Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இந்த சவாலை நீங்கள் சுமந்திரனுடன்தான் வைக்கவேண்டும்.😁

என்னுடைய கணிப்பை இன்னோர் திரியில் கூட்டமைப்பு 10 ஆசனம் மட்டும்தான் எடுக்கும் என்று சொல்லியிருந்தேன். அதுவே 1/3  வாக்குகள் வீழ்ச்சி என்ற அடிப்படையில்தான்! அதற்கு மேல் சவால்விடும் அளவிற்கு எனக்கு மேல்வீடு பழுதில்லை😜

இது கணிப்பு மட்டுமே:

யாழ் - 4

வன்னி - 3

திருமலை - 0

மட்டு  - 2

திகாமடுல்ல - 0

தேசியப்பட்டியல் - 1

 

On 27/7/2020 at 20:52, கிருபன் said:

சுமந்திரன் தினக்குரல் பேட்டியில் தெளிவான பதில் கொடுத்திருந்தாரே. ரணிலுக்கும் மைத்திரிக்கும் லடாய் வந்து ஆட்சி மாறியதால் அரசியல் யாப்பு மாற்றம் நடக்கவில்லை என்று. அந்த ஆட்சி மாற்றம் நடக்காமல் இருந்திருந்தால் புதிய யாப்பின்படி தேர்தல் நடந்திருக்கும்!

ஜி நான் quote பண்ணியதை கவனிக்கவில்லையா? 

இந்த விடயத்தில் சுத்துமாந்திரனின்   தெளிவான பதிலை நம்பும் தாங்கள், வாக்கு விடயத்தில் நம்பாதது ஏன்? 

வாக்கு விடையத்தில் மட்டுந்தான் உங்கள் மேல்வீடு பழுதில்லையா😜

  • Replies 138
  • Views 13.9k
  • Created
  • Last Reply
12 hours ago, Dash said:

விரைவில் நான் நினைக்கிறன் 2025இல் தேர்தல் வரும் போது வன்னியிலும் பிரதிநிதிதுவம் கேள்விக்குறியாகா வாய்ப்பு உண்டு. தற்போதைய நிலையில் 4 மேல் வருவது கடினம் சில வேளை அதுவும் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு.

வன்னியில் கடைசியாக எதனை பேர் இருந்தார்கள் ? நான்கு தமிழர்கள்தான் இருந்தார்கள். இம்முறை நான்கை பாதுகாத்தாலே பெரியகாரியம். இம்முறை அநேகமாக 3 தமிழர்கள், 2 முஸ்லிம்கள், 1 சிங்களவர்கள் வருவதட்குத்தான் சாத்தியம் அதிகம்.

ரிசார்டின் எலும்பு நக்கும் தமிழர்கள் அங்கு இன்னும் இருக்கும்வரையும் தமிழன் அங்கு நாலுக்கு மேல் வெல்ல முடியாது. அதுவும் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக இருக்கும் போது மாத்திரமே நடக்கும்.

14 hours ago, கிருபன் said:

சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பில் எவர் மீதும் நம்பிக்கையில்லை. எனவே கூட்டமைப்பு தோற்று புதிய தலைமுறையைச் சேர்ந்த, தேசியத்தை வடக்கு பருத்தித்துறையில் இருந்து, அம்பாறை திருக்கோவில், பொத்துவில், மன்னாரில் முள்ளிக்குளம், புத்தளம் உடப்பு வரை வலுப்படுத்தக்கூடியவர்கள் அரசியல் தலைமைக்கு வரவேண்டும்.

மக்கள் முன்னணி, மக்கள் கூட்டணி, கூட்டமைப்பு எல்லாம் ஒரே அணியில் நிற்கவேண்டும்.  அப்படியான வளர்ந்துவரும் தலைவர்களை எனக்கு  அடையாளம் தெரியவில்லை.

