Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா?

August 14, 2020

Mani-vannan-Curry-Leaves.jpg

இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இதனை உறுதிப்படுத்தவில்லை)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் அண்மையக் காலமாக, சட்டத்தரணி வி. மணிவண்ணனை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தனது நடவடிக்கைகளில் இருந்து புறந் தள்ளியதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மணிவண்ணனுக்காக பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டதாகவும், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்ட குழு குறுக்கீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் 2020 பொதுத் தேர்தலில் அதிகரித்தமையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது என்பதும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.

இத்தகைய சூழலில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். எனினும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.

மாறாக தன் எதிர்காலம் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணனின், கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமையால் அறிவிக்கப்படவில்லை எனவும், கட்சியினதும், தலமையினதும் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://globaltamilnews.net/2020/148700/

கட்சிக்கு ரெண்டு உறுப்பினர்கள் கிடைத்து ரெண்டு நாட்கள் ஆகவில்லை , அதுக்குள்ளே அடுப்பிடியா? பதவி ஆசை யாரைத்தான் விட்டுது. ஞான சாரார் பரவாயில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அற்பனுக்கு பவுசு வந்தால் கதைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணன் நீக்கம்; மத்திய குழு அதிரடித் தீர்மானம்

August 14, 2020

manivannan-300x200.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக யாழ்ப்பாணச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மணிவண்ணண் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டார் என்று கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் நேற்று அவசரமாகக்கூடி கட்சியின் மத்திய குழு மணிவண்ணனை நீக்குவதென முடிவெடுத்துள்ளது.

http://thinakkural.lk/article/62424

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவரின் தொழில் சம்பந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருல்லாம். ஏலவே அவர் மீது அவரின் தொழிலை தொடர முடியாத படிக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அரசியல் காரணங்களை.. பதவி நிலைகளைக் காட்டி. 

எதுஎப்படி சமீபத்திய தேர்தல் வெற்றியோடு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது மகிந்த கோத்தா கும்பலின் கொடூரப் பார்வை விழுந்துள்ள நிலையில்.. கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்த மகிந்த கும்பல் தங்கள் கூலிகளை பாவிக்கக் கூடும். அவதானம் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பிரச்சனை நெடுக்ஸ். தமிழர்கள் தங்களுக்குள்ளே பிரச்சனை என்றாலும் அதுக்கு சிங்களவன் தான் காரணம் என்று விம்பத்தை உருவாக்குவதும், அதை நியாயப்படுத்துவதும் தான் பிரச்சனை.

முதல்ல பிரச்சனையின் அடிப்படை தெரியும் வரை யார் மீதும் குற்றம் சாட்டாத பொறுமை வேணும்.

பின்னர் உண்மையான பிரச்சனைக்கான காரணத்தை அறிஞ்சு பக்கசார்பற்ற விமர்சனம் செய்யவேணும்.

இந்த கட்சியில் இளைஞர் செல்வாக்கு மிக்க நம்பிக்கையான ஒருவர் மணிவண்ணன். கீழ் மட்டம் வரை இறங்கி வேலை செய்தவர். 

கடந்தகாலங்களில் இயக்கங்கள் விட்ட தவறை மீண்டும் அதே பாணியில் செய்கிறார்கள். 

என்ன சுடுவதற்கு பதிலாக வெளியேற்றுகிறார்கள்.😝

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் அவர்கள் கடந்தகாலங்களிலிருந்தே கஜெந்திரனுடன் சேர்ந்தே அரசியல் செய்திருந்தாலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் விக்கியர் இருக்கும்போதே அவரது அனுதாபியாகவே கணிக்கப்பட்டவர் தவிர அவர் தமிழர் பேரவையுடனேயே இணைந்து அரசியல் செய்ய விருப்பமாக இருந்தார் காரணம் விக்கியரும் அவருக்கு தனது ஆசானெனும் ஒரு பணிவாகும்.

எனினும் தற்போதைய சூழலில் காண்டீபனே அவரை மீண்டும் முண்ணணிக்கு இழுத்து வந்திருந்தார் தேர்தல் வேளையில் பரப்புரையில் முதலாவது விருப்பு வாக்காக கஜேந்திரகுமாருக்கும் இரண்டாவதாக செல் கஜேந்திரனுக்கும் அதன் பின்பு நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களிக்கக் கேட்பது அனைவரும் கூடித் தீர்மானம் எடுக்கபட்டது.

