Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழில் வழிபாடுகளில் ஈடுபடும் இந்து மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு கிறீஸ்தவ கத்தோலிக்கனாக, மற்றும் உங்களது பிடுங்குப்பாடுகளை தொடர்ந்து வாசிப்பவனாகவும் எனது கருத்தை பதிவு செய்கிறேன், சிறுவயதிலிருந்தே நாள் பூசைக்கு (நன்கு கவனிக்கவும் வீட்டில் திருப்பலிக்கு பூசை என்று தான் சொல்லுவினம்--பூசை எனும் வசனம் சைவ மத  சகோதர்கள் பாவிப்பது) செல்லும் குடும்பத்தில் வளர்க்கப்பட்டவன். கோவிலில் அப்படியொரு ஈடுபாடு சிறுவயதில்  (நன்கு கவனிக்கவும் வீட்டில் தேவாலயத்திற்கு செல்லவில்லையா என்று கேட்பதில்லை கோவிலுக்கு செல்லவில்லையா என்றுதான் கேட்பார்கள்), அடைப்புக்குள் உள்ளவற்றை ஏன் அழுத்திக்கூறுகிறேன் என்றால் இன்னும் பாரம்பரிய மதங்களான (கத்தோலிக்கம் ,மெதடிஸ்ட்) போன்றவை சைவ சமயத்துடனான தொடர்பை கொண்டிருக்கின்றன, அனைத்து கத்தோலிக்க சமயத்தவரும் சைவ மதத்திலிருந்து மதம் மாறியவர்களே, மெதடிஸ்ட் மதத்தினர் ஒன்று கத்தோலிக்கத்திலிருந்தோ அல்லது சைவத்திலிருந்தோ மாறியிருப்பார்கள். 
இந்த மதங்கள் பெரும்பான்மை கிறீஸ்தவ மதங்களாக தமிழர் மத்தியில் இருந்த காலங்களில் இந்துக்களுக்கும் 
கிறீஸ்தவர்களுக்கும் எந்த பிடுங்குப்பாடும் வரவில்லை,ஆரம்ப காலத்தில் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கத்தோலிக்க பாதிரியார்களின் (மிஷனரிகள் ) தன்னலமற்ற செயற்பாடுகள் கத்தோலிக்க பாதிரிகளுக்கு ஒரு நாடாளாவிய ரீதியில் மரியாதையையும் கௌரவத்தையும் ஏற்படுத்தியது, அவர்களை பின்பற்றிய சுதேச குருக்கள் (உள்நாட்டில் பாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள்) அந்த கௌரவத்தை 
பேணினார்கள். ஒன்றிரண்டு விதி விலக்குகள் நாற்றிய கதையும் உண்டு, அதே நேரத்தில் மக்களுக்காக உயிரை கொடுத்த கதைகளும் உண்டு.

இப்படி ஒழுங்காக இருந்த உறவில் குத்தி வெட்டி விளையாட தொடங்கியது இந்த புதுவரவு சபைகள்,
ஜெபிக்கிறோம் என்ற பெயரில் காட்டுக்கத்து கத்தி கூச்சல் போடுவது , வாயில் நுழையாத கேட்டறியாத கிலிக்கி மொழி பேசுவது (பரிசுத்த ஆவி உள்ள இறங்கிட்டாராமாம்) --நெருப்பால் சூடு வைத்தால் தெரியும் பரிசுத்த ஆவி எந்த மொழியில் கத்துவார் என்று , கையையும் காலையும் வலிப்பு வந்தவன் போல விலுக் விலுக் என்று இழுப்பது, இப்போது புதிதாக பப்பில் ஆடுவது போல் கலர் கலராக டிஸ்கோ விளக்குகள் எரிய நடுவில் ஆடுவது , டிவிடி வைத்து கிட்னி நோயை குணப்படுத்துவது, யேசுவுடன் ஸ்கைப்பில் கான்பிரன்ஸ் கால் பேசுவது, என்று இந்த அல்லோல கல்லோயாக்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. மற்ற மதத்தவரை சாத்தான்கள் என்பதும் ,வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சொல்லி வாதையையே சப்பளை செய்வதுமாக இவர்களது அழிச்சாட்டியம் குறைந்தபாடில்லை, பாஸ்ட்டர் என்றால் கடைக்கண்ணால் கூட பார்க்கிறார்கள் இல்லை,குறைந்த பட்ச மரியாதை கூட இல்லை  என்று இப்போது  தெரிந்துவிட்டதால் ,கத்தோலிக்க பாதிரிகள் அணியும் வெள்ளை உடையை இப்போது அணியத்தொடங்கியிருக்கிறார்கள், பாதிரிகள் சண்டைக்கு வராமல் இருக்க ஒன்று இடுப்புப்பட்டியை மற்றைய பக்கத்தில் தொங்கவிட்டும் ,கண்ணுக்கு தெரியாத சிலுவை அடையாளத்தை அதில் வரைந்தும் 
தங்கள் வேறு என்று காட்ட முற்பட்டாலும் தூரத்திலிருந்து இருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போல் தான் தெரியும்.

இவர்களது செயற்பாடுகளால் கத்தோலிக்க பாதிரிகளும் முழி பிதுங்கிப்போய் தான் உள்ளனர், கத்தோலிக்கர்களும் கூட்டம் கூட்டமாக இவர்களது சபைகளுக்கு  செல்வதால் பாதிரிகளும் இப்போது தேவாலயத்திற்குள் டான்ஸ் ஆடவேண்டிய கட்டாயத்தில்உள்ளனர்  ..

இங்கு கருத்து கூறும் சைவ மத சகோதர்களுக்கு நான் கூற விளைவது கிறீஸ்தவம்,கிறீஸ்தவர்கள்  என்று பொதுமைப்படுத்தி உங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள் அது அனைத்து கிறீஸ்தவ மதத்தையும் சுட்டுவதால் உங்களுடன் புரிந்துணர்வின் இருக்கும் கத்தோலிக்க மற்றைய மதத்தினரும் காயப்படுத்தப்படுகின்றனர், இப்படியான சபைகளின் செயற்பாடுகளை குறிப்பிட்ட சபையின் பெயரை சொல்லி கருத்திடுங்கள்..நன்றி   

நாங்கள் பாடசாலை போகும் காலத்தில் அந்தோனியார் கோயிலுக்கு போகாமல் ஸ்கூல் போனது கிடையாது ....போன  வருடம் இரு நாட்கள் மட்டுவிற்கு போயிருந்த போதும் மாமாங்கத்திற்கும்,அந்தோனியாரிட்டையும் போயிட்டு தான் வந்தேன் 
 
