Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 69
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Video shows apparent Iran missile attack on Iraq base

மன்னிக்கவும் முதலாவது ஒளிப்பதிவு இணைப்பு இயங்குனிலையில் இல்லை ( அல் அசாட் விமானத்தளத்தின் கோப்பு ஒளிப்பதிவு)

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Qassem-Soleimani-720x450.jpg

சோலெய்மனியின் இறுதி ஊர்வல சனநெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு

அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ உயர் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 48 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசிம் சோலெய்மனியின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை அடக்கம் செய்யப்படவிருந்தது. இந்த உயிரிழப்புக்கள் காரணமாக உடல் அடக்கம் பிற்போடப்பட்டுள்ளது. புதிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சோலெய்மனியின் சொந்த ஊரான கேர்மனில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் வீதிகளில் நிரம்பியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய ராணுவத் தளபதியின் கொலை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதொல்லாஹ் அலி கமேனிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்திவாய்ந்த மனிதராக காசிம் சோலெய்மனி கருதப்பட்டார்.

எனினும் அமெரிக்கா அவரை ஒரு பயங்கரவாதியாகவும் அமெரிக்கத் துருப்புக்களுக்கு அச்சுறுத்தலாகவும் கருதியது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சோலெய்மனியின்-இறுதி-ஊர்வ/

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனியன் பிளைட்டுக்கு அடிச்சிட்டாங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது தாக்குதல் - டிரம்ப், இரான் தரப்பு கூறுவது என்ன?

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 
All is well! Missiles launched from Iran at two military bases located in Iraq. Assessment of casualties & damages taking place now. So far, so good! We have the most powerful and well equipped military anywhere in the world, by far! I will be making a statement tomorrow morning.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

இரானின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜாவேத் ஜாரிஃப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பிரச்சனையை மேலும் நீட்டிக்கவோ அல்லது போர் நடத்தவோ இரான் கோரவில்லை. ஆனால் எங்களின் மீதான வலிய தாக்குதலை எதிர்த்து நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

''எங்கள் நாட்டுமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது கோழைத்தனமான ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட தளத்தின் மீது ஐ.நா. அமைப்பின் சாசன விதிகளின் 51-ஆம் பிரிவின்படி, எங்களின் சுயபாதுகாப்புக்காக சரியான அளவில் நடவடிக்கைகளை எடுத்து அதனை நிறைவேற்றினோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @JZarif
 
Iran took & concluded proportionate measures in self-defense under Article 51 of UN Charter targeting base from which cowardly armed attack against our citizens & senior officials were launched.

We do not seek escalation or war, but will defend ourselves against any aggression.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @JZarif

அமெரிக்கா - இரான் இடையேயான பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இரானுக்கு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ட்வீட் செய்தி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

காசெம் சுலேமானீ மரணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் உள்ள அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு முன்னதாக குறிப்பிட்டுள்ளது.

'இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51029386

காசெம் சுலேமானீ மரணம்: அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல்

அமெரிக்க விமானத்தளம் மீது இரான் தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

சுலேமானீ இறுதிச்சடங்குபடத்தின் காப்புரிமைEPA

''அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். இரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்'' என்று இரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.

காசெம் சுலேமானீபடத்தின் காப்புரிமைEPA

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.

https://www.bbc.com/tamil/global-51029381

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் விலை 4 வீதம் அதிகரிப்பு.. இந்தியன் கோவிந்தாவா.. அப்போ இலங்கை..?  ரெல் மீ.. 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எண்ணெய் விலை 4 வீதம் அதிகரிப்பு.. இந்தியன் கோவிந்தாவா.. அப்போ இலங்கை..?  ரெல் மீ.. 😊

அங்கும் தொழில் செய்து நாட்டிற்கு வளம் சேர்க்கும் மக்கள் திரும்பினால் நிலைமை மிகவும் கடினமாகும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீப் பேட்டி: நாங்கள் கோழைகள் அல்ல; சட்டப்படி சரியான இலக்குகளைத் தாக்குவோம்

ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

(பிபிசி நேற்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க நிலைகள் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எடுத்த பேட்டி இது).

''இன்றைக்கு ஈரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே ஈரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.'' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் இரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் .

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வாரம் உரையாற்றச் செல்வதற்கு உங்கள் பயணத்துக்கு விசா மறுக்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய முடியுமா?

