Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில இடங்களில் நடக்கலாம் அதுக்காக எல்லாரும் குடிக்கிறமாதிரி சொல்லுறியள். நாம் போகும் இடங்களில் இன்னும் அந்த அளவுக்கு இல்லை. எமது ஊரவர் உறவினர் உட்பட. விடிய எழும்பி ஒரு பால்கோப்பி குடிச்சால்தான் நின்மதியா இருக்கும்.

அக்கா... நீங்கள் இன்னும் ஊர் தான்...

சில எடுப்பு காரர் இருக்கினம். பொதுவாக கொழும்பு தண்ணி குடிச்ச ஆக்கள். அங்க பாட்டிக்கு போன.... எடுப்போ, எடுப்பு தான்....

பிரீஜ்ட் கான்வென்ட்ல நான் படிக்கேக்க எண்டு கையில கிளாஸோட இங்கிலீசில தொடங்கினா..... நமக்கு பயங்கர மப்பு என்று நடிச்சு தான் ஆளை விலத்தி அங்கலா போக வேணும்.

கூப்பிடா போறது.... வடிவான பெட்டையாள் வருவினம். அதுகள் குறை சொல்லக்கூடாது. உந்த ஆன்டி மார் மாதிரி தண்ணி அடிக்க மாட்டுதுக்கள்.

புதுசா அங்க இருந்து வருகை ஆட்களை, உதுகள் 'fresi' என்று தங்களுக்கில சொல்லிக் கொள்ளுவினம். 
 
  • Replies 405
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அக்கா... நீங்கள் இன்னும் ஊர் தான்...

சில எடுப்பு காரர் இருக்கினம். பொதுவாக கொழும்பு தண்ணி குடிச்ச ஆக்கள். அங்க பாட்டிக்கு போன.... எடுப்போ, எடுப்பு தான்....

பிரீஜ்ட் கான்வென்ட்ல நான் படிக்கேக்க எண்டு கையில கிளாஸோட இங்கிலீசில தொடங்கினா..... நமக்கு பயங்கர மப்பு என்று நடிச்சு தான் ஆளை விலத்தி அங்கலா போக வேணும்.

கூப்பிடா போறது.... வடிவான பெட்டையாள் வருவினம். அதுகள் குறை சொல்லக்கூடாது. உந்த ஆன்டி மார் மாதிரி தண்ணி அடிக்க மாட்டுதுக்கள்.

புதுசா அங்க இருந்து வருகை ஆட்களை, உதுகள் 'fresi' என்று தங்களுக்கில சொல்லிக் கொள்ளுவினம். 
 
உப்பிடியான கோஸ்டியள் எங்கள் வட்டத்தில் இல்லை. இன்னும் ஊர் வாசத்தோட இருக்கிறதால எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடியான கோஸ்டியள் எங்கள் வட்டத்தில் இல்லை. இன்னும் ஊர் வாசத்தோட இருக்கிறதால எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

இருக்குது எண்டு தெரிந்து கொண்டால் கலியாண பேச்சுக்கால் எண்டு சம்பந்தக் குடியார் வரேக்கில கவனமா இருப்பியள் தானே. 🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

கூப்பிடா போறது.... வடிவான பெட்டையாள் வருவினம். அதுகள் குறை சொல்லக்கூடாது. உந்த ஆன்டி மார் மாதிரி தண்ணி அடிக்க மாட்டுதுக்கள்.

கூப்பிட்டால் போறது .... வடிவான பெட்டையள் வாறது என்பதால் ??? நல்ல கதைதான் உந்த வயதில்  😃

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வடிவான பெட்டையள் வாறது என்பதால் கூப்பிட்டால் போறதா ??? நல்ல கதைதான் உந்த வயதில்  😃

எந்த வயதில்? என்ன கதை இது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இருக்குது எண்டு தெரிந்து கொண்டால் கலியாண பேச்சுக்கால் எண்டு சம்பந்தக் குடியார் வரேக்கில கவனமா இருப்பியள் தானே. 🤨

கலியாணப் பேச்சு நடக்கும்போது அப்படியான விடயங்கள் எல்லாம் தெரிய வரும் என்று இல்லை. ஓரளவுக்குத்தான் விசாரிக்க முடியும்

11 minutes ago, Nathamuni said:

எந்த வயதில்? என்ன கதை இது? 

