Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திஹார் சிறையில் காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்

Featured Replies

2 hours ago, ampanai said:

உலகில் உள்ள 195 நாடுகளில் 55 நாடுகளே தண்டனையாக கொலையை வழங்கும் நாடுகள். 
பெரும்பாலான, ஏறக்குறைய முழுமையான புலம்பெயர் தமிழர் வாழ் நாடுகளில் தூக்குத்தண்டனை - இல்லை.  

இந்தியா, இன்றும் அந்த சிறுபான்மை நாடுகளில் பட்டியலில் உள்ளது.அந்த நாடுகளால் கொலைத்தண்டனையை நிறுத்த முடியும் என்றால், இந்தியாவாலும். முடியும். 

இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளில் தூக்குத்தண்டனை இல்லை. 

ஆனால், ஆண் / பெண்   பாலியல் வன்புணர்வுகள் இல்லையா? என்றால் இல்லை இருக்கின்றது. 
ஆணை இல்லை பெண்ணை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கி படுகொலை செய்வது இல்லை ? - இருக்கின்றது. 

ஆகவே, ஏன் தூக்குத்தண்டனை இல்லாமல் செய்யப்பட வேண்டும்? 

அதற்கான பதில் - புள்ளி விபரங்கள்.

தேடுங்கள்... பதிலை தேடுங்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

ஆக இனி யாரும் இப்படியான குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று நம்பலாமா ராசவன்னியன்?

ஒருவர் செய்த குற்றத்தை  அவர் உணர்ந்து திருந்துவதற்கான வாய்ப்பே நீதியாக இருக்க வேண்டும் என்பதை எனது கருத்து.

சர்வதேச அறிக்கையின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 100 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெறுவதாகச் சொல்கிறார்கள்.  இதையைம் கவனிக்க வேண்டும்.

சட்டங்களும்  தண்டனைகளும் கல்வி போதனை முறைகள் போன்றவற்றை வகுக்கும்போது  ஒவ்வொரு நாகரீகங்களின் வளர்ச்சியையும் அவர்களின் சமூக  உளவியலையும் கருத்திற் கொள்ள வேண்டும். 

இவற்றை கருத்திற் கொள்ளாத எந்த முயற்சியும் பூரண வெற்றியைத் தராது. 

இந்தியாவில் பாலியல் அறிவோ சட்ட வரைமுறைகளோ அறியாத எத்தனையோ மில்லியன் எழுத்தறிவற்ற மக்கள் சமூகங்கள் உள்ளபோது சட்டங்களும் தண்டனைகளும் பலன்தருமென எதிர்பார்ப்பது தவறு.

இலங்கையிலும் இவ்வாறான போக்கு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மருத்துவத்துறை மாணவி நிர்பயாவுக்கு நடந்தது துயர் மிகுந்த சம்பவம். நான்கு இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டதும் துயரமான சம்பவம். 

மாணவி  நிர்பயா கொலை செய்யப்பட்டவிதம் அதிர்ச்சியானது. இப்படியோர் கொலையை அரங்கேற்றிய குரூரபுத்தி இந்த இளைஞர்களுக்கு ஏற்பட காரணம் என்ன என்று அறியப்பட்டு அந்த கோளாறுகள் எதிர்காலத்தில் வேறு இளைஞர்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வழிவகைகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்களின்  மனவளத்தை மேம்படுத்தாமல் வெறும் தூக்குத்தண்டனை பயமுறுத்தல் மட்டும் கொடுப்பது எதிர்காலத்தில் இப்படியான கொலைகள், கொடுமைகள் செய்யப்படுவதை தடுக்குமா என்பது சந்தேகமே. 

தென் இந்திய கண்டம் முதலில் பெண்களை மதிக்கும் சமூகமாக நாகரீகமடையாதவரை நாங்கள் என்ன விரும்பினாலும் அது கனவே. 

கல்வியறிவுள்ள இந்திய ஆண்கள்கூட மிக இலகுவா பாலியல் சேட்டைகள் sexual harassment  செய்வதை (முக்கியமாக பார்வையால்)க நாளாந்தம் காணலாம்.

இதனால் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெற்று விடுவார்களா?

