Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்

Featured Replies

நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும் வைத்த காட்சிகள் படத்தின் ஒரு பலம். 

மறுபுறம் காதல், உணர்வுபூர்வமான காட்சிகளும் ஏராளம் உண்டு; குறிப்பாக கௌதம் மேனனின் படத்திற்கான auditionக்காக ஹீரோ அஷோக்செல்வன் நடித்துக் காட்டுவதாக அமைந்த ஒரு close-up காட்சி படக்காட்சியில் மட்டுமல்ல தியேட்டரிலும் கைதட்டல் வாங்குகிறது. இன்னும், மழையில் நனைந்தபடியான காதல் காட்சிகள் அவ்வப்போது வந்தாலும், ஒவ்வொன்றும் இயற்கைக் கவிதை!

படத்தின் வலுவான கதைக்கு, அதைச் சொன்ன விதம் மேலும் வலுச்சேர்க்கிறது. 12B திரைப்படப் பாணியிலான இரு வேறு தேர்வுகளை எடுத்திருந்தால் வரும் விளைவுகளை நேர்த்தியான காட்சிகளால் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். (12B க்கும் இப்படத்துக்கும் கதையளவில் தொடர்பு இல்லை.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட கற்பனையில் வரும் காட்சிகள் தான் இப்படத்தின் போக்கில் திருப்புமுனையாக அமைந்தாலும், உண்மையிலேயே புதுமையாகவும், கதைக்கு இக்காட்சிகள் தேவை என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படி அமைத்ததும் இயக்குனரின் வெற்றியே. இரு வேறு கோணங்களில் உணர்வோட்டங்களைக் காட்சிப்படுத்திய விதம் காதலர்களுக்கு / இளைய தம்பதிகளுக்கு ஓர் செய்முறை விளக்கம் போன்றது. ரசிக மனங்களை மெதுவாகத் தைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் - முள்ளினால் அல்ல, வெட்டுக் காயத்தை மாற்றத் தையல் போடுவது போன்ற பக்குவத்துடன்!

படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். 

ஒரு கதாநாயகி ரித்திகாசிங்கின் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருந்தேன். இப்படத்திலும் அவருக்கு வலுவான பாத்திரம்; இங்கும் கலக்கியிருக்கிறார். அவரது முகவெட்டும், கண்களும் உணர்வுகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தப் பெரிதும் பலம். நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு கதாநாயகி தான்! துணிச்சலான, புத்திசாலியான, நகர்ப்புற நாயகி வேடங்களுக்கு இயல்பாகப் பொருந்துகிறார்.

இன்னொரு கதாநாயகி வாணி போஜன் தொலைக்காட்சி நாடக நடிகையாம்; ஆனால் அவரது இயல்பான நடிப்பு மனதைக் கவர்ந்தது.
ரித்திகா சிங்கிற்கு இணையாகக் கலக்கியுள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் அக்கா, தங்கை வேடம் கொடுக்காமல் இருந்தால் சரி!

இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் சேதுபதியின் நீண்ட cameo role அமைந்தது. திலக்குடன் சேர்ந்து அஷோக்செல்வனைக் கேள்விகேட்டுக் கலாய்க்கும் காட்சிகள் கலகலப்பானவை. மற்றும்படி அவருக்கு இப்படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.

எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர வேடத்திலும், ஷா ரா வழமையான திருட்டு முழிகளுடன் நகைச்சுவை வேடத்திலும் ஜொலிக்கின்றனர்.

இசை: மென்மையான காதல் கதைக்கு ஏற்ற ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னணி இசை meditation music கேட்கும் ஒரு உணர்வைத் தருகிறது. கூடவே, அவ்வப்போது வரும் திகிலான காட்சிகளில் நம்முள்ளும் திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையின் ஓட்டத்துடன் ஒட்டும் வகையில் பாடற்காட்சிகள் அமைந்துள்ளன. சித் ஶ்ரீராமின் பாடல்கள் பொதுவாக அவரது ‘ ஐ ‘ படப் பாடலான ‘என்னோடு நீயிருந்தால்’ பாடற்காட்சியில் விக்ரம் beast ஆக வருவதை நினைவுபடுத்தித் தொலைக்கும். அதனால் அக்குரல் மீது ஒருவித வெறுப்பு இருந்தது. ஆனால், இப்படத்தில் இவ்வாறு தோன்றாது சகிக்கும்படியாக இருந்தது நிம்மதியாக இருந்தது!

சுருக்கமாகக் கூறினால் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் காதலர் தின விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பது நிச்சயம். 
இங்கே முழுக்கதையையும் எழுதிப் படம் பார்க்கும் அனுபவத்தை நான் குழப்பவிரும்பவில்லை. பார்த்தால் புரியும் - பல்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்கலாம்; அந்த அளவுக்கு இப்படத்தின் கதையில் நிறைய ‘layers’ உண்டு.

நகர்ப்புற ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய படம், சற்றே இழுவலான நிறைவுப்பகுதி  ஆகியவற்றை இத்திரைப்படத்தின் குறைகளாகச் சொல்லலாம்.