உடபில் இருந்து பொத்துவில், பணம வரைக்கும் புதிய தலைமைத்துவம் ஒன்று எதிர்பார்ப்பது நடக்கும் காரியமாக தெரியவில்லை.

இனி வரும் இலங்கை அரசு நிச்சயமாக தமிழர்களை கணக்கில் எடுக்காது. எதாவது பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் வெளிநாட்டிடம்தான் ஓட வேண்டி வரும்.இந்தியாவை நம்புவது மண் குதிரையை நம்புவதட்கு சமன்.

அதாவது சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய , தமிழர்களை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கினாலே ஒழிய எல்லாம் பூச்சியமாகவே இருக்கப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, MEERA said:

 

ஜி நான் quote பண்ணியதை கவனிக்கவில்லையா? 

இந்த விடயத்தில் சுத்துமாந்திரனின்   தெளிவான பதிலை நம்பும் தாங்கள், வாக்கு விடயத்தில் நம்பாதது ஏன்? 

வாக்கு விடையத்தில் மட்டுந்தான் உங்கள் மேல்வீடு பழுதில்லையா😜

மைத்திரி தன்னைப் பாதுகாக்க “நல்லாட்சி” அரசைக் கவிழ்த்தபோதே அரசியல் யாப்பு மாறாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை சுமந்திரனோ, சம்பந்தரோ புதிதாகச் சொல்லவில்லை. எனவே, எல்லோருக்கும் தெரிந்த உண்மையை நம்புவதில் பிரச்சினை இல்லை.😎

ஆனால் வாக்குக்கேட்டுப் போகும் அரசியல்வாதி இந்தமுறை வாக்குகள் குறையும் என்று எதிர்மறையாக சொல்லமுடியாதல்லவா! தேர்தல் முடியும்வரையாவது முழு வாக்குகளும் விழும் என்று சொல்லுதுதானே தந்திரம். அதை கொஞ்சம் சுயபுத்தி உள்ளவர்கள்கூட நம்பமுடியாதுதானே.

 

 

 

14 hours ago, கிருபன் said:

இந்த சவாலை நீங்கள் சுமந்திரனுடன்தான் வைக்கவேண்டும்.😁

என்னுடைய கணிப்பை இன்னோர் திரியில் கூட்டமைப்பு 10 ஆசனம் மட்டும்தான் எடுக்கும் என்று சொல்லியிருந்தேன். அதுவே 1/3  வாக்குகள் வீழ்ச்சி என்ற அடிப்படையில்தான்! அதற்கு மேல் சவால்விடும் அளவிற்கு எனக்கு மேல்வீடு பழுதில்லை😜

இது கணிப்பு மட்டுமே:

யாழ் - 4

வன்னி - 3

திருமலை - 0

மட்டு  - 2

திகாமடுல்ல - 0

தேசியப்பட்டியல் - 1

உங்கள் கணிப்பு 10 சரியானதுதான். ஆனால் ஒரு திருத்தும். 
வன்னி - 2 (3 அல்ல)
திருகோணமலை - 1 (மண்ணின் மைந்தன் , தலைவர் வெல்லுவார் )

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

உடபில் இருந்து பொத்துவில், பணம வரைக்கும் புதிய தலைமைத்துவம் ஒன்று எதிர்பார்ப்பது நடக்கும் காரியமாக தெரியவில்லை.

இனி வரும் இலங்கை அரசு நிச்சயமாக தமிழர்களை கணக்கில் எடுக்காது. எதாவது பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் வெளிநாட்டிடம்தான் ஓட வேண்டி வரும்.இந்தியாவை நம்புவது மண் குதிரையை நம்புவதட்கு சமன்.

அதாவது சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய , தமிழர்களை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமையை உருவாக்கினாலே ஒழிய எல்லாம் பூச்சியமாகவே இருக்கப்போகின்றது.

 

தோழர் சண்முகதாசன் பற்றிய கட்டுரையில் உள்ளது..

