Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது.

ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம்.

சுயநினைவு திரும்புமா? தெரியாது.

ஆனால்,

திரும்பவேண்டும்.

பின்பு...?

கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். 

மேலும்?

காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும்.

இவை மட்டும் போதுமா?

இல்லையே. 

படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவேண்டும். நடக்க செல்லவேண்டும். முன்புபோல் இன்னும் பலநூறு காரியங்கள் சேர்ந்தே செய்யவேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கோயிலிற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யலாமா?

இல்லை, கோயில் திறந்து இருக்குமா என்பதே நிச்சயம் இல்லை. 

ஆட்களுக்கு சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?

ஜெபிக்க சொல்லலாமா?

வேறு ஏதாவது...

என்ன செய்யலாம்?

அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

முயற்சி  பயன் அளிக்குமோ தெரியாது. ஆனால், எங்கள் மனம் அமைதி அடைவதற்கு எதையாவது செய்து பார்க்க வேண்டும். எமது அன்புக்குரியவர் பிழைக்கவேண்டும்.

நேற்றுவரை உலகம் நன்றாகவே சுழன்றது.

இன்று ஏன்? இப்படி?

நோய், துன்பம், பிணி, இறப்பு, சாக்காடு இயல்பு நிலை. அது ஏன் எமக்கு வரும் என்பதை உணரமுடியாமல் போனது?

மற்றவர்களுக்கு அவை நடக்கும்போது அதன் தாக்கம் உணரப்படமுடியவில்லை. எமக்கு ஒன்றும் நடக்காது என்பதையே நம்பி இவ்வளவு காலமும் ஓடியது.

என்றாலும் கடைசியில்.. 

எமக்கு விரித்த வலையின் விரிப்பினுள் எதிர்பாராத தருணத்தில் கால்கள் முடங்கிவிட்டன?

இனி என்ன செய்வது?

மனம் சுதாகரித்தது.

பரிவு, பரபரிவு நரம்புத்தொகுதி புத்துணர்ச்சி பெற்றதோ? நீளவளைய மையவிழையத்தில் ஏதேனும் அதிசயம் நடந்ததோ? மூளையில் எந்தப்பகுதியில் என்ன நடந்தது? தெரியவில்லை.

இப்போது..

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பட்டறிவு இனி கண்ணைத்திறக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும், மகிழ்கின்ற..உணர்கின்ற..

வாழ்கின்ற..தருணம்

  கொடிய நோயால்  இன்று நாம் காணும்  பட்டறிவு  . இவை உங்களுக்கும் எங்களுக்கும்  நல்  வரமாக கிடைத்திருக்கிறது . கடவுளுக்கு நன்றி சொல்லி மென்மேலும் உற்றார் உறவுகளை காக்க வேண்டுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ....நடந்தவைகளை மறந்து விடுவோம்.

நடக்கப் போகின்றவைகளை யார் அறிவார்.

இந்த நிமிடத்தில் வாழ்வோம்.....!

அதுதான் தற்சமயம் எமக்கு கிடைக்கும் வெகுமதி.....!

நியாயத்தைக் கதைப்பது எனக்கும் பிடித்திருக்கு......!    😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

இது தான் மனிதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவு நிச்சயம் கண்ணை திறக்கவேண்டும் உடையார் 👍

எங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படவும், மற்றவர்கள் அறிவு எங்களுக்கு பயன்படவும் இந்த மனிதசமூகம் இக்கட்டான இந்தக்காலகட்டம் மூலம் நல்ல பல விடயங்களை கற்று முன்னேறட்டும் நிலாமதி 👍.

இந்த நிமிடத்தில் வாழ்வது இலகுவானது இல்லை. அது வரம். எங்கள்  குரங்கு மனம் அதற்கு இடம் கொடாது. அவரவர் மனவலிமையின் உதவியில் இந்த நிமிடத்தில் வாழ முயற்சிப்போம் சுவை 👍.

மனித  மனம் மனிதனுக்கு அழகு, அழிவு, அறிவு அனைத்தையும் கொடுக்கின்றது ஈழப்பிரியன்👍
 
On 21/4/2020 at 20:18, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

7 hours ago, suvy said:

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

61 வயது. திருமணம் ஆகாதவர். மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர்.

  1. கட்டிலுக்கு போனால் நித்திரை லபக்கென்று வரவேண்டும் 
  2. எழும்பியதும் நம்பர் 2 சடக்கென்று போகவேண்டும் 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலுக்கு போனால் நித்திரை உடனடியாக வருவது, காலை எழுந்ததும் இலகுவாக க*கா போவது நல்ல விசயம் அம்பனை 👍.

கட்டிலுக்கு போய்விட்டு நித்திரை இல்லாமல் மாறி மாறி புரண்டு உருளுவதும் இடையிடையே போனை சுரண்டிக்கொண்டு இருப்பதும், இவ்வாறே காலையில் க*கா போகாமல் முக்கிக்கொண்டு இருப்பதுவும் நல்ல அறிகுறிகள் இல்லை.

நாங்கள் சிறிதுகாலமாய் கொரோனா கொரோனா என்று அலறி அடித்து ஓடுகின்றோம். இந்த வாட்ஸப், வைபர், பேஸ்புக் எல்லாமே கூட அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய கிருமிகளே. எங்கள் உடலையும், உளத்தையும் சின்னாபின்னமாக்கி வாழ்க்கையையே நாசமாக்கக்கூடிய வலிமை இவற்றுக்கு உள்ளது.

எல்லாம் அளவாக கட்டுப்பாட்டுடன் பாவித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அளவுடன் நிற்பாட்டும் அளவுக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் மனக்கட்டுப்பாடு உள்ளதா? கொலஸ்ரோல், சுகர் போல இவற்றின் அளவு எல்லை மீறிகடந்து பல வில்லங்கங்களில் மாட்டி நிற்கின்றோம்.

நல்ல நிலையில் திடகாத்திரமாய் வழுவழு என்று உடம்பை காப்பதுவும், உளம் ஆற்றல்கள் மிகுந்ததாக விளங்கும் வகையிலும் வைத்து பேணுவது பெரும் எமக்கு போராட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்

On 22/4/2020 at 05:48, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

வியாதி இல்லா உடல் எனது சித்தியின் இரு பிள்ளைகள் தலசீமியா என்கிற நோய்ய்கு ஆளாகிவிட்டார்கள் 

தினம் தினம் தாய் தந்தையர் இறந்து வாழ்கிறார்கள்  மாதம் தோறும் இரத்தம் ஏற்றல் நோய்கள் வரா உடல் வேண்டும் காசு பணம் இல்லாவிட்டாலும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகதேகத்துடன் கழிகின்ற ஒவ்வொரு நாட்களிற்கும் நாம் எமது உடலிற்கு நன்றி உடையவர்களாய் விளங்குவோம் ராஜா 👍.

உடல் எமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம், பெரும் பொக்கிசம். அதை பாதுகாக்கவேண்டியது எமது பொறுப்பு, கடமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.