Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

பையன் இதை மட்டும் நீங்கள் நிரூபியுங்கள் நான் சொல்லிய எழுதிய அனைத்து பதிவுகளும் பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

போர் முடிந்தபோது வெளியில்தான் இருந்தார் என்பது எனது நினைவு. ஆனால் அவரது உயரம் அன்று போதாது. அவரை சுற்றி ஒரு ஐநூறு பேர் இருந்தாலே அதிகம். அதனால்தான் கருணாநிதி ்அன்று வெட்டி ஆடினார்.

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
On 3/6/2020 at 13:19, பையன்26 said:

ம‌ணி செந்தில் இறுதி க‌ட்ட‌ போர் முடிந்த‌தும் அண்ண‌ன் சீமானை சிறையில் போய் ச‌ந்திக்கிறார் , இப்ப‌டி ப‌ல‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் இருக்க‌ க‌ட்டு க‌தை ஒரு போதும்  ந‌ன்மையை த‌ராது தீமையை தான் த‌ரும் 

நன்றி இசை உங்கள் தகவலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இசைக்கலைஞன் said:

போர் முடிந்தபோது வெளியில்தான் இருந்தார் என்பது எனது நினைவு. ஆனால் அவரது உயரம் அன்று போதாது. அவரை சுற்றி ஒரு ஐநூறு பேர் இருந்தாலே அதிகம். அதனால்தான் கருணாநிதி ்அன்று வெட்டி ஆடினார்.

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

27 minutes ago, MEERA said:

இது தான் உண்மை,

ஆனால் 30 வருடங்களாக படை நடத்தியவர்களுக்கு இந்திய அரசியலும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களும் புரியாமல் போனது தான் விந்தை...

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
கடவுள் இருக்கிறார் என்றால் ஆதாரத்தை காட்டுங்கள் என்பவர்கள் தான் சீமானை போலி, பிராடு என்கிறார்கள்.அவர்களிடம் சீமான் போலி என்பதற்கு ஆதாரத்தை காட்டுங்கள் என்றால் உடும்புக்கறி,ஆமைக்கறி,கறி இட்டலி,ஏகே47 என்கிறார்கள்.
இதெல்லாம் ஆதாரம் இல்லை என்று சொன்னால் இட்டலி செய்முறையை இணைக்கின்றார்கள்.காலம் பதில் சொல்லும் என்கிறார்கள்.😎

இன்னுமொரு விசயம்....அதையேன் பேசுவான்.  சிங்களத்திலை உதாரண வசனம் வேறை.....🤣

"அபே ஹம யனவா,ஊகே நம யனவா"

"அபே ஹம யனவா,ஊகே நம யனவா" என்றால்....
"யாதும்.... ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனார்... 
சொல்லிய,  கருத்து வருமா?

டிஸ்கி:  குமாரசாமி அண்ணா... எனக்கு, சிங்களம் சுத்தமாக தெரியாது.
ஆனால்.. சிங்கள போலீஸ்காரன்,  தூசணத்தால்  பேசினால்... விளங்கிக் கொள்வேன். 😂

Just for Relax

 

 

தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும். 

1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர். வைகோவின் உள்ளூர் அரசியலலின் சரி தவறுகளுக்கு அப்பால் அவர் எமது போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு மிக பெறுமதியானது.சீமானுக்கு  இன்று சொம்பு தூக்கும் ஈழதமிழர்கள் வைகோவின் கால் தூசிக்கு சம‍மானவகள்.  

1999 ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது  கட்சி வேறுபாடுகளை கடந்து பலர் அந்த கைதிகளுக்கு உதவினர். இதற்காகவே ஒரு நிதியம் ஆரம்பிக்கபட்டு  மிக பிரபல்யமான வழக்கறிஞரான ராம் ஜெற்மலானி மூலம் அந்த வழக்கு  உச்ச நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்யபடுவதற்கு  தமிழத்தில் இருந்த பல ஈழதமிழரின் போராட்டத்தில் கரிசனை கொண்டிருந்த ஆர்வலர்கள்  காரணமாக இருந்தார்கள்.  இதற்காக அன்றைய தமிழ் வானொலிகளில் எத்தனை  தமிழக ஆர்வலர்கள் அடிக்கடி தமது ஆதரவுகருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் அந்த முயற்சியால்  அந்த 26 பேரில் 19 பேர் உச்ச நீதி மன்றதால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு   துணை நின்ற  அனைவைருமே இன்று  நன்றி கெட்ட புலம்பெயர் முன்னாள்களால் துரோகிகளாக பட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். ஒரே காரணம் இன்று அவர்கள் சீமானுடன் இல்லை என்பதற்காக.  1991 ன் பின்னரான  தடா /பொடா சட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவு இறுக்கமாக தடை செய்யபட்ட காலத்தில் அதை மீறி  தமது உணர்வு காரணமாக ஈழத்திமிழருக்காக  போராட்டங்களை நடத்தி சிறை சென்ற  பலர் சீமான் என்ற ஒரு தனி நபருக்காக துரோகிபட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். 

