Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? : எஸ்.பி.திஸாநாயக்க

Featured Replies

பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

sp.jpg

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். 

இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்தட்டுகின்றர். கூச்சலிடுகின்றனர். நீதியரசராக இருந்து வடக்கின் முதல்வராக பதவியேற்ற, சி.வி.விக்னேஸ்வரன்கூட இனவாதமாகவே செயற்பட்டு வருகின்றார். 

இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுகிறார்.

ஆனால், இது பிழையானதொரு எடுத்துக்காட்டாகும். தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைவதன் ஊடாகவே இந்த பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க முடியும்.

இளைஞர்களுக்கு நல்ல விடயங்களை கூற வேண்டியது எமது கடமையாகும்.  27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? 

அத்தனை மொழிகள் உள்ள இந்தியாவில், பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது? இது முற்றுமுழுதாக இனவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/72052

  • கருத்துக்கள உறவுகள்
Quote

27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? 

ஒற்றுமையாக வாழ முடியுமெனில் (இந்தியாவில்) காஸ்மீரை  ஏன் 3 ஆக பிரித்தார்கள்?

Quote

இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுகிறார்.

தமிழருக்கு உரிமைகள் தர முடியாது என்பதும் கோத்தபாயவின் தேர்த்தல் பிரச்சாரத்தில் இருந்தது. இந்த இனவாத பேச்சால் மட்டும் எப்படி சிங்கள மக்களின் வாக்குகளை கோத்த பெற்றார்??  அதெப்படி விக்கினேஸ்வரன் செய்தால் மட்டும் பிழையாகும்??

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? 

 

 

ஏன் வாழமுடியாது, தாராளமா முடியுமே,

இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் இனங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு அவர்களே அவர்களை ஆளும்  சுயாட்சி கொடுங்கள்

தேசிய கீதத்தை தமிழரும் சிங்களத்தில் பாட தயாராக இருப்பார்கள்.

இந்தியாவிலிருந்து தேசிய கீதத்தை மட்டும் உதாரணம் காட்ட தெரிந்த உங்களுக்கு, தேசிய இனங்களை எப்படி அவர்கள் கையாளுகிறார்கள் என்பதுமட்டும் ஏன் மாத்தையா உதாரணமா எடுக்க முடியாம போகுது?

பலதரப்பட்ட  கலாச்சாரமும்  அரசியலும், 27 மொழிகளும்  பேசும் மாநிலங்களயே அமைதியாக வைத்திருக்கும் இந்தியாபற்றி,

இருமொழிகள் மட்டுமே பேசும் இனங்கள் வாழும் இலங்கைக்குள் எந்த ஒரு அரசியல் தீர்வும் தர விரும்பாத நீங்கள்லாம் இந்தியா பற்றி பேசலாமா ஐயா?

விக்கினேஸ்வரன் மற்றும் மற்றவர்களைவிட பிரபாகரன்பற்றி இப்போலாம் அதிகமாபேசி கைதட்டல்கள் வாங்குறது உங்க இனத்தை சேர்ந்த கருணா அம்மான் மட்டுமே.

மற்றவர்கள் முகநூலில் வாழ்த்து தெரிவிச்சாகூட நாலாம் மாடிக்கு இழுத்துபோய் விசாரணை என்ற பெயரில அடிச்சு முறிக்கிறீங்களே.

சிங்கள அரச சபையில் அமைச்சராக இருந்தவர், இன்று ஆளும் கட்சியின் அன்றைய  தலைவர்களில் ஒருவராய் இருந்தவர்,அவரே பிரபாகரனை தலைவர் என்கிறார், ஜெயந்தன் படையணிக்கு நான் தலைமை தான்கினேன் நடுங்க வைச்சேன் என்றெல்லாம் பேசுறார்..

அதெல்லாம் இளைஞர்களுக்கு தவறான உதாரணம் இல்லையா? 

அவர் பேச்சு இனவாதம் இல்லையா?

சட்டவிரோதம் இல்லையா?

இன ஐக்கியத்தை அதெல்லாம் பாதிக்காதா?

அவருக்கு எதிராக எப்போ நடவடிக்கை எடுக்கபோகிறீர்கள்?

உங்களின் உள்ளாடைகள் துவைத்து சேவை செய்யும் அவரெல்லாம் பிரபாகரன்பற்றி பேசலாம்.. இன ஐக்கியம் வளரும்.

மற்றவர்கள் பேசினால்தான் இன ஐக்கியம் குப்புற விழுந்து படுத்துவிடும் என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ampanai said:

பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

sp.jpg

.... 27 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் இனங்கள் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால், ஏன் எம்மால் வாழ முடியாது ? 

