Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன ஸ்மார்ட் டிவிக்குள் மறைந்திருக்கும் ஆபத்து..!

Featured Replies

புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது.

இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது.

கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி, படுக்கை அறையையும் ஸ்மார்ட் டிவி கேமரா மற்றும் மைக்ரோபோன் வாயிலாக கண்காணிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இன்டெர்நட் சேவையை நிறுத்துவதே இப்பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்று கூறும் நிபுணர்கள், அவ்வப்போது ஸ்மார்ட்டிவி தயாரிப்பாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர்.

https://www.polimernews.com/dnews/91224/நவீன-ஸ்மார்ட்-டிவிக்குள்மறைந்திருக்கும்-ஆபத்து..!

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ampanai said:

இன்டெர்நட் சேவையை நிறுத்துவதே இப்பிரச்சனைக்கான எளிதான தீர்வு என்று கூறும் நிபுணர்கள், அவ்வப்போது ஸ்மார்ட்டிவி தயாரிப்பாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றனர்.

தொழிநுட்ப பாவனையில், மனித ஊடாட்டமே பாதுகாப்பில் மிகவும் நலிந்த (weakest link ), இலகுவில் 
குறிவைக்கக்கூடிய  (lowest hanging fruit) இணைப்பாகும்.

முன்பு, வேறு திரிகளில் சொல்லி இருப்பது போலவே, எனவே தொழில் நுட்பத்துடன் மனித, ஊடாடலை, தொடர்பை  நீக்கினால், மனித உயிர், உணர்வு, உடமை பாதுகாப்பை பொறுத்தவரை, மதிக்க முடியாத மட்டத்திடற்கு வந்து விடும்.

ஆயினும்,    அப்படி 100% நீக்குவது என்பது முடியாத விடயம், 100% நீக்குவது என்பது தொழில்நுட்பத்தில் 
இருந்து விலத்தி இருத்தல், அதுவும் முடியாதது.

அதனால், இயலுமானவரை, தொழில் நுட்பத்துடன் ஊடாடல் முடிந்த பின்பு, அதன் இணைப்பை உங்களில் இருந்து துண்டித்து விடுங்கள், மின்னிணைப்பை துண்டிப்பதன் மூலமோ அல்லது வேறு வழியிலோ. உதாரணமாக, camera இன் பார்வையை மனித பிரசன்னத்தில் இருந்து நீக்கிவிடுவது போன்றவை.

ஆயினும்,இது அனைத்து  சந்தர்ப்பங்களிலும் செய்ய முடியாது, உதாரணம் fridge/freezer. காரணம் , நாம் அறியாமலே, தானியங்கித்தனமும் (automation), தொழில் நுட்பத்தின் இணைப்பாக்க வலையமைப்பும் (IoT, Networked Home) உருவாகி, ஊடுருவி, மனித வாழ்க்கையை வியாபித்துக்கொண்டிருக்கிறது.

ஆயினும், இந்த ஊடுருவலையும், வியாபகத்தையும், வாழ்க்கைப் பாணி தெரிவுகள் (life style choices and options) மூலம் கட்டுப்படுத்தவும் வாய்ப்புக்கள் இதுவரை இருக்கிறது. 

பஉதாரணமாக பிரச்சனை எதுவென்றால், தொலைக்காட்சி கருவியை நீங்கள் மின்னிணைப்பை துண்டித்து விட்டதாக வைத்து கொள்வோம், ஆயினும், நவீன, புத்திசாலித்தனமான தொலைக்காட்சி கருவி, இணையத்தோடு தொடர்பிலேயே இருக்கும்.  தொலைக்காட்சி  கருவியில் இருக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து, அதனை தொலைவில் இருந்தே, சிறிதளவு கால அளவுக்கு விழிப்படைய வைத்து இயக்க கூடிய சாத்திய கூறுகள் உண்டு.

