Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரக்கறி/மீன் ரொட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி/மீன் ரொட்டிRotti-2.jpg

Rotti1.jpgRotti.jpg

500 கிராம் வெள்ளை  கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய்  4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை  அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின்  நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ரொட்டிக்கு குழைப்பதை போல குழைக்கவும் ( நான் food processor இல் தான் குழைத்தேன். Dough mixer உம் நல்லது. குழைத்த மாவை ஈரத்துணியால் மூடி 3 - 5 மணி நேரம் வைக்கவும்.

கறி செய்வதுக்கு : மஞ்சள் உருளை கிழங்கு, மெலிதாக வெட்டிய லீக்ஸ் அல்லது green onion, கரட் சீவியது. முதலில் தேங்காய் எண்ணெயில் கடுகு வெடித்து, ரம்பை , கருவேப்பிலை சேர்த்து, பிறகு இஞ்சி உள்ளி பேஸ்ட் போட்டு , கொஞ்சம் கராம்பு, ஏலக்காய், கறுவா தூள் சேர்த்து,அடுத்து சின்னதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து, எல்லாம் நல்ல வதங்கி வர, சின்னதாக வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து, கொஞ்சம் செத்தல் மிளகாய் துண்டுகள் ( chilie pieces ) போட்டு , அதற்குள் சீவிய கரட் , மஞ்சள் தூள், மிளகு தூள், சிங்களத்தூள் (roasted thuna paha), கொஞ்ச தனி மிளகாய் தூள் போட்டு , வதக்கி, பிறகு லீக்ஸ் , மசித்த உருளை கிழங்கு சேர்த்து நன்றாக பிரட்டவும். உருளை கிழங்கு இறுக்கமாக இருக்கவேண்டும். தண்ணி பதமாக இருக்க கூடாது.

குழைத்த மாவை பெரிய தேசிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். Table  top இல் கொஞ்ச எண்ணெய் பூசி மெல்லிய நீண்ட மர  அல்லது stainless  steel கட்டையால் (rolling pin)  தோல் மாதிரி உருட்டவும். இடையில் ஓட்டை விழுந்தால் பரவாயில்லை. இப்ப மாலு பானுக்கு மடிப்பதை போலவோ அல்லது நீட்டாகவோ கறியை நடுவில் வைத்து மடிக்கவும். பாரமான தோசை கல்லு அல்லது cast iron பாத்திரத்தில் சுட்டு எடுக்கலாம்.  நன்றாக சீல் பண்ணி freezer யிலும் வைத்து சாப்பிடலாம். நான் எனது தங்கைகு செய்து கொடுத்தேன். மீன் போடும்போது இதே முறையை பின் பற்றி மீனை மிளகு தூள், மஞ்சள்  தூள் உப்பு போடு வதக்கி சேர்க்கவும்.

https://www.islandsmile.org/vegetable-roti-sri-lankan-snacks/  ரொட்டி மடிக்கும் முறை மட்டும் இந்த லிங்கில் இருந்து எடுத்தது . மரக்கறி மற்றும் மீன் ரொட்டிகள் நான் செய்தது 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கஸ்டப்பட்டு செய்திருக்கறீர்கள் என்பது தெரிகிறது.

நீங்கள் இணைத்த இரு உணவு வகைகளும் சிங்களவர்கள் மிகவும் திறமையாக செய்வார்கள்.

நானுமொருக்கா செய்ய போய் ஆமை மாதிரி வந்தது.
வீட்டில கொஞ்சநாள் கேலி பண்ணிக் கொண்டே இருந்தார்கள்.
வேறு ஏதாவது செய்ய முயற்சி பண்ணும் போதே ஆமை செய்த மாதிரியோ என்பார்கள்.
 
வேறு என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறீர்கள்?நேரம் வரும் போது ஒவ்வொன்றாக இணையுங்கள்.

10 வருடம் முதல் தூயா என்று அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு பிள்ளை யாழில் சமையல் குறிப்பு பற்றி எழுதியது மிகவும் பிரபலமாக இருந்தது.

