Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நாதம் இங்கு தமிழர் பகுதி மட்டும் என்டு பாத்தால் யாழப்பாணம் மட்டும் தான் ஆட்டிற்க்கு மதிப்பும் அதைப்பற்றிய விளக்கமும் உண்டு.வன்னியில் ஆட்டு இனத்தைப் பற்றிய அறிவு துன்டர இல்லை.மற்றது வேலை ஆக்கள் பெரிய பிரச்சனை.வன்னியில் ஆடு உயிர் நிறை 600 ருபா.ஒரு ஆடு 6 மாதத்தில் 30 கிலோ வந்தால்தான உண்டு.இல்லாட்டில் நட்டம்.மற்றது வேலைக்கு வரும் நேரம் 8.30 க்கு வருவார்கள் அது பண்ணை வேலைக்கு உரிய நேரம் அல்ல.எனக்கும் இப்ப மலையகத்தில தான் கண்.பாரப்போம்.நான் இப்ப மெல்ல மெல்ல ஆட்டிலிருந்து கோழிக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.

சுவை,

தெளிவான லாப நஷ்ட சிந்தனைகள் முக்கியம்.

எமது விருப்புக்கள், ரசனைகள் வேறு, வியாபாரம் வேறு.

இரண்டையும் கலக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மலையகத்தில் வேலை இல்லாத, வாழ்க்கை நடாத்த, போதாத சம்பளத்துடன் பலர் உள்ளனர். ஒரு காலத்தில், அவர்களது சிறுவர்களை, மனிதாபிமானம் இன்றி, இலங்கை முழுவதும் வீட்டு வேலை செய்பவர்களாக அவர்களை கூட்டி சென்றார்கள். இப்போது சட்டம் தடை செய்துள்ளது.

அப்படி வேலை தேடும் யாரையாவது, வன்னிக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வரவழைக்க முடியுமா என்று பாருங்கள். 

மொழி பிரச்சனை இருக்காது. தொடர்ந்து வேலை செய்வார்கள். குடும்பமாக வர கூட உதவலாம்.அவர்கள் எடுப்பதை விட கூடிய சம்பளம், மருத்துவ உதவிகள் போன்றவகைகளை கூடுதலாக வழங்குவதன் மூலம் ஒரு விசுவாசமுள்ள வேலை ஆட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவே நான் வவுனியா பக்கம் போக விரும்பிய நண்பருக்கு சொன்னேன்.

யாழில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு கனவு இருக்கும் வரை, நல்ல விசுவாசமுள்ள வேலை செய்பவர்களாக வரவே முடியாது. இது துரதிஷ்ட்டமானது. 

ஆனாலும் அங்கிருக்க விரும்பும் சிலர், தொழில் முனைவர்களாக வர விரும்புவதையும் கண்டேன். அவர்களை இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.

தீவுப்பகுதிகளில் பல நெல்வயல்கள் பத்தைகள் வளர்ந்து உள்ளன. இன்னும் சிலகாலத்தில் காடாகி விடும். 

சொந்தக்காரர்கள் வெளிநாடுகளில்.... அவர்களுக்கு வயதாகி இருக்கும். பிள்ளைகள் போகப்போவதில்லை.

இப்போது அவ்வப்பகுதி பிரதேச சபை அதிகாரிகள் புதிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

அதாவது அரச அனுமதிப்பத்திரத்துடன், யாருமே அந்த நெல்வயல்களை சுத்தம் செய்து பயிர் செய்து கொள்ளலாம்.

உரியவர்கள் வந்தால் அதிகாரிகள் அவர்களுடன் பேசி, அவர்களுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களது ஒத்துழைப்பினை வாங்கி தருவார்களாம்.

ஆனால் ஊர்காரர்களிடம் அந்தளவு பணம் இல்லை. இது நம் போன்றவர்களுக்கு தான் சரியானது. ஆனாலும் ஒருவராக இல்லாமல் பலர் இணைத்து செய்ய வேண்டும்.

இது சிறந்த திட்டம். உங்களை போன்ற, நல்ல சிந்தனை உள்ளவர்கள் பலர் சேர்ந்து, ஒரு கூட்டு முயற்சியாக பெரும் வேலைகளை செய்ய முடியும்.