  • Replies 149
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லையா பின்ன உடையார் 
பாடசாலையில் காற்ச்சட்டை போடும் காலத்தில் வாணி விழா (பேச்சுவழக்கில் சரஸ்வதி பூசை என்றுதான் கூறுவோம் ) சிறப்பிக்க ,வேட்டி மற்றும் குறுத்தா அணிந்து ,மேடையில் உட்கார்ந்து மஹா கணபதிம் பாட்டு பாடி அந்த குழுவே முதற் பரிசு பெற்ற அனுபவத்தை சொல்லவா ...? 
மத பேதம் பார்க்காமல் எல்லோரும் காசு போட்டு கடலை ,அவல் மற்றும் பொங்கல் படைத்து அவலுக்கு சீனி காணாமல் போனதும்வீட்டிலிருந்து  வீட்டிலிருந்த சீனி டப்பாவை அபேஸ் பண்ணிவந்து அவலுக்குள் கொட்டி பகிர்ந்துண்டதை சொல்லவா...? 
அதே பாடசாலையில் ரவுசர் போடும் வயதில் மாணவத்தலைவனாக வாண்டுகளை கையில் குச்சியை வைத்துக்கொண்டு லைனில் ஒழுங்காக நின்று கடலை மற்றும் அவலை வாங்குமாறு மிரட்டிய அனுபவத்தை சொல்லவா...?
நண்பர்களுடன் ஒவ்வொருவருடமும் சென்று மகிழ்ந்த கோவில் திருவிழாக்களை சொல்லவா(அதிலும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய திருவிழா மிகவும் பிரசித்தம் ) ...
நண்பன் அவனோட டாவை சைட் அடிக்க மட்டுநகர்  மாமாங்க கணபதியார் கடுப்பாகாமல் காவலுக்கு நிண்டதை சொல்லவா...? 
இப்படி எவ்வளவோ அனுபவங்களை தந்த எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும்  யாரோ ஒருவன் சாத்தான்கள் என்றோ காட்டுமிராண்டி மூடநம்பிக்கை  என்றோ சொன்னால் அந்த மதத்தையும் அவனையும்  தூக்கியெறிவேனே யொழிய எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும் காயப்படுத்தமாட்டேன் 

அக்னி,

உங்கள் எண்ணவோட்டம் புரிகிறது. சரியான விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் சின்ன நெருடல் ஒன்று. 🤔

இந்தத் திரி சமயத்துடன் தொடர்புபட்டதல்ல. 

திரிக்கு முதலாவதாக கருத்திட்டவன் நான்தான்.  அங்கும் சமயம் தொடர்புபடுத்தப்படவில்லை.

அடுத்த மூன்று பக்கங்களிலும் எனது பின்னூட்டத்துடன் முரண்பட்டவர்கள்(ஏறக் குறைய 65% மான பின்னூட்டங்கள்), எனது கருத்தில் எந்தவித பிழையையும் குறிப்பாகச்  சுட்டிக் காட்டவில்லை. ஆனால் தொடர்ச்சியாக முரண்பட்டபடியேயிருந்தனர்.  (இங்கேயும் சமயத்தை யாரும் இழிவுபடுத்தவோ தொடர்பு படுத்தவோ இல்லை) 

ஆனால் உங்களின் பதிவுகள் புதிய கிறீத்துவ சபையினரின் கோபமூட்டும் செயற்பாடுகள் பற்றியவையாக உள்ளன. சைவ சமயத்தவரினதும் கிறீத்துவ (RC and Non RC)   சமயத்தினரதும் நல்லுறவு பற்றி உயர்வாக எழுதியுள்ளீர்கள்.  நீங்கள் குறிப்பிடும் மானிப்பாய் St. Annes Lane லினும் கூளாவடியிலும் நானும் ஒழிந்திருந்தவன்தான். நவாலி வயல்வெளி அண்ணமார் கோவில்  கிடாய் வெட்டிலும் கலந்துகொண்ட கத்தோலிக்கன்தான் நான். 

உங்கள் கருத்துக்கள் இத் திரியின் தலைப்போடோ அல்லது விவாதிக்கப்பட்டவையுடனோ தொடர்புபட்டதல்ல. (அதனால் நீங்கள் எழுதியதை தவறென்று கூறவில்லை)

ஆனால் இத்திரியில் எனது கருத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட எதிர்க் கருத்துக்கள் எல்லாவற்றையும் தெளிவாக கவனித்தீர்களானால் ஒன்று மிகத் தெளிவாகப் புரியும். 

அது என்னவென்றால்,  நல்லூர் முருகன் சன்னிதானத்தில் கும்பிடும்  அவன் அடியவர்களை குறை கூறுவதற்கு கபித்தான் யார் ? கபித்தானுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்பதுதான் அது. 

கபித்தான் இவர்களை விமரிசனம் செய்யலாமா ? இல்லை .

ஏன் ? 

ஏனென்றால் கபித்தான் ஒரு கிறீத்தவன். அவன் சைவ சமயத்தவர்களை குறை சொல்ல முடியாது.  

அப்படியானால் சைவ சமயத்தவர்களை யார் விமர்சிக்கலாம் ?

சைவ சமயத்தவர்கள் மட்டும்தான் சவ சமயத்தவரை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ முடியும். 

இந்த அணுகுமுறை ஏற்புடையதுதானா ?

திரும்பவும் ஒரு முறை எனது முதலாவது பின்னூட்டத்தை வாசியுங்கள்.  

அதன் தொடர்ச்சியை வாசியுங்கள். எல்லாமே புரியும்.

உங்களுக்கு ❤️ போட்டவர்கள்.. 🏆 போட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த வகையினரே.

நீங்கள் எப்போது இவர்கள் சரியென வாதிடும் ஒன்றை பிழையெனக் கூறுவீர்களோ அப்போது இவர்களது உண்மை முகத்தைப் பார்க்கலாம். 👍

இதனூடாக நான் கூற வரும் விடயங்கள்

1) சைவ சமயத்தவர்களை சவ சமயத்தவர்களேதான் விமர்சிக்கலாம். 

2) உங்கள்  பின்னூட்டத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக  விவாதிக்கப்பட்ட பிரதான  விடயத்திலிருந்து வேறு திசைக்கு விவாதததை திசை திருப்புகிறார்கள்.

3) உங்களுக்குக் ❤️ போட்டவர்கள் அல்லது 🏆 போட்டவர்களில் அனேகரின் உண்மையான முகம் இதுவல்ல. 

😎

22 hours ago, ampanai said:

ஏன் இவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு என்ன விடை என தெரியவில்லை. 

சில சிங்கள ஊர்களில் பன்சலையிலும் மக்கள் வழிபாட்டிற்கு சென்றிருப்பார்கள். அங்கு படங்களை எடுத்து போட யாரும் இருந்திருக்க மாட்டார்கள். 

ஆக, இந்த செய்தியின் நோக்கம் மதவாதமே.  

