Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்! பிரிக்கப்படுமா இலங்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் பொதுத்தேர்தல் இன்றைய தினம் நடை பெறுகின்றது. இம்முறை அந்த நாட்டின் பொதுத் தேர்தலில் இலங்கையை பகடைக் காயாக வைத்தே இரண்டு பிரதான கட்சிகள் தேர்தல் காலத்தில் குதித்துள்ளன.

அதனடிப்படையில் பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது தாம் இம்முறை ஆட்சியை கைப்பற்றினால் இலங்கையை இரண்டாக பிளவுபடுத்துவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தனர்.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுப்பது என்றால் அது இலங்கை நாட்டை இரண்டாக பிரிப்பதன் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சி கூறியிருந்தது.

இந்நிலையில் பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஐக்கிய இலங்கையை கட்டிக் காப்பதற்காக தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது.

ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களுக்கு தலையீடு செய்து அந்நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்க தமது கட்சி ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது எனவும் கொன்சவேட்டிவ் கட்சி கூறியிருந்தது.

எவ்வாறாயினும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் இருக்கின்றனர்.

அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக பிரித்தானிய தொழிலாளர் கட்சி முயற்சிப்பதாக கொன்சவேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதேசமயம் இம்மாதம் ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பீட்டுக்கமைய பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியானது தொழிலாளர் கட்சியை விட 4 விகிதத்தில் முன்னணி வகிக்கின்றது.

இம்முறை தேர்தலின் போது சுமார் நாற்பது லட்சம் சிறுபான்மை மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்த வாக்குகளே இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என உலக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.tamilwin.com/politics/01/233612?_reff=fb&itm_source=parsely-api?ref=recommended1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொழிலாளர் கட்சியின் அறிவிப்பு இம்முறை நல்லா  வேலை செய்யுது போல் உள்ளது இங்கிலாந்து வந்து வோட் போடுமிடம் எந்தப்பக்கம் என்று தெரியாத தமிழ் சனமெல்லாம் தேடி தேடி அதுவும் இரவு பத்துக்கு  முடிவடையும் நேரம் மட்டும் வோட் பண்ணுதுகள் பார்ப்பம் யார் வருகிறான்கள் எண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

  • Breaking: Boris Johnson’s Conservative Party is on course for a comfortable majority, according to an exit poll from the UK’s three main broadcasters. 
  • How accurate is it?: The poll is usually fairly accurate, but a lot can still change as the night progresses. 
  • Live results: Votes are now being counted and results for all 650 constituencies will be rolling in all night.
9 minutes ago, பெருமாள் said:

தொழிலாளர் கட்சியின் அறிவிப்பு இம்முறை நல்லா  வேலை செய்யுது போல் உள்ளது இங்கிலாந்து வந்து வோட் போடுமிடம் எந்தப்பக்கம் என்று தெரியாத தமிழ் சனமெல்லாம் தேடி தேடி அதுவும் இரவு பத்துக்கு  முடிவடையும் நேரம் மட்டும் வோட் பண்ணுதுகள் பார்ப்பம் யார் வருகிறான்கள் எண்டு .

முயற்சி பலித்துள்ளது போல தெரிகிறது.

CNN)Boris Johnson appears to be headed for a decisive majority in the UK's general election, exit polls suggest.

An exit poll conducted for the UK's main broadcasters projects that Johnson's Conservative Party will win 368 seats, with the opposition Labour Party taking 191 seats, the Scottish National Party on 55 and the Liberal Democrats on 13.
If the projection is confirmed by results in the next few hours, it would give Johnson the parliamentary numbers he needs to press ahead with his Brexit deal.

https://www.cnn.com/2019/12/12/uk/uk-election-results-2019-ge19-intl-gbr/index.html

அப்புறம் என்ன தமிழீழம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

  • Breaking: Boris Johnson’s Conservative Party is on course for a comfortable majority, according to an exit poll from the UK’s three main broadcasters. 
  • How accurate is it?: The poll is usually fairly accurate, but a lot can still change as the night progresses. 
  • Live results: Votes are now being counted and results for all 650 constituencies will be rolling in all night.

