Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 10:59, goshan_che said:

ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

  • Replies 391
  • Views 59.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

வெள்ளைக்காரர்கள் 20 நிமிடம் வெய்யிலில் நின்றால் போதுமானது. எமது தோலுக்கு 2 மணிநேரம் தேவைப்படும்.

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

4 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

என்னத்த நினைத்து சிரிச்சனீங்கள் என்று தான் கேட்டேன் 😂அப்ப பேசாம கொழுப்பு கூடின மீன் வகைகளை எல்லாரும் சாப்பிட்டு வெள்ளயாகவே இருங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nilmini said:

இந்த சிரிப்புக்கு அர்த்தம்  என்ன ஈழப்பிரியன்  அண்ணா? 😂🤔

1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. 

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

நானும் சாடை மாடையா அப்படிதான் யோசிச்சன் சிறி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எமது இனத்தவர் சிறிது வெள்ளையாக இருந்தாலும், தோல் வெள்ளைக்காரர்களை விட தடித்தது. என்றபடியால் அது  (Type lV or type V)  4-5 ஆவது  தோல் தன்மையில் அடங்கும். 6 வகை தோல்கள் உள்ளன. என்றபடியால் கிழமைக்கு 3-4 நாட்கள் 2 மணிநேரம் வெய்யிலில் நின்றால்தான்  சராசரியாக ஒவ்வொரு நாளும்  தேவைப்படும் 1,000 IU (25 mcg) வைட்டமின் தயாரிக்கலாம். சூரியன் உச்சத்தில் இருக்கும் போது  நின்றால்  1 மணிதியாலபடி ஒரு கிழமையில் 4 நாள்கள்  போதுமானது. அந்த நேரத்தில்தான்  கதிரியக்கம் அதிகமாக இருந்து தோல் வைட்டமின்  தயாரிப்பதை விரைவுபடுத்தும். 

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

3 hours ago, goshan_che said:

ஆலோசனைக்கு நன்றி நில்மினி. 2 மணி நேரம் ஒரு வாரத்துக்கா? 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

நல்ல தகவல் உடையார் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் சிரித்ததன் அர்த்தம் எனக்குத் தெரியும், நில்மினி.
இப்ப அவர், வேறை கதை சொல்லி... சமாளிக்கிறார். :)

நீங்கள், எமது தோல்... தடித்தது என்று எழுதியதை...
எருமைத் தோல்  என்று நினைத்துத்தான் சிரித்திருக்கிறார். 🤣

11 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க எவ்வளவு தான் சொன்னாலும் கறுத்துப் போயிடுவமே என்று ஒருத்தருமே வெய்யிலில் போய் நிற்கமாட்டார்கள்.
அப்படி போய் நின்றாலும் சில கிழமைகளின் பின் வெளியில் உள்ளவர்கள் என்ன இப்படி கறுத்துப் போயிட்டியேடா எனும் போது ஐயோ இந்த நில்மினியின் பேச்சைக் கேட்டு இப்படி ஊரவனெல்லாம் வறுத்தெடுக்குறானே விட்டமின் டி யாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்வார்கள்.

கறுக்கப் போறாங்களே என்று தான்.
குறை நினைத்திடாதேங்கோ.

🙏🙏🙏🙏🙏🙏🙏

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

10 hours ago, உடையார் said:

இங்கு நின்றால் கான்சர் வந்திடும். 

உள்ளங்கையை சூரிய ஒளிபடும் மாதிரி வைத்திருந்தால், விரைவில் வந்திடும் D. 

9 hours ago, nilmini said:

நல்ல தகவல் உடையார் 

நல்ல தகவலுக்கு நன்றி உடையார்.

உள்ளங்கையை விரித்தபடி நான் பார்க்கில் போய் நிற்க யாரும் 50 பென்ஸ் குத்தியை வைத்து விட்டுபோனாலும் லாபம்தானே😂

டொக்டர் எனக்கு இன்னுமொரு டவுட்,

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உடையாரை போல எனக்கும் உந்த கான்சர் பயம் இருக்கு. முந்தி உந்த வெள்ளவத்தையில் சீ சைட் ஒழுங்கைகள் முடிவில் இருக்கும் “பள்ளத்தில்” கிரிகெட் நடு வெயிலில் ஆடியபோது வராத பயம் இப்ப வருகுது.

சன் கிறீமை போட்டு கொண்டா இந்த 2 மணி நேர வெயில் காயல்? 

சன் கிரீம் விற்றமின் டி உற்பத்தியை குறைக்காதா?

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  ஒழுங்கை வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்பாவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனது தோலில் கறுக்க இடமில்லை. வேணும் எண்டால் இப்போ புதிதாக நரைக்க தொடங்கி இருக்கும் தாடி மீண்டும் கறுக்கலாம்🤣

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

Sunscreen lotions SPF 15  93 வீதம்  SPF 30  97 வீதம், SPF 50 98  வீதம்  UVB கதிர்களை தோலை அடையாமல் தடுக்கும். இதனால் மிக குறைந்தளவு வைட்டமின் D  தான் தயாரிக்க முடியும். எமது தோலுக்கு Sunscreen அவ்வளவு தேவைப்படாது. நான் sunscreen மிகவும் அரிதாகத்தான் பாவிக்கிறேன். ஆனால் வெயிலில் நிறைய நேரம் நிக்க பஞ்சி. இப்பிடி ஒரு தோட்டம் செய்து வெயிலில் இருந்துகொண்டு Zoom  படிப்பிப்பு, மீட்டிங் எண்டு கொஞ்சம் வைட்டமின் தயாரிக்கிறேன்😬

