Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது – மனோ கணேசன் சீற்றம்

Featured Replies

 

Manoganeshan.jpg

பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக்குழுவும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டினார்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்கத் தரப்பு காட்டாமாக உள்ளார்கள் என்றும் இன்று அது அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய மனோ கணேசன் இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/143745?ref=ibctamil-recommendation

வடக்கில் மே18 இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோஷ்டியை சொறிலங்கா போலீஸ் காடையர்கள் அச்சுறுத்தியபோது  வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு?

மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!

ரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கத்திற்குரியது : மனோ கணேசன்

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது.

இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், செயற்படும்  தேர்தல் ஆணையகத்தின் அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலை இந்த அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயலுகின்றமை எமக்கு தெளிவாக தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாக நாம் கருதுகிறோம்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்க அமைச்சர்கள் காட்டாமாக உள்ளார்கள்.

இது இன்று அதிகரித்துள்ளது. இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேராசிரியர் ரத்னஜீவன்  ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர்தான். தேர்தல்கள் ஆணைக்குழுவில்  நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்கச்சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர்.

கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம் பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை. இன்று அவர் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை. எமக்கும் அப்படி ஒரு சார்பு நிலை தேவைப்படவும் இல்லை.

அவர் சார்பு நிலை எடுப்பாரெனில் மக்கள் நலன் சார்ந்ததாகவும், ஜனநாயகம் சார்ந்ததாகவே இருக்கின்றது. இந்த அடிப்படையில் இலங்கையிலும், இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் அவர் மீதான  ஏற்புடைமை பழுதுபடாமல் இருக்கின்றது.

நாடு திரும்பியுள்ள, பேராசிரியர் ரத்னஜீவன்  ஹூலின் புதல்வி, தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு,  ரத்னஜீவன்  ஹூலின் மீது புதிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

அவரையும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி முடக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது. இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன. மென்மேலும் நகைப்புக்கு  ஆளாக வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.    

https://www.virakesari.lk/article/82500

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன

சீனா  தான் இன்று உலகம் அந்த உலகம் மகிந்தாவின் /கொத்தவின் பொக்கற்றுக்குள்....

மனோ கணேசன் அவர்களே நீங்கள் உண்மையை கூறினாலும் சிலருக்கு அது புரிவதில்லை. புரிந்தாலும் புரியாதவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் பேச வேண்டுமாம். இல்லாவிடடாள் இங்கு இந்த திரியில் கிழித்து (?) போடுவார்கள். இனி பேசும் முதல் இந்த களத்தில்வந்து அவர்களின் கருத்தை கேட்டு விட்டு பேசவும்.

5 hours ago, Rajesh said:

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

பலமாதங்களா தமிழ் மக்களை சோதனை சாவடிகளில அகோர வெயிலில இறக்கி சோதனை செய்யேக்க வாய்திறக்காத மனோ கணேசன் இப்ப வேதனைப்படுறது எவ்வளவு நடிப்பு?

மனோ கணேசன் சுய ஆதாயத்துக்காக பலருக்கு அடிமை சேவகம் செய்றது புதுசில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

மனோகணேசன் அரசியல்வாதி. அரசியல்வாதிகளிடம் அதிகமாக எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலே முடியும். ☹️

3 hours ago, Vankalayan said:

மனோ கணேசன் அவர்களே நீங்கள் உண்மையை கூறினாலும் சிலருக்கு அது புரிவதில்லை. புரிந்தாலும் புரியாதவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் பேச வேண்டுமாம். இல்லாவிடடாள் இங்கு இந்த திரியில் கிழித்து (?) போடுவார்கள். இனி பேசும் முதல் இந்த களத்தில்வந்து அவர்களின் கருத்தை கேட்டு விட்டு பேசவும்.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதானே அரசியல்வாதிகளின் வேலை 🤔😂

7 hours ago, விவசாயி விக் said:

ராஜபக்ச சகோதரர்கள் சிங்கள ஒற்றுமையை சிதைத்து வருகிறார்கள்.  தமிழர் குறுக்கால போகாமல் எட்ட நிண்டு வேடிக்கை பார்க்கவேண்டும்.