இன்னும் அரசியலுக்கு அப்பால் இருந்து யோசித்தால், டக்லஸ் தேவானந்தா இப்போது நாட்டின் கடல் தொழில் அமைச்சர். அவரை அணுகி றால் பண்ணை, மீன் பண்ணை போன்ற முயல்வுகளுக்கு அரசின் உதவிகளை பெறலாம் அல்லவா.

உதாரணமாக ஸ்காட்லாந்து, நோர்வே போன்றன சா(ல்)மன் மீன் வளர்ப்பில் உலகப் பெரும் பிஸ்தாக்கள். இவர்களிடம் இருந்து தொழில்நுட்பங்களை பெற அரச உதவி கிடைக்கலாம். அந்த பிரதேசத்தில் வளர்க்க கூடியதாக உள்ள மீன்களை வளர்க்கலாம். உதாரணமாக, கொடுவா, பால் சுறா, விளை, அறக்குளா, தலபத்து (sail fish)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 22:27, Kapithan said:

ஆட்டிலிருந்து கோழிக்கு மாறுவதற்கான காரணத்தை கொஞ்சம் விலவாரியா எழுத ஏலுமே ? 

நான் ஏற்க்கனவே மேலே எழுதிய மாதிரி வர்த்தக ரீதியில்  ஆடு வளர்ப்பிற்க்கு ஏற்படும்  செலவுக்கு வருமானம் இல்லை.அத்துடன் விற்ப்பனையும் சிரமம் வன்னியில்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

நான் ஏற்க்கனவே மேலே எழுதிய மாதிரி வர்த்தக ரீதியில்  ஆடு வளர்ப்பிற்க்கு ஏற்படும்  செலவுக்கு வருமானம் இல்லை.அத்துடன் விற்ப்பனையும் சிரமம் வன்னியில்.

யாழ்ப்பாணத்தில் விற்க முயற்சிக்கவில்லையா ? 

முயற்சித்தீர்களாயின் பலன் என்ன ? 🤔

22 hours ago, Nathamuni said:

சுவை,

தெளிவான லாப நஷ்ட சிந்தனைகள் முக்கியம்.

எமது விருப்புக்கள், ரசனைகள் வேறு, வியாபாரம் வேறு.

இரண்டையும் கலக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

மலையகத்தில் வேலை இல்லாத, வாழ்க்கை நடாத்த, போதாத சம்பளத்துடன் பலர் உள்ளனர். ஒரு காலத்தில், அவர்களது சிறுவர்களை, மனிதாபிமானம் இன்றி, இலங்கை முழுவதும் வீட்டு வேலை செய்பவர்களாக அவர்களை கூட்டி சென்றார்கள். இப்போது சட்டம் தடை செய்துள்ளது.

அப்படி வேலை தேடும் யாரையாவது, வன்னிக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்கு வேலைக்கு வரவழைக்க முடியுமா என்று பாருங்கள். 

மொழி பிரச்சனை இருக்காது. தொடர்ந்து வேலை செய்வார்கள். குடும்பமாக வர கூட உதவலாம்.அவர்கள் எடுப்பதை விட கூடிய சம்பளம், மருத்துவ உதவிகள் போன்றவகைகளை கூடுதலாக வழங்குவதன் மூலம் ஒரு விசுவாசமுள்ள வேலை ஆட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதுவே நான் வவுனியா பக்கம் போக விரும்பிய நண்பருக்கு சொன்னேன்.

யாழில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு கனவு இருக்கும் வரை, நல்ல விசுவாசமுள்ள வேலை செய்பவர்களாக வரவே முடியாது. இது துரதிஷ்ட்டமானது. 

ஆனாலும் அங்கிருக்க விரும்பும் சிலர், தொழில் முனைவர்களாக வர விரும்புவதையும் கண்டேன். அவர்களை இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.

தீவுப்பகுதிகளில் பல நெல்வயல்கள் பத்தைகள் வளர்ந்து உள்ளன. இன்னும் சிலகாலத்தில் காடாகி விடும். 

