Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும்.

டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/67982

5 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

கட்டணமில்லா விசாவா?

இந்திய வியாபாரிகள் விமானங்களில் கொண்டுவரும் பொருட்கள் பெருமளவில் விற்பனையாவது வட மாகாணத்தில் தானாம்.

இவ்வாறான விமான வியாபாரத்தின் பின்னணியில் இருக்கும் இந்திய வியாபாரிகளில் கணிசமானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்களாம்.

அதனால் தான், மோடி சிங்கள அரசுடன் முட்டிமோதி பலாலி விமான  நிலையத்தை வலுக்கட்டாயமாக திறந்திருப்பதாக கதை உலாவுகிறது. 

22 hours ago, போல் said:

போல்

வியாபார உலகில்  எல்லோருமே தத்தமது பொருளாதார வியாபார தேவைக்கு தான. முன்னுரிமை கொடுப்பாரகள் ஆனால் அதனை எமக்கு அனுகூலமாக பாவிப்பது நம்மவர் கையில் தான் உள்ளது.  புலம் பெயர் சமூகம் என்ற வலுவான முதலீட்டு சக்தியை சரிவர பாவித்தால் சம வேளை தமிழரின்  பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்  சாத்தியம் உள்ளதை மறுக்கமுடியாது.    

யாழிலிருந்து சென்னை செல்வதற்கான one way ticket 15,690 ரூபாய் (அண்ணளவாக 15,700 ரூபாய்).

சென்னையிலிருந்து யாழுக்கான one way ticket 7879 ரூபாய் (அண்ணளவாக 7900 ரூபாய் / 3090 இந்திய ரூபாய்). 

On 11/1/2019 at 9:08 AM, கிருபன் said:

இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

யாழுக்கும் திருச்சிக்குமிடையிலான விமான சேவையை Fits Aviation (Pvt) Ltd முன்னெடுக்கும். திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில்.

Fits Aviation (Pvt) Ltd யாழுக்கும் சென்னைக்குமிடையிலும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக கூறுகிறார்கள். 8 ஆம் திகதியிலிருந்து.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கொழும்பில் இருந்து யாழுக்கு விமானம் வராதா ?

இந்தியா போய் யாழுக்கு என்றால் இந்திய விசா இங்கு 1௦௦ பவுனுக்கு மேல் என்கிறார்கள் சொந்த மண்ணை பார்க்க போகிறவர்களுக்கு ஏன் அந்த தேவையில்லா சிலவு ....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்ப கொழும்பில் இருந்து யாழுக்கு விமானம் வராதா ?

இந்தியா போய் யாழுக்கு என்றால் இந்திய விசா இங்கு 1௦௦ பவுனுக்கு மேல் என்கிறார்கள் சொந்த மண்ணை பார்க்க போகிறவர்களுக்கு ஏன் அந்த தேவையில்லா சிலவு ....

இதைத்தான் நானும் எதிர் பார்த்தேன்.ஆனால் போகும் போலத்தான் இருக்கு.

17 hours ago, tulpen said:

போல்

வியாபார உலகில்  எல்லோருமே தத்தமது பொருளாதார வியாபார தேவைக்கு தான. முன்னுரிமை கொடுப்பாரகள் ஆனால் அதனை எமக்கு அனுகூலமாக பாவிப்பது நம்மவர் கையில் தான் உள்ளது.  புலம் பெயர் சமூகம் என்ற வலுவான முதலீட்டு சக்தியை சரிவர பாவித்தால் சம வேளை தமிழரின்  பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்  சாத்தியம் உள்ளதை மறுக்கமுடியாது.    

கேட்பதற்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்தாலும், இவை சாத்தியமாக்கக்கூடிய சூழல் இன்னும் நம்மவர் கைகளில் இல்லை என்பது ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தற்போதைய சூழலில் இது நல்ல கற்பனையாக மட்டுமே இருக்கும்.

அதற்குரிய ஜனநாயக சூழல் இன்னமும் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை. அந்த சுதந்திரத்தை தமிழர்களுக்கு வழங்கும் அரசியல் யாப்புகள் இலங்கையில் இல்லை.

தமிழரின் பொருளாதாரத்தை திட்டமிட்ட முறையில் அழிக்கும் செயற்பாடுகளே சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தால் இன்றுவரை  முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களை அலைக்கழித்து 30% - 50% வரை கரந்தெடுத்த பின்னர்தான் மிகுதியை தமிழர்களுக்கு கிடைக்கச் செய்யும். ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு இதுவும் நன்றாகத்  தெரியும்.

எனவே புலம் பெயர் தமிழ்ச் சமூகம் என்ற வலுவான சக்தி முதலில் சர்வதேசத்தின் உதவியுடன் தேவையான அரசியல், நிர்வாக கட்டமைப்பு சூழலை தமிழ் மண்ணில் நிறுவ முயற்சிக்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் கருத்து சிறந்த விளைவுகளைத் தரும் என்பதில் வேறு கருத்துக்கள் இருக்காது.

On 11/3/2019 at 7:59 AM, பெருமாள் said:

அப்ப கொழும்பில் இருந்து யாழுக்கு விமானம் வராதா ?

இந்தியா போய் யாழுக்கு என்றால் இந்திய விசா இங்கு 1௦௦ பவுனுக்கு மேல் என்கிறார்கள் சொந்த மண்ணை பார்க்க போகிறவர்களுக்கு ஏன் அந்த தேவையில்லா சிலவு ....

வரும். ஆனால் எப்பொழுது என தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் 3 தடவை யாழ்ப்பாணம் சென்னை இணைகிறது….