Edited by ஈழப்பிரியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வேல கூடத்தான். குடும்பத்தாரும், ஒரு சிங்கள நண்பியும் உதவி செய்வார்கள். தூயாவின் ரேஸ்ட்ரி  dishes என்று வாசித்து save  பண்ணியும் வைத்திருக்கிறேன் . dough mixer அல்லது food processor பாவித்தால் லேசு . உருட்டுவதுதான் அலுப்பு . நிச்சயம் செய்து பாருங்கள். மிகவும் ருசியாகவும் ரொட்டி மெத்தென்றும் இருந்தது.ஆமை பெயர் போய்  எல்லோரும் திரும்ப திரும்ப கேட்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nilmini said:

குடும்பத்தாரும், ஒரு சிங்கள நண்பியும் உதவி செய்வார்கள்.

ஆகா விசயத்தை முதலே சொல்லியிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

மரக்கறி/மீன் ரொட்டிRotti-2.jpg

பார்க்க வடிவாக இருக்கின்றது. ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நானுமொருக்கா செய்ய போய் ஆமை மாதிரி வந்தது.
வீட்டில கொஞ்சநாள் கேலி பண்ணிக் கொண்டே இருந்தார்கள்.

வேறு ஏதாவது செய்ய முயற்சி பண்ணும் போதே ஆமை செய்த மாதிரியோ என்பார்கள்.

"கோழி... குருடாக இருந்தாலும்,  குழம்பு... ருசியாக, இருந்தால் சரிதானே" :grin:
நீங்கள் செய்த ரொட்டி... ஆமை மாதிரி வந்தாலும்,
நிச்சயம்  அதனை எல்லோரும் சுவைத்து.... சாப்பிட்டு இருப்பார்கள்.

பாவங்கள் என்று.... வேலை மினக்கெட்டு செய்து கொடுத்தால்,
பகிடி... பண்ணுவது சரியல்ல. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

"கோழி... குருடாக இருந்தாலும்,  குழம்பு... ருசியாக, இருந்தால் சரிதானே" :grin:
நீங்கள் செய்த ரொட்டி... ஆமை மாதிரி வந்தாலும்,
நிச்சயம்  அதனை எல்லோரும் சுவைத்து.... சாப்பிட்டு இருப்பார்கள்.

பாவங்கள் என்று.... வேலை மினக்கெட்டு செய்து கொடுத்தால்,
பகிடி... பண்ணுவது சரியல்ல. :)

நானே மிண்டி மிண்டி தான் விழுங்கினது.

ராசா இதை செய்யிறத்துக்கு முதல் ஒன்றுக்கு இருதடவை யோசிக்கவும்.

பிறகு ஒன்றுக்கு இரண்து மூன்று பியர் அடிச்சுப் போட்டு இங்கே வந்து அட்டகாசம் பண்றேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 1:18 AM, ஈழப்பிரியன் said:

மிகவும் கஸ்டப்பட்டு செய்திருக்கறீர்கள் என்பது தெரிகிறது.

நீங்கள் இணைத்த இரு உணவு வகைகளும் சிங்களவர்கள் மிகவும் திறமையாக செய்வார்கள்.

நானுமொருக்கா செய்ய போய் ஆமை மாதிரி வந்தது.
வீட்டில கொஞ்சநாள் கேலி பண்ணிக் கொண்டே இருந்தார்கள்.
வேறு ஏதாவது செய்ய முயற்சி பண்ணும் போதே ஆமை செய்த மாதிரியோ என்பார்கள்.
 
வேறு என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறீர்கள்?நேரம் வரும் போது ஒவ்வொன்றாக இணையுங்கள்.

10 வருடம் முதல் தூயா என்று அவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு பிள்ளை யாழில் சமையல் குறிப்பு பற்றி எழுதியது மிகவும் பிரபலமாக இருந்தது.

நீங்கள் செய்ததில் ஒரு தப்புமில்லை பிரியன். ஆனால் ஒரு தாக்குதல் நடத்தமுன் சொதப்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து அதை எதிர் கொள்ள தயாராய் இருக்கவேண்டும்.இது ஒரு சின்ன விடயம்.நீங்கள் முதலே ஆமை ரொட்டி என்று பெயர் வைத்து பரிமாறி இருக்கலாம்.எல்லோரும் வித்தியாசமாய் இருக்கு என்று புகழ்ந்திருப்பினம்.....!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/9/2020 at 12:13 AM, nilmini said:

மரக்கறி/மீன் ரொட்டிRotti-2.jpg

Rotti1.jpg

எனக்கு   மீன் ரொட்டி,கிழங்கு ரொட்டி   பிடித்த சாப்பாடு.ஊரிலை இதுக்கெண்டே சில தேத்தண்ணிக்கடையள் பிரபலமாய் இருக்கும்.
நில்மினி நீங்கள் செய்த இந்த ரொட்டிகளை பார்க்கும் போது அந்த கடையள் தான் ஞாபகத்திற்கு வந்தது.👍

Bildergebnis für enjoy your meal gif

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நீங்கள் செய்ததில் ஒரு தப்புமில்லை பிரியன். ஆனால் ஒரு தாக்குதல் நடத்தமுன் சொதப்பினால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து அதை எதிர் கொள்ள தயாராய் இருக்கவேண்டும்.இது ஒரு சின்ன விடயம்.நீங்கள் முதலே ஆமை ரொட்டி என்று பெயர் வைத்து பரிமாறி இருக்கலாம்.எல்லோரும் வித்தியாசமாய் இருக்கு என்று புகழ்ந்திருப்பினம்.....!  😂

முதலே பறையடிச்சு எனக்கு நானே தேடிக் கொண்டேன்.

நில்மினி செய்ததைப் பார்க்க மீண்டும் செய்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடலாமா என்றும் யோசிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலே பறையடிச்சு எனக்கு நானே தேடிக் கொண்டேன்.

நில்மினி செய்ததைப் பார்க்க மீண்டும் செய்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடலாமா என்றும் யோசிக்குது.

தல ! யோசிக்க வேண்டாம் தல.
களத்துல இறங்கு தல...😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரன் குமாரசாமி. ஈழப்பிரியன்  சும்மா அசத்தலான மீன் ரொட்டி செய்து வீட்டில் எல்லாரையும் அசத்துங்கள். படத்தை எம்முடன்   பகிரவும் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎8‎/‎2020 at 11:13 PM, nilmini said:

மரக்கறி/மீன் ரொட்டிRotti-2.jpg

Rotti1.jpgRotti.jpg

500 கிராம் வெள்ளை  கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய்  4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை  அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின்  நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ரொட்டிக்கு குழைப்பதை போல குழைக்கவும் ( நான் food processor இல் தான் குழைத்தேன். Dough mixer உம் நல்லது. குழைத்த மாவை ஈரத்துணியால் மூடி 3 - 5 மணி நேரம் வைக்கவும்.

கறி செய்வதுக்கு : மஞ்சள் உருளை கிழங்கு, மெலிதாக வெட்டிய லீக்ஸ் அல்லது green onion, கரட் சீவியது. முதலில் தேங்காய் எண்ணெயில் கடுகு வெடித்து, ரம்பை , கருவேப்பிலை சேர்த்து, பிறகு இஞ்சி உள்ளி பேஸ்ட் போட்டு , கொஞ்சம் கராம்பு, ஏலக்காய், கறுவா தூள் சேர்த்து,அடுத்து சின்னதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து, எல்லாம் நல்ல வதங்கி வர, சின்னதாக வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து, கொஞ்சம் செத்தல் மிளகாய் துண்டுகள் ( chilie pieces ) போட்டு , அதற்குள் சீவிய கரட் , மஞ்சள் தூள், மிளகு தூள், சிங்களத்தூள் (roasted thuna paha), கொஞ்ச தனி மிளகாய் தூள் போட்டு , வதக்கி, பிறகு லீக்ஸ் , மசித்த உருளை கிழங்கு சேர்த்து நன்றாக பிரட்டவும். உருளை கிழங்கு இறுக்கமாக இருக்கவேண்டும். தண்ணி பதமாக இருக்க கூடாது.

குழைத்த மாவை பெரிய தேசிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். Table  top இல் கொஞ்ச எண்ணெய் பூசி மெல்லிய நீண்ட மர  அல்லது stainless  steel கட்டையால் (rolling pin)  தோல் மாதிரி உருட்டவும். இடையில் ஓட்டை விழுந்தால் பரவாயில்லை. இப்ப மாலு பானுக்கு மடிப்பதை போலவோ அல்லது நீட்டாகவோ கறியை நடுவில் வைத்து மடிக்கவும். பாரமான தோசை கல்லு அல்லது cast iron பாத்திரத்தில் சுட்டு எடுக்கலாம்.  நன்றாக சீல் பண்ணி freezer யிலும் வைத்து சாப்பிடலாம். நான் எனது தங்கைகு செய்து கொடுத்தேன். மீன் போடும்போது இதே முறையை பின் பற்றி மீனை மிளகு தூள், மஞ்சள்  தூள் உப்பு போடு வதக்கி சேர்க்கவும்.

