Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட நாடுகளில் இலங்கை!

Featured Replies

Coronavirus-World-3.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நாடுகளாக அவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவை பொறுத்த வரையில் கொவிட் -19 பாதிக்கப்பட்ட முதல்  தொற்றுநோயாளி இனங்காணப்பட்ட பின்னரே அவர்கள் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் சீனா இப்போது வரையில் 81 ஆயிரத்துக்கும்  அதிகமான கொரோனா தொற்றுநோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது என கூறும் அந்த ஆய்வு, இலங்கையை பொறுத்தவரை வேறெந்த நாடுகளும் மேற்கொள்ளாத மிகச் சரியான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

அனைத்து நாடுகளுமே கொரோனா  வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இப்போது வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவை-கட்டுப்படுத்து/

  • Replies 67
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொரோனாவை தடுப்பதில் முன்னிலை வகிக்கும் ஸ்ரீலங்கா? வெளியான தரவரிசை அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகளே போராடி வருகின்றன.

பல நாடுகளில் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை 9 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையானது கொரோனாவை தடுக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பட்டியல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 244 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் ஏனைய மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக இடைக்கிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/141419

2 hours ago, போல் said:

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை 9 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இலங்கை அரசுக்கு 

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் இலங்கை அரசுக்கு 

9ஆவது இடத்தில்  ஆட்டம் முடியவில்லை.

நாளை முதலாம் இடத்திற்கு முன்னேத்தி விடலாம், கொஞ்சம் அதிகம்  செலவாகும் 😃

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

10 minutes ago, நிழலி said:

இலங்கையை விட ஐம்பது மடங்கு சனத்தொகையில் பெரிய அண்டைய நாடான இந்தியாவில் 499 பேர்  இறந்துள்ளனர்.இலங்கையை விட  சிறப்பாக கையாண்டுள்ளனர் என சொல்லலாம். 

மேலைத்தேய நாடுகளில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதிற்கும் மேலானவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதியோர் காப்பகத்தில் இருந்தவர்கள். 

இந்த இரண்டு நாடுகளிலும் முதியோர்களை உறவினர்களே அதிகம் கவனிப்பது இழப்புக்களை குறைக்க உதவியுள்ளது. 

இலங்கையின் மருத்துவ துறை ஒப்பீடளவில் சிறப்பானது. அத்துடன், கோத்தாவின் இராணுவ மயமாக்கப்ட்ட அரசியலும் இழப்புக்களை குறைக்க உதவியுள்ளன. ஆனால், எவ்வளவு பேருக்கு தொற்று உள்ளது? யார் இதனால் இறக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்கள் நிச்சயம் தவறாக, குறைவாக இருக்கும். 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

2 hours ago, நிழலி said:

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

இது 100க்கு 100 உண்மை!

பயபக்தி வேலை செய்யுது என்டு தான் சொல்லோணும். சில உண்மைகளை சொறிலங்கா அரசு மறைச்சிருக்கு என கருதினாலும் இதுவரை எல்லாம் நலமாகவே போய்க்கொண்டிருக்கு.

ஆனா இனி தான் சொறிலங்கா மக்கள் ஆபத்தான காலத்தை கடக்க வேண்டும். ஏனென்டா கோத்தபாய கோஷ்டிக்கு தேர்தல்வெறி தலைக்கு ஏறிவிட்டது. இதனால மக்கள் நலம் பின்தள்ளப்படுவது உறுதி. இதனால உண்மைகள் கடுமையா மறைக்கப்படும். நிர்வாக சீர்கேடுகள் தலைவிரித்தாடும். மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

முக்கியமாக காலநிலை தான் செல்வாக்கு செலுத்துகிறது.ஏனென்றால் குளிர் காலநிலை உள்ளநாடுகளில் தான் அதிக பாதிப்பு (கனடாவை தவிர அதுவும் பெரியநிலப்பிரதேசத்தில் குறைந்த சனத்தொகை என்பதால்)

