Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டி உரியப்பட்டார் துரைராசசிங்கம்… வாயை மூடிக்கொண்டிருக்க பணிக்கப்பட்ட சம்பந்தன்… பலத்தை நிரூபித்த மாவை அணி:மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது.

செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (29) வவுனியாவில் நடந்தது.

சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சசி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஈடுபட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை கலையரசனிற்கு வழங்கினார்.

தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குபவர்களின் பெயர் பட்டியில் பெண் பிரதிநிதித்துவம், அம்பாறை பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மாவை சேனாதிராசாவும் வைத்திருந்த நிலையில் இரகசிய சதி நடவடிக்கையினால் அதிர்ச்சியடைந்திருந்தார்.

இந்த நிலையில், செயலாளரின் சதி நடவடிக்கைக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தீர்மானத்தை வாசித்தார். இதன்போது கருத்த தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், மத்தியகுழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த பிரேரணை இடம்பெறவில்லை. நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத பிரேரணையை நிறைவேற்றுவது சட்டவிரோதமானது, செயலாளர் இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் என தெரிவித்து, தனது பின்னணியில் இயங்கிய செயலாளரை காப்பாற்றினார்.

இதையடுத்து, செயலாளர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் பொதுச்சபையை கூட்டி நிறைவேற்றுவதென முடிவானது.

அதேநேரம், தேசியப்பட்டியல் விவகாரத்தில் செயலாளர் நடந்து கொண்டது ஒரு சதி நடவடிக்கைக்கு ஒத்தது, அது சட்டவிரோதமானது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அம்பாறைக்கு நியமனம் வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த நியமனத்தை அனைவரும் ஆதரித்தனர். எனினும், நடந்து கொண்ட முறை சட்டவிரோதமானது.

செயலாளரை காப்பாற்ற இரா.சம்பந்தனும் முயன்றார். “செயலாளர் கிழக்கை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம். அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள்“ என இரா.சம்பந்தன் கேட்டார்.

இது முழு மத்தியகுழுவையும் கொதிப்படைய வைத்தது. இது பிரதேசவாதமல்ல. கட்சி ஒழுக்கம் சார்ந்தது. இப்படி கீழ்த்தரமாக சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் கருத்தை வாபஸ் பெறுங்கள் என எல்லோரும் கூட்டாக வலியுறுத்த, வெலவெலத்து போனார் சம்பந்தன்.

ஒரு கட்டத்தில், இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன்- “ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“ என கறாராக சொல்ல, சம்பந்தன் மேலும் வெலவெலத்தார்.

கூட்டத்தினர் ஏகோதித்து இதை ஆமோதித்தனர்.

மன்னார் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு ஒரேயொரு காரணம் இரா.சம்பந்தன்தான் என நேரடியாக குற்றம்சாட்டி, சம்பந்தன் மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். அத்துடன், கட்சியின் செயலாளரை மாற்றாமல், யாரும் கட்சிக்கூட்டம் என மன்னார் பக்கமே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சுமந்திரன் பேசும்போது, கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.

அப்போது ஒருவர் குறுக்கிட்டு- அப்படியானால் சுமந்திரன் குரூப்பை வைத்து தனியே கட்சி நடத்தப் போகிறீர்களா என கேட்டார்.

பின்னர் சரவணபவன் பேசும்போது- சுமந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன், உதயன் பத்திரிகை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்களை – அது எந்த கட்சி சார்ந்தவர்கள் என்றாலும்- பத்திரிகை விமர்சிக்கும். உதயன் பத்திரிகை விமர்சிக்கிறது என யாராவது தமிழ் தேசிய விரோதிகள் குற்றச்சாட்டு முன்வைத்தால், அதை நாம் கணக்கிலேயே எடுக்க மாட்டோம் என சுமந்திரனிற்கு பதிலடி கொடுத்தார்.

செயலாளர் எழுந்து, வழக்கம் போல ஒரு குட்டிக்கதை, திருக்குறளில் அப்படி சொல்லப்பட்டுள்ளது என பேச ஆரம்பிக்க, அவரை ஒருமையில் சிலர் அழைத்து, “உமது கதையை நாம் கேட்க வரவில்லை. உம் மீது நடவடிக்கையெடுக்கவே கூட்டம். சத்தம் போடாமல் இரும்“ என சத்தமிட்டனர். செயலாளர் கப்சிப் என உட்கார்ந்தார்.

கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென, செயலாளரை நீக்க ஆதரவளிப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். மேடையில் இருந்தவர்கள் தவிர, அரங்கிலிருந்தவர்களில் சுமந்திரன், அவரால் நியமனம் வழங்கப்பட்ட சாணக்கியன், குருநாதன் ஆகிய மூவரையும் தவிர மிகுதி அனைவரும் கையை உயர்த்தினர்.

கே.வி.தவராசா பேசும்போது- சுமந்திரன் காலையில் ஒன்று, மதியத்தில் ஒன்று, மாலையில் ஒன்று என மாற்றி மாற்றி பேசுபவர், அவரது சிங்கள நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி, அது தவறானது, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் விளக்கத்தில் திரிவுபடுத்தி பொதுமக்களிற்கு விளக்கமளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

மாவை சேனாதிராசா பேசும்போது- தமிழ் தேசியத்தை வீழ்த்த தெற்கு பின்னணியில் இயங்கும் வித்தியாதரன் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டினார். அதில் சுமந்திரன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.

இதை சுமந்திரன் மறுத்தார். தனக்கும் அந்த பத்திரிகைக்கும் தொடர்பில்லையென்றார்.

அதேபோல சுமந்திரனின் நெருங்கிய உறவினரும், அமெரிக்கன் மிசன் திருச்சபையை சேர்ந்தவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் தவறான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அனேக தகவல் தவறுகள் இருந்தன. இதை பததிரிகை ஆதாரத்துடன் கூட்டத்தில் காண்பித்த மாவை, இப்படியான தவறான தகவல்களை கொடுத்து, தன்னைப்பற்றிய இமேஜை உருவாக்க சுமந்திரனே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

டி.பி.எஸ் தனது நெருங்கிய உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட சுமந்திரன், அவர் கட்டுரை எழுதியதற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றார்.

மொத்தத்தின் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லையென்ற போதும், மாவை அணி மத்தியகுழுவிலும், கட்சிக்குள்ளும் தமது பலத்தை இன்று நிரூபித்துள்ளனர்.

கூட்டத்தின் முடிவில் வழக்கம் போல மாவை ஒரு எச்சரிக்கையை விடுத்தார். கூட்டம் முடிந்த உடனேயே தமிழ்பக்கத்தில் உள்ளது உள்ளபடி வந்து விடுகிறது. யாரும் ஊடகங்களிற்கு செய்தி வழங்கக்கூடாது. வழங்குபவர் கண்டுபிடிக்கப்பட்டால் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்றார்.

https://www.pagetamil.com/142830/

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ஒரு கட்டத்தில், இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன்- “ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“ என கறாராக சொல்ல, சம்பந்தன் மேலும் வெலவெலத்தார்.

ஐயோ ஐயோ
இது தேவையா சம்பந்தருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

Pagetamil. 😜

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

“ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“

எழுபது வருடங்களாக தவமாய் தவமிருந்து பெற்ற வரம். இவர் ஒன்றும் வினைத்திறன் மிக்க தலைவர் கிடையாது. சந்தர்ப்பம் வழங்கிய பதவி, அதை வைத்து பழிவாங்கல், வெறுட்டல், அதட்டல், பாரபட்ஷம் போன்றவற்றை பெருக்கினார்.

 

5 hours ago, பெருமாள் said:

கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.

சுமந்திரனின் எதிர்காலச் சவால் முளையிலேயே கிள்ளத்  துடிக்கிறார்.

 

5 hours ago, பெருமாள் said:

சுமந்திரனின் நெருங்கிய உறவினரும், அமெரிக்கன் மிசன் திருச்சபையை சேர்ந்தவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் தவறான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அனேக தகவல் தவறுகள் இருந்தன.

இங்கே நிற்கிறது மதவாதத்தின் ஊற்று. இதை வைத்து சிலர் மதம் மாறியது போல் பாவனையும் யாழில் நடிப்பு.     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 

இங்கே நிற்கிறது மதவாதத்தின் ஊற்று. இதை வைத்து சிலர் மதம் மாறியது போல் பாவனையும் யாழில் நடிப்பு.     

உந்த டி பி எஸ் சுமந்திரன்ற மாமா என்றது மெய்யோ அல்லது ரெண்டு பேரும் CSI என்பதை வைத்து முடியும் சிண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

டி.பி.எஸ் தனது நெருங்கிய உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட சுமந்திரன்,

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் பேசும்போது, கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.