தமிழக அரசியல் என்பது அவர்களுக்கானது அவர்களுக்குள் ஆயிரம் முரண் இருக்கும்.அதில் சரி இருக்கும் தவறு இருக்கும்  அதில் தலையிட்டு துரோகிப ட்டம் கொடுப்பது எவ்வளவு அநாகரிகமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு பட்டம் கொடுக்க சீமானை ஆதரிக்கும்(அவர்களின் பாசையில் சொம்பு தூக்கும்)ஈழத்தமிழருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. 

 யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து பல காலமாக எமக்கு ஆதரவளித்த உணர்வாளர்களுக்கும் அங்கு அவர்களது நாட்டு அரசியல் என்று உள்ளது.  அதில் அவர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள. மாறுபடலாம். அவர்கள் நாட்டு அரசியலில்  திமுகவை ஆதரிக்கலாம் அல்லது அதிமுகவை ஆதரிக்கலாம். அல்லது ஏன் காங்கிரசை பாஜகவை கூட ஆதரிக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதறகாக அவர்கள் எமக்கு செயத பல  உதவிகளை மறந்து  துரோகிபட்டம் கொடுக்கும் இந்த நன்றி கெட்ட  கூட்டம் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு  எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.   நல்ல காலம் தாயகத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர். 

 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

😎 நோ.... ரென்ஷ்சன்,  கூல்  டவுன் ப்ளீஸ்.  😍

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ மட்டுமல்ல. அவரது மொத்த குடும்பமுமே உதவி செய்தது. ஆனால், வைகோ தனது ஆதரவை அரசியல் லாபம் ஆக்கி துரோகம் இழைத்த திமுகவின் காலடிகளில் சமர்ப்பித்துவிட்டார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மாத்தையா, கருணா இவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஏனென்றால் அவர்களும் ஒருகாலத்தில் போராளிகளே?!

யார் என்பதைப் பார்த்து விமர்சனங்கள் செய்வது தவறு. செயல்கள் மட்டுமே விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன.

இனி, நாம் தமிழர் எனும் சிறு அணில் என்னவெல்லாம் செய்து வருகிறது?!

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி இசை.
இதுவரை இந்த காணொளி பார்த்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை இதுவரையில் என்ன செய்தது?!

https://www.vanamseivom.org

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, இசைக்கலைஞன் said:

இனி, நாம் தமிழர் எனும் சிறு அணில் என்னவெல்லாம் செய்து வருகிறது?!

 

4 hours ago, Nathamuni said:

திரியின் நாயகனே:

உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

 

இந்த திரி சீமான் சாப்பிட்ட, ஆமை, கறி இட்டலி (அலம்பல்கள்) பற்றி இரிந்தாலும், உண்மையான விளக்கம், சீமான் பின்னால் புலம்பெயர் தமிழர் போவது பற்றியது தான்

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இதை ஆனந்தி சொன்னாரா என்று கேட்கவும் இப்ப ஆக்கள் இருக்கினம்.  500 தோசை சுட்டு அடுக்கி வைச்சது.. அதை காயக் காய புலிகள் உண்டனர். அதுதான் அங்கு நிலைமை என்று சொல்லும் கிறுக்கர்களின் சொல் தான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புபவர்களுக்காக மட்டும்... இந்த மேற்கோள்...!

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை

 

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

தனது திறமையால் அரசியல் செய்யாமல் ,காலத்திற்கு காலம் புலிகளை இழுத்து, தனது பிழைப்பிற்காய் கதைப்பதே ஒரு அரசியல் தான் ...

