Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குமூலம் வழங்கினார் சுவிஸ் தூதரக பணியாளர்

Featured Replies

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுபவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

https://www.virakesari.lk/article/70686

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் சம்பவம் பொய்யானது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன : எஸ்.பி.திஸாநாயக்க 

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

SB.jpg

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் கூறினார். 

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொய்யானது என்பதை நிரூபிப்பபதற்கான பல ஆதரங்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

கிடைத்துள்ள ஆதரங்களின் அடிப்படையில் குறித்த பெண்னுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. 

அவர் யாராலும் கடத்தப்படவுமில்லை. வேறு ஏதேனுமொரு நோக்கத்துக்காக அந்த பெண் ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறி சிறப்பானதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இவற்றை தெளிவுபடுத்தும் போதுமானளவு சாட்சிகள் அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. 

தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் குறித்த நேரத்தில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை. அவர் சென்ற இடம், இறங்கிய இடம் , மீண்டும் வந்த இடம் தொடர்பான அனைத்து தகவல்களும் படங்களுடனும், காணொளிகளுடனும் ஆதாரங்களாகக் இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரங்களைத் தாண்டி குறித்த பெண் ஊழியருக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர் நேரடியாக பொலிஸாரிடம் சாட்சியமளிப்பதே ஒரே வழியாகும். 

எவ்வாறிருப்பினும் சுவிஸ் தூதரகத்தின் இந்த செயற்பாட்டால் புதிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அவ பெயரை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/70669

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

கிடைத்துள்ள ஆதரங்களின் அடிப்படையில் குறித்த பெண்னுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது. 

அந்த ஊழியரையும் அவர் குடும்பத்தையும் சுவிற்சலாந்து தனது நாட்டுக்கு அழைத்து அடைக்கலம் கொடுக்குமானால் உண்மைகள் அனைத்தும் முழுமையாக வெளிவரலாம்.🤔

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக ஊழியர் இரண்டாவது நாளாக CIDயில் முன்னிலை

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக இன்று (09) ஆஜராகியுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

அத்துடன்,  குறித்த பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மேலும், வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-ஊழயர-இரணடவத-நளக-CIDயல-மனனல/150-242256

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண், தாக்குதல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பிலும்,  அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிந்தார்.

அத்துடன், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடையை நீட்டிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-ஊழயர-சடட-வததய-அதகரயடம-மனனல/150-242252

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?

இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இரவு வரையும், இன்றைய தினமும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் குறித்த பெண் அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அதிகாரி கடத்தப்பட்டதாக முறைப்பாடு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியொருவர் கடந்த மாதம் 25ஆம் தேதி வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வராத பின்னணியில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்ததாக வெளிவிவகார அமைச்சு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.

சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் அதிகாரி அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டு, தடுத்து வைத்து சுவிட்சர்லாந்து தூதரகம் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து, இலங்கை அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை முக்கிய விடயமாக தாம் கருத்திற்கொள்ளுவதாக சுவிஸர்லாந்து வெளிவிவகார அமைச்சு கடந்த மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டு கூறியிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் சுவிஸர்லாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு அதிகாரி நிஷாந்த சில்வா பாதுகாப்பு அமைச்சின் உரிய அனுமதியை பெறாது, கடந்த 24ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இலங்கையில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்திய அதிகாரியே இவ்வாறு சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற மறுதினமே சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உரிய முறையில் நடத்துவதற்காக முறைப்பாடொன்றை பதிவு செய்யுமாறு சுவிஸர்லாந்து தூதரகத்திடம் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரியிருந்த நிலையிலேயே, கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முன்னிலையாகியிருந்தார்.

வெளிநாடு செல்ல தொடர்ந்து தடை

சுவிஸர்லாந்து தூதரக பெண் அதிகாரிபடத்தின் காப்புரிமைMINISTRY OF FOREIGN AFFAIRS SRILANKA

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூரகத்தின் பெண் அதிகாரிக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் அதிகாரியிடம் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொள்ளும் நோக்குடனேயே நீதிமன்றத்திடமிருந்த இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளாரா?

கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா அல்லது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிகாரியின் மனநிலை குறித்தும் ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து பெண் அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னர் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், பெண் வைத்தியர் இல்லாமையினால், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி வைத்திய பரிசோதனைகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த அதிகாரியை விரைவில் பெண் வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

https://www.bbc.com/tamil/global-50719106

  • தொடங்கியவர்
21 minutes ago, ஏராளன் said:

பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளாரா?

கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா அல்லது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அதிகாரியின் மனநிலை குறித்தும் ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் நீதி, நீதிமன்றம், நீதிபதிகள் மீது சுவிஸ் அரசு (வேறு வழியில்லாத காரணத்தால் )  நம்பிக்கை  வைத்துள்ளதாக தெரிகின்றது.

 

21 minutes ago, ஏராளன் said:

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

பெயரை பகிரங்கப்படுத்தி விட்டார்கள். சுவிஸ் அரசு அவரின் குடும்ப உறவுகளையும் பொறுப்பெடுக்கவேண்டும்.

Edited by ampanai
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
7 hours ago, ampanai said:

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்

 

image_772b7af678.jpgBy Yoshitha Perera   

The travel ban on the Swiss Embassy local staffer - Garnier Banister Francis, who claimed that she was abducted by unidentified men, was extended till December 12 by the Colombo Chief Magistrate yesterday. 

When the case was taken before Colombo Chief Magistrate Lanka Jayarathne, Senior State Counsel Janaka Bandara said that the CID would record and complete her statement by Monday (09) evening.   


He said that the CID had recorded her statement for about nine hours, starting from Sunday (08) 5pm to Monday (09) 2am.   
Earlier, sources said that she was directed to the Chief Judicial Medical Officer for a medical report.   
However, the alleged victim has later requested for a female JMO to record her medical report.   


Representing the alleged victim’s party, President’s Counsel Upali Kuruppu requested the Magistrate to issue an order on the Chief JMO to appoint a female JMO to examine her

 

http://www.dailymirror.lk/print/front_page/Swiss-Embassy-staffer-examined-by-JMO/238-179313

  • தொடங்கியவர்

3 ஆவது நாளாகவும் சி.ஐ.டி.யில் ஆஜரான சுவிஸ் தூதரக ஊழியர்!

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய  நேற்றைய தினம் அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 

அத்துடன்  அவரிடம் நேற்றும் நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான  நான்காம் மாடியில் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_3685.JPG

https://www.virakesari.lk/article/70768

  • தொடங்கியவர்
  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. இன்று செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, அவர் தற்போது அங்கு உள்ளார். இன்று எத்தனை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்படும்?

சனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், புலனாய்வு என அனைவருமே, இது கட்டுக்கதை, அரசை அவமதிக்க முயன்ற சோடிப்பு என்றதன் பின், இங்கு யாரைக் குற்றவாளியாக்க இந்த விசாரணை ? 

 
Just now, ampanai said:
  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. இன்று செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, அவர் தற்போது அங்கு உள்ளார். இன்று எத்தனை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்படும்?

சனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், புலனாய்வு என அனைவருமே, இது கட்டுக்கதை, அரசை அவமதிக்க முயன்ற சோடிப்பு என்றதன் பின், இங்கு யாரைக் குற்றவாளியாக்க இந்த விசாரணை ? 

 

இரண்டு மணித்தியால கடத்தலுக்கு இத்தனை மணித்தியால விசாரணையா? என்ன  மொழியில் விசாரணை செய்கிறார்களோ தெரியவில்லை. சில வேளைகளில் மொழி  பிரச்சினையாகவும் இருக்கலாம். இருந்தாலும் இலங்கை அரசும் , அரசியல்வாதிகளும் இது பொய்யான செய்தி என்று சொல்லுவதால் விசாரணையில் உண்மை வெளிப்படுமா?  

