Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள்? – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sisters-Of-The-Valley-700x450.jpg

யார் இந்த கஞ்சா கன்னியாஸ்திரிகள்? – யேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா அதன் எண்ணற்ற திராட்சைத் தோட்டங்களுக்கும் பழத்தோட்டங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் இவற்றையெல்லாம் விடவும் இப்போது வட கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு சாதாரண பண்ணை வீடும் சிறிய பண்ணையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் பள்ளத்தாக்கின் சகோதரிகள் (sisters of the valley) எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் சிறிய கன்னியாஸ்திரிகள் குழுவொன்று தங்களது மிகச்சிறந்த கலிபோர்னியா கஞ்சா தயாரிப்புப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இங்கிருந்துதான்.

கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இருந்த ஆன்மிக நடைமுறைகளைப் பின்பற்ற முயற்சிப்பதாகவும் அமெரிக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள புனித எண்ணெய் கஞ்சா எண்ணெய்தான் எனச் சொல்லும் அவர்கள் யேசு உயிரோடிருந்தது உண்மையென்றால் அவர் கஞ்சா புகைத்திருப்பார் என்று தாம் நம்புவதாகவும் கூறுகின்றனர்.

ஆன்மீகம், பெண்ணியம், சிகிச்சையளித்தல் போன்ற வழிமுறைகளில் தீவிர நம்பிக்கையுள்ள இந்த கன்னியாஸ்திரிகள் கஞ்சா பொருட்களினால் மனிதர்களுக்கு நிறைந்த பயன்கள் உள்ளதெனவும் தீவிரமாக நம்புகின்றனர்.

கஞ்சாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் சவர்க்காரம், எண்ணெய், மேற்பூச்சு களிம்புகள் போன்ற தங்கள் தயாரிப்புகளுக்கு, மரபணு மாற்றப்படாமல் இயற்கையான முறையில் தங்கள் பண்ணையில் வளர்க்கப்படும் கஞ்சாவையே பயன்படுத்துவதாகவும் இப்பொருட்கள் தூக்கமின்மை, மூட்டுவலி, கவலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகும் எனச் சொல்கின்றனர்.

அவர்களது தயாரிப்புகளை அவர்களுடைய இணையத்தளத்தின் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sisters-Of-The-Valley-6.jpg

Sisters-Of-The-Valley-2.jpg

Sisters-Of-The-Valley-4.jpg

Sisters-Of-The-Valley-9.jpg

http://athavannews.com/யார்-இந்த-கஞ்சா-கன்னியாஸ/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கன்னியாஸ்திரன்கள் இல்லையோ ? விண்ணப்பம் ஒன்று தயாராய் உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sisters-Of-The-Valley-9.jpg

இது புகைத்தால் சொர்க்கத்தை காணலாம்.சொர்க்கத்தை கண்டால் இறைவனை காணலாம்....தரிசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள்.....

கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .
 
1 hour ago, நிலாமதி said:

கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .

துறவிகள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் ? இவர்களால் நீங்கள் குறிப்பிடும் துறவிகளுக்கு எப்படி அவப்பெயர் ஏற்படும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maharajah said:

கன்னியாஸ்திரன்கள் இல்லையோ ? விண்ணப்பம் ஒன்று தயாராய் உள்ளது. 

மகாராஜா.... கன்னியாஸ்திரன்களை, இந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டால்.....
கதை கந்தலாகி போய் விடும் என்பதால், அவர்களை இந்த குரூப்பில் சேர்ப்பது இல்லையாம். 
உங்கடை... விண்ணப்பத்தை கிழித்து, குப்பையிலே போடுங்கோ.... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மகாராஜா.... கன்னியாஸ்திரன்களை, இந்த குரூப்பில் சேர்த்துக் கொண்டால்.....
கதை கந்தலாகி போய் விடும் என்பதால், அவர்களை இந்த குரூப்பில் சேர்ப்பது இல்லையாம். 
உங்கடை... விண்ணப்பத்தை கிழித்து, குப்பையிலே போடுங்கோ.... :grin:

Brothers of the valley - பெயர் நன்னாருக்கா  எந்நோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

Brothers of the valley - பெயர் நன்னாருக்கா  எந்நோ 

Ähnliches Foto

ஓமோம்... இந்தப் பெயரை  பார்த்தே...😍 சங்கத்தில் சேர,  
கன சனம்,  நாக்கை தொங்கப் 😛 போட்டுக் கொண்டு...  
கியூ வரிசையில்... வந்து நிற்கப் போகிறார்கள், மகாராஜா. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

