Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனுக்கு அமைச்சு பதவி ஆசையிருந்தால் ஐ.தே.கவில் போட்டியிடட்டும்: விக்கி விளாசல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது என சாடியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

நேற்று (28) மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக் காலமாக திரு.சுமந்திரன் அவர்களின் அறிக்கைகளும், பத்திரிகைச் செய்திகளும் எமக்கு அதிர்ச்சி தருவனவாக உள்ளன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே அவரது அறிக்கைகள் வெளிவருகின்றன. அவர் மிகவும் தெட்டத் தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணைதர வேண்டும் எனக் கேட்டதன் மூலம் தமிழ் மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் போலத் தெரிகிறது. இவற்றின் அடிப்படையில் எந்தளவுக்கு இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்தும் வகையில் இவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள மற்றையோரும் செயற்பட்டிருப்பார்கள் என்று புரிகின்றது.

பொருளாதார அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என்ற கூற்றில் முரண்பாடு இருக்கின்றது. முன்னர் இக் கூட்டமைப்பினர் தான் அவர் அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாக டக்ளசை வசைபாடினர். இப்போது டக்ளசின் மீது மதிப்பு வந்துவிட்டதா அல்லது அபிவிருத்தி மீது அபிமானம் பிறந்து விட்டதா? உண்மையிலேயே இவர்களுக்கு அபிவிருத்தி மீது அக்கறை இருந்திருக்குமாயின் வடமாகாணசபைக்கு ஒத்துழைப்பை வழங்கி முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவதற்கு உதவியிருக்க முடியும். ஆனால் எந்தவிதத்திலும் எமக்கு உதவாதது மட்டுமன்றி மறைமுகமாக எதிர்ப்புக்களையே காட்டி வந்தனர். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மை முகம் அண்மைக்காலமாக தெரியத் தொடங்கியிருக்கின்றது. தம்மை வளப்படுத்துவதற்கும், சொத்துக் குவிப்பதற்கும், மாட மாளிகை, சொகுசு கார் என அவர்கள் சிந்தனைகள் ஆகாயத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு மக்கள் மீதோ அல்லது அவர்களின் அபிலாசைகள் பற்றியோ எந்தவித கரிசனையும் இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வகை தொகையின்றி அழிக்கப்பட்ட எமது உறவுகளின் குடும்பத்தினர் பற்றி சற்றேனும் சிந்தித்திருந்தால் இவ்வாறான குறுகிய சுயஅபிவிருத்தி நோக்கங்களின் மேல் ஈடுபாடு சென்றிருக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகள் மீதோ எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் அவர்கள் தான் என்னைப் பார்த்து அஞ்சுகின்றார்கள் போலத் தெரிகின்றது. அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு பிழையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள். நடவாத நிகழ்வுகளை நடந்ததாகக் கூறுகின்றார்கள். நிதி நிர்வாகத்தில் இலங்கையிலேயே முதற்பரிசைப் பெற்ற எம்மை நிர்வாகம் தெரியாதவர்கள் என்கின்றார்கள். பொய்களை மூட்டைகட்டி வந்து தமது கூட்டங்களில் அவிழ்த்து விடுகின்றார்கள்.

நான் வாராந்தம் பத்திரிகைகளில் வழங்கி வருகின்ற கேள்வி பதில்கள் மக்களுக்கு ஒரு தெளிவூட்டலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனைக் கலைக்கும் முகமாக தேர்தலுக்கு முதல் நாள் என்மீது கூடுதல் அக்கறை கொண்ட சில பத்திரிகையாளர்கள் இணைந்து என்மீது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகின்றார்கள் என அறிந்தேன். உண்மையில் கேள்வி கேட்க விரும்புபவர்கள் அல்லது அரசியல் தெளிவை தமது பத்திரிகை வாயிலாகத் தெரியப்படுத்த விரும்புபவர்கள் அவர்களின் கேள்விகளை நான் பதிலளிக்கக்கூடிய வகையில் தேர்தலுக்கு முற்கூட்டியே தொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து தேர்தலுக்கு முன் பதில் கூற முடியாத விதமாகப் பொய்யான அடிப்படையிலான கேள்விக் கணைகளைத் தொடுக்க இருப்பது கோழைத்தனத்தையும் அவர்களின் பயத்தையுமே பிரதிபலிக்கின்றன.

