Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

19 minutes ago, இசைக்கலைஞன் said:

எனக்கு ஒன்று விளங்கேல்ல. தமிழகத்தில் கட்சி நடத்தும் சீமானை நாம் விமர்சிக்கலாம். ஆனால் வைகோவை கூடாது?! 🤔

விமர்சிப்பது வேறு துரோகி என்று வசை பாடுவது வேறு அவரகளின் உள்ளூர் அரசியலில் தலையிட்டு  ஒருவருக்காக மற்றவரை வசை பாடுவதற்கு பெயர் விமர்சிப்பதல்ல என்பது உங்களுக்கு தெரியும்.

வைகோ திமுகவை ஆதரித்ததால் அவர் துரோகி என்று கூற உங்களுக்கு அதிகாரம் தந்தது  யார்? 

Edited by tulpen

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, இசைக்கலைஞன் said:

திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள்.

அப்படியா!  இந்த தென்னகத்துப் பிராமணர்கள் எந்தக் கோவில்களில் பூஜை செய்கின்றார்கள்?

ஆதிக்க சமூகமான ஆரியப் பார்ப்பனியர்களையும் அவர்களை முன்னிறுத்தும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளையும், தென்னகத்துப் பிராமணர்களையும் அவர்களின் பரிபாலனத்தில் உள்ள தி.மு.க. , அதிமுக கட்சிகளையும் தொன்மையான தமிழ் பரம்பரையில் வந்தவர்கள் தமிழகத்தை ஆளவிடக்கூடாதுதான்!

ஆனால் தமிழகத்தின் ஆரியப் பார்ப்பனர்களையும், தென்னகப் பிராமணர்களையும் தவிர்த்தால்  தமிழர்கள் பெரும்பான்மையா அல்லது சிறுபான்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

அது கிருபன் எழுதியது
எல்லாரும் குழம்பிபோனம் வேற திரிய திறவுங்கோ

எனது கருத்து, சீமான் ஒரு எழிமையான தலைவன் அல்ல, முற்று முழுதாக நம்ப ஏலாது, சீமானால், விசர் கதைகள் கதைக்காமல் அரசியல் செய்தாலும் இலங்கையில் ஒரு ஆணியையும் புடுங்க ஏலாது, தமிழ் நாட்டில் கொஞ்ச மாற்றத்தை கொண்டு வருவார் என நம்பிகிறேன். பெரிய தலைவனாவதற்குரிய தகுதியை இழந்துகொண்டு வருகிறார் அல்லது இழந்துவிட்டார், இது அவரின் நீண்ட கால தந்திரமாகக்கூட இருக்கலாம், கிடைச்சதோடமெல்லமா மறலாம், அத்துடன் துனிந்தாள் மாதிரித்தெரியவில்லை. இப்போதைக்கு சீமானும் எங்களுக்கு தேவை. 

***

அது கிருப‌ன் அண்ணா எழுத‌வில்லை , ந‌ந்த‌ன் அண்ணா எழுதின‌து ,

உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதுவ‌தால் உங்க‌ளுக்கு ஏதாவ‌து உள் குத்து இருக்கா இருந்தா வெளிப்ப‌டையா சொல்லுங்கோ , 

வேறு ஒரு திரியில் யாழ் உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டின‌ ப‌ட‌ங்க‌ள் போட‌ அதில் வ‌ந்தும் தேவை இல்லாம‌ உங்க‌ளின் வ‌ம்ம‌த்தை க‌க்கி நீங்க‌ள் , 

15 minutes ago, கிருபன் said:

நல்ல கண்பார்வை உங்களுக்கு “நீ உன்னை அறி” ஐயா😁

ஐயா ஐ ஐ யோ, அது நந்தன் எழுதவில்லை என்பதுதான் போய்ன்ட், பத்தாம் வகுப்பு சனம்மாதிரி எதுக்கெடுத்தாலும் பிழைபிடிக்கிறியள். ஒன்றுமாத்திரம் விளங்குது இந்த திரியிலிருந்து, ஆக்களைப்பற்றி எடுத்த எடுகோள் எல்லாம் சுத்த பிழையென்று, கனபேருடைய அழுக்குகளையும் வெளிக்கொண்டுவர உதவிய இந்த திரியை திறந்த உங்களுக்கு நன்றி

5 minutes ago, பையன்26 said:

அது கிருப‌ன் அண்ணா எழுத‌வில்லை , ந‌ந்த‌ன் அண்ணா எழுதின‌து ,

உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதுவ‌தால் உங்க‌ளுக்கு ஏதாவ‌து உள் குத்து இருக்கா இருந்தா வெளிப்ப‌டையா சொல்லுங்கோ , 

வேறு ஒரு திரியில் யாழ் உற‌வுக‌ள் ஊரில் வீடு க‌ட்டின‌ ப‌ட‌ங்க‌ள் போட‌ அதில் வ‌ந்தும் தேவை இல்லாம‌ உங்க‌ளின் வ‌ம்ம‌த்தை க‌க்கி நீங்க‌ள் , 

அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

திராவிடம் என்பது சமூக நீதி கொள்கை அல்ல. திராவிடர் என்றாலே தென்னகத்து பிராமணர் என்று பொருள். பொருந்தாத ஒரு வார்த்தையை கொண்டு தமிழரல்லாதவர்கள் தமிழகத்தை ஆளும் பொருட்டு எடுத்துவைத்த கொள்கைதான் திராவிடம் என்பது. 

தமிழரை அடிமைப்படுத்துவதில் யார் முன்னணி?! ஆரியமா திராவிடமா என்று ஒரு பட்டிமன்றம்  வேண்டுமானால் நடத்தலாம்.

தமிழகத்தை திராவிடம் ஆண்டால் என்ன தவறு என்று கேட்பதும், தமிழ் ஈழத்தை சிங்களம் ஆண்டால் என்ன என்பதும் ஒன்றுதான். அடிமை சிந்தனையில் இருந்து முதலில் வெளியேறுங்கள்.

திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?!

இந்த சகடையில் இருந்து வெளியே வந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் “நாம் தமிழர்”. 

இவர்கள் வீட்டில் தெலுங்குதான் பேசப்படுகின்ற மொழி என்பது உண்மை. இதனை இவர்களின் வீட்டில் வேலை செய்தவரூடாக உறுதிப்படுத்திக் கொண்டேன். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

அதை வண்மம் என்று எடுத்தால் என்ன செய்ய, கடவுளே! 

இந்த‌ திரியில் எழுதுற‌ என‌க்கே அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , உங்க‌ளுக்கு தான் அதிக‌ம் வேர்க்குது , இதில் வேற‌ கூலிக்கு மார் அடிப்ப‌து போல் எழுதுறிங்க‌ள் , இதா உங்க‌ளின் ப‌ன்பு ,

இந்த‌ திரியை திசை திருப்ப‌ தான் இப்ப‌டியான‌ கேவ‌ல‌மான‌ க‌ருத்தை ப‌திவுடிறீங்க‌ள் ,

அண்ண‌ன் சீமானின் பெருமைக‌ளை உற‌வுக‌ள் ப‌ல‌ர் எடுத்து சொல்லுவ‌து உங்க‌ளால்   அத‌ பொறுத்து கொள்ள‌ முடியாம‌ல் இருக்கு ,

****

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, tulpen said:

விமர்சிப்பது வேறு துரோகி என்று வசை பாடுவது வேறு அவரகளின் உள்ளூர் அரசியலில் தலையிட்டு  ஒருவருக்காக மற்றவரை வசை பாடுவதற்கு பெயர் விமர்சிப்பதல்ல என்பது உங்களுக்கு தெரியும்.

வைகோ திமுகவை ஆதரித்ததால் அவர் துரோகி என்று கூற உங்களுக்கு அதிகாரம் தந்தது  யார்? 

எனக்கு நானே வழங்கிய அதிகாரம் அது. 😁 வைகோவுக்கு தமிழ் விவகாரங்களில் தலையிட என்ன அதிகாரமோ, அதே அதிகாரம் எனக்கும் உள்ளது. வைகோ கருணாவை துரோகி என்றார். அதுவும் அத்துமீறிய தலையீடுதானே, அப்படியானால்?!   அது எனது மச்சாளை பாதிக்கும் என உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?! 🤔🚶🏻‍♂️🚶🏻‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

விவாதங்களின் நோக்கம் பொது நன்மை நோக்கியாதனது அல்ல.  தாம் கொண்ட கருத்தின் வெற்றி நோக்கியதாகவே அமைவது எப்போதும் இங்கு வழமையான ஒன்று.