அத்தனை மொழிகள் உள்ள இந்தியாவில், பெங்காலி மொழியில் தேசிய கீதத்தை பாட முடியுமாக இருந்தால், ஏன் இங்கு மட்டும் ஒரு மொழியில் தேசிய கீதத்தை பாட முடியாது? இது முற்றுமுழுதாக இனவாதத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடாகும் என்றார். 

https://www.virakesari.lk/article/72052

இவருக்கேதும் மூளையில் பிசகா..?

பொந்தியாவில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தவருக்கும் பெரும்பாலும் தனி மாநிலம் உள்ளது, ஓரளவிற்கு அந்தந்த மாநில சுயயாட்சி உரிமையும் தரப்பட்டுள்ளது.

இலங்கையில் அப்படியா உள்ளது..?

கொலைகள், காணாமல் போகடித்தல், இன துவேசம், ஆக்கிரமிப்பு..மிக மோசமான மனித உரிமை மீறல்கள்..!

சிங்களத்தில் தேசியகீதம் பாடிவிட்டால் இன ஒற்றுமை வந்திடுமா?

முதலில் சக இனத்தவரை மனிதராக நடத்தப் பழகுங்கள், ஐயா.

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை உதாரணமாக காட்டி அகமது தமிழூடகங்கள் திசநாயக்கா தமிழருக்கு இந்தியா மாதிரியான ஓர் அரசாட்சி வேண்டுமென்று இந்தியா அரசாட்சி முறையை மேற்கோள் காடலடினார் என்ற பரப்புரை செய்யவேண்டும், அத்துடன் நிக்காமல் சிங்களம. தெரிந்தவர்கள் சிங்கள உஊடகங்களில் கருத்து தெரிவித்தால், தமிழருக்கு நல்லது நடக்குமோ தெரியாது, ஆனால் திசநாயக்காவிற்கு சனிமாற்றம் வேலை செய்யும்

நான் என்ற பங்கிற்கு எனது சிங்கள நண்பரோடு அதைப்பற்றி வாக்கிவாதப்பட்டு அவனுக்கு திசநாயக்காவில் நல்ல ஒரு மரியாதையை ஏறரபடுத்திவிட்டேன் 😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எங்கு இனங்கள் ஐக்கியமாக வாழுகின்றன? பெங்ளூரில் ஏதும் கலவரம் என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு அம்பானைக்கு அடி விழும். தமிழ் நாட்டிட்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்

  • தொடங்கியவர்
6 hours ago, ampanai said:

வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். 

இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்தட்டுகின்றர். கூச்சலிடுகின்றனர்.

சிங்கள அரசியலவாதிகள், சர்வதேசம் மற்றும் எங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்றிகள் சொல்லவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 பவுத்தம் அரசியல்மதம், சிங்களம் அரசியல்மொழி, தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே பாடவேண்டும். இல்லையெனில் நல்லிணக்கம் கெட்டுவிடும், இனவாதம் தோன்றும்.  இப்படி எத்தனையோ.... இல்லாத அரசியல் ஏமாற்றுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு,  நாகரீகமும், ஜனநாயகமும் வளர்ந்து விட்ட காலத்தில் இருந்துகொண்டு குறுகிய அடக்குமுறை மனப்பான்மை, ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கை, நடைமுறை, சட்டம் இவருக்கு தாங்கள் சொல்வதையும் செய்வதையும் புரிந்து கொள்ள படிப்பறிவு காணாது. பகுத்தறிவு குறைவு. என்ன செய்வது? நம்ம தமிழ்த் தலைமைகள் எல்லாவற்றயும் சொல்லிகுடுத்து வளர்த்து விட்டார்கள். பகுத்தறிவு என்பது இவர்களுக்கு எட்டாப் பொருத்தம் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. இதில இல்லாத ஒரு நல்லிணக்கத்தை தமிழர் கட்டி எழுப்பவேணும் எண்டு ஊளை.  இவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவோ, சரி பிழை தெரிந்து கொள்ளும் திறனுள்ள  ஜனாதிபதியா நம் நாட்டை ஆளுகிறார்.    இதில பிக்குகள் வேற சட்டத்தை கையில எடுத்துக்கொண்டு அலையுதுகள்.  இரண்டே இரண்டு மொழியில் தேசிய கீதம் பாட முடியாதவர் இந்தியாவைப் பற்றி பாடம் நடத்துகிறார். எத்தனையாம் வகுப்பில் கோட்டை விட்டாரோ பாவம் அரசியல் வாதியாகி உளறுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.