13 hours ago, வாதவூரான் said:

முக்கியமாக காலநிலை தான் செல்வாக்கு செலுத்துகிறது.ஏனென்றால் குளிர் காலநிலை உள்ளநாடுகளில் தான் அதிக பாதிப்பு (கனடாவை தவிர அதுவும் பெரியநிலப்பிரதேசத்தில் குறைந்த சனத்தொகை என்பதால்)

உங்கள் கருத்தில் உண்மை உண்டு. வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் முக்கியமான காரணியாக  நாட்டுக்கு நாடு சுற்றுலாப்  பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தொற்றை காவி செல்வோர் எண்ணிக்கை சொற்பமானதே. அது இலங்கைக்கு கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது  என்றாலும் இதன் பலனை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் அறுவறை செய்ய முயற்சிக்கும்.  

8 hours ago, tulpen said:

வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம் என்பதற்கு எந்த அறிவியல் ரீதியான ஆதாரமும் இதுவரை இல்லை. 

28 minutes ago, ampanai said:

வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம் என்பதற்கு எந்த அறிவியல் ரீதியான ஆதாரமும் இதுவரை இல்லை. 

நிச்சயமாக  இதற்கு அறிவியல்  ஆதாரம் இல்லை என்பது உண்மை அம்பனை. 

BCG Vaccination எனும் tuberculosis (TB) இற்கு எதிரான தடுப்பூசி பெற்ற மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் கொவிட் 19 தொற்று மோசமாக ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆராச்சிகளின் மூலம் இது உண்மையானதா என இன்னமும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த தடுப்பூசி கண்டிப்பாக போடப் பட வேண்டிய ஒன்று என்பதால் எம்மில் அனேகம் பேருக்கும் இது ஏற்றப்பட்டு இருக்கு,

ஸ்பெயினில் இந்த தடுப்பூசி போடப்படவில்லை. அதே நேரம் அதன் எல்லையில் அமைந்திருக்கும் போர்த்துக்கல்லில் இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் ஒரு தடுப்பூசி. ஸ்பெயினில் பல்லாயிரக்கணக்கானோர் கொவிட் 19 இனால் பலியாகிக் கொண்டிருக்கையில் போர்த்துக்கல்லில் 1000 இற்கும் குறைவானவர்களே இதுவரைக்கும் பலியாகியுள்ளனர் என அறிய முடிகின்றது.

இது தொடர்பாக வந்த தகவல்கள் / செய்திகள்:

https://www.statnews.com/2020/04/14/decades-old-tb-vaccine-attracts-attention-and-skepticism-as-a-potential-weapon-against-covid-19/

https://www.nytimes.com/2020/04/03/health/coronavirus-bcg-vaccine.html

https://www.latintimes.com/calmette-vaccine-coronavirus-covid-19-death-rates-lower-countries-use-bcg-vaccine-457794

https://www.france24.com/en/20200403-could-tb-vaccine-protect-medics-from-covid-19

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

உங்கள் கருத்தில் உண்மை உண்டு. வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் முக்கியமான காரணியாக  நாட்டுக்கு நாடு சுற்றுலாப்  பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தொற்றை காவி செல்வோர் எண்ணிக்கை சொற்பமானதே. அது இலங்கைக்கு கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது  என்றாலும் இதன் பலனை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் அறுவறை செய்ய முயற்சிக்கும்.  

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

17 minutes ago, nunavilan said:

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

உண்மை நுணாவிலான். எனது அவதானிப்பையே தெரிவித்தேன். ஒரு அவதானிப்பு மாத்திரம் இதனை உறுதியாக சொல்ல போதுமானது அல்ல. பலவகை காரணங்கள் இருக்கலாம். மேலே நிழலி கூறிய தகவல்களும் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கலாம்.   