பதில்: அப்படித்தான் பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் 2019 டிசம்பரிலேயே கடிதம் அனுப்பியும், அதைப் பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாமல் போனதாக செயலாளர் பாம்பேயோ அழைத்து தகவல் தெரிவித்தார்.

கேள்வி: இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: நல்லது. தலைமையக ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நாங்கள் உங்களுக்குப் பதில் அளிக்கலாம். ஆனால், நல்ல ஆட்சி நிர்வாகம் இல்லாத ஒரு நாட்டுக்கு, இந்த ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மாறுபட்டதாக உள்ளது, சர்வதேச சட்டங்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காத ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றங்கள் செய்யும் நாட்டுக்கு, கலாச்சார தலங்களைத் தாக்கி மேலும் போர் நடத்துவோம் என மிரட்டும் ஒரு நாட்டுக்கு, போர்க் குற்றம் செய்யும் நாட்டின் நிர்வாகத்திடம், எதற்கும் கட்டுப்பட்டு நடக்கும் அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. இது நான் எதிர்பார்க்காத விஷயம் அல்ல. ஆனால் எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தான் என் கேள்வி. நியூயார்க்கில் நான் என்ன செய்துவிடப் போகிறேன்?

பாம்பியோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: நீங்கள் அனுபவம் உள்ள ராஜதந்திரி. தூதரக உறவுகளில், வெளிப்படையான மற்றும் திரை மறைவிலான அனைத்து வகையிலான செயல்பாடுகளின் மாண்புகள் பற்றியும் அறிந்துள்ளவர். பேச்சுவார்த்தை முயற்சிக்கு, முக்கியமான கதவை மூடுவது போன்ற செயல்பாடாக இது உள்ளதா?

பதில்: நல்லது. உங்களிடம் நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், நல்ல புரிதலை உருவாக்க சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்களுடன் கலந்து பேசுவதற்கு இது ஒர் வாய்ப்பாக இருந்திருக்கும்.

இது அபாயகரமான காலக்கட்டமாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க உதவியிருக்கும்.

பதற்றத்தை தணிக்கும் வழியை அமெரிக்கா தேர்வு செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. பதற்றத்தைத் தணிப்பது பற்றிப் பேசுவதும், அதற்கான பாதையை தேர்வு செய்வதும் மாறுபட்டவை. நிறைய பேரை, முக்கியமானவர்களை, இராக் மற்றும் இரான் அதிகாரிகளை, அன்னிய மண்ணில் அமெரிக்கா கொன்றிருக்கிறது. அது போருக்கான ஒரு செயல்.

தனிப்பட்ட முறையிலும், பொது வெளியிலும் அவர்களின் மூர்க்கத்தனம், விளைவுகளை அறியாத மனப்போக்கு, பிடிவாதம் ஆகியவற்றை வெளிக்காட்டியுள்ளது. அதுவே பதற்றத்தை அதிகரிக்கும் செயல் தான். ஈரான் மக்களுக்கான மிரட்டல் அது. அதிபர் டிரம்ப்பை, செயலாளர் பாம்பேயோ தவறாக வழிநடத்துகிறார் என்று நான் நினைக்கிறேன்.

தெஹ்ரான் மற்றும் பாக்தாத் நகரங்களில் மக்கள் தெருக்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் நம்புகிறார். அதுபோன்ற ஒரு விடியோவையும் தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இப்போது இராக் மற்றும் ஈரானில் நேற்று மனிதப் பேரலையை அவர் பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தவறான பாதையில் கொண்டு செல்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா?

ஈரான் பதிலடி தரும்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: பதற்றத்தைத் தணிக்க இரான் திறந்த மனதுடன் உள்ளதா? பதற்றத்தைத் தணிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: நல்லது.அமெரிக்கா ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, அதன் தொடர் விளைவுகள் அதே பாதையில் செல்லும். முதலில் அது இராக்கின் இறையாண்மையை மீறிவிட்டது. அதுபற்றிப் பேச இராக் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. அது இரானிய குடிமக்களை, இரான் குடிமக்கள் பலரை, இரான் அதிகாரிகள் பலரை அமெரிக்கா கொன்றிருக்கிறது. பயங்கரவாதிகள் போல, கோழைத்தனமான பயங்கரவாதிகள் போல எடுத்துள்ள போருக்கான நடவடிக்கையாக இது உள்ளது. இதற்கு உரிய வகையில் இரான் பதிலடி தரும்.

