Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு தேரர்கள் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இந்தச் செயலணிக்கு அஸ்கிரி பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாகசபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காண்பது, அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதன் மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தை நிர்வகிப்பதற்கான பொருத்தமான திட்டத்தை கண்டறிந்து செயற்படுத்தும் நடவடிக்கையில் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களின் கலாச்சார மதிப்பைப் பாதுகாப்பதற்கும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவிப்பதற்கும், அத்தகைய மரபுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்கும் இந்த பணிக்குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2020/08/4_25.html?m=1

☝️ வியாழேந்திரன், பிள்ளையான் வாங்கி தருவதாக சொன்ன அபிவிருத்தி -பாகம் 1🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, goshan_che said:

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

13 minutes ago, goshan_che said:

வியாழேந்திரன், பிள்ளையான் வாங்கி தருவதாக சொன்ன அபிவிருத்தி -பாகம் 1🤣

தமிழர்கள் என்றும்  எதற்கும் ஆதரவு வழங்க வேண்டும். சிங்கள அரசு எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

தமிழர் தாயகத்திலிருக்கும் புராதன கல்வெட்டுக்கள், தொல்பொருட்கள் தமிழருக்குச் சொந்தமானவை. தமிழரின் கலாசாரத்துடனும் வரலாற்றுடனும் பின்னிப்பிணைந்தவை. ஆகவே இவற்றினைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தமிழர்களே பொறுப்பாக அமர்த்தப்படவேண்டும். ஆனால், அதைச் செய்வதை விடுத்து, இலங்கையில் தமிழரின் சரித்திரத்தினையும், அவர்களின் கலாசாரத் தொன்மையினையும் அழிப்பதையே தமது நோக்காகக் கொண்டிருக்கும் பெளத்த சிங்களவர்களை, அதிலும் இனவாத விஷம் கக்கும் மல்வத்து அஸ்கிரிய பீடங்களின் பெளத்த துறவிகளை தமிழர்களின் சரித்திரச் சின்னங்களுக்குப் பொறுப்பாக நியமிப்பதென்பது ஒன்றில் அவற்றை சிங்களச் சின்னங்களாக உரிமைகோரவோ அல்லது முற்றாக அழித்துவிடவோ ஏதுவாக அமையப்போகிறது. அண்மையில்க் கூட சித்தாண்டி முருகன் ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் கல் உட்பட பல கற்சின்னங்களும் 2010 இல் வவுனியாவில் செதுக்கப்பட்ட படிக்கற்களை 2000 வருடங்கள் பழமைவாய்ந்த சிங்கள பெளத்த கல்லென்றும் இவர்கள் உரிமைகோரியது நினவிருக்கலாம். அத்துடன், கடந்த வருடம் கிளிநொச்சியில் சிறிதரனால் உடைக்கப்பட்ட 2015 இல் கட்டப்பட்ட செங்கற்சுவர் புத்தர் கிளிநொச்சிக்குத் தியானிக்க வந்தபோது, 2500 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மதில் என்று சிங்களவர்கள் நாடுமுழுதும் பிரச்சாரம் செய்து கூவித்திரிந்தது நினைவிலிருக்கலாம்.

இன்னும் கொஞ்சக் காலம்தான், அதற்குள் கந்தரோடையிலிருக்கும் பெளத்த விகாரை வடிவிலான கட்டடங்களை தமது சிங்களவர்களின் புராதன வாழிடங்கள் என்று கோரி, அப்பகுதியினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இன்னொரு விகாரையினை அங்கே கட்டி, பிக்குகள்ளையும் கொண்டுவரலாம். மாதகல்லில் ஏற்கனவே மூன்று அடுக்கு  பெளத்த நிலையம் ஒன்றும் கட்டப்பட்டு, தமது பிக்கு ஒருவர் பலநூறுவருடங்களுக்கு வாழ்ந்ததாக கூறி அவரது சிலையினையும் கடலிலிருந்து கரையிறங்குவதுபோல கட்டி வைத்திருக்கிறார்கள். 

ஆனால், நான் இதுபற்றிப் பேசினால் போலித் தேசியவாதம் என்கிறார்கள். 

