Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து மட்டுவிற்கு கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்ய சென்றவருக்கு கொரோனாவாம் ...அங்கு ஆஸ்பத்தியில் வைத்திருந்து உறுதிப்படுத்திய பின்னர் கொழும்பிற்கு அனுப்பி உள்ளனர் ...இன்னும் எத்தனை பேருக்கு வர போகுதோ ?...கட்டுநாயக்காவை மூடி விட்டார்களாம் 

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

லண்டனில் இருந்து வந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி

 

-என் .ராஜ்

லண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே, இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், லண்டன் நாட்டிலிருந்து வருகை தந்த அவர், அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில், அவரது உறவினர்கள் ஊடாக , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/லண்டனில்-இருந்து-வந்தவர்-யாழ்-வைத்தியசாலையில்-அனுமதி/71-247069

  • தொடங்கியவர்

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2020 மார்ச் 18 , மு.ப. 07:42

 

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசாக்களும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, செல்லுபடியாகும் காலம், கடந்த 14 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்கள் விசா கட்டணத்தை செலுத்தி, அதனை தமது வெளிநாட்டு கடவுச் சீட்டுகளில் முத்திரையிட்டு நீடித்துக்கொள்ள முடியும்.

அதற்காக ஏப்ரல் மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில், ஏதேனும் ஒரு தினத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுவிற்கு வருகைதர முடியும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/விசா-செல்லுபடியாகும்-காலம்-நீடிப்பு/175-247136

ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்டது மற்றுமொரு கொரோனா பரிசோதனை முகாம்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்திருப்போரை கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்வதற்கு ஸ்ரீலங்காவின் பூஸா கடற்படை முகாமிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 43 ஆக அதிகரித்துள்ள நிலையில், வடக்கில் வவுனியாவில் 3 பரிசோதனை முகாம்களும், வைத்தியசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அநுராதபுரம் கந்தக்காட்டுப் பகுதியிலும், மட்டக்களப்பு, தியத்தலாவ இராணுவ முகாம் என்பவற்றிலும் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் அதிகளவில் நோய்த் தொற்று ஏற்படாது இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/139264

இலங்கை அரசு வெளி நாட்டிலிருந்து கொரோனவை காவி வந்த அந்த காவிகளை தடை செய்திருந்தால் இந்த பிரச்சினையே இல்லை। சில கொரோன வைரஸ் இந்த தளத்திலும் காணப்படுகின்றது।

  • கருத்துக்கள உறவுகள்

கொரனா பீதி.. புத்தளத்தில் இன்று மாலை 4.30 முதல் ஊரடங்குச் சட்டம்

Police curfew will be imposed in the Puttalam District and Kochchikade in Negombo from 4.30 pm today to assist in the measures being adopted to prevent the spread of COVID-19 in the country, Police said.  

Curfew will be imposed in Puttalam, Anamaduwa, Kalpitiya, Karuwalagaswewa, Mundalama, Nawagaththegama, Pallama, Wanathawilluwa, Udappuwa, Norochcholai and in the Saliyawewa police areas in the Puttalam Division.

Curfew will also be imposed in police areas of Chilaw, Dankotuwa, Koswatta, Madampe, Marawila, Wennappuwa and Arachchikattuwa in the Chilaw Police Division.  

Police said there were no restrictions on public transport and essential services during the curfew and that the curfew would not affect the process of handing over of nominations.

http://www.dailymirror.lk/top_story/Police-curfew-in-Puttalam-Kochchikade-from-4-30-pm-today/155-185237

சொறீலங்காவில் கொரனா தொற்று 43 பேரில் இனங்காணப்பட்டுள்ளது. இனங்காணப்படாமல் எத்தனை பேரோ..??1

Nine more tests positive for COVID-19: Total rises to 43

http://www.dailymirror.lk/breaking_news/Nine-more-tests-positive-for-COVID-19-Total-rises-to-43/108-185169

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

thumb_17_03_2020_3.gif

  • தொடங்கியவர்

இறக்குமதி செய்யப்படும் முகக்கவசம், கிருமிநாசினிகளுக்கு வரி விலக்கு !