பதற்றத்தைத் தணிப்பது என்பது, அமெரிக்கா மேற்கொண்டு இதுபோல செய்யாமல் இருப்பது, ஈரானை மிரட்டுவதை நிறுத்திக் கொள்வது, இரான் தேசத்திடம் மன்னிப்பு கேட்பதாக இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு, பின்விளைவுகள் இருக்கும், அது நடக்கும், ஏற்கெனவே அது தொடங்கிவிட்டது என்று நான் நம்புகிறேன். எங்கள் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

கேள்வி: இதற்கு இணையான அளவுக்கு நேரடியானதாக இரானின் பதிலடி இருக்க வேண்டும், இரான் படைகளால் அது முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரான் பாதுகாப்புக் கவுன்சிலிடம் இரான் அதிபர் கூறியுள்ளதாக இன்று காலையில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதை நீங்கள் உறுதிப்படுத்த முடியுமா?

பதில்: நல்லது. நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தேசம். நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிபர் டிரம்ப் கூறியது போல, அளவுக்கு அதிகமானதாக இருக்காது, சட்டமுறைப்படி சரியான இலக்குகளாக அது இருக்கும்.

அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: ராணுவமாக இருக்கும் என்று கூறலாமா?

பதில்: அது சட்டமுறைப்படி சரியான இலக்குகளுக்கு எதிரானதாக இருக்கும்.

கேள்வி: இதற்கு என்ன அர்த்தம்?

பதில்: சட்டமுறைப்படி சரியான இலக்குகள் என்பது பற்றி சர்வதேச போர் சட்டம் மிக தெளிவாகக் கூறுகிறது.

கேள்வி: அதுபற்றி சிறிது கூற முடியுமா?

பதில்: நல்லது. அவர்கள் சட்ட அகராதியை போய் புரட்டலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி: இரானின் ஆதரவு அமைப்புகள், உதாரணமாக ஹிஸ்புல்லா போன்ற மறைமுக அமைப்புகள் பதிலடி நடவடிக்கையில் இறங்காது என்று நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்: எங்களுக்கு மறைமுக அமைப்புகள் எதுவும் கிடையாது. எங்களுடைய மக்கள் இருக்கிறார்கள் என்பதை இராக்கின் சாலைகளில் நீங்கள் பாத்திருப்பீர்கள், மறைமுகமானவர்கள் அல்ல. அவர்கள் எங்களால் கட்டுப்படுத்தப் படவில்லை, ஏனெனில் அவர்கள் எங்களின் மறைமுகமான ஆட்கள் இல்லை. உணர்வுகள், சுதந்திரமான சிந்தனை உள்ள மக்கள் அவர்கள். அதனால்தான் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இல்லை என்று நான் சொன்னேன்.

ஈரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி: பதிலடி நடவடிக்கை எதுவாக இருந்தாலும், இரான் ராணுவத்தால் தான் எடுக்கப்படும், சீருடைப் படையினரால் எடுக்கப்படும் என்று உறுதி செய்கிறீர்களா?

பதில்: 3 அத்துமீறல்கள் நடந்திருப்பதாக நான் சொன்னேன். இராக்கின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது, அதற்கு இராக் அரசும், நாடாளுமன்றமும் பதில் அளித்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் உள்ள, மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஈரான் குடிமக்கள் பலர், உயர் அந்தஸ்தில் உள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதைத்தான் நாங்கள் செய்வோம். ஆனால் கோழைகளைப் போல அல்ல, தெளிவாக, அதற்கு இணையான வழியில் செய்வோம்.

கேள்வி: எப்போது?

பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.

கேள்வி: சீக்கிரமாகவா?

பதில்: நாங்கள் தேர்வு செய்யும் சமயத்தில்.

