Jump to content

"கடவுச்சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்": சர்வதேச நியமங்கள் என்கிறது குடிவரவு குடியகல்வு திணைக்களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து  மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார்.  இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில்,

 

தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைப்­பா­னது புதிய கட­வுச்­சீட்­டுக்­கான படம் எப்­படி இருக்க வேண்டும் என்ற வழி­காட்­டு­தல்­களை எல்லா நாடு­க­ளுக்கும் வழங்­கி­யுள்­ளது.

virakesari.jpg

அதன் படி கட­வுச்­சீட்­டி­லுள்ள படத்தில்  முகத்தில் எந்­த­வி­த­மான செயற்கை அடை­யா­ளங்­களும் இருக்க முடி­யாது. ஆகையால் நாம் நெற்­றியில் பொட்­டி­ருப்­பதை தவிர்க்­கச்­சொல்­கிறோம்.

கூடு­த­லாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குச்­செல்லும் பெண்­களே பாதிப்­ப­டை­கின்­றனர். அதா­வது பொட்டு உள்ள படத்தை  கட­வுச்­சீட்டில்  கொண்­டி­ருக்கும் பெண்கள்  சில சந்­தர்ப்­பங்­களில் பொட்டு இடாது 

 

 

 

சில நாடு­க­ளுக்கு  போகும் அவர்­களை  சில நாடு­களின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் நிறுத்தி வைத்த சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அது மட்­டு­மன்றி குறித்த நாடு­க­ளுக்­கான விசாக்­களை பெறு­வதும் இவர்­க­ளுக்கு சவா­லா­கவே இருக்­கின்­றன. இக்­கா­ர­ணங்­களை வைத்து விசாக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.  ஆகவே இது அவர்­களின் நன்­மைக்­கா­க­வே­யன்றி வேறு தனிப்­பட்ட கார­ணங்கள் கிடை­யாது. இருப்­பினும் இது தொடர்பில் முரண்­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

நாம் இது தொடர்பில் மக்­க­ளுக்கு விளக்­கங்­களை கொடுத்து வரு­கிறோம் என்று தெரி­வித்தார். ஊவா மற்றும் மத்­திய மாகா­ணத்தில் உள்ள தமி­ழர்கள் கண்­டியில் அமைந்­துள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­துக்கே சாதா­ரண கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கச்­செல்வர்.

இந்­நி­லையில் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட கட­வுச்­சீட்டு பட­மெ­டுக்கும் புகைப்­பட நிலை­யங்­களில் எடுக்­கப்­பட்ட படங்­களை மேற்­படி திணைக்­களம் நிரா­க­ரித்து பொட்­டு­களை தவிர்த்து அங்கு மீண்டும் படமெடுக்க அழுத்தம் கொடுப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.இதே வேளை நெற்றிப்பொட்டு என்பது தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடைய அம்சம் என்பதால் அதைத் தவிர்த்து படமெடுப்பதற்கு பெண்கள் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/70638?fbclid=IwAR11A9sY4ztsR9ngQ9bZv-797hYfrWLM6ZuO9YdtFhDLoN6jRAB6djnzctE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

கூடு­த­லாக ஐரோப்­பிய நாடு­க­ளுக்­குச்­செல்லும் பெண்­களே பாதிப்­ப­டை­கின்­றனர். அதா­வது பொட்டு உள்ள படத்தை  கட­வுச்­சீட்டில்  கொண்­டி­ருக்கும் பெண்கள்  சில சந்­தர்ப்­பங்­களில் பொட்டு இடாது  சில நாடு­க­ளுக்கு  போகும் அவர்­களை  சில நாடு­களின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் நிறுத்தி வைத்த சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அது மட்­டு­மன்றி குறித்த நாடு­க­ளுக்­கான விசாக்­களை பெறு­வதும் இவர்­க­ளுக்கு சவா­லா­கவே இருக்­கின்­றன. இக்­கா­ர­ணங்­களை வைத்து விசாக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.  ஆகவே இது அவர்­களின் நன்­மைக்­கா­க­வே­யன்றி வேறு தனிப்­பட்ட கார­ணங்கள் கிடை­யாது.