நாட்டில் நிலவிரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களிற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு நிமித்தம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு இதுவைரையில் அறவிடப்பட்டு வந்த வரிகளை அனைத்தும் இன்று நள்ளிரவு (18.03.2020) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

https://www.virakesari.lk/article/78150

  • தொடங்கியவர்

மாணவர்கள் வீடுகளிலிருந்தே கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாணவர்கள் தமது வீடுகளிலிருந்தவாறே இணையம் மூலமாகக் கல்வி கற்கும் வகையிலான ஏற்பாடுகளை கல்வியமைச்சு ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு, அக் காணொளிகள் டயலொக் வலையமைப்பின் ஊடாக வழங்கப்படும் 'நனச' தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.

அதேபோன்று கல்வியமைச்சின் மூலம் 'தக்சலாவ' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் e-Thaksalawa.moe.gov.lk என்ற இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் 1 - 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், அதனைக் கற்பதற்கு இலகுவான விதத்தில் மும்மொழியில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கும் மேலதிகமாக இணைய நூலகம், விசேட கற்றல், வினாப்பத்திரங்கள் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கல்வித் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். அதுமாத்திரமன்றி சில பாடங்களை செயன்முறை அடிப்படையில் கற்கும் விதமாகக் காணொளிகளும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

>இதுகுறித்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக பாடசாலைகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நாட்களைப் பயனுடைய வகையில் செலவிடும் வகையில் நாம் இத்திட்டத்தை முனைப்புடன் அமுல்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்' என்றார்.

 

https://www.virakesari.lk/article/78160

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

Curfew will be imposed in Puttalam, Anamaduwa, Kalpitiya, Karuwalagaswewa, Mundalama, Nawagaththegama, Pallama, Wanathawilluwa, Udappuwa, Norochcholai and in the Saliyawewa police areas in the Puttalam Division.

20-E020-D3-4-C74-456-E-8-A28-4-D4-C84395

  • தொடங்கியவர்

நாடளாவிய ரீதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 2,287 பேர்!

(எம்.எப்.எம்.பஸீர்)

இத்தாலியலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு வயதும் 5 மாதங்களும் ஆன குழந்தை மற்றும் அதன் தாய் உள்ளிட்ட 50 பேர் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்களுடன் சேர்ந்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு 50 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அணில் ஜாசிங்க கூறினார்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோன வைரஸ் தொற்றாளர்களில், 5 பேர் இத்தாலியில் இருந்து இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்று வந்தவர் எனவும் ஏனைய மூவரும் இங்கிலாந்திலிருந்து வந்தோருடன் தொடர்புபட்ட சுற்றுலா வழிகாட்டிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனைக் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி, கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனலார் சவேந்ர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இன்று புதிதாக 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று நாம் 15 தொற்றாளர்களை அடையாளம் கண்டதாக கூறிய போதும், அதில் சிறு தவறு உள்ளது. அதாவது இரு நபர்களை நாம் இரு முறை கணித்துள்ளோம். அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்ட 13 தொற்றாளர்களுடன் மொத்த எண்ணிக்கை 41 ஆகும்.

இன்று புதிதாக ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்கள் 50 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதனிடையே நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 212 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.
 

இதனிடையே நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 16 தனிமைப்படுத்தல், தொற்று நீக்கல் நடவடிக்கை தொடர்பிலான மருத்துவ கண்காணிப்பு முகாம்களில் 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2287 பேர் தற்போது கண்கானிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனலார் சவேந்ர சில்வா தெரிவித்தார்.

அவ்வாறு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 19 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் இத்தலியலிருந்து இருந்து வந்தோர் எனவும் மற்றையவர் பிரித்தனையாவிலிருந்து வந்தவர் எனவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/78176

  • தொடங்கியவர்

வெளியில் நடமாடுவதை குறையுங்கள்!

 

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாக கோரியுள்ளனர்

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

பலாலியில் வந்திறங்கிய 60 பேரை தேடுகிறோம்.

இதுவரையில் யாழ்ப்பாணத்தில் எந்த நோயாளியும் இனம் காணப்படவில்லை. பலாலி விமான நிலையம் மூலம் எமது மண்ணிற்கு 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வந்திறங்கி பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் எவருமே கண்காணிக்கப்படவில்லை. அவர்களின் வீட்டு விலாசங்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் சேகரித்து அவர்களை கண்காணித்து அவர்களுக்கு கொரோனோ உள்ளதா என பரிசோதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள்

கொரொனோ தொற்றானது ஒரு நோய் தொற்றுஉள்ளவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும். நோயாளியின் நீர் துளிகள் மூலமே அவை பரவுகின்றது. எனவே நாம் நோயில் இருந்து தப்புவதற்கு முதலில் செய்ய வேண்டியது. தேவையற்று வெளியில் நடமாடாமல் வீட்டிலையே இருப்பதே சிறந்தது.அதற்காகவே அரசாங்கம் விடுமுறையை விடுத்துள்ளது.