இதை பொதுவாக விளக்கினால், தொல்நூட்ப கருவிகள் ஒவ்வொன்றிலும்  தனித்தனியாக மனித  பாதுகாப்பை மற்றும் அந்தரங்கத்தை உறுதிப்படுத்துவது, அதே கருவிகள் ஓர்  கலந்த  வலையமைப்பாக்கும் போது, அதே  தொல்நூட்ப கருவிகளின் தனித்தனியான  மனித  பாதுகாப்பிற்கும்   மற்றும் அந்தரங்கத்துக்கும் உத்தரவாதமில்லை.

மேலே சொல்லிய உதாரணத்தில், தொலைக்காட்சி கருவி, மின்னிணைப்பிலும், இணையம்,  மற்றும்  வீட்டின் தொடர்பாடல் உள்  வலையப்பிலும் இருந்து முற்றாக துண்டிக்கப்படும் போதே,  மனித  பாதுகாப்பை மற்றும் அந்தரங்கத்தை உறுதிப்படுத்துவது இயலுமான விடயமாகும்.

ஆனால், இது போன்றவற்றை,  இதுவரை,    வாழ்க்கைப் பாணி தெரிவுகள் (life style choices and options) மூலம் கட்டுப்படுத்தலாம்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ampanai said:

ஸ்மார்ட் டிவி கேமரா மற்றும் மைக்ரோபோன் வாயிலாக கண்காணிக்க முடியும்

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

உங்களைப் பார்த்து மோகன் மயங்கி விழாவிட்டால் சரி

  • தொடங்கியவர்

நீங்கள் உங்கள் கணணியில் எதனை செய்கிறோர்களோ அவை அனைத்தையும் கண்காணிக்கும் வல்லமை உடையவர்களும் செய்யலாம். 

கணணியில் உள்ள 'கமராவை' மூடி விட்டால், உங்களை அவதானிக்க முடியாது.   

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை நாளுக்குத்தான் இப்படியே பயந்து பயந்து மூடிக்கொண்டே திரிவது?
பார்க்கிறதென்றால் பார்த்துட்டு போ என்று எல்லாத்தையும் நான் திறந்துதான் விட்டிருக்கிறேன். 

பாங்குகள் கிரெடிட் கார்டு விபரங்கள்தான் எப்படி பாதுகாப்பது?
என்று கொஞ்சம் கவனமாக இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் யாழ்களத்தை பாத்துக்கொண்டிருக்கேக்கை நிர்வாகம் என்னை கண்காணிக்கேலுமோ?ஏனெண்டால் நான் கூடுதலாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறனான்....அதுதான் கேட்டனான். :cool:
கலோ மோகன் உங்கடை கொம்பியூட்டரிலை நான் தெரியிறனே? 🤣

நித்தியானந்தா மடத்துல சேர்ந்து பணிவிடை செய்றதா பதிவு போட்டிருக்கிறீங்க..!
'குமாரசாமியானந்தா' என காணொளியாகி ஏடாகூடமா ஆகிடப் போகுது..!!

வெப் காமிராவை வயர்களுக்கு போடும் 'இன்சுலேசன் டேப்' போட்டு மூடிவிடுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

எத்தினை நாளுக்குத்தான் இப்படியே பயந்து பயந்து மூடிக்கொண்டே திரிவது?

அரசாங்கம், எம்மிடம் இருந்து data  விளைச்சலை அறுப்பதை தவிர்க்க முடியாது.

ஆனால், தனியார், முக்கியமாக குளோபல் corporates and MNCs data  விளைச்சலை அறுப்பதை, இயலுமானவரை தடுக்கவேண்டும்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு வழி இருக்கிறது..

கணணி பாவிப்பதாக இருந்தால்,

Control Panel>System>Device Manager>Imaging Device ல் க்ளிகினால் வரும் 'காமிரா'வை சுட்டி disable  செய்துவிடுங்கள்.

காமிரா நிரந்தரமாக Off ஆகிவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இன்னுமொரு வழி இருக்கிறது..