The traditional anointing of oil ceremony in lieu of the Sinhala and Hindu New Year was held at the Hunupitiya Gangaramaya Temple, Colombo with the participation of monks and few people at the temple. 

image_31ee8463a6.jpg

image_f6db281edc.jpg

image_7252de980f.jpg

http://www.dailymirror.lk/caption_story/Oil-anointing-at-Gangaramaya-Temple/110-186619

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்துக்கள் இத் திரியின் தலைப்போடோ அல்லது விவாதிக்கப்பட்டவையுடனோ தொடர்புபட்டதல்ல. (அதனால் நீங்கள் எழுதியதை தவறென்று கூறவில்லை)

ஆனால் இத்திரியில் எனது கருத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட எதிர்க் கருத்துக்கள் எல்லாவற்றையும் தெளிவாக கவனித்தீர்களானால் ஒன்று மிகத் தெளிவாகப் புரியும். 

கபித்தான்...என்னுடைய பதிவின் முதலிலேயே  கூறிவிட்டேன். பிடுங்குப்பாடுகளை தொடந்து வாசிப்பவன் என்று, எனது பதில் நிர்வாகம் ஏற்கனேவே பூட்டிய சில திரிகளுக்கும் சேர்த்துத்தான்...நல்லூரானை வணங்கிய இந்த திரி மீண்டும் பாதிரியையும் குருக்களையும் இழுத்து இதற்கும் நிர்வாகம் பூட்டு போட முன் விமர்சனத்தை பொத்தாம் பொதுவாக வைக்காமல் பெயர் குறிப்பிட்டே வையுங்கள் என்று கூறினேன். மேலே சில கருத்துகளில் பாஸ்டருக்கும் பாதிரிக்கும் வித்தியாசம் தெரியாமல் சுவிஸ் பாதிரி என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே தான் உரியவைரை சுட்டுங்கள் என்று குறிப்பிட்டேன்.
உங்களுக்கு முன்னால் யாழ் கள உறவு தூயவனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை...அவரது கருத்துகளுடன் ஒப்பிட்டால் இந்தக் களவுறவுகள் கருத்துகள் ஒன்றுமேயில்லை. நேரமிருந்தால் அவரது கிறிஸ்தவத்திற்கெதிரான பதிவுகளை தேடி வாசியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நன்றி அக்கினி,

யாழ்க் களத்தின் விதி முறைகள் எனக்குப் பரீட்சயமில்லை. நாளடைவில் தெரியவரும் என நம்புகிறேன்.🙂

பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதால் தனிநபர் தாக்குதலாக அமையாதோ ? 🤔

நேரமிருந்தால் தெரிவியுங்கள். 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லையா பின்ன உடையார் 
பாடசாலையில் காற்ச்சட்டை போடும் காலத்தில் வாணி விழா (பேச்சுவழக்கில் சரஸ்வதி பூசை என்றுதான் கூறுவோம் ) சிறப்பிக்க ,வேட்டி மற்றும் குறுத்தா அணிந்து ,மேடையில் உட்கார்ந்து மஹா கணபதிம் பாட்டு பாடி அந்த குழுவே முதற் பரிசு பெற்ற அனுபவத்தை சொல்லவா ...? 
மத பேதம் பார்க்காமல் எல்லோரும் காசு போட்டு கடலை ,அவல் மற்றும் பொங்கல் படைத்து அவலுக்கு சீனி காணாமல் போனதும்வீட்டிலிருந்து  வீட்டிலிருந்த சீனி டப்பாவை அபேஸ் பண்ணிவந்து அவலுக்குள் கொட்டி பகிர்ந்துண்டதை சொல்லவா...? 
அதே பாடசாலையில் ரவுசர் போடும் வயதில் மாணவத்தலைவனாக வாண்டுகளை கையில் குச்சியை வைத்துக்கொண்டு லைனில் ஒழுங்காக நின்று கடலை மற்றும் அவலை வாங்குமாறு மிரட்டிய அனுபவத்தை சொல்லவா...?
நண்பர்களுடன் ஒவ்வொருவருடமும் சென்று மகிழ்ந்த கோவில் திருவிழாக்களை சொல்லவா(அதிலும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய திருவிழா மிகவும் பிரசித்தம் ) ...
நண்பன் அவனோட டாவை சைட் அடிக்க மட்டுநகர்  மாமாங்க கணபதியார் கடுப்பாகாமல் காவலுக்கு நிண்டதை சொல்லவா...? 
இப்படி எவ்வளவோ அனுபவங்களை தந்த எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும்  யாரோ ஒருவன் சாத்தான்கள் என்றோ காட்டுமிராண்டி மூடநம்பிக்கை  என்றோ சொன்னால் அந்த மதத்தையும் அவனையும்  தூக்கியெறிவேனே யொழிய எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும் காயப்படுத்தமாட்டேன் 

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையில் எந்தவொரு மனக்கசப்போ  மத வேற்றுமைகளோ இருந்ததுமில்லை இருப்பதுமில்லை.நானும் மாதாகோவில் அந்தோனியார் கோவில் என அலைந்த காலங்கள் அதிகம்.
இடையில் வந்த வியாபார மதக்குழுக்களால் மட்டுமே தற்போது பிரச்சனைகள் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நன்றி அக்கினி,

யாழ்க் களத்தின் விதி முறைகள் எனக்குப் பரீட்சயமில்லை. நாளடைவில் தெரியவரும் என நம்புகிறேன்.🙂

பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதால் தனிநபர் தாக்குதலாக அமையாதோ ? 🤔

நேரமிருந்தால் தெரிவியுங்கள்.

அன்பு கபிதான் ...நான் கூறிய உறவின் கிறிஸ்தவத்திற்கெதிரான அனைத்து பதிவுகளும் 
நிர்வாகத்தால் பூட்டு போடப்பட்டவைகள் தான் , அவர்தான் எழுதினார்,  எழுதியதில் குறை இருந்ததால் தான் 
நிர்வாகமும் பூட்டை தொங்கவிட்டது. ஒருவர் எழுதியவற்றை இவர் இவ்வாறு எழுதினார்  என்று நினைவு படுத்துவது தனி மனித தாக்குதலாக  இருக்க முடியாது ,அப்பிடி இருப்பின் ஒரு திரியில் ஒருவர் எழுதியவற்றை அடுத்த திரியில் quote பண்ணுவதும் தனி மனித தாக்குதல் பட்டியலில் தான் சென்று சேரும். எனவே இப்படி குறிப்பிடுவது  தனிமனித தாக்குதலாக எனது சிற்றறிவுக்கு புலப்படவில்லை   

1 hour ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையில் எந்தவொரு மனக்கசப்போ  மத வேற்றுமைகளோ இருந்ததுமில்லை இருப்பதுமில்லை.நானும் மாதாகோவில் அந்தோனியார் கோவில் என அலைந்த காலங்கள் அதிகம்.
இடையில் வந்த வியாபார மதக்குழுக்களால் மட்டுமே தற்போது பிரச்சனைகள் வருகின்றன.