பகிடிக்குத்தான் சீரியஸா எடுக்கவேண்டாம் 😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கலியாணப் பேச்சு நடக்கும்போது அப்படியான விடயங்கள் எல்லாம் தெரிய வரும் என்று இல்லை. ஓரளவுக்குத்தான் விசாரிக்க முடியும்

பகிடிக்குத்தான் சீரியஸா எடுக்கவேண்டாம் 😀

ஒண்டு தூண்டிலோட நாண்டு கொண்டு நிக்குது.... நீங்க ஒரு பக்கம்..😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமண சேவைகள் 2

அது இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு திருமண சேவை. 100 பவுண்ட்ஸ் கட்டி எமது விபரங்களை எல்லாம் கொடுத்து பதிந்தபின்னர் சிஸ்டம் மணமக்கள் விபரங்களைப் பார்க்க அனுமதிக்கும். அதன் பின்னர் ஒருவாறு களைந்து ஒரு மணமகனைத் தெரிவு செய்து மகளிடமும் மணமகனின் படிப்பு, தொழில் எல்லாம் கூறி அவ சரி கதையுங்கோ என்றதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டினரின் தொடர்பு இலக்கம் கேட்டால் நீங்கள் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக எமக்கு அனுப்பி வைக்கவேண்டும். அப்போதுதான் தொடர்பு இலக்கம் தரலாம் என்றனர்.

இதை நீங்கள் ஏன் ஆரம்பத்தில் கூறவில்லை என்றதற்கு சொறி நான் கூற மறந்துவிட்டேன் என்றனர். நீங்கள் எம்மை ஏமாற்றுகின்றீர்கள். நான் பணம் காட்டியுள்ளேன். ஒரு தொலைபேசி இலக்கம் கூடத் தராமல் உங்களை நம்பி எப்படி நாம் அத்தனை பணத்தைத் தருவது என்றனர். நாம் இன்னும் இந்தத் திருமணத்தை முற்றாக்கித் திருமணம் நடத்தவில்லை. பேசிப் பார்க்கும்போது சரி வரலாம் அல்லது வராது போகலாம். நீங்கள் தொலைபேசி இலக்கம்  தரவேண்டும் என்று எத்தனை தூரம் கூறியும் தரவில்லை.

சரி எமக்கு வேண்டாம். எமது பணத்தைத் திரும்பத் தாருங்கள் என்றதற்கு உங்கள் பெயர்களைப் பதிவதற்குத்தான் அந்தப் பணம். ஏற்கனவே நாங்கள் பதிந்துதானே இருக்கிறோம். அதனால் தரமுடியாது என்று கூற, கண்டபடி திட்டிவிட்டு வைத்துவிட்டேன். எமது பெயரை அவர்கள் இணையத்திலிருந்து எடுத்துவிடுமாறு மிரட்டிக் கூறியபின்னர் தான் எடுத்தனர்.

பின்னர் கேள்விப்பட்டேன் நிறையப்பேர் ஒரு லட்சம் குடுத்து  மணமக்கள் தேடியுள்ளனர் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2020 at 10:21 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

80 % முடிவு என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள் வசீ ???

