Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள்படத்தின் காப்புரிமை Delhi police

டெல்லியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.

"எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவது மூலம் இந்த நாட்டில் உள்ள பெண்கள் வலிமை பெறுவார்கள். இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்." என நிர்பயாவின் தாயார் தெரிவித்தார்.

முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

நடந்தது என்ன?

  • கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பவத்தில் அவருடைய நண்பரும் தாக்கப்பட்டார்.
  • மிகவும் மோசமாக காயமடைந்த அம்மாணவியை சாலையோரம் அக்கும்பல் தூக்கி எறிந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, 13 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை

2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.

2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

"சீராய்வு மனு தாக்கல் செய்வோம்"

"ஒன்றிரண்டு நாளில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம். ஐந்து மூத்த நீதிபதிகள் அதனை விசாரிப்பர். இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் நெருக்கடி இருந்துக் கொண்டே வருகிறது. இந்த வழக்கில் சார்பற்ற விசாரணையை மேற்கொள்ள முடியாது," என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏபி சிங் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-51020644

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மகனை மன்னித்து விடுங்கள்: நிர்பயா வழக்குக் குற்றவாளியின் தாய் நீதிமன்றத்தில் கதறல்

டெல்லி நீதிமன்றம் இன்று நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டதையடுத்து குற்றவாளி ஒருவரின் தாயார் ‘என் மகனை மன்னித்து விடுங்கள்’ என்று கதறி அழுதார். நீதிபதியிடமும் நிர்பயா தாயாரிடமும் மன்றாடினார்.

முகேஷ் சிங்கின் தாயார் கோரிக்கையை ஏற்க மறுத்தார் நீதிபதி, நிர்பயா தாயிடம் முறையிட்ட போது, அவர், “எனக்கும் மகள் இருந்தாள்” என்று முறையிட்ட தாய்க்கு பதில் அளித்தது உருக்கமான காட்சியை அங்கு ஏற்படுத்தியது.

 

விசாரணையின் போது கடைசி நேரத்தில் கோர்ட் அறைக்குள் நுழைந்த குற்றவாளியின் தாய், கெஞ்சும் தோரணையில் தன் புடவையைப் பிடித்திருந்தார்.

“என் மகனை மன்னித்து விடுங்கள், நான் உங்களை மன்றாடுகிறேன், அவன் உயிருக்காக நான் யாசகம் கேட்கிறேன்” என்று கதறி அழுதார்.

ஆனால் நிர்பயாவின் தாய், “எனக்கும் மகள் இருந்தாள், அவளுக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் எப்படி மறக்க முடியும். நான் இந்த நீதிக்காக 7 ஆண்டுகள் காத்திருந்தேன்” என்று பதிலளித்தார்.

இவர்கள் இருவரின் உரையாடலும் கோர்ட் அறைக்குள் இறுக்கமான, உருக்கமான காட்சிகளை உருவாக்க, நீதிபதி ‘சைலன்ஸ்’ என்று உத்தரவிட்டார்.

குற்றவாளியின் தாயார் உடனே நீதிபதி முன்பு மன்னிப்பு காட்டுங்கள், என் மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் நீதிபதி தன் இருக்கையிலிருந்து கிளம்பிவிட்டார்.

பிற்பாடு கோர்ட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அந்தத் தாயார், தன் மகன் ஏழை என்பதால் தண்டிக்கப்பட்டுள்ளான் என்றார்.

 

https://www.hindutamil.in/news/india/533963-nirbhaya-case-forgive-my-son-urges-convict-s-mother-i-had-a-daughter-too-replies-victim-s-parent-1.html

  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா வழக்கில் ஜனவரி 22 ல் நான்கு குற்றவாளிகளையும் தூக்கில் இட உத்தரவு

 

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி விட்டு மன்னிக்கமுடியாதா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

வெட்டி விட்டு மன்னிக்கமுடியாதா

அதிலும் பார்க்க, தூக்குத்  தண்டனையே... கொடுக்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தாங்கள் செய்த பிழையை உணருவார்கள் இல்லை….