இடையில் வந்த வியாபார மதக்குழுக்களால் மட்டுமே தற்போது பிரச்சனைகள் வருகின்றன  - ஆம், அந்தந்த மதங்களை நம்பி வழிபடுவர்கள் தான் இந்த களைகளை அகற்றவேண்டும்.  இல்லாவிட்டால் எல்லா மதங்களுமே அழிந்து விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நாங்கள் பாடசாலை போகும் காலத்தில் அந்தோனியார் கோயிலுக்கு போகாமல் ஸ்கூல் போனது கிடையாது ....போன  வருடம் இரு நாட்கள் மட்டுவிற்கு போயிருந்த போதும் மாமாங்கத்திற்கும்,அந்தோனியாரிட்டையும் போயிட்டு தான் வந்தேன் 
 
இது எப்ப நடந்தது சொல்லவே இல்ல

Vadivelu GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

கபித்தான்...என்னுடைய பதிவின் முதலிலேயே  கூறிவிட்டேன். பிடுங்குப்பாடுகளை தொடந்து வாசிப்பவன் என்று, எனது பதில் நிர்வாகம் ஏற்கனேவே பூட்டிய சில திரிகளுக்கும் சேர்த்துத்தான்...நல்லூரானை வணங்கிய இந்த திரி மீண்டும் பாதிரியையும் குருக்களையும் இழுத்து இதற்கும் நிர்வாகம் பூட்டு போட முன் விமர்சனத்தை பொத்தாம் பொதுவாக வைக்காமல் பெயர் குறிப்பிட்டே வையுங்கள் என்று கூறினேன். மேலே சில கருத்துகளில் பாஸ்டருக்கும் பாதிரிக்கும் வித்தியாசம் தெரியாமல் சுவிஸ் பாதிரி என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே தான் உரியவைரை சுட்டுங்கள் என்று குறிப்பிட்டேன்.
உங்களுக்கு முன்னால் யாழ் கள உறவு தூயவனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை...அவரது கருத்துகளுடன் ஒப்பிட்டால் இந்தக் களவுறவுகள் கருத்துகள் ஒன்றுமேயில்லை. நேரமிருந்தால் அவரது கிறிஸ்தவத்திற்கெதிரான பதிவுகளை தேடி வாசியுங்கள்

மச்சி நீங்கெல்லாம் குடும்பவழியில் வந்தவர்கள் இடையில குறுக்கறுத்து போனதுகளை கதைக்கிறார்கள்  அது போக மட்டக்களப்பில் இருக்கும் இன இணக்கத்துக்கும் இப்ப சில சபைகள் வந்து விட்டது கல்முனை பக்கமும் சில வந்து விட்டது தம்பிலுவிலும் ஏழைகள்தான் பாவம் என்ன செய்வது.

நீங்க இந்த சாக்கடைக்குள் விழுந்து விடாதீர்கள்  நாமெல்லாம் கடற்கரைப்பள்ளிவாசல் முதல் ,சொறிக்கல்முனை சேர்ஜ், -------த்தீவு சேர்ஜ் வரைக்கும் திரிந்து இருக்கிறன் நண்பர்களுடன் ஏன் உள்ள போய் ஆராதனையிலும் கலந்து கொண்டுஇருக்கிறன் 

பள்ளிவாசலில் கைகாலை கழுவி தலையில் துண்டு கட்டி உள்ளே சென்று வணங்கும் முறை தெரியாது ஆனால் உள்ளே சென்று வணக்கிருக்கிறேன் இதுவரை என்னுடன் பழகியவர்கள் , பலரும் மதம் பற்றி பெரிதாக அலட்டி கதைக்கமாட்டார்கள் அனால் சில அல்லோலகல்லோலாக்கள்   நாங்கள் பூசைக்கு வைத்த பொருள் கூட சாப்பிடமாட்டோம் என்று சொல்லும் போது மட்டும் ஏனோ இவங்களை கண்டாலே பிடிப்பது குறைவாக இருக்கிறது இன்னொன்றும் சொல்வான்கள் சாத்தான்கள் என என்னத்த சொல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

இல்லையா பின்ன உடையார் 
பாடசாலையில் காற்ச்சட்டை போடும் காலத்தில் வாணி விழா (பேச்சுவழக்கில் சரஸ்வதி பூசை என்றுதான் கூறுவோம் ) சிறப்பிக்க ,வேட்டி மற்றும் குறுத்தா அணிந்து ,மேடையில் உட்கார்ந்து மஹா கணபதிம் பாட்டு பாடி அந்த குழுவே முதற் பரிசு பெற்ற அனுபவத்தை சொல்லவா ...? 
மத பேதம் பார்க்காமல் எல்லோரும் காசு போட்டு கடலை ,அவல் மற்றும் பொங்கல் படைத்து அவலுக்கு சீனி காணாமல் போனதும்வீட்டிலிருந்து  வீட்டிலிருந்த சீனி டப்பாவை அபேஸ் பண்ணிவந்து அவலுக்குள் கொட்டி பகிர்ந்துண்டதை சொல்லவா...? 
அதே பாடசாலையில் ரவுசர் போடும் வயதில் மாணவத்தலைவனாக வாண்டுகளை கையில் குச்சியை வைத்துக்கொண்டு லைனில் ஒழுங்காக நின்று கடலை மற்றும் அவலை வாங்குமாறு மிரட்டிய அனுபவத்தை சொல்லவா...?
நண்பர்களுடன் ஒவ்வொருவருடமும் சென்று மகிழ்ந்த கோவில் திருவிழாக்களை சொல்லவா(அதிலும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய திருவிழா மிகவும் பிரசித்தம் ) ...
நண்பன் அவனோட டாவை சைட் அடிக்க மட்டுநகர்  மாமாங்க கணபதியார் கடுப்பாகாமல் காவலுக்கு நிண்டதை சொல்லவா...? 
இப்படி எவ்வளவோ அனுபவங்களை தந்த எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும்  யாரோ ஒருவன் சாத்தான்கள் என்றோ காட்டுமிராண்டி மூடநம்பிக்கை  என்றோ சொன்னால் அந்த மதத்தையும் அவனையும்  தூக்கியெறிவேனே யொழிய எனது நண்பர்களையும் அவர்களது நம்பிக்கையையும் காயப்படுத்தமாட்டேன் 

அருமையான கருத்து அக்கினி! பச்சை போட விடுதில்லை !! எதோ error எண்டு வருது? மற்றவர்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவோர்க்கு இதுவே எனது பதிலும்.🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அக்னி,

உங்கள் எண்ணவோட்டம் புரிகிறது. சரியான விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் சின்ன நெருடல் ஒன்று. 🤔

இந்தத் திரி சமயத்துடன் தொடர்புபட்டதல்ல. 