2009 இல் இருந்து சீமான் அரசியல் வாதி ஆகிவிட்டர் என்று ...
பல தேர்தல்களே முடிந்துவிட்டது ... இப்போதான் பிறந்த மாதிரி பேசுகிறீர்கள்? 
அரசியல்வாதி என்பதே அரசியல் செய்வதுதான் 

அதுவும் உண்மையை சொல்லாமல் பச்சை பொய் சொல்வது கேடு கெட்ட அரசியல் ...உந்த அரசியலைத் தான் விடச் சொல்கிறோம்...

இதெல்லாம் சீமான் பேசுவதும் முன் நீங்கள் சீமானுடன் கூட இருந்தீர்களா? 
நீங்கள் விட சொன்னால் விட்டு விடுவார்கள் ....... ஆனால் உங்கள் யார் என்று கேட்ப்பார்கள் 
அதுக்குதான் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை 

கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 

கிருபன் இந்த திரி திறந்ததில் இருந்து ஆமை பிடிச்சு விட்டுக்கொண்டுதான் 
இருக்கிறார் இதில் எந்த ஆமையை நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை 

 

பொட்டர் உங்களுக்கு போனை போட்டு சொன்னவரா கருணா ,காசை அடித்துக் கொண்டு பெட்டையளோடு ஓடிட்டான் என்று ,ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

ஏன் எனக்கு போன் போட்டு சொல்ல வேண்டும்?
ஊருக்கே சொன்னார்களே? அப்பரோ எல்லாம் நீங்கள் கோமாவில் இருந்தீர்களா?
காசை அடித்துக்கொண்டு மனுசியடம் கொடுத்ததை தெரிந்துகொண்ட மெய்ப்பாதுகாப்பு 
போராளியை கருணா சுட்டுவிட்டார் என்று ரமணன் அவர்கள் அறிக்கைவிடும்போது 
மயக்கத்தில் இருந்தீர்களா? 

கருணா , புலிகளையோ/ தலைவரையோ  வைத்து அரசியல் செய்யவில்லை...

அந்தளவுக்கெல்லாம் கொம்மானின் மண்டைக்குள் ஒன்றும் இல்லை 
இனத்தை கட்டிக்கொடுப்பதை தவிர்த்து செய்ய ஏதும் இல்லை என்பதை நீங்கள் எழுதி 
தெரியவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை 

அவர் இயக்கத்தில் இருந்தவர் ...பாதியில் விட்டுட்டு ஓடினாலும் அவர் புலிகளுக்காய் செய்தது இல்லை என்றாகி விடாது.

அதுக்கு முதல்ல ஏதும் செய்திருக்கவேணும் 

 

யார் வந்து ஆயிரம் சப்பை காரணங்கள் சொன்னாலும், எங்கள் மக்கள் சாவதை பார்த்து கொண்டு இருந்து விட்டு அதை வைத்து அரசியல் செய்யும் தகுதி தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டும் இல்லை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.

அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை களம்தான் தீர்மானிக்கிறது 
உங்களிடம் தகுதி சான்று வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலையில் 
தமிழ் நாடு இல்லை ........உலகில் எந்த அரசியல்வாதிக்கும் அப்படி ஒரு நிலை இல்லை 

 

அப்படி என்ன கொள்கை ,போராட்டம் ,புலிகளுக்காய் /ஈழத் தமிழருக்காய்  தற்போது சீமான் தொடர்கிறார் என்று தெளிவுபடுத்துகிறீர்களா?

 நாம்தமிழ்ளர் அரசியல் என்று ஒரு திரி பாரம் தாங்காது 
இப்போ பாகம் இரண்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது 
சென்று வாசியுங்கள் 

சுமத்திரன் என் தலைவரா 🤯
 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும். 

1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை இந்திய இராணுவத்திற்கு எதிராக வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர் 

 

 

துல்ப‌ன் நீங்க‌ளும் அரைகுறை விள‌க்க‌ம் உடைய‌வ‌ரா , 

அந்த‌ மிம்ஸ்ச‌ நான் தான் செய்தேன் அந்த‌ ப‌திவையும் நான் தான் எழுதினேன் , அந்த‌ மிம்ஸ் செய்யும் அள‌வுக்கு வைக்கோவின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌மாக‌ இருந்த‌து , என‌து ப‌ழைய‌ ப‌திவுக‌ளை வாசித்து பாருங்கோ யாழில் யார் த‌ன்னும் எம் போராட்ட‌த்தை அல்ல‌து த‌ள‌ப‌திக‌ளை கொச்சை ப‌டுத்தி எழுதி இருந்தா   அவைக்கு என் ப‌தில் வேறு மாதிரி இருக்கும் ,