சுமந்திரன் எதிர் நோக்கும் அடுத்த சவால் தவராசா. அதை கிள்ளி ஏறிய நினைப்பதில் தவறில்லை என முயற்சிக்கிறார். இதுவே விக்கினேஸ்வரனுக்கும் நடந்தது. பெரு முட்டாள் மாவை. வாயை அடக்கி தான் முட்டாள் அல்ல என தக்க வைக்க எண்ணிய சம்பந்தனை வாயை மூட வைத்துவிட்டார்கள். வயதுக்கேற்ற அறிவு, அனுபவம் இல்லை என்பதை பொறுத்து பொறுத்து பார்த்து இன்று அறிவித்து விட்டார்கள் இவருக்கு. இத்துடன் சம்பந்தர் வீடு போய்ச் சேர்வது அவருக்கு நல்லது. இல்லையேல் இன்னும் அவமானப்படுவார்.   

  • கருத்துக்கள உறவுகள்

 

ஊடகங்கள் தமது உழைப்பிற்காகவும் தமது புள்ளியை உயர்த்தவும் கொடுக்கும் தலைப்புகள் அருவருப்பிற்குரியவையாக  மாறிவருகிறது.  உட்கட்சிக் கூட்டத்தில் அனைத்துமே அலசப்படும்.  உட்கட்சி மட்டத்திலேயே   பல்வேறு வெட்டியாடல்களோடு  எதிர்கொண்ட  ஒரு தேர்தற் பின்னடைவின்பின்  சாதரணமாக இருக்காதென்பதோடு  எம்மிடையே இருக்கும் அது  பெரு அமைப்புகள் முதல் சிறு  மன்றங்கள்  வரையான குழுவாதப்போக்கு  என்பனவோடு அமைதியாக  மத்திய குழுக் கூடியிருக்க வாய்ப்பில்லை என்பது இயல்பானதே. 

கண்டிக்கப்பட வேண்டிய தலைப்பு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தமிழ் கட்சிகளுக்கு இளைய தலைமைகள் வேண்டும். அது எந்த கட்சியாயினும் சரி.....

 வயது முதிர்ந்து தன்னிச்சையாக எழுந்து நடக்கமுடியாதவர்களின் மூளை எவ்வளவு/எந்தளவு ஆரோக்கியமாக சிந்திக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

செயலாளரை காப்பாற்ற இரா.சம்பந்தனும் முயன்றார். “செயலாளர் கிழக்கை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம். அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள்“ என இரா.சம்பந்தன் கேட்டார்.

 

6 hours ago, பெருமாள் said:

இப்படி கீழ்த்தரமாக சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் கருத்தை வாபஸ் பெறுங்கள்

நான் சொல்லேல; இதுக்குதான் சொல்லுறது, கொஞ்சமாவது பகுத்தறிவு வேண்டும் என்று. இவர் எப்படி நடந்து கொண்டிருக்கிறார் கடந்த காலங்களில், எப்படி பச்சோந்திகளை உள்வாங்கி வீட்டை  குட்டிச் சுவராக்கினார்?  என்பதற்கு இது ஒரு சிறிய  உதாரணம். நீறு பூத்த நெருப்பு எரியுது கட்டுப்படுத்துவது கஸ்ரம். கட்சியின் தோல்விக்கு முழுத் தார்மீகப் பொறுப்பேற்று விலகியிருக்க வேண்டும் அல்லது ஒத்த கருத்துக்கு இசைந்து நேர்மையாய் நடந்திருக்க வேண்டும். விட்டிட்டு பிரச்சனையை திசை திருப்பி தப்ப மட்டுமல்ல நிஞாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

Pagetamil. 😜

என்ன கப்பிதான் இவங்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து போனீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உந்த டி பி எஸ் சுமந்திரன்ற மாமா என்றது மெய்யோ அல்லது ரெண்டு பேரும் CSI என்பதை வைத்து முடியும் சிண்டோ?

உறவினன் என்பதை செயராசு தனது கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உறவினன் என்பதை செயராசு தனது கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். 👍

நன்றி.

 

50 minutes ago, nochchi said:

 

ஊடகங்கள் தமது உழைப்பிற்காகவும் தமது புள்ளியை உயர்த்தவும் கொடுக்கும் தலைப்புகள் அருவருப்பிற்குரியவையாக  மாறிவருகிறது.  உட்கட்சிக் கூட்டத்தில் அனைத்துமே அலசப்படும்.  உட்கட்சி மட்டத்திலேயே   பல்வேறு வெட்டியாடல்களோடு  எதிர்கொண்ட  ஒரு தேர்தற் பின்னடைவின்பின்  சாதரணமாக இருக்காதென்பதோடு  எம்மிடையே இருக்கும் அது  பெரு அமைப்புகள் முதல் சிறு  மன்றங்கள்  வரையான குழுவாதப்போக்கு  என்பனவோடு அமைதியாக  மத்திய குழுக் கூடியிருக்க வாய்ப்பில்லை என்பது இயல்பானதே. 