  • தொடங்கியவர்
  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. இன்று செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, 4 மணித்தியாலங்கள்

மொத்தம் = 15 மணித்தியாலங்கள் !

http://www.dailymirror.lk/top_story/Swiss-Embassy-employee-gives-4-hour-long-statement-to-CID/155-179359

2 hours ago, ampanai said:
  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. இன்று செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, 4 மணித்தியாலங்கள்

மொத்தம் = 15 மணித்தியாலங்கள் !

இது வாக்குமூலம் பெறுவது போலத் தெரியவில்லை!

உண்மைகளை மறைக்க ஒவ்வொரு நாளும் பேரம் பேசும் பேச்சுவார்த்தை நடத்துவத்தைப் போலவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:
  1. முதல் நாள் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்.
  2. அவர் மீண்டும் இரண்டாம் நாள் வருமாறு அழைக்கப்பட்டு, 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாம்.
  3. இன்று செவ்வாய் மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டு, 4 மணித்தியாலங்கள்

மொத்தம் = 15 மணித்தியாலங்கள் !

http://www.dailymirror.lk/top_story/Swiss-Embassy-employee-gives-4-hour-long-statement-to-CID/155-179359

 

9 hours ago, போல் said:

இது வாக்குமூலம் பெறுவது போலத் தெரியவில்லை!

உண்மைகளை மறைக்க ஒவ்வொரு நாளும் பேரம் பேசும் பேச்சுவார்த்தை நடத்துவத்தைப் போலவே தெரிகிறது.

சுவிஸ் தூதரக பிரதிநிதிகள், மற்றும் சட்டத்தரணிகளுடன் பேரம் பேசுவது எதிர்விளைவுகளை உருவாக்கும். 

எனது பார்வையில், இராணுவத்தின் இரகசிய பிரிவு செய்திருக்கிறது. சாட்சியம் உறுதியானது போல இருக்கிறது.

சி.ஐ.டி. க்கு இனி எப்படி இதை பொய் என்று நிறுவுவது பெரும் பிரச்சினை. அப்படி உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள தக்கவகையில் நிறுவாவிட்டால், மனித உரிமைகளை காட்டி சீன எதிர்ப்பு நாடுகள் பயணத்தடை, பொருளாதாரத்தடை, கடன்தடை என்று வாட்டி எடுக்கும் சாத்தியம் உள்ளது. ஆகவே, மேலிடத்து நெருக்குதல் சி.ஐ.டி. உயர்மட்டத்தில் உள்ளவர்களை உலுப்பி எடுக்கிறது. ஓடித்தப்பியவரும் மேல்மட்ட ஆதரவுடனே தகவல்களையும் கொண்டு ஓடிவிட்டதாக செய்திகள். எல்லாம் மீண்டும் குழம்பப்போகிறது.

  • தொடங்கியவர்

Garnier-Banister-Francis.jpg

 

  • சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்படவில்லை -  அரசாங்கம், அரச சார்பு ஊடகங்கள்
  • ஊடகங்கள் மூலம் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதுடன், அவரது வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட்டும் அருவருப்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்
  • பாதிக்கப்பட்டவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த போதிலும், பாதிக்கப்பட்டவரும் அவரது சுவிஸ் தூதரகமும் சதித்திட்டம் தீட்டுவதாக செய்தி வெளியிட்டு அரசாங்கத்தின் தேவையை சில முக்கிய ஊடகங்கள் பூர்த்தி செய்கின்றன.
  • அவர் கொழும்பில் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு, சிஐடியின் அதிகாரியான நிஷாந்தா சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு எப்படிச் சென்றார் என்று கேள்வி எழுப்பினார்.
  • ராஜபக்ஷ ஆட்சியின் கடத்தல்கள், காணாமல் போனவர்கள், படுகொலைகள் மற்றும் பிற பழிவாங்கல்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய நிலைமைக்கு பயந்து அந்த அதிகாரி தப்பி ஓடிவிட்டார் என்பது தெளிவாகிறது.
  • இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றாலும், சுவிஸ் தூதரக அதிகாரி  கடத்தப்பட்ட சம்பவமானது; சிஐடி அதிகாரியின் அச்சங்கள் நியாயமானது என்பதை வெளிப்படுத்துகிறது.
  • தூதரக ஊழியரை வெள்ளை வானில் கடத்தியமைக்கு வெளியுறவு அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும் என்று சுவிஸ் வெளியுறவுத்துறை செயலர் பாஸ்கல் பிரிஸ்வில்லி கூறுகிறார்

