Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மஹிந்தவை சந்திக்கிறார் சுமந்திரன்

Featured Replies

(ஆர்.யசி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கேட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட சகல காரணிகளையும் தயார்படுத்தியிருந்த சுமந்திரன் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

எனினும்இன்றைய தினம் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்காத பிரதமர்நாளைய தினம் இரவு 7 மணிக்கு சந்திப்பிற்கான நேரத்தை வழங்கியுள்ளார்.
அதற்கமைய எம்.எ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்திக்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/81835

 

  • தொடங்கியவர்
57 minutes ago, ampanai said:

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல், தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல். எத்தனை தடவைகள் இதே 'படத்தை' காட்டுவார்கள்? 

கூட்டமைப்பு மகிந்தாவிற்கு ஆதரவு காட்டி ஆகிவிட்டது. மக்களை தொடர்ந்தும் ஒரு மாய வலைக்குள் வைத்திருக்க மீண்டும் எடுக்கப்பட்ட பழைய பாத்திரம், 'தமிழ் அரசியல் கைதிகள்'.  

  • கருத்துக்கள உறவுகள்

இது மந்திரிப் பதவி பற்றியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

இது மந்திரிப் பதவி பற்றியதுதான்...

சரியாக சொன்னீர்கள்... மக்களுக்காக அனுசரித்த அரசியலுக்காக மட்டுமே இந்த மந்திரி பதவி மக்களே 

  • தொடங்கியவர்
1 hour ago, alvayan said:

இது மந்திரிப் பதவி பற்றியதுதான்...

அடுத்த கதிர்காமரை நாமாக உருவாக்க விரும்பாவிட்டாலும், எமது மக்களை விற்று தம்மை வளர்ப்பவர்கள் தோன்றிய வண்ணம் உள்ளார்கள் என்பது ஒரு சாபக்கேடு. 

8 minutes ago, ampanai said:

அடுத்த கதிர்காமரை நாமாக உருவாக்க விரும்பாவிட்டாலும், எமது மக்களை விற்று தம்மை வளர்ப்பவர்கள் தோன்றிய வண்ணம் உள்ளார்கள் என்பது ஒரு சாபக்கேடு. 

இவரை கதிர்காமருடன் ஒப்பிட முடியாது। மேட்குலக நாடுகளை புலிகளுக்கு எதிராக திருப்பியது, இந்தியாவை வலிக்கு கொண்டு வந்து யுத்தத்தை வெல்ல காரணமாக இருந்தவர்। வெசாக் பண்டிகையை சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியவர்। சுமந்திரனுக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நல்ல எண்ணம் இருந்தாலும் , கதிர்காமர் அளவுக்கு வர முடியாது।

  • தொடங்கியவர்

 

"சுமந்திரன் கொழும்பின் விசுவாசி" - வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

 

4 hours ago, ampanai said:

அடுத்த கதிர்காமரை நாமாக உருவாக்க விரும்பாவிட்டாலும், எமது மக்களை விற்று தம்மை வளர்ப்பவர்கள் தோன்றிய வண்ணம் உள்ளார்கள் என்பது ஒரு சாபக்கேடு. 

கதிரகாமரை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை. சந்திரிகா அமைச்சரையில் இடம் பெறும் வரை அப்படி ஒருவர் இருப்பதே தமிழ் மக்களுக்கு தெரியாது. கதிர்காமரின் அரசியல் ராஜதந்திர வல்லமை கண்டு சந்திரிகா அவரை வெளிவிவகார அமைச்சர் ஆக்கினார்.வல்லமை உடைய தமிழர்கள் எதிரியிடம் பணிபுரிவது தமிழர் வரலாற்றில் வழமை.   

  • தொடங்கியவர்

91 கைதிகளின் விவரங்களை பிரதமரிடம் சுமந்திரன் கையளித்தார்

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான முழுத் தகவல்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இன்று (12), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையளித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி, பிரதமரும் சுமந்திரனும் ஒரு மணிநேரம் உரையாடியுள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/91-கதகளன-வவரஙகள-பரதமரடம-சமநதரன-கயளததர/150-250173

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை பிரதமரிடம் கையளித்தார் டக்ளஸ்

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு குறிப்பாக கடற்தொழிலாளர்களது பிரச்சினை,மற்றும் வடக்கு தமிழ் சிறைக்கைதிகள் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், கடற்றொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பிரதமரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம் பெற்றது.