55 minutes ago, goshan_che said:

வியாழேந்திரன், பிள்ளையான் வாங்கி தருவதாக சொன்ன அபிவிருத்தி -பாகம் 1

இவர்களின் பாராளுமன்றக் கன்னியுரைகளைக் கேட்டீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

மாதகல்லில் கட்டப்பட்டிருக்கும் சர்வதேச பெளத்த நிலையம், பெளத்த விகாரை, சங்கமித்தை வந்திறங்கிய இடம் என்று அவர்கள் உரிமை கோரும் இடம், சங்கமித்தை செலுத்திவந்த படகு, பெள்த்தர்களின் சுற்றுலா விடுதி என்று இப்பகுதி முழுதுமே சிங்கள பெளத்த மயமாக்கப்பட்டிருக்கிறது. 

https://www.google.com/maps/uv?hl=ta&pb=!1s0x3affad0d6fe394e9%3A0x1d6e4184a708056c!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipNzs8oCMLJ62AX2vRGAp4gZVapTPT69LsijY5Q_%3Dw260-h175-n-k-no!5sbuddhist center in mathakal jaffna sri lanka - Google Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipNpPBV5oBddesGHSqXaJ7ha95xuEp09mv7YhbZS

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

அலோ ரகு,

கந்தரோடை அல்ல அது கத்துறுகொட ரஜமஹாவிகார 🤣.  ஒரு தடவை நான் போய் படமெடுக்க, பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தில் இருந்து ஒரு பிக்கு வந்து ஏன், என்ன என்றெல்லாம் கேட்டார்.

நான் இது எனது முன்னோரின் தமிழ்-பெளத்த சின்னம் அதனால் பார்க்க வந்தேன் என சிங்களத்தில் கூறியதும் கொஞ்சம் கூலாகி நீ பெளத்தனா என்று கேட்டார். இல்லை ஆனால் தமிழில் பெரும்காப்பியங்கள் கூட பெளத்தம் சர்ந்ததே எனவே என் முன்னோர் ஒரு காலத்தில் பெளத்தராக இருந்திருக்கலாம் என்றேன்.

சரி சரி, தனியா படம் பிடிப்பது ஓகே ஆனால் டொக்குமென்ரி என்றால் முறையான அனுமதி வேண்டும் என சொல்லி விட்டு கிளம்பினார்.

48 minutes ago, ரஞ்சித் said:

இவர்களின் பாராளுமன்றக் கன்னியுரைகளைக் கேட்டீர்களா? 

வியாழேந்திரனை கேட்கவில்லை ஆனால் பிள்ளையான் தன்னை சிறையில் இருந்து விடுமாறு கேட்டதை பார்த்தேன்.

28 minutes ago, ரஞ்சித் said:

மாதகல்லில் கட்டப்பட்டிருக்கும் சர்வதேச பெளத்த நிலையம், பெளத்த விகாரை, சங்கமித்தை வந்திறங்கிய இடம் என்று அவர்கள் உரிமை கோரும் இடம், சங்கமித்தை செலுத்திவந்த படகு, பெள்த்தர்களின் சுற்றுலா விடுதி என்று இப்பகுதி முழுதுமே சிங்கள பெளத்த மயமாக்கப்பட்டிருக்கிறது. 

https://www.google.com/maps/uv?hl=ta&pb=!1s0x3affad0d6fe394e9%3A0x1d6e4184a708056c!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipNzs8oCMLJ62AX2vRGAp4gZVapTPT69LsijY5Q_%3Dw260-h175-n-k-no!5sbuddhist center in mathakal jaffna sri lanka - Google Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipNpPBV5oBddesGHSqXaJ7ha95xuEp09mv7YhbZS

மாதகல் இல்லை. சம்பில்துறை. 

ஆனா முன்பும் இது சங்கமித்தை வந்து இறங்கிய இடம் என்ற நம்பிக்கை இருதே உளது. இந்த இடத்தில் புலிகள் காலத்தில் கூட ஒரு சின்ன அரசமரத்துடன் கூடிய பெளத்த சின்னம் இருந்ததாக ஒரு பழைய ஆள் கூறினார். தெரிந்தவர்கள் உறுதிபடுத்தலாம். ஆனால் இப்போ பேஇய எடுப்பில் ஜம்புகோள பட்டுன என அமைதுள்ளார்கள். விகாரை அருகே சங்கமித்தை வந்த கப்பலின் மாதிரியும் உண்டு.