ஒருவரை விவாதத்தில் வெல்லுவதன் மூலம் அவரது கருத்தியலை வெல்லமுடியாது என்று பல வருடங்களுக்கு முன்னரே யாழில் நானே எழுதியிருந்தேன் எனவே நான் கொண்ட கருத்தின் வெற்றிக்காக இந்தத் திரியில் கருத்தாடவில்லை.

சீமானின் சாதனைகளை வைத்து அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடிக்கட்டும். ஆனால் புலிகள் இல்லாத வெற்றிடத்தில் புலிகளையும், குறிப்பாக தலைவர் பிரபாகரனையும், ஈழத்தமிழர்களையும் தனது அரசியலுக்காகத்தான் பாவிக்கின்றார். அதைத்தான் இலங்கையில் தேர்தல் வரும்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி என்று எல்லோரும் பாவிக்கின்றனர். ஆனால் இவர்கள் எவரும், படித்த விக்னேஸ்வரன் ஐயா உட்பட, தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தரப்போவதில்லை.

தமிழ் மக்கள் ஒரு தேசியமாக வலுவான இனமாக என்றும் இருக்கவில்லை; சாதி, மதம், பிரதேசம் என்று பிரிந்துதான் உள்ளார்கள் என்று அடிக்கடி நீங்கள் எழுதியதுண்டு. அது உண்மையும் கூட. இந்த வலுவில்லாத நிலையை உணர்ந்து ஒரு தேசிய இனமாக பலத்துடன் மீண்டுவரும்வரை தமிழர்களுக்கு உய்வில்லை. அது தலைவர் பிரபாகரன் காலத்திலேயே சாத்தியமில்லாமல் போனதாலும், கடந்த பத்து வருடங்களில் மேலும் நலிந்துபோனதாலும் பலர் நம்பிக்கையிழந்து இருக்கலாம். எனினும் இந்தத் தலைமுறையில் சாத்தியம் இல்லாவிடினும், அடுத்த தலைமுறையோ, அதற்கடுத்த தலைமுறையோ தமிழ் தேசிய இனமாக வலுவாக வருவதற்காக தேசிய உணர்வுள்ளவர்கள் சேரவேண்டும்.

சீமான் போன்றவர்கள் காலம் காலமாக தமிழர்களாக தம்மை அடையாளம் கண்டவர்களைக்கூட பிரிவினை அரசியலுக்காக தெலுங்கன் என்று இழிவாகப் பேசுவதால் தமிழர்களின் அரசியல் தலைமையாக தமிழகத்தில் வரக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கின்றார்கள். ஆதலால் ஈழத்தமிழர்களுக்கு அவர்போன்றவர்கள் ஆதர்சமாக இருக்கமுடியாது.

21 minutes ago, இசைக்கலைஞன் said:

எனக்கு நானே வழங்கிய அதிகாரம் அது. 😁 வைகோவுக்கு தமிழ் விவகாரங்களில் தலையிட என்ன அதிகாரமோ, அதே அதிகாரம் எனக்கும் உள்ளது. வைகோ கருணாவை துரோகி என்றார். அதுவும் அத்துமீறிய தலையீடுதானே, அப்படியானால்?!   அது எனது மச்சாளை பாதிக்கும் என உங்களுக்கு ஏன் தோன்றவில்லை?! 🤔🚶🏻‍♂️🚶🏻‍♂️

தங்கள் நகைச்சுவையான பதிலுக்கு நன்றி.  எமது தோல்விக்கான எமது தரப்பு தவறுகளை பேசி மூக்குடை படுவதை விட  அடுத்தவன் மீது பழி தப்புவது அது சரிவர வில்லை என்றால் விவாதத்தை நகைச்சுவையாக மாற்றித் தப்புவது. 

எங்கள் தரப்பில் செய்தது எல்லாம் நூற்றுக்கு நூறு சரி என்ற எடு கோளின் அடிப்படையில் விவாதிப்பது தானே தமிழ் தேசியம். இதென்ன எங்கள் பக்க பிழைகளை ஆராயவது என்ற  புதிய அணுகுமுறை என்ற கடுப்பு உங்களுக்கு. 

எனக்கு நானே வழங்கிய அதிகாரம. எனபது பாசிசம். அப்ப தீங்கள் சீமானை ஆதரிக்க தகுதியானவர் தான் 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

திராவிட கருணாநிதி, வைகோ இல்லங்களில் தெலுங்குதான் மொழி என்பது சிறப்பு தகவல். வீட்டில் தமது தாய்மொழி தெலுங்கில் பேசும் நபர்கள் தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?! Probability சரியாக இருக்காதே?!