“ஒரு பொதுமொழி, பிராந்தியம், பொருளாதார வாழ்க்கை மற்றும் பொதுவான கலாசாரமொன்றின் அடிப்படையில் வெளிப்படுகின்ற உளவியல் பாங்கு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒரு கட்டுறுதியான மக்கள் குழுவினரே வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனமாக அமைகிறார்கள்” என்பதே ஸ்டாலினின் வரைவிலக்கணம்

-

ஒரு தேசிய இனமாக தமிழர்கள் ஒன்றிணையாவிட்டால் தற்போதுள்ள பிரிவினைகள் (பிரதேசம், சாதி, சமயம்) இன்னும் வலுக்கும். வெறும் உதிரிகளாக மாறுவோம்

Just now, கிருபன் said:

 

தோழர் சண்முகதாசன் பற்றிய கட்டுரையில் உள்ளது..

“ஒரு பொதுமொழி, பிராந்தியம், பொருளாதார வாழ்க்கை மற்றும் பொதுவான கலாசாரமொன்றின் அடிப்படையில் வெளிப்படுகின்ற உளவியல் பாங்கு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒரு கட்டுறுதியான மக்கள் குழுவினரே வரலாற்று ரீதியாக ஒரு தேசிய இனமாக அமைகிறார்கள்” என்பதே ஸ்டாலினின் வரைவிலக்கணம்

-

ஒரு தேசிய இனமாக தமிழர்கள் ஒன்றிணையாவிட்டால் தற்போதுள்ள பிரிவினைகள் (பிரதேசம், சாதி, சமயம்) இன்னும் வலுக்கும். வெறும் உதிரிகளாக மாறுவோம்

அப்படி இருந்தாலும் , இப்போது எனக்கு தோண்றுகிறதின்படி அப்படி ஒற்றுமையாக இருந்த தமிழராகிய நாங்கள் இப்போது பிரிந்து விடடோமோ என்பது போல இருக்கிறது. ஒன்று படடால் உண்டு வாழ்வு , இல்லையேல்  --------------------------------

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

மைத்திரி தன்னைப் பாதுகாக்க “நல்லாட்சி” அரசைக் கவிழ்த்தபோதே அரசியல் யாப்பு மாறாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை சுமந்திரனோ, சம்பந்தரோ புதிதாகச் சொல்லவில்லை. எனவே, எல்லோருக்கும் தெரிந்த உண்மையை நம்புவதில் பிரச்சினை இல்லை.😎

ஆனால் வாக்குக்கேட்டுப் போகும் அரசியல்வாதி இந்தமுறை வாக்குகள் குறையும் என்று எதிர்மறையாக சொல்லமுடியாதல்லவா! தேர்தல் முடியும்வரையாவது முழு வாக்குகளும் விழும் என்று சொல்லுதுதானே தந்திரம். அதை கொஞ்சம் சுயபுத்தி உள்ளவர்கள்கூட நம்பமுடியாதுதானே.

 

 

 

ஜீ சுத்துமாத்திரனையும் அவரது தினக்குரல் பேட்டியையும் நம்பினது தாங்கள், அதிலும்  ரணிலுக்கும் மைத்திரிக்கும் லடாய் வந்து ஆட்சி மாறியதால் அரசியல் யாப்பு மாற்றம் நடக்கவில்லை என்று. அந்த ஆட்சி மாற்றம் நடக்காமல் இருந்திருந்தால் புதிய யாப்பின்படி தேர்தல் நடந்திருக்கும்!

என்று எழுதிய நீங்கள் 

மைத்திரி தன்னைப் பாதுகாக்க “நல்லாட்சி” அரசைக் கவிழ்த்தபோதே அரசியல் யாப்பு மாறாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதை சுமந்திரனோ, சம்பந்தரோ புதிதாகச் சொல்லவில்லை

என்று மாறுகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:


மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ண முதல் நீங்கள் கடை பிடியுங்கள்...நான் ஒன்றும் உங்களை மாதிரி கனவு கண்டு விட்டு நடந்ததை எழுதவில்லை ... கடந்த காலத்தில் நடந்தது , நிகழ்காலத்தில் அங்கு நடந்து கொண்டு இருப்பதை தான் எழுதினேன்....