53 minutes ago, nunavilan said:

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

குளிர் நாடுகளை அதிகம் தாக்காது என்றும் ஒரு செய்தி உள்ளது. துல்பன் அதனை கருத்தில் கொள்கிறார் என்று நினைத்தேன்.

வெப்ப நாடுகளுக்கு பரவாது, தாக்காது என்பதும் பொய்யானது என ஒரு  கொரோனா ஆய்வாளர் கூறி அப்ப்டியெனில் சென்னையில் கொரோனாவே இருக்க கூடாதல்லவா என குறிப்பிட்டுள்ளார். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

ஆனால் ரஷ்யாவில் சனத்தொகை அடர்த்தி ஏனைய ஐரோப்பியநாடுகளைப்போல இல்லை.ஆனால் இந்தியாவின் சனத்தொகைக்கு இவ்வளவுக்கும் இலட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.நிழலி சொல்வதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அப்பிடியெண்டால் பிரித்தானியா,பிரான்ஸில் ஏன் இலங்கை இந்தியாவை சேர்ந்த முதலாம் தலைமுறையினர் கூட இறந்துள்ளனர் (இவர்களில் பெரும்பாலானோர் BCG போட்டிருக்க வாய்ப்பு இருக்கு).முக்கிய விடயம் இந்தியாவிலும் இலங்கையிலும் BCG போட்டவர்களை விட போடாதவர்கள் மிக அதிகம்.

அறிவியல் ஆதாரம் இப்போது வராது. அதுக்கு எப்பிடியும் 12-18 மாதங்கள் எடுக்கும். ஆனால் தற்போது வரையான புள்ளி விபரத்தை அடிப்படையாக வைத்து தான் கூறினேன். சனத்தொகை அடர்த்தியுடன் குளிர் காலனிலையும் சேரும் போது பாதிப்பு கூடவாக இருக்கும்

4 minutes ago, நிழலி said:

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

ரஷ்யா குளிர் காலநிலை உள்ள நாடாக இருந்த போதிலும்  கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்ற தகவல் அடிப்படையிலேயே நுணா அப்படி தெரிவித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் ரஷ்யா இந்த விடயத்தில் மேற்கு நாடுகளை போல் வெளிபடை தன்மையான (Transparency ) நடந்து கொண்டாதா என்பது கேள்விக்குறி.

On 18/4/2020 at 10:20, போல் said:

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 244 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

இந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வீதாசார அடிப்படையில் நம்பிக்கை தருவதாய் உள்ளது. 

இலங்கை உலகத்திற்கு தாங்கள் எவ்வாறு குணமடைய வைக்கின்றோம் என சொல்லி உலகத்தையும் காப்பாற்றலாம்👏

6 minutes ago, nunavilan said:

குளிர் நாடுகளை அதிகம் தாக்காது என்றும் ஒரு செய்தி உள்ளது. துல்பன் அதனை கருத்தில் கொள்கிறார் என்று நினைத்தேன்.

வெப்ப நாடுகளுக்கு பரவாது, தாக்காது என்பதும் பொய்யானது என ஒரு  கொரோனா ஆய்வாளர் கூறி அப்ப்டியெனில் சென்னையில் கொரோனாவே இருக்க கூடாதல்லவா என குறிப்பிட்டுள்ளார். நன்றி.

விளக்கத்துக்கு நன்றி நுணா.

மருத்துவ / விஞ்ஞான ரீதியாக வெப்பத்தை ஒரு முக்கிய காரணியாக கொண்டு உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதால் புள்ளிவிபரங்களை மட்டுமே வைத்து இப்படியான விடயங்கள் அணுகப்படுகின்றன. அத்துடன் சீனா / ரஷ்யா நாடுகளில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்து இருக்கும் மத்திய அரசுகளாலேயே அனேக விடயங்கள் கையாளப்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவே அவர்களின் தகவல்களும் உள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் அனேகமானவை வெப்பம் மிகுந்த நாடுகள். ஆபிரிக்காவில் கொவிட் 19 கட்டுப்படுத்தப்படவில்லை எனின் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க நேரிடும் என ஆபிரிக்க நாடுகளின் கூட்டு அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டு உள்ளது.