தமிழ் மக்கள் மேல் உள்ள... அக்கறையை பார்க்க, கண் கலங்குது.

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

அதன் படி கட­வுச்­சீட்­டி­லுள்ள படத்தில்  முகத்தில் எந்­த­வி­த­மான செயற்கை அடை­யா­ளங்­களும் இருக்க முடி­யாது.

பாவம் சந்திரிக்கா அம்மையார். அவருக்கு இனி வாழ்நாளில் கடவுச்சீட்டுக் கிடைக்காது. அவர் முகத்தில் உள்ள கண் ஒன்று செயற்கைக்கண். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாடோ இவங்களுக்கு அரசபலசான  பாஸ்போர்ட் சிஸ்ட்டத்தை  பிச்சை யாய் குடுத்து விட்டினம்  போல் உள்ளது உலகம் போற வேகத்தில் இவை சைக்கிள் கப்பில் பொட்டு  போடுவது பற்றி துவேசம் ஆடுகினம் .

இந்தியாவில் இப்படி சொல்லமுடியுமா ?

சிங்கப்பூரில் உள்ள வேகம் எப்படி என்று பாருங்க 

சாங்கி விமான நிலையம்: குடிநுழைவுக்கு கடவுச்சீட்டு தேவையில்லை; கருவிழி, முக அடையாள சோதனை

nz_airport_04125.jpg?itok=kSDCgTIK

 

கருவிழி, முகம் ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பம் சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் பரிசோதித்துப் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. 

இதில் பயணிகள் தங்களது குடிநுழைவு நடைமுறைகளை நிறைவு செய்ய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தத் தேவையிருக்காது.

 

அண்மையில் துவாஸ் சோதனைச் சாவடியில் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்தப் புதிய குடிநுழைவு நடைமுறை தற்போதிருக்கும் கடவுச்சீட்டு, பெருவிரல் ரேகைப் பயன்பாட்டு முறையைவிட வேகமானதாக இருக்கும்.

கைகளில் வறட்சி, காயங்கள் போன்றவை ஏற்படும்போது பெருவிரல் ரேகை மூலம் அடையாளம் காணப்படுவது சிக்கலாகிவிடுகிறது.

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி இந்தப் பரிசோதனை தொடங்கியது. ஆறு வயதுக்கு மேற்பட்ட, K என்ற எழுத்தில் தொடங்கும் கடவுச்சீட்டு எண் கொண்ட சிங்கப்பூரர்கள் மட்டுமே இந்தப் புதிய நடைமுறையைப் பயன்படுத்த தற்போது வகைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களது கடவுச்சீட்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு அளிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

சுமார் ஆறு மாத காலத்துக்கு இந்தப் பரிசோதனைகள் தலா ஒரு தடத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறையைப் பயன்படுத்துவோர் கறுப்புக் கண்ணாடிகள், தொப்பிகள் போன்ற கண், முகம் ஆகியவற்றை மறைக்கக்கூடியவற்றை அணிந்திருந்தால் அவற்றை அகற்ற வேண்டும்.

இந்தப் புதிய முறையின் இரண்டு விதமான செயல்பாடுகள் அவற்றின் திறன், துல்லியம் போன்றவற்றுக்காகப் பரிசோதிக்கப்படுகின்றன.

முதல் வகையில், முதல் பயணியின் அடையாளங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அடுத்த பயணியின் அடையாளங்களின் பரிசோதனை தொடங்கும்.

அதாவது, ஒரு கதவு திறந்து பயணி நுழைந்து, அடுத்த கதவை நோக்கி நடந்து செல்லும்போதே அவரது கண், முக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாவது கதவு தானாகவே திறந்துகொள்ளும். இரண்டாவது கதவு திறப்பதற்காக பயணி காத்திருக்கத் தேவையிருக்காது.

இரண்டாவது வகையில், முதல் பயணியின் அடையாளங்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டு அவர் வெளியேறிய பிறகே அடுத்த பயணியின் அடையாளங்காணும் பணி தொடங்கும்.