https://poovaraasu.blogspot.com/2019/12/blog-post_74.html?fbclid=IwAR3X0DIeLm-QlqQyK4a0aXrH4hU-QKh84ZcfNsht7VPH_HthOgyeFnEyn3g

 
 

சொறிலங்கா அரச பாதுகாப்புத் தரப்புக் கேடிகள் கடத்தியவர்களை தேடுவதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை சித்திரவதை செய்கின்றனர். இதை தட்டிக்கேட்க ஐரோப்பிய நாடுகள் கூட இன்னமும் முன்வரவில்லை.

சொறிலங்கா நீதிமன்றுக்கும் கடத்தியவர்கள் சொறிலங்கா அரச பாதுகாப்புத் தரப்புக் கேடிகள் தான் என்று சொல்லப்படுகிற நிலைல சகல அரச பாதுகாப்புத் தரப்புக் கேடிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர் வெளிநாடு செல்ல தடை விதித்து தங்கள் தமிழர் விரோத சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

  • தொடங்கியவர்
3 hours ago, கற்பகதரு said:

சி.ஐ.டி. க்கு இனி எப்படி இதை பொய் என்று நிறுவுவது பெரும் பிரச்சினை. அப்படி உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள தக்கவகையில் நிறுவாவிட்டால், மனித உரிமைகளை காட்டி சீன எதிர்ப்பு நாடுகள் பயணத்தடை, பொருளாதாரத்தடை, கடன்தடை என்று வாட்டி எடுக்கும் சாத்தியம் உள்ளது. ஆகவே, மேலிடத்து நெருக்குதல் சி.ஐ.டி. உயர்மட்டத்தில் உள்ளவர்களை உலுப்பி எடுக்கிறது. ஓடித்தப்பியவரும் மேல்மட்ட ஆதரவுடனே தகவல்களையும் கொண்டு ஓடிவிட்டதாக செய்திகள். எல்லாம் மீண்டும் குழம்பப்போகிறது.

சுவிஸ் அரசு உலக அரசியலில் ஒரு தனித்துவமானது. பலராலும் அரசியல் ரீதியாக ஒரு நடுநிலை நாடாக பார்க்கப்படுகின்றது. எனவே, அவர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளே குரல்கொடுக்கும். 

இதில், சிங்கள இராணுவ அதிகாரிகள் அதிகம் தலையிட்டு இராஜங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டி விட்டுவிட்டார்கள் என்றே தெரிகின்றது. அந்த சிக்கலில் இருந்து சிங்களம் மீழுவது கொஞ்சம் சவாலாக இருக்கலாம். 

இதன் மூலம் தமிழர் தரப்பு உலகத்தில் மீண்டும் தமது மக்களுக்காக அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சந்தர்ப்பமும் தரப்பட்டுள்ளது. 

குறிப்பு: இதுவே சஜித் வென்றிருந்தால் நடந்து இருக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இதில், சிங்கள இராணுவ அதிகாரிகள் அதிகம் தலையிட்டு இராஜங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டி விட்டுவிட்டார்கள் என்றே தெரிகின்றது. அந்த சிக்கலில் இருந்து சிங்களம் மீழுவது கொஞ்சம் சவாலாக இருக்கலாம். 