இதற்கு அருகே 50 மீட்டரில் இருக்கும் ஒரு கடற்கரையோர சிவன் கோவிலில் நம்மவர்கள் இலங்கையிலேயே பெரிய சிவன் சிலையை 2012 இல் அமைதுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆனால், நான் இதுபற்றிப் பேசினால் போலித் தேசியவாதம் என்கிறார்கள். 

அப்போ அவர்களை அடிச்சு விரட்டலாம் என நினைக்கிறீர்களா இலங்கை பெளத்த தேசமெனவும் பெளத்தத்திற்கே முன்னுரிமை எனவும் அதற்கு அமைச்சும் நிறுவி மகிந்த  இருக்கிறார்  இப்படி காவிகள் சூழந்துள்ள இலங்கையை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பதிலுக்கு நீங்கள் கேட்கலாம் ஏன் நீங்கள் ஆதரித்த பிள்ளையான் ,கர்ணாவால் கேட்க முடியாதா? என 

பழம் பெரும் அரசியல் வாதி சம்பந்தர் ஏன் சுமந்திரன் ஐயாவால் கூட கேட்கமுடியாது  மிகவிரைவில் வடக்கில் கிளிநொச்சியிலும் சின்ன விகாரை ஒன்று கண்டேன் , நைனாதீவு , யாழ்ப்பாணம்  திருகோணமலை இப்படி இடங்களிலும் அவர்கள் குடி கொள்ள தொடங்கி விட்டார்கள்

நான் இவர்கள் எவருமே ஏதும் செய்வார்கள் என்று நினைக்கவுமில்லை, அதற்காக எழுதவுமில்லை.

எனது ஆதங்கத்தைத்தான் எழுதினேன். இப்படி எழுதுவதே இப்போது கேவலமாகப் பார்க்கும் நிலையிலிருக்கிறோம் என்பதைத்தான் எழுதினேன். தமிழர் நலன்பற்றிப் பேசினாலே போலித்தேசியவாதிகள் என்று இகழப்படும் நிலை வந்ததைப்பற்றியே எழுதினேன்.

உங்களை இதற்குள் இழுக்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான் கருணா பிள்ளையான் பற்றியும் பேசவில்லை.

சிவன் சிலை--மாதகல்

18814478_10211429949015765_7012266539045004137_o.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=f0c_4KhajVIAX9wHBXJ&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=537765e6927a6456265e7716ba013f47&oe=5F6B20E3

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தொல்பொருள் செயலணி அங்கத்தும் தமிழ்த் தரப்பினர் முன்வந்தால் சிபார்சு செய்வதற்கு தயார் - டக்களஸ்

(ஆர்.ராம்)

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் அங்கத்துவத்தினைப் பெறுவதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முன்வருவார்களாக இருந்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடத்தில் சிபார்சு செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தலைமையில் கிழக்கு மாகாண தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டிருந்தது. 

இந்த செயலணியில் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த தமிழர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலமான கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழ்ப் பிரதிநிதிகளை பரிந்துரை செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி கோத்தாபய மற்றும் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

வடக்கில் துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களை செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களை செயலணியில் பெயரிடுவதற்கான விருப்பத்தினையும் கோரிகால அவகாசத்தினையும் வழங்கியிருந்தார். 

இந்நிலையில், குறித்த செயலணிக்கு அஸ்கிரி பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் நிருவாகசபை உறுப்பினர் கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகிய நான்கு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் தெரிவித்தாவது, 

தொல்பொருள் துறைசார் நிபுணத்தவம் வாய்ந்தவர்களை வடக்கிலும், கிழக்கிலும் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்களிடத்தில் செயணியில் அங்கத்துவத்தினை பெறுவது பற்றிய விடயங்களை விரிவாக கலந்துரையாடி அவர்களின் தீர்மானித்தினைப் பெறுவதற்கு முனைந்தேன். அதற்கடுத்து பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னரும் அந்த விடயம் சம்பந்தமான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தேன். 