கண்டிக்கப்பட வேண்டிய தலைப்பு. 

நிச்சயமாக.

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கப்பிதான் இவங்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து போனீர்களோ?

உவங்கள் எழுதுறதில எவ்வளவு உண்மையோ யார் கண்டது. 😏 தலைப்பிலேயே தெரிகிறது  Pagetamil ன் தரம் 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன கப்பிதான் இவங்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து போனீர்களோ?

எதிர்க்கட்சி கூடுதல் பணம் செலுத்தியிருக்கும், செய்தி எதிர்பார்த்ததுபோல் வரவில்லை. யதார்த்தத்தை எழுதவேண்டும். நானும் மதவாதம்,  தேசிய வாதம் என்கிற இரு போர்வைகளையும் மாறி மாறி தூக்கிக்கொண்டு ஓடி மூடப்பார்த்தேன், அது எல்லாவற்றையும் மீறிப் போச்சுது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

எதிர்க்கட்சி கூடுதல் பணம் செலுத்தியிருக்கும், செய்தி எதிர்பார்த்ததுபோல் வரவில்லை. யதார்த்தத்தை எழுதவேண்டும். நானும் மதவாதம்,  தேசிய வாதம் என்கிற இரு போர்வைகளையும் மாறி மாறி தூக்கிக்கொண்டு ஓடி மூடப்பார்த்தேன், அது எல்லாவற்றையும் மீறிப் போச்சுது. 

நன்றி சாத்தான்

கடந்த தேர்தலில் சுமந்திரனை திட்டமிட்டு தோல்வியடையச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கெதிராக எனது கருத்துக்கள் வெளிப்பட்டது குறித்து தாங்கள் மிகுந்த விசனம் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.  

அதற்காக என்னை வேசதாரி என்பது கொஞ்சம் அதிகம் ☹️

நிதானமாக யோசிப்பதற்கு உங்கள் வயது தடையாயிருக்கிறது என்று எண்ணுகிறேன். 😀 

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை விமர்சித்தோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; மாவை சூளுரை

1-2-1-696x464.jpg

தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீது பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்றத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆராய்ந்திருந்தோம். ஒவ்வொருவரும் தமது பகுதிகளில் கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்ப்பட்ட காரணம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தார்கள். எனவே அந்த விடயத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு குழு விரைவில் அமைக்கப்படும்.

அத்துடன் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த தேசியல் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாமல் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமை தவறானது என்றும் இருப்பினும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நியமனம் சரி என்றும், அது தொடரவேண்டும் என்றும் மத்தியகுழுவால் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் விதிமுறைகளிற்கு மாறானது என்பதை தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக மேலும் தீர்மானங்கள் எடுக்கவேண்டுமாக இருந்தால் அடுத்த செயற்குழு அது தொடர்பாக தீர்மானிக்கும்.

அத்துடன் தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக, ஊடகங்களில் பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்ட உறுப்பினர்களிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதுவரை அவரது நியமனம் தொடரும்.

அத்துடன் 2020 தேர்தல் விஞ்ஞாபனம் அதில் கூறப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள், ஏனைய நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல் தொடர்பாகவும் தேசியமாநாட்டை நடாத்துவது தொடர்பிலும் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

அத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் மற்றும் கொரடா விவகாரம் தொடர்பாக இன்று நாம் எதனையும் பேசவில்லை.கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அந்த விடயம் தொடர்பாக தீன்மானிப்பார்கள். தேவைப்பட்டால் நாங்களும், கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம்.

எமது கட்சியின் மகளீரணியை சேர்ந்த பெண்மணி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் தலைவரது வழிகாட்டலின்படி செயலாளர் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் என தீர்மானித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சிக்கு மாகாணசபையில் கூட்டமைப்பின் ஊடாக ஆசனம் வழங்குவீர்களா என கேட்டபோது, இவ் விடயம் தொடர்பாக நாம் எதனையும் இன்று கதைக்கவில்லை. அதற்கான நேரமும் போதுமானதாக இருக்கவில்லை என தெரிவித்தார்.

http://www.ilakku.org/கட்சியை-விமர்சித்தோருக்/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை கருத்து என்ன?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.