எந்த வருடம் கிரிக்கெட் விளையாடினீர்களோ தெரியாது. எமது பசல்ஸ்  வீட்டில் இருந்து காலி வீதியை கடந்து ஹம்மர்ஸ் ஒழுங்கையால் ஒவ்வொரு நாளும் அப்படவுடன் கடற்கரைக்கு போகும்போது பெடியள் விளையாடுவதில்லை. 

spacer.png

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஆனால் ஹாமர்ஸ் அவனியுவில் விளையாடுவது இல்லை. அது ஒடுக்கமான ஒழுங்கைதானே. 

நெல்சன் பிளேஸ்- பொஸ்வெல் பிளேஸ் இடையான பின் வீதி, கொலிங்வூட் பிளேஸ், லில்லி அவனியியு இடையான பின் வீதி இவற்றில் விளையாட்டு நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அப்ப... உங்களுக்கு, 40 வயசு.... தாண்டீட்டுது. :grin:
உங்களை... சின்னப் பெடியன் என நினைத்திருந்தேன். 🤣

🤣 என்னுடைய எழுத்தை பார்த்தே என்னை இளமையாக நினைத்தீர்களா? நல்லவேளையாக என் முகத்தை பார்க்கவில்லை, 22 வயதுக்கு மேல் மதிச்சிருக்க மாட்டியள்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வணக்கம் டொக்ரர் நில்மினி.

muscular dystrophy (limb-girdle muscular dystrophyஇது சம்பந்தமான மருத்துவ ஆய்வுகளில் முன்னேற்றம் ஏதும் இருக்கின்றதா? நாங்கள் நால்வர் அண்ணன் தம்பி ஒன்று விட்ட சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். தகவல்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

வணக்கம் ஏராளன், விரைவில் இதனைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுகிறேன். 

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

மகள் நீங்கள் யாழுக்கு கிடைத்த வரம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.பாராட்டுக்கள்.......!  🌹

மிகவும் நன்றி ஐயா . நாம் மட்டும் வாழாமல் மற்றவர்களுக்கும் எம்மால் இயன்றதை செய்ய வேணும் என்றுதான் முயற்சிக்கிறேன் :295_rose:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 13:55, goshan_che said:

நன்றி.

நல்ல அழகான தோட்டமாக இருக்கிறது. நானும் வார்க்கிங் புறொம் வீட்டுத்தோட்டம் ஐடியாவை டிரை பண்ணலாம் என இருக்கிறேன். 

1990 க்கு பின்பே இலங்கையில் கிரிகெட் விசர் பிடித்தது. நீங்கள் அப்போ வெளிநாடு போயிருக்க கூடும். 90-2000 வரை ஒவ்வொரு ஒழுங்கையிலும் விளையாட்டு நடக்கும். பின்னர் வீடியோ கேம் வந்து பிள்ளைகள் எல்லாம் வீட்டில் முடங்கிவிட்டார்கள். தவிரவும் Marine Drive வந்ததால் ஒரு தொகை “மைதானங்கள்” காணாமல் போய்விட்டது.

ஓமோம். அப்போதே மாலைதீவு போய்விட்டேன். ஆனால் வருடத்துக்கு 3 தரம் வீட்டுக்கு வருவேன். அப்போது கடற்கரை பக்கம் வந்தால்  பெடியள் விளையாடுவதை பார்த்தமாதிரிதான் இருக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 07:24, ஈழப்பிரியன் said:

பாடசாலை வயதில் மயிலிறகை புத்தகத்துக்குள் வைத்து மெதுமெதுவாக திறந்து பார்த்த மாதிரி இருக்கும்.

இந்த மயிலிறகு விளையாட்டு இலங்கை முழுவதும் நடந்திருக்கு போல. நான் மாத்தளை பள்ளிக்கூடத்தில் இதைத்தான் நண்பிகளுடன் செய்தேன். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/10/2020 at 16:05, nilmini said:

வணக்கம் நில்மினி!

ஒரு புதிய சர்ச்சையை உங்கள் முன் வைக்கின்றேன்.நேரமிருக்கும் போது இந்த காணொலியை பாருங்கள். ஆறுதலாக அமைதியாக பதில் அளித்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.
இன்றைய காலத்தில் மருத்துவம் ஒரு வியாபாரம் என்றே சம்பந்தப்பட்ட வைத்தியர் சொல்ல முனைகின்றார். எனக்கும் நீண்ட காலமாக இந்த வியாபார சந்தேகம் இருக்கின்றது. அதை விட சுருக்கமாக சொல்வதானால்  என்னையே பல இடங்களில் வருமான பொருளாக்கி பதம் பார்த்துள்ளார்கள். உயிருடன், உடல் நலத்துடன் விளையாடியிருக்கின்றார்கள்.இது எனது சொந்த அனுபவம்.

எனது கேள்வி என்னவென்றால் இந்த வியாபார மருத்துவத்தை எப்படி என்னைப்போன்றவர்கள் இனம் கண்டு தப்பித்துக்கொள்ளலாம்?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன்  உண்மையாக உழைப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு கு.சா.......நன்றி.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.