"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 135 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?"
புத்தர் என்பது அனைத்துலக மக்களாலும் மரியாதை செய்யப்படும், கருணையும், அன்பும் நிறைந்த சிறந்த முனிவர் ஆகும். 29 வயதில் இளம் மனைவியையும், புதிதாக பிறந்த மகனையும் விட்டுவிட்டு அரச வாழவைத் துறந்தவர். வாழ்க்கையின் துன்பங்களைப் பார்த்து அதற்கான விடியலைத் தேடி புறப்பட்டவர். இவரைப் பற்றிய இந்த உயர்ந்த பார்வைக்கு முற்றிலும் முரணாக, இலங்கையின் புராண நூல்களான தீபவம்சம் (Dipavamsa) மகாவம்சம் (Mahavamsa) மற்றும் இரசவலிய புத்தரை இதற்கு மாறாக வர்ணிக்கின்றன. இந்த நூல்கள், புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் உருவமற்ற, மனிதரல்லாத இயக்கர்கள் (Yaksha) மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்ற பிசாசுகள் [Pisacas], அரக்கர்கள் அல்லது அசுரர்கள் [Rakkhasas] போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட மனிதரல்லாத உருவங்கள் அல்லது உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் இவர்கள் எல்லோரும் இந்நாட்டின் மூலப் பழங் குடியினர் [original inhabitants of Lanka] என்பதே உண்மை. இவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், அவர்களை "மனிதர்கள் அல்ல" எனக் கூறி பாரம்பரிய நிலங்களை கைப்பற்றும் முயற்சியாக இது இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
தீபவம்சம் 1.51 : புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்றும், ஒருமுறை அங்கே கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் அங்கே நிற்பதைக் கண்டார்கள் என்றும், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்று நினைத்தார்கள் என்றும் கூறுகிறது. அதனால்த்தான் "இவர் நம்மவர்" என்று நினைத்தனர். இது இயக்கர்களும் புத்தரும் மனித வடிவில் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், பிறகு புத்தர் அவர்களை பயமுறுத்த பலத்த மழை, குளிர் காற்று, கடுமையான வெப்பம் மற்றும் இருள் போன்றவற்றை ஏற்படுத்தினார். அன்பினதும் கருணையினதும் மொத்த வடிவான புத்தர், மேலே கூறியவாறு, இலங்கை நாட்டின் சொந்த மக்களை, பழங்க்குடியினரை அடக்குமுறையில் பயமுறுத்தி விரட்டும் செயல்கள் செய்தார் என்பது அவரின் இயல்புக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது?
தீபவம்சம் 1.78: கோடையில் தாகம் கொண்டவர்கள் நதியை நோக்கி ஓடுவது போல, இயக்கர்கள் 'கிரிதீபத்திற்கு' [Giridipa] ஓடினார்கள்; அவர்கள் அனைவரும் ஒருபோதும் திரும்பி வராமல் அங்கே அதில் நுழைந்தனர்; முனிவர் (பின்னர்) தீவை அதன் முந்தைய இடத்திற்கு மீட்டெடுத்தார் என்கிறது. இது புத்தரின் அகிம்சை (nonviolence) மற்றும் கருணை என்ற தத்துவங்களுக்கு மீண்டும் இது எதிரானது ஆகும். இப்படியான கதைகள், புத்தரை அதிமானுட ஆற்றல்கள் கொண்டவர் போலவும், பிறரை வன்முறையால் விரட்டும் பயங்கரவாதி போலவும் காட்டுகின்றன. இது புத்தரின் உண்மையான உருவத்துக்கு கேடாக உள்ளது. இதனால் இலங்கை வரலாற்று புராணங்களை எழுதிய பௌத்த பிக்குகள், புத்தருக்கு துரோகம் செய்துள்ளனர். அவரின் புனித உருவத்தை அழித்துள்ளனர் என்பதே உண்மை. உதாரணமாக அங்கு வாழும் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவும், புத்த சமயத்தை சேராதவர்களாகவும் இருக்கும் பொழுதும், அவர்கள் வழிபாடும் சைவ ஆலயங்களுக்கு இடையூறாக அல்லது அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே பலவந்தமாக புத்தர் சிலை வைப்பதும் பின் விகாரை காட்டுவதும் பின் சிங்கள குடியேற்றத்தால் ஆக்கிரமிப்பு செய்வதும் 2009 க்குப் பின் அதிகரித்துக்கொண்டு போவது ஒரு சாதாரண விடயமாகி விட்டது. எந்த அரசாங்கம் வந்தாலும் அது நின்றபாடில்லை. இன்றும் மே 25, 2025, இலும் இப்படியான வன்முறைச் செயல்கள் தொடர்வதைக் காணலாம். உதாரணமாக, திடீரென அம்பாறை மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலையைக் எடுத்துக் காட்டலாம். இது என்ன கொடுமை என்றால், தாங்கள் புத்தரை போற்றுகிறோம், பின்பற்றுகிறோம் என்று வாய்க்கு வாய் சொல்லும் அவர்கள் செய்யும் செயல்கள் தான் இவை!