1) தனிப்பட்ட நலனுக்காய் மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துவது சும்மும் ,அவரது வால்களும் ...

2) உங்களால் முடிந்தால் வடக்கை முதலில் காப்பாற்றுங்கள் ...அதன் பிறகு கிழக்கை மீட்க வரலாம்.


3) வெளிநாட்டில் இருந்து கொண்டு காசை கொடுத்து விட்டு புலிகளை வழி நடத்தி அழித்த மாதிரி அங்கிருக்கும் மிச்ச தமிழரையும் அழிக்கும் நோக்கமாகும்.

4) எதுவாயிருந்தாலும் யார் வரோணும் என்று தீர்மானிப்பது அங்குள்ள மக்கள் ...

5) கருணா வந்தால் சந்தோசம் ...வராட்டில் எனக்கு அது பற்றி கவலையில்லை.
நீங்கள் எழுத ஒன்றும் இல்லாமல் சுப்பற்ற கொல்லைக்குள்ள நிற்பதால் இந்த திரியில் இது என் கடைசி பதில் உங்களுக்கு.


 

1) அதனை நீங்கள் கூறுமுன் சற்று நிதானித்து, ஆற அமர யோசித்துக் கூறுங்கள்.

2) கிழக்கு கைபறிந்து போய்விட்டது என்கிறீர்களா ? அதனைத்தான் நான் முதலில் இருந்தே கூறினேன். கட்டியிருந்த கோவணத்தையும் 2004ம் ஆண்டு களற்றிக் கொடுத்தபின்னர், அவர் வந்தால் காப்பாற்றலாம், இவர் வந்தால் காப்பாற்றலாம்  என்று கூறாதீர்கள். ☹️ ஏனென்றால் எல்லாம் முடிந்தாயிற்று, வடக்கு உட்பட.

3) ஏன் அக்கா, இதை எழுதும்போது யோசிக்க வேண்டாமா 

4) நிச்சயமாக. ஆனால் இவர் வந்தால் அதைக் காப்பாற்றலாம் என்பது கொஞ்சம் ஓவர்

5) வினாயகமூர்த்தியார் வென்றால் உங்களுக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர் உங்கள் சகோதரன். வராவிட்டால் கவலைப்பட ஏதுமில்லை. 

ஆக, உங்களுக்கு அங்குள்ள மக்களைப்பற்றி எந்த அக்கறையுமில்லை. அப்படியென்றால் கிழக்கு, கிழக்குத் தமிழரின் உரிமை, வடக்கன்களுக்கு அடிமையாக வாழ முடியாது என்று கூறியதெல்லாம் எதற்காக ? 

மொத்தத்தில் உங்கள் அண்ணன் வெல்ல வேண்டும். அம்புட்டுதே ☹️

அரசியல்வாதியாவதற்குரிய தகுதி எல்லாமே உங்களுக்குண்டு. 😀

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 03:40, கற்பகதரு said:

எத்தியோப்பியா எங்கள் மண்ணிலும் பார்க்க எவ்வளவோ  உயர்வான நிலையில் இருக்கிறது. 