ஒலுவில் துறைமுகத்தை கடற்தொழில்துறைமுகமாக மாற்றியமைப்பதனால் வடக்கு மக்கள் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சாதகமாக அமையும் எனவும், நாட்டில் தற்போது 6 டின் மீன் தொழிற்சாலைகள் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் இயங்குகின்ற இந்த தொழிற்சாலைகளின் உற்பத்திகளுக்கு உரிய வரிச்சலுகை வழங்கினால் தொழிற்துறையில் முன்னேற்றமடையலாம் என அமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் கடற்தொழில் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதவர்களை அவரவர் பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை பிரதமர் அலுவலகம் ஊடாக எடுக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை,கல்கிசை,இரத்மலானை உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ளோரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை கட்டம் கட்டமாக எடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/81890

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் சரியான போட்டி.

ஒரு நாட்டின் பிரதமருக்கு இவர்கள் கொண்டு போய் கொடுத்துத்தான் தமிழ் கைதிகள் பற்றிய அறிய வேண்டும் என்ற தேவை கிடையாது.

அண்மையில் வெசாக் பெளர்ணமிக்கு விடுதலையான சிங்களக் கைதிகளின் பட்டியலை எந்தச் சிங்களக் கட்சி சமர்ப்பித்தது.. அல்லது எந்த சிங்கள அமைச்சர் கையளித்தார்.. அதுவும் சொறீலங்கா சனாதிபதியிடம்..??!

எல்லாம் அதுபாட்டுக்கு போகுது நடக்குது. 

ஆனால்.. எம்மவர்கள் தான் தொடர்ந்து ஊடக விளம்பரத்துக்காக இவற்றைச் சொல்லி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மகிந்தவோ.. கோத்தாவோ நினைத்தால்.. ஒரு அரை மணி நேரத்துக்குள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். எல்லா ஆவணங்களும் அரசின் கையில் உள்ளது. ஆனால்.. மகிந்த - கோத்தா கும்பலுக்கோ... எந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கோ.. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க.. உளப்பிரியம் கிடையாது. இதுதான் யதார்த்தம். 

சர்வதேச அழுத்தம் ஒன்றே இவர்களைக் கட்டுப்படுத்தும். 

இந்த ஏமாற்றிகள்.. தமிழ் மக்களை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றப் போகிறார்களோ.

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்டுவார்கள் என தோன்றுகின்றது.

யார் குத்தினாலும் அரிசியானால் சரி. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்டுவார்கள் என தோன்றுகின்றது.

யார் குத்தினாலும் அரிசியானால் சரி. 

 

இருக்கலாம். ஏட்டிக்குப் போட்டியா போயிருக்கினம் என்றால்.. மகிந்த ஏதாவது சமிக்ஞை காட்டி இருப்பார் போலு. ஆனால்.. எல்லாம் மகிந்தரின் தேர்தல்.. இலாப - நட்டக் கணக்குப் படிதான் நிகழும். 

  • தொடங்கியவர்
1 minute ago, nedukkalapoovan said:

இருக்கலாம். ஏட்டிக்குப் போட்டியா போயிருக்கினம் என்றால்.. மகிந்த ஏதாவது சமிக்ஞை காட்டி இருப்பார் போலு. ஆனால்.. எல்லாம் மகிந்தரின் தேர்தல்.. இலாப - நட்டக் கணக்குப் படிதான் நிகழும். 

தனியாகவே சுமந்திரன் ஊடாக வந்த கோரிக்கையால் அந்த உறவுகளை விடுத்ததாக இருக்கக்கூடாது என்பதற்காக டக்ளஸையும் அதே கோரிக்கைகள் அடங்க மகிந்தா வரவழைத்துள்ளார். இது அரசியல். அந்த அரசியலில் நீங்கள் கூறியது போன்று தேர்தல் கணக்கு. 