  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா நித்ய பயத்தை காட்டிக்கொண்டிருக்கிறாள்.......!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: தூக்கு கயிறுகள் தயாரித்துக் கொடுத்த பக்சர் சிறைச்சாலை

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை வரும் ஜனவரி 22ஆம் தேதி நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிகாரில் உள்ள சிறை ஒன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான 10 கயிறுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் அந்தக் கயிறுகளைத் தயாரிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, டிசம்பர் 14ஆம் தேதி அவை அந்த மாநிலத்தின் சிறைத்துறை இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

"தூக்கிலிடுவதற்கான கயிறுகளைத் தயாரிக்கும் நீண்ட பாரம்பரியம் பக்சர் சிறைச் சாலைக்கு உள்ளது. இங்கு தயாராகும் கயிறுகள் பயன்படுத்தப்படுமா என்று தெரியவில்லை. இவை வலிமையானவை என்றாலும் மெல்லிய பஞ்சை கொண்டு தயாரிக்கப்படுவதால் நீண்ட காலம் இருக்காது," என்று அந்த சிறையின் கண்காணிப்பாளர் விஜய் குமார் அரோரா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்குபடத்தின் காப்புரிமை Getty Images

ஒரு கயிறைத் தயாரிக்க மூன்று நாட்கள் தேவைப்படும். குறைவான அளவில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பெரும்பாலும் கைகளாலேயே அவை செய்யப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

கடைசியாக இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கயிறு ஒன்றின் விலை 1,725 ரூபாய் என்றும் சந்தை நிலவரத்தைப் பொறுத்து அது மாறும் என்று அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டவுடன் முடிச்சு அவிழாமல் இருக்கும் வகையிலும், கழுத்தைச் சுற்றி இறுக்கமாக இருக்கும் வகையிலும் இந்தக் கயிறுகள் தயாரிக்கப்டுகின்றன.

"152 இழைகளைக் கொண்ட நூல் இவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தூக்குக் கயிற்றில் சுமார் 7000 நூலிழைகள் இருக்கும்," என்று விஜய் குமார் அரோரா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கும் இங்கு தயாரிக்கப்பட்ட தூக்குக் கயிறு மூலமாகவே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிறது பி.டி.ஐ செய்தி.

நிர்பயா வழக்கின் பின்னணி

2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.

2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

நிர்பயா வழக்கின் பின்னணிபடத்தின் காப்புரிமை Getty Images

2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

2019 டிசம்பர்: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஏற்கனவே பிற கைதிகளின் மறு ஆய்வு மனுக்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

2020 ஜனவரி 7: ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.https://www.bbc.com/tamil/india-51045048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் இருவர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் படுகாயங்களுடன் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம், எஞ்சிய ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

அவர்களுக்கு வழங்கிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ல் உறுதி செய்தது. இந்த வழக்கில் மூன்று குற்றவாளிகளும் 2017-ல் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை 2018 ஜூலை 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறுவன், சிறார் நீதி வாரியத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மூன்று ஆண்டு காலத்திற்கு பின்னர் சீர்திருத்த இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மற்ற நான்கு குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை பிறப்பித்தது. ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் நால்வரும் தூக்கிலிடப்படுவர் என்று கூறியது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வரில் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் வரும் ஜனவரி 14 அன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர் எஃப் நாரிமன், ஆர்.பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வினய் சர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

இந்த மனுக்களை சேம்பர் அறையிலேயே நீதிபதிகள் விசாரணை செய்தனர். சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

https://www.hindutamil.in/news/india/534943-supreme-court-dismisses-curative-petitions-of-two-convicts-vinay-kumar-sharma-and-mukesh-singh-1.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 3:33 AM, நந்தன் said:

வெட்டி விட்டு மன்னிக்கமுடியாதா

 

இல்லை ஐயா

அது மனிதாபிமானத்தைவிட

குரோதத்தையும்  பழிவாங்குதலையும்  வளர்த்துவிட்டால்:???

பாரிய கொடுமைகளுக்கு  காரணமாகலாம்

  • கருத்துக்கள உறவுகள்
  • நிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு – டெல்லி உயர்நீதிநீதி மன்றம்
நிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு – டெல்லி உயர்நீதிநீதி மன்றம்
 

நிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு – டெல்லி உயர்நீதிநீதி மன்றம்

 

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி:

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, முகஏஷ் சிங்கின் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், தண்டனையை தாமதமாக்க போடப்பட்டுள்ள மனுவாக தெரிகிறது என்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றத்தையே மீண்டும் நாடலாம் என தெரிவித்தனர்.

தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி முகேஷ் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஏற்கனவே கருணை மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.minmurasu.com/செய்திகள்/729242/நிர்பயா-வழக்கு-குற்றவாள-6/

  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகளை தூக்கிலிட அரசு தாமதம் செய்யவில்லை – அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த்-720x450.jpg

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடும் பிரச்சினையில் டெல்லி அரசு தாமதம் செய்யவில்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி அரசால் தான் குற்றவாளிகளை தூக்கிலிடுவது தாமதமாவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  டெல்லி யூனியன்பிரதேச அரசு செய்ய வேண்டிய பணிகள் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும்,  நிர்பயா கொலை குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

நிர்பயா கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நால்வரில் முகேஷ் சிங் கருணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் தூக்குதண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிர்பயா-கொலை-வழக்கு-குற்-2/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கிலிடும் தேதி புதிதாக அறிவிப்பு

புதுடெல்லி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றும் புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

டெல்லி நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் வரும் 22-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிபதி சதீஸ் குமார் அரோரா உத்தரவிட்டார்

 

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.

இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தண்டனையை வரும் 22-ம் தேதி நிறைவேற்றாமல் ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா முன் இன்று விசாரிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது வாதிடுகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். ஆதலால், தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை அறிவிக்கக் கோரினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் அரோரா, பிறப்பித்த உத்தரவில், " வரும் 22-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அந்தத் தேதி மாற்றப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என அறிவித்தார்.

 

 

https://www.hindutamil.in/news/india/535291-nirbhaya-case-delhi-court-issues-fresh-death-warrants-against-4-convicts-for-feb-1-6-am-2.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நிர்பயா வல்லுறவு நடந்தபோது நான் சிறுவன்" - பவன் குப்தா வாதத்தை நிராகரித்த நீதிமன்றம்

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியான பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குற்றம் செய்த காலத்தில் தனக்கு 18க்கும் குறைவான வயதே ஆனதாக பவன் குமார் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) நடந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குற்றம் நடந்த சமயத்தில் பவன் குப்தாவின் வயது 19 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான டிசம்பர் 2012ல் தமக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி, பவன் குப்தா சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

முன்னதாக, இதே கருத்தை முன்வைத்து பவன் குப்தா தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்திருத்தது.

அடுத்தது என்ன?

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடிபடத்தின் காப்புரிமை Delhi Police

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 17ஆம் தேதி நிராகரித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள மூன்று பேரும் அல்லது மூவரில் ஒருவர் பிப்ரவரி 1ம் தேதிக்குள் கருணை மனு தாக்கல் செய்தால் தூக்கிலிடுவதற்கான தேதி மீண்டும் மாறலாம்.

https://www.bbc.com/tamil/india-51175838

  • கருத்துக்கள உறவுகள்

Court-4.jpg

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியன உறுதி செய்தன.

அதற்கமைய குற்றவாளிகள் 4 பேரையும் பெப்ரவரி 1 ஆம் திகதி காலை 6 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என விசாரணை நீதிமன்றம் மரண உத்தரவு பிறப்பித்தது.

அங்கு நீதிபதியாக இருந்த சதீஷ்குமார் அரோரா இந்த தீர்ப்பை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த உத்தரவை பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

http://athavannews.com/நிர்பயா-வழக்கின்-குற்றவா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் குமார் குடியுரசு தலைவரிடம் கருணை மனுத் தாக்கல்

புதுடெல்லி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் குமார் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குற்றவாளியின் வினய் குமார் வழக்கறிஞர் ஏ.பி. சிங், குடியுரசு தலைவர் மாளிகையில் கருணை மனுவைத் தாக்கல் செய்து, அதற்குரிய தாக்கல் கடிதத்தையும் பெற்றுள்ளார்.

 

மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்த நிலையில் அதைக் கடந்த 17-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு நிராகரிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் முகேஷ் சிங்கிற்கான அனைத்து சட்டக் கதவுகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யாமல் இருந்த வினய் குமார் இப்போது தாக்கல் செய்துள்ளார்.

