Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

Don’t worry old is gold.

  • Replies 391
  • Views 59.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இன்றுடன் 6வது நாள் போய் வந்து விட்டேன். நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. 

20 வயதிலை ஓடித்திரிஞ்ச மாதிரி இனி ஏலாது எண்டு நினைக்கிறன் :grin:

Thinakaran Vaaramanjari: - வேலிப் பொட்டு ...

பனைமரம் கற்பக தரு என ஏன் ...

குமாரசாமி அண்ணை.... நீங்கள், 20 வயசிலை.... பரிமளம் வீட்டுக்கு.... 
பனை கருக்கு  மட்டை  வேலி  பாய்ந்து போன மாதிரி...
இந்த வயசிலை... பாய நினைக்காதேங்கோ....  😍
பேசாமல்... அந்த இனிய காலங்களை, மீண்டும்... இரை  மீட்டுவதே..  சிறப்பான செயல்.

உங்கள் வைத்தியத்தில்... முன்னேற்றம் காண்பது கண்டு எமக்கு மகிழ்ச்சி... ஐயா. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....முதல்ல உங்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி இருக்கெண்டு அக்கம் பக்கத்தில சும்மா ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, பிறகு நீங்கள் ஜாலியா ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி கோப்பி, தேத்தண்ணி ஏன் டிபன் கூட சாப்பிடலாம். பின்பு அவர்களே உங்கள் வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டுட்டு போவார்கள்.....!   😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

😄😆

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....முதல்ல உங்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி இருக்கெண்டு அக்கம் பக்கத்தில சும்மா ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, பிறகு நீங்கள் ஜாலியா ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி கோப்பி, தேத்தண்ணி ஏன் டிபன் கூட சாப்பிடலாம். பின்பு அவர்களே உங்கள் வீட்டுக்கும் கூட்டி வந்து விட்டுட்டு போவார்கள்.....!   😎

அடபாவிகளா
இப்ப தான் நோவு கொஞ்சம் குறைந்திருக்கென்று பெருமூச்சு விடுறார்.

எழும்பி நடக்க முடியாமல் பண்ணுற அலுவல் போல இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

பனைமரம் கற்பக தரு என ஏன் ...

குமாரசாமி அண்ணை.... நீங்கள், 20 வயசிலை.... பரிமளம் வீட்டுக்கு.... 
பனை கருக்கு  மட்டை  வேலி  பாய்ந்து போன மாதிரி...
இந்த வயசிலை... பாய நினைக்காதேங்கோ....  😍
பேசாமல்... அந்த இனிய காலங்களை, மீண்டும்... இரை  மீட்டுவதே..  சிறப்பான செயல்.

உங்கள் வைத்தியத்தில்... முன்னேற்றம் காண்பது கண்டு எமக்கு மகிழ்ச்சி... ஐயா. :)

சிறித்தம்பி! உது மேலாலை பாயுற வேலியில்லை. கீழாலை புகுந்து போற வேலி.உது இன்னும் சுகம். ஆனால் கோதாரி விழுவார்  பெண்பிரசையள் இருக்கிற வீடுகளிலை உப்பிடி வேலி அடைக்கிறதில்லை தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உது மேலாலை பாயுற வேலியில்லை. கீழாலை புகுந்து போற வேலி.உது இன்னும் சுகம். ஆனால் கோதாரி விழுவார்  பெண்பிரசையள் இருக்கிற வீடுகளிலை உப்பிடி வேலி அடைக்கிறதில்லை தெரியுமோ?

குமாரசாமி அண்ணை.... நீங்கள், பல வருடங்களுக்கு. முன்பு எழுதிய..  
"ஓடினேன்.. ஓடினேன், கருக்கு  மட்டை... வேலி  பாய்ந்து ஓடினேன்."
என்ற கவிதை, எனக்கு மிகவும் பிடித்தது. எவரும்... மறக்க முடியாத, அழகிய கவிதை. 😍

அதனை... மீண்டும் இணைத்து விடுங்களேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.... நீங்கள், பல வருடங்களுக்கு. முன்பு எழுதிய..  
"ஓடினேன்.. ஓடினேன், கருக்கு  மட்டை... வேலி  பாய்ந்து ஓடினேன்."
என்ற கவிதை, எனக்கு மிகவும் பிடித்தது. எவரும்... மறக்க முடியாத, அழகிய கவிதை. 😍

அதனை... மீண்டும் இணைத்து விடுங்களேன். 