இல்லை - என்பதுதான் இந்தக் கேள்விக்கு சிறிய அளவிலான பதிலாக இருக்கும்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றும் அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2.  பாலியல் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சமூக மற்றும் பணவசதி பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

3. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். வீடுகளில், விளையாட்டு மைதானங்களில், பள்ளிக்கூடங்களில், தெருக்களில் - ஒரு பெண் தன் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வரும் அந்தத் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

தீர்வுகள் 

1. ஆணாதிக்க மனப்பான்மையை உடைக்க வேண்டும், ஆண்களுக்கான போகப் பொருளாக பெண்களைக் கருதும் நிலை மாற வேண்டும் 

2. குடும்பங்களும், பரவலான சமுதாயமும் தான் முக்கிய பங்காற்ற வேண்டும்

3. பெண்களுக்கு மரியாதை அளிக்க ஆண்களுக்குக் கற்றுத் தருவதற்காக பள்ளிக்கூடங்களில் பாலின கல்வி பயிற்சித் திட்டங்களைத் தொடங்கி இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு கூறியுள்ளது. 

https://www.bbc.com/tamil/india-51966843

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கில் தொங்கிய...   அந்த... நாலு பேரும், 
இனி... இந்த உலகத்தில்.. மறு பிறவி... எடுக்கப் படாது.  🔨

28 minutes ago, ampanai said:

2.  பாலியல் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சமூக மற்றும் பணவசதி பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் சட்டம் யாவருக்கும் சமமாக இல்லை. அது மாறினாலே பல பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கிவிடும். அதற்கு, சரியான அரசியல் விழிப்புணர்வு வேண்டும்.

நிர்பயாவின் நீதிக்கு போராடியவர்கள் அந்த அரசியல் மாற்றத்திற்கும் போராடி வெற்றி கண்டால் சிறப்பு. 

31 minutes ago, ampanai said:

3. பெண்களுக்கு மரியாதை அளிக்க ஆண்களுக்குக் கற்றுத் தருவதற்காக பள்ளிக்கூடங்களில் பாலின கல்வி பயிற்சித் திட்டங்களைத் தொடங்கி இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு கூறியுள்ளது.

மேற்குலக நாடுகளில் இந்த பாலியல் கல்வி என்பது நன்மையா இல்லை தீமையா என்ற விவாதம் ஓய்ந்து விட்டது. இது இன்று பதின்ம வயதினருக்கு தெளிவாக முடிவுகளை எடுக்க உதவுகின்றது. எது தவறு என்பதை புரிய முடிகின்றது.  

On 3/19/2020 at 11:01 PM, போல் said:

தூக்குத் தண்டனையை எதிர்பவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் சில விதிவிலக்குகள் அவசியமாகின்றன.

எந்தவொரு தவறும் செய்யாத ஒரு அப்பாவி பலப்பிரயோகத்தால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை எந்தவொரு காரணத்துக்காகவும் மன்னிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னணியில் இந்த தூக்குத் தண்டனையை கண்டிக்கத் தோன்றவில்லை.  

அதுபோலவே ஈழத்திலும் எவ்வித குற்றங்களும் செய்யாத அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள-பௌத்த இராணுவப் போர்க்குற்றவாளிகளும் அவர்களை இயக்கிய சிங்கள-பௌத்த அரச இயந்திரமும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே!

சட்டம் என்பது விதிவிலக்கிற்கு உள்ளாவதே, ஆசிய நாடுகள் பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கி இருக்க ஒரு முக்கிய காரணம். 

பாதிக்கப்பட்டவர் இல்லை பாதிப்பை செய்தவர் ஒரு அரசியல், பொருளாதாரா சமூக பதவியை கொண்டவராக இருப்பின், அவருக்கும் அதே சட்டம் பெரும்பாலும் அமுலாக்கப்படுவதில்லை.  