ஆனால் இதுவரையில் வடக்கு கிழக்கிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் ஜனாதிபதி செயலணியில் அங்கத்துவத்தினைப் பெறுவதற்கு தயார் என்று கூறி முன்வரவில்லை. அவ்வாறு முன்வருவார்களாயின், ஜனாதிபதி கோத்தாபயவிடத்தில் சிபார்சு செய்வதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றார். 
 
https://www.virakesari.lk/article/88755

  • கருத்துக்கள உறவுகள்

"மணிமேகலையைத் தெரியுமா?" என்று ஒரு சிங்கள நண்பனிடம் கேட்டேன்.

" இல்லை யாரது?" என்றான்

"நீயெல்லாம் எதுக்குடா பௌத்தனா இருக்கிறாய்?" என்றேன்.

"நான் எதுக்குடா மணிமேகலையை என்ற நபரை தெரிஞ்சுக்கணும்?" என்றான்.

"சரி சங்கமித்தையை தெரியுமா?" என்று கேட்டேன்.

"ஆமா புனித போதியை (வெள்ளரசு மரம்) இலங்கைக்கு கொண்டுவந்த பௌத்த பெண் துறவி" என்றான்.

"சரி, இப்ப சொல்லு மணிமேகலையை தெரியுமா தெரியாதா?"

"ஆ... தெரியும் தெரியும்... சங்கமித்தையின் மறுபெயர்தானே மணிமேகலை?"

"போடா டேய்" கடுப்பாகிட்டேன்.

(சிறிது நேரத்தின் பின்னர்)

"உனக்கு கண்ணகியை தெரியுமா?"

"ஓ... பத்தினி தெய்வம்தானே? விகாரைகளில இருக்கு. நாங்க வணங்குவோம். எங்க குல தெய்வம் என்பார்கள்."

"ஓ பத்தினியையும் உங்க தெய்வமாக்கிட்டிங்களோ? சரி இருக்கட்டும் கண்ணகிக்கு ஒரு கணவன் இருந்தான் தெரியுமா?"

"அதெல்லாம் தெரியா மச்சான், தலதா மாளிகால பத்தினிக்கு தனி கோவில் இருக்கு. நம்ம ஆக்கள் மாளிகாவுக்கு சென்றால் அங்கயும் கண்டிப்பா போவாங்க" என்றான் சலிப்புடன்.

"சரி சொல்லுறன் வடிவா கேள். நீங்க பத்தினி என்று வணங்கும் தெய்வம் ஒரு தமிழ் பெண். பெயர் கண்ணகி. பார்தால் பசு, பாய்ந்தால் புலி. அவளது தகப்பன் ஒரு பேமஸ் Businessman. தன் நண்பனும் ஒரு பேமஸ் Businessman என்பதால் அவனது மகன் கோவலன் என்ற வளர்ந்துவரும் Businessmanக்கு கண்ணகியை நல்ல சீதனபாதனத்தோட கட்டிக் கொடுத்தான்.

அந்த நேரம் சிற்றரசுகள் தவிர மூன்று பெரிய நாடுகள் தமிழருக்கு இருந்தது. சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் கண்ணகியும் கோவலனும். கோவலன் கொஞ்சம் குழப்படி. மாதவி என்ற ஆட்டக்காரியுடன் காதலுற்று மணிமேகலை என்ற பெண்ணுக்கு தகப்பனாகிறான். தன் மனைவியையும் Business எல்லாத்தையும் மறந்து மாதவியே கதியென கிடந்து வறுமைப்படுகிறான். இதனால் மீண்டும் பழைய குருடி கதவை திறவடி என்று கண்ணகியிடம் வந்து பிழைப்புக்காக பாண்டி நாட்டுக்கு புலம்பெயர்கிறான். அங்குதான் அவனை விசாரணையில்லாமல் கள்ளப்பட்டம் சூட்டி கொன்றனர். இதனால் கண்ணகி பாண்டி நாட்டின் தலைநகர் மதுரையை எரிக்கிறாள். கோவலன் இல்லாத காலத்திலும் குழப்படி இல்லாமல் இருந்ததனால் கற்புக்கரசியாகி, அதாவது பத்தினி ஆகி அதன் வலிமையினாலேயே மதுரையை எரிக்கிறாள். அதனால் பத்தினித் தெய்வமாகிறாள்....

"அட அப்ப பத்தினித் தெய்வம் தமிழா?" என்று கேட்டான்.