கணணி பாவிப்பதாக இருந்தால்,

Control Panel>System>Device Manager>Imaging Device ல் க்ளிகினால் வரும் 'காமிரா'வை சுட்டி disable  செய்துவிடுங்கள்.

காமிரா நிரந்தரமாக Off ஆகிவிடும்.

 

ராஜவன்னியன்... அப்போ Skype பிலும் உறவினர்களுடன் கதைக்க முடியாதே.

  • கருத்துக்கள உறவுகள்

கள்

1 hour ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்... அப்போ Skype பிலும் உறவினர்களுடன் கதைக்க முடியாதே.

அதுவெண்டால் உண்மைதான்.

ஒவ்வொரு முறையும் தேவைக்கேற்ப disable அல்லது enable  செய்ய வேண்டி வரும்.

கணணியை தேவைக்கு மட்டும் பாதுகாப்பான, இணைய தளங்களைக் காண, வலு கவனமாக பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக https:// என்று இணையதளம் ஆரம்பித்திருந்தால் மட்டுமே ஓரளவு அத்தளம் பாதுகாப்பானது என நினைவிற் கொள்க. அதில் s என்பது secured socket layer என்பதைக் குறிக்கும்.

இணைய உலகம் மிக ஆபத்தானது, வெகு எளிதாக ஸ்பைவேர்கள்(Spyware) உங்கள் கணணிக்குள் புகுந்து உட்கார்ந்துவிட்டால் வெளியேற்றுவது கொஞ்சம் சிரமம்.

இந்த ஸ்பைவேர்களை தொலைவிலிருந்து இயங்கி உங்கள் அந்தரங்க, சொந்த விடயங்களை, வங்கிக் கணக்கு நுழைவுச்சொல்லைக் கூட திருட முடியும். மேலே குறிப்பிட்ட வெப் காமிராவைக் கூட (disable செய்திருந்தாலும்) இன்னொரு இடத்திலிருந்து இயக்க முடியும்.

கவனம்.

மிக முக்கியமாக தனி அறையில் பிரத்யேகமாக இருக்கும்பொழுது (குமாரசாமி அண்ணர் கவனிக்க..! 😀) அனைத்து காமிராக்களின் மின் இணைப்பை துண்டித்து விடுங்கள், முடிந்தால் திடமான டேப் (solid tape) போட்டு காமிராவை மூடிவிடுங்கள்.

கேரளாவில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை கீழேயுள்ள இணைப்பில் பாருங்கள்.

https://english.manoramaonline.com/districts/kozhikode/2019/09/25/smart-tv-mounted-on-the-wall-may-catch-you-with-pants-down.html

பிரச்சினைகள் வருமுன் காப்பதே நல்லது!

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வில்லன் ஆன 'ஸ்மார்ட்' டிவி: பொதுமக்கள் உஷார்

திருவனந்தபுரம்: "ஸ்மார்ட் டிவி"யின் கேமிரா அணைக்கப்படாததால், அந்த வீட்டு பெண்ணின் உடை மாற்றும் வீடியோ பதிவாகி வெளியே பரவியது. இதனால் அந்த குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

கேரளாவை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். சமீபத்தில் 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆபாச படம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில், அவரின் மனைவி, கேரளாவில் உள்ள சொந்த வீட்டில் உடைமாற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனையறிந்த அவரது குடும்பத்தினரும் இந்த வீடியா எப்படி எடுக்கப்பட்டது என்பது தெரியாமல் குழம்பி தவித்தனர்.

தொடர்ந்து, வீட்டில் வெளி நபர் யாரோ ரகசிய கேமரா வைத்து, அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் என முடிவு செய்து, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். வீட்டில் ரகசிய கேமரா எதுவும் கிடைக்கவில்லை.

வெளிநபர் வருவதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரும், வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை பரப்பிய நபர்களை தேட துவங்கினர். வீட்டின் படுக்கை அறையில், கேமரா வைத்தது யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, காட்சி படம் பிடிக்கப்பட்ட கோணத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கோணத்தில் ஒரு ஸ்மார்ட் டிவி தான் இருந்தது. பிறகு தான் எங்கிருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்பதே புரிந்தது.