நேயர் விருப்பத்துக்கு அரோகரா.😁

தாண்டினேன்...தாண்டினேன்

சாறம் கிழிய முட்கம்பி வேலி தாண்டினேன்

மழையிருட்டிலும் உன்முகம் காண

தாண்டினேன்...தாண்டினேன்

அலம்பல் வேலி காலில் கீறுப்பட தாண்டினேன்

உன் மேல்மூச்சு கீழ்மூச்சு என் காதோரம் உரசும் அளவை அளக்க

தாண்டினேன்...தாண்டினேன்

காவோலை வேலி சரசரக்க தாண்டினேன்

உன் வைடூரிய வார்த்தைகளுக்காக

தாண்டினேன் தாண்டினேன்

என்வீட்டு வீமனின் உறுமலையும் மீறி தாண்டினேன்

உன் அழகுமஞ்சத்தில் அமைதியாக.........

தாண்டினோம் தாண்டினோம்

இருவரும் தாண்டினோம்

இன்றோ

நீ அங்கே

நான்

இங்கே

உனக்கு

நான்கு

எனக்கு நான்கு

இதில் யார் தாண்டவர்? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஒரு நயமான நைச்சியமான கவிதை .........பாராட்டுக்கள்.....!  💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

ஞாபக மறதிக்கு ஒரே மருந்து மூளைக்கு நிறய வேலை கொடுப்பதுதான். நிறய வாசித்தல், குறுக்கெழுத்து புதிர்கள் செய்தல், செல்போனில் இருக்கும் பலவிதமான கேம்ஸ் விளையாடுதல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம், நடை பயிற்சி என்பவை நல்லம். 

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு??????? 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

ஒரு நயமான நைச்சியமான கவிதை .........பாராட்டுக்கள்.....!  💐

2011 இல் குமாரசாமி எழுதிய கவிதையை இன்னும் நினைவில் வைத்திருக்கும் சிறிக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

On 12/6/2020 at 23:27, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

செல்போனில் இருந்து வரும் கதிர்கள் குறைந்த அதிர்வுடைய ரேடியோ கதிர்கள் (non ionized low frequency radio frequency energy) National Cancer Institute ஆய்வு அறிக்கையின்படி இதனால் கான்சர் வரும் சாத்தியத்துக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை. இதயத்துக்கு ஏதாவது தீமை இருக்குமா என்று பல ஆய்வுகள் நடந்துள்ளன. அப்படியும் ஒரு தீங்கும் விளைவிப்பதாக தெரியவில்லை. இதயத்தில் நிறைய மின்சார ஓட்டம் தொடர்ந்து நடப்பதால், செல்போன் அதிர்வுகள் இந்த மின்சார ஓட்டத்தை இடையூறு செய்து அதனால் இருதயத்துடிப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து பலதரப்பட்ட வயது, மற்றும் பலதரப்பட்ட உடல் நிலை உள்ள மனிதர்களை வைத்து Clinical studies பல செய்தும் பார்த்து அப்படி இதயத்துக்கு ஒரு பாரதூரமான விளைவுகளும் இருப்பதாக கண்டு பிடிக்கவில்லை.

எனது மகனின் நண்பன் (Ross)  அவர்கள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது அவரின் தமயன் எறிந்த baseball தவறுதலாக  Ross இந்த நெஞ்சில் பட்டுவிட்டது. இதயத்தின் அறைகள் சுருங்கி விரியும் நேரத்தில், மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் இடத்தில போய் பந்து அடித்தபடியால் இதயத்தின் மேல் அறைகளில் மின்சார ஓட்டம் குழம்பி அதனால் இதயத்துடிப்பும் குழம்பி (Atrial Fibrillation) போதிய அளவு இரத்தம் மூளைக்கு போவது குறைந்து விட்டது. அந்த இடத்தில் ஒரு Defibriliator இருந்திருந்தால் அன்று அப்படி ஒரு விபரீதம் நடந்திருக்காது. Defibrillator அதில் கூறியிருப்பது போல நெஞ்சில் பிடித்தால் மீண்டும் மின்சார ஓட்டம் சீராக ஓடத்தொடங்கி இதயமும் ஒழுங்காக துடிக்கத்தொடங்கும். அதனால்தான் இப்போதெல்லாம் First aid kit க்கு பக்கத்தில் defibrillator ஐயும் வைத்திருக்கிறார்கள். நாம் எல்லோருமே ஒரு அடிப்படை முதல் உதவி பயிற்ச்சி பெற்று  வைத்திருந்தால் சிலவேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் பயன்படும்.