இருந்தாலும், பொருளாதரக்கணக்கு மகிந்த குழுவை ஆட்டம் காண வைக்கவும், தேர்தலில் வென்றாலும். 

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகள் விடுதலை, அரசியல் தீர்வு தொடர்பில் மகிந்த – சுமந்திரன் ஒரு மணி நேரம் பேச்சு

76-6-1.jpgபிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று இரவு நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ரத்துச் செய்யப்பட்டதாக சில செய்திகள் வெளிவந்திருந்த போதிலும், திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதனை தினக்குரலுக்கு உறுதிப்படுத்திய சுமந்திரன், சுமார் ஒரு மணி நேரத்துக்கு இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து உரையாடியதாகத் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பு ரத்துச்செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து காலை சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், மாலையில் சந்திப்பை உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி மாலை 7.30 மணிக்கே சந்திப்பு இடம்பெறும் எனவும் தெரியப்படுத்தியிருந்தது. இதன்படி விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒருமணி நேரத்துக்குத் தொடர்ந்தது.

 

நேர ஒதுக்கீடு தொடர்பாகவே பேச்சுக்கள் ரத்துச் செய்யப்படலாம் என்றவாறான செய்திகள் வெளிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை இச்சந்திப்பின்போது பிரதமரிடம் தான் கையளித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்களுடைய விடுதலைக்கு உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குத் தான் கொண்டுவருவதாகவும், அவருடன் இது குறித்துப் பேசுவதாகவும் சுமந்திரனுக்குப் பிரதமர் உறுதியளித்தார்.

இதனைவிட, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் முக்கியமாக இதன்போது ஆராயப்பட்டது. அரசியலமைப்புத் திருத்தப்பட வேண்டும் என்பதையும், 19 ஆவது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதையும் இதன்போது பிரதமர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பது குறித்து தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் பிரதமர் தெரியப்படுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், எமது மக்களுடைய அபிலாஷைகள் முழுமையாக நிறைவேறக்கூடிய ஒரு தீர்வு புதிய அரசியலமைப்பின் மூலம் வருமாக இருந்தால் அதற்குத் தாம் முழுமையான ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். தன்னால் தீர்வு ஒன்றை வழங்க முடியும் என இதன்போது தெரிவித்த பிரதமர், இதற்கு உங்களுடைய (கூட்டமைப்பின்) ஆதரவு தேவை எனவும், ஆனால், புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே இதனைச் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

முழு அளவிலான தீர்வாக இருந்தால் அதற்கான ஆதரவைத் தம்மால் வழங்க முடியும் எனவும் அரைகுறைத் தீர்வு எதற்கும் தாம் ஆதரவளிக்க முடியாது எனவும் சுமந்திரன் இதன்போது தெரியப்படுத்தினார். அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது குறித்தும் இதன்போது இருவரும் விரிவாக ஆராய்ந்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளையில், இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

 

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர் அவர்கள் சுமந்திரனிடம் கேட்டறிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படிக்கும் கேட்டிருந்தார். இதனடிப்படையில் தமிழ் அரசியலை கைதிகளின் முழுவிபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் இன்று பிரதமர் அவர்களிடம் கையளித்தார்.

இந்த கைதிகளுள் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதாகவும் சுமந்திரன் அவர்களையும் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர் அவர்கள் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் அவர்கள், தாம் புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி அவர்களும் இதனை உறுதி செய்துள்ளதனையும் சுட்டிக்காட்டினார். புதிய பாராளுமன்றம் கூடுகின்றபோது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக்கின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளிற்கு அத்தியாவசியமாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம்பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இக்கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் அவர்கள் உறுதியளித்தார்.”

இவ்வாறு கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/41491

5 hours ago, ampanai said:

தனியாகவே சுமந்திரன் ஊடாக வந்த கோரிக்கையால் அந்த உறவுகளை விடுத்ததாக இருக்கக்கூடாது என்பதற்காக டக்ளஸையும் அதே கோரிக்கைகள் அடங்க மகிந்தா வரவழைத்துள்ளார். இது அரசியல். அந்த அரசியலில் நீங்கள் கூறியது போன்று தேர்தல் கணக்கு. 