ஆனால் மணிவண்ணன் இடைநடுவிலிருந்து தனித்தே இயங்க ஆரம்பித்துவிட்டார் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்துப் பரப்புரையும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் தேர்தல் செலவும் அவர் சார்பில் மிகவும் அதிகமாக இருந்தது.

செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவர்  காலக்கிரமத்தில் விக்கியருடன் சாய்துவிடுவாரோ எனும் குழப்பமும் இருந்தது.

காரணம் விக்கியர் இப்போது சிரேஸ் பிரேமச்சந்திரனுடன் இந்தியாவின் நிகழ்சி நிரலுக்குள் இழுக்கப்பட்டுவிட்டார்

கூடிய விரைவில் டெல்கியில் கடந்தகாலத்தில் அதாவது எண்பதுகளில் இயக்கத்திலிருந்த கிட்டருடன் திரிந்த ரகீம் சுக்ளா மேலும் குண்டப்பா எனும் ரகுவப்பா ஆகியோருடன்பரந்தன் ராஜன் உட்பட்ட புதிதாக இன்னமும் புலம்பெயர்தேசங்களில் வாழும் கடந்தகால இயக்ககாரர்களையும் காசி ஆனந்தன் போன்றோரையும் விக்கியரையும் இணைத்து ஒரு மாநாடு ஒழுங்கு செய்யப்படுகிறது. இதை அமெரிக்காவில் வாழும் நாரயணதாஸ் என்பவர் ஒழுங்குபடுத்துவதாகக் காட்டபட்டாலும் முற்றிலுமாக இந்தியாவின் உளவுத்துறையே இதைச் செய்கிறது. தவிர பா ஜ கவின் வானதி சீனிவாசனே அரசியல்வாதிகளில் முன் நிற்கிறார். இலங்கைத் தமிழ விடையத்தில் இந்தியாவுடன் நாங்கள் எதப்பற்றி யாருடனும் பேசவேண்டுமாகவிருந்தால் முதலில் வானதி சீனிவாசனையே தொடர்புகொள்ளவேண்டும் எனும் அளவுக்கு இவ்விடையத்தில் பலமான ஒருத்தராக இருக்கிறார்.

டயஸ்பொறா எனும் பெயரில் சில அல்லக்கைகளைக் இனம்காட்டி இவர்கள்தான் புலம்பெயர் தமிழர்களது பிரதிநிதிகள் விக்கியர்தலைமையே உள்ளூர் என அறிமுகப்படுத்தி பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு மேலே போகாது ஒரு தீர்வை முன்வைப்பதும் அதன்மூல சீனாவினது ஆக்கிரமிப்புக்கு ஆப்படிப்பதற்கான முYஅர்சியாகவே இதைப்பார்க்கப்படுகிறது.

சிலவேளை மணிவண்ணன் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் காலக்கிரமத்தில் விக்கியருடன் இணைந்து இந்தியாவுடன் சங்கமமாகியிருப்பார் அப்படி நடந்தால் இப்போதுள்ள சிறிய சலசலப்பு முகப்பெரும் வெடிப்பாக மாறியிருக்கும் 

சில நாளுக்கு முன்பே மணிவண்ணன் புத்தம் புதிய வாகனம் ஒன்றைக் கொள்வனவுசெய்திருந்தார் அதன் பெறுமது ஒன்றஎஐக்கோடிக்கு மேல் எனக்கூறப்படுகிறது.

இப்படிப் பல சிக்கல்கள் அங்கு இருக்கின்றன. மணிவண்ணனகு பிரிவு எதிர்பார்த்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Elugnajiru said:

பதவியேற்க முன்னமே பட்டம் கொடுத்தாயிற்று 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக எல்லோரும் தமிழ்நாடு மாதிரி கட்சி அரசியல்தான் செய்கின்றார்கள். ஒற்றுமையாக தேசியம் வளர்க்க வெளிக்கிட்டவர்கள் சுயநல கட்சி அரசியலுக்கு அப்பால் போகமுடியாமல் இருக்கின்றார்கள். இந்த இலட்சணத்தில் வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை எல்லாம் கட்சி வளரும் என்று நினைப்பு வேறு!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முதல்வன் said:

இது தான் பிரச்சனை நெடுக்ஸ். தமிழர்கள் தங்களுக்குள்ளே பிரச்சனை என்றாலும் அதுக்கு சிங்களவன் தான் காரணம் என்று விம்பத்தை உருவாக்குவதும், அதை நியாயப்படுத்துவதும் தான் பிரச்சனை.