8 hours ago, தமிழ் சிறி said:

தூக்கில் தொங்கிய...   அந்த... நாலு பேரும், 
இனி... இந்த உலகத்தில்.. மறு பிறவி... எடுக்கப் படாது.  🔨

இந்த நாலு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அவர்களில்  ஒருவர் தன்னும் வயதான காலத்தில் பாலியல் பலாத்காரம் பற்றிய ஒரு பேச்சாளாராக, அதன் கொடுமைகள் பற்றி உணர்ந்து மக்களுக்கு எடுத்துரைப்பவராக இருந்தால், இன்னும் ஒரு சில நிர்ப்பயாக்கள் உருவாக்கப்படாமல் போயிருப்பார்கள். 

எத்தனை பேரை தூக்கில் போட்டும் குற்றங்கள் அமெரிக்காவில் குறைந்ததில்லை. அதேவேளை, தூக்கில் இடாத நாடுகளில், அமெரிக்க அளவிற்கு அவ்வாறான பாரிய குற்றங்கள் இல்லை. 

12 hours ago, ரதி said:

இதெல்லாம் உங்கட சகோதரிகளுக்கோ அல்லது உங்கள் மகளுக்கோ நடக்காது என்ற தைரியத்தில் எழுதுகிறீர்கள் ...ஆயுள் தண்டனை கொடுத்து உழைக்கின்ற மக்களது வரிப் பணத்தில் அவர்களை சிறையில் வைத்து சாப்பாடு போடுவதை விட அவர்களை தூக்கில் போட்டதே மேல் ...இந்த குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை உணரவேயில்லை ...இனி மேல் உணர போவதுமில்லை 

" ஒருவரை தூக்கில் போடுவதால் அடுத்தவர் அதே குற்றத்தை செய்யமாட்டார் " என்பது தோற்றுப்போன ஆதாரபூர்வமான விடயம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ampanai said:

நன்றி பகிர்விற்கு. குற்றத்தை மறுப்பதற்கில்லை. தண்டனையை பற்றித்தான் கருத்து வேறுபாடுகள். 

இவர் இறக்கும் பொழுது, 41 வயது. குற்றம் புரிந்த காலம் : 1975 - 1989. நிரூபிக்கப்பட்ட கொலைகள் - 6 

April 27, 1995 இல் தூக்குத்தண்டனை செய்யப்பட்ட இவர் இன்றும் சிறையில் இருந்தால், இவ்வாறு குற்றங்கள் செய்வது குறையும் என்பதே வாதம். 

நீங்கள் அப்படி சொல்கின்றீர்கள்.
ஆட்டோ சங்கரைப்பற்றி இவர்கள் இப்படி சொல்கின்றார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

இந்த நாலு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அவர்களில்  ஒருவர் தன்னும் வயதான காலத்தில் பாலியல் பலாத்காரம் பற்றிய ஒரு பேச்சாளாராக, அதன் கொடுமைகள் பற்றி உணர்ந்து மக்களுக்கு எடுத்துரைப்பவராக இருந்தால், இன்னும் ஒரு சில நிர்ப்பயாக்கள் உருவாக்கப்படாமல் போயிருப்பார்கள். 

எத்தனை பேரை தூக்கில் போட்டும் குற்றங்கள் அமெரிக்காவில் குறைந்ததில்லை. அதேவேளை, தூக்கில் இடாத நாடுகளில், அமெரிக்க அளவிற்கு அவ்வாறான பாரிய குற்றங்கள் இல்லை. 

சில வேளைகளில் உங்கள் கருத்துக்களைப் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்பதில் எனக்குக் குழப்பம் 🤔 ஏற்படுகிறது.

 

உலகின் பல சிறைகளிலும் பாலியல் வன்புணர்வு நடக்கின்றது.

இதை பெரும்பலானவர்வகள் கணக்கில் எடுப்பதில்லை. 

மேற்குலக நாடுகளில் சிறுவர்களை பாலியல் வன்புனர்விற்கு உள்ளாக்கி கொலை செய்தவர்களை தூக்கில் இடாமல் , சிறை தண்டனை விதித்து விடுதலையும் செய்யப்படுவதுண்டு. 

அவிசுல் அவ்வாறு நடந்த நபர் பற்றியது இது : 

 

57 minutes ago, Kapithan said:

சில வேளைகளில் உங்கள் கருத்துக்களைப் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்பதில் எனக்குக் குழப்பம் 🤔 ஏற்படுகிறது.