Ross உடனேயே Helicopter மூலம் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அவரது மூளை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. 3 மாதம் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்லும்போது அவர்களின் குடும்பத்தார் விட்ட அறிக்கையில் " Ross இன்று இரண்டாம் தடவையாக ஒரு குழந்தையாய் வீடு செல்கிறான்" என்று குறிப்பிட்டார்கள். இன்று அவன் 22 வயது இளைஞன். ஆனால் 3 வயதுக்குரிய மூளை வளர்ச்சி மட்டுமே இருப்பதால் படுக்கையில் தான் இருக்கிறான்.

செல்போனை பற்றிய எனது கருத்து என்னவென்றால், எந்த ஒரு இயற்கைக்கு மாறான பொருளிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதனால் கூடியவரையில் அதை எமக்கு மிக அருகில் வைக்காமல் தவிர்ப்பது நல்லம். மனித குலம் 5 மில்லியன் வருடங்களாக இந்த உலகில் வாழ்கிறோம். ஆனால் எமது நவீன விஞ்ஞானம் , தொழில் நுட்பம் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகளில் தான் முன்னேறியது. எமது ஆதி காலத்து ஞானிகள்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்த எவற்றையும் நாம் இன்னும் மீள் கண்டுபிடிப்பு செய்யவில்லை. அதனை ஊக்குவிப்பார்களும் இல்லை (அநேகமான). எனவே எமது ஒரு சில நூற்றாண்டுகளே ஆன விஞ்ஞான , மருத்துவ தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் எல்லாமே இன்னும் குழந்தையாக தவண்டு கொண்டு இருக்கிறது. தத்தி தத்தி நடந்து, நிமிர்ந்து நடப்பதற்கு இன்னும் பல நூறாண்டுகள் தேவை.  எமது உடல் ஒரு விசித்திரமான மிகவும் சிக்கலான ஒரு இயந்திரம். அதனை பற்றி நாம் அறிந்திருப்பது 1% மட்டுமே. அத்துடன் எமது உடல், உலகம் பற்றியதான எமது பார்வை, விளக்கம் எல்லாம் இந்த ஐந்துபுலன்களை  கொண்டே . அதுக்கும் மேலாக எமது ஐம் புலன்களால் அறிய தெரிய முடியாத  விடயங்கள் நிறய, எமது கற்பனைக்கு எட்டாத அளவு உள்ளன. இந்த விளக்கங்களை நான் வாசித்த, கேள்விப்பட்ட, எனது சிந்தனைகளை வைத்து நானே விளங்கிக்கொண்டவை. இவற்றை எனது மாணாக்கர்களுக்கு கூறும்போது மிகவும் சந்தோசப்படுவார்கள் . வேறு  ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது  நான் அண்மையில் அழகப்பா பல்கலை கழக கடல் ஆராச்சி  பீட மாணவர்களுக்கு கடலை பற்றி சொன்ன விடயங்களை எழுதுகிறேன்.

சிறி எங்கேயோ தொடங்கி எங்கேயோ முடிச்சாச்சு.

டைனோசோர்  250 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. சயனோபக்டீரியா 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. நாம் 5 மில்லியன் வருடங்களுக்கு முதல் வந்தவர்கள்தான்.

spacer.png

spacer.png

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு.......மிக நன்றி சகோதரி......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

👍🏼விரிவான விளக்கத்துடனும்... உதாரணங்களுடனும் பதில் அளித்தமைக்கு, நன்றி நில்மினி. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2020 at 11:03, ரதி said:

எனக்கு ஒவ்வொரு வருடமும் சமருக்கு ஒரு பக்கம் கன்னம் ,பல் எல்லாம் நோகிறது ...சாப்பிடுறது கஸ்டமாய் இருக்கு...இது எதுக்கு வருகுது. என்ன செய்யமாம் என்று சொல்வீர்களா 

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen மற்றும்  தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும்.