கேள்வி: காசெம் சுலேமானீ மிகவும் அறியப்பட்ட, வலிமையான கமாண்டர். நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகள் அவரை கண்காணித்து வந்தன. அவரைக் கொலை செய்வதற்கு அதிபர்கள் ஒபாமா, புஷ் ஆகியோர் அனுமதி தர மறுத்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி நடந்தால் மேற்கத்திய நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கேடு செய்வதாக இருக்கும் என்று அவர்கள் கருதியதே அதற்குக் காரணம். தனக்கு முன்பிருந்த இரண்டு அதிபர்கள் செய்யாததை, அதிபர் டிரம்ப் செய்துள்ளார். அவரைப் பற்றி இது என்ன கருத்தை தருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தெஹ்ரான் மற்றும் பாக்தாத் தெருக்களில் மக்கள் உற்சாக நடனமாடுவார்கள் என்று நம்புபவர்கள் அவருக்குத் தவறான ஆலோசனை கூறியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். தனது ஆலோசகர்கள் பற்றி அவர் பரிசீலிக்க வேண்டும்.

ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி : அவருடைய செயல்பாடுகளை யூகிக்க முடியாது, ஏனோ தானோ என செயல்படுபவர் என்பதால் அவர் என்ன செய்வார் என ஊகிக்க முடியாத அதிபராக அவர் இருக்கிறாரா?

பதில்: ஊகிக்க முடியாத மற்றும் ஒழுங்கற்ற செயல்களை சட்டத்துக்கு உள்பட்டு செய்யலாம். இப்போது அமெரிக்காவில் உள்ள ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. அதுதான் முக்கியமானது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர் சட்டத்தை மதிக்காத வழியில் செயல்படுவதை பார்க்க அமெரிக்கர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது சட்டங்கள் நிறைந்த வனம் அல்ல.

கலாச்சார தலங்கள் மீது அளவு கடந்த தாக்குதல்கள், நான் மேற்கோள் தான் காட்டுகிறேன். தங்கள் மக்கள் சாப்பிட வேண்டும் என்று ஈரான் விரும்பினால், அமெரிக்கா சொல்வதை பின்பற்ற வேண்டும். இந்தக் கருத்துகள் அமெரிக்க அதிகாரிகளால் சொல்லப்பட்டவை. ஆனால், போர்க் குற்றங்கள் இழைத்த நேரத்தில், மனிதாபிமானத்துக்கு எதிராக வந்தவை. சட்டத்தை மதிக்காத கிரிமினல் வழியில் தங்கள் பிரதிநிதிகள் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கர்கள் விரும்புகிறார்களா?

கேள்வி : அணுசக்தித் திட்டம் பற்றி கடைசி கேள்வி. ஜே.சி.பி.ஓ.ஏ.ல் விதித்துள்ள வரம்புகளை இனியும் மதிக்கப் போவதில்லை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அணு கதிரியக்கப் பொருள் செறிவூட்டலை எப்போது நீங்கள் மேம்படுத்தப் போகிறீர்கள்?

பதில்: மறுபடி சொல்கிறேன். அது எங்கள் தேவையின் அடிப்படையில் தேர்வு செய்யும் காலமாக இருக்கும். ஆனால் வரம்புகளை மதிக்க மாட்டோம் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், அடிப்படை வரம்புகளை மீறியதாக கிடையாது. ஜே.சி.பி.ஓ.ஏ. பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினரும் விழிப்புடன் பங்கேற்றதாக இருந்தது என்பதால், இவற்றை மாற்றிவிட முடியும்.

அதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஜே.சி.பி.ஓ.ஏ.வுக்கு உள்பட்டும், அதற்கு மாறாகவும் தனது உத்தரவாதங்களை அமல் செய்ய ஐரோப்பியர்கள் தவறவிட்டனர். நாங்கள் அறிக்கைகளாக இல்லாமல், எழுத்தூபூர்வமாக அவர்களுக்குத் தெரிவித்தோம். 5 முறைகள் தெரிவித்தோம். தரப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கையை தொடங்குகிறோம் என்று தெரிவித்தோம்.

மிகவும் சட்டபூர்வமான வழியில், சட்டத்தை மதிக்கும் வகையில், ஒப்பந்தத்தின்படியாகவே செயல்படுவதாகத் தெரிவித்தோம். மீறுதல் இருந்தால் என்ன நடவடிக்கைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்ட முறையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டோம். ஒப்பந்தத்தின்படி அளித்த உறுதிமொழிக்கு பணிந்து நடக்கத் தொடங்கினால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக மாற்றிவிடலாம்.