அதாவது, முதல் கதவு திறந்து ஒருவர் நுழைந்ததும் அந்தக் கதவு மூடிக்கொள்ளும். அவர் இரண்டாவது கதவுக்கு அருகில் சென்று நின்ற பிறகே அவரது  அடையாளங்கள் பரிசோதிக்கப்படும். சரியாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது கதவு திறந்து அவர் வெளியேற அனுமதி அளிக்கப்படும். அதன் பின்னரே அடுத்த நபர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவார்.

துவாஸ் சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22,500 சிங்கப்பூரர்கள் குடிநுழைவு நடைமுறைகளை இந்தப் புதிய முறையில் நிறைவு செய்தனர். 90% நடைமுறைகள் சுமுகமாக நடைபெற்றன.

நான்காவது முனையத்தில் உள்துறைக் குழுவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவை உருவாக்கிய, பயணிகளுக்கு எளிதாகப் புரியக்கூடிய இடைமுகப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

https://www.tamilmurasu.com.sg/top-news/story20191204-37277.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளே பொட்டுப்பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை. பொட்டு இடுவது என்பது அடையாளத்தை மாற்றும் என்பது சுத்தப் பித்தலாட்டத்தனம். அதுவும் இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில். அந்த வகையில்.. இது சொறீலங்காவின் சோடிக்கப்பட்ட தமிழினத்துக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ladies-Pottu.jpg

தமிழ் பெண்களின் நெற்றிப்பொட்டு விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை

கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் நீண்ட பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் பேணிப்பாதுகாத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்த நாட்டின் பிரஜைகள் என்ற சமத்துவத்திற்காக அவர்கள் ஏங்கி நிற்கின்ற சூழலில் மிகமுக்கிய விடயமாக கடவுச்சீட்டில் நெற்றிப் பொட்டை நீக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிவிப்பொன்றை குடிவரவு, குடியகவல்வு திணைக்களம் செய்துள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நெற்றிப்பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நெற்றிப்பொட்டு வைப்பது பரம்பரை ரீதியாக கடத்தப்பட்ட பழக்கமாகவும் விஞ்ஞான ரீதியிலும் இன, மத, சமூக அடையாளகமாகவும் அது காணப்படுகின்றது.

போர் உக்கிரமாக நடைபெற்ற காலங்களில்கூட தமிழ் பெண்கள் தமது நெற்றிப்பொட்டு வைக்கும் பாரம்பரியத்தினை கைவிட்டிருக்கவில்லை. அவ்வாறான சூழலில் சர்வதேச நியமனங்களின் பிரகாரம் கடவுச்சீட்டு உருவாக்கப்படுகின்றது என்பதற்காக ஒரு இனத்தின் பாரம்பரிய பழக்கத்தையும் வழக்கத்தையும் மாற்ற முயல்வதானது பெரும் தவறான விடயமாகும்.

இந்த விடயம் தொடர்பாக பலதரப்பட்டவர்களும் பெண்கள் அமைப்புக்களும் என்னைத்தொடர்பு கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

அதனடிப்படையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

இந்த நெற்றிப்பொட்டு விவகாரத்தினை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான பிரதிபலிப்பினை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்துள்ளேன்.

தமிழினத்தின் பாரம்பரிய செயற்பாடுகளையும் பண்புகளையும் மறுதலிக்கும் எந்தவொரு விடயத்திற்கும் ஒருபோதும் துணைபோவதற்கோ இடமளிப்பதற்கோ முடியாது” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/தமிழ்-பெண்களின்-நெற்றிப்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அடக்குமுறை இனத்துவேச வேலை என்றாலும் 
வாதாடி வெல்ல முடியாது.

மீசை தாடி வைத்து போட்டோ எடுத்தவர்கள் எல்லாம் 
அதை வழித்துவிட்டு போகிறார்கள் 

ஒரு சிறிய நெற்றிப்பொட்டு வைத்துவிடு  வைக்காமல் போகும்போது 
எப்படி மாறுதல் காணும் என்பதுதான் விபத்துக்கு உள்ளானது.

அதே நேரம் செயற்கயான அடையாளங்கள் எனும்போது ....
இதுக்கு அளவுகோல் கிடையாது  எல்லாமே அகற்றியே ஆகவேண்டும். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.