ஓமோம்... இந்தப் பெயரை  பார்த்தே...😍 சங்கத்தில் சேர,  
கன சனம்,  நாக்கை தொங்கப் 😛 போட்டுக் கொண்டு...  
கியூ வரிசையில்... வந்து நிற்கப் போகிறார்கள், மகாராஜா. :grin:

சிரித்துக்கொண்டு நிற்பது நீங்களோ ?? 🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

சிரித்துக்கொண்டு நிற்பது நீங்களோ ?? 🤣🤣

ஆகா.... எப்படி, டக்கென்று... கண்டு பிடித்தீர்கள். :grin:
நீங்கள், உண்மையிலேயே... மகாராஜா தான். 

 வரிசையில...  ⬆️ முன்னுக்கு, ஒழுங்காக  நிண்ட  என்னை...
படுபாவி சனங்கள்... இடிச்சு, ↪️ இடையில.... நுழைஞ்சு ↩️
கடைசியில்... நிக்க வைத்து விட்டார்கள். ↘️  🔚

இந்த, இடத்தில்.. சட்டம் கதைக்க,   வெளிக்கிட்டால்,   :shocked:
"வாள் வெட்டு"  விழும், என்ற... பயத்தில்,  :shocked:
சிரித்து கொண்டு,  இருக்க வேண்டி வந்திட்டுது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

“மதம் - குடிகளின் ஓப்பியம்” என்கிறார் கால் மார்கஸ்.

சகல மதத்தவர்களினாலும் தூண்டப்பட்ட மதப்போதையால் உலகில் விளைந்த அல்லல்களோடு ஒப்பிட்டால் கஞ்சாவால் ஏற்பட்ட அல்லல்கள் புறக்கணிக்கதக்கது.

எனவே மதப்போதைக்கு இந்த மரப்போதை எவ்வளவோ மேல்.🌿🌿🌿

23 hours ago, நிலாமதி said:

கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள்.....

கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .
 
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எனவே மதப்போதைக்கு இந்த மரப்போதை எவ்வளவோ மேல்.🌿🌿🌿

எனக்கு இது இரண்டையும்  விட

இன்னொன்று  தான் மனதுக்குள் ஆடுது

அதனுடன்  கஞ்சாவும்  சேர்ந்து விட்டால்???

அண்மையில்  அம்மா  பகவானின்  மூலதனமே  இந்த மூலிகை  மணம்  தானே?

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கன்னிகள் என்பதே பொருத்தமாய் இருக்குமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கஞ்சா கன்னிகள் என்பதே பொருத்தமாய் இருக்குமோ?!

எனக்கென்னவோ அவர்கள் கஞ்சா 'கண்ணி'களோ என சந்தேகமாக உள்ளது.  

கஞ்சா ரன்றாலே போதை,  அதில வேற கன்னிகள் என  பன்மையில் போட்டிருக்கு 😇😇

போதையோ போ..........த 

Edited by Maharajah
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

எனக்கு இது இரண்டையும்  விட

இன்னொன்று  தான் மனதுக்குள் ஆடுது

அதனுடன்  கஞ்சாவும்  சேர்ந்து விட்டால்???

அண்மையில்  அம்மா  பகவானின்  மூலதனமே  இந்த மூலிகை  மணம்  தானே?

கடவுளை அடைய பலவழிகள் உண்டாம் அண்ணை, அதில கோபிகைகள் கண்ணனை அடைந்த வழி உதுதானாம். 

எனக்கும் உந்த வழியால போக கிடைக்கும் எண்டால் நானும் நாளை முதல் ஆத்திகன் 😂

பிகு: சிவமூலிகை என்றால் யாதென தேடிப்பார்க்கவும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

கடவுளை அடைய பலவழிகள் உண்டாம் அண்ணை, அதில கோபிகைகள் கண்ணனை அடைந்த வழி உதுதானாம். 

எனக்கும் உந்த வழியால போக கிடைக்கும் எண்டால் நானும் நாளை முதல் ஆத்திகன் 😂

பிகு: சிவமூலிகை என்றால் யாதென தேடிப்பார்க்கவும். 