சட்டங்கள் என்பன குற்றத்தை குறைக்கும் நோக்கம் கொண்டவை. தண்டனைகள் அதை, அதாவது குற்றத்தை குறைக்க பயன்படுத்தப்படும் வழிகளில் ஒன்று. 

நாடுகள் பலவற்றால் தங்களின் சட்டத்தில் ( இது பாலியல் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல) மாற்றங்களை கொண்டுவர குற்றம் செய்தவர்களை 'படிப்பதும்' ஒன்று. 

பல குற்றம் செய்தவர்கள் அதை உணர்ந்து, காலப்போக்கில் நல்ல மனிதர்களாக மாறி, அந்த குற்றத்தின் பேச்சாளாராக  மாறி தன் போன்றவர்கள் உருவாகாமல் இருக்க உழைத்துள்ளார்கள். அதுவே மனித வளர்ச்சி. அதுவே ஆரோக்கியமான சமூகம். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ampanai said:

சட்டங்கள் என்பன குற்றத்தை குறைக்கும் நோக்கம் கொண்டவை. தண்டனைகள் அதை, அதாவது குற்றத்தை குறைக்க பயன்படுத்தப்படும் வழிகளில் ஒன்று. 

நாடுகள் பலவற்றால் தங்களின் சட்டத்தில் ( இது பாலியல் சம்பந்தப்பட்டவை மட்டும் அல்ல) மாற்றங்களை கொண்டுவர குற்றம் செய்தவர்களை 'படிப்பதும்' ஒன்று. 

பல குற்றம் செய்தவர்கள் அதை உணர்ந்து, காலப்போக்கில் நல்ல மனிதர்களாக மாறி, அந்த குற்றத்தின் பேச்சாளாராக  மாறி தன் போன்றவர்கள் உருவாகாமல் இருக்க உழைத்துள்ளார்கள். அதுவே மனித வளர்ச்சி. அதுவே ஆரோக்கியமான சமூகம். 

நிர்பயா குற்றம் நடைபெற்ற விதத்தை ஒருமுறை உங்கள் மனதில் தெளிவாக கற்பனை செய்து பாருங்கள்.  அதன் குரூரத்தை எண்ணிப்பாருங்கள். இதனை செய்வதற்கான மன நிலையை எப்படி வந்தது  என்பதை உணர்ந்து அதன்பின் அவர்கள் உங்கள் விருப்பப்படி கோட் சூட்டுடன் வந்து எல்லோருக்கும் விரிவுரை எடுப்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கே வெட்கம் வரவில்லையா ?

திருந்துவதற்காக தண்டிப்பது என்கின்ற வாதம்  சரியானதுதான்.  ஆனால் அது எல்லா குற்றங்களுக்கும் குற்றம் நடைபெற்ற சூழலுக்கும் பொருந்தாது. 

தூக்கிகிடப்பட்டவர்களுக்கு,  குற்றம் நடைபெற்ற விதத்தை வைத்து பார்க்கும்போது இதுதான் முதற் தடவை குற்றமிழைத்தார்கள் என நினைக்கிறீர்களா ?

1 hour ago, ampanai said:

 

உலகின் பல சிறைகளிலும் பாலியல் வன்புணர்வு நடக்கின்றது.

இதை பெரும்பலானவர்வகள் கணக்கில் எடுப்பதில்லை. 

என்ன சொல்ல வருகிறீர்கள் ? இதுவும் பிழை அதுவும் பிழை ஆகவே இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டாம் என்கிறீர்களா ? 

நீங்கள் அப்படிச் சொல்ல முனையவில்லை என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மனிதர்கள் தோன்றிய காலத்தில் இருந்து ஒருவரை ஒருவர் கொன்றுதான் வருகின்றனர். அயோக்கியர்களுக்கும், விலங்குகள் போன்று நடப்பவர்களுக்கும், வக்கிரமான மனம்கொண்டு பெண்களை வன்புணர்ந்து கொடுமைப்படுத்துவோருக்கும் கருணை காட்டுவதன் மூலம் புத்தன், காந்தி, யேசுவாக ஆகமுடியாது.