முகத்துக்கு வரும் நரம்புகள் (The trigeminal nerves) ஏதாவது பாதிப்பிருந்தாலும் முக எலும்புகள் தசைகள் நோகும் . வாயில் பல்லில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வரும். Stress, Anxiety போன்ற மனா அழுத்தம், கவலை போன்றவயும் நிச்சயம் தாக்கும். மற்றும்படி எவை இரண்டும் நோவதற்கு மறைமுகமான காரணங்கள் அவ்வளவு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் கோடை காலங்களில் மட்டும் நோவது அதிசயமாகத்தான் இருக்கு

 spacer.png

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nilmini said:

எனக்கு இப்படியான சைனஸ் பிரச்சினை 7,8 வருடத்துக்கு ஒரு முறை வரும்.
அடிக்கடி தலையிடி, மூக்கடைப்பு... போன்றவற்றால் மிக அவதிப் படுவேன். 
தொண்டை, மூக்கு, காது (HNO) வைத்தியரிடம் சென்று அதனை அவர் அகற்றி விட்டபின்.
பெரிய ஒரு விடுதலை கிடைத்த மாதிரி இருக்கும்.

அது ஒரு சிறிய அறுவை சிகிச்சை தான்.. அவரது வைத்திய நிலையத்திலேயே. 
15 நிமிடத்தில் செய்து விடுவார்கள். இரண்டு நாளில்.. மீண்டும் வேலைக்கு செல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nilmini said:

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை ஏதும் இருக்கா? அடிக்கடி தொண்டையை சரி பண்ணவேணும் போலவும், மெல்லிய இருமல் குணம் (அதுவும் இரவில் கொஞ்சம் கூடுதலாக) குரல் தடிமனானது போலவும், தொண்டைய அரிக்கிற மாதிரி இதில் ஏதேனும் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மூக்குப்பகுதியில் இருந்து சுரக்கும் நீர் தொண்டைக்குள் அடிக்கடி செல்வதால் ஏற்படுவது. கோடை காலத்தில் pollen மற்றும்  தூசி அல்ர்ஜி இருந்தால் இந்த சைனஸ் குடாக்கள் நீரினால் நிரம்பி (பின்னர் mucus ஆக மாறும்) கன்னங்கள் நோகும் . எமது முகத்தில் உள்ள எலும்புகளின் பாரத்தை குறைக்க முக எலும்புகளில் வெற்றிடங்கள் இருக்கின்றன (Sinus cavities). அவை அல்ர்ஜி  நேரங்களில் ( தடிமன் உற்பட) அதன் உற்புற கலங்களால் சுரக்கப்படும் ஒருவிதமான நீரால் நிரம்பிவிடும். அத்துடன் பக்டீரியா போன்ற நுண் உயிர்கள் உள்ளே போய் பெருகி தமது கழிவுகள், இறந்த கலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து mucus மாதிரி ஆகிவிடும். இதனால் கன்னங்கள் ( கன்ன  எலும்புகள் சதைகள்) நோகும்.

முகத்துக்கு வரும் நரம்புகள் (The trigeminal nerves) ஏதாவது பாதிப்பிருந்தாலும் முக எலும்புகள் தசைகள் நோகும் . வாயில் பல்லில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வரும். Stress, Anxiety போன்ற மனா அழுத்தம், கவலை போன்றவயும் நிச்சயம் தாக்கும். மற்றும்படி எவை இரண்டும் நோவதற்கு மறைமுகமான காரணங்கள் அவ்வளவு இருப்பதாக தெரியவில்லை. அதுவும் கோடை காலங்களில் மட்டும் நோவது அதிசயமாகத்தான் இருக்கு

 spacer.png

spacer.png

எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் சமர் காலத்தில் தொடர்ச்சியான தும்மல் இருந்தது ...ஆனால்  கடந்த இரு வருடங்களாய் இல்லை ...அதற்கு பதிலாய் ஒரு பக்க கன்னம் ,பல் சாப்பிடேலாமல் நோகும்[பல் வருத்தம் இல்லை என்று நினைக்கிறேன் ...பல் வருத்தமாயிருந்தால் தொடர்ந்தும் இருக்க வேண்டும் அல்லவா?]... இவை சமர் முடிய போய் விடும்..