இலங்கை பொருளாதரத்தை பாதிக்கும் எந்த சர்வதேச நடவடிக்கையும் அங்குள்ள தமிழரையும் பாதிக்கும். புலம்பெயர்ந்தவர்கள் தமது உறவுகளுக்கு உதவுவதும் பாதிப்படையும். அந்த சிக்கலில் இருந்து தமிழர்  மீழுவதும் கூட  கொஞ்சம் சவாலாக இருக்கலாம். 

1 hour ago, ampanai said:

இதன் மூலம் தமிழர் தரப்பு உலகத்தில் மீண்டும் தமது மக்களுக்காக அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சந்தர்ப்பமும் தரப்பட்டுள்ளது. 

 

நாற்பது வருடங்களாக தோற்றுப்போன முயற்சி, தமிழர் தரப்பு உலகத்தில் மீண்டும் தமது மக்களுக்காக அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது. அந்த பயனற்ற முயற்சியில் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கி, சின்ன சின்ன சந்தோசங்களை காண இன்னும் ஒரு சந்தர்ப்பம் இது.

இலங்கை பிரச்சினை மிகவும் சிக்கலானது. உரிமைகளுக்காக குரல்கொடுப்பதன் மூலம் தீர்வு காணப்படலாம் என்றால் எப்போதோ இது தீர்க்கபட்டு இருக்கும்.  ஏன் இந்த பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வு இல்லை? எனக்கு தெரிவன பின்வரும் காரணிகள்:

  1. பாதிக்கப்பட்டவர்களே ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இலங்கை பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை தமிழரும் சிங்களவரும் ஆவர். இரு பகுதியும் பேசி தீர்க்க முயன்று, தோற்றுப்போய், இராணுவ தீர்வுக்கு முயன்றனர். சிங்களவர்களின் இன்றைய எண்ணம் தமது பிரச்சினை தீர்க்கபட்டு விட்டது என்பதாகும். ஆனால் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. பொருளாதார சீரழிவும், பயங்கரவாதமும் (ஈஸ்டர் வெடிப்பு), வல்லாதிக்கமும், ஊழலும் அதிகரித்து கொண்டே போகின்றன. தமிழரின் பிரச்சினையும் தீர்க்கபடவில்லை. சிங்களவரின் பிரச்சினைகள் தமிழரின் பிரச்சினைகளும் ஆகும். அதற்கு மேலாக தமிழருக்கு வேறு பிரச்சினைகளும் உள்ளன. மக்களைபொறுத்தளவும் இந்த "வேறு" பிரச்சினைகள் இரெண்டாம் பட்சமான பிரச்சினைகளே.
  2. பாதிக்கப்பட்டவர்கள் தம்மை பாதிப்பவர்களையே தமக்கு ஆதரவாக இருப்பவர்களாக கற்பனை செய்யும் வரை பாதிப்புகள் தொடரும். இலங்கை தமிழர், இந்தியாவையும், வல்லாதிக்க மேற்கு நாடுகளையும் தமக்கு ஆதரவானவர்கள் என்று கற்பனை செய்து, "எங்களுக்கு தீர்வு தாருங்கள்" என்று கேட்கும் வரை இந்த நாடுகள் தமது சர்வதேச பொருளாதார போட்டிக்கு  இலங்கை  தமிழரை பலி கொடுக்க தயங்க போவதில்லை. உண்மையில் இலங்கை தமிழருக்கு ஆதரவான நாடுகள் என்று எவையும் இல்லை. மிகவும் குறைந்த அளவிலாவது உண்மையில் ஆதரவளிக்கும் நாடுகளாக மோரிசியசும் தென் ஆபிரிக்கவுமே இருக்கின்றன. ஆனால் இவையும் தம்மை பாதிக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டா.
  3. இலங்கை தமிழர் தமது பிரச்சினைக்கு தாமே தீர்வு காண வேண்டும். மற்ற பாதிக்கப்பட்ட இனமான சிங்களவருடன் பேசி இரு பகுதிக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அதில் வெற்றி பெற்றபின் இருவரும் உடன்படாத பிரச்சினைகள் பற்றி ஆராயலாம்.
  4. போரில் சிங்களவர் வெற்றி பெற்றனர். போர் மூலம் தீர்வு காண விரும்பியது இரு தரப்பினருமேயாகும்.  வென்றவர்களுடன் தோற்றவர்கள் பேச மாட்டோம், அதிலும் பார்க்க அழிந்து போவோம் என்று முடிவு எடுத்தால் அந்த வழியிலும் போகலாம். மாறாக, அழிப்பதில் முன்னின்ற இந்தியாவையே மீண்டும் மீண்டும் நண்பன் என கற்பனை செய்து, இந்தியாவின் தேவைகளுக்கு பலியாக விரும்பினால், அதையும் தொடரலாம். எந்தனையோ இனங்கள் அழிந்து போயின. இன்று ரோம சாம்ராஜ்யத்தின் ரோமர்கள் இல்லை. அழிந்து போனார்கள். இத்தாலியர்களால் ரோமர்கள் மாற்றீடு செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்கள் இன்றுவரை இலங்கையில் நீடித்து இருப்பதே பெரிய விடயம். தொடர்ந்து நிலைக்க தக்க இனங்களே பிழைத்து நிற்கும். போகின்ற போக்கை பார்த்தால், இலங்கை சோனகர், இலங்கை முஸ்லிம்களாகி நிலைத்து நிற்பார்கள், ஆனால் இலங்கை தமிழர் சிங்களவராகி விடுவர் என்றே தெரிகிறது.

