Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை

  • Replies 54
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

JOHN JABES A1 day ago
கடவுள் வழிபாடு அவரவர் நம்பிக்கை.. படைப்பு ஒன்று இருந்தால் படைத்தவன் ஒருவர் உண்டு.. அடுத்தவரின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி , காயப்படுத்துபவன் பகுத்தறிவு இல்லாதவனாக மாறிப்போகிறான்.. உண்மையில் பகுத்தறிவை நமக்குத் தந்ததே கடவுள்தான்.. கடவுளைப் பார்த்தாயா என்று கேட்பவரிடம் எனது தாழ்மையான கேள்வி பகுத்தறிவை பார்த்தீர்களா? என்பதே.. கடவுள் பக்தி மனிதர்களைப் பிரிக்காது.

SagR 23 hours ago
இது நீ ஆபாசம் என்று கூறுகிறாய்..பிறகு உன் அறிவியல் விஞ்ஞானிகள் எழுதி வைத்த, உடலுறுப்புகளைப் பற்றிய மருத்துவத்தை நீ எப்படி படிப்பாய்? முதலில் நீ பள்ளி அறிவியல் பாட புத்தகத்தை படித்துதானே வந்திருக்கிறாய்??இல்லையா?? பாடபுத்தகத்த்தில்  அறிவியல் பெயரில் மருத்துவம் எழுதினால் தவறு இல்லை.என் தமிழன் அனைத்து உறுப்புகளையும் காக்க தமிழில் பாடினால்  ஆபாசம் என்று கூறுவதா??
தமிழை அழிப்பதுதான் உன் நோக்கமா?? சாக்கடை கூட்டம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவசங்கர் சிவா19 hours ago
மாரிதாசுக்கு கருப்பர்கூட்டம் கன்டென்ட் குடுக்குறான், அவனுக்கு இவன் கன்டென்ட் குடுக்குறான்.... இதுதான் இவனுங்களுக்குள் இருக்குற கள்ள உறவு.
ஆரியத்தை வளர்த்தெடுப்பது திராவிடம்.
திராவிடத்தை தண்ணீர் ஊற்றி வளர்ப்பது ஆரியம்.
இரண்டுமே என் தமிழர்மண்ணிற்கு தேவையில்லாத ஆணிகள்தான்.
ஆரியத்தின் கள்ளக் குழந்தைதான் திராவிடம் என்பது இங்குள்ள தமிழர்களுக்கு நன்கு தெரியும்.....
தமிழர்கள் விழிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
நிச்சயம் வென்றே தீருவோம்.... நாம்தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் எனும் மூடர் கூட்டத்திற்க்கு,  சவுக்கடி பதிலளித்த தேச மங்கயர்க்கரசி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் எதிர்ப்பு எதிரொலி.. கந்த சஷ்டி கவசம் வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டது 'கறுப்பர் கூட்டம்'

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த வீடியோவை நீக்கியுள்ளது. கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ, இந்துக்களிடையே மட்டுமின்றி, மதம் கடந்த தமிழர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட உடல் அங்கம், சங்க இலக்கியங்களிலும் அதே வார்த்தையோடு கூறப்பட்ட வார்த்தை. தூய தமிழ் வார்த்தையை, மலினப்படுத்தி, ஆபாசப்படுத்தி பேசுவது தமிழுக்கு எதிரானது என்ற விமர்சனங்களும் பெருகின. இந்த நிலையில்தான், மன்னிப்பு கேட்டுள்ளது கறுப்பர் கூட்டம்.

மன்னிப்பு

மன்னிப்பு கந்த சஷ்டி கவசம் குறித்து நாங்கள் வெளியிட்ட வீடியோ எங்களை நேசிக்கும் பலரின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதை நாங்கள் இப்போது அறிந்தோம். ஆதலால், எங்கள் யூடியூப் பக்கம் உள்பட பேஸ்புக் பக்கத்திலிருந்தும் அந்த வீடியோவை நீக்கிவிட்டோம். காயப்படுத்தியிருந்தால் எங்களை மன்னிக்கவும், என்று கறுப்பர் கூட்டம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பாஜக புகார் முன்னதாக பாஜக சார்பில் வீடு வீடாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் அளித்த அந்த புகாரில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 (1) A பேச்சுரிமையை குடிமக்களுக்கு வழங்கி இருந்தாலும் கூட அது கட்டுப்படுத்தப்பட்ட உரிமைதான். என்று கூறப்பட்டிருந்தது. தண்டனைக்குரிய குற்றம் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 295a கீழ் யார் ஒருவரும் தங்களுடைய கருத்து சுதந்திரம் அல்லது பேச்சுரிமையை பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்த பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமையை

ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. சேனலுக்கு தடை எனவே, கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக கிரிமினல் குற்ற வழக்கை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் பேசிய சுரேந்திர நடராஜன் என்பவர், மீது இந்திய தண்டனைச் சட்டங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த சேனல் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69a பிரிவின் கீழ் தடை செய்யப்பட வேண்டும். பக்தர்களின் குமுறலை அதிகப்படுத்தி விடாமல் இருப்பதற்காக, கூடிய விரைவில் இந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. சட்டப் போராட்டம், கடும் எதிர்ப்புகள் இடையே, வீடியோவை நீக்கியுள்ளது கறுப்பர் கூட்டம்.

https://tamil.oneindia.com/news/chennai/kantha-sasti-kavasam-video-karuppar-koottam-you-tube-channel-asking-apology/articlecontent-pf472002-391389.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடவுள் முருகனை விமர்சித்த திராவிட கும்பலுக்கு செருப்படி பதில் கொடுத்த ஈழத் தமிழர் 

கடவுளை ஒருவன் விமர்சித்தால்  அவனை கடவுள் பார்ததுக் கொள்வார் தானே, என்று நினைக்க கடவுளை நம்புவதாக பம்மாத்து விடும்  இவர்களால் முடிவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இவர்களுக்கு  நன்றாகவே  தெரியும்.  அதனால்  தான்  இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது.

இப்படி தலைகால் புரியாத அளவுக்கு, கேவலமான வார்ததைகளை உபயோகிக்கும் அளவுக்கு  கோபம் வருவதில் இருந்தே இவர்களது ஆன்மீகம் என்பது பொய். கடவுளை தமது கட்சி தலைவர் போலவே இவர் கள் நினைக்கின்றனர். தனது கட்சி தலைவனை விமர்சிக்கும் போது கட்சித்தொண்டர்களுக்கு வரும் கோபமே இவர்களுக்கும் வருகிறது.  

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால், கடவுள் என்பது மனிதருக்கு பொதுவானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விமர்சித்தால்  அதை செய்பவனுக்கு தானே   கெடுதல் வரும் என்று நினைத்து அமைதியாக இருப்பார்கள். அதை விடுத்து அதை சொன்னவன் மீது அதிக கோபம் கொண்டு இப்படி பாய்வதன் மூலம்  கடவுள் மீது  இவர்களுக்கே  நம்பிக்கை இல்லை என்பதை உறுதியாக்குகின்றனர்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு இருக்கட்டும் முதலில் அறிவை பயன்படுத்துங்கள்

Rajesh E 1 hour ago
"எந்த  நம்பிக்கையையும்   கேள்வி   எழுப்பலாம்  ... கேள்வியே   கேட்க கூடாதென்பது  நல்லதல்ல  .. ஆனால்   அந்த   கேள்விகளும்  நியாயமானதாக  ,  கருத்தியலாக   இருக்க   வேண்டும்  .. முக்கியமாக  ஒரு  அளவிற்கு   இருக்க வேண்டும். .. கொச்சைப்படுத்தும்   நோக்கில்   இருக்க கூடாது  ...

  இங்கு   இந்த  திராவிடன்    கேள்வி  கேட்கவில்லை  மாறாக  கொச்சைப்படுத்துகிறான் ..   சிறு   கேள்விகளும்   அரசியல்  படுத்த படுகிறது    என்பதை  மனதில்  வைக்க வேண்டும்  ..   அதேநேரம்   அரசியல்   படுத்தவும்   சில   கேள்விகள்  கேட்கப்படுகிறது  ... நாம்  தான்  கவனமாக  இருக்க  வேண்டும்  ...