இந்தக் கொடூரர்களை விரைவாக தூக்கில் இட்டுத் தண்டிக்காமல் விட்டது இந்திய சட்டத்துறை நத்தைவேகத்தில் செயற்படுகிறது என்றுதான் காட்டுகின்றது. இப்பவாவது தண்டனை கொடுத்தார்களே என்ற ஆசுவாசம்தான் வருகிறது. முக்கிய குற்றவாளியான மைனர் பையனை விடுதலை செய்திருந்தாலும், அவன் திருந்தியிருப்பான் என்று சொல்லமுடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

மேற்குலக நாடுகளில் சிறுவர்களை பாலியல் வன்புனர்விற்கு உள்ளாக்கி கொலை செய்தவர்களை தூக்கில் இடாமல் , சிறை தண்டனை விதித்து விடுதலையும் செய்யப்படுவதுண்டு. 

அவிசுல் அவ்வாறு நடந்த நபர் பற்றியது இது : 

 

இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு சிறுமியை பாழாக்கட்டும் என்று அரசு விட்டு இருக்குது ...இப்படி விடுகிறது ,அவரை கண்ணகாணிக்கிறது ...இதெல்லாம் யாற்றை காசு மக்களது வரிப் பணம் ...இந்த வீடியோவை நான் பார்க்கவில்லை ...ஆனால் இவர் இருக்கும் ஏரியாவில் இவரை சுத்தி இருக்கும் மக்கள் எவ்வளவு பயத்தோடு இருப்பார்கள்.
இரண்டு பேர் கதைத்து கொண்டு இருக்கினம்...வாக்குவாதம் முற்றி ஒருவர் இன்னொருவரை குத்தி சாகடிச்சிட்டார்...அவருக்கு ஆயுட் தண்டனை கொடுக்கலாம் ...ஒரு பெண்ணை கதற ,கதற பாலியல் வன்புணர்வு செய்யும் போது அவர்களுக்கு தங்கள் தாய் ,சகோதரி ,மனைவி  நினைவுக்கு வரவில்லையா ?...இவர்களை எல்லாம்  ஆண் குறியை வெட்டிப் போட்டு  நடு றோட்டில் வைத்து சுடோணும்..

உங்களைப் போல ஆட்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதால் தான் இப்படியான குற்றம் செய்பவர்கள் கூடிக் கொண்டு போகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 4:35 AM, நிழலி said:

இறுதி நிமிடம் வரைக்கும் தம் தவறை உணராத இவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகச் சரியான தண்டனை.

மிலேச்சத்தனமாக என் கவுண்டர் முறையில் கொல்லாமல் இறுதி வரைக்கும் சட்ட ரீதியாக அணுகி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது.

நிர்பயா இனி நிம்மதியாக உறங்குவாள்.

அண்ணா இது எல்லாம் க‌ண் துடைப்பு நாட‌க‌ம் , இதே இந்தியா அர‌சிய‌ல் வாதிக‌ளின் ப‌ஸ்ச‌ங்க‌ள் க‌ற்ப‌ழிப்பில் ஈடு ப‌ட்டு இருந்தா  ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்து இருக்காது அத‌ எப்ப‌டியாவ‌து இருட்ட‌டிப்பு செய்து இருப்பாங்க‌ள் / 

இவ‌ர்க‌ள் தேடுவார் இல்லா ஊர் மேயும் காம‌ வெறிய‌ர்க‌ள் , அவ‌ர்க‌ள் மேல் ச‌ட்ட‌ம் பாய்ந்து இருக்கு /

காந்தி பிற‌ந்த‌ ம‌ண்ணில் தூக்கு த‌ண்ட‌னையை நினைத்து கூட‌ பார்க்க‌ முடிய‌ வில்லை , இந்த‌ 4லு காம‌ வெறிய‌ர்கள் இய‌ற்கையாய் ம‌ர‌ணிக்கும் வ‌ர‌ சிறைக்குள்ளையே விட்டு இருக்க‌னும் , 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏழைகள்.. அரசியல் பின்புலமற்றவர்கள்.. ரெளடிகள் பின்புலம் அற்றவர்கள்.. போல் தெரிகிறது.