சொந்தக்காரர்கள் வெளிநாடுகளில்.... அவர்களுக்கு வயதாகி இருக்கும். பிள்ளைகள் போகப்போவதில்லை.

இப்போது அவ்வப்பகுதி பிரதேச சபை அதிகாரிகள் புதிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

அதாவது அரச அனுமதிப்பத்திரத்துடன், யாருமே அந்த நெல்வயல்களை சுத்தம் செய்து பயிர் செய்து கொள்ளலாம்.

உரியவர்கள் வந்தால் அதிகாரிகள் அவர்களுடன் பேசி, அவர்களுக்கு விளக்கம் கொடுத்து, அவர்களது ஒத்துழைப்பினை வாங்கி தருவார்களாம்.

ஆனால் ஊர்காரர்களிடம் அந்தளவு பணம் இல்லை. இது நம் போன்றவர்களுக்கு தான் சரியானது. ஆனாலும் ஒருவராக இல்லாமல் பலர் இணைத்து செய்ய வேண்டும்.

இது சிறந்த திட்டம். உங்களை போன்ற, நல்ல சிந்தனை உள்ளவர்கள் பலர் சேர்ந்து, ஒரு கூட்டு முயற்சியாக பெரும் வேலைகளை செய்ய முடியும்.

இன்னும் அரசியலுக்கு அப்பால் இருந்து யோசித்தால், டக்லஸ் தேவானந்தா இப்போது நாட்டின் கடல் தொழில் அமைச்சர். அவரை அணுகி றால் பண்ணை, மீன் பண்ணை போன்ற முயல்வுகளுக்கு அரசின் உதவிகளை பெறலாம் அல்லவா.

உதாரணமாக ஸ்காட்லாந்து, நோர்வே போன்றன சா(ல்)மன் மீன் வளர்ப்பில் உலகப் பெரும் பிஸ்தாக்கள். இவர்களிடம் இருந்து தொழில்நுட்பங்களை பெற அரச உதவி கிடைக்கலாம். அந்த பிரதேசத்தில் வளர்க்க கூடியதாக உள்ள மீன்களை வளர்க்கலாம். உதாரணமாக, கொடுவா, பால் சுறா, விளை, அறக்குளா, தலபத்து (sail fish)

கூட்டு முயற்சிக்கு நான் ஆயத்தம். யாராவது தொடங்க விருப்பமென்றால் நானும் இணையத் தயாராகவுள்ளேன். 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by Nathamuni

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

On 11/4/2020 at 23:09, பாலபத்ர ஓணாண்டி said:

உடையார் குருவிட்சம்பழம் சுவிங்கத்த நினச்சு அத உமியுறனான். அதொரு தனி சுகம்.. பின்னெரம் நாலுமணி ஆனா ஆட்டுக்கு குழைபுடுங்க போறது.. முள்முருக்கு சீமக்கிழுவை கிழுவை பிலாக்குழை இப்பிலிப்பில் குருவிச்ச எண்டு மூங்கில்தடி இல்லாட்டி காஞ்ச தென்னோல மட்டேல குழச்சத்தகம் கட்டிக்கொண்டு குழைவெட்ட போவம்.. எங்கட ஊரில குருவிச்ச கூடுதலா மாமரத்திலதான் புடிக்கிறது.. பிறகு நொங்குபொறுக்கிவந்து அம்மம்மாட்ட குடுக்க இருந்துவெட்டுற அருவாள்ள அறுத்துதருவா நொங்ககுடிச்சுட்டு கயறக்குடுக்க சின்னன்சின்னனா அறுத்துத்தருவா கொண்டே ஆட்டுக்கு ஒரு சாக்கை விரிச்சுபோட்டு அதில போடுவம் தலய ஆட்டிஆட்டி சாப்பிடும்.. இரவு ஆட்டுக்கு நுளம்பு கடிக்கும் எண்டு நுளம்பித்திரி எல்லாம் கட்டி தொங்க விடுறனாங்கள்.

நீங்க சொன்னமாரி குட்டிய புடிச்சுக்கொண்டுபோய் கோலுக்க இல்லாட்டி வேப்பமரத்துக்கு கீழ வச்சு பஞ்சுமாரி இருக்கிற ஆட்டுக்குட்டிய தடவ அது துள்ளிதுள்ளி போகேக்க இருக்கிற சுகமே தனிதான்..