November 5, 2019

Alliance-Air.jpg?resize=800%2C379

சென்னை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களுக்கு இடையில், வாரத்தில் மூன்று நாள்கள், அலையன்ஸ் எயார் நிறுவனம் விமான சேவைகளை 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

முதற்கட்டமாக திங்கள், புதன், சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயார் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்குப் புறப்படும், 9I 102 இலக்க விமானம், மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும்.

பிற்பகல் 12.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 9I 102 இலக்க விமானம், பிற்பகல் 2.10 மணியளவில் சென்னையை வந்தடையும் என்றும் அலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த மாதம் 17ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டதுடன், அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானம் முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாயும், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள், கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்.
 
http://globaltamilnews.net/2019/132802/

இதென்ன, ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விதமாக செய்தி வெளியிடுகிறார்கள். 🤔

9 hours ago, கிருபன் said:

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானக் கட்டணமாக 3,990 இந்திய ரூபாயும், வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்கள் தனியாகவும் அறவிடப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணமாக 45 அமெரிக்க டொலர் மற்றும் வரிகள், கட்டணங்களும் அறவிடப்படும் என்றும் அலையன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு மடங்கு கட்டணம்?

சிலவேளை கொழும்பு - சென்னை கட்டணம் இதைவிட குறைவா இருக்குமாமே!

  • கருத்துக்கள உறவுகள்

"""""இவை சாத்தியமாக்கக்கூடிய சூழல் இன்னும் நம்மவர் கைகளில் இல்லை என்பது ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்"""""

மிகச் சரியான கூற்று. 

முக்கியமாக வடக்கிலிருப்போர் வேலை செய்ய முன்வருகிறார்கள் இல்லை என்பதுவே முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டு. இலங்கை வந்து சென்றவர்களிடம் கேட்டால் கதை கதையாய் கூறுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2019 at 6:39 AM, போல் said:

கேட்பதற்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்தாலும், இவை சாத்தியமாக்கக்கூடிய சூழல் இன்னும் நம்மவர் கைகளில் இல்லை என்பது ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தற்போதைய சூழலில் இது நல்ல கற்பனையாக மட்டுமே இருக்கும்.

அதற்குரிய ஜனநாயக சூழல் இன்னமும் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை. அந்த சுதந்திரத்தை தமிழர்களுக்கு வழங்கும் அரசியல் யாப்புகள் இலங்கையில் இல்லை.

தமிழரின் பொருளாதாரத்தை திட்டமிட்ட முறையில் அழிக்கும் செயற்பாடுகளே சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தால் இன்றுவரை  முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் தமிழர்களை அலைக்கழித்து 30% - 50% வரை கரந்தெடுத்த பின்னர்தான் மிகுதியை தமிழர்களுக்கு கிடைக்கச் செய்யும். ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு இதுவும் நன்றாகத்  தெரியும்.

எனவே புலம் பெயர் தமிழ்ச் சமூகம் என்ற வலுவான சக்தி முதலில் சர்வதேசத்தின் உதவியுடன் தேவையான அரசியல், நிர்வாக கட்டமைப்பு சூழலை தமிழ் மண்ணில் நிறுவ முயற்சிக்க வேண்டும். அதன் பின்னர் உங்கள் கருத்து சிறந்த விளைவுகளைத் தரும் என்பதில் வேறு கருத்துக்கள் இருக்காது.

ஸ்ரீ லங்கா அரசை குறை கூறுவது ஓரளவிற்ட்குத்தான் சரி.  சிகப்பு நாடா பிரச்சனை என்பது தென் ஆசிய நாடுகள் எல்லாவற்றிட்கும் பொதுவானது.  எம்மவர் மனநிலை மிகவும் முக்கியமானது.  குறைந்த ஊதியமானாலும் white collar jobs தான் செய்ய விரும்புகிறார்கள்.  உயர்ந்த ஊதியமானாலும் வேறு புதிய முயற்ச்சிகளில் ஆர்வம் இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள தமிழ் சனத்தை குறை  கூறுவது ஒரு பழக்கம் ஆகிவிட்டது எல்லோருக்கும் குதிரையை தண்ணீர் குடிக்க குளத்துக்குக் கூட்டிச் செல்லலாம். ஆனால் குதிரைதான் தண்ணீர் குடிக்க வேண்டும் குதிரைக்கு தண்ணியை பருக்குவதை விட குதிரைக்கு தண்ணீர் தாகமெடுப்பதுக்கு உரிய சூழ்நிலையை உருவாக்கணும் என்பதை சிந்திக்க மறுக்கிறம் .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

ஐயா,  நான் எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.  நீங்கள் எப்படி?  

கடந்த வருடம் 50 லட்சம் முதலீட்டுடன் ஒரு புதிய முயற்சி செய்தேன்,  இலாபம் எனக்கு அடுத்த 3 வருடங்களுக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டேன்.  ஆனாலும் நான் பட்ட பாடிருக்கே,  சொல்லி மாளாது.  நான் சகல விடயங்களையும் முடித்துவிட்டேன்.  ஆரம்பிப்பது தான் கடைசி.  ஆனாலும் ஒரு நிறுவனத்தின் பெயரை பதிவு செய்யவே நமதாட்கள் ????? 

என்னால் ஒன்றல்ல ஒன்பது கூறமுடியும்.   !!!!!!!!!!!

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maharajah said:

"""""இவை சாத்தியமாக்கக்கூடிய சூழல் இன்னும் நம்மவர் கைகளில் இல்லை என்பது ஏற்கனவே முயற்சித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்"""""

மிகச் சரியான கூற்று. 

முக்கியமாக வடக்கிலிருப்போர் வேலை செய்ய முன்வருகிறார்கள் இல்லை என்பதுவே முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டு. இலங்கை வந்து சென்றவர்களிடம் கேட்டால் கதை கதையாய் கூறுவர். 

உண்மை தான்.

Edited by சுவைப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.