எனவே ஜே.சி.பி.ஓ.ஏ. உயிர்ப்புடன் உள்ளது. ஏனெனில் அது மிகவும் யதார்த்தமான ஒப்பந்தம். ஆனால், மரித்துப் போனது எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?அது அவ்வப்போது தோற்றுப் போவதால், அதிகபட்ச அழுத்தம் காணாமல் போகிறது. மரிக்கப் போகும் இன்னொரு விஷயம்: எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு. இனிமேல் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

முகமது ஜாவத் ஜரீப் உடன் நேர்காணல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேள்வி : காசெம் சுலேமானீ கொல்லப்பட்டது ஈரான் அதிகார வர்க்கத்தில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளதாக நிறைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈரான் அரசு மீது ஈரான் குடிமக்கள் கொண்டிருக்கும் வெறுப்பை திசை திருப்பும் வகையில் இது நிகழ்ந்துள்ளது என்று கருதுகின்றனர்.

பதில்: இன்றைக்கு இரானியர்கள் எல்லோரும் ஒன்றாகிவிட்டார்கள். நாங்கள் எல்லோருமே இரானியர்கள் தான். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என்ற பேதம் இல்லை.

கேள்வி : ஆனால் அது உங்கள் மீதான அழுத்தத்தை நீக்குகிறது.

பதில்: நாங்கள் அனைவரும் எங்கள் நாட்டை, எங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பும் ஈரானியர்களாக இருக்கிறோம். அமைதிக்காகப் போராடிய மனிதரின் இழப்பிற்கு அனைவரும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.

https://www.bbc.com/tamil/global-51033521

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மக்கள் சியா முஸ்லீம் என்றும் அவர்கள் இஸ்ரேலுடன் நற்பில் உள்ளவர்கள் என்றும் ,அமேரிக்கா ,ஈரான் மோதல் ஒரு நாடகம் என்றும் ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருந்தார்..இது பற்றி யாருக்கு ஏதாவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஈரான் மக்கள் சியா முஸ்லீம் என்றும் அவர்கள் இஸ்ரேலுடன் நற்பில் உள்ளவர்கள் என்றும் ,அமேரிக்கா ,ஈரான் மோதல் ஒரு நாடகம் என்றும் ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருந்தார்..இது பற்றி யாருக்கு ஏதாவது தெரியுமா?

ரதி,

இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான்  களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும்.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். 

ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது.

உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஏவுகணையினை ஈரான் செலுத்தியவுடனேயே அது தொடர்பாக ஈராக்கிற்கு ஈரான் தெரியப்படுத்திவிட்டதாக மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன அதில் உண்மையும் இருக்கலாம், பொதுவாகாக மேற்குலக ஊடகங்கள் யூதர்களது கட்டுப்பாட்டில் உள்ளன இவை அந்தந்த நாடுகளில் வலதுசாரிகளிற்கு செயற்படுவதனூடாக இஸ்ரேலுக்கு இணக்கமான சூழ்னிலையை உருவாக்குவதே இவர்களின் தொழில் என்று ஒரு கருத்துநிலவுகிறது அது மட்டுமல்ல வங்கித்துறையிலும் இவர்கள் கையே உயர்ந்துள்ளது , இதனை மீறி எந்த அரசாலும் செயற்பட முடியாத நிலை மேற்குலகில்நிலவுகிறது.
ஒரு நல்லவிடயம் போர் தொடங்கவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

