Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

 

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply

EJ4WYhUWoAAKTX6?format=jpg&name=large

EJ4WZenWwAMndBv?format=jpg&name=large

EJ4WappWwAEdk6L?format=jpg&name=large

இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –

@DrSJaishankar 

முடிந்தால் இவரை பின்தொடருங்கள், தமிழ் மக்களுக்கு விடிவு தரும் விடயங்களை 'லைக்' பண்ணுங்கள்; எதிரான கருத்துக்களுக்கு ஆதாரத்துடன் ஆரோக்கியமாக பண்பாக பதிலளியுங்கள். 

நீங்களும் தமிழ் தலைமையாக மாறலாம் 🙂 

EJ5J6Y2VUAAsG9f?format=jpg&name=medium

இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப்படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.

Ref : வலம்புரி 

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

Ref : BBC Thamil

 

On 11/22/2019 at 7:57 AM, ampanai said:

மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும்.

சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை, அடிமைச் சுபாவம்  ஆரோக்கியமானது இல்லை.   

முக்கிய தருணங்களில், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரிக்கின்ற பொழுதிலெல்லாம் சிங்கள-பௌத்த கொலைகார்கள் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி உலக அனுதாபத்தை பெற்று காலத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வந்திருக்கிறது.  

ஐ.நா. சபைக்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசு பொறுப்பான பதிலைக் கூறவேண்டிய நேரேத்தில் தான் மைத்திரி-மகிந்த-ரணில் ஆட்சி கவிழ்ப்புக் கூத்துக்கள் நடந்தன.

இந்த நாடகத்துக்குள் விழுந்தடித்து குள்ளநரி ரணிலுக்கு முண்டு கொடுத்த சம்மந்தன்-சுமந்திரன் கூட்டில் இயங்கும் கூத்தமைப்பு மூடர்கள் சிங்கள-பௌத்த கொலைகார அரசின் மீது அதிகரித்துவந்த சர்வதேச நெருக்கடியை குறைப்பதற்கு பெரும் உதவி செய்தனர். கூத்தின் முடிவில் சிங்கள-பௌத்த கொலைகாரர்களான ரணிலும் - கோட்டாபயவும் அலரிமாளிகையில் சந்தித்து சிரித்து மகிழ்ந்திருந்தனர்.

மைத்திரி-ரணிலின் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு அமைந்த காலத்தில் ஐ.நா. சபையில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஓடியோடி குத்திமுறிந்த சொதப்பல் சுமந்திரன் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசு பயங்கரவாதிகளின் மீதான அழுத்தத்தை குறைக்கவே உதவினார்.

சம்மந்தனும் போர்க்குற்றவாளிக் கும்பல்களில் ஒன்றான இந்திய அரச  கொலைகாரர்கள் எதிர்நோக்கிய ஆபத்தை அகற்ற திக்கித்திக்கி உழைத்தாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்களைப் பற்றி சிறிதும் அக்கறை எடுக்கவில்லை.

எனவே அதே அடிமைச் சேவக மனநிலையுடன் சிங்கள-பௌத்த இனவாதி மைத்திரியை செயற்பட சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் விடவில்லை சிங்கள-பௌத்த ஓநாய் ரணில் செயற்பட இனவாதி மைத்திரி விடவில்லை என்று தமிழர்கள் காரணங்களை கண்டுபிடித்து கூறும் பிற்போக்குநிலை ஆரோக்கியமானது இல்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வந்து, ஒரு கிழமை ஆகின்றது. 
அதனை... ஊர் புதின, செய்தியில்...
"பின்" பண்ணி விட்டவருக்கு, நன்றிகள்.

விவாதங்களை... நடத்த, வேறு பகுதி  இருக்கும் போது,
ஏன்... இந்த, விளையாட்டு.

 

image_9c47182765.jpg

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே குறைந்த செல்லுபடியற்ற வாக்குப்பதிவு

(ஆர்.யசி)

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும். 

https://www.virakesari.lk/article/69614

காலத்தை வீணடிப்பது முறையல்ல!

ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியாகி இன்றுடன் ஒன்பது தினங்களாகின்றன. இத்தேர்தல் தொடர்பான பரபரப்புகள் அனைத்தும் இப்போது ஓய்ந்து விட்டன.

நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. இவ்வெற்றி குறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு முற்றாகவே இடமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களில் 52.25 சதவீதத்தினர் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பு இது. அதாவது 13,60,026 மேலதிக வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ.

நடந்து முடிந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரணியாக நின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களே இவ்வெற்றி குறித்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். அவரது வெற்றியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மாத்திரமன்றி, உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மகத்தான வெற்றி தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள். இலங்கையில் சுயாதீனமாக செயற்படக் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதியாகவும், சுதந்திரமாகவும், எதுவித அச்சுறுத்தலுக்கும் இடமின்றி நடத்தப்பட்ட இத்தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றியை நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு என்றுதான் உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நாம் கடந்து வந்து விட்டோம். நாட்டை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களென்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது.

எனவே மக்கள் ஆதரவை இழந்த அந்த அரசு தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு இயலாது. அந்த அரசாங்கத்தில் பதவி வகித்த அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி விலகியதையடுத்து, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தனது பதவியைத் துறந்து அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உடனடியாகப் பொறுப்பேற்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று பதவியேற்றுள்ளது. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பிரதமராகியிருக்கின்றார். பிரதமர் பதவியை இதற்கு முன்னரும் வகித்த அனுபவம் கொண்டவர் மஹிந்த.

இலங்கையின் அரசியலில் இனிமேல் அடுத்த கட்டப் பரபரப்பு பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேற்றைப் பார்க்கின்ற போது, நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் முடிவு எவ்வாறாக அமையுமென்பதை முன்கூட்டியே எதிர்வு கூறி விட முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது. பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பிரதமர் பதவியை வகிக்கப் போகின்றார்.

நாட்டின் மொத்த குடிமக்கள் தொகையில் சுமார் எழுபது சதவீதத்தைக் கொண்டுள்ள பெரும்பான்மை மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தினரும் கொண்டுள்ள அமோகமான செல்வாக்கையும் ஆதரவையும் பார்க்கின்ற போது, பொதுத் தேர்தலின் முடிவை இப்போதே எதிர்வு கூறுவது கடினமான விடயமல்ல.

கடந்த ஐந்து வருட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கத்தின் திராணியற்ற நிர்வாகத்தையும், ஆளுமையின்மையும் பார்த்து சலிப்படைந்த மக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான தீர்மானத்துக்குப் வரப் போகிறார்களென்பதை இலகுவாகவே இப்போது ஊகித்து விட முடியும்.

 
 

நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்தியை துரித கதியில் முன்கொண்டு செல்வதற்கும் கோட்டாபய ராஜபக்ஷ மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள்,எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அவர் சார்ந்த கட்சியையே மீண்டும் ஆதரிப்பர் என்பதுதான் உண்மை.

தென்னிலங்கையின் அரசியல் நிலைவரம் இவ்வாறிருக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதன் பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் இனிமேல் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றது என்பதுதான் இன்றுள்ள பிரதான வினா!

தமிழ் அரசியல் கட்சிகள் தமது வழமையான பாணியில், சாத்தியமற்ற அரசியல் தீர்வை முன்வைத்து மேலும் ஐந்து வருடங்களுக்கு காலத்தை வீணடிக்கப் போகின்றனவா?

இல்லையேல், கடந்த நாற்பது வருட காலத்துக்கு மேலாக யுத்தப் பாதிப்பினால் நலிவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இனிமேலாவது உருப்படியான செயல் திட்டங்களில் இறங்கப் போகின்றனவா?

இவ்விரண்டுமே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள பிரதான கேள்விகள்!

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளால் இன்னுமே புரிந்து கொள்ளப்படாத முக்கிய விடயமொன்றும் இங்கு உள்ளது.