முயற்சி பலித்துள்ளது போல தெரிகிறது.

இல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

இல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .

650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.

368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல்  முடிவு அல்ல. வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

முதலாவது தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.  Newcastle center 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

சில தெளிவு படுத்தல்கள்.

1. இலங்கை விவகாரத்தில் கன்சேவேடிவ் கட்சி தமிழர் சார்பு நிலை எடுத்தது என ஒருபுரளி மூன்று நாளைக்கு முதல் பரவியது.

2. இப்போ லேபர் சார்பாக இந்த புரளி

3. இந்த இரெண்டு பாட்டியிலும் எலும்புதுண்ட்டுக்கு அலையும் சில தமிழர்கள் உளர். தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில் வாக்கு வேட்டையாட அந்தந்த பகுதி எம்பிகளும் ஆர்வமாய் இருப்பர். இவ்விரு கூட்டமும் சேர்ந்து, இரெண்டு கட்சியிலும் செய்யும் சுத்து மாத்து வேலைகள்தான் இப்படியான அறிவித்தல்கள், பொய் பிரச்சாரரங்கள்.

4. தேர்தல் முடிந்ததும் அவரரவர் பாட்டுக்கு போய்விடுவார். “அப்ப நாடு பிரிச்சு தரமாட்டிங்களா கோபால்” என ஏமாந்த சோணகிரி தமிழர்கள் கேட்க வேண்டியதுதான்😂. இப்படி போனவன், வந்தவன், போக்கிரி சொல்வதை எல்லாம் நம்பும் நிலையில் பிரித்தானிய தமிழ் சனங்கள் மந்தைகளாக இருப்பதுதான் கவலையான விடயம்.

5. எக்ஸிட் போல் அநேகமாக துல்லியமாகவே இருக்கும். ஆரம்பத்தில் வெளிவரும் வட-கிழக்கு இங்கிலாந்து முடிவுகள், லேபரின் கோட்டை - ஆனா இந்த இடங்களிலேயே லேபர்-கன்சவேடிவ் க்கு 10% சுவிங் இந்த முறை. இதில் ஒரு பழம் பெரும் லேபர் சீட் கன்சேவேடிவ் இடம் வீழ்ந்தே விட்டது. ரோனி பிளேயரின் பழைய செஜ்பீல்ட் தொகுதியும் அம்பேல் என்பதே பேச்சு.

7. கோபினுக்க்கு சங்கு ஊதியாச்சு. 1940 களுக்கு பின் வரலாறு காணதா தோல்வி லேபருக்கு. 1987 க்கு பின் மிக பெரும் வெற்றி கன்சேவேடிவுக்கு.

8. கோபின்/லேபர் ஆதரவாளர்கள் போய் தூங்கலாம் 😂

10 minutes ago, goshan_che said:

புரளிகளை  மீண்டும் மீண்டும்  நம்பி  பல முறை ஏமாறுவதும் பழம் பெருமைகள் என று  வரலாற்று புரளிகளை தாமே  உண்டாக்கி அதை தாமே நம்பி  அதில் சுய திருப்தி கொள்வதும்  தமிழரின் பாரம்பரியம். 

  • கருத்துக்கள உறவுகள்
Quote
 
con.svg

Conservative

11+5

lab.svg

Labour

17-4

snp.svg

SNP

1+1

libdem.svg

Lib Dem

0-1

green.svg

Green

0+0

Others

0

  • கருத்துக்கள உறவுகள்
Shares
526
 
con.svg

Conservative

33+9

lab.svg

Labour

35-6

snp.svg

SNP

5+2

libdem.svg

Lib Dem

0-1

green.svg

Green

0+0

Others

3

ஸ்கொட்லாந்து தனிநாடாகுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்
con.svg