13 minutes ago, வாதவூரான் said:

ஆனால் ரஷ்யாவில் சனத்தொகை அடர்த்தி ஏனைய ஐரோப்பியநாடுகளைப்போல இல்லை.ஆனால் இந்தியாவின் சனத்தொகைக்கு இவ்வளவுக்கும் இலட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.நிழலி சொல்வதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அப்பிடியெண்டால் பிரித்தானியா,பிரான்ஸில் ஏன் இலங்கை இந்தியாவை சேர்ந்த முதலாம் தலைமுறையினர் கூட இறந்துள்ளனர் (இவர்களில் பெரும்பாலானோர் BCG போட்டிருக்க வாய்ப்பு இருக்கு).முக்கிய விடயம் இந்தியாவிலும் இலங்கையிலும் BCG போட்டவர்களை விட போடாதவர்கள் மிக அதிகம்.

அறிவியல் ஆதாரம் இப்போது வராது. அதுக்கு எப்பிடியும் 12-18 மாதங்கள் எடுக்கும். ஆனால் தற்போது வரையான புள்ளி விபரத்தை அடிப்படையாக வைத்து தான் கூறினேன். சனத்தொகை அடர்த்தியுடன் குளிர் காலனிலையும் சேரும் போது பாதிப்பு கூடவாக இருக்கும்

இந்தியாவைப் பற்றித் தெரியாது. ஆனால் இலங்கையில் இது அரச மருத்துவமனையிலும் சரி, தரமான தனியார் மருத்துவமனையிலும் சரி குழந்தை பிறந்த ஒரு சில நாட்களுக்குள் கொடுக்கப்படும் ஒரு (கட்டாயத்) தடுப்பூசி. என் மகன் பிறந்தது கொழும்பில். அவனுக்கும் இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டு இருக்கு என்பதை தடுப்பூசிகள் கொடுத்த ஏட்டில் (Log book) உள்ளதை இப்போதும் சரிபார்த்தேன்.

8 minutes ago, ampanai said:

இந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வீதாசார அடிப்படையில் நம்பிக்கை தருவதாய் உள்ளது. 

இலங்கை உலகத்திற்கு தாங்கள் எவ்வாறு குணமடைய வைக்கின்றோம் என சொல்லி உலகத்தையும் காப்பாற்றலாம்👏

சிங்களப் பகுதிகளில் இருக்கும் கொவிட் 19 நோயாளர்களுக்கான மருத்துவமனைகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்தே நோயாளர்களை கவனிக்கின்றனர் என அறிய முடிந்தது. சில மருத்துவமனைகளில் இலைக் கஞ்சியை மருத்துவர்கள் தம் வீட்டில் சமைத்து நோயாளர்களுக்கு கொடுத்துள்ளனர். மல்லித்தண்னியும் முக்கிய நோயெதிர்ப்புச் சக்தி மருந்தாக சில இடங்களில் கொடுக்கின்றனர்.

27 minutes ago, நிழலி said:

இந்த  பாடலின் படியா நிழலி ( )😃😃😃😃  just joke

Edited by tulpen

மடகஸ்கார் ஆய்வாளர்கள் artemisia மூலிகை மருந்து ஒன்றினை கொரோனாவுக்கெதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆய்வு விபரங்கள் எதனையும் தரவில்ல்லை. எந்த அளவு உண்மை என்று தெரியாது.

https://www.francetvinfo.fr/monde/afrique/societe-africaine/madagascar-covid-organics-le-remede-du-president-rajoelina-contre-le-coronavirus-voit-le-jour_3925621.html#xtor=AL-79-[article]-[connexe]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.