Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன்

July 22, 2020

sumanthiran_tna_thinakkural.jpg

“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது;

“சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவர் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்பு செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால்கூட பரவாயில்லை. நான் அதற்கு தயாராக இருக்கின்றேன்” என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தன்னுடன் விவாதம் செய்ய சுமந்திரனுக்கு தகுதியில்லை என்று கூறிய கருத்து தொடர்பில் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் நான்கு தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டி சாட்டுக்களை கூறிக்கொண்டு ஓடுகிறார். அவரைத் துரத்திப்பிடிக்கும் அவசியம் எமக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

http://thinakkural.lk/article/56833

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வெறும் படம் காட்டல்..👍

maxresdefault.jpg "என்ர ஏரியாவுக்கு வாடா ஒன்ன நான் கவனிச்சு போடுறன்.! "☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தேர்தல் நேர செட்டப் சிறிகாந்தாவும் கஜேந்திரகுமாருமா  அவருக்கு ஓட்டு போடப்போவது ? மக்கள்தானே  அவர்களின் கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கும் வல்லமை சுமத்திரன் ஒட்டுக்குழுவுக்கு உண்டா ?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

அதெல்லாம் தேர்தல் நேர செட்டப் சிறிகாந்தாவும் கஜேந்திரகுமாருமா  அவருக்கு ஓட்டு போடப்போவது ? மக்கள்தானே  அவர்களின் கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கும் வல்லமை சுமத்திரன் ஒட்டுக்குழுவுக்கு உண்டா ?

கொஞ்சம் பொறுங்களப்பூ,

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ? 

இதற்கு பதிலை - ஆம். வேண்டும்  / இல்லை. வேண்டாம் எனத் தெளிவாகக் கூறுங்கள்.

😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

கொஞ்சம் பொறுங்களப்பூ,

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ? 

இதற்கு பதிலை - ஆம். வேண்டும்  / இல்லை. வேண்டாம் எனத் தெளிவாகக் கூறுங்கள்.

முதலில் உங்களை நோக்கி நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் இங்கு வந்து கேள்விகளை கேளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

முதலில் உங்களை நோக்கி நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை  தாருங்கள் அதன் பின் இங்கு வந்து கேள்விகளை கேளுங்கள் .

கேள்விக்கும் கேலிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கா எனது எழுத்தறிவு உள்ளது 😂

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ?""

பதில் சொல்லுங்கப்பூ 😫

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

பகிரங்க விவாதம் வேண்டுமா வேண்டாமா  ?""

பதில் சொல்லுங்கப்பூ 😫

முதலில் சுமத்திரன் பற்றி உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

முதலில் சுமத்திரன் பற்றி உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் என்ன ?

கேலிக்குப் பதில் சொல்வதில்லை என்பது என் பாலிஸி 😎

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கேலிக்குப் பதில் சொல்வதில்லை என்பது என் பாலிஸி 😎

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் தலைவருடன் தான் விவாதிக்க தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் கூறி இருக்கிறார். இடைநிலையில் உள்ள சுமந்திரனுடனுன் அல்லவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன். 😫

2 hours ago, nunavilan said:

கட்சியின் தலைவருடன் தான் விவாதிக்க தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் கூறி இருக்கிறார். இடைநிலையில் உள்ள சுமந்திரனுடனுன் அல்லவாம்.

தேர்தலுக்கிடையே சம்பந்தரை கொல்லுவதாகத் திட்டம் போலும். அந்தாள் விவாத மேடைக்கு வரமுன்னரே வயது காரணமாக மூப்படைந்து விடுவார். 😀

கஜேந்திரகுமார் மீது Attempted murder case போடவேணும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

எய்தவன் இருக்க அம்பை நோவானேன். 😫

தேர்தலுக்கிடையே சம்பந்தரை கொல்லுவதாகத் திட்டம் போலும். அந்தாள் விவாத மேடைக்கு வரமுன்னரே வயது காரணமாக மூப்படைந்து விடுவார். 😀

கஜேந்திரகுமார் மீது Attempted murder case போடவேணும் 😂

அதுவல்ல தர்க்கம். கட்சி தலைவரோடு கட்சி தலைவர் விவாதம். 