அனைத்து முடிவுகளிலும், இதனை கூட்ட மன நிலை என்பார்கள். மனிதன் மிருகங்கள் போல காட்டினில் வாழ்ந்த காலத்தில் மிருகங்கள் எவ்வாறு பாதுகாப்பு கருதி கூட்டம் கூட்டமாக வாழ்ந்ததோ அதே போல் மனிதர்களும் வாழ்ந்தார்கள் அது இன்றுவரை தொடர்கிறது, ஆட்டு மந்தையில் முன்னால் செல்லும் ஆட்டிற்கு முன்னே தடியினை நீட்டினால் முன்னால் செல்லும் ஆடு பாய்ந்து அதனை கடந்து செல்லும் , ஆனால் தடியினை எடுத்து விட்டாலும் பின்னால் வரும் ஆடுகள் அந்த இடத்தில் பாய்ந்து செல்லும், இதனை உளவியலில் வேகமாக சிந்தித்தல் என்பார்கள்(இதனுள் மூட நம்பிக்கைகள் அடங்கும்). சாதரணமாக பொருள் வாங்குதல் , வீடு வாகனம் வாங்குதல் மற்றும் பிள்ளைகளின் பிறந்த தின கொண்டாட்டம் என்று அனைத்து விடயங்களிலும் நாம் சார்ந்த சமூக முடிவுகளாக இருக்கும் (எனது முடுவுகளும் உட்பட), 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎13‎/‎2020 at 11:21 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒவ்வொருநாளும் எழுதிக்கொண்டுதானே இருக்கிறன். ஒரு அரை நாள் எழுத்தாட்டில் ஆளை மறக்கிறதே 😃

ஆனால் ரதி சிலர் அங்குபிறந்த ஆண்களைக் கட்டி மகிழ்வாயும் வாழுகின்றனர் தானே??

எதைப்பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

80 % முடிவு என்று இதைக் குறிப்பிடுகிறீர்கள் வசீ ???

என்ன தான் படிச்ச ஆண்  என்றாலும் இங்கே வரேக்குள்ள பெண் ஏற்கனவே தன்னை இங்கு ஸ்திரப்படுத்தி இருக்கும் போது ,அவ தான் எல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் போது அதை பெரும்பாலான ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை...முதலாவது காரணம் இது அதன்பிறகு தான் பெண் பப்க்கு போறதா ,,குடிக்கிறவவா,அவட பிரண்ஸ் என்ன மாதிரி ,  பழக்க வழக்கங்கள் ....போன்ற காரணங்கள் வரும்...நீங்கள் சொன்ன மாதிரி சில விதி விலக்குகளும் இருக்கினம் சுமோ  

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 11:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இலங்கையில் இருந்து போன் வருகிறது

நான் : காலோ

அவ : கலோ
 
நான் : யார் கதைக்கிறீங்கள்

அவ : நான் கிளிநொச்சியிலிருந்து கதைக்கிறன்.

நான் : என்ன விஷயமா கதைக்க எடுத்தனீங்கள் ??

அவ : எனக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

நான் : எங்க லண்டனிலையா ?

அவ : இல்ல இங்கதான் இருக்கிறார். அவருக்கு லண்டன் வர விருப்பம்.

நான் : சரி அதுக்கு நான் என்ன செய்ய ?

அவ : உங்கட மகளா நீங்கள் கலியாணம் பேசிறது ??

நான் : ஓம். ஆர் உங்களுக்குச் சொன்னது ?

அவ : எனக்கு ஒரு ஐயா தந்தவர். அதுதான் உங்களோட கதைக்கிறன்.

நான் : உங்கட தம்பி என்ன படிச்சவர் ?

அவ : A L தான் படிச்சவர். நீங்கள் சரி எண்டு உங்கட மகள் இங்க வந்து ரெஜிஸ்டர் பண்ணி உங்க கூப்பிட்டா அவர் பிறகு படிப்பார்.

வந்த கோபத்தைஅடக்கிக்கொண்டு

நான் : நாங்கள் யேர்மனியில அல்லது லண்டனில பிறந்த  மாப்பிளைதான் பார்க்கிறம்.

அவ : அவர் சரியான கெட்டிக்காரன்.

நான் போனை வைத்துவிட்டேன்.

உங்கள் கோபம் புரிகிறது.... ஆனாலும், வசதி இல்லாத அங்குள்ள சிலர் வெளியே வர முயல்கின்றனர். அதற்க்கான சந்தர்ப்பமாக இதனை கருதியிருக்கலாம். 

ஆகவே, கோபப்படாமல், நாசூக்காக சொல்லிவிட்டு நகருங்கள்.

இங்குள்ள பிள்ளைகளுக்கு, கனடா, ஆஸி தான் சரியாக இருக்கு என்பது என்கருத்து.