தமிழ் மொழியில் பல நூல்களை எழுதியவர், பத்திரிகை நடத்தியவர், உணர்ச்சிகள் பொங்க வசனங்களை எழுதியவர் கலைஞர். இவர் தெலுங்கில் யோசித்து தமிழில் எழுதியிருப்பாராக்கும்😀

அப்படியே அவர் தெலுங்கு மொழிக்கு செய்த தொண்டுகளையும் பட்டியலிடலாமே😁

நாங்கள் எங்களைத் தமிழர்களாக உணர்வதுபோல கலைஞர், வைகோ, ஸ்டாலின் போன்றோர் தங்களை தெலுங்கர்களாக உணர்கின்றார்களா?

ஜெயலலிதா அம்மையார் தன்னை கன்னடர் என்று உணர்ந்திருக்கலாம், ஆனால் ராமச்சந்திர மேனன் தன்னை மலையாளியாக உணர்ந்திருந்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சீமான் போன்றவர்கள் காலம் காலமாக தமிழர்களாக தம்மை அடையாளம் கண்டவர்களைக்கூட பிரிவினை அரசியலுக்காக தெலுங்கன் என்று இழிவாகப் பேசுவதால் தமிழர்களின் அரசியல் தலைமையாக தமிழகத்தில் வரக்கூடிய தகுதியையும் இழந்து நிற்கின்றார்கள். ஆதலால் ஈழத்தமிழர்களுக்கு அவர்போன்றவர்கள் ஆதர்சமாக இருக்கமுடியாது.

இதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில். ஆனால் ஹைட்ராக்சிகுளோரகுயின் (திராவிடம்) கொரோனாவை (ஈழப்பிரச்சினை) தீர்க்க உதவாது என்பது 2009 இல் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் அந்த மாத்திரையை பாவிப்பது சிறந்த செயல் அல்ல.

அன்று திராவிடத்தாரிடம் மாநில அதிகாரம் (powers) இருந்தது. With great power comes great responsibility. ஈழ விவகாரத்தை கையில் வைத்திருந்த (அவர்களது வகிபாகத்தை) திராவிட சித்தாந்தம் இன்னும் தமது அன்றைய பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோரவில்லை.

9 minutes ago, கிருபன் said:

தமிழ் மொழியில் பல நூல்களை எழுதியவர், பத்திரிகை நடத்தியவர், உணர்ச்சிகள் பொங்க வசனங்களை எழுதியவர் கலைஞர். இவர் தெலுங்கில் யோசித்து தமிழில் எழுதியிருப்பாராக்கும்😀

அப்படியே அவர் தெலுங்கு மொழிக்கு செய்த தொண்டுகளையும் பட்டியலிடலாமே😁

நாங்கள் எங்களைத் தமிழர்களாக உணர்வதுபோல கலைஞர், வைகோ, ஸ்டாலின் போன்றோர் தங்களை தெலுங்கர்களாக உணர்கின்றார்களா?

ஜெயலலிதா அம்மையார் தன்னை கன்னடர் என்று உணர்ந்திருக்கலாம், ஆனால் ராமச்சந்திர மேனன் தன்னை மலையாளியாக உணர்ந்திருந்தாரா?

எனது நண்பன் 24 மனை தெலுங்கு செட்டி. அவர்களது வீட்டு திருமணத்திற்கு சென்றேன். உறவினர் அனைவரும் தெலுகில்தான் பேசுவார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தமிழகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி என்று இருப்பார்கள். இதுதான் உண்மை நிலவரம். நமக்கு எப்படி ஆங்கிலமோ, அதுபோல் அவர்களுக்கு தமிழ்.

ஆனாலும் நூற்றாண்டு கடந்தும் தாய்மொழியை மறக்காத அவர்களது பண்பை பாராட்ட வேண்டும்.

கனடாவின் எட்மன்டன் தமிழ் சங்கத்திலும் தெலுங்கர் ஆதிக்கமே. ஒரு தமிழ் அறிஞரை அழைத்து கூட்டம் நடத்த விடமாட்டார்கள்.

இது ஒரு சிக்கல்.

