Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில் ஏன் இப்படியான அநியாயத்தை செய்கிறீர்கள் கடைக்காரர்களே!!!
உங்களை கொரோனா இல்லை அதைவிட கொடிய வைரஸ் தாக்கும்!!!. 😥

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

Just now, உடையார் said:

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை எந்த ஒரு  நோயும்  அண்டாது எண்டு முடிவு பண்ணிட்டீனம். இப்பிடித்தான்: வாங்கினா வாங்கு, இல்லையெண்டா போ. இதைப்போய் பலசரக்கு கடையிலயா வாங்க முடியும்? அவசர நிலையை பாவித்து பணம் சேகரிக்கும் கலை. எல்லா இடத்திலேயும் ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் பேசும் பேச்சு.  கொரோனா வந்தும் திருந்தாத ஜென்மங்கள். தங்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்குதுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

1752 மீன் ரின்கள், 55 மூடை பருப்பு, பதுக்கியிருந்த நிலையில் மீட்பு. கிளிநொச்சியில் சம்பவம்..! அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் பாதக செயல்..

Mentin3.jpg

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன் ரின்கள், பருப்பு ஆகியன பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது.

Mentin6.jpg

ஸ்ரீ கணேசா என்ற குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகாரசபையின் நடாத்திய சோதனையின்போது, பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1752 மீன் ரின்கள் மற்றும் 55 மூடைகளில் பருப்பு ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

Mentin5.jpg

Mentin4.jpg

Mentin2.jpg

Mentin1.jpg

இதன் நோக்கம் செயற்கை தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது.

https://jaffnazone.com/news/17026

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் வன்செயல் பணக்காரர்கள் நிறையவே உருவாகியிருந்தனர் எல்லா வியாபாரத்துறையிலும். இவர்களில் குறுப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரன் விண்ணன் தற்போதைய கிரீன் கிராஸ் முதலாளி ரூபன் ஆகியோர் இதத்தவிர நிறையபேர் இயக்கத்தின் அனுசரணையுடன் பொருள்களை வாங்கி ஒட்டிக்கு ரெட்டியாக வித்துப் பணம் சம்பாதிச்சு இப்போ அரசாங்கத்துடனும் இணங்கிப்போய் குடியும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள்.

இப்போ குரோணா பணக்காரர்களாகிவிடுவம் என எல்லோரும் வெளிக்கிட்டிருக்கினம்.  அதைவிடத் தட்டிச்சுத்துறதுக்கும் ஒரு குறூப் வட்ஸப் குரூப் உருவாக்கி ஊருக்குள்ள உதவி செய்கிறம் எனச்சொல்லி வெளிநாடிலுள்ள ஊர்க்காரர்களுக்கு இலவச அழைப்பின்மூலம் மண்டையக் கழுவி காசு பார்த்து மாலைவேலை "மதுக்கூடலை" கடமையே கண் எனச் செய்கிறார்கள்.

இதில் குரோணாவால் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தேசங்களிலுள்ள கடைமடை வேலை செய்யும் தமிழர்கள் இவர்கள் தலைக்குமேல கடன் வீட்டுக்கடன் ஏனைய பிடுங்கலுக்காக என குரோணா வேளையிலும் வேலைக்குப்போய் நோய்தாக்கிச் செத்துப்போகிறார்கள் அண்மையில் நாட்டிலிருந்து வெளிநாடு வந்தவர்களுக்கு விசாப்பிரச்சனை ஊரில கடஙாரன் பிரச்சனை தங்கியிருக்கும் வீட்டுப்பிரச்சனை இவகளுக்கு மத்தியில் எங்காவது ஒண்ட இடம் கிடைக்குமா என ஓடித்திரிந்து ஊரடங்கு வேளையில பெத்ததுகளும் கூடப்பிறந்ததுகளும் என்ன செய்யுதோ என்ற பதைபதைப்பிலும் இங்க வாழுகுதுகள்

எப்போதோ பேஸ் புக்கில் ஆசையாக வைத்திருந்த ஒரு நல்ல உடுப்பைப்போட்டு யாரோ ஒருவன் நிறுத்திப்போட்டுப்போன பிராண்டட் காருக்கு முன்னால் நிண்டு போட்டோ எடுத்து இணச்ச தாயகத்தில் உள்ளதுகள் "நாங்கள் குரோணா பயத்தில சாகிறம் வெளிநாட்டில் உள்ளதுகள் சொகுசா வாழுதுகள்" எனச்சொல்லுகினம்.

 எங்கள் இனத்துக்குள் எப்போதோ நஞ்சு ஊறிவிட்டது, பேய்க்கு  வாழ்க்கைபட்டால் பிணந்தின்னத்தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

Mentin3.jpg

நல்ல... சமூக இடை வெளி.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசு விலையை நிர்ணயிக்கிறது

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

முகநூலில் தான் பார்த்தேன் கிடைக்கும் போது இணைக்கிறேன் அண்ண

16 hours ago, Paanch said:

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

சமுர்த்தி ஊடாக கிடைக்கிறது  ஆனால் அதை தமிழ்அரச ஆதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்ர்கள் அதான் உன்மை

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகத் துறையினர் தொடர்பாக, அவர் இன்று (10) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/நியாயமற்ற-வர்த்தகத்தில்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.