வல்வை சகாரா அக்காவிடம் பேசினாலோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

அனைத்து முடிவுகளிலும், இதனை கூட்ட மன நிலை என்பார்கள். மனிதன் மிருகங்கள் போல காட்டினில் வாழ்ந்த காலத்தில் மிருகங்கள் எவ்வாறு பாதுகாப்பு கருதி கூட்டம் கூட்டமாக வாழ்ந்ததோ அதே போல் மனிதர்களும் வாழ்ந்தார்கள் அது இன்றுவரை தொடர்கிறது, ஆட்டு மந்தையில் முன்னால் செல்லும் ஆட்டிற்கு முன்னே தடியினை நீட்டினால் முன்னால் செல்லும் ஆடு பாய்ந்து அதனை கடந்து செல்லும் , ஆனால் தடியினை எடுத்து விட்டாலும் பின்னால் வரும் ஆடுகள் அந்த இடத்தில் பாய்ந்து செல்லும், இதனை உளவியலில் வேகமாக சிந்தித்தல் என்பார்கள்(இதனுள் மூட நம்பிக்கைகள் அடங்கும்). சாதரணமாக பொருள் வாங்குதல் , வீடு வாகனம் வாங்குதல் மற்றும் பிள்ளைகளின் பிறந்த தின கொண்டாட்டம் என்று அனைத்து விடயங்களிலும் நாம் சார்ந்த சமூக முடிவுகளாக இருக்கும் (எனது முடுவுகளும் உட்பட), 

நாம் அந்த சமூகத்தில் பிறந்து அதிலேயே வளர்ந்ததனால் எம்மால் நினைத்தவுடன் அச் சமூகத்திலிருந்து வெளியே வர முடியாது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் பிள்ளைகளில் பிள்ளைகள் அந்நிலையிலிருந்து மாறுவது நிகழலாம். ஆனால் தாயகத்தின் நிலை அப்படியேதான் இருக்கும்.

2 hours ago, ரதி said:

என்ன தான் படிச்ச ஆண்  என்றாலும் இங்கே வரேக்குள்ள பெண் ஏற்கனவே தன்னை இங்கு ஸ்திரப்படுத்தி இருக்கும் போது ,அவ தான் எல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்னும் போது அதை பெரும்பாலான ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை...முதலாவது காரணம் இது அதன்பிறகு தான் பெண் பப்க்கு போறதா ,,குடிக்கிறவவா,அவட பிரண்ஸ் என்ன மாதிரி ,  பழக்க வழக்கங்கள் ....போன்ற காரணங்கள் வரும்...நீங்கள் சொன்ன மாதிரி சில விதி விலக்குகளும் இருக்கினம் சுமோ  

எதை பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத எதையும் மிகச் சாதாரணமாக எடுக்கும், பெண்களை மதிக்கும்  ஆண்கள் பெரும்பாலும் சமாளித்துக்கொண்டு போவார்கள். பெண் தன்னை மிஞ்சக் கூடாது என்னும் கொள்கையுடையவர்களால் தான் பிரச்சனையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்கள் கோபம் புரிகிறது.... ஆனாலும், வசதி இல்லாத அங்குள்ள சிலர் வெளியே வர முயல்கின்றனர். அதற்க்கான சந்தர்ப்பமாக இதனை கருதியிருக்கலாம். 

ஆகவே, கோபப்படாமல், நாசூக்காக சொல்லிவிட்டு நகருங்கள்.

இங்குள்ள பிள்ளைகளுக்கு, கனடா, ஆஸி தான் சரியாக இருக்கு என்பது என்கருத்து.

வல்வை சகாரா அக்காவிடம் பேசினாலோ?

விளம்பரத்தில் கல்வித்தகுதி MA உடைய இங்கு பிறந்த என்று கூறிய பிறகும் இப்படிக்கு கேட்டால் கோபத்தை எப்படி அடக்குவது ???
கனடாவோ அவுசோ போக அவர்களும் சம்மதிக்கவல்லா வேணும். அவ்விரு நாடுகளும் அவர்களுக்கு அந்நிய நாடுபோல்த்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விளம்பரத்தில் கல்வித்தகுதி MA உடைய இங்கு பிறந்த என்று கூறிய பிறகும் இப்படிக்கு கேட்டால் கோபத்தை எப்படி அடக்குவது ???
கனடாவோ அவுசோ போக அவர்களும் சம்மதிக்கவல்லா வேணும். அவ்விரு நாடுகளும் அவர்களுக்கு அந்நிய நாடுபோல்த்தான்.