முதல்ல பிரச்சனையின் அடிப்படை தெரியும் வரை யார் மீதும் குற்றம் சாட்டாத பொறுமை வேணும்.

பின்னர் உண்மையான பிரச்சனைக்கான காரணத்தை அறிஞ்சு பக்கசார்பற்ற விமர்சனம் செய்யவேணும்.

இந்த கட்சியில் இளைஞர் செல்வாக்கு மிக்க நம்பிக்கையான ஒருவர் மணிவண்ணன். கீழ் மட்டம் வரை இறங்கி வேலை செய்தவர். 

கடந்தகாலங்களில் இயக்கங்கள் விட்ட தவறை மீண்டும் அதே பாணியில் செய்கிறார்கள். 

என்ன சுடுவதற்கு பதிலாக வெளியேற்றுகிறார்கள்.😝

தலைப்பே கேள்விக்குறியோடு இருக்குது. மேலும்.. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக செய்தியில் இல்லை. அவர் கட்சியில்.. வகித்த இரண்டு பதவிகளில் இருந்து நீக்கம் என்றே செய்து சொல்கிறது. அதுவும் இன்னும் கட்சியில் இருந்து சொல்லப்படவில்லை. 

ஏலவே மணிவண்ணன் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடுத்த வழக்கு அவரின் பிரதான பணிக்கு தடை விதித்துள்ள நிலையில்.. 

இந்தச் செய்திகள்.. வேண்டும் என்றே மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணும் வகைக்கு தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கலாம். இதற்கான சாத்தியமும் உண்டு.

நீங்கள் இயக்கங்கள் அடிபட்டத்தை சொல்லிட்டே இருக்கிறீர்கள். அடிபட தூண்டிவனை சொல்லுவதும் இல்லை கண்டிப்பதும் இல்லை தண்டித்ததும் இல்லை. ஏனெனில்.. அவன் உங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கிறான். அவனை ஒன்னும் பண்ண முடியாது.. என்பதால். 

உங்களுக்கும் நடுவீட்டில் குழிபறிப்பதில்.. தான் ஒரு கிளுகிளுப்பு. அடுத்தவன்... எதிரி.. அதனை தனக்கு சாதமாக்கிக் கொள்கிறானே என்ற கவலை கிஞ்சிதமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

ஆக எல்லோரும் தமிழ்நாடு மாதிரி கட்சி அரசியல்தான் செய்கின்றார்கள். ஒற்றுமையாக தேசியம் வளர்க்க வெளிக்கிட்டவர்கள் சுயநல கட்சி அரசியலுக்கு அப்பால் போகமுடியாமல் இருக்கின்றார்கள். இந்த இலட்சணத்தில் வன்னி, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை எல்லாம் கட்சி வளரும் என்று நினைப்பு வேறு!

அங்கால சும்மை பதவியில் இருந்து நீக்கு என்றீங்கள்.. அவர் போகமாட்டன் என்கிறார்.. இங்கால.. ஏதோ ஒரு செய்தியை வைச்சு.. நம்பத்தகுத்தது போல்.. இவரை நீக்கிட்டார்கள்.. இதெல்லாம் ஒரு கட்சியா என்கிறீர்கள்.

கட்சிகளுக்குள் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் வைப்பது அதுவும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு செய்தியின் நம்பகத்தன்மையைக் கூட உறுதி செய்தி கொள்ள முடியாத நிலையில்.. இப்படி வெறுப்பைக் கக்குவது எவ்வளவு கேவமாக இருக்குது. ஏன் இப்படி அவசரக் குடுக்கை தனம். 

நேரடியாக சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைப் பீடத்தை அணுகி விபரம் கேட்கலாம்.. அல்லது மணிவண்ணனையே விபரம் கேட்கலாமே.