"ஓமடா பக்கி, நீங்கள் இப்படித்தான் இராவணனையும் சிங்களவனாக்கி வைத்திருக்கிறீங்கள்."

"சரி மணிமேகலை பற்றி ஏன் கேட்டாய்?" என்றான்.

"சொல்லுறன் இனி கவனமாக கேள். தன் காதல் கணவன் கோவலன் இறந்த செய்தியை அறிந்த மாதவி ஆட்டங்களை நிறுத்திவிட்டு பௌத்த துறவியாகிறாள். அத்துடன் கோவலனுக்கு பிறந்த தன் மகள் மணிமேகலையையும் துறவியாக்குகிறாள். அப்போது தமிழ் பௌத்தர்கள் சோழநாட்டில் அதிகமாக இருந்தார்கள். மணிமேகலை புத்தருக்கு மாலை கட்டும்போது தகப்பனை நினைத்து அழுகிறாள். அழுத கண்ணீர் மாலையில் பட்டுவிட்டது. மாலை புனிதமிழந்துவிட்டதென்று புதிய பூக்கள் பறிப்பதற்காக தோழியுடன் செல்கிறாள். அங்குதான் சோழ மன்னனின் மகன் உதயகுமாரன் என்பவன் மணிமேகலையை தேடி வருகிறான்.

துறவியாக இருந்த மணிமேகலை காதல் மயக்கத்தில் சற்று தடுமாறுகிறாள். இருந்தாலும் தன்னை உணர்ந்தவள் அதற்கு தீர்வு தேடுகிறாள். அதன் விளைவாக மணிமேகலா என்ற பௌத்த தெய்வத்தால் மணிபல்லவ தீவுக்கு (யாழ்ப்பாணம் நயினாதீவு) மயக்க நிலையில் கொண்டுசென்று விடப்படுகிறாள். அங்கு வந்தவளுக்கு புத்தபெருமான் தன் மறு வடிவமான பீடம் ஒன்றை கொடுக்கிறாராம். ஏற்கனவே அங்கு நாக வழிபாட்டில் இருந்த நாகர்கள் (இன்றைய ஈழத் தமிழரின் மூதாதையர்) மத்தியில் பௌத்த அறக் கருத்துக்களை விதைக்கிறாள்.

அவள் விட்டுச்சென்ற எச்சம்தான் இன்றைய நயினாதீவின் நாகவிகாரை. அது தமிழரின் பௌத்த கோவில். உங்கள் தேரர் ஒருவர் மகாவம்சத்தில் உருட்டி புரட்டி பொய் வரலாறை எழுதியுள்ளார். மணிமேகலை என்ற தமிழ்ப் பெண் துறவி உங்கள் வட இந்திய சங்கமித்தைக்கு முந்தியவள். புனிதமான புத்த பெருமான் பிறந்த அதே நாளில் அவளும் பிறந்ததனால் சிந்தாதேவி என்ற இன்னுமொரு பௌத்த தெய்வத்தின் அருளால் கிடைக்கப்பெற்ற அமுதசுரபி எனும் அட்சய பாத்திரத்தை வைத்து பலர் பசியை போக்கியவள்.

உனக்கு ஒன்று தெரியுமா? இன்று பௌத்த விகாரைகளில் கண்ணகி, விஷ்ணு, முருகன்,  பிள்ளையார் என்று இந்துக் கடவுள்களை கும்பிடுகிறீர்கள், தமிழ் பௌத்தர்கள் வணங்கிய தெய்வங்களான மணிமேகலா, சிந்தாதேவி எல்லாம் எங்கே? அவர்களையாவது தெரியுமா?

வட இந்திய சக்கரவர்த்தி அசோகனுடன் கூட்டிணைந்து இலங்கைக்கு தேவநம்பியதிஸ்ஸன் பௌத்தத்தை கொண்டுவந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் மணிமேகலை அதற்கும் முந்தியவள். ஈழத் தமிழர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். விஷமென்று தெரிந்தும் கொல்லும் நாகத்தை தெய்வமாக பூசித்தவர்கள். தனியே சிவனை வழிபட்டவர்கள். அதனால் பௌத்தம் எம்மத்தியில் செல்வாக்கிழந்து உங்கள் மத்தியில் வட இந்திய தொடர்புடன் செல்வாக்குப் பெற்றுவிட்டது. கணிசமானளவு தமிழ் பௌத்தர்கள் சிங்களவர்களாக இனம்மாறிவிட்டனர். சிலவேளை நீயும் அதற்குள் அடங்கலாம். உங்கள் மூதாதையர்கள் வணங்கிய எங்கள்-அவர்கள் தெய்வங்களை இன்றும் பௌத்த விகாரைகளில் வைத்து வழிபடுகிறீர்கள்.