ஆனால் யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது நோய்க்காக அரசாங்கம் விட்ட விடுமுறையை பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட விடுமுறை போல பலரும் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை விடினும் புடவைக்கடை , நகைக்கடை என்பவற்றிலும் மக்கள் கூட்டமாக பொருட்களை கொள்வனவு செய்வதில் உள்ளார்கள்.

இந்த நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க முடிந்த வரையில் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்லாது தவிர்ப்பதே சிறந்தது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதாயின் வீட்டில் உள்ள ஒருவர் மாத்திரம் சென்று அவற்றை கொள்வனவு செய்யவும்.

கல்யாண வீடு , பிறந்தநாள் கொண்டாட்டம் என்பவற்றில் கலந்து கொள்வதனையும் தவிர்த்து கொள்வது சிறந்தது.

நோய் தொற்று உள்ளதாக சந்தேகிப்போர் வீட்டில் தனிமைப்பட்டு இருங்கள்

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நிச்சயமாக வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டு 14 நாட்களின் பின்னரே அதற்கான அறிகுறிகள் தென்படும். எனவே 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

நோய்க்கான அறிகுறிகள் காணப்பட்டால் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து அவர் மூலம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தி அவர் ஊடாகவே வைத்திய சாலைக்கு செல்வது சிறந்தது

வீட்டில நோய் தொற்று உள்ளவர் என சந்தேகப்படுபவர் தானே தனிமைப்பட்டு இருப்பது மட்டுமின்றி அவர் உபயோகிக்கும் பொருட்களை அவரே சுத்தம் செய்ய வேண்டும்

கை. கால் முகங்களை கழுவுங்கள்

அதேவேளை வீட்டிற்கு வெளியே சென்று வருவோர் வீட்டிற்குள் போக முன்னர் முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும் முகத்தையும் நன்றாக கழிவி விட்டு செல்ல வேண்டும். அதேபோன்று அலுவலகத்திற்கு செல்வோரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

வர்த்தக நிலையங்களை இரண்டு வாரமாவது பூட்டுங்கள்

யாழில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வருடன் கதைத்திருந்தோம். அவரும் தான் அது தொடர்பில் வணிகர் கழகத்துடன் பேசுவதாக கூறி இருந்தார். குறைந்தது இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடுவதனால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

வடக்கு ஆளூநர் கொழும்பில்

இந்நிலையில் வடமாகாண ஆளுனர் யாழ்ப்பாணத்தில் இல்லை. அவர் கொழும்பில் தங்கியுள்ளார். சில விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் தேவை. ; மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம்.

வெளிநோயாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

வைத்திய சாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த கிளினிக்கு வருவோரை கட்டுப்படுத்தும் முகமாக சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

அதாவது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இடையில் இடைவெளிகளை பேணும் நோக்குடன் நோயாளிகள் காத்திருக்கும் கதிரைகளில் ஒன்று விட்ட ஒரு கதிரையில் நோயாளிகள் உட்காரும் முகமாக ஒன்று விட்ட ஒரு கதிரைக்கு ஸ்ரிக்கர் ஒட்டியுள்ளோம். ஸ்ரிக்கர் ஒட்டிய கதிரைகளில் உட்கார வேண்டாம் என அவர்களை அறிவுறுத்தி உள்ளோம். அதேவேளை சுத்திகரிப்பு பணிகளை மூன்று வேளைகளிலும் மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொது இடங்களில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் வீட்டில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.

தேவையற்று வைத்திய சாலைக்கு வராதீர்கள்.