8 minutes ago, இசைக்கலைஞன் said:

இதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில். ஆனால் ஹைட்ராக்சிகுளோரகுயின் (திராவிடம்) கொரோனாவை (ஈழப்பிரச்சினை) தீர்க்க உதவாது என்பது 2009 இல் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் அந்த மாத்திரையை பாவிப்பது சிறந்த செயல் அல்ல.

அன்று திராவிடத்தாரிடம் மாநில அதிகாரம் (powers) இருந்தது. With great power comes great responsibility. ஈழ விவகாரத்தை கையில் வைத்திருந்த (அவர்களது வகிபாகத்தை) திராவிட சித்தாந்தம் இன்னும் தமது அன்றைய பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோரவில்லை.

ஈழத்திலும் போராட்டத்தை அரசியல் ரீதியில் தவறாக வழி நடத்தி போராட்டத்தின்  அழிவுக்கும் எத்தனையோ போராளிகளின்  வாழ்ககை பாதிக்கபட்டு   மாவீரர்களின் தியாகங்கள் வீணாக்கப்பட்டதற்கும்  முக்கிய காரணியாக இருந்த தமிழ் தேசியத்தினர்  தமது பொறுப்பை உணர்ந்து  மன்னிப்பு கேட்கவில்லை. அது உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏன் ? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

ஈழத்திலும் போராட்டத்தை அரசியல் ரீதியில் தவறாக வழி நடத்தி போராட்டத்தின்  அழிவுக்கும் எத்தனையோ போராளிகளின்  வாழ்ககை பாதிக்கபட்டு   மாவீரர்களின் தியாகங்கள் வீணாக்கப்பட்டதற்கும்  முக்கிய காரணியாக இருந்த தமிழ் தேசியத்தினர்  தமது பொறுப்பை உணர்ந்து  மன்னிப்பு கேட்கவில்லை. அது உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏன் ? 

யாரப்பா அது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இசைக்கலைஞன் said:

இதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில்.

முதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே. 

கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார்.

ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊

—-

கேள்வி:

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி "திராவிட நாடு" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது?

பதில்: 

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? 

ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதி.

நன்றி: 

சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இவர்கள் வீட்டில் தெலுங்குதான் பேசப்படுகின்ற மொழி என்பது உண்மை. இதனை இவர்களின் வீட்டில் வேலை செய்தவரூடாக உறுதிப்படுத்திக் கொண்டேன். ☹️

த‌மிழ‌ன் தொலைக் காட்சி ஓன‌ர் என்றும் நான் பெரிதும் ம‌திக்கும் ஜ‌யா கலைக்கோட்டுதயமிட‌ம்  கேட்டால் இவ‌ர்க‌ளின் உண்மை வ‌ர‌லாறை வ‌டிவாய் சொல்லுவார் அண்ணா , 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது.

திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். 

சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான்.

புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்..

இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்..???!

இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

முதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே. 

கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார்.

ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊

—-

கேள்வி:

தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி "திராவிட நாடு" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது?

பதில்: 

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக "தமிழ்நாடாக" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா? 

ஒரு மொழி, ஒரு நாடு! என்பது தான் உலக நியதி.

நன்றி: 

சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.

சென்னை மாகாணம் என்று இருந்தபோது திராவிடம் என்பது ஏற்புடையதே. ஆனால் 1956 இல் அவரவர் தனிமாநிலங்களை பிரித்துக்கொண்டு போய்விட்ட பிறகு, திராவிடம் என்பது தமிழர்களுக்கு அதிகார இழப்பு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

சீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது.

திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். 

சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான்.

புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்..

இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்..???!

இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.

இத‌ புரிய‌வைக்க‌ தான் ப‌டாது பாடு ப‌டுகிறோம் ச‌கோத‌ரா ,

அப்ப‌ த‌லைவ‌ரின் த‌ய‌வில் த‌மிழீழ‌ம் கிடைத்து இருந்தா நாம் ஏன் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் பின்னால் போக‌ போகிறோம் , எங்க‌ட‌ நாட்டில் அழ‌கான‌ வீட்டை க‌ட்டி போட்டு சிறு தொழில் செய்து ந‌ல்லா வாழ்ந்து இருப்போம் 😘🙏

4 hours ago, Nathamuni said:

என்னத்தைக் குழம்புறது...