விடியவே கொலை வெறியோடு திரிகிறீர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Kapithan said:

இந்தக் கேள்வியைப் போய் சம்பந்தரிடம் கேழுங்கள். அவர்தான் இவரை உள்ளே இழுத்து வந்தார். 

3 hours ago, Kapithan said:

அது சரி, அது என்ன கேள்வி. திரும்பவும் ஒருமுறை கூறுங்கள். 🤔

சுமத்திரன் தன்னில் நம்பிக்கை கொண்ட ஆளாக இருந்தால் ஏன் TNA யில் இருந்து போட்டி போடுகிறார் ?

தனியாக போய்  போட்டி  இடவேண்டியதுதானே ?

மேலே நான் கேட்ட கேள்விக்கு உங்களால் மட்டும் அல்ல சுமத்திரானால் கூட பதில் தர முடியாது .இனி சுமத்திரன் ஒட்டுக்குழுக்கள் அறிவு அபிவிருத்தி அடையாளம் என்று சொல்லி மக்களை மடையர்கள் ஆக்குவதை நிப்பாட்டுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

அதுவல்ல தர்க்கம். கட்சி தலைவரோடு கட்சி தலைவர் விவாதம். 

விடியவே கொலை வெறியோடு திரிகிறீர்கள்.🤣

சுமந்திரனை தனக்கு இணையாகக் கருத கஜேந்திரகுமாருக்கு சுய மரியாதை இடம் கொடுக்கவில்லை போலும் 😀

TNA யின் எதிர்காலத் தலைவருடன் வாதிடுவதில் என்ன பிரச்சனை கஜேந்திரகுமாருக்கு 😂(இதைப் பார்த்துவிட்டு பெருமாள் கொலைவெறியோட என்னைத் தேடித் திரியப் போகின்றார் 😂😂)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

TNA யின் எதிர்காலத் தலைவருடன் வாதிடுவதில் என்ன பிரச்சனை கஜேந்திரகுமாருக்கு 😂(இதைப் பார்த்துவிட்டு பெருமாள் கொலைவெறியோட என்னைத் தேடித் திரியப் போகின்றார் 😂😂)

TNA யை சிதறு தேங்காய் போல் உடைத்தவர் சுமத்திரன் ஒருவேளை சுமத்திரன் TNA  தலைவர் ஆனால் ஆனந்த சங்கரி கதைதான் இதுவரை தன்  வீட்டு பணப்பெட்டி நிரப்புவதிலேதான் கண்ணும் கருத்துமாய் இருப்பவர் தமிழ் மக்களுக்கு அவரின் அரசியலால் கிடைக்கபோவது பாதகம்தான் சிங்களவர்கள் அவருக்கு பணத்தை எறிந்து  தமிழர்களின் உரிமைகளை அடக்குவார்கள் .

சுமத்திரன் சம்பந்தமாய் உள்ள பொதுவான கேள்விகளுக்கு விடை தெரியாத அவரின் விசுவாசி  நீங்கள் உங்கள் புத்தியில்  சுமத்திரனுக்கு எதிராக எவர் எழுதினாலும் அதற்கு பின் உங்கள் எழுத்துக்கள் அது மற்றவர்களுக்கு  விளங்கியோ விளங்கலையோ   பற்றி எதுவும்  எண்ணுவதில்லை ஏதாவது கருத்து இட்டால் அது பதிலடி என்று நினைத்துகொண்டு இருக்கும் உங்களை யார் சாமி தேடுவான் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

1) TNA யை சிதறு தேங்காய் போல் உடைத்தவர் சுமத்திரன் ஒருவேளை சுமத்திரன் TNA  தலைவர் ஆனால் ஆனந்த சங்கரி கதைதான்

2) இதுவரை தன்  வீட்டு பணப்பெட்டி நிரப்புவதிலேதான் கண்ணும் கருத்துமாய் இருப்பவர் தமிழ் மக்களுக்கு அவரின் அரசியலால் கிடைக்கபோவது பாதகம்தான்

3)சிங்களவர்கள் அவருக்கு பணத்தை எறிந்து  தமிழர்களின் உரிமைகளை அடக்குவார்கள் .