குட்டி கிடா எண்டா வம்புக்கு தலையால அதின்ர தலைக்கு இடிச்சு மல்லுக்கட்டுறனாங்கள்..

அது ஒரு கனாக்க்காலம்..

உங்கள் திட்டத்தை கைவிட்டுடாதைங்கோ. அதில இருக்கிற சந்தோசம் எதிலயும் வரா.: வாழ்த்துக்கள்.

கிடாய்க்கு நல்லது, நன்றாக சதைப்பிடிப்புடன் வளரும், நல்ல விலை போகும். நீங்க சொன்ன மாதிரிஅது ஒரு தனி சுகம். 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்களை பழக்கி, ஆடு வளர்த்தல் ஒரு பெரும் கலை.

நம்மூருக்கு அபாரமாக பயன்படும். இங்கே மேலே  நான் இணைத்த வீடியோவில்  கூட அவர் குறிப்பிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

Border Collie - இவ தான் என்னுடைய நண்பி, முழு நேரமும் இவவுடன் தான் என் நேரம் போகின்றது வேலை நேரம் தவிர, பயங்கர அறிவாலி. 

ஒரு நாய் வளர்த்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையே மாறும், ஊரில் ஏழெட்டு நாய்களுடன் வளர்ந்தேன், அவையைபோல் நல்ல நண்பர்களில்லை

  • கருத்துக்கள உறவுகள்

20190524-101259.jpg

என் நண்பி படுத்திரு நான் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருக்கா, 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, உடையார் said:

20190524-101259.jpg

என் நண்பி படுத்திரு நான் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருக்கா, 

சரியான சோம்பல் பிடிச்ச நண்பி போலை கிடக்குது...

எழும்பி... சமையலுக்கு... காய், கறி நறுக்கி ஒத்தாசை செய்யக்கூடாதோ... சா... என்ன நண்பி?  😉

நான் இப்படி சொன்னேன் எண்டு சொல்லாதீங்கோ... பொல்லாப்பு.. கொழுவி விட்டு கூத்து பார்க்கிறியளோ எண்டு போனை போட்டு திட்டுவா..😀

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நாய்களை பழக்கி, ஆடு வளர்த்தல் ஒரு பெரும் கலை.

நம்மூருக்கு அபாரமாக பயன்படும். இங்கே மேலே  நான் இணைத்த வீடியோவில்  கூட அவர் குறிப்பிடுகின்றார்.

சொல்லவில்லை😃

Border Collie பயங்கரமாக ஓடி விளையாடும் அத்துடன் இலகுவாக பழக்கி எடுக்கலாம்,  கட்டாயம்காலை மாலை வெளியில் கூட்டிகிட்டு போகனும். பின்னால் திரிவா கூட்டிக்கிட்டு போகசொல்லி

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

என் நண்பி படுத்திரு நான் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருக்கா, 

நாய் இனத்திலேயே அதிக புத்திசாலி வர்க்கத்தை சேர்ந்தவர் தான் உங்கள் நண்பி....
நமக்கும் இப்படியொருவர் அல்லது Goldie ஒன்றை வளர்க்க ஆசை இருந்தது ,ஆனால் இலங்கை காலநிலைக்கு உவங்கள் சரிவர மாட்டினம், labrador வைத்திருப்பவர்கள் கூட இலங்கை காலநிலைக்கு அதனோடு மல்லுக்கட்டுரினம், பார்ப்போம் அநேகமாக GSD தான் சரிவரும்போல கிடக்கு ,ஆனால் நம்மடை அம்மா பறையா ஒன்றை வைத்துக்கொண்டு வேறு ஒண்டையும் வீட்டுக்கு கொண்டு வர விடுறாவும் இல்ல, அவர் கெட்ட கேட்டுக்கு அவருக்கு மாட்டு பாபத் சூப் ,எலும்பு சூப், வீட்டில் மரக்கறி என்றாலும் அவருக்கு மரக்கறி  இறங்காது ,ஆனாலும் பயல் கடும் காவல்காரன்   

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

20190524-101259.jpg

என் நண்பி படுத்திரு நான் வேலை செய்வதை பார்த்துக்கொண்டிருக்கா, 

உடையார் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள்.பிடித்த வாழ்க்கை வாழ கொடுப்பனை வேணும்.அது உங்களுக்கு அமைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 09:13, உடையார் said:

அருமையான ஒரு காணொளி.  ஐரோப்பாவில் இருந்து என்னதான் செய்ய முடியும் எம்மால் ???

