

அப்பப்ப்பா .. புரிந்து கொள்வதில் எத்தனை சிக்கல்கள்!😊

1 minute ago, மாங்குயில் said:


 

நீங்கள் இங்கு வடித்ததைத்தான் நான் மேற்கோள் காட்டினேன்.

உங்களது எழுத்துக்களை திரிவு படுத்துவதால், எனக்கென்ன  இலாபம்?

யாருக்கும் இலாபமில்லை. அதனால் தான் கருத்துக்களை முழுமையாகவும், பொறுமையாகவும் வாசிப்பது அவசியம்.😊

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

 தொடக்கம் எது என்பதை நிச்சயிப்பதற்கு ஆதாரங்கள் போதாது என்பதே அல்லாமல் தொன்மை பற்றிய சந்தேகமல்ல. 


***கிறிஸ்துவுக்கும் முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு மதம் பற்றிய ஆதாரங்களை முழுமையாகக் கண்டறிந்தாலே ஒழிய இந்து மதம் தொடங்கப்பட்ட காலப்பகுதியை நிர்ணயிக்கலாம்***

 

இதுவும் உங்கள் கூற்று.

கிறிஸ்தவத்திற்கு முன்னுள்ள மதம் புத்த மதம் என்றேன். 

ஆக, இந்து மதத்தின் தொடக்கத்தை இப்போது நிர்ணயிக்கலாம்தானே!

16 minutes ago, மாங்குயில் said:


 

புத்த மதம் கூட, கிறிஸ்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் தோற்றம் பெற்ற மதம்தான்.

இப்போது நீங்கள் சொன்னதுபோல், இந்து மதத்தின் தோற்றம், தொடக்கத்தைப்பற்றி நிர்ணயுங்கள்.

 

கண்டிப்பாக பௌத்தமும் கிறிஸ்துவுக்கு முற்பட்டது. புத்தர் வாழ்ந்த காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டளவாகும். ஆனால் புத்தரும் பிறப்பால் ஓர் இந்துவே. எனவே இந்து மதம் பௌத்த்துக்கும் பழமையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.