சுமத்திரன் சம்பந்தமாய் உள்ள

4) பொதுவான கேள்விகளுக்கு விடை தெரியாத

5) அவரின் விசுவாசி  நீங்கள் உங்கள் புத்தியில்  சுமத்திரனுக்கு எதிராக எவர் எழுதினாலும் அதற்கு பின் உங்கள் எழுத்துக்கள் அது மற்றவர்களுக்கு  விளங்கியோ விளங்கலையோ   பற்றி எதுவும்  எண்ணுவதில்லை ஏதாவது கருத்து இட்டால் அது பதிலடி என்று நினைத்துகொண்டு இருக்கும்

6) உங்களை யார் சாமி தேடுவான் ?

1) TNA சுமந்திரன் வருவதற்கு முன்னர் ஒற்றுமையாய்த்தான் இருந்ததா 😫(அப்படி நீங்கள் கனவு கண்டால் , கனவு காண்பதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை நான் மறுக்க மாட்டேன். ஏனென்றால் நான் சனனாயகவாதியாக்கும் 😀) சுமந்திரன் TNAயை உடைத்தாரென்றால் தனிமனிதனால்  உடைக்கும் அளவுக்குTNA  அது பலவீனமாக இருந்ததாக அர்த்தப்படுத்தப்படும். அது உங்களுக்கு ஏற்புடையதா 🤔

2) பணப்பெட்டியை நிரப்பியதற்கு ஆதாரங்களெதனும் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் முன்வையுங்கள் ☹️

3) அது உங்கள் அனுமானம் மட்டும்தானே. ஆதாரமிருந்தால் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

4) என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். நான் ஒன்றும் கடவுளல்லவே. மனிதன்தானே 🙂

5) நான் அவரின் விசுவாசியல்ல . அவரின் நிலையில் இருக்கும் யாருக்கும் நான் ஆதரவளிப்பேன். ஆனால் RAWவின் அடியாட்கள் அதனை விமர்சித்தல் தகுமா என்பதுதான் என் கேள்வி 😂

6) நீங்கள் இருக்கிறீர்களே (ஆ)சாமி என்னைத் தேடுவதற்கு. ஒரு நாளில் எத்தனைதரம் எனக்கு பதிலிறுக்கிறீர்கள். அது கணக்கில் வராதோ 😀

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

TNA சுமந்திரன் வருவதற்கு முன்னர் ஒற்றுமையாய்த்தான் இருந்ததா 😫

புலிகள் இருந்தபடியால் இப்படி ஒரு கேள்வி எழவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 19:33, Kapithan said:

2) பணப்பெட்டியை நிரப்பியதற்கு ஆதாரங்களெதனும் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் முன்வையுங்கள் ☹️

3) அது உங்கள் அனுமானம் மட்டும்தானே. ஆதாரமிருந்தால் காட்டுங்கள். ஏற்றுக் கொள்கிறேன்.

சிங்களம் 40 வீதம்தானமே சுமத்திரனுக்கு தெரியுமாம் ?

உங்க ஆளே தேர்தல் திணைக்களத்தில் சொத்து பட்டியல் ஒப்படைத்துள்ளார் கடைசியாக இரண்டுமுறைக்கும் கடசித்தவனையில் கோடிக்கணக்கில் பணமாக கூடியுள்ளதே சொந்தக்காரர் கொடுத்தார்கள் என்று இலகுவாக பிரச்சனையை முடிக்கலாம் என்று நினைத்து இருப்பார் சிங்கன் .

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்தவிவாத்ததில வெற்றி பெற்றது

Edited by ragaa
Wants to delete the post

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.