நான் போலி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசியற் தீர்வு பெற்றுத் தருவேன், அரச வேலை பெற்றுத் தருவேன் என்று ஏமாற்றுபவன் அல்ல. ஆனால் எமது நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஏற்கனவே புத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்து இம் மாற்றத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். தற்போது தனியாகப் பிரிந்து நிற்கின்ற அல்லது சுயேட்சையாக களமிறங்கியிருக்கின்ற கட்சிகளில் இருந்து பலர் கொள்கை அடிப்படையில் எம்முடன் வந்து இணைந்துகொள்ள வாய்ப்பிருக்கின்றது. சிறுசிறு பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் பிரிந்த சக அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் எம்முடன் வந்து விரைவில் இணைந்து கொள்வார்கள். இனப் பிரச்சனைக்கான தீர்வு வெறுமனே எமது அரசுடன் பேசுவதால் மட்டும் கிடைத்துவிடும் என நாம் நம்பவில்லை. மாறாக சர்வதேசத்துடன் பேசுவதன் மூலம் அவர்களிற்கு ஒரு அரசியல் தெளிவை ஏற்படுத்தி அதன் மூலமாக வெற்றி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றோம். பல வெளிநாட்டுத் தூதுவர்களுடன் ஏற்கனவே எமது தொடர்புகளை தொடங்கியுள்ளேன்.

இம்முறை தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. எனினும் நீங்கள் அனைவரும் மாலை நேரம் வரை காத்திராமல் விடியற்காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று உங்கள் வாக்குகளை மீன் சின்னத்திற்கும் எமது வேட்பாளர்கள் மூன்று பேருக்கும் செலுத்திவிட்டு அதன் பின்னர் பிற வேலைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எமது தாமதங்கள் சில வேளைகளில் எங்கள் வாக்குகளையே இழக்க வேண்டிய கட்டத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். அத்துடன் இந்த முறை வாக்கு எண்ணும் பணிகள் மறுநாள் காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் இடை நேரத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் செலுத்தப்பட்ட வாக்குகள் என்பவற்றின் பாதுகாப்பை எமது வாக்களிப்பு முகவர்கள் மற்றும் வாக்கெண்ணும் முகவர்கள் மிகக் கவனமாக உற்று நோக்கி ஏதாவது தவறுகள் காணப்பட்டால் அது பற்றி உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

https://www.pagetamil.com/137223/

அவர்கள் உங்கள் கட்சியில் கேட்கவில்லைதானே ஐயா? அப்போ எதுக்கு நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சில வேளைகளில் உங்களுடைய மாணாக்கர் வென்று நீங்கள் தோல்வியடைவீர்கள்  என்று பயமா? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ஐயா. நாங்கள் எல்லாம் அந்தளவுக்கு மடயர்களா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Robinson cruso said:

அவர்கள் உங்கள் கட்சியில் கேட்கவில்லைதானே ஐயா? அப்போ எதுக்கு நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சில வேளைகளில் உங்களுடைய மாணாக்கர் வென்று நீங்கள் தோல்வியடைவீர்கள்  என்று பயமா? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ஐயா. நாங்கள் எல்லாம் அந்தளவுக்கு மடயர்களா? 

சுமத்திரன் சம்பந்தரையும்  விளக்கமில்லாதவர் என்கிறார் மாவையரையும்  தன்னை கேட்டபின் ஊடகங்களில் தன்னைப்பற்றி சொல்லியிருக்கலாம் என்கிறார் இப்படியானவர் மக்கள் செல்வாக்கு உள்ளது என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்பவர் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறி தனியாக வாக்கு கேட்டால் அது திறமை அது சுமத்திரனுக்கு இருக்கா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாக்கு கொடுத்தாலே இவரை சிங்களம் திரும்பிப் பார்க்கும் இல்லை என்றால் இவரை எவன் தேடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

சுமந்திரனுக்கு அமைச்சு பதவி ஆசையிருந்தால் ஐ.தே.கவில் போட்டியிடட்டும்: விக்கி விளாசல்!

தானும் படான், தள்ளியும் படான்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

சுமந்திரனுக்கு அமைச்ச பதவி ஆசையிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது டெலிபோன் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று அமைச்சுப் பதவி பெறுவதில் எமக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை.

அப்பிடி ஒரு சந்தர்ப்பம் இருந்திருந்தால் விட்டிருப்பாரா கொம்பன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

அவர்கள் உங்கள் கட்சியில் கேட்கவில்லைதானே ஐயா? அப்போ எதுக்கு நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சில வேளைகளில் உங்களுடைய மாணாக்கர் வென்று நீங்கள் தோல்வியடைவீர்கள்  என்று பயமா? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ஐயா. நாங்கள் எல்லாம் அந்தளவுக்கு மடயர்களா? 

அவர்கள் தமிழர் வாக்குகளை தான் கேட்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்கள் போல.