MA என்று பொய் சொல்லி, கடைசியில் A/L தான் எண்டால் கோபம் வரும் தான்.... புறோக்கர் ஐயாவின் வேலையோ?

***

நீங்கள் மட்டும் அம்மா, அப்பாவை விட்டுட்டு ஜெர்மனிக்கு, உடனடியாக  திரும்பி போகமுடியாது என்ற நிலைமையில்.... வரலாம்.... 

உங்கண்ட பிள்ளையள் மட்டும், நினச்சோன்ன வரக்கூடிய இடத்துக்கு, போக ஏலாது... 

சுமே அக்காவின் அப்பா அம்மா பாவம்.... என்ன?

எந்த ஊரு நியாயம்?

அரைக்காசுக்கு குதிரையும் வேணும், ஆறு கடக்கவும் வேணும் எண்டால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மூத்த மகள் திருமணம் முடித்து அடுத்த மாநிலத்தில் இருக்கிறா.    இப்ப கொரோன சங்கதியால இளைய மகளின் பல்கலை லீவு விட , மகள் அங்க தனிய, சின்னனையும் கூட்டிக் கொண்டு நான் அங்க போகப் போறன், நீங்கள் சமாளிப்பியல் தானே எண்டு மனுஷி கேக்கிறா .

நான் கேட்டேன் , எனக்கு கொரோன பிடிச்சால் யார் என்னைப் பாக்கிறது எண்டு.    எல்லாரிலயும் பார்க்க எனக்கு தானே வயது கூட , நான் தானே ரிஸ்க் கூடிய க்ரூப் என்டு சொல்ல ஆள் பேந்த பேந்த முழிக்கிது ..🤔

பெத்த மனம் தான் பித்து
கட்டிய மனம் கல்லு தான் …

உள்ளூரிலேயே ( rather  உள் நாட்டிலேயே )   கட்டிக்   கொடுப்பதில் இருக்கக் கூடிய சங்கதிகளில் சில ….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14 hours ago, Nathamuni said:

அம்மாவும் அப்பாவும் இப்போ உயிருடன் இல்லை என்பது கவலையையும் மீறி ஒரு விதத்தில் நின்மதி. நாம் இங்கு வந்தவுடன் அம்மா தவித்த தவிப்பு இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அனுபவித்தவர்களுக்குத்தான் அது புரியும்.

13 hours ago, சாமானியன் said:

அண்மையில் மூத்த மகள் திருமணம் முடித்து அடுத்த மாநிலத்தில் இருக்கிறா.    இப்ப கொரோன சங்கதியால இளைய மகளின் பல்கலை லீவு விட , மகள் அங்க தனிய, சின்னனையும் கூட்டிக் கொண்டு நான் அங்க போகப் போறன், நீங்கள் சமாளிப்பியல் தானே எண்டு மனுஷி கேக்கிறா .

நான் கேட்டேன் , எனக்கு கொரோன பிடிச்சால் யார் என்னைப் பாக்கிறது எண்டு.    எல்லாரிலயும் பார்க்க எனக்கு தானே வயது கூட , நான் தானே ரிஸ்க் கூடிய க்ரூப் என்டு சொல்ல ஆள் பேந்த பேந்த முழிக்கிது ..🤔

பெத்த மனம் தான் பித்து
கட்டிய மனம் கல்லு தான் …

உள்ளூரிலேயே ( rather  உள் நாட்டிலேயே )   கட்டிக்   கொடுப்பதில் இருக்கக் கூடிய சங்கதிகளில் சில ….