அத்தோடு கடந்த இரு வருடங்களாய் ஒரு பக்க காதும் அடைத்து விட்டது[முந்தி வந்து வந்து வந்து போனது இப்ப ஒரேடியாய் காதுக்குள் உர் என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருக்குது.] ...சளி போய் காதை அடைக்குமா ?...உடம்பு சூட்டுக்கும்,இதுக்கும் சம்மந்தம் இருக்குமா?...என்னுடைய உடம்பு சூட்டுடம்பு என்று நினைக்கிறேன் ...காது அடைத்து கேட்க்காமல் விட்டுடும் என்று பயமாயிருக்கு.
தும்மல் இருந்த காலத்தில் இரவில் தான் அதிகமாய் இருந்தது ...காலையில் எழுந்ததும் ஒன்றும் இருக்காது ...தற்போது தும்மல் இல்லை ...ஆனால்  குரல் சில நேரம் தடிமனாய் இருக்கும் ...ஆனால் தடிமனோ ,தலையிடியோ,தொண்டை அரிப்போ  ஒன்றுமே இல்லை .
சும்மாவே ஆஸ்பத்திரிக்கு போக விருப்பமில்லை ,அத்தோடு பயம் ....எல்லோரும் பேசினம்.. போய்க் காதைக் காட்டு இல்லாட்டில் காத்து கேட்காமல் போய் விடும் என்று பயம் காட்டினம்...எனக்கொரு தீர்வு சொல்லுங்கோ....நேரம் எடுத்து பதில் எழுதுவதற்கு மிக்க நன்றிகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/7/2020 at 15:20, nilmini said:

ஞாபக மறதிக்கு ஒரே மருந்து மூளைக்கு நிறய வேலை கொடுப்பதுதான். நிறய வாசித்தல், குறுக்கெழுத்து புதிர்கள் செய்தல், செல்போனில் இருக்கும் பலவிதமான கேம்ஸ் விளையாடுதல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம், நடை பயிற்சி என்பவை நல்லம். 

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு??????? 😂

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

Musculus gastrocnemius – Wikipedia

எனக்கு முழங்கால் தசை வலிதான் கடுமையாக இருந்தது. தொடர்ந்து நின்று வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். நான் பல பயிற்சிகள் செய்தும் குறையவே இல்லை. அக்குபஞ்சரின் பின் குறைந்துவிட்டது. கதிரை அல்லது சோபாவில் நீண்ட நேரம் இருந்து விட்டு எழும்பி உடனே நடக்க முடியாமல் இருந்தது. அது ஓரளவு குறைந்து விட்டது. எதற்கும் ஒரு மாதம் சென்ற பின்னர்தான் நிறுதிட்டமாக முடிவெடுக்க முடியுமென நினைக்கின்றேன். ஆனால் தொடர்ந்து தினசரி 20 நிமிடங்களாவது பயிற்சிகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

நானும் அவ்வப்போது சில தனிப்பட்ட விடயங்களை எழுதுவது ஒருவேளை யாருக்காவது பயனாக இருக்கலாம் என்று எண்ணியே.
தொடர்ந்தும் அவ்வப்போது எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் அதுதான் யாரவது மருத்துவ விளக்கம் கேட்டால் அது சம்பந்தமான எல்லா விடயங்களையும் பகிர்ந்து எனது கருத்துக்கள் மற்றும் எனது அனுபவங்களை பகிர்வது. கருத்துப்பரிமாற்றம் எல்லோருக்கும் பொதுவில் உதவும் 

2 hours ago, குமாரசாமி said:

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

கன நேரம் நின்றுகொண்டு  வேலை செய்தால் முதலில் தசைகள் இறுகும் . அதைத்தொடர்ந்து எலும்பு மூட்டுக்கள் நோக்கும். நீங்கள் பொறுமையாக ஒழுங்காக அதுவும் நம்பிக்கை வைத்து இதனை செய்வதனால் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கை முக்கியம். அது ஒரு வகையில் உதவும். மேலும் Update களுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, nilmini said:

நானும் அதுதான் யாரவது மருத்துவ விளக்கம் கேட்டால் அது சம்பந்தமான எல்லா விடயங்களையும் பகிர்ந்து எனது கருத்துக்கள் மற்றும் எனது அனுபவங்களை பகிர்வது. கருத்துப்பரிமாற்றம் எல்லோருக்கும் பொதுவில் உதவும் 

கன நேரம் நின்றுகொண்டு  வேலை செய்தால் முதலில் தசைகள் இறுகும் . அதைத்தொடர்ந்து எலும்பு மூட்டுக்கள் நோக்கும். நீங்கள் பொறுமையாக ஒழுங்காக அதுவும் நம்பிக்கை வைத்து இதனை செய்வதனால் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்பிக்கை முக்கியம். அது ஒரு வகையில் உதவும். மேலும் Update களுக்கு நன்றி. 