அந்த அறையில் இருந்த ஸ்மார்ட் டிவியில் இருந்த கேமிரா தான் சம்பந்தப்பட்ட பெண், உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்தது தெரியவந்தது.

அந்த வீட்டில் முன்பு எல்.இ.டி டிவி இருந்தது. கணவர், சொந்த ஊர் வந்த போது, ஆண்டிராய்டு டிவி வாங்கி கொடுத்துள்ளார். அவர், வெளிநாடு சென்ற பின்னர், அந்த டிவி மூலம், ஸ்கைப் வசியைப் பயன்படுத்தி வீடியோ கால் பேசி உள்ளார்.

இப்படி ஒரு நாள் பேசிவிட்டு டிவியை அணைத்த அந்த பெண், டிவியில் இருந்த வீடியோவை அணைக்க மறந்துவிட்டார். ஆனால், கேமரா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இந்த வீடியோ கணவரின் கம்ப்யூட்டருக்கு சென்றுள்ளது, அப்போது வேறு யாரோ தற்செயலாக கம்ப்யூட்டரை ேஹக் செய்துள்ளனர். அவர்களிடம் அந்த வீடியோ மாட்டிக்கொண்டது. இந்த வீடியோ தான் கணவரின் போனுக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட் சாதனங்களில் கவனம்

கேரளாவில், ஒரு மாதத்தில் மட்டும் 200 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களை பரவ செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, தங்களது சாதனங்கள் மீது பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சைபர் குற்றங்கள் குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் இருக்கும் போது, அதில் மின்சாரத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மொபைல் போனில், இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருந்தாலும், அந்த போனை பயன்படுத்துபவர் எங்கு சென்றார். எங்கு உண்வு உண்டார் என்பது உள்ளிட்ட அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என போலீசார் கூறுகின்றனர்.

பெரும்பாலான மக்கள், சைபர் குற்றங்களில் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியாமல் உள்ளனர். மொபைல் போன்களில், சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, அந்த செயலி, அவர்களின் தகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்பதை தெரிந்து வைத்திருப்பது இல்லை. மேலும் சில செயலிகள், பதிவிறக்கம் செய்யும் போது, அவை, பயன்பாட்டாளர்களின் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த அனுமதி கேட்கும். இவை தான், தகவல் கசிய முக்கிய காரணமாக உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே! இனி மேல் டொயிலட்டுக்குள்ள போன் கொண்டு போறதை நிப்பாட்ட வேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 7:13 AM, ராசவன்னியன் said:

வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் இருக்கும் போது, அதில் மின்சாரத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


இணையத்தில் இருந்தும்,  உள் வீட்டின் Network இல் இருந்தும் துண்டித்தால் மட்டுமே smart tv,  ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டதாக  கருதலாம்.

ஏனெனில், அனைத்து smart tv யிலும், மின்கலங்கள் (cmos, சாதாரண pc, camera  வில் உதாரணம்) உண்டு.     

உள் வீட்டு Network,  Ethernet தொடர்பு ஆயின், PoE  (ethernet ஊடான மின்சக்தி  வழங்கல்) சாத்தியக்கூறுகள் இருக்கிறது, PoE இல்லாவிட்டாலும்.

இவை அனைத்துமே, smart tv இல் இருக்கும் தொழில்நுட்பத்தை பொறுத்து, attack vectors ஆகுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/4/2019 at 8:46 PM, ரதி said:

அட கடவுளே! இனி மேல் டொயிலட்டுக்குள்ள போன் கொண்டு போறதை நிப்பாட்ட வேணும் 

ஓ.......அந்த பழக்கமெல்லாம் இருக்கோ. நியூஸ் பேப்பருக்கு பதிலாய் போன்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.