தினக்குரல் செய்தி கூட.. யாப்பாணத்தில் இருந்து ஓர் செய்தி என்று தான் போட்டிருக்குது. அந்த ஓர் செய்தியை வழங்கியது யார்.. மகிந்த - டக்கிளஸ் கும்பலா. அல்லது சம் சும் கும்பலா.. அல்லது அங்கஜன் கும்பலா.. இல்ல இராணுவப் புலனாய்வுப் பிரிவா...????! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

நேரடியாக சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைப் பீடத்தை அணுகி விபரம் கேட்கலாம்.. அல்லது மணிவண்ணனையே விபரம் கேட்கலாமே.

தினக்குரல் செய்தி கூட.. யாப்பாணத்தில் இருந்து ஓர் செய்தி என்று தான் போட்டிருக்குது. அந்த ஓர் செய்தியை வழங்கியது யார்.. மகிந்த - டக்கிளஸ் கும்பலா. அல்லது சம் சும் கும்பலா.. அல்லது அங்கஜன் கும்பலா.. இல்ல இராணுவப் புலனாய்வுப் பிரிவா...????! 

முன்னணியோடு நேரடியாக தொடர்பில் இருக்கும் அண்ணல் எழுஞாயிறு இவ்வளவு நீண்ட விளக்கம் தந்த பின்னர் இருந்த சின்ன சந்தேகமும் போய்விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

முன்னணியோடு நேரடியாக தொடர்பில் இருக்கும் அண்ணல் எழுஞாயிறு இவ்வளவு நீண்ட விளக்கம் தந்த பின்னர் இருந்த சின்ன சந்தேகமும் போய்விட்டது!

எதுக்கு அவசரப்படுவான். உண்மை வெளிவரத்தானே போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

ஏலவே மணிவண்ணன் மீது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடுத்த வழக்கு அவரின் பிரதான பணிக்கு தடை விதித்துள்ள நிலையில்.. 

நீங்கள் மணிவண்ணனையும், குமரவடிவேல் குருபரனையும் குழப்பியுள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக நாட்டிலை இது எல்லாம் சகஜம். ஆனால் சில பேர் TNA நடந்தால் விசில்லாடிச்சான் 
குஞ்சுகளாகவும், தற்போழுது தத்துவார்த்த விளக்கம் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
தனக்கு வந்தால் இரத்தம்  பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னி.

9 hours ago, nedukkalapoovan said:

அவரின் தொழில் சம்பந்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருல்லாம். ஏலவே அவர் மீது அவரின் தொழிலை தொடர முடியாத படிக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அரசியல் காரணங்களை.. பதவி நிலைகளைக் காட்டி. 

எதுஎப்படி சமீபத்திய தேர்தல் வெற்றியோடு.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது மகிந்த கோத்தா கும்பலின் கொடூரப் பார்வை விழுந்துள்ள நிலையில்.. கட்சிக்குள் சிக்கல்களை ஏற்படுத்த மகிந்த கும்பல் தங்கள் கூலிகளை பாவிக்கக் கூடும். அவதானம் அவசியம். 

இப்படியே சொல்லி சொல்லி உங்களையும் ஏமாத்தி, அப்பாவி மக்களையும் முடியுமென்றால் ஏமாற்ற பாருங்கள்.

ஒரு வேளை மணிவண்ணன் தற்போதைய யதாத்த அரசியலைப்  பேசியுருக்கலாம். அது சவப்பெட்டி கஜனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி! பதவி பறிப்பு.?

mun.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்த பின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2020/08/15/15607/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)
 
http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

நீங்கள் மணிவண்ணனையும், குமரவடிவேல் குருபரனையும் குழப்பியுள்ளீர்கள்

குமரவடிவேல் குருபரனிற்கு எதிரான யு ஜி சி யின் வழக்கில்.. மணிவண்ணன் ஆஜரான செய்தியின் அடிப்படையில் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன். 

மேலும்.. சுமந்திரனின் தான்றோன்றித்தனம் கட்சிக்குள் மட்டுப்பட்டிருந்தால்.. அது கட்சி விவகாரம். ஆனால்.. அவர் விசர் நாய் மாதிரி தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை.. உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்.. விடும் அறிக்கைகள்.. பேட்டிகள்.. இன்று தமிழ் மக்களை மேலும் மேலும் அரசியல் நிர்க்கதிக்குள் தள்ளி உள்ளதே தவிர.. தமிழ் மக்களின் அரசியலை இலங்கைத் தீவில் பலப்படுத்தவோ.. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு.. அநீதிகளுக்கு.. காணி பறிப்புக்கு.. நில ஆக்கிரமிப்புக்கு.. சிங்கள இராணுவ மயமாக்கலுக்கு.. நீதியையோ.. நியாயத்தையோ..பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

1 hour ago, tulpen said:

ஒரு வேளை மணிவண்ணன் தற்போதைய யதாத்த அரசியலைப்  பேசியுருக்கலாம். அது சவப்பெட்டி கஜனுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.   