வடக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும், கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளும் வேறுபட்டவை. இந்த யதார்த்தத்தை தமிழர் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் சக்திகளும்,சமூகநல அமைப்புகளும் கிழக்கில் வெகுண்டெழுந்தன என்பதை இனிமேலாவது அக்கட்சியின் புரிந்து கொள்வது அவசியம்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை மாத்திரம் இலக்கு வைத்தபடிதான் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் முன்வைக்கப்படுகின்ற தீர்வு யோசனையானது சாத்தியமாகக் கூடியதா என்பதையிட்டு அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.

வடக்கின் அரசியல் நகர்வு இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், கிழக்கிலோ தமிழ் மக்களின் இருப்பு ஆபத்தின் விளிம்பில் வந்திருப்பதை தமிழ்த் தலைமைகள் கண்டு கொள்ளத் தவறி விட்டன.

தமிழ் அரசியல் தலைமைகள் இனிமேலும் கற்பனாவாதத்தில் காலத்தை விரயப்படுத்திக் கொண்டிருப்பது முறையல்ல. புதிய ஆட்சியாளர்களுடன் நல்லிணக்கத்தை வலுப்படுத்தியபடி தமிழ் மக்களின் நீண்ட கால அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு அவர்கள் முன்வருவதே புத்திசாலித்தனம்!

https://www.thinakaran.lk/2019/11/25/ஆசிரியர்-தலைப்பு/44332/காலத்தை-வீணடிப்பது-முறையல்ல

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

 

ஆனாலும் ரணில்தலைவர் பதவியில் இருந்து விட்டுக் கொடுக்க இன்னும் தயாரில்லை.

Edited by ஈழப்பிரியன்

 

மாவீரர் தின நிகழ்­வுகள் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களின் பல இடங்­க­ளிலும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் பரந்த அளவில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் என்று குறிப்­பி­டத்­தக்க வகையில் மக்கள் இந்த நிகழ்­வு­களில் கலந்து கொண்டு, அர­சியல் விடு­த­லைக்­கான போராட்­டத்தில் தமது உயிர்­களை ஈகம் செய்த மாவீ­ரர்­களை அவர்கள் கசிந்­து­ருகிக் கண்ணீர் பெருக்கி நினைவு கூர்ந்­துள்­ளார்கள்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாமல், இந்த வருட நிகழ்வு முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. கண்ணீர் உகத்த கவ­லைக்­கு­ரிய உணர்வு பூர்வ நிகழ்­வாக அல்­லாமல், அதற்கும் அப்பால் அர­சியல் ரீதி­யான ஓர் உணர்வை வெளிப்­ப­டுத்­திய அடை­யா­ள­மா­கவும் அது நிகழ்ந்­துள்­ளது.

 

மாவீரர் தின நிகழ்­வுகள் தமிழ் மக்கள் வாழும் சர்­வ­தேச நாடுகள் எங்கும் நடை­பெற்­றுள்­ளன. இருப்­பினும், தாய­கமா­கிய இலங்­கையின் வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற  நினை­வு­கூரல் நிகழ்­வுகள் அவற்றில் இருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன. அவைகள் தனித்­து­வ­மா­னவை.  தனித்­தன்மை கொண்­ட­வை­யா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­பட்டு, நீதி விசா­ரணை கோரப்­பட்ட நிலையில் ஜனா­தி­பதி தேர்­தலில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரே மிகப் பெரும்­பான்மை பலத்­துடன் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஒரு பின்­ன­ணியில் இந்த மாவீரர் தின நிகழ்வு உணர்வு பூர்­வ­மா­கவும், அர­சியல் முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவும் நடந்­தே­றி­யுள்­ளது.

பி.மாணிக்­க­வா­சகம்

மாவீரர் நாள் ; உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்­தங்கள், கெடு­பி­டிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்­வுகள், பெரும்­பாலும் தடை­யின்றி நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், கேள்­விக்­கு­றி­யாக இருந்த பல  விட­யங்­களில், மாவீரர் நாள் நிகழ்­வு­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டுமா என்­பதும், ஒன்று.

மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ, வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம்  அமைதியான நினைவு கூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது, நிலையான அமைதியை ஏற்படுத்தும் அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

- சுபத்ரா

https://www.virakesari.lk/article/70229

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.