பிள்ளைகள் விடயத்தில் பெற்றதனாலோ என்னவோ பெண்கள் உணர்வுமயமாகப் பாதிக்கப்படுவதும் பயம் கொள்வதும் இயல்பானது. ஆனால் ஆண்களும் வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளே அக்கறையுடன் தான் இருப்பார்கள். கணவன் விடயத்தில் எல்லோரும் கல்லாக இருக்கமாட்டார்கள். சிலவேளை தனியாக நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் மனைவி எண்ணியிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணப் பேச்சு 5

ஒரு நண்பியிடம் இருந்து சாதகம் வர பொருத்தம் பார்த்தல் 80% பொருத்தம் என்று பொருத்தம் பார்த்த என் இரண்டுவிட்ட அண்ணா சொல்ல தொலைபேசி இலக்கத்தில் தாயுடன் தொடர்பு கொண்டு கதைத்தபோது படத்தை அனுப்பப் சொன்னார்.நானும் வற்சப்பில் அனுப்பிவிட்டு டென்ஷனுடன் காத்திருக்க அன்று முழுவதும் தாய் மகனின் படம் அனுப்பவில்லை. சரி அவர்களுக்குப் பிடிக்கவில்லையாக்கும் என்று எண்ணியபடி இன்னும் ஒரு நாளைக்கு கடத்த பெரும்பாடாக இருக்க அடுத்தநாள் காலை மகனின் படம் வந்திருக்க அதை மகளுக்கு வற்சப்பில் அனுப்பி விட்டு அவளின் முடிவுக்கு காத்திருந்தேன். எனக்கு ஓகே ஆனால் கதைத்துப் பார்க்கவேண்டும் அதன் பின் தான் முடிவு செய்யலாம். இரண்டு நாட்கள் கதைத்தாலே நான் ஒருவரைப்பற்றி அறிந்துவிடுவேன். ஆனால் நீங்கள் என்ன என்ன என்று என்னைக் கரைச்சல் தராமல் இருக்கவேண்டும் என்றாள் மகள். சரி என்று அவளின் இலக்கத்தைத் தாய்க்கு அனுப்பிவைத்துவிட்டுக் காத்திருந்தால் மூன்று நாட்களாக எந்த போனும் மக்களுக்கு வரவில்லை என்றாள். எனக்கு வலியப் போய்க் கேட்கவும் மனமில்லை. ஆனால் அப்படியே விடவும் மனமில்லை. மகளிடம் கூறாமலேயே தாய்க்கு போன் செய்தேன். நான் எடுத்த பின்னர் சாவகாசமாக இன்னும் மகனிடம் இலக்கத்தைக் கொடுக்கவே இல்லை என்று சொல்கிறார் தாய். ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு நல்ல நாள் பார்த்துதான் கொடுக்கவேண்டும். அதுதான் இன்னும் இரண்டு நாட்களின் பின் கொடுப்பேன் என்கிறார். சினம் வந்ததுதான் எனினும் அடக்கிக்கொண்டு அதை முதலே சொல்லியிருக்கலாமே என்கிறேன். நீங்கள் ஏன் அந்தரப்படுறியள். இதெல்லாம் ஆறுதலாத்தான் செய்யவேணும் என்கிறா.

மகளின் இன்னொரு படம் அனுப்பி வையுங்கோவன். சீலை உடுத்த படம் இல்லையோ என்கிறா. சேலை உடுத்து மேக்கப் போட்டு படம் காட்டி ஏமாற்றிக் கலியாணம் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை என்கிறேன். உடனே அவவுக்கு கோபம் வந்துவிடுகிறது. என்ன நீர் இப்பிடி எனக்கு வாய் காட்டுறீர். அப்ப ஒரு படத்தைப் பார்த்து விட்டு மகனுக்கு கலியாணம் கட்டி வைக்கச் சொல்லுறீங்களோ என்கிறா. நான் அப்படிச் சொல்லவில்லை. என் மகளின் இயல்பான படம் தான் உங்களுக்கு அனுப்பியது. இரண்டுபேரும் போனில் கதைத்துப் பார்த்துவிட்டு பிறகு நேரில் சந்திக்கட்டும் என்றவுடன் உது சரிவராது. நான் ஒண்டு சொல்ல நீர் ஒண்டு சொல்லுறீர். நான் சொல்லுறதைத்தான் என்ர மகன் கேட்பான்.  என்ன செய்யவேணும் எண்டு எனக்கே சொல்லுறியளோ என்று குதிக்கிறார்.