அடுத்து மாதாந்த கிளினிக் வருவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வைரஸ் இலகுவாக பரவி விடும். அதனால் கிளினிக் வருவோர் கட்டாயமாக வைத்தியரை சந்திக்க வேண்டும் எனும் தேவை இருப்பின் மட்டும் கிளினிக் வரலாம். மருத்துவரை பார்க்க வேண்டிய தேவை இல்லாவிடின் அவர்கள் உறவினர்கள் மூலம் தமது கிளினிக் கொப்பியை கொடுத்து மருந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோன்று வைத்திய சாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட வரும் பார்வையாளரை கட்டுப்படுத்தி உள்ளோம் ஒரு நோயாளியை ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்க முடியும். அதற்காக மீண்டும் பாஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உபகரணங்கள் போதியளவில் கையிருப்பில் இல்லை.

கொரோனோ நோயாளிகளை பரிசோதிப்பதற்கு வைத்தியர்கள் , தாதியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் இல்லை தற்போது மந்திகை வைத்திய சாலையில் இரண்டே உள்ளது. அதனை கொண்டு ஒரு நோயாளியையே அணுக முடியும். மேலதிக நோயாளிகள் வந்தால் அவர்களை எவ்வாறு அணுகுவது. மந்திகைக்கு ஒரு கொரோனோ வைத்திய சாலைக்கு ஒரு நோயாளி வந்தால் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றுவதில்லையே சிக்கலைகளை ;இது தொடர்பில் வைத்திய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி உள்ளோம்

தற்போது வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளிகளிடம் கொரோனோ நோய் இருக்கும் என சந்தேகப்படுபவர்களுடன் பழக்கங்கள் இருந்ததா என வினாவி அவ்வாறு பழக்கம் இருந்தால் கொரோனோ நோயாளிகளை பரிசோதிக்க என பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பரிசோதனை செய்கிறோம்.

இதுவரையில் மந்திகை வைத்திய சாலைக்கு நான்கு பேரை கொரோனோ நோய் சந்தேகம் உள்ளதாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது அவர்களிடம் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் அவர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதித்துள்ளோம். வீடுகளுக்கு சென்றவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டு இருக்குமாறே அறிவுறுத்தி உள்ளோம்.

அதேவேளை அவசர சிகிச்சை பிரிவில் போதியளவு கட்டில்கள் இல்லை. தற்போது உள்ள கட்டில்கள் அனைத்திலும் வேறு நோயாளர்கள் உள்ளனர். அதேபோன்று செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் உள்ளிட்டவையும் போதியளவில் இல்லை.

எனவே யாழ்ப்பாணத்திற்கு கொரோனோ வைரசின் தாக்கம் வருமாயின் அதனை எதிர்கொள்வதற்கு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி வரும். எனவே வரும் முன் காப்போம். நோய் தொற்றில் இருந்து எம்மை பாதுகாக்க உரிய நடைமுறைகளை பின்பற்றுங்கள் என கோரிக்கை விடுத்தனர்,

http://eelamurasu.com.au/?p=26085

  • தொடங்கியவர்

கொரோனா பீதி; பெருங்காயம், மஞ்சள் விலைகள் ஏற்றம்

சகா

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அம்பாறை பிராந்தியத்தில் பெருங்காயம், கட்டி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகியனவற்றுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

பெருங்காயத்தை கையில் அல்லது வீட்டின் அறையில் கட்டிவைத்தால் கொரோனா வைரஸ் நெருங்காது என்ற பேஸ்புக் பதிவுத் தகவலினடிப்படையில் பெருங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.  

10 ரூபாய்கு விற்கப்பட்ட ஒரு பக்கெட் பெருங்காயம், தற்போது 300ரூபாய்கும் கிடைப்பது அரிது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், கிருமிக்கொல்லியான கட்டி மஞ்சள் இதுவரை ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1,300ரூபாய் வரை விற்கப்படுகிறது.  தூள் பக்கெட் மஞ்சள் 50ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்தத் திடீர் விலையுயர்வை, விலைக் கட்டுப்பாட்டுக் குழுவினர்  கவனிப்பதில்லையா என பாவனையாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இதேவேளை, விலை குறைக்கப்பட்டதென அறிவிக்கப்பட்ட ரின் மீன், பருப்பு ஆகியனவற்றையும் புதிய விலைகளில் கடைகளில் கொள்வனவு செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/கரன-பத-பரஙகயம-மஞசள-வலகள-ஏறறம/74-247193

