Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

33 minutes ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

100% சரியான கருத்து. 

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித்துணிந்த கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

எப்படி ?   காக்கை வன்னியன் என்று தற்போது கூறுவது போன்றா ?

வெளிப்படையாகவே துரோகம் செய்த ஒருவரை நூறு வருடங்கள் கழித்தா தீர்ப்பிடுவீர்கள்  ? யாரை தீர்ப்பிப்டுவீர்கள் ?அவரின் பூட்டப் பிள்ளைகளையா ?

அப்படியானால் கோத்தபாய விடயத்தில் மட்டும் ஏன் அவசரம் ? இனப்படுகொலை செய்தவரா என்று வரலாற்றிடம் விட்டுவிடுவோமா ?

சிங்களம் செய்தது இனவழிப்புதான் என்பதையும் வரலாறே தீர்ப்பிடட்டும் . விடலாமா ?

என்ன சொல்லப் போகிரீர்கள் ? இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்பீர்களா ?

( உலக வரலாறு முழுவதும் யுத்தத்தால் வந்த அழிவுகளைவிட நடுநிலைவாதிகளால் ஏற்பட்ட சேதம் அதிகம்)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை கூறமுடியுமா ?

உதாரணத்துகெல்லாம்  ஒருவரை கூற முடியுமா சின்ன பிள்ளைதனமா இருக்கே உங்க கேள்வியெல்லாம்🙃🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உதாரணத்துகெல்லாம்  ஒருவரை கூற முடியுமா சின்ன பிள்ளைதனமா இருக்கே உங்க கேள்வியெல்லாம்🙃🙃

காட்டில் வாழ்ந்துவந்த ஒரு கழுதையும் குதிரையும் ஒர் நாள் சந்திதுக்கொண்டபோது கழுதை குதிரையிடம் கேட்டதாம் இரண்டுமிரண்டும் எத்தனை என்று. குதிரை சொன்னது நான்கு என்று. அதற்கு கழுதை சொன்னது இல்லை இரண்டும் இரண்டும் ஐந்து என்று. இரண்டுமே ஒரு முடிவுக்கு வர முடியாமல் இறுதியாக சிங்கத்திடம் சென்றன. 

சிங்கம் இருவரின் வாதத்தையும் கேட்டபின் தீர்ப்பை பிவருமாறு கூறியது.

கழுதை கூறியதுதான் சரி , எனவே கழுதையார் போகலாம், ஆனால் குதிரைக்கு 25 சவுக்கடி கொடுக்கும்படி தீர்ப்பிட்டது.

ஐயோ சிங்கமே ஏன் இப்படி தீர்ப்பிட்டீர்கள், இரண்டும் இரண்டும் நான்குதானே. அதெப்படி இரண்டும் இரண்டும் ஐந்தாகும் என குதிரை கதறியது.

சிங்கம்  பின்வருமாறு கூறியது..

இரண்டும் இரண்டும்  ஐந்துதான். ஆனால்  யார் உன்னை கழுதையிடம் விவாதம் செய்யச்சொன்னது ?   யாரிடம் நீ விவாதம் செய்கிறாய்  என்பதை உணராதபடியால் தான் இவ்வளவு சங்கடமும். ஆதலினால் உனக்கு இதுதான் தண்டனை. 

(சத்தியமா  நான் குதிர ல்லீங்கோ)

நன்றி, இவ்வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இப்படியே சொல்லி திரிந்த கழுதையார் ஓர் நாள் புலியிடம் சொல்ல புலி  சிங்கத்தை போல  பதில் சொல்லாமல் ஓங்கி அறைஞ்சதாம் ஓவறா தண்ணியடிச்சிட்டு ஒளறப்படாது என😎😁😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

ரதி, கருணா போன்ற அரசியல்வாதிகளின்  செயல்களை இப்படி ஜோக்காக விமர்சிப்பது இயல்பானதே. சும்மா சிரித்துவிட்டு நகரவேண்டிய எனது ஜோக்கை  இவ்வளவு சீரியசாக நீங்கள் எடுத்திருக்க தேவையில்லை என்பது எனது எண்ணம். போராட்டதை  அதன்  சரியான தவறான முடிவுகளை வி மர்சிக்கும் நான் போராளிகளை விமர்சிப்பதில்லை. மற்றப்படி கருணா 10  பொண்டாட்டி வைத்திருப்பது அவரது சுதந்திரம். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை( எண்டாலும் லைற்றா எனக்கு  பொறாமை தான். நம்ம வீட்ட எண்டா செருப்பு பிஞ்சுடுமே அந்த பொறாமை.) 😂