மாறாக   கொச்சைப்படுத்தும்  போது   திருப்பி  அடிக்கத்தான்  வேண்டும்  ..
ஏனென்றால்   இது  நம்  மண்  ,  கலாச்சாரத்திற்கான   போராட்டம்  ...

நாம்  தமிழர்"

11 minutes ago, tulpen said:

கடவுளை ஒருவன் விமர்சித்தால்  அவனை கடவுள் பார்ததுக் கொள்வார் தானே, என்று நினைக்க கடவுளை நம்புவதாக பம்மாத்து விடும்  இவர்களால் முடிவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இவர்களுக்கு  நன்றாகவே  தெரியும்.  அதனால்  தான்  இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது.

இப்படி தலைகால் புரியாத அளவுக்கு, கேவலமான வார்ததைகளை உபயோகிக்கும் அளவுக்கு  கோபம் வருவதில் இருந்தே இவர்களது ஆன்மீகம் என்பது பொய். கடவுளை தமது கட்சி தலைவர் போலவே இவர் கள் நினைக்கின்றனர். தனது கட்சி தலைவனை விமர்சிக்கும் போது கட்சித்தொண்டர்களுக்கு வரும் கோபமே இவர்களுக்கும் வருகிறது.  

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால், கடவுள் என்பது மனிதருக்கு பொதுவானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விமர்சித்தால்  அதை செய்பவனுக்கு தானே   கெடுதல் வரும் என்று நினைத்து அமைதியாக இருப்பார்கள். அதை விடுத்து அதை சொன்னவன் மீது அதிக கோபம் கொண்டு இப்படி பாய்வதன் மூலம்  கடவுள் மீது  இவர்களுக்கே  நம்பிக்கை இல்லை என்பதை உறுதியாக்குகின்றனர்.  

ஆபச வார்த்தைகளில் யாரும் உங்கள் நம்பிக்கையை கொஞ்சைப்படுத்தலாம், நீங்க வேற லெவல்👍

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

கடவுளை ஒருவன் விமர்சித்தால்  அவனை கடவுள் பார்ததுக் கொள்வார் தானே, என்று நினைக்க கடவுளை நம்புவதாக பம்மாத்து விடும்  இவர்களால் முடிவதில்லை. ஏனென்றால் கடவுள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் என்பது இவர்களுக்கு  நன்றாகவே  தெரியும்.  அதனால்  தான்  இவர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது.

இப்படி தலைகால் புரியாத அளவுக்கு, கேவலமான வார்ததைகளை உபயோகிக்கும் அளவுக்கு  கோபம் வருவதில் இருந்தே இவர்களது ஆன்மீகம் என்பது பொய். கடவுளை தமது கட்சி தலைவர் போலவே இவர் கள் நினைக்கின்றனர். தனது கட்சி தலைவனை விமர்சிக்கும் போது கட்சித்தொண்டர்களுக்கு வரும் கோபமே இவர்களுக்கும் வருகிறது.  

உண்மையான ஆன்மீகவாதிகள் என்றால், கடவுள் என்பது மனிதருக்கு பொதுவானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவரை விமர்சித்தால்  அதை செய்பவனுக்கு தானே   கெடுதல் வரும் என்று நினைத்து அமைதியாக இருப்பார்கள். அதை விடுத்து அதை சொன்னவன் மீது அதிக கோபம் கொண்டு இப்படி பாய்வதன் மூலம்  கடவுள் மீது  இவர்களுக்கே  நம்பிக்கை இல்லை என்பதை உறுதியாக்குகின்றனர்.  

எனது மூத்தமகன்  மிக  மிக அமைதியானவன்

அதிகம் பேசமாட்டான் கோபப்படமாட்டான்

அண்மையில் இருவரும்  காரில்  போய்க்கொண்டிருந்தோம்

நான் தான் காரோட்டினேன்

குறுக்கால புகுந்த இன்னொருவருக்கு நான்  வழி  விட்டுக்கொடுக்கவில்லை என்பதற்காக

அந்த சாரதி  எனக்கு தனது  நடுவிரலைக்காட்டினார்;

உடனே எனது  மகன்  கார்  கதவை  திறந்து இறங்கிவிட்டான்

அவனைச்சமாளிச்சு மீண்டும்  காருக்குள் ஏற்றி

உனக்கு  கோபமே வராதே

ஏன்  இவ்வளவு  கோபம் இன்று  என்று  கேட்டதற்கு  அவனது  பதில்

அதுக்காக என்  அப்பாவையெல்லாம்  எனக்கு  முன்னால்  கை  நீட்டிப்பேசுவதை  பார்த்துக்கொண்டிருக்கமுடியாது என்றான்.