சரியா சொல்லி இருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பேரா.ஹூல் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை – தேர்தல் ஆணையத் தலைவர்

 
 
தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது மகள் எழிலினி தொடர்பாகத் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மே 04, லண்டனிலிருந்து திரும்பிய எழிலினி, இதர பயணிகளைப் போல், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னர் பரிசோதனையில் நோயில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தில் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும், மருத்துவ அதிகாரி அனில் ஜசிங்கவும் கையெழுத்திட்டிருந்தார்கள்.

மகளை அழைத்துக்கொண்டு, ஆணையப் பணிமனைக்குச் சென்றபோது பேரா. ஹூல் ஆணையத்தின் வாகனத்தைத் தனிப்பட்ட காரணங்களுக்குப் பாவித்தார் எனவும், எழிலினி மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் செல்லாது தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது தவறு என்றும் தென்னிலங்கை ஊடகங்கள் சில குற்றம்சாட்டியிருந்தன. அதே வேளை யாழ்ப்பாணம் சென்ற பேராசிரியர் ஹூலின் வீட்டிற்குச் சென்ற காவற்துறையினரால் பேராசிரியர் ஹூல், எழிலினி மற்றும் ஹூலின் வாகனச் சாரதி அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் சென்றிருக்கவேண்டுமென நிர்ப்பந்திகப்பட்டிருந்தார்கள் எனவும், வாகனச்சாரதி தடுத்துவைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டிருந்ததாகவும் பேரா. ஹூல் நேற்று ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் தேர்தல் ஆணையத் தலைவர் தலையிட்டு வாகனச் சாரதியை விடுவித்திருந்தார். இன்றய அறிக்கையில், ஆணையத் தலைவர் “எழிலினியைத் தவிர மற்றவர்கள் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை எனவும், ஆணைய அலுவலகத்தின் பணிப்பின் பேரிலேயே பேராசிரியர் அலுவலக வாகனத்தைப் பாவிக்கவேண்டி வந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதால், யாழ்ப்பாண அலுவலகத்தின் வாகனத்தையே பாவிக்கும்படி அலுவலகம் அவருக்குப் பணித்திருந்தது. ஊரடங்கு நடைமுறையின் காரணமாகத் தனியார் வாகனத்தைப் பாவிக்க முடியவில்லை எனவும், பொதுப் போக்குவரத்து பாவனையில் இல்லாமையால், மே 20 கொழும்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹூல், ஆணையத்தின் அனுமதியுடன் அலுவலக வாகனத்தில் கொழும்பு வந்திருந்தார். அவர் மீண்டும் யாழ் போகும்போது , அலுவலகத்தின் அனுமதியுடன், மகளையும் அவ்வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தென்னிலங்கை ஊடகங்கள், எழிலினி சுய தனிமைப்படுத்தலில் செல்லாதமை, ஹூல் அலுவலக வாகனத்தைப் பாவித்தமை பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இன்றய அறிக்கையின் மூலம் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சம்பவத்தின் பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

https://marumoli.com/பேரா-ஹூல்-சுய-தனிமைப்படு/

20 hours ago, Kapithan said:

மனோகணேசன் அரசியல்வாதி. அரசியல்வாதிகளிடம் அதிகமாக எதிர்பார்ப்பது ஏமாற்றத்திலே முடியும். ☹️

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதானே அரசியல்வாதிகளின் வேலை 🤔😂

அது சரி . அது இலங்கை வாழ்  மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதாக அமைந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Vankalayan said:

அது சரி . அது இலங்கை வாழ்  மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதாக அமைந்தால் போதும்.

அடிக்கடி same side goal அடிக்கிறீரே goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

47 minutes ago, Kapithan said:

அடிக்கடி same side goal அடிக்கிறீரே goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

அப்படி இல்லை. இலங்கை மக்களின் அபிலாஷை என்று எழுதினேன். கவனிக்கவும் இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

goal post எந்தப் பக்கம் இருக்கிறது என்று கவனிப்பதில்லையா 😂

இரண்டு பக்கமும் இருக்கு தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.