ஓ..கொஞ்சம் ஓவராய் ரியாக்ட் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன்...மன்னிக்கவும் 

12 hours ago, கிருபன் said:

அண்ணே, 

நான் சொல்லுவது என்னவென்றால் கருணா அம்மானின் போராட்ட பங்களிப்பை வெறும் துரோகி என்ற ஒற்றை வார்த்தையால் நிரவமுடியாது. போராட்டம் மெளனித்து தமிழர்கள் அநாதரவாகப் போனதற்கு கருணா அம்மானின் பிரிவுதான் காரணம் என்று சொல்லி கடந்துபோக முடியாது. அவர் புலிகளில் பிளவுகளை ஏற்படுத்தாமல் இருந்தாலும் முடிவு முள்ளிவாய்க்கால் போன்றதொரு அவலத்தில்தான் முடிந்திருக்கும்.

மேலும் துரோகி, தியாகி என்ற கறுப்பு-வெள்ளையாக பார்ப்பதும் சரியல்ல. யார் துரோகி, யார் தியாகி என்பதற்கான அளவுகோல்களை நீண்டகால வரலாற்றில்தான் பார்க்கமுடியும். 

இதைத் தான் நானும் சொல்லிட்டு வாறன் 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

குப்பைகளுள் ஒரு குண்டுமணி 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

Just now, Kapithan said:

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

ஆனால் இறுதிப் பகுதியில் நீங்கள் கூறியது 100 விகிதமும் உண்மையான வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை தனித்து சொல்லவில்லை ஐயா. இங்கே பொதுவாக நடப்பதை மட்டுமே கூறினேன்.

16 minutes ago, Kapithan said:

ஐயா நான் ஒன்றும் யாழ்ப்பாணத்தான் இல்லை.  KP யையும் ஒளித்துவைக்கவில்லை. தலைப்புக்குத்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

ஆனால் இறுதிப் பகுதியில் நீங்கள் கூறியது 100 விகிதமும் உண்மையான வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு

என்னை நித்தியானந்தா மதம் மாற்றியதால் தான் இந்த நிலை.😩

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

இந்த இரண்டாம் பகுதியோடு முரண்படுகிறேன்...அவரின் பிரிவில் அவரது சுய  நலனும் கலந்து இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு பொது நலம் இருந்தது...இனி மேல் யுத்தம் செய்வதால் பிரயோசனமில்லை என்பது அவருக்கு தெரிந்திருந்தது...தனியே நானும் மட்டும் போகாமல் தன்னால் உருவாக்கப்பட்ட படையை கலைத்து விட்டுப் போனார்...அதில் பிழை இல்லை....உங்களிடம் திரும்பவும் இந்த கேள்வியை கேட்கிறேன் ...ஏன் அந்த 5000ம் போராளிகளும் வன்னிக்கு போகாமல் வீட்டுக்கு போனார்கள்?

அங்கிருக்கும் மக்கள் அவரை நிராகரிக்க காரணம் அவர் மகிந்தாவோடு சேர்ந்திருப்பதால் ஒழிய இந்த புலிகளை ஏமாத்திட்டு வந்திட்டார் என்பதால் இல்லை என்பது என் கருத்து

2 hours ago, கற்பகதரு said:

என்னை நித்தியானந்தா மதம் மாற்றியதால் தான் இந்த நிலை.😩

நித்தியானந்தா வசம் இருக்கும்  அந்த அபார சக்திகளை விரும்பித் தானே மதம் மாறினீங்க சார். 😂😂

Edited by tulpen

On 12/14/2019 at 12:43 PM, கிருபன் said:

அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

ஒரு சிலர் இரவில தான் ஊர் சுத்துவார்கள். குறிப்பா கள்ளர்கள்.
கருணாவுக்கும் இரவென்டாத்தான் உஷார் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

இந்த இரண்டாம் பகுதியோடு முரண்படுகிறேன்...அவரின் பிரிவில் அவரது சுய  நலனும் கலந்து இருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு பொது நலம் இருந்தது...இனி மேல் யுத்தம் செய்வதால் பிரயோசனமில்லை என்பது அவருக்கு தெரிந்திருந்தது...தனியே நானும் மட்டும் போகாமல் தன்னால் உருவாக்கப்பட்ட படையை கலைத்து விட்டுப் போனார்...அதில் பிழை இல்லை....உங்களிடம் திரும்பவும் இந்த கேள்வியை கேட்கிறேன் ...ஏன் அந்த 5000ம் போராளிகளும் வன்னிக்கு போகாமல் வீட்டுக்கு போனார்கள்?