உங்களுக்கு தெரிந்த அந்த எத்தியோப்பியாவை பற்றி சிலவற்றை எழுதுங்களேன் தெரிந்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது முடிவுகளை எடுப்பதற்கு மூளையிலுள்ள லிம்பிக் சிஸ்டம் காரணமாகிறது, அது எப்படித்தொழில்படுகிறது என்ற எனது புரிதல் 3 பகுதிகளின் கூட்டுத்தொழில்பாடே எமது முடிவுகள் முதலாவது யதார்த்தமற்ற எமது ஆசைகள், இரண்டாவது மாதிரி ஆங்கிலத்தில் டெம்பிலெட் என்பார்கள, மூன்றாவது உந்து சக்தி ஆங்கிலத்தில் ரிகர் என்பார்கள்( உதாரணத்திற்கு புலத்தில் வாழும் எம்மவர்கள் ஏற்கனவே ஒரு நல்ல வீடு வைத்திருப்பார்கள் திடீரென அந்த வீடை இடித்து அதிக செலவு செய்து காரண்மில்லாமல் புதிய வீடுகட்டி அதிக கடன் சுமைக்கு ஆளாவர்கள், இதில் பெரிய வீடு யதார்த்தமற்ற ஆசை, புதிய வீடு அவர்களுக்கு முன் மாதிர்யாக அவர்களது உறவினரோ அல்லது நண்பர்களோ அதே வேலை செய்திருப்பார்கள் அதனை மாதிரி எனலாம், மூன்றாவது உந்து சக்தி சிறிய வருமான அதிகரிப்பு அல்லது அவர்கள் சார்ந்த சமூகத்தில் உணர்வு ரீதியாக ஏதாவது பாதிப்பு.

எமது அரசியல்வாதிகள் இரண்டுவகை
1. ஆரம்பத்திலேயே அரசியல்வாதிகள்
2.போராளிகளாக இருந்து சந்தர்ப்ப சூழ்னிலையால் அரசியல்வாதிகளானவர்கள்.

கருணா இரண்டாவது வகை கழுதை டக்ளஸ் சித்தார்த்தன் போன்றவர்கள் அவருக்கு முன்மாதிரிகள், இவர்களது பாதைமாறாமலிருந்தால் இவர்கள் அரசியலுக்கு வந்திருக்கமாட்டார்கள், கழுதை கெட்டால் குட்டி சுவர் என்பார்களே அது மாதிரி.

இந்த இரண்டுவகையான அரசியல்வாதிகளினால் நன்மை உண்டா?

நிச்சய்மாக நன்மையுண்டு அனால் மக்களுக்கல்ல அந்தந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும், இதில்  எந்த அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்தால் சிறிதளவேனும் மக்களுக்கு நன்மையேற்படும் என்று நாம் சிந்திப்பதுதான் லிம்பிக் சிஸ்டத்தின் முடிவெடுத்தலின் முதாலவது பகுதி யதார்த்தமற்ற கற்பனை.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் என்வினவி (WhatsApp) இல் இட்ட பதிவு. இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன்.

-

விடுதலைப் போராளிகளை அசைக்கவே முடியாத ஆளுமைகள் என  நம்பியிருந்த மக்கள் இன்று பாராளுமன்ற அரசியலில்  ஆளுக்காளாய் எதிர் முகாம் இட்டு மோதும் பரிதாபத்துக்குரிய சூழ்நிலைக்கு வந்து நிற்கிறார்கள்.  

இன்றைய நிலையில், அரசியல் என்பது தமிழ் மக்களிடமும் இல்லை, தமிழ் புலமை நிறுவனங்களிடமும் இல்லை அல்லது புலமை சார் குழுக்களிடமும் இல்லை.

அனைத்துச் செயல்பாடுகளும் உதிரியாகவே இருக்கிறது. ஒரு கட்டமைக்கப்பட்ட வலுவான சமூக இயக்கம் இல்லை.  

சமூகமும் சமூகத்தில் உள்ள கட்டமைப்புகளும் உதிரி மன நிலையில் தான் இருக்கிறது. 

இந்த உதிரியாதலைத்தான் தமிழினத்தை ஒடுக்கும் அடக்குமுறையாளர்களும் விரும்புகிறார்கள். உதிரியாதலை ஊக்குவிக்கும் பொறிமுறைகளை நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயல்படுத்துகிறார்கள்.