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2020 at 20:15, சுவைப்பிரியன் said:

உடையார் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள்.பிடித்த வாழ்க்கை வாழ கொடுப்பனை வேணும்.அது உங்களுக்கு அமைந்துள்ளது.

மன்னிக்கவும் சுவைப்பிரியன், உடன் பதில் போட மனம் வரவில்லை, நீங்கள் இப்படி பதிந்தபின் பழைய வாழ்கைதான் இதுவரை என் மனதில் ஓடியது, அதனால் பதிவிட மனவரவில்லை.  நீங்கள் சொன்னதைப்போல் நான் இப்பதான் வாழ்கின்றேன், எத்தனையோ சோதனைகழுக்கு அப்பால், கடைசி நேரத்தில் என்னத்தை கொண்டு போகப் போகிறோம் , . இது இப்போதையை வாழ்க்கை. 

O/L வரைக்கும் மிக மிக கஷ்டப்பட்டேன் வாழ்க்கையில் . அதன் பின் எழுந்து நின்றேன் தன்னம்பிக்கையுடன், பல தொழில்கள் செய்தேன் சுழிபுரத்திழிருந்து சுன்னாகம்  நெல்லியடி வரை, இதுவரை விழவில்லை, கனவு கண்டேன் எப்படி வாழுனும் என்று, அப்படியே வாழ்கிறேன் இப்ப.

சொன்ன நம்ப மாட்டியல் பொன்னாலை கிருஸ்ணரை 108 தடவை சுற்றி இந்த படிப்புதான் வேணும் பல்கலையில் என வேண்டினேன் கடைசியில்  கிடைத்தது.   ஆனா படித்தேன் கடுமையாக என் நிலை தெரித்து, பல்கலையில் படிக்கும் போது ஆஸு படங்க்களை கற்பனை செய்து காரில் சுற்றிப்பார்ப்பதாக கனவு காண்பேன், கனவே என் வாழ்க்கை, என் வாழ்கையை நான் இதுவரை மறந்ததில்லை. கனவு காணுங்கள் மனதில் மகிழ்ச்சியுடன், கட்டாயம் உங்கள் இலக்கை அடை வீர்கள்,  என் இலக்கு இன்னும் முடியவில்லை

O/L முடிந்தபின் பல மாணவருக்கு இலவசமாக கணித பாடம் சொல்லிக்கெடுத்தேன், A/L முடிய எல்லா மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிகொடுத்தேன்,

ஆனா கொழும்பு வந்தபின் பல்கலையில் கற்பதற்கு படிப்பை வியாபாரமாக்கினேன், வீடு வீடாக பாடம் நடத்தினேன் முழு நேரமாக. மணித்தியாத்திற்கு அறவிட்டேன் , இரவு 11.00pm மணியாகும் தங்குவிடுதிக்கு போக , ஒரு சில நல்ல வீடுகளை தவிர , மற்றவர்களிடம் படிப்பு வியாபாரமானது, அதை பற்றி விரிவாக என்னால் எழுத முடியும் ஆன பொது வெளியில் விரும்பவில்லை. 

 பல்கலைகழகம் எனக்கு பகுதி நேரமானது. என்னுடன் அறையில் தங்கியிருந்த நண்பர்களுக்கு பணம் வீட்டிலிருந்து வராத நாட்களில் நான் வங்கியானேன், அவர்கள் எனக்கு படிக்க உதவி செய்தார்கள் , நான் அதிஸ்ட காரன் அப்படி பட்ட நண்பர்களை பெற. இன்றுவரை என் பழைய வாழ்கையை மறக்கவில்லை. 

அதனால் என்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்துள்ளேன், தொடரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.