அங்கிருக்கும் மக்கள் அவரை நிராகரிக்க காரணம் அவர் மகிந்தாவோடு சேர்ந்திருப்பதால் ஒழிய இந்த புலிகளை ஏமாத்திட்டு வந்திட்டார் என்பதால் இல்லை என்பது என் கருத்து

உங்களுக்கு கருணா-போதை. ரஜனி ரசிகர், கமல்ரசிகர், பிரபாகரன் ரசிகர் இவர்களை போல் உங்களுக்கு கருணா செய்த எல்லாவற்றிலும் ஒரு நல்லெண்ணம் தெரிய காரணம் - அவரை நீங்கள் கதாநாயக வணக்கம் (ஹீரோ வேர்சிப்) செய்கிறீர்கள்.

இங்கே பலரும் இதையே பிரபாகரனுக்கும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். அந்தாள் பருப்புக்கு உப்புக்காணாது என்று சொன்னாலும் “ஆகா என்னே தலைவரின் தூர திருஸ்டி” என்பார்கள். 

வெளியில் இருந்து பார்க்கும் எமக்கு உங்கள் வியாக்கியானங்கள் சிரிப்பாய் இருந்தாலும், உங்களுடன் தர்க்கித்து வெல்ல முடியாது, ஏனெண்றால் உங்களுக்கு ஒரு போதும் போதை இறங்காது.

கருணா 5000 பேரை அனுப்பியது நல்லமா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 2001 இல் வீடுவீடாக மட்டக்களப்பில் இப்படி பிள்ளைகளை வலுக்கட்டயமாக பிடித்த அவர், 2002 இல் தான் பிரிந்த பின்பும் இந்த பிள்ளைகளை வைத்திருந்த அவர், இதே பிள்ளைகளை சக தமிழனோடு தனக்காக வெருகலில் சண்டையிட்டு சாகக்கொடுத்த இவர், ஏன் 2003 இல் வீட்டை அனுப்பினார் ?

தான் தெற்கிற்கு போகப் போரேன், இவர்களை புலியிடம் கொடுத்து அவர்களின் வலுவை அதிகரிக்காமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற சுயநலம் மட்டுமே ஒரே காரணம்.

இப்படி இவரின் ஒவ்வொரு செயலிலும் இருப்பது 100% சுயநலமே.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

என்ன போய்ஸ் அண்ட் கேள்ஸ்,

இன்னைக்கு சைவ-கத்தோலிக்க சண்டையை ஒத்தி வச்சிட்டு யாழ்ப்பாணி-மட்டக்களப்பான் குஸ்தியில இறங்கி இருக்கியள் போல.

1. ஒரு பகுதி ஏதோ கருணா மட்டுமே துரோகம் செய்தவர், அவரால் மட்டுமே போராட்டம் குட்டி சுவரானது என்பது போல எழுதுகினம். மிக இலகுவாக யாழில் இருந்து வந்த கோடாரிகாம்புகளை மறந்து விட்டு. மட்டக்களப்பில் கருணா, பிள்ளையான் மட்டும்தான் கண்டியளோ, யாழ்பாணத்தில போராடப்போறம் எண்டு வெளிக்கிட்டு ஆளையாள் போட்ட நபர்களை பட்டியல் இட்டால் இந்தப் பக்கம் காணாது 😂. கருணாவை குட்டும் போது ஓங்கி குட்டும் கைகளை கேபி ( கருணாவைவிட அதிகம் பாதிப்பு இவராலேயே) யை பற்றிய திரியில் காணவே கிடைக்காது? ஏன் ? ஏனென்றால் - அடிமனதில் ஊறிய யாழ் மையவாதம். வேறு ஒருவனை கைகாட்டி, அவனாலேதான் எம் அற்புத கனவு கலைந்ததென இலகுவாக கடந்து செல்லும்.