திரிக்கு முதலாவதாக கருத்திட்டவன் நான்தான்.  அங்கும் சமயம் தொடர்புபடுத்தப்படவில்லை.

அடுத்த மூன்று பக்கங்களிலும் எனது பின்னூட்டத்துடன் முரண்பட்டவர்கள்(ஏறக் குறைய 65% மான பின்னூட்டங்கள்), எனது கருத்தில் எந்தவித பிழையையும் குறிப்பாகச்  சுட்டிக் காட்டவில்லை. ஆனால் தொடர்ச்சியாக முரண்பட்டபடியேயிருந்தனர்.  (இங்கேயும் சமயத்தை யாரும் இழிவுபடுத்தவோ தொடர்பு படுத்தவோ இல்லை) 

ஆனால் உங்களின் பதிவுகள் புதிய கிறீத்துவ சபையினரின் கோபமூட்டும் செயற்பாடுகள் பற்றியவையாக உள்ளன. சைவ சமயத்தவரினதும் கிறீத்துவ (RC and Non RC)   சமயத்தினரதும் நல்லுறவு பற்றி உயர்வாக எழுதியுள்ளீர்கள்.  நீங்கள் குறிப்பிடும் மானிப்பாய் St. Annes Lane லினும் கூளாவடியிலும் நானும் ஒழிந்திருந்தவன்தான். நவாலி வயல்வெளி அண்ணமார் கோவில்  கிடாய் வெட்டிலும் கலந்துகொண்ட கத்தோலிக்கன்தான் நான். 

உங்கள் கருத்துக்கள் இத் திரியின் தலைப்போடோ அல்லது விவாதிக்கப்பட்டவையுடனோ தொடர்புபட்டதல்ல. (அதனால் நீங்கள் எழுதியதை தவறென்று கூறவில்லை)

ஆனால் இத்திரியில் எனது கருத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட எதிர்க் கருத்துக்கள் எல்லாவற்றையும் தெளிவாக கவனித்தீர்களானால் ஒன்று மிகத் தெளிவாகப் புரியும். 

அது என்னவென்றால்,  நல்லூர் முருகன் சன்னிதானத்தில் கும்பிடும்  அவன் அடியவர்களை குறை கூறுவதற்கு கபித்தான் யார் ? கபித்தானுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்பதுதான் அது. 

கபித்தான் இவர்களை விமரிசனம் செய்யலாமா ? இல்லை .

ஏன் ? 

ஏனென்றால் கபித்தான் ஒரு கிறீத்தவன். அவன் சைவ சமயத்தவர்களை குறை சொல்ல முடியாது.  

அப்படியானால் சைவ சமயத்தவர்களை யார் விமர்சிக்கலாம் ?

சைவ சமயத்தவர்கள் மட்டும்தான் சவ சமயத்தவரை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ முடியும். 

இந்த அணுகுமுறை ஏற்புடையதுதானா ?

திரும்பவும் ஒரு முறை எனது முதலாவது பின்னூட்டத்தை வாசியுங்கள்.  

அதன் தொடர்ச்சியை வாசியுங்கள். எல்லாமே புரியும்.

உங்களுக்கு ❤️ போட்டவர்கள்.. 🏆 போட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த வகையினரே.

நீங்கள் எப்போது இவர்கள் சரியென வாதிடும் ஒன்றை பிழையெனக் கூறுவீர்களோ அப்போது இவர்களது உண்மை முகத்தைப் பார்க்கலாம். 👍

இதனூடாக நான் கூற வரும் விடயங்கள்

1) சைவ சமயத்தவர்களை சவ சமயத்தவர்களேதான் விமர்சிக்கலாம். 

2) உங்கள்  பின்னூட்டத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக  விவாதிக்கப்பட்ட பிரதான  விடயத்திலிருந்து வேறு திசைக்கு விவாதததை திசை திருப்புகிறார்கள்.

3) உங்களுக்குக் ❤️ போட்டவர்கள் அல்லது 🏆 போட்டவர்களில் அனேகரின் உண்மையான முகம் இதுவல்ல. 

😎

நீங்கள் எப்படித்தான் சிண்டு முடிஞ்சாலும் யாழ் களத்தில் எழுதும் எல்லோருக்கும் உங்கள் நிஜ முகமும் தெரியும் மற்றவர்களின் நிஜ முகமும் நல்லா தெரியும் நண்பரே!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

எனது எழுதிதில் பிழை கண்டுபிடிக்கத் திறனற்ற நீங்கள் எப்படி என் முகத்தைக் கண்டுபிடிப்பீர்கள். 😜😜😜

உங்கள் சைவ சமயத்திலிருந்து சமயம் மாறுகின்றனர் என்கின்ற காரணத்தால் சொந்த சகோதரரையே சோற்றுக்காக மதம் மாறுவோர் என்றும் காசுக்காக மதம் மாறுவோர் என்றும் எள்ளி நகையாடும் நீங்கள் எங்கே என் முகத்தைக் கண்டுபிடிப்பது. 

இந்தத் திரி இவ்வளவு நேரமும் எரிவதற்குக் காரணமான எனது முதலாவது பின்னூட்டத்தில் எந்தவித பிழையையும் காண முடியாமல் இவ்வளவு தொலைவு வரை அழுது புலம்பும் நீங்கள் எங்கே என் முகத்தை அடையாளம் காண்பது. 😜😜😜😜😜😜

மானிப்பாய் தொடர்பில் நான் கூறியதில் பிழை இருந்தால் அக்கினி இங்கே அதனை கூறட்டும். 👍

சிண்டு முடிவதற்கு நான் ஒன்றும் சொந்தச் சகோதரையே சோற்றுக்காக இழிவுபடுத்தும் இழி குடியைச் சேர்ந்தவனும் அல்ல. நான் கூறியதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதற்கு அக்கினியும் எழுத்தறிவற்றவரும் அல்ல. 

ஒன்றுமட்டும்  தெளிவாகத்  தெரிகிறது

எனது எழுத்துக்கள் கேள்விகள் பலரை அம்மணமாக்கியுள்ளது. 😂😂😂😂

பலர்அக்கினிக்கு ஓடோடிவந்து களிம்பு தடவும்போது அது பளிச்சென்று மிளிருகிறது. 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

எனது சொந்த சகோதரனும் சோற்றுக்காக மதம் மாறினால் இதைத்தான் கூறுவேன். அதில் எந்த  மாற்றமும் இல்லை .