இது தான் சிங்கள அரசியல்வாதிகளும், பிக்குகளும் பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்பது — வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதுதான். அவர்கள் இதில் பெரிதளவில் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டோர் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள், அல்லது இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று விட்டார்கள். எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தரப்பட்ட சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
கல் ஓயா, மகாவலி திட்டம் போன்ற பல பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தமிழர் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப் பட்டன. இவை அனைத்துக்கும் உலகத் தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் அவர்கள் இந்த அநியாயங்களைக் கண்டும் காணாதது போல நடந்து கொண்டனர்.
இதே நேரத்தில், தமிழர்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தனர். தேர்தல் எல்லைகள் மாற்றப்பட்டு, அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதால், தமிழர் வாக்குரிமையும் குறைக்கப் பட்டது.
Part: 135 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?"
Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them.
This is what the Sinhala politicians and the monks want to do with the Tamils, to drive them away from their ancestral homeland. They succeed in this about more than fifty percentage by driving the Tamils to India, and to the western world. They also brutally massacred Tamils in many pockets of border area, and replaced them with armed Sinhalese militia. Vast tracks of Tamils home lands were forcefully appropriated under various irrigation schemes, with the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in the murder, mayhem and robbing of Tamils. Tamils’ lost their representations in the parliament while Sinhalese were increasing their representation in the Parliament.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 136 தொடரும் / Will follow
எனது அறிவார்ந்த தேடல்: 1514
துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135]

துளி/DROP: 2098 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 135
https://www.facebook.com/groups/978753388866632/posts/34348151934833348/?
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 136 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?"
மிக பழமையான புத்தமத நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்றவை கூட, புத்த மத அரசர்கள் செய்த கொலைகளைப் புகழ்ந்து பேசுகின்றன. உதாரணமாக, தீபவம்சம், அசோக சக்ரவர்த்தி தனது நூறு சகோதரர்களை கொன்ற பின்னும், அவரை ‘நல்ல ஒழுக்கமுடைய, புகழ்பெற்ற மன்னன்’ எனப் போற்றப்படுகிறார். இது என்ன வகையான நீதிக் கருத்து? இப்போது இலங்கையில் உள்ள பிக்குகள் இதே போன்று நடக்கின்றனர். தமிழர்களுக்கு, அவர்களின் சம உரிமைகளில் எதுவுமே வழங்கப்படக் கூடாது எனத் திட்டமிட்டுப் பேசுகிறார்கள். பின்னர் அதே விரோதத்தை ஊட்டி, இராணுவத்தின் மூலம் மேலும் தமிழர்கள் விரட்டப் படுகிறார்கள் அல்லது துரத்தப் படுகிறார்கள். பின் அவர்களது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. உதாரணமாக, இன்று 29, ஜூலை 2025, கொடியேற்றம் அன்று, நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தின் செயலைக் கூறலாம்?
இவ்வாறு, தீபவம்சம், மகாவம்சம் போன்ற புத்த நுால்கள் புத்தரின் சத்தியங்களை தவிர்த்து, அசோகனின் கொடூரத் செயல்களையும் வெறுப்புப் பரப்புதலையும் நீதியென புகழ்ந்தன. அசோக்கர் பிறகு அமைதியையும் தர்மத்தையும் பின்பற்றினாலும், இந்த நூல்கள் அவரது மறுமாற்றத்தைப் பேசாமல், ஆரம்பக் கொலைகளையே புகழ்கின்றன. இன்று சில பிக்குகள், இராணுவத்தினதும் அரசியல்வாதிகளினதும் மற்றும் குண்டர்களினதும் உதவியுடன் இதையே பின்பற்றித் தமிழர்களை ஒடுக்க முயல்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தீபவம்சம் 1 - 26 இல், பின்னர் இந்த ஜம்புதீபத்தின் [இந்தியாவின்] மீது ஒரு ஆட்சியாளர் இருப்பார், அவர் தம்ம அசோகர் என்றும் மிகவும் நல்லொழுக்கமுள்ள, புகழ்பெற்ற மன்னன் என்றும், புத்த பிக்கு ஆசிரியரால் எதிர்வு கூறப்பட்ட அந்த அசோகன் தான் தீபவம்சம் 6 - 22 இல், தனது நூறு சகோதரர்களைக் கொன்று, அதன் பின் தனியாக தனது பரம்பரை ஆட்சியை, மகிந்தவின் பதினான்காம் அகவையில், மன்னனாக முடி சூடினார் என்றும் கூறப்பட்டுள்ளதைக் காண்க.