பிரேமருக்கு வெடி போட்டது புலி எண்டுவியல். 

இல்லை, இந்தியன் ஆமியை ஓடுங்கோ நாட்டினை விட்டு என்று அனுப்பியதால், அவமானப்பட்ட இந்திய ரா எண்டுவேன்.... நம்பவா போறியள்? 😎

கதிர்காமர் இருந்தது கொழும்பு 7.... சந்திரிகா, ரணில் என்று பெரும் அரசியல் வாதிகள் வாழ்ந்த high security zone.

கதிர்காமர் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த வயதான தமிழ் தம்பதிகளின் வீட்டின் மேல்மாடியில், ஒரு அறையில், அவையளுக்கே தெரியாமல் உங்கடை வன்னி ஆக்கள், ஒளிஞ்சு ஒரு கிழமையா இருந்து, ஆயுதம் (சினிப்பர்), சாப்பாடு கொண்டு போய், வெடி வச்சுப்போட்டு, பத்திரமா வெளியில ஓடி வந்திட்டினம் எண்டால் நம்பிறன், பிடி பந்தயம் எண்டுவியல்.

போலீஸ்காரரும் அந்த தமிழ் தம்பதிகளுக்கு ஒன்றுமே தெரியாது எண்டது உண்மைதான் எண்டு வழக்கு பதியாமல் இருந்த அதிசயமும் நடந்ததே.

காமினியும், லலித்தும், பிரேமரின் அரசியலுக்கு எதிராளிகளாய் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினர். அவர்களை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை அவருக்கு, மிக அவசரமாக இருந்ததோ இல்லையா? 🤔

நீங்க எழுதின  இந்த  விடயத்தை   உங்க வீட்டு நாய், பூனை, கோழி,போன்ற ஐந்தறிவு ஜீவன்களே  நம்பாது. ஆற்ற‍வு கொண்ட மனிதர்களை நம்ப சொல்லுறீங்களே. நியாயமா? யாராவது மிருங்களை விட குறைவான அறிவோட  இருப்பார்கள்  அவர்களிடம் போய் சொல்லி அவர்களை நம்ப வைக்க முயற்சி எடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

விமர்சிப்பது வேறு துரோகி என்று வசை பாடுவது வேறு அவரகளின் உள்ளூர் அரசியலில் தலையிட்டு  ஒருவருக்காக மற்றவரை வசை பாடுவதற்கு பெயர் விமர்சிப்பதல்ல என்பது உங்களுக்கு தெரியும்.

வைகோ திமுகவை ஆதரித்ததால் அவர் துரோகி என்று கூற உங்களுக்கு அதிகாரம் தந்தது  யார்? 

எனக்கு அல்லது என் இனத்துக்கு துரோகம் செய்த ஒருவனை துரோகி என்று  சொல்ல எனக்கு யாரும் அதிகாரம் தரத்தேவையில்லை. இறுதி யுத்த வேளையில் மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பழ நெடுமாறன் தலைமையில் ஒருசில தமிழ் தேசிய பற்றாளர்கள் வைக்கோவையும் அழைத்து இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் திரும்புக்கோரும் தீர்மானத்தை கலைஞரிடம் சொல்லி வலியுறுத்த அழைத்தபோது, எங்களுக்கு நீங்கள் அரசியல் சொல்லித்தரவேண்டாம் என்று திருப்பி அனுப்பி, ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க ஐடியா கொடுத்த உத்தமர் தான் இந்த வைகோ.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

தோழா துல்ப‌ன் வைக்கோவை தூக்கிப் பிடிப்ப‌து எத‌ற்காக‌ தெரியாது , 2009ம் ஆண்டை விடுவோம் , க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ வைக்கோவின் அர‌சிய‌லை உத்து நோக்கி பார்த்தா கேவ‌ல‌த்தின் உச்சிக்கு சென்று விட்டார்  வைக்கோ ,