 உப்பிடிக் கதைக்கிறவை எங்களுக்குச் சரிவராது. நீங்கள் வேறு யாரையும் பாருங்கள். ஆனால் உங்கள் உந்த மனநிலையை வைத்துக்கொண்டு பெண் தேடினால் உங்கள் மகனுக்கு கலியாணம் இப்போதைக்கு நடக்காது என்றுவிட்டு போனை வைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரண்டுவிட்ட அண்ணா

haa... haa. 🤨😀

நான் இந்த திரி முழுவதும் வாசிக்கவில்லை. திருமணப் பேச்சு 5 வாசித்தபின் எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

கலியாண விசயம் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடக்காமல், கொஞ்சம் நிதானமாக செய்யவேண்டியது. அதுதான் அதனை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இருவர்களிடையே நடக்கும் திருமணம் இல்லை. இரு குடும்பங்கள் இடையே நடக்கும் திருமணம்.

எனது உறவினர் மகள் எனக்கு சொன்னதை சொல்கிறேன்.

இந்த மாதிரி இழுப்பாடுக்கு பின்னர், அம்மா, அப்பா, நீங்கள் இனிமேல் எதுவுமே பார்க்கவேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்.... பிடித்திருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்... அதன் பின்னர் நீங்கள் தொடரலாம் என்று அப்பா, அம்மாவுக்கு சொல்லி விட்டேன்.

Edited by Nathamuni

என் மகளும் சொன்னாள்தான்.மூன்று மாதம் கழிய.

அந்த மூன்று மாதமும் நடந்ததும் எழுதத்தான் வேணும் 😃

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 6:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இலங்கையில் இருந்து போன் வருகிறது

நான் : காலோ

அவ : கலோ
 
நான் : யார் கதைக்கிறீங்கள்

அவ : நான் கிளிநொச்சியிலிருந்து கதைக்கிறன்.

நான் : என்ன விஷயமா கதைக்க எடுத்தனீங்கள் ??

அவ : எனக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

நான் : எங்க லண்டனிலையா ?

அவ : இல்ல இங்கதான் இருக்கிறார். அவருக்கு லண்டன் வர விருப்பம்.

நான் : சரி அதுக்கு நான் என்ன செய்ய ?

அவ : உங்கட மகளா நீங்கள் கலியாணம் பேசிறது ??

நான் : ஓம். ஆர் உங்களுக்குச் சொன்னது ?

அவ : எனக்கு ஒரு ஐயா தந்தவர். அதுதான் உங்களோட கதைக்கிறன்.

நான் : உங்கட தம்பி என்ன படிச்சவர் ?

அவ : A L தான் படிச்சவர். நீங்கள் சரி எண்டு உங்கட மகள் இங்க வந்து ரெஜிஸ்டர் பண்ணி உங்க கூப்பிட்டா அவர் பிறகு படிப்பார்.

வந்த கோபத்தைஅடக்கிக்கொண்டு

நான் : நாங்கள் யேர்மனியில அல்லது லண்டனில பிறந்த  மாப்பிளைதான் பார்க்கிறம்.

அவ : அவர் சரியான கெட்டிக்காரன்.

நான் போனை வைத்துவிட்டேன்.

இது எனக்கு புரியவில்லை ...
இதில் கோப பட என இருக்கு என்றே விளங்கவில்லை 

உங்களிடம் திமிர் இருந்தால்தான் கோபம்  வர வேண்டும் 
அது கொஞ்சம் இருப்பதாக எனக்கு படுகிறது.

நீங்கள் என்ன தகுதியை வைத்து லண்டன் வந்தீர்கள்?
உங்களின் அறிவுக்கு இலங்கையில் வேலை என்று இலங்கை அரசு உங்களை 
அனுப்பியா லண்டன் வந்தீர்கள்? 

நீங்கள் கிளிநொச்சியில் இருந்தால் நீங்கள் என்ன யோசிப்பீர்கள்?
நீங்கள் எதிர்பார்ப்பது அவர்களிடம் இல்லது இருக்கலாம் 
அது அவர்கள் குற்றமா? அல்லது உங்களைப்போல வெளிநாடு சென்று முன்னேறலாம் என்று சிந்திப்பதுதான் 
அவர்கள் குற்றமா? 