ரதி,

இது மிகவும் தவறானதொரு கற்பிதம். இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழித்துவிடுவது என்று ஈரான் சபதம் பூண்டிருக்கிறது. நீங்கள் இஸ்ரேல் - பாலஸ்த்தீனப் பிணக்கைத் தொடர்ந்து வதானித்து வருபவராக இருந்தால், இஸ்ரேலுக்கெதிராகப் போராடும் ஹிஸ்புல்லா எனும் ராணுவக் கிளர்ச்சிப் படையினை உருவாக்கி நடத்திவருவது ஈரான் என்பது உங்களுக்குப் புரியும். ஹிஸ்புல்லாவினால் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவப்படும் கட்யூஷா ராக்கெட்டுக்கள் ஈரானின் தயாரிப்பென்பதும், இந்த கிளர்ச்சிப் படையினை தனது ப்ரொக்ஸியாகவே இஸ்ரேலுக்கெதிரான யுத்தத்தில் இரான் பாவிக்கிறதென்பதும் தெளிவு. ஈரானுக்கும் இஸ்ரேலினை அழிக்க காத்திருக்கும் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான தொடர்பென்பது, சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவை ஈரான்  களமிறக்கியதன் மூலம் எவ்வளவு உறுதியானதென்பது தெரியவரும்.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் அணு உலைகளைத் தாக்கத் திட்டம் தீட்டிவருவதும் நடக்கிறது. அமெரிக்கா தாக்குகிறதோ இல்லையையோ, இஸ்ரேல் ஈரானின் அணுவாயுத இலக்குகள் மீது தாக்கும் சாத்தியம் மிக அதிகமானது. இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலினை முற்றாக துடைத்தழிக்கவும், இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியிலான அழுத்தத்தைக் கொடுக்கவும் கூடிய ஒரே நாடென்கிற வகையில், ஈரானின் நடவடிக்கைகள் மீது இஸ்ரேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையிலான பகை 1979 ஆம் ஆண்டு ஈரானின் அன்றைய அமெரிக்கச் சார்பு அரசுக்கெதிராக இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டங்கள்ளுடன் ஆரம்பித்து, அமெரிக்க தூதுவரலாயத்தில் வேலைசெய்துவந்த 52 அமெரிக்கர்களை சுமார் இரு வருடங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்ததிலிருந்து ஆரம்பமாகிறது. மேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவும், மத்திய கிழக்கில் அமெரிக்கத் துருப்புக்களின் பிரசன்னமும் ஈரான் அமெரிக்கா மீது சினங்கொள்ள காரணம். 

ஆனால், நேற்றைய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு அமெரிக்கரேனும் கொல்லப்படவோ அல்லது காயப்படவோ இல்லையென்பது சொல்லும் செய்தி ஒன்றில், ஈரானின் ஏவுகணைகள் இலக்குத் தவறியிருக்கலாம் என்றோ அல்லது வேண்டுமென்றே அமெரிக்கத் துருப்புக்களை விலத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களாகவோதான் பார்க்கப்படவேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

ஈரானைப் பொறுத்தவரை தனது தளபதி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கலாக ஒரு தாக்குதல் நடத்தப்படவும் வேண்டும் ஆனால் இத்தாக்குதல் அமெரிக்காவின் எதிர்வினையினை சம்பாதிக்காமலும் இருக்கவேண்டும். உள்நாட்டில் தாம் அமெரிக்காவைத் தாக்கிவிட்டோம் என்கிற தப்பட்டமும், வெளியுலகில், குறிப்பாக அமெரிக்காவில் தாம் வேண்டுமென்றே அமெரிக்கர்களை விலத்தித்தாக்கினோம் என்கிற நாடகமும் அரங்கேறியிருக்கிறது.

உண்மையில், அமெரிக்காவுக்கோ அல்லது ஈரானுக்கோ இன்னொரு போருக்குப் போவதற்கான தேவையோ அல்லது அநியாய பணவிரயத்திற்கான கட்டாயத் தேவையோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நன்றி பதிலுக்கு அருமையான  விளக்கம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசெம் சுலேமானீ: இரான் ராணுவ தளபதியை கொன்ற ட்ரோன் எப்படி செயல்படுகிறது?

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி.

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை மனிதர்களே இல்லாமல் வெறும் ட்ரோனை மட்டுமே பயன்படுத்தி கொன்றுள்ளது அமெரிக்கா.

தாங்கள் எந்த ட்ரோனை பயன்படுத்தி சுலேமானீயை கொன்றோம் என்பதை அமெரிக்க அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டு விமானப்படையில் இருக்கும் ட்ரோன்களிலேயே அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் அவரை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அதிதிறன் வாய்ந்த எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன் எப்படி செயல்படுகிறது? எவ்வளவு தூரத்துக்கு, எத்தனை மணிநேரம் அதனால் தொடர்ந்து பறக்க முடியும்? இது ஏவுகணை தாக்குதல்களை எப்படி மேற்கொள்கிறது? இதன் விலை என்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அலசுகிறது இந்த கட்டுரை.

ட்ரோன்களால் என்னென்ன செய்ய முடியும்?

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGENERAL ATOMICS

விமானியே இல்லாமல் தனக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை முதலாக கொண்டு செயல்படும் ஆளில்லா வான்வழி வாகனங்களே ட்ரோன்கள் என்றழைக்கப்படுகிறது.