2. மற்றைய பகுதி - ஏதோ கருணா தப்பே செய்யவில்லை என்பது போலவும், அவர் சமாதானத்தை விரும்பினார், அசோகர் போல யுத்தத்தை வெறுத்தார் அதனால் 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார் என சப்பை கட்டு கட்டுகிறனர். கருணா புலிகளிடம் இருந்து பிரிந்ததும், அதன் பின் செய்த அரசியலும், இப்போ செய்யும் அரசியலும் அனைத்துமே - கருணா என்ற தனிநபரின் சுயநலத்தை முன்வைத்தே செய்யப்பட்டன. செய்யப்படுகிறன. இதில் துளியளவும் தமிழர் நலனோ, மட்டகளப்பு மக்களின் நலனோ, யுத்த வெறுப்போ இல்லை. இங்கே பலர் தளம்பினாலும், மட்டில் இதையொட்டி மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். இன்றுவரை மட்டு மக்கள் இவரை அரசியலில் ஆதரிக்கவில்லை என்பது கண்கூடு.

முடிவாக இலங்கையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கிய தமிழர்கள் (துரோகி என்ற பதத்தை வேண்டும் என்றே தவிர்கிறேன்) என்ற வரிசையில் கருணாவுக்கு ஏனையவர்களுடன் சேர்த்து ஒரு இடம் நிச்சயம் உண்டு. ஆனா அவரின் செயல் ஏனையோரைவிட மோசமானது என்பது யாழ்மையவாத சிந்தனையே.

2009 க்கு முன் எங்கோ வாசித்த நியாபகம். இத்தனை பொருள், உயிர் இழப்பை சந்திகாமல் - இலகுவாக தமிழர் போராட்டத்தை இலங்கை அடக்கி இருக்கலாமாம். தமிழர்களுக்கு தனிநாட்டை கொடுத்தால் போதுமாம். பிரபாவின் இறப்பின்  பின் தமிழர் தம்மில் அடிபட்டு அழிய, நாடு முழுமைக்குக்கும் 100% சிங்களமயமாகி இருக்குமாம்.

இப்பவே இப்படி, நல்ல வேளையாக உங்களுக்கு நாடு கிடைக்கவில்லை.

உங்களது  பார்வையில் இவை  சரியே

ஏன் ஏராளமான தமிழர்கள் இவ்வாறு  தான் தற்பொழுது  கடந்து  போகிறார்கள்

உண்மையில்  தமிழரின்  போராட்டம் முக்கியமான  நிலைகளுக்கு  வரும்  போதெல்லாம்

கிழக்கை  சேர்ந்த எவராவது குறி  வைக்கப்படுகிறார்கள்

கிழக்கின் புவிசார் நிலையும் மூவின கலப்பு வாழ்வும்

இதற்கு  உகந்ததாக  சிங்களத்துக்கு வழியமைத்து

 தொடர்ந்து வெற்றி தருகிறது.

அது  ராசதுரையிலிருந்து தொடர்கிறது.......

நீங்கள் மேலே  எழுதியவாறு அங்குவாழ்   மக்கள்  தெளிவாகவே  உள்ளனர்

ஏனெனில் அவர்கள்  நீண்ட  தூரம்  சிந்திக்கின்றனர்

இருந்தபோதும் குறி  வைக்கப்படுபவர்கள் வலைக்குள் விழும்போது அந்த  மக்களும்  அவமானத்தை  சுமக்கவேண்டியுள்ளது.

ஏன் தாயகத்தின்  வேற  பகுதியிலுள்ளவர்கள் மாறவில்லையா  என்றால் தாயகத்தின் கனவை  சிதைக்கும் வீரியம் இவர்கள்  அளவுக்கு இருந்திருக்காது  என்பதையும் கருத்தில் கொள்க.

நான்  ஒன்றும் பிரதேசவாசி அல்ல.  அதை  நான்  உங்களுக்கு  சொல்லவேண்டியதில்லை  என  நினைக்கின்றேன்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அது  ராசதுரையிலிருந்து தொடர்கிறது.......

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

தமிழ்மக்களின் அபிலாசைகளை  வலியுறுத்தி

1977  தேர்தலில் கூட்டணியினர்  தாம்  தேர்தலில் நின்ற அத்தனை இடங்களிலும் வென்றனர்

அந்த  வெற்றியின் பயனை  சிதைத்தவர் ராசதுரை

இப்ப  வந்து  எதுவும்   சொல்லலாம் 

ஆனால் அவருடைய  அன்றைய  பெறுமதியும் தமிழ் மக்களுக்கான  இழப்பும் ஈடுசெய்யமுடியாதது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தமிழ்மக்களின் அபிலாசைகளை  வலியுறுத்தி

1977  தேர்தலில் கூட்டணியினர்  தாம்  தேர்தலில் நின்ற அத்தனை இடங்களிலும் வென்றனர்

அந்த  வெற்றியின் பயனை  சிதைத்தவர் ராசதுரை

இப்ப  வந்து  எதுவும்   சொல்லலாம் 

ஆனால் அவருடைய  அன்றைய  பெறுமதியும் தமிழ் மக்களுக்கான  இழப்பும் ஈடுசெய்யமுடியாதது

அப்படியானால் ராசதுரை அவர்கள் எந்த இடத்தில் கூட்டணி சார்பாக நின்று வெற்றி பெற்றார் அண்ண??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியானால் ராசதுரை அவர்கள் எந்த இடத்தில் கூட்டணி சார்பாக நின்று வெற்றி பெற்றார் அண்ண??