நீங்க‌ள் ஆயிர‌ம் ந‌ல்ல‌த‌ சொல்லி வைக்கோவை புக‌ழுங்கோ அதை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லை இல்லை , வைக்கோ அன்று தொட்டு இன்று வ‌ர‌ பிராடு கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விடும் ஈன‌ பிற‌வியாய் தான் நான் வைக்கோவை பார்க்கிறேன் ,

இந்த‌ செய்தியை ப‌டியுங்கோ 

20200606-073536.png

வைக்கோ 2009ம் ஆண்டு என்ன‌  செய்தார் , இறுதி க‌ட்ட‌ போரில் த‌ன‌து கைபேசியை நிப்பாட்டி வைக்க‌ கார‌ண‌ம் என்ன‌ ,

வைக்கோ எந்த‌ பெரிய‌ அர‌சிய‌ல் வாதி அப்ப‌ , வைக்கோ.நினைத்து இருந்தா த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் பெரிய‌ ஒரு புர‌ட்சியை உண்டு ப‌ண்ணி பெரிய‌ ஆர்பாட்ட‌த்தை முன்னெடுத்து இருக்க‌லாம் , இதை எல்லாம்.செய்யாம‌ , சும்மா வேடிக்கை பார்த்தார் ,பின்னாளில்   எம் இன‌ அழிப்பை ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் முட்ட‌ க‌ண்ணீர் வ‌டித்தார் /

இம்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் எழுதுங்கோ நான் ப‌தில் அளிக்க‌ த‌யார் துல்ப‌ன் 

 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை

 

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் த‌ர‌ம் தாழ்த்தி எழுதின‌து முத‌ல் நீங்க‌ள் தான் ,

நானும் ர‌தி அக்காவோட‌ க‌ருணாவின் விடைய‌த்தில் யாழில் த‌ர‌ம் தாழ்த்தி  எழுதி இருக்கிறேன் , என‌து த‌வ‌றை இப்போது நான் ச‌ரி செய்து நாக‌ரிக‌மான‌ முறையில் என் க‌ருத்தை ப‌திவு செய்யிறேன் 
😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் த‌ர‌ம் தாழ்த்தி எழுதின‌து முத‌ல் நீங்க‌ள் தான் ,

நானும் ர‌தி அக்காவோட‌ க‌ருணாவின் விடைய‌த்தில் யாழில் த‌ர‌ம் தாழ்த்தி  எழுதி இருக்கிறேன் , என‌து த‌வ‌றை இப்போது நான் ச‌ரி செய்து நாக‌ரிக‌மான‌ முறையில் என் க‌ருத்தை ப‌திவு செய்யிறேன் 
😉

தம்பி அந்த இடத்த ஒருக்கா சொல்லுங்க 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

தம்பி அந்த இடத்த ஒருக்கா சொல்லுங்க 

சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

சீமானை  சாமான் என்று எழுதின‌து நீங்க‌ள் தான் ந‌ந்த‌ன் அண்ணா 

அப்புறம் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

அப்புறம் 

அப்புற‌ம் உங்க‌ளிட‌ம் சொல்ல‌ பெரிசா ஒன்றும் இல்லை 😉

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ப் ப‌ட‌ம் துல்ப‌னின் பார்வைக்கு 😓

20200606-084103.png 

ப‌ழைய‌ யாழ்க‌ள உற‌வுக‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழி தான் நினைவுக்கு வ‌ருது ( ப‌டிக்கிற‌து தேவார‌ம்  இடிக்கிற‌து சிவ‌ன் கோயில் ) 😉

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

 

உண்மையிலேயே ஈழ விடுதலையைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் சீமானுக்கு உயரிய மதிப்பீடுகள் எல்லாம் இருந்ததே கிடையாது. அப்படி இருந்திருந்தால் ஈழப் படுகொலைக்குப் பின்னர், ஐநாவின் டப்ளின் தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையில், "ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிடுங்கி,படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்தனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தினார்கள், தப்பிக்கப் பார்த்த தமிழர்களை சுட்டுக் கொன்றார்கள்" என்று தனது கட்சி சார்பில் சொல்லியிருக்க மாட்டார்.

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.