தீபவம்சம் (பாகம் 9, செய்யுள் 7) இல், புத்தர் "மக்களுக்குள் சிறந்தவனான விஜயனின் வருகைக்காக இலங்கையைத் தயார் செய்தார்" என்று கூறுகிறது. இருப்பினும், இந்தக் கூற்று கடுமையான நெறிமுறை மற்றும் வரலாற்று கவலைகளை அல்லது கேள்விகளை எழுப்புகிறது. "தலைவன்" விஜயன் என்று அழைக்கப்படுபவர் அதே உரையில் தீய மற்றும் பயங்கரமான செயல்களைச் செய்ததாக விவரிக்கப்படுகிறார். அதாவது இது போன்ற ஒரு கெட்ட நடத்தை கொண்ட ஒருவனுக்காக, புத்தர் இலங்கையைத் தயார் செய்தார் எனக் கூறுவது தார்மீகமும் வரலாற்றுத் தரவுகளும் மோதும் விடயமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசாங்கங்களும் அவற்றின் ஆயுதப் படைகளும் இந்த புராண நபரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தமிழ் மக்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் வன்முறைச் செயல்களை அல்லது கொடூரச் செயல்களை மேற்கொண்டன, மேற்கொள்ளுகின்றன என்பது மறக்க முடியாத வரலாறு ஆகும் - இது விஜயனின் மரபின் துயரமான தொடர்ச்சி போல் தோன்றுகிறது!
விஜயன் ஒரு உண்மையான தலைவன் அல்ல; மாறாக, அவனுடைய சொந்த தந்தையால் நாடு கடத்தப்பட்ட ஒரு மனிதன். அவனும் அவனது தோழர்களும் ஒரே மாதிரியான கட்டுக்கடங்காத கொடிய பண்புகளைப் பகிர்ந்து கொண்டதால், ஒரு படகில் அங்கிருந்து துரத்தப்பட்டனர். அதாவது விஜயன் சொந்த நாட்டில் இருந்து அகற்றப்பட்ட ஒரு குற்றவாளி. அவனுடன் பயணித்த எல்லோரும் அதே போன்ற குற்ற இயல்புகள் கொண்டவர்கள் ஆகும். அவர்கள் முதலில் சுப்பரகாவில் (அநேகமாக இந்தியாவின் மேற்கு கடற்கரையில்) தரையிறங்கினர், அங்கு அவர்கள் ஆரம்பத்தில் வரவேற்கப்பட்டனர் என்றாலும், விரைவில், அவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளுக்குத் திரும்பினர் - திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் மற்றும் அவதூறு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்தத் தவறான செயல்களால் கோபமடைந்த சுப்பரக மக்கள் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டனர். இதனால் அங்கிருந்து தப்பிச் சென்று, அவர்கள் பருகாச்சாவை அடைந்தனர், அங்கு தீபவம்சம் 9-26 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மூன்று மாதங்களுக்கு அதே தீய நடத்தையை மீண்டும் செய்தனர்.
பின்னர் தான் அவர்கள் இலங்கைக்கு வந்தனர். ஆனால் மகாவம்சம், இந்த பருகச்சா நிகழ்வை முழுமையாக ஒதுக்குகிறது. இது ஒரு முக்கிய வரலாற்று முரணாகும். இது, இந்த பௌத்த நூல்களின் நம்பிக்கையற்ற தன்மை மற்றும் அரசியல் நோக்கங்களை காட்டுகிறது. வரலாற்று புராண நூல்களை எழுதிய புத்த மடாலய குருக்கள் தங்கள் நலன்களுக்காக குற்றவாளிகளையும் புனிதப்படுத்துவதில் வெட்கமடையவில்லை என்பதை இது மீண்டும் தெளிவாகக் காட்டுகிறது.
Part: 136 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?"
It is forecast, Dipavamsa1- 26, that there would be a ruler over Jambudipa a highly virtuous, glorious monarch known as Dhammasoka. The Dipavamsa records, 6-22, that the same king killed his one hundred brothers to continue with the reign. What kind of glory is this? No wonder that the monks in the present day Sri Lanka is hell bent to get rid of the Tamils from their ancestral home land by any means. Moral of the monkish author of the Ceylon chronicles is that you kill your one hundred brothers; you are virtuous and glorious so long as you belong to the Buddhist faith. The present day monks always in the forefront to scuttle any reprieve, however small it is, the Government negotiate with the Tamils. Enmity and issues are created to generate violence and then direct the security forces to kill more Tamils on the name of sovereignty, and take their lands. The monkish authors of the Dipavamsa and the Mahavamsa not only betrayed the Buddha, but also the King Asoka and his sermons on his several edicts. Asoka might have had killed few of his brothers to come to the throne. However the monkish authors of the chronicles sent a loud and clear approval that you kill your one hundred brothers in the case of the Dipavamsa, ninety nine in the case of the Mahavamsa, still you are virtuous and glorious. The Sri Lankan chronicles proudly claim that the King Asoka killed one hundred or ninety nine of his brothers without expressing any remorse or compunction.
The Buddha prepared Lanka for the arrival of Vijaya, the chief of men. What kind of chief he was! He committed most wicked and fearful deeds, Dipavamsa, 9-7. The post independent Sri Lanka Government and its security forces emulated and still continue to emulate Vijaya in their wicked and murderous acts against the Tamils. Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 137 தொடரும் / Will follow
எனது அறிவார்ந்த தேடல்: 1516
துளி/DROP: 2100 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136]

துளி/DROP: 2100 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 136
https://www.facebook.com/groups/978753388866632/posts/34364710406510834/?
By
kandiah Thillaivinayagalingam ·