ஈழத்தில் இத்தனை ஆயிரம் தமிழ் பெண்களுக்கு எதிராக.. ஹிந்திய இராணுவக் காடையர்களும் சொறீலங்கா சிங்களப் படை காடைகளும் நிகழ்த்திய.. அட்டூழியங்களை நியாயப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் இதே நீதியை இந்த இராணுவங்களுக்கும் வழங்குவார்களா..??! 

Edited by nedukkalapoovan

தூக்கு தண்டனைக்கு ஐ.நா., எதிர்ப்பு

நியூயார்க்: 'நிர்பயா' குற்றவாளிகளுக் கான துாக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், 'துாக்கு தண்டனைகளை நிறுத்த வேண்டும்' என, ஐ.நா., சபை கூறியுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட, நான்கு பேருக்கான துாக்கு தண்டனை, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தித் தொடர்பாளர், ஸ்டீபன் ஜூராயிக் கூறியதாவது: துாக்கு தண்டனை விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலைப்பாடு எப்போதும் மாறாது. துாக்கு தண்டனையை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும். அல்லது தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2507074

International Commission of Jurists Condemns Nirbhaya Convicts Execution

“State-sanctioned executions are little more than public theatre that risk celebrating and perpetuating violence at the expense of the rule of law,” said the ICJ's Asia-Pacific director.

International Commission of Jurists Condemns Nirbhaya Convicts Execution

In a press release, the organisation also said that it had “called on the Government to introduce systemic changes to the legal system that would deter violence and improve access to justice for women”.

The ICJ’s Asia-Pacific Director Frederick Rawski, said that “State-sanctioned executions are little more than public theatre that risk celebrating and perpetuating violence at the expense of the rule of law,” and said that the imposition of the death penalty did nothing to improve the lives of women.

The release also quoted senior Indian lawyer and human rights defender Vrinda Grover as having said, “Instead of compelling the state to invest in plugging the gaps in the investigation, prosecution and adjudication of sexual crimes and formulating victim-oriented processes, the clamour for execution of the convicts has hijacked the discourse. Seven years later, the power of the state to extinguish life stands entrenched, while women and girls in India continue to struggle to live a life of freedom, safety and dignity, as equal persons.”

https://thewire.in/rights/international-commission-of-jurists-condemns-nirbhaya-convicts-execution

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 4:01 AM, போல் said:

தூக்குத் தண்டனையை எதிர்பவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் சில விதிவிலக்குகள் அவசியமாகின்றன.

நீங்கள் தூக்கு தண்டனை ஆதரவாளர்😢 எமக்கு விருப்பம் இல்லா ஒருவருக்கு தூக்கு தண்டனையும் மற்றவருக்கு ஆயுள் தண்டனை என்பது தூக்குத் தண்டனையை எதிர்ப்பது இல்லை. இலங்கை தமிழர்கள் வாழும்   பணக்காரநாடுகள் தூக்குத் தண்டனையை எதிர்பவர்கள் அங்கே தூக்குத் தண்டனை இல்லை என்பது மட்டும் இல்லை அந்த நாடுகள் தூக்குத் தண்டனையை மற்ற நாடுகளில் நிறுத்த வேண்டும் என்ற நிலபாட்டில் உள்ளவர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

A Toronto man who sexually assaulted and strangled a young woman hours after they met has been sentenced to life in prison with no chance of parole for 25 years.

Kalen Schlatter was convicted Monday of first-degree murder in the killing of 22-year-old Tess Richey.

The conviction carries an automatic sentence, which was handed down Wednesday in a Toronto courtroom.

During the hearing, relatives and friends of Richey also voiced their grief at losing their loved one, whom they described as fierce, generous and kind.

Court heard Schlatter and Richey met after leaving the same club in the early hours of Nov. 25, 2017.

Prosecutors argued Schlatter strangled Richey after she rejected his sexual advances, while Schlatter testified she was still alive when he last saw her.

In convicting Schlatter of first-degree murder, jurors concluded he was guilty of sexually assaulting Richey as well as killing her.

Richey’s body was found days later, by her mother and a family friend, at the bottom of an outdoor stairwell.

https://www.680news.com/2020/03/25/kalen-schlatter-sentencing/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.