 

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் : அமைச்சர் அமரவீர 

(ஆர்.யசி)

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் முற்று முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமெனவும்  இது நாடகம் என்பதற்கான ஆதாரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

 எனினும் சுவிஸ் தூதரகம் ஏன் இதனை செய்தது இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை கண்டறியவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி குழுக் கூட்டம் நேற்று இரவு அலரிமாளிகையில் கூடியது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்இ 

 சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக  இந்த சம்பவம் முற்று முழுதாக திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட நாடகமாகும்.  இது ஒரு நாடகம் என்பதற்கான  சாட்சியங்களுடன் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் இருப்பது என்பதை மட்டுமே இப்போது  நாம் கண்டறிய வேண்டியுள்ளது.

இந்த சம்பவம் முற்று முழுதாக நாடகம் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றாகும். ஆகவே அரசாங்கமாக நாம் இந்த சம்பவம் குறித்து கவனமாக அவதானித்து வருகின்றோம். 

எனினும் சுவிஸ் தூதரகம் இதனை செய்ய காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இவ்வாறு செயற்பட்டது. அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தியுள்ளார்.

 அரசாங்கத்தை பலவீனப்படுத்த செய்யப்பட்ட ஒரு விடயமே இது. அதற்கான சாட்சிகள் உள்ளது. அதேபோல் குற்றப்புலனாய்வு பிரிவு இப்போதும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இடமளித்து நாம் தலையிடாது பார்த்துக்கொண்டுள்ளோம். விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றார்.

https://www.virakesari.lk/article/70856

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

 

சுவிஸ் தூதரக பிரதிநிதிகள், மற்றும் சட்டத்தரணிகளுடன் பேரம் பேசுவது எதிர்விளைவுகளை உருவாக்கும். 

எனது பார்வையில், இராணுவத்தின் இரகசிய பிரிவு செய்திருக்கிறது. சாட்சியம் உறுதியானது போல இருக்கிறது.

சி.ஐ.டி. க்கு இனி எப்படி இதை பொய் என்று நிறுவுவது பெரும் பிரச்சினை. அப்படி உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள தக்கவகையில் நிறுவாவிட்டால், மனித உரிமைகளை காட்டி சீன எதிர்ப்பு நாடுகள் பயணத்தடை, பொருளாதாரத்தடை, கடன்தடை என்று வாட்டி எடுக்கும் சாத்தியம் உள்ளது. ஆகவே, மேலிடத்து நெருக்குதல் சி.ஐ.டி. உயர்மட்டத்தில் உள்ளவர்களை உலுப்பி எடுக்கிறது. ஓடித்தப்பியவரும் மேல்மட்ட ஆதரவுடனே தகவல்களையும் கொண்டு ஓடிவிட்டதாக செய்திகள். எல்லாம் மீண்டும் குழம்பப்போகிறது.