உங்கள் எழுத்துக்கள் ஒருவரையும் இங்கு அம்மணமாக்கவில்லை. அப்படி எழுத்துமளவுக்கு உங்களிடம் கருத்துவளமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இங்கும் இன்னும் பலதிரிகளிலும் ஒரே கேள்வி கேள்வியாக கேட்டு அம்மணமாக ஓடிக்கொண்டிருப்பது நீங்கள்தான்!! 😜

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது எப்ப நடந்தது சொல்லவே இல்ல

Vadivelu GIFs | Tenor

போன வருடம் வந்து 2 நாட்கள் தான் மட்டுவில் நிக்க முடிந்தது...மன்னிக்கவும் ..வாற வருசம் வரும் பிளான் இருக்கு...நிலைமை என்ன மாதிரி என்று பார்ப்போம் 

5 hours ago, Kapithan said:

அக்னி,

உங்கள் எண்ணவோட்டம் புரிகிறது. சரியான விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆனாலும் சின்ன நெருடல் ஒன்று. 🤔

இந்தத் திரி சமயத்துடன் தொடர்புபட்டதல்ல. 

திரிக்கு முதலாவதாக கருத்திட்டவன் நான்தான்.  அங்கும் சமயம் தொடர்புபடுத்தப்படவில்லை.

அடுத்த மூன்று பக்கங்களிலும் எனது பின்னூட்டத்துடன் முரண்பட்டவர்கள்(ஏறக் குறைய 65% மான பின்னூட்டங்கள்), எனது கருத்தில் எந்தவித பிழையையும் குறிப்பாகச்  சுட்டிக் காட்டவில்லை. ஆனால் தொடர்ச்சியாக முரண்பட்டபடியேயிருந்தனர்.  (இங்கேயும் சமயத்தை யாரும் இழிவுபடுத்தவோ தொடர்பு படுத்தவோ இல்லை) 

ஆனால் உங்களின் பதிவுகள் புதிய கிறீத்துவ சபையினரின் கோபமூட்டும் செயற்பாடுகள் பற்றியவையாக உள்ளன. சைவ சமயத்தவரினதும் கிறீத்துவ (RC and Non RC)   சமயத்தினரதும் நல்லுறவு பற்றி உயர்வாக எழுதியுள்ளீர்கள்.  நீங்கள் குறிப்பிடும் மானிப்பாய் St. Annes Lane லினும் கூளாவடியிலும் நானும் ஒழிந்திருந்தவன்தான். நவாலி வயல்வெளி அண்ணமார் கோவில்  கிடாய் வெட்டிலும் கலந்துகொண்ட கத்தோலிக்கன்தான் நான். 

உங்கள் கருத்துக்கள் இத் திரியின் தலைப்போடோ அல்லது விவாதிக்கப்பட்டவையுடனோ தொடர்புபட்டதல்ல. (அதனால் நீங்கள் எழுதியதை தவறென்று கூறவில்லை)

ஆனால் இத்திரியில் எனது கருத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட எதிர்க் கருத்துக்கள் எல்லாவற்றையும் தெளிவாக கவனித்தீர்களானால் ஒன்று மிகத் தெளிவாகப் புரியும். 

அது என்னவென்றால்,  நல்லூர் முருகன் சன்னிதானத்தில் கும்பிடும்  அவன் அடியவர்களை குறை கூறுவதற்கு கபித்தான் யார் ? கபித்தானுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்பதுதான் அது. 

கபித்தான் இவர்களை விமரிசனம் செய்யலாமா ? இல்லை .

ஏன் ? 

ஏனென்றால் கபித்தான் ஒரு கிறீத்தவன். அவன் சைவ சமயத்தவர்களை குறை சொல்ல முடியாது.  

அப்படியானால் சைவ சமயத்தவர்களை யார் விமர்சிக்கலாம் ?

சைவ சமயத்தவர்கள் மட்டும்தான் சவ சமயத்தவரை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ முடியும். 

இந்த அணுகுமுறை ஏற்புடையதுதானா ?

திரும்பவும் ஒரு முறை எனது முதலாவது பின்னூட்டத்தை வாசியுங்கள்.  

அதன் தொடர்ச்சியை வாசியுங்கள். எல்லாமே புரியும்.

உங்களுக்கு ❤️ போட்டவர்கள்.. 🏆 போட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த வகையினரே.

நீங்கள் எப்போது இவர்கள் சரியென வாதிடும் ஒன்றை பிழையெனக் கூறுவீர்களோ அப்போது இவர்களது உண்மை முகத்தைப் பார்க்கலாம். 👍

இதனூடாக நான் கூற வரும் விடயங்கள்

1) சைவ சமயத்தவர்களை சவ சமயத்தவர்களேதான் விமர்சிக்கலாம். 

2) உங்கள்  பின்னூட்டத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக  விவாதிக்கப்பட்ட பிரதான  விடயத்திலிருந்து வேறு திசைக்கு விவாதததை திசை திருப்புகிறார்கள்.

3) உங்களுக்குக் ❤️ போட்டவர்கள் அல்லது 🏆 போட்டவர்களில் அனேகரின் உண்மையான முகம் இதுவல்ல. 

😎

உங்களுக்கு உண்மையிலேயே நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்று புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா?
நீங்கள்முதல் எழுதிய பதிவில் எந்த பிழையும் இருந்திருக்காது குறைந்தது ஜந்தோ அல்லது 10 பேரோ சுத்தி நின்று இருந்தால் அல்லது கோயில் திறந்திருந்தது சனம் நின்று இருந்தால் நீங்கள் மேலே சொன்ன கருத்து பொருந்தி போயிருக்கும்.
கோயில் பூட்டி இருக்கு...பொலீசும் நிக்கிறார்கள்..அப்படியிருந்தும் ஏதோ பெரிய கூட்டம் கூடின கதைப்பது உங்களுக்கே பிழை என்று தெரியவில்லையா?
தேவையில்லாமல் மத சாயம் பூச வேண்டாம் பிழை என்றால் ஒத்துக் கொள்ள பழகுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

1) எனது சொந்த சகோதரனும் சோற்றுக்காக மதம் மாறினால் இதைத்தான் கூறுவேன். அதில் எந்த  மாற்றமும் இல்லை .