அந்த சீன மருத்துவரும் எனக்கு நம்பிக்கை தந்துள்ளார். அவர் எனக்கு பரிந்துரை செய்துள்ள மருந்து இதுதான்.மூன்று மாதங்கள் எடுக்கச்சொல்லியுள்ளார். முற்றிலும் இயற்கையானது.இரசாயன தொடர்புகள் ஏதும் இல்லாதது. நோயை மாற்ற முதல் மனதை அமைதிப்படுத்துவது.
Lasea Weichkapseln, 112 St. - DocMorris

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இன்றும் அக்குபஞ்சருக்கு போய் வந்தேன்.ஒவ்வொரு ஊசிக்குத்தும் கொஞ்சம் ஆழமாக இருந்தது.  முதுகு முழங்காலில் குத்தும் போது கண்ணீரே வந்துவிட்டது. இன்று தலையிலும் நான்கு ஊசிகள். இரத்த ஓட்டங்களுக்கும் தூக்கமின்மைகளுக்கும் நல்லது என கூறினார்.
பல மூட்டுகளில் சுகம் வந்த மாதிரி தெரிகின்றது.ஆனால் முடிவாக இப்போது சொல்ல முடியவில்லை. நாள் போகத்தான் எதுவுமே.  மருத்துவர் 70% வலிகளை குறைக்கு முடியும் என கூறியுள்ளார்.

ஞாபக மறதி  பற்றி இன்று எதுவும் கேட்கவில்லை.அடுத்தமுறை கேட்கலாம் என்றிருக்கிறேன்.பெரும்பாலும் நீங்கள் சொன்னதையே சொல்லுவார் என நினைக்கின்றேன்.

நான் இங்கே எனது வருத்தங்களை இங்கே பகிர்வதற்கான காரணம் சில வேளைகளில் அனுபவங்கள் பிறருக்கும் பயன்படலாம் என்பதால் மட்டுமே.

Musculus gastrocnemius – Wikipedia

எனக்கு முழங்கால் தசை வலிதான் கடுமையாக இருந்தது. தொடர்ந்து நின்று வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். நான் பல பயிற்சிகள் செய்தும் குறையவே இல்லை. அக்குபஞ்சரின் பின் குறைந்துவிட்டது. கதிரை அல்லது சோபாவில் நீண்ட நேரம் இருந்து விட்டு எழும்பி உடனே நடக்க முடியாமல் இருந்தது. அது ஓரளவு குறைந்து விட்டது. எதற்கும் ஒரு மாதம் சென்ற பின்னர்தான் நிறுதிட்டமாக முடிவெடுக்க முடியுமென நினைக்கின்றேன். ஆனால் தொடர்ந்து தினசரி 20 நிமிடங்களாவது பயிற்சிகள் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.

நில்மினி உங்கள் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் நன்றி.