1580310326756.jpg

இதில் குற்றவாளிகள் வினய் குமார், முகேஷ் குமார் சிங் ஆகியோர் ஏற்கெனவே தங்களின் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்றொரு குற்றவாளியான அக்சய் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளிகள் நான்கு பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

குற்றவாளியான அக்சய் குமார் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இன்னும் தண்டனை நிறைவேற்ற இருநாட்களே இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு குற்றவாளி வினய் குமார் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதுகுறித்து குற்றவாளி வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், " குடியரசுத் தலைவரிடம் வினய் குமார் சார்பில் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறேன். கடிதம் பெறப்பட்டதற்கான சான்றும் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/india/537171-nirbhaya-case-another-death-row-convict-vinay-moves-mercy-plea-before-president-2.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்...ஒரு பெண்ணை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து விட்டு தப்பிக்க எவ்வளவு பாடு படுகிறார்கள் :39_angry:

 

1 hour ago, ரதி said:

இவர்களுக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்...ஒரு பெண்ணை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து விட்டு தப்பிக்க எவ்வளவு பாடு படுகிறார்கள் :39_angry:

 

ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொல்வது ஒரு தவறே இல்லை எனும் மனநிலைதான் இவற்றுக்கான அடிப்படை.

ஒரு பெண் விரும்பாவிட்டால் கணவனை விட்டு பிரிந்து போக சட்ட ரீதியிலும் தார்மீக ரீதியிலும் உரிமையுள்ளவள் என்பதை ஏற்காமல் அவள் கொல்லப்படுவதை ஏற்கும் மனனிலையும் இதைப் போன்றது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை

  •  
பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி (நாளை) தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், "குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்படாது என்று என்னிடம் சவால் விடுகிறார். நான் தொடர்ந்து போராடுவேன். அரசாங்கம் இந்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

டுவிட்டர் இவரது பதிவு @ANI: Asha Devi, mother of the 2012 Delhi gang-rape victim  The lawyer of the convicts, AP Singh has challenged me saying that the convicts will never be executed. I will continue my fight. The government will have to execute the convicts.புகைப்பட காப்புரிமை @ANI @ANI <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @ANI: Asha Devi, mother of the 2012 Delhi gang-rape victim The lawyer of the convicts, AP Singh has challenged me saying that the convicts will never be executed. I will continue my fight. The government will have to execute the convicts. " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/ANI/status/1223218898478092288~/tamil/india-51326722" width="465" height="505"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @ANI</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@ANI</span> </span> </figure>

முன்னதாக பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்களை தூக்கிலிட தடை கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பவன் குப்தாபடத்தின் காப்புரிமை other Image caption பவன் குப்தா

வினய் மற்றும் அக்ஷய் குமாரின் மறுசீராய்வு மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நடந்தபோது, தான் மைனராக இருந்ததாக குறிப்பிட்ட பவன் குப்தா, தன்னை தூக்கிலட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார்.

இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் மொத்தம் நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் மற்றும் முகேஷ் குமார்.

இதில் முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 17ஆம் தேதி நிராகரித்தார்.

அதனை தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட ஆணை பிறப்பித்தது விசாரணை நீதிமன்றம்.

நிர்பயா வழக்கின் பின்னணி என்ன?

2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

nirbhaya caseபடத்தின் காப்புரிமை Getty Images Image caption நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலையால் இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தன.

மறுநாளான டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் குமார் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-51326722

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎29‎/‎2020 at 8:23 PM, நிழலி said:

ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொல்வது ஒரு தவறே இல்லை எனும் மனநிலைதான் இவற்றுக்கான அடிப்படை.

ஒரு பெண் விரும்பாவிட்டால் கணவனை விட்டு பிரிந்து போக சட்ட ரீதியிலும் தார்மீக ரீதியிலும் உரிமையுள்ளவள் என்பதை ஏற்காமல் அவள் கொல்லப்படுவதை ஏற்கும் மனனிலையும் இதைப் போன்றது தான்.