காசி  ஆனந்தனும்  இவரும் மோதிக்கொண்டதால் உடைந்தது  எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உங்களுக்கு கருணா-போதை. ரஜனி ரசிகர், கமல்ரசிகர், பிரபாகரன் ரசிகர் இவர்களை போல் உங்களுக்கு கருணா செய்த எல்லாவற்றிலும் ஒரு நல்லெண்ணம் தெரிய காரணம் - அவரை நீங்கள் கதாநாயக வணக்கம் (ஹீரோ வேர்சிப்) செய்கிறீர்கள்.

இங்கே பலரும் இதையே பிரபாகரனுக்கும் செய்வதை நீங்கள் பார்க்கலாம். அந்தாள் பருப்புக்கு உப்புக்காணாது என்று சொன்னாலும் “ஆகா என்னே தலைவரின் தூர திருஸ்டி” என்பார்கள். 

வெளியில் இருந்து பார்க்கும் எமக்கு உங்கள் வியாக்கியானங்கள் சிரிப்பாய் இருந்தாலும், உங்களுடன் தர்க்கித்து வெல்ல முடியாது, ஏனெண்றால் உங்களுக்கு ஒரு போதும் போதை இறங்காது.

கருணா 5000 பேரை அனுப்பியது நல்லமா இல்லையா என்பதல்ல இங்கே கேள்வி. 2001 இல் வீடுவீடாக மட்டக்களப்பில் இப்படி பிள்ளைகளை வலுக்கட்டயமாக பிடித்த அவர், 2002 இல் தான் பிரிந்த பின்பும் இந்த பிள்ளைகளை வைத்திருந்த அவர், இதே பிள்ளைகளை சக தமிழனோடு தனக்காக வெருகலில் சண்டையிட்டு சாகக்கொடுத்த இவர், ஏன் 2003 இல் வீட்டை அனுப்பினார் ?

தான் தெற்கிற்கு போகப் போரேன், இவர்களை புலியிடம் கொடுத்து அவர்களின் வலுவை அதிகரிக்காமல் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற சுயநலம் மட்டுமே ஒரே காரணம்.

இப்படி இவரின் ஒவ்வொரு செயலிலும் இருப்பது 100% சுயநலமே.

ஹாஹா கடைசியில் நீங்களும் மற்றவர்கள் மாதிரி சலாப்பிட்டீங்கள்...எதிர் பார்த்தேன் ... நான் கேட்டது அவர் அனுப்பினது பற்றி அல்ல, ஏன் அந்தப் போராளிகள் வன்னிக்கு போகவில்லை அல்லது ராமோடு சேரவில்லை...அதற்கு உங்களிடம் பதில்  இல்லை ...நீங்களும் பத்தோடு பதின்னொன்று தான் என்று உங்களை நிரூபித்து  விட்டீ ர்கள் .
2004யில் தான்  கருணாவுக்கும் ,தலைமைக்கும் பிரச்சனை வந்தது ...நீங்கள் என்னடா என்றால் 2001,2002  கதையெல்லாம் கதைக்கிறிங்கள்   கடைசியாய் ஒன்றை சொல்கிறேன் நாளைக்கே அவரை ரோட்டில் சுட்டுப் போட்டாலும் அதை பற்றி நான் கவலைப் பட மாட்டேன் .
உருப்படியாய் பதில் சொல்ல முடியா விட்டால் அடுத்தவரை மட்டம் தட்டுவதை இது வரை தேசியவாதிகள் தான் செய்ததை கண்டு உள்ளேன் ...இன்று தாங்களும் 
நன்றி...வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