அவனுக்கும்  தெரியும் அவனது  அப்பாவால்  இதனை  மிக மிக சுலபமாக முடித்து விடமுடியும்  என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதாகியும் திருந்தாத கறுப்பர் கூட்டம் தோலுரிக்கும்

1 hour ago, விசுகு said:

ஏன்  இவ்வளவு  கோபம் இன்று  என்று  கேட்டதற்கு  அவனது  பதில்

அதுக்காக என்  அப்பாவையெல்லாம்  எனக்கு  முன்னால்  கை  நீட்டிப்பேசுவதை  பார்த்துக்கொண்டிருக்கமுடியாது என்றான்.

அவனுக்கும்  தெரியும் அவனது  அப்பாவால்  இதனை  மிக மிக சுலபமாக முடித்து விடமுடியும்  என்று.

நானும் அதை தானே கூறுகிறேன் விசுகு. உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா. அதனால்  வயதான காலத்தில் உங்களை காப்பாற்றும் பொறுப்பு  ஒரு  பொறுப்புணர்வு மிக்க மனிதன் என்று ரீதியில் உங்கள் மகனுகு இருப்பதை பாராட்டுகிறேன்.

அதே வேளை இந்த அண்ட பிரபஞ்சத்தை படைத்து  காத்து வருவதாக கதையளக்கும் அந்த கடவுளுக்கு உங்கள் கருதுகோட்படி இந்த பூமிப்பந்தில் வாழும்  எல்லோரும் மகன்கள் தானே. ஒரு மகன் கடவுளை விமர்சித்தால் அது அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள பிரச்சனை என்று விட்டு விட்டு செல்வது தானே உண்மையான ஆனமீகம்.  அப்படி இல்லாமல் வரையறை இல்லாமல் கோபம் வருகிறது என்றால், அப்படி விமர்சித்தவனை கொலை செய்யும் அளவுக்கு வக்கிரம் வருகிறது என்றால்,  அந்த கடவுள் என்ற Concept இலேயே தவறு உள்ளது என்று தானே அர்த்தம். அதாவது கடவுளை பலவீனமாக ஒருவராக அல்லது அப்படி ஒன்று இல்லாத‍தை நாங்கள் பொய்யாக கற்பித்ததை நீ கேள்வி கேட்டால் வந்த கோபம் என்பது தானே அர்த்தம்.

இதற்கும் ஆன்மீகத்திற்கும் அறவே தொடர்பு இல்லை. கடவுளை காட்டி வடிகட்டிய மூடப்பழக்கங்களை அறிமுகம் செய்து அதில் இலாபம் பார்த்து வரும் ஒரு கூட்டம்  மக்கள் சிந்திக்க தொடங்கினால் மூடத்தனங்களை நம்பாமல்  கடவுளை மட்டும் நம்பும் ஆன்மீக வாதிகள் ஆகிவிடுவார்கள் என்ற பயத்தினால் தான் இங்கு சிலருக்கு கோபம் வருகிறது.  அது தான் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

இப்படித்தான்  நானும்  எனது பருவ  வயதில்  பெரியர்களுடன் வாதிட்டுக்கொண்டிருந்தேன்

இவன்  தான்  பிடித்த முயலுக்கு 3 கால்கள்  என்று கதைத்துக்கொண்டிருக்கிறான் என்பார்கள்  பெரியவர்கள்

அப்ப  புரியல

இப்ப  புரியுது?