https://www.islandsmile.org/vegetable-roti-sri-lankan-snacks/  ரொட்டி மடிக்கும் முறை மட்டும் இந்த லிங்கில் இருந்து எடுத்தது . மரக்கறி மற்றும் மீன் ரொட்டிகள் நான் செய்தது 

ஹிமாலயன் உப்பு ,கடல் உப்பை விட நல்லதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக வித்யாசம் இல்லை. ஹிமாலயன் உப்பில் கொஞ்சம் இரும்பு, கல்சியம் , மக்னிசியம் இருக்கு. இது ஒரு கனிம படிவத்தில் இருந்து வருகிறது. கடல் உப்பு பொட்டாசியம், zinc , இரும்பு சத்து உள்ளது. அனால் இப்போது நிறைய அழுக்கும் சேர்ந்து வருகுது. 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2020 at 10:13, nilmini said:

கறி செய்வதுக்கு : மஞ்சள் உருளை கிழங்கு, மெலிதாக வெட்டிய லீக்ஸ் அல்லது green onion, கரட் சீவியது.

உருளைக்கிழங்கிற்கு பதிலாக கத்தரிக்காய் போட்டு கொஞ்சம் வித்தியாசமாக பீட்டர் குருவிட்ட(Peter Kuruvita) தயாரித்துள்ளார். நீங்களும் விரும்பினால் செய்து பார்க்கலாம்..

https://www.sbs.com.au/food/recipes/pumpkin-curry-brinjal-rotti

  • கருத்துக்கள உறவுகள்

நனும் முறை சொதப்பிட்டன், இனியொருக்கா செய்து பார்ப்போம், சுட சுட பிளேன்ரியுடன் கொழும்பில் சாப்பிடுவது வளக்கம், நல்ல சுவையாக இருக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2020 at 23:02, தமிழ் சிறி said:

பார்க்க வடிவாக இருக்கின்றது. ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். 

செய்து பார்க்கலாமே சிறி. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

செய்து பார்க்கலாமே சிறி. 

நீங்கள் வேற .....முன்பு அவர் இடியப்பம் பிழிவதற்குத்தான் குசினிக்குள் போனவர், பின்பு நான் மா குழைக்கிற பதத்தை சொல்ல திருமதி பிழிந்து பார்த்து சுலபமாய் இருக்கெண்டு தெரிஞ்சு மனிசி அவரை குசினிக்கையே வரவிடுறதில்லை......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உருளைக்கிழங்கிற்கு பதிலாக கத்தரிக்காய் போட்டு கொஞ்சம் வித்தியாசமாக பீட்டர் குருவிட்ட(Peter Kuruvita) தயாரித்துள்ளார். நீங்களும் விரும்பினால் செய்து பார்க்கலாம்..

https://www.sbs.com.au/food/recipes/pumpkin-curry-brinjal-rotti

கத்தரிக்காயை தேங்காய் எண்ணையில வதக்கும்போது  நல்ல ருசி. நல்லாத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் 

3 hours ago, உடையார் said:

நனும் முறை சொதப்பிட்டன், இனியொருக்கா செய்து பார்ப்போம், சுட சுட பிளேன்ரியுடன் கொழும்பில் சாப்பிடுவது வளக்கம், நல்ல சுவையாக இருக்கும் 

இந்த முறை அவ்வளவு கஸ்டம் இல்லை . செய்து பாருங்கள் 

40 minutes ago, suvy said:

நீங்கள் வேற .....முன்பு அவர் இடியப்பம் பிழிவதற்குத்தான் குசினிக்குள் போனவர், பின்பு நான் மா குழைக்கிற பதத்தை சொல்ல திருமதி பிழிந்து பார்த்து சுலபமாய் இருக்கெண்டு தெரிஞ்சு மனிசி அவரை குசினிக்கையே வரவிடுறதில்லை......!   😁

இப்பதானே குட்டு  வெளிப்பட்டிருக்கு 😀.  இடியப்பத்துக்கு  எப்பிடி குழைப்பது என்று பதிவிடவும். நானும் செய்து பார்க்கிறேன். இப்போதைக்கு சிங்கள முறைப்படி தான் செய்கிறேன் ( MDK இடியப்ப மாவில்)

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.