வானத்தில் இருந்து புகைப்படங்கள் எடுக்கவும், காணொளிகளை பதிவு செய்யவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்களின் பயன்பாடு துறைக்கு துறை வேறுபடுகிறது. அதாவது, மருத்துவ துறையில் இரத்தம், உடலுறுப்பு ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக எடுத்துசெல்லவும், வணிகரீதியாக பார்க்கும்போது பொருட்களை கொண்டுசேர்க்கவும், பாதுகாப்பு துறையில் நாட்டின் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எம்.கியூ - 9 ரீப்பர் ட்ரோன்கள் எவ்வளவு அபாயகரமானது?

உலகிலேயே அதிதிறன் மிக்க ட்ரோன்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை பெருக்கி வரும் சூழ்நிலையில், அமெரிக்கா தனது எதிரிகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு ட்ரோன்களை பரவலாக பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்க பாதுகாப்புப்படையிலேயே மிகவும் அபாயகரமான ட்ரோனாக எம்.கியூ - 9 ரீப்பர் கருதப்படுகிறது. தானாக மேலெழும்பி, புறப்பட்ட இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பறந்து சென்று, இலக்கை தொடர்ந்து பல மணிநேரங்கள் கண்காணித்து, தக்க நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தவல்ல ஏவுகணைகளை செலுத்தி, பணியை முடிக்கும் இந்த ட்ரோன் கள்ளத்தனமாக செயல்படுவதில் பெயர்பெற்றது.

அமெரிக்க விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகள் சிஸ்டம் என்னும் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம்தான் இதை தயாரிக்கிறது.

மணிக்கு 482 கி.மீ. வேகம்; 1701 கிலோ ஏவுகணை

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோனை "ஒரு ஆயுதமாக, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே நீண்டதூரத்தில் இருக்கும் முக்கியமான இலக்குகளை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கும், உளவு தகவல் சேகரிப்புக்கும்" பயன்படுத்துவதாக அமெரிக்க விமானப்படையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2,223 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோனின் நீளம் 36 அடி, உயரம் 12.5 அடி. இறகுகளின் நீளம் மட்டும் 66 அடி. மேலும், 1,701 கிலோ எடை கொண்ட ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை தாங்கி செல்லக்கூடிய இந்த ட்ரோனால் அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில், 1,850 கிலோ மீட்டர் தூரத்துக்கு, மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த வகை ட்ரோனில் ஒரே சமயத்தில் 2,278 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.

அதிகபட்சமாக 50,000 அடி உயரத்தில் பறக்க கூடிய இந்த வகை ட்ரோன்கள், தனது இலக்கை கண்டறிந்தவுடன், குறைந்த பட்சமாக 800 அடி உயரம் வரை கீழிறங்கி தாக்குதல்களை மேற்கொள்ளவல்லது. இவ்வளவு குறைந்த உயரத்தில் சென்றாலும், கிட்டதட்ட எவ்வித சத்தத்தையும் இந்த ட்ரோன்கள் ஏற்படுத்தாததால் ஒருவர் மேல்நோக்கி பார்க்கும் வரை இவற்றை அடையாளம் காணவியலாது.

அமெரிக்காவிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளை

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோனின் முகப்பு பகுதியில் செயற்கைகோளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வண்ணம், கருப்பு மற்றும் வெள்ளை டிவி கேமராக்கள், ஒளியை நிர்வகிக்கும் கருவி, ரேடார், குறைந்த ஒளி நிலைகளுக்கான அகச்சிவப்பு படங்கள் மற்றும் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான லேசர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த வகை ட்ரோன்கள் தன்னிச்சையாக பறந்து, தரையிறங்க கூடியது என்றாலும், இதை தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்களே கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இலக்கு குறித்த தகவல்களோடு கிளம்பும் எம்.கியூ - 9 ரீப்பர் , தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை/ நபரை கண்டறிந்தவுடன் அதுகுறித்த தகவல்களை ஆயிரத்திற்கும் அதிகமாக கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.