திமுக்காவில் இருந்து பிரிந்து வ‌ந்த‌ போது வைக்கோவின் க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் தீக்குளித்து இற‌ந்தார்க‌ள் , அவ‌ர்க‌ளின் ஆன்பா வைக்கோவை சும்மா விடாது , வைக்கோவின் க‌ட்சி த‌மிழ் நாட்டில் இப்ப‌ எந்த‌ நிலையில் இருக்குது  என்று ‌ தெரியாது , குர‌ங்கு ம‌ர‌ம் விட்டு ம‌ர‌ம் தாவுவ‌து போல் வைக்கோ ஒவ்வொரு தேர்த‌லிலும் கூட்ட‌னிக்கு போய் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை வ‌சை பாடுபார்  , க‌ட‌ந்த‌ 9 வ‌ருட‌மாய் திமுக்காவை எவ‌ள‌வு கீழ்த‌ன‌மாக‌ விம‌ர்சித்தார் , இப்போது  அவ‌ர்க‌ளின் காலுக்கு செருப்பாய் இருக்கிறார் , இனி அவ‌ர்க‌ளுட‌ன் முர‌ன் வ‌ந்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் இன‌ அழிப்பை கையில் எடுப்பார் திமுக்காவை விம‌ர்சிக்க‌ ,

ராம‌தாஸ் வைக்கோ இவ‌ர்க‌ளை மாதிரி கேடு கெட்ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை த‌மிழ‌க‌த்தில் பார்க்க‌ முடியாது 😁

38 minutes ago, பையன்26 said:

பையன, எனது கருத்துகளை வாசியுங்கள் நான் வைக்கோவின் உள்ளூர் அரசியலைத் தூக்கிப் பிடிக்கவில்லை. எளிதில்  உணர்சசிவசப்பட்டு ஆத்திரத்தில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆதரிக்கவும் இல்லை. ஆனால் அவர் 1987 ல் இருந்து ஈழத்தமிழர் போராட்டத்திற்கு கொடுத்த பங்களிப்பு அளப்பரியது. அதை நன்றியுடன் நினைவு கொள்வதற்காவது ஈழத்தமிழர்கள்   அவர் மீது வசை பாடாமல் இருக்க வேண்டும்.  

சீமான் தனது அரசியலுக்காக அங்கு தங்களுக்குள் வசை பாடட்டும் அது அவர்கள் பிரச்சனை.  அதில் தலையிட்டு ஈழத்தமிழர்கள் நன்றி கெட்ட ஈனர்களாக ஆகக்கூடது என்பதே எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நந்தன் said:

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

அண்ணாச்சி, இங்கு பகலவனின் கருத்துக்கள் தான் என்னால் அலசப்பட்டது அல்லது ஆராயப்பட்டது. இது எப்படி தரம் தாழ்த்தல் ஆகும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நீங்க எழுதின  இந்த  விடயத்தை   உங்க வீட்டு நாய், பூனை, கோழி,போன்ற ஐந்தறிவு ஜீவன்களே  நம்பாது. ஆற்ற‍வு கொண்ட மனிதர்களை நம்ப சொல்லுறீங்களே. நியாயமா? யாராவது மிருங்களை விட குறைவான அறிவோட  இருப்பார்கள்  அவர்களிடம் போய் சொல்லி அவர்களை நம்ப வைக்க முயற்சி எடுங்கள். 

சொன்னா நம்பவே போறியல்

எங்கண்ட வீட்டு நாய், பூனை, கோழி எல்லாம் நம்பீடுத்துக்கள். அதுகள் எல்லாம் நம்பினாப்பிறகுதான் உங்களுக்கு சொன்னனான்.

வெளியால சொல்லிப்போடாதீங்கோ.

*********

உங்கள் கருத்துடன் அடுத்தவர் கருத்து ஒத்துப்போகவில்லையாயின், அடுத்தவர்களுக்கு உரிய கருத்துரிமையினை மதித்து, கடந்து செல்லுங்கள். 

அல்லது, ஒரு தரமான விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

அதனை விடுத்து, அடுத்தவன் முழு முட்டாள், நான் பெரிய மேதை. உனது கருத்து மிருகங்களுக்கு தான் என்பது போல எழுதுவது என்ன வகை, மேதாவித்தனம்?

அடுத்தவர்கள் கருத்துக்களை மதிக்க முடியாவிடில், பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை. 

1 hour ago, MEERA said:

அண்ணாச்சி, இங்கு பகலவனின் கருத்துக்கள் தான் என்னால் அலசப்பட்டது அல்லது ஆராயப்பட்டது. இது எப்படி தரம் தாழ்த்தல் ஆகும்?

ரொம்பவே நொந்து போயிருக்கிறார்.... ஆனாலும் அக்கினியுடன் கோபிக்கவில்லை ஏன் என்றும் தெரியவில்லை.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.