Edited by விசுகு

1 minute ago, விசுகு said:

இப்படித்தான்  நானும்  எனது பருவ  வயதில்  பெரியர்களுடன் வாதிட்டுக்கொண்டிருந்தேன்

இவன்  தான்  பிடித்த முயலுக்கு 3 கால்கள்  என்று கதைத்துக்கொண்டிருக்கிறான் என்பார்கள்  பெரியவர்கள்

அப்ப  புரியல

இப்ப  புரியுது?

அப்போது பலமாக தன்னம்பிக்கையுடன் இருந்தீர்கள். இப்போதை வயது போக உடலும் அதனால் மனசும் பலவீனம். அதனால் கண்டதை  எல்லாம் நம்பும் தன்மை. உங்களுக்கு மட்டுமல்ல பொதுவான பிரச்சனை தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அப்போது பலமாக தன்னம்பிக்கையுடன் இருந்தீர்கள். இப்போதை வயது போக உடலும் அதனால் மனசும் பலவீனம். அதனால் கண்டதை  எல்லாம் நம்பும் தன்மை. உங்களுக்கு மட்டுமல்ல பொதுவான பிரச்சனை தான். 

நான்  எப்பொதுமே ஒரே நம்பிக்கையுடனும்

கொள்கையுடனுமே இருக்கின்றேன்

எந்த  தள்ளாட்டமும்  மனதுக்கோ உடலுக்கோ  கிடையாது

ஆனால்  அனுபவமும் முதிர்ச்சியும் மற்றவர்  நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவும்

அதனை போற்றாது விடினும்  இகழாதிருக்க  கற்றுத்தந்திருக்கிறது

41 minutes ago, விசுகு said:

நான்  எப்பொதுமே ஒரே நம்பிக்கையுடனும்

கொள்கையுடனுமே இருக்கின்றேன்

எந்த  தள்ளாட்டமும்  மனதுக்கோ உடலுக்கோ  கிடையாது

ஆனால்  அனுபவமும் முதிர்ச்சியும் மற்றவர்  நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளவும்

அதனை போற்றாது விடினும்  இகழாதிருக்க  கற்றுத்தந்திருக்கிறது

எந்த எமது தவறுகள் தொட்பாக எந்த விவாதம் வந்தாலும் அதை மறுப்பதற்கு லொஜிக்கான காரணங்களை தேடாது இகழுகுறாய், கொச்சைப்படுதுகிறாய் போன்ற உப்பு சப்பற்ற காரணங்களை சொல்லி தவறுகளுக்கு கூட வக்காலத்து வாங்கி வாங்கி அதே தவறுகளை மீண்டும் செய்து  இழக்க இழக்க தொடந்தும் தோலவிப் பாதையிலேயே போவது தான் எமது பொழுது போக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

எனக்கு  முயல்  பிடிக்கிற நாயை மூஞ்சியிலேயே தெரியும்  அப்பு.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அப்போது பலமாக தன்னம்பிக்கையுடன் இருந்தீர்கள். இப்போதை வயது போக உடலும் அதனால் மனசும் பலவீனம். அதனால் கண்டதை  எல்லாம் நம்பும் தன்மை. உங்களுக்கு மட்டுமல்ல பொதுவான பிரச்சனை தான். 

இது பற்றி இங்கே யாழ்கள உறுப்பினர் கோஷன் சே முன்பு சரியாக சொல்லி இருந்தார். 70 காலப்பகுதிகளில் இலங்கை தமிழ் இளைஞர்கள் மத்தியில் சோசலிசம் கம்யுனிசம் இறைவனை மறுத்து பேசுதல் எல்லாம் ஒரு பாஷனாகவே இருந்தது என்று. அதனால் தான் அவர்கள் மேற்குலகநாடுகளுக்கு வந்த பின்பு சீதனம் வாங்கி திருமணம் செய்து கோவிலுக்கு தவறாமல் செல்லும் ஆன்மீகவாதிகளாக மாறமுடிந்தது.அவர்கள் முன்பு இறைவனை மறுத்து பேசியது எல்லாம் கேள்விகள் கேட்டு பகுத்தாய்ந்து தெளிவடைந்து எடுத்த முடிவு இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: வழக்கறிஞர் சரவணன் கறுப்பர் கூட்டம் திராவிட அமைப்புக்களை தடை செய்ய எளிய வழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி கவசம் - பெருகும் ஆதரவு - எம் எஸ் பாஸ்கர் விளக்கம்

கந்தன் வேல் தனை காவல்துறை காக்க, என்ற நிலையே ஜதார்ததமாக உள்ளது. 😂😂 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த சீர்திருத்த கருத்துக்களை யார் தெரிவித்தாலும் எமது நம்பிக்கையை புண்படுத்துகிறது என்று பல்லவி பலமாக பாடப்படும். ஓலமிடப்படும்.  