இவ்வாறான தரமான காதல் படங்கள் தற்காலத்தில் அபூர்வம், உண்மைக் காதலைப் போலத் தான்! எனவே, இப்படம் காதலர்களை/பிரிந்த தம்பதிகளை மனம் மாறச் செய்து மீண்டும் சேர வைக்குமா என்ற கேள்விக்கு ‘ இது அவர்களுடைய காதலின் உண்மைத் தன்மையைப் பொறுத்தது; படம் பற்றிய அவர்களின் புரிதலையும் பொறுத்தது. இன்னும் அவர்கள் பார்க்கவிருக்கும் குப்பைப்படங்களை, ரிவி சீரியல்களையும் பொறுத்தது ‘ என்பதே எனது கருத்தாகும்! 

இப்படியொரு படம் இனி எப்ப வரும்? ஓ மை கடவுளே! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமர்சனத்திற்காகவே படம் பார்க்கவேண்டும் போலுள்ளது. 

நன்றி மல்லிகைவாசம்🙏🏿

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்கள் திரை விமர்சனங்களை யாழில் பார்ப்பதில் மகிழ்ச்சி , நன்றி , படத்தை பார்க்க முற்சிப்பேன்.

  • தொடங்கியவர்
17 hours ago, கிருபன் said:

இந்த விமர்சனத்திற்காகவே படம் பார்க்கவேண்டும் போலுள்ளது. 

நன்றி மல்லிகைவாசம்🙏🏿

 கருத்துக்கு நன்றி கிருபன். பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் பதியுங்கள். 🙂

  • தொடங்கியவர்
6 hours ago, vasee said:

மீண்டும் உங்கள் திரை விமர்சனங்களை யாழில் பார்ப்பதில் மகிழ்ச்சி , நன்றி , படத்தை பார்க்க முற்சிப்பேன்.

படத்தைப் பார்த்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. கருத்துக்கு நன்றி அண்ணா. நேரம் கிடைத்தால் பாருங்கள். மனதுக்கு இனிய படம் ஒன்று. அடிதடி, கருத்துக்கூறி அறுத்தல் இவை எதுவுமே இதில் இல்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மல்லிகை வாசம் said:

நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு

பார்க்கத் தூண்டும் நல்லதொரு விமர்சனம். அசோக்செல்வனின் சகோதரி தயாரித்த படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார்கள். நானும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

மல்லிகை வாசம் நன்றாக வீசுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படம். உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு, Google இல் தேடினால் Hindi Oh my good Netflix இல் வந்துச்சு,  அதையும் பார்த்தேன், அதுவும் நல்லதொரு படம்.

Hindi இல் God Krishna, தமிழில் Love God, ஆனால் கதை வேறு 

தமிழ் படத்தை  TamilYogi இல் பார்க்கலாம், Cookies அதிகம்

 

 

Quote "படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். " 

நன்றாக நடித்துள்ளார், 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே, பார்க்கலாம்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் ,நன்றி  பட விமர்சனத்துக்கு. படத்தை பார்த்து விட வேண்டியது தான். 

  • கருத்துக்கள உறவுகள்

அசோக் செல்வன் முதல் படத்தில் நல்ல அழகனாய் இருந்தார்🥰...பிறகு ஓர் ,இரு படங்களில் உடம்பு வைத்து விட்டு இருந்தது...நல்ல நடிகர் ...முக ,பாவம் எல்லாம் அற்புதம் ...அவருக்காய் இந்த படத்தை கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் 
 

  • தொடங்கியவர்
18 hours ago, Kavi arunasalam said:

அசோக்செல்வனின் சகோதரி தயாரித்த படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார்கள். நானும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

அப்படியா? நீங்கள் சொல்லித் தான் அறிகின்றேன் ஐயா. ம்... ஒவ்வொரு காட்சியையும் நன்றாகச் செதுக்கியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது உணர்ந்தேன்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா. 🙂

17 hours ago, உடையார் said:

நல்லதொரு படம். உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு, Google இல் தேடினால் Hindi Oh my good Netflix இல் வந்துச்சு,  அதையும் பார்த்தேன், அதுவும் நல்லதொரு படம்.

Hindi இல் God Krishna

அக்ஷய் குமார், மிதுன், ஓம் பூரி நடித்த படமா? கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். தமிழ் டப்பிங் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி உடையார். 🙂

  • தொடங்கியவர்
17 hours ago, உடையார் said:

தமிழ் படத்தை  TamilYogi இல் பார்க்கலாம், Cookies அதிகம்

ஆஹா அதற்குள் அங்கும் வந்துவிட்டதா! 🤔😀

10 hours ago, suvy said:

உங்களின் விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே, பார்க்கலாம்.......!   👍

நன்றி சுவி அண்ணா. கண்டிப்பாகப் பாருங்கள். ஏமாற்றாது. 🙂

8 hours ago, nunavilan said:

மல்லிகை வாசம் ,நன்றி  பட விமர்சனத்துக்கு. படத்தை பார்த்து விட வேண்டியது தான். 

நன்றி நுணாவிலான். 🙂

  • தொடங்கியவர்
3 hours ago, ரதி said:

அசோக் செல்வன் முதல் படத்தில் நல்ல அழகனாய் இருந்தார்🥰...பிறகு ஓர் ,இரு படங்களில் உடம்பு வைத்து விட்டு இருந்தது...நல்ல நடிகர் ...முக ,பாவம் எல்லாம் அற்புதம் ...அவருக்காய் இந்த படத்தை கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் 
 

எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ரித்திகா சிங், வாணி போஜனுடன் வரும் காட்சிகளில் இன்னும் அசத்தலாகத் தெரிகிறார். நானும் தியேட்டரில் தான் பார்த்தேன் ரதி. 

கருத்துக்கு நன்றி ரதி. 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.