அது யாரப்பா சவப்பெட்டி கஜன். கேட்கவே பயமா இருக்குது.😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது – வி.மணிவண்ணன்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எனக்கு எதிராக சதித் திட்டம் செய்யப்பட்டது. அதுதொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரிவல் எடுத்துக் கூறியிருந்தேன்.இந்த நிலையிலேயே என்னை கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கட்சியின் மத்திய குழு எடுத்துள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதுதொடர்பில் கட்சியின் தலைமையினால் எனக்கு எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தலைமையுடன் பேச்சு நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன் என நேற்று இரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நடந்து-முடிந்த-பொதுத்-தே/

காத்திரமான பதில். கட்சி முரண்பாடுகளை கட்சிக்குள் பேசி தீர்த்துக்குக் கொள்ளும் பக்குவமே உண்மையான சனநாயகமும்.. மக்களின் நலன் காப்புமாகும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமைகள் இதனைப் புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சிலர் தாந்தோன்றித்தனமாக நடந்து தங்களின் அரைகுறை விளக்கங்களோடு தங்களின் தேவைக்கு அடுத்தவர்களை குறை சொல்லி கட்சியை விட்டு நீக்கல் செய்வது எல்லாமே நடந்ததன் விளைவு.. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்.. உரிமைப் போராட்டம் திக்குத் திசை இன்றி திணறி நிற்கிறது.

இதில்.. ஒட்டுக்குழுக்களும்.. சிங்கள இனப்படுகொலையாளர்களுமே நன்மை பெறுகிறார்கள். இந்த நிலை நீடிக்கக் கூடாது. 

Just now, nedukkalapoovan said:

குமரவடிவேல் குருபரனிற்கு எதிரான யு ஜி சி யின் வழக்கில்.. மணிவண்ணன் ஆஜரான செய்தியின் அடிப்படையில் இந்தக் குழப்பம் என்று நினைக்கிறேன். 

மேலும்.. சுமந்திரனின் தான்றோன்றித்தனம் கட்சிக்குள் மட்டுப்பட்டிருந்தால்.. அது கட்சி விவகாரம். ஆனால்.. அவர் விசர் நாய் மாதிரி தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை.. உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்.. விடும் அறிக்கைகள்.. பேட்டிகள்.. இன்று தமிழ் மக்களை மேலும் மேலும் அரசியல் நிர்க்கதிக்குள் தள்ளி உள்ளதே தவிர.. தமிழ் மக்களின் அரசியலை இலங்கைத் தீவில் பலப்படுத்தவோ.. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு.. அநீதிகளுக்கு.. காணி பறிப்புக்கு.. நில ஆக்கிரமிப்புக்கு.. சிங்கள இராணுவ மயமாக்கலுக்கு.. நீதியையோ.. நியாயத்தையோ..பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது.

ஐயோ பாவம். இதைத்தான் அவல் என்று நினைத்து உரலை இடிப்பதோ? தமிழ் தேசியம் எல்லாம் குழம்பிப்போய் இருக்குதுபோல. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

ஐயோ பாவம். இதைத்தான் அவல் என்று நினைத்து உரலை இடிப்பதோ? தமிழ் தேசியம் எல்லாம் குழம்பிப்போய் இருக்குதுபோல. 

குறித்த செய்திக் குறிப்பை.. மீள கண்டறிந்து மீளாய்வு செய்து கருத்தெழுத நேரமின்மை காரணமாக ஏற்பட்ட கருத்துத் தவறு. அது திருப்படுதல் தவறன்று. திருத்தப்படுதல்.. கருத்தியல் பண்பாகும். கருத்தியல் பண்பற்றவர்களுக்கு அவல்.. வடை.. வாய்ப்பனாகவே தெரியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.