Conservative

42+9

lab.svg

Labour

40-6

snp.svg

SNP

6+2

libdem.svg

Lib Dem

0-1

green.svg

Green

0+0

Others

5

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

தேர்தல் முடிந்ததும் அவரரவர் பாட்டுக்கு போய்விடுவார். “அப்ப நாடு பிரிச்சு தரமாட்டிங்களா கோபால்” என ஏமாந்த சோணகிரி தமிழர்கள் கேட்க வேண்டியதுதான்😂. இப்படி போனவன், வந்தவன், போக்கிரி சொல்வதை எல்லாம் நம்பும் நிலையில் பிரித்தானிய தமிழ் சனங்கள் மந்தைகளாக இருப்பதுதான் கவலையான விடயம்

👍

ஏல்லா இடங்களிலும் ஈழதமிழர்களுக்கு பொருந்த கூடிய உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை பொறுத்தவரை, இலங்கை தீவு பற்றிய கொள்கை மாறவில்லை. கட்சிகளின் விஞ்ஞாபனமும், அந்த கொள்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் அளவிலேயே உள்ளது.

ஆங்கில இலக்கணப்படி, இரு தேசம் என்ற கான்செர்வ்டிவ் இன் விஞ்ஞாபனமும் மத்திய கிழக்கிற்கே பொருந்தும். இதை முன்பே இங்கு வேறு திரியில் சொல்லிவிட்டேன்.  

மாறாக, கான்செர்வ்டிவ் இற்கு, இலங்கை பிரித்தனியாரிடம்  இருந்த போது, இலங்கையை விட்டு பிரித்தானியர் போகும் தறுவாயில் பிரித்தானியாவில்  காலூன்றிய சிங்களவர்கள்  ( இவர்கள் எல்லோருமே பிரித்தானியாவின், மற்றும் ஆங்கிலேயரின் தயவில் இலங்கையின் புதிய பொருளாதாரத்தில் கடை முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர குழாமாக வந்தவர்கள்), மற்றும் அந்த சிங்களவர்களின்   சந்ததிகளின் ஆதரவும், இப்போதைய சிங்களவர்களின் ஆதரவும் உண்டு.

இரு தேசம் என்று விஞ்ஞாபனத்தில் வந்ததை பார்த்து, இந்த சிங்களவர்கள் எல்லோரும் விஞ்ஞாபன வசனத்தை மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் செய்தார்கள். ஆயினும், கான்செர்வ்டிவ்வ் கட்சி அதற்கு இணங்காமல், அவர்களின் முயற்சியை புறம் தள்ளி விட்டது.

ஆனாலும், முன்பு நான் வேறு திரியில் கூறியது போல, ஸ்ரீ லங்கா, மத்திய கிழக்கு மற்றும் சைப்ரஸ் உடன் வகைப்படுத்தப்பட்டதற்கு காரணம், இறுதி தீர்வுகள் இவற்றிற்கு ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால் என்பது கான்செர்வ்டிவ் கட்சியில் உள்ள தீவிர செல்வாக்கும், நிலையும் உள்ளவரால் சொல்லப்பட்டது.

9 hours ago, goshan_che said:

இப்படி போனவன், வந்தவன், போக்கிரி சொல்வதை எல்லாம் நம்பும் நிலையில் பிரித்தானிய தமிழ் சனங்கள் மந்தைகளாக இருப்பதுதான் கவலையான விடயம்.

இது ஓர் சிறு பகுதிக்கே பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

பிரித்தானியாவை பொறுத்தவரை, இலங்கை தீவு பற்றிய கொள்கை மாறவில்லை. கட்சிகளின் விஞ்ஞாபனமும், அந்த கொள்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் அளவிலேயே உள்ளது.

ஆங்கில இலக்கணப்படி, இரு தேசம் என்ற கான்செர்வ்டிவ் இன் விஞ்ஞாபனமும் மத்திய கிழக்கிற்கே பொருந்தும். இதை முன்பே இங்கு வேறு திரியில் சொல்லிவிட்டேன்.  

