Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…

March 24, 2020

 

uk-5-717x800.jpg

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானியா  #முடக்கப்பட்ட   #இறப்பு   #கொரோனா

 

http://globaltamilnews.net/2020/139157/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லாம் விளையாட்டா  போயிட்டுது ஏற்கனவே சுத்தம் என்றால் என்ன என்று கேட்க்கும் வெள்ளைகள்  நிறைந்த உலகம் பேருக்கு லொக் டவுன் என்று சொல்லி விட்டுவழமை  போன்று கும்மியடிக்குதுகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது? 
லண்டன்காரர் வலு சிம்பிளாய் திரிஞ்சினம். இப்பவே இவ்வளவு தொகையா? :(

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலியில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் - பலியானவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட முடியாமல் திணறும் இத்தாலி அரசு

 

 

ஊரடங்கு சட்டம் தான் சரி. 

It is the job of the Cabinet Office to predict which will be the next disaster facing the UK. Their job is to identify plans to prevent them from happening and develop ways to mitigate the effect of any such catastrophe if it does happen. 

coronavirus-government-preparation-boris

Edited by ampanai
editing

தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பிர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், மோசமான சூழல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் 2,500 உடல்கள் வைக்கப்படும்.

"அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/live/global-52062310

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கள் வீட்டில் இருக்கட்டும் என்பதற்காக ரயில்கள்,பஸ்கள் என்பவற்றை குறைத்து உள்ளார்கள்...அதனால் கீ  வேக்கஸ், அவசரத் தேவைகளுக்கு பயணிப்பவர்கள் இப்படி நெருக்குப்பட்டுத் தான் போக வேண்டும் .
ஆனால் இந்த நேரத்த்திலும் கொழுப்பு எடுத்து அலைபவர்களை ஒன்றும் செய்யேலாது 
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

ஆட்கள் வீட்டில் இருக்கட்டும் என்பதற்காக ரயில்கள்,பஸ்கள் என்பவற்றை குறைத்து உள்ளார்கள்...அதனால் கீ  வேக்கஸ், அவசரத் தேவைகளுக்கு பயணிப்பவர்கள் இப்படி நெருக்குப்பட்டுத் தான் போக வேண்டும் .
ஆனால் இந்த நேரத்த்திலும் கொழுப்பு எடுத்து அலைபவர்களை ஒன்றும் செய்யேலாது 
 

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

வாற இரு கிழமையையும் தாண்டினால் அதன் பிறகு ஆபத்து இல்லை என்று அல்லோ சொல்லினம் :38_worried:

ஜரோப்பாவில் இரண்டாவது அதிகரித்த சனத்தொகையையும், உலகில் சனத்தொகையில் 21ஆவது இடத்தில், 68 கோடி மக்களைக் கொண்டுள்ள இங்கிலாந்தில், மார்ச் 27ஆம் நாள் வெள்ளிவரை 14543 பேருக்கு உத்தியோகபூர்வமாக கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வெண்ணிக்கை எவ்வாறு அதிகரித்துச் சென்றுள்ளது என்று பார்த்தால், பெப் 9ஆம் நாள் 9பேர் என்ற நிலையில் இருந்து, அது மார்ச் 17ஆம் நாள் 1950பேர் என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆனால் கடந்த மூன்று நாட்களும் அவ்அவ் நாட்களிலான எண்ணிக்கை பெரும் கரிசனை தருகிறது. அதாவது பெப். 25 -1452 பேரும், பெப். 26 - 2129 பேரும், பெப். 27 - 2885 பேரும், புதிய நோயத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

ஒருவர் 2 முதல் 3 வருக்கு நோய்த் தொற்றைக் கொடுத்தால், அது ஒரு மாதத்தில் 244 பேரையும், அதுவே இரு மாதத்தில் 59604 பேரையும் தொற்றிக் கொள்ளும். அவ்வாறு பார்த்தால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, நாம் இரண்டாம் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றோம். அவ்வாறான அதிகரிப்பை கடந்த மூன்று நாட்களும் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான நிலையை, அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கையும் வெளிப்படுத்துகிறது. மார்ச் 25 வெள்ளி வரையிலான இறப்பு எண்ணிக்கை 759. ஆனால் கடந்த மூன்று நாட்களாக அங்கும் மேல் நோக்கிய அதிகரிப்பே. பெப. 25 - 41 இறப்புக்கள். பெப். 26 - 115 இறப்புக்கள். பெப். 27 - 181 இறப்புக்கள். உலகளாவிய இறப்புவீதம் 3.4 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் சொல்ல, இங்கிலாந்தின் இறப்பு சதவீதம் 5.2 ஆக தற்போது காணப்படுகிறது. இது தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதற்கான வாயப்பே வெளிப்படும் நிலையில், இறுக்கமான முடக்கம் உடன் அவசியமாகிறது.

இங்கும் இங்கிலாந்தின் பெரு நகரப்பரப்பான, லண்டனே அதிகரித்த தொற்றை வெளிப்படுத்துகிறது. 93 லட்சம் மக்களைக் கொண்டுள்ள லண்டன், முழுமையாக முடக்கப்படுவதுவும், அங்குள்ள மக்கள் வெளியே நோய்த்தொற்றைக் காவிச் செல்லாது பார்த்துக் கொள்வதுவும், முதன்மையானது. இங்கிலாந்தின் அதிக நோய்த் தொற்றைக் கொண்ட அடுத்த நகராக பேமிங்காம் விளங்குகிறது. ஆகவே லண்டனில் ஆரம்பித்து படிப்படியான முழு முடக்கமா? அல்லது அனைத்துப் பகுதியும் ஒரேயடியாக முடக்கமா?

(முகநூல்) 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

சென்ற வாரத்தில் இருந்து, UK இல், covid-19 இறப்புகளின் பதிவு, மருத்துவமனையில் +ve ஆக அடையாளம் காணப்பட்டு இறப்பவர்களே பதியப்படுவதும், எண்ணப்படுவதும்.

UK இன் வழமையான massaging and fudging, எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு.

Germany உம் இப்படி எதோ ஓர்   massaging and fudging செய்தே, குறைவான எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

வாற இரு கிழமையையும் தாண்டினால் அதன் பிறகு ஆபத்து இல்லை என்று அல்லோ சொல்லினம் :38_worried:

மக்களை அமைதிப்படுத்த சொல்லும் பொய்கள் .பலியாடுகள் இன்னும் தேவையாக இருக்கலாம் .

18 minutes ago, Kadancha said:

UK இன் வழமையான massaging and fudging, எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு.

Massaging facts and fudging figures என்று வரணும் இந்த விடயத்தில் சொறிலங்கா தொடக்கம் இங்கிலாந்து ,ஜெர்மன் முக்கியமாய் சுவீடன் சுவிஸ் அல்ல வேண்டுமென்றே தரவுகளை குழப்பியடிக்கிறார்கள் முக்கியமாய் எல்லாம் சொல்லும் கூகிள் ஆண்டவர் இருந்த தரவுகள் மறைக்கப்படுகின்றன ஏனென்று புரியவில்லை கடைசியில் தோர்  பிரவுசரிடம் தான் போகவேண்டி உள்ளது .

 

 

Edited by பெருமாள்

 

Coronavirus: Things will get worse, PM warns in letter to BritonsImage

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.