பெரும்பாலான நேரங்களில், இந்த வகை ட்ரோன்கள் அனுப்பும் புகைப்படங்கள்/ காணொளிகள் மற்றும் தரவுகள் பெறப்பட்டு அமெரிக்காவின் நெவாடாவிலுள்ள விமானப்படை தளத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

மற்ற வகை ட்ரோன்களை போலன்றி, இவை குறிப்பிட்ட இலக்கை தேடி கண்டுபிடிப்பதுடன், கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு கிடைத்த அடுத்த நொடியே குறைந்தபட்சம் 800 அடி முதல் அதிகபட்சமாக எட்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்தி இலக்கை துல்லியமாக அழிக்கவல்லது.

இந்த வகை ட்ரோனால் ஒரே சமயத்தில் நான்கு ஏவுகணைகளையும், லேசரின் துணையுடன் செயல்படும் வெடிகுண்டுகளை தாங்கி செல்ல முடியும்.

அதாவது, AGM-114 ஹெல்ஃபைர் ஏவுகணைகளை மட்டும் தனியாகவும், GBU-12 பேவ்வே II மற்றும் GBU-38 ஆகிய இரு ஏவுகணைகளை இணைத்து ஒரே சமயத்தில் இயக்க செய்தும் இந்த ட்ரோனால் தாக்குதல் நடத்த முடியும்.

விலை என்ன தெரியுமா?

எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் இலக்குகளை தேடி கண்டுபிடித்து தாக்கி அழிப்பதுடன், உளவுப்பணிகளில் ஈடுபட்டு, தரைப்பகுதியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிவதோடு, அலைபேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக்கேட்பது, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபடுவது, பல்வேறு ஆயுதங்களை கண்டறிவது, பேரிடர்களின் போது உதவிப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மோசமான வானிலையின்போதும் துல்லியமாக செயல்படும் திறன் பெற்றது என்று அமெரிக்க விமானப்படை கூறுகிறது.

காசெம் சுலேமானீயை கொன்ற ட்ரோனால் என்னவெல்லாம் செய்ய முடியும்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 93 எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் அமெரிக்க விமானப்படையின் வசம் உள்ளது. நான்கு ட்ரோன்கள் இருக்கும் ஒரு தொகுப்பு எம்.கியூ - 9 ரீப்பரின் விலை 64.2 மில்லியன் டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் பார்த்தோமானால் ஒரு ட்ரோனின் விலை சுமார் 114 கோடி ரூபாய் ஆகும்.

எம்.கியூ - 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டுகிறதா இந்தியா?

அமெரிக்கா ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை கொல்வது இது முதல் முறையல்ல. 2007ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படும் இந்த வகை ட்ரோன்கள், ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்திலேயே பயன்படுத்தப்பட்டாலும், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் தான் இதன் பயன்பாடு பெருகியது.

இந்த நிலையில், டிரம்பின் உத்தரவுப்படி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதன் மூலம், மீண்டும் ட்ரோன்களின் செயல்பாடு, பயன்பாடு குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர் இந்தியா எம்.கியூ - 9 ரீப்பரை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/science-51044570

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்' - இஸ்லாமிய அரசு அமைப்பு மற்றும் பிற செய்திகள்

"சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்கிறோம்" - ஐ.எஸ். இயக்கம்படத்தின் காப்புரிமைIS PROPAGANDA

இரான் புரட்சிகர ராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதை வரவேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். குழு அறிவித்துள்ளது.

"சுலேமானீயின் மரணம் ஆயுதமேந்திய ஜிகாதிய போராளிகளுக்கு நன்மை அளிப்பதற்காக கடவுள் செய்த குறுக்கீடு," என்று ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், கடந்த 3ஆம் தேதி இராக் தலைநகர் பாக்தாத்தில் காசெம் சுலேமானீயை திட்டமிடப்பட்ட ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்ற அமெரிக்கா குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதாவது, சுலேமானீ கொல்லப்பட்டது முதல் அதன் காரணமாக அமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற இராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான தொடர் நிகழ்வுகள் தங்களது இயக்கத்தின் செயல்பாட்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் அதிகரிப்பதற்கு உதவும் என்பதன் அடிப்படையிலேயே ஐ.எஸ். இயக்கம் இவ்வாறாக கருத்துத் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

சுலேமானீயை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று நேற்று (வெள்ளிக்கிழமை) இரான் மற்றும் இரானால் நிதியுதவி அளிக்கப்பட்டு வரும் இராக்கில் இருக்கும் ஆயுத போராளிகள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

https://www.bbc.com/tamil/global-51073624

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.