தமிழர் வாக்கு இல்லாமல் சர்வதேசத்திடம் போய் யுத்த விசாரணையை முடக்க முடியாது என்ற அறிவாவவது இருக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

அவர்கள் உங்கள் கட்சியில் கேட்கவில்லைதானே ஐயா? அப்போ எதுக்கு நீங்கள் கவலைப்படுகிறீர்கள். சில வேளைகளில் உங்களுடைய மாணாக்கர் வென்று நீங்கள் தோல்வியடைவீர்கள்  என்று பயமா? அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது ஐயா. நாங்கள் எல்லாம் அந்தளவுக்கு மடயர்களா? 

ஐயா றொபின்சன், 

தட்டுத் தவறி நீங்கள் எதிர்வு கூறுவது நடக்காவிட்டால் நீங்கள் மடையர்கள் என்றாகிவிடும். எதற்கு இப்படி Risk எடுப்பான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஐயா றொபின்சன், 

தட்டுத் தவறி நீங்கள் எதிர்வு கூறுவது நடக்காவிட்டால் நீங்கள் மடையர்கள் என்றாகிவிடும். எதற்கு இப்படி Risk எடுப்பான் 😀

கடந்த காலங்களைப்போல் சுழியோடி சுழிச்சுப்போடுவோம் என்கிற நம்பிக்கையிற்தான்.

9 hours ago, Kapithan said:

ஐயா றொபின்சன், 

தட்டுத் தவறி நீங்கள் எதிர்வு கூறுவது நடக்காவிட்டால் நீங்கள் மடையர்கள் என்றாகிவிடும். எதற்கு இப்படி Risk எடுப்பான் 😀

விக்கியர்  படுதோலவி சுமத்திரன் வெல்வார் அறிவை மிஞ்ச யாராலும் முடியாது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, kumara23 said:

விக்கியர்  படுதோலவி சுமத்திரன் வெல்வார் அறிவை மிஞ்ச யாராலும் முடியாது 

எங்கிருந்து இதெல்லாம் வருது ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kumara23 said:

விக்கியர்  படுதோலவி சுமத்திரன் வெல்வார் அறிவை மிஞ்ச யாராலும் முடியாது 

எனக்கு புரியவில்லை 🤔

வாக்காளர் புத்திசாலிகள் என்கிறீரா அல்லது சுமந்திரன் குருவை விஞ்சிய சீடன் என்கிறீரா 😂😂

1 hour ago, பெருமாள் said:

எங்கிருந்து இதெல்லாம் வருது ?

இதென்ன பெருமாள்,

கனவு எல்லாம் நனவாகும் என்பதில்லை. ஆனால் கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளதுதானே. அதை ஏன் குழப்புகிறீர்கள் 😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எனக்கு புரியவில்லை 🤔

வாக்காளர் புத்திசாலிகள் என்கிறீரா அல்லது சுமந்திரன் குருவை விஞ்சிய சீடன் என்கிறீரா 😂😂

இதென்ன பெருமாள்,

கனவு எல்லாம் நனவாகும் என்பதில்லை. ஆனால் கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளதுதானே. அதை ஏன் குழப்புகிறீர்கள் 😂😂😂

அதானே ஏன் குழப்புவான் தேர்தல் முடிந்ததும் அரசியலை நிறுத்துவம் என்று இருந்தன். ஆனால் முடியாது போலுள்ளது .

18 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் சம்பந்தரையும்  விளக்கமில்லாதவர் என்கிறார் மாவையரையும்  தன்னை கேட்டபின் ஊடகங்களில் தன்னைப்பற்றி சொல்லியிருக்கலாம் என்கிறார் இப்படியானவர் மக்கள் செல்வாக்கு உள்ளது என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்பவர் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறி தனியாக வாக்கு கேட்டால் அது திறமை அது சுமத்திரனுக்கு இருக்கா ?

அது வேறு விடயம். விக்கியின் கட்சியில் கேட்க்காத ஒருவரிடம் அமைச்சுப்பதவி பற்றி கேட்க அவருக்கு உரிமை இல்லை. தேர்தல் முடிந்தவுடன்தான் விக்கி யாரென்று தெரியவரும்.

17 hours ago, zuma said:

தானும் படான், தள்ளியும் படான்.

சரியாக சொன்னீர்கள். திருந்தாத ஜென்மம்.

16 hours ago, nunavilan said:

அவர்கள் தமிழர் வாக்குகளை தான் கேட்கிறார்கள் என்பதை மறந்து விட்டீர்கள் போல.

