Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முழுவதும் கடும் மழை பெய்யும் - கடல் அலையின் உயரம் அதிகரிக்கும்! முக்கிய அறிவிப்பு

Featured Replies

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.

இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை மறுதினம் (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரை கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.'

அத்துடன் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2 - 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதோடு, இதன் காரணமாக, அலைகள் கரையை நோக்கி அதிக தூரம் வர வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143307?ref=home-imp-parsely

பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாத்தளை மாவட்டத்தின் உக்குவலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு பூரண மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அத்துடன்,காலி மாவட்டத்தின், பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியாகம, போப்பே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பல-பகதகளல-மணசரவ-அபய-எசசரகக/175-250313

மீள் அறிவித்தல் வரை கைவிடப்பட்ட மீன்பிடி நடவடிக்கை

மீன் பிடி படகுகள் கடலுக்கு செல்வது மீள் அறிவித்தல் வரை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு, காலி, ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும் என அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/143299

ஸ்ரீலங்காவில் சீரற்ற காலநிலை; இதுவரை இருவர் உயிரிழப்பு

ஸ்ரீலங்காவில் பெய்துவரும் கனமழையால் தற்போதுவரை இருவர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, வத்தாராமஹெல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாகவும், கேகாலை வல்தெனிய பகுதியில் மண் திட்டு இடிந்து வீழ்ந்ததில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143394

 

தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாகக்கூடும்! சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை வல்தெனிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதனால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143392

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற புதன்கிழமை.... மட்டுநகர் களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார்.... ஆலயக் கிணறு,
நிரம்பி வழிந்ததன் மூலம், இப்படி  ஒரு அனர்த்தம் நடக்கப் போகுது என்று....
ஸ்ரீலங்காவின் கால நிலையம் அறிவிக்க முன்னரே....  
மாணிக்கப் பிள்ளையார், அறிவித்து விட்டார். :)

 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற புதன்கிழமை.... மட்டுநகர் களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார்.... ஆலயக் கிணறு,
நிரம்பி வழிந்ததன் மூலம், இப்படி  ஒரு அனர்த்தம் நடக்கப் போகுது என்று....
ஸ்ரீலங்காவின் கால நிலையம் அறிவிக்க முன்னரே....  
மாணிக்கப் பிள்ளையார், அறிவித்து விட்டார். :)

 

சிறியர் உங்கள் முயற்ச்சிக்கு வாழத்துக்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

சென்ற புதன்கிழமை.... மட்டுநகர் களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார்.... ஆலயக் கிணறு,
நிரம்பி வழிந்ததன் மூலம், இப்படி  ஒரு அனர்த்தம் நடக்கப் போகுது என்று....
ஸ்ரீலங்காவின் கால நிலையம் அறிவிக்க முன்னரே....  
மாணிக்கப் பிள்ளையார், அறிவித்து விட்டார். :)

 

நல்ல ஐடியா தமிழ்சிறி. உலகெங்கும் உள்ள காலநிலை அவதான நிலையங்களை மூடி பல பில்லியன் பணத்தை சேமிக்கலாம். Meteo group Wetterstation Deutschland க்கு உடனடியாக இந்த தகவலை அறிவியுங்கள் தமிழ் சிறி.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது முன்னோர்கள் பறவைகள் மிருகங்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும் பின்னர் நடக்கபோவதை துல்லியமாக கணித்தார்கள்.சம்மட்டிகள் பல விடயங்களை முன்கூட்டியே சொல்லக்கூடியவர்கள்.காற்றடிக்கும் திசையை வைத்தும் காலநிலை சொல்பவர்கள் இருக்கின்றார்கள்.

58 minutes ago, குமாரசாமி said:

எமது முன்னோர்கள் பறவைகள் மிருகங்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும் பின்னர் நடக்கபோவதை துல்லியமாக கணித்தார்கள்.சம்மட்டிகள் பல விடயங்களை முன்கூட்டியே சொல்லக்கூடியவர்கள்.காற்றடிக்கும் திசையை வைத்தும் காலநிலை சொல்பவர்கள் இருக்கின்றார்கள்.

உண்மை தான் குமாரசாமி. நவீன சாதனங்களை கண்டு பிடிக்க முதல் உலகம் முழுவதும் வாழ்ந்த மக்கள் இவ்வாறான முறைகளைத் தான் உபயோகித்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் உங்கள் முயற்ச்சிக்கு வாழத்துக்கள்.

சுவைப் பிரியன்.... இந்தக் கருத்தை எழுதும் போது,
ருல்பனையும், கற்பக தருவையும்...  இந்தத் திரிக்குள்  இழுத்து விட வேண்டும் என்று...
நினைத்துத்தான்... அந்தக் கருத்தை எழுதினேன்.

ருல்பன்... வந்ததில்,  எனது நோக்கம் 50 % வீதம் நிறைவேறி விட்டது.
இப்போ... அமெரிக்காவில், அதிகாலை என்பதால், 
நாளைக்கு இடையில்... கற்பக தருவும், வருவார் என நம்புகின்றேன்.  :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நல்ல ஐடியா தமிழ்சிறி. உலகெங்கும் உள்ள காலநிலை அவதான நிலையங்களை மூடி பல பில்லியன் பணத்தை சேமிக்கலாம். Meteo group Wetterstation Deutschland க்கு உடனடியாக இந்த தகவலை அறிவியுங்கள் தமிழ் சிறி.  

Meteo group Wetterstation (Deutschland)  ஜேர்மனி  எங்கும்... பிள்ளையார் கோயில் கட்டி, 
கிணறு வெட்ட... காசு, தருவாங்கள்... என்றால்... உடனே.. அறிவிப்பேன். 🤩

ருல்பன்...  அதற்குப் பிறகு..."மேன்மை கொள் சைவ நீதி உலகெங்கிலும்"... கொடி  கட்டிப் பறக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சென்ற புதன்கிழமை.... மட்டுநகர் களவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார்.... ஆலயக் கிணறு,
நிரம்பி வழிந்ததன் மூலம், இப்படி  ஒரு அனர்த்தம் நடக்கப் போகுது என்று....
ஸ்ரீலங்காவின் கால நிலையம் அறிவிக்க முன்னரே....  
மாணிக்கப் பிள்ளையார், அறிவித்து விட்டார். :)

 

 ☺️..😊

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

IMG-0787-3.jpg

150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற மிகப் பாரிய சூறாவளியானது மிக மிகப் பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து நேற்று (2020 மே 18ஆம் திகதி) காலை 05.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 765 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.30 E இற்கும் இடையில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிக மிகப் பாரிய மீயுயர் சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மே 20ஆம் திகதி வடக்கு – வடகிழக்கு திசையில் பிற்பகலளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில்அடுத்த 12 மணித்தியாலங்களில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/150-மில்லிமீற்றர்-மழைவீழ்ச/

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி; மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான் சூறாவளி நாளை பிற்பகல் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30க்கு மையம் கொண்டுள்ளது.

இது நாளை 20ஆம் திகதி பிற்பகல் வேளையில் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும். வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/143562

cyclone-amphan-1-1589690899552.jpg

200518063933-tropical-cyclone-amphan-upd

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.