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?
என்று உங்கள் கோபம் அவர்கள் மேல் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

அப்படி எனக்கும் தோன்றியபடியால், நானும் கேட்டேன்...

ஆனால் MA என்று பொய் சொல்லி பிறகுதான் AL என்று தெரியவந்தது என்கிறார். அது கோவம் வரும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அப்படி எனக்கும் தோன்றியபடியால், நானும் கேட்டேன்...

ஆனால் MA என்று பொய் சொல்லி பிறகுதான் AL என்று தெரியவந்தது என்கிறார். அது கோவம் வரும் தானே.

மேலே உரையாடலில் அவர்கள் அப்படி சொல்லவில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2020 at 9:24 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விளம்பரத்தில் கல்வித்தகுதி MA உடைய இங்கு பிறந்த என்று கூறிய பிறகும் இப்படிக்கு கேட்டால் கோபத்தை எப்படி அடக்குவது ???
 
4 minutes ago, Maruthankerny said:

மேலே உரையாடலில் அவர்கள் அப்படி சொல்லவில்லையே? 

🤨

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Quote

விளம்பரத்தில் கல்வித்தகுதி MA உடைய இங்கு பிறந்த என்று கூறிய பிறகும் இப்படிக்கு கேட்டால் கோபத்தை எப்படி அடக்குவது ???

🤨

நாங்கள் எல்லாம் மற்றவர்கள் சொன்னதை கேட்டு நடந்தா முன்னேறினோம்?
முன்னேற துடிக்கிறவன் எல்லா கதவையும் தட்டித்தான் பார்ப்பான்.

உண்மையான அகதிகள் மட்டும் வாருங்கள் எனும்போது 
பொருளாதாரம் தேடிய நாம் எல்லாம் பொய் கதைகளுடன் 
வந்து அகதி என்ற  அந்தஸ்து பெறவில்லையா? 

நானும் நீங்களும் கூட இன்னமும் பெட்டிக்குள்தான் பார்க்கிறோம் 
இங்கு படித்துவிட்டு குப்பை கொட்டுபவர்களை விட 
திறமையான சிந்தனையுடன் நாட்டில் வசதி இன்றி பலர் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனை சிந்தனைதான் உருவாக்குகிறது 
சிந்தனையை தூண்டும் ஆலோசனைகளையும் அறிவையும் கொடுத்தால் 
எல்லா மனிதரும் முன்னேறலாம். 

சந்தர்ப்பத்தை தேடி கதவை தட்டுபவனுக்கு 
திறக்கும் முடிவை மூடும் முடிவை எடுப்பது வேறு 

கதவை தட்டியவனை .. அவனது தகுதியை பார்த்து 
ஏளனம் செய்வது வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

haa... haa. 🤨😀

நான் இந்த திரி முழுவதும் வாசிக்கவில்லை. திருமணப் பேச்சு 5 வாசித்தபின் எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

கலியாண விசயம் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடக்காமல், கொஞ்சம் நிதானமாக செய்யவேண்டியது. அதுதான் அதனை ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இருவர்களிடையே நடக்கும் திருமணம் இல்லை. இரு குடும்பங்கள் இடையே நடக்கும் திருமணம்.

எனது உறவினர் மகள் எனக்கு சொன்னதை சொல்கிறேன்.

இந்த மாதிரி இழுப்பாடுக்கு பின்னர், அம்மா, அப்பா, நீங்கள் இனிமேல் எதுவுமே பார்க்கவேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்.... பிடித்திருந்தால் உங்களுக்கு சொல்கிறேன்... அதன் பின்னர் நீங்கள் தொடரலாம் என்று அப்பா, அம்மாவுக்கு சொல்லி விட்டேன்.

என்ன நாதத்தார்,

என்னை விட criminal wastage of time அதிகமாக இந்த திரியில பண்ணுறியள் போல🤣.

உங்கட பேச்ச கேட்டு நானே கவிதை எழுத தொடங்கீட்டன் ஐயா 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.