  • தொடங்கியவர்

கட்டாரில் வாழும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தமக்கு கொரோனா நோய்க்கான அறிகுறி இருப்பதாக உணர்ந்தால் அவர்கள் தங்களை இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள விஷேட மருத்துவ முகாம் ஒன்று கட்டாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ,

இதனை இலங்கை தூதரகம் (Embassy of Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த மருத்துவ முகாமை Primary Health Care Corporation of Qatar நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Location :
Al wab Street,
Al Rayyan,
Muaither.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

கொரோனா தொற்று எண்ணிக்கை 59ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொரோவை ஒழிப்பு மத்திய நிலையத்தினால் இன்று (19) பிற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (17) இரவு வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு  43 பேர்  உள்ளானமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (18) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் இருவர்  பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்தது.

தற்போது, மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறற-எணணகக-59ஆக-அதகரபப/150-247247

  • தொடங்கியவர்

நாட்டிலுள்ள 38 ஆயிரம் வெளிநாட்டவர்களை அனுப்ப நடவடிக்கை!

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை மீள அவர்களது நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்தோடு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78232

ஸ்ரீலங்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆயிரம் லீட்டர் மூலப்பொருள்!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆயிரம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த எத்தனோல் தொகையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீட்டர் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாகவும் பிரதி கலால் திணைக்கள பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139347?ref=imp-news

இலங்கையில் தங்கியுள்ள 38,000 வெளிநாட்டவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை!

Corona-virus-Situation.jpg

இலங்கையில், தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை, மீள அவர்களது நாட்டிற்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்று 7 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மொத்தமாக 59 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கையில்-தங்கியுள்ள-38000-வ/

  • தொடங்கியவர்

thumb_corona1.gif

யாழ் -கொழும்பு குளிரூட்டப்பட்ட புகையிரதசேவை நிறுத்தப்பட்டது

யாழ்.காங்கேசன்துறை- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை நாளை தொடக்கம் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து அதிகாலையில் 5.10 க்கும், மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து 1.45 க்கும் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/139369

  • தொடங்கியவர்

thumb_ccc.gif

  • தொடங்கியவர்

இலங்கையில் உண்மை நிலைமை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம்- ராஜித – சரத்

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும் சரத்பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன இத்தாலியுடன் ஒப்பிடும்போது இலங்கையில் ஆரம்பநாட்களில் வெளியாகியுள்ள பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நிலைமை அடுத்த மாதம மேலும் தீவிரமடையலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்து முரணான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வெளியாகின்றன என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் இந்த சூழல் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு பதில் நிலைமையை கட்டுப்படுத்த முயலவேண்டும் என சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78272

  • தொடங்கியவர்

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களில் பற்றாக்குறை

(நா.தனுஜா)
வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது வரவேற்கத்தக்க விடயமல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்திருக்கிறது.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தி கொரோனா வைரஸ் பரவலைக் கட:டுப்படுத்தும் தேசிய செயற்திட்டத்திற்குப் பொறுப்பாக இயங்கிவரும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலில் உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களுக்கு ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை பெரிதும் வரவேற்கிறோம்.

அதேவேளை இந்த உயர் எச்சரிக்கைப் பிரதேசங்களிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். அதன்படி அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து ஒட்டுமொத்த நாட்டிலும் பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அவசியமாக உரிய பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவது திருப்திகரமான விடயமொன்றல்ல.

நோய்நிலைமையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு (சுவாசக்கோளாறு) காணப்படுவதனால் புகைப்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு நாட்டிலுள்ள அனைத்து மதுபானச்சாலைகளையும் மூடுவதும் தற்போதைய தருணத்தில் மிகவும் அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், சுகாதார சேவையாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அவசிய உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை நாடுவது சிறந்ததாகும்.

https://www.virakesari.lk/article/78278

  • தொடங்கியவர்

கொரோனாவின் தாக்கம் : 59 ஆக உயர்வு : 81 சதவீதமானவர்கள் ஆண்கள்

 

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்வு!

In இலங்கை     March 20, 2020 11:57 am GMT     0 Comments     1489     by : Litharsan

Scientists-in-Israel-likely-to-announce-it-developed-coronavirus-vaccine.jpg

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை இன்று காலை அறிவிப்பின்படி 65 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகிறது.

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். தேவையேற்படும் பட்சத்தில் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமானால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-தொற்றுக்குள்ளானவ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.