2) உங்கள் எழுத்துக்கள் ஒருவரையும் இங்கு அம்மணமாக்கவில்லை. அப்படி எழுத்துமளவுக்கு உங்களிடம் கருத்துவளமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

3) இங்கும் இன்னும் பலதிரிகளிலும் ஒரே கேள்வி கேள்வியாக கேட்டு அம்மணமாக ஓடிக்கொண்டிருப்பது நீங்கள்தான்!! 😜

1) நன்றி எப்போதும் தமிழனே,  உண்மையை ஒத்துக்கொண்டதற்கு. உங்களுக்கு உண்மையை ஒத்துக் கொள்வதற்குரிய தைரியமும் நேர்மையும் இருப்பதற்கு பாராட்டுக்கள். இந்த நேர்மையும் தைரியமும் இங்கே பலருக்கு இல்லை என்பது கசப்பான உண்மை. 👍

2) கருத்துவளம் இருப்பதற்கு இங்கே நான் கட்டுரை எழுதவில்லையே. ☹️

3) ஒரே கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும் உங்களிடம் பதிலில்லை என்பதுதானே உண்மை 😀கேள்வி கேட்பதற்கு நேர்மையும் துணிச்சலும் வேண்டும். அவை இரண்டும் என்னிடமிருக்கின்றன. பிழை என்று கண்டால் திருத்திக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது. வேறென்ன வேண்டும் எனக்கு. 

இப்போது கூறுங்கள்- யார் இங்கே அம்மணமாக நிற்பது 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

போன வருடம் வந்து 2 நாட்கள் தான் மட்டுவில் நிக்க முடிந்தது...மன்னிக்கவும் ..வாற வருசம் வரும் பிளான் இருக்கு...நிலைமை என்ன மாதிரி என்று பார்ப்போம் 

உங்களுக்கு உண்மையிலேயே நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்று புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா?
நீங்கள்முதல் எழுதிய பதிவில் எந்த பிழையும் இருந்திருக்காது குறைந்தது ஜந்தோ அல்லது 10 பேரோ சுத்தி நின்று இருந்தால் அல்லது கோயில் திறந்திருந்தது சனம் நின்று இருந்தால் நீங்கள் மேலே சொன்ன கருத்து பொருந்தி போயிருக்கும்.
கோயில் பூட்டி இருக்கு...பொலீசும் நிக்கிறார்கள்..அப்படியிருந்தும் ஏதோ பெரிய கூட்டம் கூடின கதைப்பது உங்களுக்கே பிழை என்று தெரியவில்லையா?
தேவையில்லாமல் மத சாயம் பூச வேண்டாம் பிழை என்றால் ஒத்துக் கொள்ள பழகுங்கள் 

உங்களுக்கு உண்மையிலேயே நான் என்ன சொன்னேன் என்று புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா? ☹️

கொறோனா தொற்றுக் காலத்தில், இத்தனை பிரச்சனைகளுக்குப் பின்பும் மக்கள்வெளியில் நடமாடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் , கூறியது பிழை என்கிறீர்களா ? 🤔

புதுவருட சமய அனுட்டானங்களை வீட்டிலிருந்தவடியே அனுசரிக்கும்படி சைவ சமயத் தலைவர்களும் சைவ சமய அமைப்புக்களும் கூறியிருக்கின்றனரே அதனைக் கவனிக்கவில்லையா ? அதனை உதாசீனம் செய்வது தவறு என்று கூறுவதற்கு ஏன் எல்லோரும் என்மீது கடிந்து கொள்கிறீர்கள் 🤔

இதனை மிகவும் எளிமையாகவும் எவரின் மனம் நோகாதபடி கூறியிருந்தேன். ஆனால் இணையப் போராளிகளுக்கு (😂) கோபம் வருவதற்கான காரணம் என்ன ? ☹️

என்னால் மிக மிகச் சாதாரணமாக கூறப்பட்ட ஒரு கருத்திற்கு இத்தனை கோபம் எங்கிருந்து வருகிறது ? 🤥

சைவ சமய (காற்றில் வாள் வீசும் 😀) காப்பாளர்களுக்கு கோபம் வரக் காரணத்தை எனக்கு அறியத் தாருங்கள். 👏

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

2) கருத்துவளம் இருப்பதற்கு இங்கே நான் கட்டுரை எழுதவில்லையே. ☹️

3) ஒரே கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும் உங்களிடம் பதிலில்லை என்பதுதானே உண்மை 😀கேள்வி கேட்பதற்கு நேர்மையும் துணிச்சலும் வேண்டும். அவை இரண்டும் என்னிடமிருக்கின்றன. பிழை என்று கண்டால் திருத்திக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது. வேறென்ன வேண்டும் எனக்கு. 

இப்போது கூறுங்கள்- யார் இங்கே அம்மணமாக நிற்பது 😂😂😂

ஒரு திரியில்  கருத்தெழுதும்போது கருத்து வளம் தேவையில்லை என்று நினைத்துதான் இவ்வளவு நாளும் கருத்திடுகிறீர்களா?  அட இது தெரியாமல் நாங்கள்தான் முறிந்து முறிந்து பதில் எழுதிக்கொண்டிருக்கிறோமா?
அதுசரி கேள்வி கேள்வியா கேட்கிறதுக்கு அந்த கோதாரி இருந்தாலென்ன இல்லாட்டி என்ன!!

உங்களது  கேள்விக்கான பதில் எப்போதோ கூறப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு புரியாமல் இருப்பதுதான் வேடிக்கை!

இப்போதும் சொல்கிறேன் ஒரு பிரயோசனமும் இல்லாத திரியில் அநாவசியமாக கருத்தெழுதிவிட்டு அம்மணமாக ஓடிக்கொண்டிருப்பது தாங்களே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

ஒரு திரியில்  கருத்தெழுதும்போது கருத்து வளம் தேவையில்லை என்று நினைத்துதான் இவ்வளவு நாளும் கருத்திடுகிறீர்களா?  அட இது தெரியாமல் நாங்கள்தான் முறிந்து முறிந்து பதில் எழுதிக்கொண்டிருக்கிறோமா? 😂😂

அதுசரி கேள்வி கேள்வியா கேட்கிறதுக்கு அந்த கோதாரி இருந்தாலென்ன இல்லாட்டி என்ன!! 👍

உங்களது  கேள்விக்கான பதில் எப்போதோ கூறப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு புரியாமல் இருப்பதுதான் வேடிக்கை!

1). இப்போதும் சொல்கிறேன் ஒரு பிரயோசனமும் இல்லாத திரியில் அநாவசியமாக கருத்தெழுதிவிட்டு அம்மணமாக ஓடிக்கொண்டிருப்பது தாங்களே!!

1) ஒரு பிரயோசனமும் இல்லாத ஒன்றிற்கா என்னுடன் இவ்வளவு பிடுங்குப்பாடு 😂😂

 சில வேளைகளில் நீங்கள் கூறுவது சரியான கருத்தாக இருக்குமோ 🤔🤔🤔

May be..