காசி  ஆனந்தனும்  இவரும் மோதிக்கொண்டதால் உடைந்தது  எல்லாம்

அவர்கள் மோதியது அண்ண அரசியல் விவகாரம் அதான் ராசதுரையை கேட்க விடக்கூடாது தேர்தலில்  ஆனால் நின்று வெற்றி பெற்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ராசதுரை அவர்களும் தான் வெளியிட்ட புத்தகத்தில்  தன்னை ஏமாற்றியவர்கள் அரசியலில் இடம் பிடிக்க தன்னை துரோகி போல பல பல தடவை சித்தரிக்கப்பட்டதையும் கன நாட்களின் முன்னர் படித்த ஞாபகம் நீங்கள் ராசதுரையை எந்த லிஸ்டுக்குள் அடக்குறீர்கள் என்பதை சொல்லுங்கள் 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மட்டு இசைநடனக்கல்லூரியில் வந்து உரையாற்றினார் பல சங்கதிகள் புதைந்து உள்ளன அவர் உரையில் 

அந்த புத்தகத்தின் விபரத்தை தரமுடியுமா ?

(நான் உண்மையாகத்தான் கேட்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

ஹாஹா கடைசியில் நீங்களும் மற்றவர்கள் மாதிரி சலாப்பிட்டீங்கள்...எதிர் பார்த்தேன் ... நான் கேட்டது அவர் அனுப்பினது பற்றி அல்ல, ஏன் அந்தப் போராளிகள் வன்னிக்கு போகவில்லை அல்லது ராமோடு சேரவில்லை...அதற்கு உங்களிடம் பதில்  இல்லை ...நீங்களும் பத்தோடு பதின்னொன்று தான் என்று உங்களை நிரூபித்து  விட்டீ ர்கள் .
2004யில் தான்  கருணாவுக்கும் ,தலைமைக்கும் பிரச்சனை வந்தது ...நீங்கள் என்னடா என்றால் 2001,2002  கதையெல்லாம் கதைக்கிறிங்கள்   கடைசியாய் ஒன்றை சொல்கிறேன் நாளைக்கே அவரை ரோட்டில் சுட்டுப் போட்டாலும் அதை பற்றி நான் கவலைப் பட மாட்டேன் .
உருப்படியாய் பதில் சொல்ல முடியா விட்டால் அடுத்தவரை மட்டம் தட்டுவதை இது வரை தேசியவாதிகள் தான் செய்ததை கண்டு உள்ளேன் ...இன்று தாங்களும் 
நன்றி...வணக்கம் 

அக்காச்சி,

நான் சொன்ன பதில் கொஞ்சம் விளக்கம் இல்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இப்போ தெளிவாக சொல்கிறேன்.

ஏன் அந்த 5000 பேரும் வன்னிக்கு போகவில்லை ? காரணக்கள் இதோ:

1. அவர்களில் பலர் கருணா தன்னை பிரபாவின் குட்புக்ஸில் வைத்திருப்பதற்காக மட்டில், குறிப்பாக படுவான்கரையில் வலுக்கட்டாயமா சேர்க்கப்பட்டவர்கள். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பின்னாளில்தான் வன்னியில் தலைவிரிதாடியது, ஆனால் கருணா காலத்திலேயே மட்டக்களப்பில் இது தொடங்கி விட்டது. கருணா திறந்து விட்டதும், கிளிக்கு ரெக்க முளைசிடுத்து, பறந்துடுத்து. 5000 தில் 80% இப்படியான பொடியள்.

2. விரும்பி சேர்ந்த பலர், கருணாவின் பக்தர்கள். 2004 க்கு முதல் கருணாவிற்கு பிரபாவுக்கு நிகரான கெத்து இருந்தது மட்டக்களப்பில். அவரே பிரிந்து போனதும், பலர் விரக்தி காரணமாக மத்திய கிழக்கு போனார்கள்.

3. மேலும் சிலர் - கருணா சொன்னதை நம்பினார்கள் - ஆகவே அவர்களும் வன்னிக்கு போகவில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - யாழ் மையவாதம், பிரதேசவாதம் என்பன எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கருணா அதை தன் சுயநலத்துக்காக பாவித்தார் என்பதும்.

பொட்டு-கருணா முறுகல் வந்துராவிடின், இன்றைக்கும் அவர் பிரபாவை புகழ்ந்து பேசியபடி, கரடியனாற்றில் பொடியளை பிடித்து வன்னிப் போர் முனைக்கு அனுப்பிக் கொண்டுதான் இருப்பார்.

பிகு: வயசு வட்டுக்குள் போவதால் ஆண்டை தவறாக குறிப்பிட்டு விட்டேன். ஒரு ஆண்டை தள்ளி வாசிக்கவும். உதாரணமாக 2003 எனும் இடத்தில் 2004 என.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.