இந்திய வரலாற்றில் பின்வரும் விடயங்களையும் மீட்டல் செய்து பார்த்தால்  எப்போதெல்லாம் இந்துகளின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.   

உடன்கட்டை ஏறுதலை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது 

குழந்தைதிருமணம் தடை செய்யப்பட்டபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. 

இந்துக்களிடையே வேறு சாதியை சேர்ந்தோர் கலப்புதிருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலமிடப்பட்டது. 

பெண்கள்மறுமணம் ,விதவைமறுமணம் செய்தபோது இந்துக்களின் மணம் புண்பட்டதாம். 

பெண்கள் சமஉரிமை ,சொத்தில் பங்கு கேட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டதாக ஓலம். 

தேவதாசி முறையை ஒழித்த போதும் இந்துக்களின் மனம் புண்பட்டது..

பிடிச்ச உணவை சாப்பிட்டாலும் இந்துக்களின் மனம் புண்படும்..

புண்படட்டுமே....

இந்த கட்டு கதையெல்லாம் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. எல்லா மூடநம்பிக்கையையும் அடிச்சு நொறுக்கு..

வாழ்க்கையில் முன்னேற்றம் பெருகும் .

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

தமிழ்க்கடவுள் முருகன் பற்றிபேச கறுப்பர்கூட்டம் என்ற யாருக்கும் தகுதி இல்லை - IBC

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவா?: திமுக விளக்கம்!

spacer.png

முருகனை இழித்துப் பழித்துப் பேசிய கறுப்பர் கூட்டத்துக்கு திமுக சட்ட ரீதியான ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 18) திமுக தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,

“திமுக மீதும் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் அவதூறான பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டு ஒரு கூட்டம் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவை தாங்கிக் கொள்ளமுடியாத அவ்வயிற்றெரிச்சல் காரர்கள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதில் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தயாரித்து அதன் மூலமாக, ‘முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கிற கறுப்பர் கூட்டத்துக்கு சட்ட ரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும்’ என்று போலியான பொய்யான பித்தலாட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இதேபோல ஏற்கனவே செயல்பட்டவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. முருகரை பழித்துப் பேசியது கண்டிக்கத் தக்கது என்பதை திமுக உள்ளிட்ட பல கட்சியினரும் கூறியிருக்கிறார்கள். எங்கள் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அறிக்கையே வெளியிட்டார்.

தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் இந்துக்களாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, எல்லாரும் திமுகவின் பின்னால் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு மூலம் அறிந்து கொண்டு அற்பத் தனமான செயல்களை செய்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி மேலும்,

“ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையின் அடிப்படையில் 70 ஆண்டு காலமாக திமுக செயல்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன்தான் கும்பகோணம் மகாமகம் நடத்தினோம் என்று சிறியவர்களுக்குத் தெரியாது, ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர். மயிலாப்பூர் குளத்தை தலைப்பாகை கட்டிக் கொண்டு தூர்வாரியவர் கலைஞர்.

இதெல்லாம் தெரியாத குள்ள நரிக் கூட்டம் தமிழகத்துக்குள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய பார்க்கிறார்கள். திமுகவில் இருக்கும் ஒன்றரை கோடி உறுப்பினர்களில் ஒரு கோடி பேர் இந்துக்கள். இதையெல்லாம் தெரிந்தும் சிலர் திமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த போலி ட்விட்டர் பற்றி நாளை மறுநாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்வோம்” என்று கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

https://minnambalam.com/politics/2020/07/18/38/karupar-koottam-dmk-rsbarathi-press-meet-murugan-staklin-twitter

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.