Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு

Published by Loga Dharshini on 2019-11-15 11:11:30

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்துக் குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் தலைவர் வைத்தீஸ்வரக்குருக்கள் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

அன்பார்ந்த தமிழ் மக்களே எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயற்பட வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும். எமதும் சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையை தவறாது கண்டிப்பாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

 

https://www.virakesari.lk/article/68981

2 hours ago, கிருபன் said:

எமதும் சமுதாயத்தினதும் உரிமை கருதி செல்லுப்படியாகக்கூடிய வண்ணம் எமது வாழ்வுரிமையை தவறாது கண்டிப்பாக பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

ஜனாதிபதி வேட்பாளர் திரு. M.K. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் :

சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் இத்தேர்தல் விஞ்ஞாபனம், Nov 09இல் திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

1. புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழ்த் தேசத்தினை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஸ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

2. இறுதி போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான சர்வதேச பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

3. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.

4. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள், போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையில் இருந்த தனியார் மற்றும் அரச காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்க படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

5. வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. வடக்கிற்கு மகாவலியின் நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால், மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

7. தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

8. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களிடம் இருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

9. வடக்கு கிழக்கிற்கான அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

10. வடக்கு கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினை கையாள்வதற்கு வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து, புதிய ஜனாதிபதி பதவியேற்ற மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனும் விடயங்கள் குறித்த தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Edited by Gowin

கோத்தாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் Hiru சிவாஜிலிங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.😀

People do not support TNA, says Sivajilingam

08-11-2019

Presidential candidate M.K.Sivajilingam says that the Tamil people will not support the TNA at the upcoming presidential election as much as they did during 2015 presidential election.

He said so while participating at a media briefing held in Hatton yesterday.

http://www.hirunews.lk/227861/people-do-not-support-tna-says-sivajilingam

மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் சஜித்துக்கு வாக்களியுங்கள்.

Edited by Lara

எல்லாரும் யாருக்கோ வாக்களிக்க சொல்லேக்க ஒரே ஒரு கோஷ்டி தான் பகிஷ்கரிக்க சொல்லி நிக்குது. அது வேற யாரும் இல்லை கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டி தான்.  

எல்லா தேர்தலிலையும் 100% வாக்களிப்பதில்லை. 70% வாக்களித்தால் 30% ஆன ஆக்கள் கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டி சொல்லித்தான் வாக்களிக்கவில்லை என்று அந்த கோஷ்டி உரிமை கோரப் போகினமாம்.

கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டியின் பகிஷ்கரிப்பு கோரிக்கையை 20% க்கு மேற்பட்ட சிங்களவங்களும் கேடக்க போகினம் என்கிறது தான் கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டியின் பலம்.

1f923.png

புனித கடமையை நிறைவேற்றுங்கள்! நல்லை ஆதீன முதல்வர்

 
நல்லை-ஆதீன-முதல்வர்.jpg

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும் எனவும் எவரும் தேர்தலை புறக்கணிக்கக்கூடாது என்றும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக  அவர் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையையும் பொறுப்பையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

வாக்களிப்பது என்பது நமது புனித­மான கடமையாகும். வாக்களிக்கும் உரிமையை அனைவரும் எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலைநேரம் வரை காலம் தாழ்த்தாது நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக்க வேண்டும்” என்றார்.

http://athavannews.com/புனித-கடமையை-நிறைவேற்றுங/

"இந்துக் குருமார் அமைப்பு"  இப்படி ஒரு அமைப்பு இருப்பதே இப்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தான் தெரியவருகின்றது.

வேறு விடயங்கள் பற்றி, உதாரணத்திற்கு நீராவியடி கோயில் இல்லை கன்னியா பற்றி திருவாய் மலர்ந்தார்களா? தெரியவில்லை.

12 hours ago, Gowin said:

எல்லாரும் யாருக்கோ வாக்களிக்க சொல்லேக்க ஒரே ஒரு கோஷ்டி தான் பகிஷ்கரிக்க சொல்லி நிக்குது. அது வேற யாரும் இல்லை கஜேந்திரகுமார்-கஜேந்திரன் கோஷ்டி தான்.  

புலிகள் சரணடைவது தொடர்பாக பசில் ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த தொடர்பை இன்னும் கைவிடவில்லை போல.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அய்யாமார் சர்வமத கூட்டம் என்றவுடன் பிக்குமாரின் கால் நக்கப் போய்விடுவினம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.