புலிகளை போரிலும் அரசியல் பரிமாணங்களிலும் வீழ்த்துவதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் புரட்சி முறியடிப்பு
செயல்பாடுகள் இன்றும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த கட்டமைப்புகளுடன் இந்தியா மிக நெருக்கமாக இலங்கை அரசுடன் கை கோர்த்து நிற்கிறது.

இலங்கையின் நீண்ட மூலோபாயத்தை எதிர் கொள்ளும் திறன் தமிழ்ச் சமூகத்தில் இது வரை ஏற்படவில்லை.

கடந்த 30 வருடங்களில் ஆயுத பலம் மாத்திரம் இலங்கையின் மூலோபாயத்தை எதிர் கொண்டு நின்றது. 

இலங்கையின்  மூலோபாயம் என்பது இனிவரும் காலங்களில் இந்தியாவையும் சீனாவையும் சமதளத்தில் வைத்து வெற்றிகரமாக கையாளும் அதற்குரிய திறனும் அனுபவமும் இலங்கையிடம் உண்டு. 

இலங்கை அரசு சற்று கூடுதலாக சீனா மீது சாய்ந்தாலும் இந்தியா இலங்கை மீது அதீதமாக கோபப்பட வாய்புகள் இல்லை என்பதை, அண்மையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட எல்லைப்போரில், இந்தியா எவ்வாறு நடந்து கொண்டது என்பதும், எவ்வாறு சீனாவுடன் இணங்கிப் போனது என்பதையும் நாம் பொருத்திப் பார்த்து அறிந்து கொள்ள  வேண்டும். 

எம்மில் பலர் இலங்கை சீன உறவை வைத்து இந்தியாவை பயம் காட்டுவதன் மூலம் தமிழர்களுக்கான நன்மை கிடைக்கும் என நம்புகின்றனர். 

அதாவது இலங்கை தொடர்பான இந்திய சீன சிக்லின் மூலம் தமிழீழ பழம் நழுவி பாலில் விழும்  என்பது போன்ற ஒரு அவா  தமிழ்ச்  சமூகத்தின் பல மட்டங்களில் விரவிக் காணப்படுகிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்காவை விட்டு விலகி சீனாவுடன் இந்தியா நெருக்கமாக வேண்டும் என கோருகிறார்கள். 

எனவே பழம் நழுவி பாலில் விழும் அதில் தமிழீழமும் மலரும் அல்லது சமஸ்டியாவது மலரும் என நினைப்போர் அந்த எண்ணத்தை கைவிடுவது நல்லது.

சதுரங்க காய்களை நகர்த்தும் திறன் எம்மிடமில்லை குறைந்தபட்சம் எதிரிக்கு எதிராக சதி ஆட்டங்களையாவது நடத்தலாமே என நாம் நினைக்கலாம். 

ஆனால், இன்றைய நிலையில் போராடும் இனம் தனக்குள்ளே குழுவாத நிலையில் அரசியல் சதிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது . 

இது ஒடுக்கப்படும் இனத்தின் சாபக்கேடுதான்.  ஆனால் இது ஒடுக்கப்படும் சமூகங்களுக்குள்  புதிய விடயமல்ல.


தமிழ்ச் சமூகத்தை உதிரியாதல் நிலமையில் இருந்து மீண்டு வரும் சூழல் ஒன்றுக்கான அரசியல் வேலைத் திட்டங்களை நாம் முதல் படியாக செயல்படுத்துவதன் மூலம் அடக்கு முறையாளர்களின் தந்திரோபாயங்களை முறியடிக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2020 at 11:13, Sasi_varnam said:

உங்களுக்கு தெரிந்த அந்த எத்தியோப்பியாவை பற்றி சிலவற்றை எழுதுங்களேன் தெரிந்து கொள்வோம்.

spacer.pngஅடிஸ் அபாபாஸ் நகரம், எதியோப்பியா

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அவர்களிடம் மேம்பாலமும் அதில் செல்லும் பிரத்தியேக சிறுவகை ரெயில் வண்டியும் இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.