உண்மையில் கோத்தாவின் கட்டளையின் கீழ் அவரது ஆட்கள் கடத்தி இருந்தால் இந்த பெண் உயிரோடு திரும்ப வந்திருப்பாவோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

 அவுஸ்திரேலிய பிரஜை  குமார் குணரட்னத்தின் கடத்தல் நினைவில் வந்துபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

உண்மையில் கோத்தாவின் கட்டளையின் கீழ் அவரது ஆட்கள் கடத்தி இருந்தால் இந்த பெண் உயிரோடு திரும்ப வந்திருப்பாவோ?

முதலில், இது கோத்தாவின் கட்டளையின் கீழ் நடந்ததாக இருக்காது. அவர் ஜனாதிபதியான பின், உண்மையில் நாட்டை சிறப்பான முறையில் ஆட்சி செய்ய விரும்புவதை பேச்சிலும், செயலிலும் காட்டி இருக்கிறார்.

இரகசிய பிரிவு தாமாக, தன்னிச்சையாக செயற்பட்டு இருக்க கூடூம். அவர்களுக்கு தேவையானது தகவல்களே அன்றி இவரின் கொலையல்ல. ஆகவே, பயமுறுத்திவிட்டு விட்டுவிட்டார்கள். 

அரசின் கவனத்துக்கு வந்த பின்னர், அரசு சி.ஐ.டி.யை வைத்து அனைத்தையும் பொய்யாக்க முயல்கிறது.

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்: நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரித்திற்குள் தள்ளவே முயற்சி 

செ.தேன்மொழி)

நாட்டையும் அரசாங்கத்தையும் அசௌகரித்திற்குள் தள்ளவே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவிகாரம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த  கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார். 

piyal.jpg

களுத்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சி சூழ்ச்சிகார தலைவர்களின் நிர்வாண நிலைமை தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் வழங்கிய வாக்குமூலத்திலற்ற முற்றிலும் மாறுப்பட்ட கருத்தினையே தற்போது கூறி வருகின்றார். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுவிஸ்தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் குறித்து ஒரு கருத்தினை தெரிவித்திருக்கையில் தூதரகம் மாறுப்பட்ட கருத்தினை தெரிவித்துள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தையும் நாட்டையும் அசௌகரியத்திற்குள் தள்ளவே இவை அனைத்தினதும் நோக்கமாக காணப்படுகின்றன. எனவே கூடிய விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/70926

  • தொடங்கியவர்
சுவிஸ் தூதரக பணியாளரை சிஐடியில் முன்னிலையாகுமாறும் அறிவிப்பு
2019-12-12 12:05:22
 
வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பானிஸ்டர் பிரான்சிஸ் அல்லது சிறிலதாவை இன்று சிஐடியில் முன்னிலையாகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அவருக்கு பயணத்தடை கோரி சிஐடியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த 25ஆம் திகதி சுவிஸ் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இது தொடர்பாக 27ம் திகதி சுவிஸ் தூதர், இலங்கை அரசிடம் முறையிட்டிருந்தார்.
 
கடந்த 8,9,10ம் திகதிகளில் சுவிஸ் பணியாளரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தது.
 
இதேவேளை, கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளரின் கணவனின் தந்தையான பெவன் பெரேரா கடந்த 2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.       
 
 
  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் ; விசாரணைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது 

(ஆர்.யசி)

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் சம்பவம் குறித்த ஆரம்பத்தில் கூறிய காரணிகள் பொய் என்பது இப்பொது இறுதிக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

சர்வதேச தரப்பை பயன்படுத்தி இவ்வாறு அரசாங்கத்தையும் நாட்டினையும் குழப்ப முயற்சிக்கும் நபர்கள் குறித்து விரைவில் உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். 

https://www.virakesari.lk/article/70930

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.