உண்மை..தற்போது இப்படியான மனநிலை இலங்கையிலும் பரவி வருகுது...அண்மையில் ஒருவர் கிளிநொச்சியில் மனிசியை வெட்டிப் போட்டு அவ பொட்டு வைக்கிறதில்லை ,தாலி போடுறதில்லை போன்ற ...காரணங்களை சொல்லி வீடியோ வெளியிட்டு  இருந்தார் ...அவரை விட  அவர் செய்தது சரி என்று சொல்லி கண ஆண்கள் அவருக்கு சப்போட் பண்ணி இருந்தார்கள் ...பிடிக்காட்டில் விட்டுட்டு போய் இருக்கலாம் என்று சொல்லாமல் அவர் செய்தது சரி என்றும் சொல்லும் பலர் இருக்கும்கேடு கெட்ட  சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் போது பயமாயிருக்கின்றது 
 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு

வினய்சர்மா (கோப்புப்படம்)

நிர்பயா கூட்டுப் பாலுறவு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இன்று (பிப்ரவரி 1) நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று தடை விதித்த நிலையில் தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வினய் சர்மா தாக்கல் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்துள்ளார். 

தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கு

முன்னதாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

நிர்பயா வழக்கின் பின்னணி என்ன?

2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

மறுநாளான டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் குமார் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலையால் இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தன.Getty Images நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொலையால் இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடந்தன.

முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 

https://www.bbc.com/tamil/india-51338344

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்பயா பாலியல் வல்லுறவு: 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிடும் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, நாளை (செவ்வாய்க்கிழமை) மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு இவர்கள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது முறையாக நீதிமன்றம் தேதி நிர்ணயித்திருந்தது.

ஆனால், இவர்களில் நான்காவது குற்றவாளியான பவன்குப்தா சார்பில் தற்போது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைக் காரணம் காட்டி, விசாரணை நீதிமன்றமான பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் நால்வரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஒத்திவைக்கவேண்டும் என்று பவன் குப்தா சார்பு வழக்குரைஞர் ஏ.கே.சிங் இன்று தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மற்ற முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் தாக்கூர் ஆகிய மூவரும் ஒவ்வொருவராக கருணை மனுவும், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்தனர்.

இதன் காரணமாக, ஏற்கெனவே தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இரண்டு தேதிகளும், பிறகு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டன. பிற மூவரும் தங்கள் சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி முடித்துவிட்ட நிலையில், இப்போது தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதிக்கு முன்பாக பவன் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது முன்பே சட்ட வல்லுநர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

பாட்டியாலா இல்ல நீதிமன்றம்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption பாட்டியாலா இல்ல நீதிமன்றம்.

இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, ஏன் முன்பே நீங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று பவன் குப்தாவின் வழக்குரைஞரை கடிந்துகொண்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்தி வைத்தார் அவர். எனவே இன்னும் சிறிது நேரத்தில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மீண்டும் தூக்குத் தண்டனை விதிப்பதற்கான தேதி ஒத்திவைக்கப்படுமா என்பது தெரியவரும்.

நான்கு குற்றவாளிகளுக்கும் ஒன்றாகவே தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கு

2012ம் ஆண்டு டெல்லியில் இரவு நேரத்தில் தம் ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் ஏறிய இளம்பெண் அந்தப் பேருந்தில் இருந்த நால்வரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கு இந்தியத் தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

https://www.bbc.com/tamil/india-51705104

  • கருத்துக்கள உறவுகள்

Nirbhaya-case-Delhi-court-defers-hanging-of-4-death.jpg

நிர்பயா கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடும் திகதி மீண்டும் ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை நாளை காலை தூக்கிலிடுவதற்காக செய்யப்பட்டுவந்த ஏற்பாடுகள் டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதியின் உத்தரவையடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த 4 குற்றவாளிகளையும் மார்ச் 3ஆம் திகதி (நாளை) தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

சிறார் சட்டப் பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறிவரும் குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில் தற்போது கடைசி சட்ட வாய்ப்பான மறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

இந்நிலையில், தன்னை தூக்கிலிடக்கூடாது என பவன் குமார் குப்தா சார்பில் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று பிற்பகல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா இன்று மாலை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவின் மீது ஜனாதிபதி மாளிகை இன்னும் எந்த முடிவும் எடுக்காததால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிடும் நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

http://athavannews.com/நிர்பயா-கொலைக்-குற்றவாள-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.