          1990 ம் ஆண்டு அமெரிக்கா வந்த புதிதில் அப்ப இளந்தாரி தானே எதை முறிப்பம் அடிப்பம் இடிப்பம் என்று காகம் இரையைத் தேடியது போல.
          ஒரு சிலர் உடற் பயிற்சி செய்ய போக நானும் போய் எதுவித அனுபவமும் இல்லாமல் பாரம் தூக்கி இடுப்புக்குள் பிடித்துவிட்டது.ஏதொ கொஞ்சம் நோ தானே என்று தைலங்களை போட்டு திரிந்தேன்.நாளாக ஆக படுக்கையில் போட்டுவிட்டது.எம் ஆர ஐ அது இது என்று எடுத்துப் பார்த்தா எல்4-எல்5 என்ற டிஸ்க் விலத்திவிட்டது.அது மட்டுமல்ல இனிமேல் பாரம் தூக்கினால் விளையாடினால் எப்ப வேண்டுமானாலும் இந்த டிஸ்க் வெளியே வரலாம் என்று ஒரு கரும்புள்ளி குத்திவிட்டார்கள்.
           எவ்வளவு தான் மிகக் கடுமையாக அவதானமாக இருந்தாலும் அப்பப்ப விலத்திவிடும்.
ஆரம்பத்தில் மருந்து எடுத்தால் ஒரே மருந்து தான் பெயின் கில்லர்.தொடக்கத்தில் போட்டு போட்டு படுத்தால் 2-3 நாளில் வாயெல்லாம் காய்ந்து அரைக் கண்ணில் நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு திரும்ப படுக்கை.சரி இதன் தன்மை தான் என்னவென்று கேட்டால் ஆளை தூங்க வைத்து ஒரே இடத்தில் கிடக்கப் பண்ணுவது தான் என்றார்கள்.அட இதுக்கு போய் ஏன் குளிசையைப் போட்டுவிட்டு படுப்பான் என்று குளிசை போடாமலே படுத்திருப்பேன்.
           நாளடைவில் அடுத்த டிஸ்க்கும் விலத்திவிட்டது.இப்போ எல்4-எல்5-எல6 வரை.வீட்டைவிட்டு இறங்கினால் பாரம் தூக்கும் போது போடும் பெரிய பெலிற் போட்டுக் கொண்டு தான் இறங்குவது.இப்ப கூட சாடையான நோவு என்றால் முதலே வெறும் நிலத்தில் படுத்துவிடுவேன்.அதுவே பழகி இப்போது வீட்டில் படுக்கும் போது பாய் தலையணை தான்.

எனக்கும் இப்படியோரு கதை இருக்கின்றது. பின்னர் எழுதுகின்றேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இப்போது இருக்கும் வருத்தங்களுக்கு எல்லா காரணங்களும் நான் இளமைப்பருவங்களில் கவலையீனமாக இருந்ததுதான். ஊரில் இருக்கும் போதும் தனியாக வேலை செய்து முறிவது.அளவு மிஞ்சிய பெரிய பாரங்களை தூக்கியது. அது மட்டுமல்லாமல் 15 வயதிருக்கும் என நினைக்கின்றேன் நாவல் மரத்திலிருந்து விழுந்தும் பெரிது படுத்தாமல் 3தரம் இடுப்புக்கு புக்கை கட்டியவுடன் நோ இல்லை  என்று விட்டு அசட்டையாக இருந்து விட்டேன்.
ஜேர்மனிக்கு வந்த பின்னர் குளிரை பெரிது படுத்தாமல் ரீ சேர்ட்  நெஞ்சு தெரிய சேர்ட்......அது இப்ப வைச்சு வாங்குது.வேலையிடத்திலை நெஞ்சை குடுத்து வேலை.முதலாளிமாரும் பப்பாவிலை ஏத்த ஏத்த எல்லா வேலையையும் நானே எடுத்துப்போட்டு முக்கிமுக்கி வேலை செய்தது.தண்ணி,சிகரட் அளவு கணக்கில்லை....சாப்பாடு ஒழுங்கில்லை. சினோ கொட்டும் காலங்களில் பல தடவைகள் சறுக்கி இடுப்பு அடிபட விழுந்தும் சும்மா தைலங்களை வாங்கி பூசிப்போட்டு பேசாமல் இருந்தது.

இளமையில் எதுவுமே தெரியவில்லை.வயது போகப்போக வருத்தங்களும் வெளிவர ஆரம்பிக்கின்றது.இதனால் தான் என்னுடன் பழகும் இளையவர்களுக்கு எப்போதும் உடல் நலத்தில் கவனமாக இருங்கள் என்று சொல்வது.இள வயதில் செய்யும் சிறு தவறும் வயது போகப்போக ஏதோ ஒரு வடிவில் பூதாகரமாக வந்து நிற்கும்.வேலை இடத்தில் இடுப்பு பட்டி கட்ட வேண்டும்.இல்லையேல் ஒரு மணித்தியாலம் கூட நிற்க முடியாது.வலிக்கு எடுத்த குளிசையை இப்போது நிப்பாட்ட முடியவில்லை.வலி இருக்கோ இல்லையோ அது எடுக்கா விட்டால் உடம்பு முழுக்க வேறொரு இனம் புரியாத வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பித்து விடும்.நித்திரையும் வராது.ஆகவே அந்த வலி குளிசையை சும்மாவே போட்டுக்கொண்டிருந்தால் ராசா மாதிரி இருக்கலாம்.கிட்டத்தட்ட போதைப்பொருள் மாதிரி.
எனக்கும் தரையில் சிறிது நேரம் இருக்கும் படி சொல்லியுள்ளார்கள்.20 நிமிசம் சைக்கிள் ஓட்டம் அல்லது நடத்தல் என்று கட்டளை.எனக்கும் பாயில் படுக்க ஆசைதான் .....ஆனால் குளிரை யோசிக்க பயமாய் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2020 at 03:45, ரதி said:

 அத்தோடு கடந்த இரு வருடங்களாய் ஒரு பக்க காதும் அடைத்து விட்டது[முந்தி வந்து வந்து வந்து போனது இப்ப ஒரேடியாய் காதுக்குள் உர் என்ற சத்தம் கேட்டுக் கொண்டு இருக்குது.] ...சளி போய் காதை அடைக்குமா ?...உடம்பு சூட்டுக்கும்,இதுக்கும் சம்மந்தம் இருக்குமா?...என்னுடைய உடம்பு சூட்டுடம்பு என்று நினைக்கிறேன் ...காது அடைத்து கேட்க்காமல் விட்டுடும் என்று பயமாயிருக்கு.
தும்மல் இருந்த காலத்தில் இரவில் தான் அதிகமாய் இருந்தது ...காலையில் எழுந்ததும் ஒன்றும் இருக்காது ...தற்போது தும்மல் இல்லை ...ஆனால்  குரல் சில நேரம் தடிமனாய் இருக்கும் ...ஆனால் தடிமனோ ,தலையிடியோ,தொண்டை அரிப்போ  ஒன்றுமே இல்லை .
சும்மாவே ஆஸ்பத்திரிக்கு போக விருப்பமில்லை ,அத்தோடு பயம் ....எல்லோரும் பேசினம்.. போய்க் காதைக் காட்டு இல்லாட்டில் காத்து கேட்காமல் போய் விடும் என்று பயம் காட்டினம்...எனக்கொரு தீர்வு சொல்லுங்கோ....நேரம் எடுத்து பதில் எழுதுவதற்கு மிக்க நன்றிகள் 

ரதி உங்களுக்கு நிச்சயமாக காது , தொண்டை, மூக்குப்பகுதியில் எதோ ஒரு பிரச்சனை இருக்கு. இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பது என்றபடியால் உரிய நேரத்தில் கவனம் எடுக்காவிட்டால் ஒரு இடத்தில் இருந்து துடங்கி மற்ற இடங்களுக்கும் பரவும். அத்துடன் மூக்கு, நடுக்காதில் இருந்தெல்லாம் மூளைக்கும் சிலவேளை தாக்கம் வரும் ( இது அரிதென்றாலும் தெரிந்திருப்பது நல்லது) காதுக்குப்பின்னால் நோ இருக்குதா?   வெக்கை காலத்தில் வருவது போவது எல்லாம் வேறு ஏதாவது காரணிகளால் இருக்கலாம். அத்துடன் காதுக்குள் அடிக்கடி கிர் என்று கேப்பது பிற்காலத்தில் காது கேக்கும் தன்மையை குறைக்கும். எனவே நீங்கள் உங்கள் குடும்ப வைத்தியரிடம் போய் Referral வாங்கி specialist மருத்துவரை உடனடியாக பார்க்கவும். இது ஏன் உங்களுக்கு வந்தது என்று யோசிக்கவேண்டாம். மரபு வழியாக, குளிர் exposure ஆள் மற்றும் பொதுவான உங்கள் உடல் அமைப்பு இவை தான் காரணமாக இருக்கும். இப்பதான் எல்லாவற்றுக்கும் வைத்தியம் இருக்கு. இந்த மாதிரி  பிரச்சனைகள் ஆங்கில மருத்துமுறையால் தான் நிரந்தர அல்லது நீண்ட கால தீர்வு காணலாம். 

spacer.pngspacer.png

On 7/7/2020 at 16:46, குமாரசாமி said:

ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி அண்ணாவின் பதிவுகளுக்கு விளக்கமாக உரிய நேரத்தில் respond  பண்ண முடியவில்லை. இன்றுதான் முழுவதும் வாசிக்க போகிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.