இருந்தாலும், பொருளாதரக்கணக்கு மகிந்த குழுவை ஆட்டம் காண வைக்கவும், தேர்தலில் வென்றாலும். 

அரசியல் கைதிகள் யாருமே இல்லை என்றுதானே அரசில் சொன்னார்கள்। தேர்தல் நெருங்கும்போது கதைகள் மாரத்தான் செய்யும்। நீங்கள் சொன்னதுபோல திடீரென்று டக்ளஸ் ஐயா இடையில் புகுந்ததும் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான்। இருந்தாலும் கைதிகள் விடுவிக்கப்படடாள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்। 

டக்ளசுக்கு போட்டியா இன்னொரு டக்ளஸாக சுமந்திரன்!
பலநாள் திருடன் ஒருநாள் தானே மாட்டிக்கொள்வான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

டக்ளசுக்கு போட்டியா இன்னொரு டக்ளஸாக சுமந்திரன்!
பலநாள் திருடன் ஒருநாள் தானே மாட்டிக்கொள்வான்.

இனி.... டக்கிளசு,  பாடு திண்டாட்டமாக....  இருக்கப்  போகுது.   :grin:

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மகிந்தவிடம் பெயர்ப்பட்டியலை சமர்ப்பித்தது ஈ பி டி பி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.

பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே குறித்த விடயம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வு கோரிய மகஜர் பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன்அவர்களது பெயர் விபரங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கு பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினரால் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மேலும் விவாசாயத்துக்கு பொருத்தமான தரிசு நிலங்களை விடுவித்து விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுத்து விவசாய நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க ஏது நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது

மேலும் கல்வியில் பெரு வீழ்ச்சிகண்டுள்ள யாழ் மாவட்டத்தை அதிலிருந்து மீட்டு முன்னேற்றுவது தொடர்பாகவும் அதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளால் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அத்துடன் தீவக பகுதியின் குடிநீருக்கு தீர்வுகாணும் முகமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்களை அப்பிரதேசங்களில் உருவாக்கல், கொரோனா முடக்க நிலை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு மீளவும் திரும்பமுடியாதுள்ளவகளை அவரவர் இடங்களுக்கு மீளவும் அனுப்ப விரைவான நடவடிக்கை மேற்கொள்ளல் நாட்டில் இருக்கக்கூடிய ரின் மீன் தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுடன் நாட்டிலுள்ள நான்கு மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பது தொடர்பிலும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அத்துடன் ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையிடமிருந்து பொறுப்பேற்று கடற்றொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது

பிரதமருடனான குறித்த சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், அமைச்சரின் ஆலோசகர் தவராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடன் பிரதமரின் செயலாளர் மற்றும் துறைசார் செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg


https://www.ibctamil.com/srilanka/80/143064

13 hours ago, தமிழ் சிறி said:

இனி.... டக்கிளசு,  பாடு திண்டாட்டமாக....  இருக்கப்  போகுது.   :grin:

சுமந்திரன் கோஷ்டியோட ஒப்பிடேக்க டக்ளஸ் கோஷ்டி பலமானதா தெரியுது.
இருவரில் யார் திறமான ஏமாற்று பேர்வழிகள் என்டு சில மாதங்கள் / வருஷங்கள் போக தெரிஞ்சிடும். 😜

22 hours ago, தமிழ் சிறி said:

இனி.... டக்கிளசு,  பாடு திண்டாட்டமாக....  இருக்கப்  போகுது.   :grin:

தேர்தல் முடிந்த பிறகு தெரியும்। இங்கு தலைகளின் எண்ணிக்கையை (Head Count )  பொறுத்தே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும்। 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 23:02, tulpen said:

வல்லமை உடைய தமிழர்கள் எதிரியிடம் பணிபுரிவது தமிழர் வரலாற்றில் வழமை.   

இதன் காரணம் என்ன? மறுவளமாக,  வல்லமை உடைய தமிழர்கள், தமது மக்களுக்காக ஏன் பணிபுரிவதில்லை?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.