நிர்வாணிகளின் உலகில் கோவணம் கட்டியவன் ஆண்டி என்பது இங்கே சரியாகத்தான் பொருந்துகிறது. ம்..ம்.. 🤔

அது சரி, ஒரு திரியில் குமாரசாமியர் ""நீர் ஊரில் என்ன சாதி"" என்று கேட்டிருந்தாரே அப்போது நீங்களெல்லோரும் எங்கே ஓடி ஒழிந்தீர்கள் 😂😂😂😂

நான் வாசிக்கவில்லை, பார்க்கவில்லை, மறந்துவிட்டது, அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு ..... என்கின்ற சளாப்பல் கதைகளெல்லாம் வேண்டாம். 😜😜😜

நேர்மையுள்ளவர்கள் பதில் தாருங்கள். 😀😀

(இப்ப பாருங்கோ கொஞ்சப்பேர் பிறடியில குதிக் கால் பட ஓடி ஒழிவினம் இல்லாட்டி மட்டுறுத்தினருக்கு SOS அடிப்பினம் 😂😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்கு உண்மையிலேயே நான் என்ன சொன்னேன் என்று புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா? ☹️

கொறோனா தொற்றுக் காலத்தில், இத்தனை பிரச்சனைகளுக்குப் பின்பும் மக்கள்வெளியில் நடமாடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் , கூறியது பிழை என்கிறீர்களா ? 🤔

புதுவருட சமய அனுட்டானங்களை வீட்டிலிருந்தவடியே அனுசரிக்கும்படி சைவ சமயத் தலைவர்களும் சைவ சமய அமைப்புக்களும் கூறியிருக்கின்றனரே அதனைக் கவனிக்கவில்லையா ? அதனை உதாசீனம் செய்வது தவறு என்று கூறுவதற்கு ஏன் எல்லோரும் என்மீது கடிந்து கொள்கிறீர்கள் 🤔

இதனை மிகவும் எளிமையாகவும் எவரின் மனம் நோகாதபடி கூறியிருந்தேன். ஆனால் இணையப் போராளிகளுக்கு (😂) கோபம் வருவதற்கான காரணம் என்ன ? ☹️

என்னால் மிக மிகச் சாதாரணமாக கூறப்பட்ட ஒரு கருத்திற்கு இத்தனை கோபம் எங்கிருந்து வருகிறது ? 🤥

சைவ சமய (காற்றில் வாள் வீசும் 😀) காப்பாளர்களுக்கு கோபம் வரக் காரணத்தை எனக்கு அறியத் தாருங்கள். 👏

எங்க ராசா இருக்குறீங்கள்😀 உங்களை பார்க்கோணுமே 🙂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

எங்க ராசா இருக்குறீங்கள்😀 உங்களை பார்க்கோணுமே 🙂

மன்னிக்கவும். நான் ரொம்ப பிசி 😂

15 minutes ago, ரதி said:

எங்க ராசா இருக்குறீங்கள்😀 உங்களை பார்க்கோணுமே 🙂

ரதி,

ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் என்னால் எப்போதும் தமிழனுக்கு பின்னூட்டமிடுகையில் கேட்டிருந்தேன் எங்கே ஓடி ஒழிந்தீர்களென்று ?

வசதியாக வாசிக்க மறந்து விட்டீர்களோ 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அது சரி, ஒரு திரியில் குமாரசாமியர் ""நீர் ஊரில் என்ன சாதி"" என்று கேட்டிருந்தாரே அப்போது நீங்களெல்லோரும் எங்கே ஓடி ஒழிந்தீர்கள் 😂😂😂😂

நான் வாசிக்கவில்லை, பார்க்கவில்லை, மறந்துவிட்டது, அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு ..... என்கின்ற சளாப்பல் கதைகளெல்லாம் வேண்டாம். 😜😜😜

நேர்மையுள்ளவர்கள் பதில் தாருங்கள். 😀😀

(இப்ப பாருங்கோ கொஞ்சப்பேர் பிறடியில குதிக் கால் பட ஓடி ஒழிவினம் இல்லாட்டி மட்டுறுத்தினருக்கு SOS அடிப்பினம் 😂😂😂)

அவர் அதை எதற்காக கேட்டார் என்று சொல்லவில்லையே. என்னை கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன் நான் மனித ஜாதியென்று !

அதென்ன ஊரில் என்ன ஜாதி?? ஊரில் வேறு இப்போது வாழும் நாட்டில் வேறா? புரியவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கற்பகதரு said:

எல்லா இடத்திலும் மனித ஜாதி தானா?

எப்போதும் மனித ஜாதி தானா?

நன்றாக யோசித்து பாருங்கள், நாயே, குரங்குத்தனமாக இருக்காதே, பன்றி போல தின்னாதே, எருமை மாட்டுக்கு சூடு சுரணை இல்லை என்று மற்றவர்கள் உங்களை திட்டியதை எல்லாம் எப்படி மறந்தீர்கள்😃?

அவை ஜாதியில்லை அவைக்கும் ஜாதியில்லை! அவற்றை எங்கள் ஊரில் மிருகங்கள் அல்லது விலங்குகள் என்றுதான் அழைப்போம்! உங்கள் ஊரில் அவற்றையும் ஜாதியில் சேர்த்துவிடீர்களோ??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

புதுவருட சமய அனுட்டானங்களை வீட்டிலிருந்தவடியே அனுசரிக்கும்படி சைவ சமயத் தலைவர்களும் சைவ சமய அமைப்புக்களும் கூறியிருக்கின்றனரே அதனைக் கவனிக்கவில்லையா ? அதனை உதாசீனம் செய்வது தவறு என்று கூறுவதற்கு ஏன் எல்லோரும் என்மீது கடிந்து கொள்கிறீர்கள்

கூடிக் கும்பிட்டால் என்ன, இரண்டு பேர் நின்று கும்பிட்டால் என்ன? விளைவு ஒன்றே என்றுதான் கோயில்களை பூட்டி வீட்டில் இருந்தவாறு அனுஷ்டியுங்கள் என்று அறிவித்தார்கள். அதை அவர் கூறினார். இதில் யாரும் தவறு காண முடியாது. போதகர் வந்து நடந்த விதம் பிழை என்று  கூறும் நாம் அதே பிழையை விடலாமா? அதற்கு வேறு விளக்கம். இது வேண்டுமென்று தொடருகிறது.

கபித்தன்! ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதீர்கள். எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால், ஒரு சொல்லையும் விரயமாக்காதீர்கள். மற்றவர்கள் உங்களையும் வாதிடுவோரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம். மாற்ற முடியாததற்காக நேரத்தை வீணாக்காதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

அதென்ன ஒருசொல் போதுமென்றால்!! பந்தி பந்தியாக எழுதியே 200-300 பேர் ஒரு மண்டபத்தில் கூடி பிரார்த்தனை செய்வதற்கும் , வேலைக்குசெல்லும்வழியில் கோவிலைக்கண்டால் ஒரு கும்பிடு போடுவதற்கும் உங்களுக்கு வித்தியாசம் விளங்குதில்லை. இந்த லட்சணத்திலை மற்றவைக்கு அட்வைஸ் வேற!! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.