மாறாக, கான்செர்வ்டிவ் இற்கு, இலங்கை பிரித்தனியாரிடம்  இருந்த போது, இலங்கையை விட்டு பிரித்தானியர் போகும் தறுவாயில் பிரித்தானியாவில்  காலூன்றிய சிங்களவர்கள்  ( இவர்கள் எல்லோருமே பிரித்தானியாவின், மற்றும் ஆங்கிலேயரின் தயவில் இலங்கையின் புதிய பொருளாதாரத்தில் கடை முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர குழாமாக வந்தவர்கள்), மற்றும் அந்த சிங்களவர்களின்   சந்ததிகளின் ஆதரவும், இப்போதைய சிங்களவர்களின் ஆதரவும் உண்டு.

இரு தேசம் என்று விஞ்ஞாபனத்தில் வந்ததை பார்த்து, இந்த சிங்களவர்கள் எல்லோரும் விஞ்ஞாபன வசனத்தை மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் செய்தார்கள். ஆயினும், கான்செர்வ்டிவ்வ் கட்சி அதற்கு இணங்காமல், அவர்களின் முயற்சியை புறம் தள்ளி விட்டது.

ஆனாலும், முன்பு நான் வேறு திரியில் கூறியது போல, ஸ்ரீ லங்கா, மத்திய கிழக்கு மற்றும் சைப்ரஸ் உடன் வகைப்படுத்தப்பட்டதற்கு காரணம், இறுதி தீர்வுகள் இவற்றிற்கு ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால் என்பது கான்செர்வ்டிவ் கட்சியில் உள்ள தீவிர செல்வாக்கும், நிலையும் உள்ளவரால் சொல்லப்பட்டது.

இது ஓர் சிறு பகுதிக்கே பொருந்தும்.

கன்சேவேடிவ் கட்சியின் விஞ்ஞாபனத்தில் ஒரு கமாவை வைத்து விளையாடி உள்ளார்கள். தமிழர்கள் கேட்டால் ஒரு அர்த்தம் சொல்லுவார்கள், சிங்களவர்கள் கேட்டால் எதிர் அர்த்தம்.

கன்சேவேடிவுக்கு கூஜா தூக்கும் தமிழர்கள் இதை வைத்து வீடுவீடாக போய், இலங்கையில் இரட்டை தேச அடிப்படையை பிரித்தானியா ஆளும் கட்சி ஏற்கிறது அவர்களை வெல்ல வையுங்கள் என பொய் பிரச்சாரம் செய்தார்கள்.

கண்டிய அரசின் பிரதானிகளுடன் பிரித்தானியா 1815 இல் போட்ட ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அதே ராஜதந்திரம் (மொள்ளமாரித்தனம்).

லேபரும் ஏதோ வெட்டி விழுத்துவார்கள் என்பது போல பல காட்டப் வதந்திகள் பரவின.

1948 இல் இருந்து இலங்கை தொடர்பான இவ்விரு கட்சிகளின் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. இனி வரக்கூடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

கமெரென் யாழ்பாணம் போனார், கோபின் 1983 க்கு எதிராக பேசினார் என்பதற்காக வாக்கழிக்காமல், உண்மையில் இந்த கட்சிகளின் எம் பிரச்சனை தொடர்பான நிலை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தி அதன் அடிப்படையில் வாக்களிப்பதே பயனான வேலை.

இதைதான் யூத இன மக்கள் செய்தார்கள், செய்கிறார்கள், செய்வார்கள்.

ஆனால் எம்மக்களின் கட்சி பிரதிநித்கள் என சொல்லிக் கொள்வோர்க்கு, டை கோட் சூட்டில், லோக்கல் எம்பியோடு கடைவாய் பல் தெரிய படம் எடுத்து அதை பேஸ்புக்கில் போட மட்டும்தான் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.