அப்படி என்றால் டக்கு, வியயகலா, அங்கஜன் , சந்திரகுமார் எல்லோரும் சிங்களவர்களிடமா வாக்கு கெடுக்கிறார்கள்?

16 hours ago, பெருமாள் said:

தமிழர் வாக்கு இல்லாமல் சர்வதேசத்திடம் போய் யுத்த விசாரணையை முடக்க முடியாது என்ற அறிவாவவது இருக்கா ?

அப்படி என்றால் சுமந்திரன் மட்டும்தான் தமிழர்களின் வாக்குகளை பெற்று வென்றிருக்கிறார், மற்ற எல்லாரும் சிங்கள , சோனியின் வாக்குகளை பெற்று வென்றிருக்கிறார். தமிழர்களின் வாக்குகளை பெற்று வென்ற மத்த எல்லோரும் என்ன புண்ணாக்க தின்கிறார்கள்? உங்கட அறிவோ அறிவு. பேருக்கேற்ற அறிவு.

13 hours ago, Kapithan said:

ஐயா றொபின்சன், 

தட்டுத் தவறி நீங்கள் எதிர்வு கூறுவது நடக்காவிட்டால் நீங்கள் மடையர்கள் என்றாகிவிடும். எதற்கு இப்படி Risk எடுப்பான் 😀

தமிழண்ட வழக்கையே ரிஸ்க் தானே. 

4 hours ago, kumara23 said:

விக்கியர்  படுதோலவி சுமத்திரன் வெல்வார் அறிவை மிஞ்ச யாராலும் முடியாது 

எனக்கு அது புரியுது. இங்கு சிலருக்கு உண்மையை எழுதினால் பிடிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

அது வேறு விடயம். விக்கியின் கட்சியில் கேட்க்காத ஒருவரிடம் அமைச்சுப்பதவி பற்றி கேட்க அவருக்கு உரிமை இல்லை. தேர்தல் முடிந்தவுடன்தான் விக்கி யாரென்று தெரியவரும்.

சரியாக சொன்னீர்கள். திருந்தாத ஜென்மம்.

அப்படி என்றால் டக்கு, வியயகலா, அங்கஜன் , சந்திரகுமார் எல்லோரும் சிங்களவர்களிடமா வாக்கு கெடுக்கிறார்கள்?

மக்களை முட்டாள்கள் என்றும் சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் விக்கியர் சொல்வது இவர்களையோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பொது ஜன பெரமுனவுடன் கூட்டமைப்புக்கு இரகசிய உடன்படிக்கை ; குற்றஞ்சாட்டும் விக்கினேஸ்வரன்

July 31, 2020

cv-300x181.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாகக் காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பைப் பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றிக் கூட்டமைப்பும் மாறிமாறி கருத்து தெரிவிப்பது, இரகசிய உடன்படிக்கையின் கீழேயே எனத்தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு;

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் சிலர் அண்மைக்காலமாக காட்டமான கருத்து தெரிவித்து வருவது ஒரு நாடகம். கூட்டமைப்பை பற்றி பெரமுனவும், பெரமுனவை பற்றி கூட்டமைப்பும் மாறிமாறி கருத்து தெரிவிப்பது, இரகசிய உடன்படிக்கையின் கீழேயே.

இப்படி பேசினால் தெற்கில் அவர்கள் வாக்கு பெறலாம். அதேவேளை, வடக்கில் அவர்கள் விரும்பும் கூட்டமைப்பினர் வெற்றியடையலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறவேண்டுமென ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு காரணமுள்ளது. எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசு சர்வதேச பொறியில் சிக்குவதற்காக வாய்ப்புள்ளது. நல்லாட்சி அரசு சர்வதேசப் பொறியிலிருந்து தப்பிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவியதைப்போல, எதிர்காலத்தின் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது கட்சியினரும் பெற்றுக்கொள்ள விரும்புவதைப் போலதெரிகின்றது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், பயணத் தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசு எப்படி இலங்கையைப் பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

http://thinakkural.lk/article/59098

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சர்வதேசப் பொறியிலிருந்து தப்பிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவியதைப்போல, எதிர்காலத்தின் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது கட்சியினரும் பெற்றுக்கொள்ள விரும்புவதைப் போலதெரிகின்றது.

இன்று இலங்கையில் தமிழர்கள் வேலியற்ற பயிர்களாக உள்ளனர். வேலிபோட முயலும் விக்கினேசுவரன் போன்றவர்களை ஓரம்கட்டிவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் சிங்களம் தங்குதடையின்றி தொடர்ந்தும் தமிழர்களை மேய்வதற்கு தடைகள் ஏற்படாது.🧐  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.