ஆனால் எல்லாவற்றையும்தாண்டிவந்து இது ஒரு சிங்கள-பௌத்த நாடு என்கிறீர்கள். காலம் செய்த கோலமடா"

"சொரி மச்சான்" ஏதோ நினைப்புடன் சொன்னான்.

"சரி இப்ப சொல்லு மணிமேகலை யார்?"

"தமிழ் பௌத்த துறவி" என்றான்.

"மறக்காமல் இதையும் கேள், நீங்கள் சொல்வீர்களே 'புத்தம் சரணம் கச்சாமி' என்று ஒரு மந்திரம். அதுகூட தமிழ் பௌத்தர்களிடமிருந்து வந்ததுதான். மணிமேகலை இங்கு வந்து பரப்பினாள். மணிமேகலை என்ற எங்கள் காவியத்தில் இருக்கிறது. இதையெல்லாம் உங்கள் ஆக்களுக்கு சொல்லி விளங்கப்படுத்து"

Copied from Shanmugarasa Vadivelu

Whats appஇல் வந்த ஒரு ஆக்கம்.   
 
இந்த ஆக்கத்தின் உண்மைத்தன்மையை யாராவது ஆராயுங்கள். என்னைப் பொறத்தவரையில் இது உண்மையாகப்மடுகிறது 

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள், சிங்கள மக்கள் மத்தியில், தமிழர் வரலாற்றைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்பியும், போதித்தும், கற்பித்தும் வருகிறார்கள். தமிழர் வந்தேறு குடிகள், அவர்கள் நம் நாட்டைச் சுரண்டி இந்தியாவுக்கு கொண்டுபோய் விடுவார்கள். நம் நாட்டையும், சொத்துக்களையும் அவர்களிடம் இருந்து காப்பாற்றுவது நம் கடமை என்று, தமிழர் மீதும், அவர்களது பூர்வீக நிலங்கள் மீதும் செய்யப்படும் ஆக்கிரமிப்பை இப்படி கூறி நிஞாயப் படுத்துகிறார்கள். தமிழ் இளம் சமுதாயமும் இதை நம்ப வேண்டும் என்பதற்காகவே, எமது நூலகம் திட்டமிட்டு எரியூட்டப்பட்டு சிங்களவரால் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அவர்களது புனை கதை நூல்கள் அடுக்கப்பட்டிருக்கலாம். இதை தெளிவு படுத்தும் சிங்களம் தெரிந்த, நீதியான தமிழ் அரசியற் தலைவர்களை சிங்கள இனவாத அரசு வெறுக்கிறது. காரணம் சிங்கள மக்கள் மத்தியில் தம்மால் பரப்பப்பட்டுள்ள  பொய்யான தகவல்களை இவர்கள் மாற்றி உண்மையை கூறி மக்களை மாற்றிவிடுவார்கள் என அஞ்சுகிறார்கள். ரவிராஜ் கொலை செய்யப்பட்டதற்கும் இதுவே காரணம். இங்குள்ள சிங்களம் தெரிந்த, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குகிற, தமிழ்த் தேசியத்தை கேலியும், கிண்டலும் செய்து, கோபமூட்டும் சிங்கங்கள் தங்கள் மொழித் திறமையினால் சிங்கள இளம் சந்ததிக்கு வரலாற்று ஆதாரங்களோடு அவர்களும் உண்மையை அறிய உதவலாம் முகநூல் வழியாக. இவர்களுக்கே தங்கள் வரலாறு தெரியவில்லை எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்பது கேள்வி. ஒரு பொய்யான தகவலை யாரிடமோ இருந்து வாங்கி வாந்தி எடுப்பதிலும் பார்க்க, உண்மையான வரலாறை தாமும்  அறிந்து மற்றவர்களுக்கும் தெரிவிப்பதே உண்மையான சேவை. இருமொழி தெரிந்ததன் பயனுமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.