மதத்திற்கு காமம் முக்கியம். காமம் இல்லாத உயிரினம் இவ்வுலகில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மதத்திற்கு காமம் முக்கியம். காமம் இல்லாத உயிரினம் இவ்வுலகில் இல்லை.

நீங்கள் இனப்பெருக்கத்தையும் காமத்தையும் குழப்புகிறீர்கள். இனப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களும் காமத்தை உணர்வதில்லை. சில மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீங்கள் இனப்பெருக்கத்தையும் காமத்தையும் குழப்புகிறீர்கள். இனப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களும் காமத்தை உணர்வதில்லை. சில மட்டுமே.

விளக்க முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் இனப்பெருக்கத்தையும் காமத்தையும் குழப்புகிறீர்கள். இனப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களும் காமத்தை உணர்வதில்லை. சில மட்டுமே.

வேடிக்கைக்காகக் கேட்கிறேன். 

'மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படுவார்' எனும் வள்ளுவம் பேசுகிறீர்களோ ? (குறளின் பொருள் : மலரினும் மெல்லியது காமம். அதன்

பெருமையுணர்ந்து துய்க்க வல்லார் வெகு சிலரே !) சமீபத்தில் இக்குறளை யாழில் வேறோர் இடத்திலும் குறித்திருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:

விளக்க முடியுமா ? 

சேவலும், பேட்டுக் கோழியும்.... வேண்டா வெறுப்பாகத்தான் இனப்பெருக்கம்  செய்கிறது போல் தெரிகிறது.
அதன் இறைச்சியையும் , முட்டையையும் மனிதனே... சாப்பிட்டு முடித்து விடுவதால்....
வந்த வெறுப்பில்... ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2019 at 11:34 AM, Maharajah said:

விளக்க முடியுமா ? 

ஒரு கல பக்டீரியா முதல், நரம்பு மண்டலம் இல்லாத, தொடுகை உணர்சி இல்லாத பல உயிரினங்கள் இனப்பெருக்குகிறன. ஆகவே எல்லா உயிருக்கும் காம உணர்சி இருக்கும் எனச் சொல்ல முடியாது. 

எல்லா உயிரும் இனப்பெருக்கும் ஆனால் சில உயிரினங்கள் மட்டுமே by product ஆக காமத்தையும் அனுபவிக்கும்.

On 11/10/2019 at 3:29 PM, சுப.சோமசுந்தரம் said:

வேடிக்கைக்காகக் கேட்கிறேன். 

'மலரினும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படுவார்' எனும் வள்ளுவம் பேசுகிறீர்களோ ? (குறளின் பொருள் : மலரினும் மெல்லியது காமம். அதன்

பெருமையுணர்ந்து துய்க்க வல்லார் வெகு சிலரே !) சமீபத்தில் இக்குறளை யாழில் வேறோர் இடத்திலும் குறித்திருந்தேன்.

அருமை ஐயா. வள்ளுவன் வாக்குக்கு விஞ்ஞான விளக்கம் 🙏🏾.

On 11/10/2019 at 3:44 PM, தமிழ் சிறி said:

சேவலும், பேட்டுக் கோழியும்.... வேண்டா வெறுப்பாகத்தான் இனப்பெருக்கம்  செய்கிறது போல் தெரிகிறது.
அதன் இறைச்சியையும் , முட்டையையும் மனிதனே... சாப்பிட்டு முடித்து விடுவதால்....
வந்த வெறுப்பில்... ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். :grin:

கோழி ஓடி ஒழியுறதுதானே😂

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

ஒரு கல பக்டீரியா முதல், நரம்பு மண்டலம் இல்லாத, தொடுகை உணர்சி இல்லாத பல உயிரினங்கள் இனப்பெருக்குகிறன. ஆகவே எல்லா உயிருக்கும் காம உணர்சி இருக்கும் எனச் சொல்ல முடியாது. 

எல்லா உயிரும் இனப்பெருக்கும் ஆனால் சில உயிரினங்கள் மட்டுமே by product ஆக காமத்தையும் அனுபவிக்கும்.

அருமை ஐயா. வள்ளுவன் வாக்குக்கு விஞ்ஞான விளக்கம் 🙏🏾.

கோழி ஓடி ஒழியுறதுதானே😂

உங்கள் கருத்திற்கு உசாத்துணை ஏதேனும் உண்டோ?  இருந்தால் குறிப்பிடவும்.  நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.