Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தனது இராணுவதளத்தை உருவாக்க சீனா முயற்சி- பென்டகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியனும், சீனனும்... ஒப்பிட்டு பார்த்தால்...
ஒன்று... முட்டாள் பீஸு, 
மற்றது... முரட்டு  பீஸு...
அம்புட்டுதேன்...

மீசையை... முறுக்கிக் கொண்டு, நிப்பாங்களே தவிர,
சண்டை.. மட்டும் பிடிக்க மாட்டாங்கள். லூசுப் பயலுகள். :grin: 🤣

1987 -1989 அனுபவம் எனக்கும் இருக்கிறதே..... 😂

சத்தியமா சொல்லுறன், எந்தக் காய்தலும் உவர்தலும் இல்லாமல், எந்த ஒரு கொமன் சென்சும் இல்லாதது இந்தியப் படைகள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சீனன் சுறண்டின ஒரு நாட்டைக் காட்ட முடியுமா, உங்களால்

நான் வேறு எங்கும் போக விரும்பேல்ல, அது எனது பிரச்சனையுமில்லை. விரும்பினால் நீங்கள் தேடிப்பாருங்கள், அவன் எந்த நாட்டைச் சுரண்டினான் என்கிற விபரத்தை.  நான் என் நாட்டைத் தான் காட்ட முடியும். இலங்கையில் சீனாவின் அபிவிருத்திகள், கட்டுமானங்கள், கடன்கள் எல்லாம் அளப்பரியவை. இந்தியாவைவிட, இலங்கை கேட்டதை விட அதிகம். ஆனல் புள்ளிவிபரங்களின் படி ஒன்றோ, இரண்டோ இலட்சத்துக்கு மேல் சீனத் தொழிலாளரை நியமித்திருக்கிறார்கள். எதுக்கு? களை எடுக்கவா? ஏன் நம் நாட்டுக்காரருக்கு வேலை தெரியாதா? இல்லை வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னார்களா?  நம் தமிழருக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று சொன்னீர்கள், சரி. மாண்டு மாண்டு வேலை செய்யும் சிங்களவருக்குமா விருப்பமில்லை? கடன் கடன்தான் இலங்கைக்கு. ஊதியம் என்கிற பெயரில் சீனா அதற்கு மேலால் தன் நாட்டுக்கு அனுப்பிவிடுவான்.  சீனன் நாட்டைச் சுரண்ட, சிங்களவன் தமிழனைச் சுரண்டுகிறான். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஆனால் 1962  ஆம் ஆண்டு திபத்திய அகதிகளில்  இருந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பிரிவிலிருந்துதான் தற்பொழுது முன்னரங்க போர் முனையில் வெற்றியீட்டியுள்ளதாக சொல்கின்றனர்....கிட்ட தட்ட 50 வருடம் காத்திருந்து அனுப்பிருக்கிறது இந்தியா தனது அகதிகளிலிருந்து உருவாக்கிய படைப்பிரிவை

ஈழம்படைப்பிரிவை உருவாக்கி வைத்திருப்பார்களோ?

பில்டப்பை சகிக்க முடியவில்லை. இவன் சொல்றதைப்பார்த்தால் இந்தியா இன்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் அதி செயல்த்திறன் மிக்க, சுற்றியிருக்கும் எதிரிகள் அஞ்சி நடுநடுங்கும் ராணுவ, புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். சுத்தமான மோடி சங்கிப்பொலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

பில்டப்பை சகிக்க முடியவில்லை. இவன் சொல்றதைப்பார்த்தால் இந்தியா இன்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் அதி செயல்த்திறன் மிக்க, சுற்றியிருக்கும் எதிரிகள் அஞ்சி நடுநடுங்கும் ராணுவ, புலனாய்வுக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். சுத்தமான மோடி சங்கிப்பொலத் தெரிகிறது.

ரஞ்சித்...  அவர்,  இந்தியாவுக்கு.... கொம்பு சீவி, 
சீன,  போர்க்களத்துக்கு அனுப்ப... ஆயத்தப் படுத்துகிறார்.   
ஒருக்கால்... போய்த்தான்...  பார்க்கட்டுமே.

அவரின்... ஆசையை, தடை செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1987 -1989 அனுபவம் எனக்கும் இருக்கிறதே..... 😂

சத்தியமா சொல்லுறன், எந்தக் காய்தலும் உவர்தலும் இல்லாமல், எந்த ஒரு கொமன் சென்சும் இல்லாதது இந்தியப் படைகள் ☹️

இந்திய அமைதிப் படை... என்னும் பெயரில்,  ஈழ மண்ணில்  நுழைந்து...
புலிகளிடம்... அடி,  வாங்கிக் கொண்டு போன ஆட்கள். 
இவர்களை...  மறக்க  மாட்டோம், மன்னிக்க  மாட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

நான் வேறு எங்கும் போக விரும்பேல்ல, அது எனது பிரச்சனையுமில்லை. விரும்பினால் நீங்கள் தேடிப்பாருங்கள், அவன் எந்த நாட்டைச் சுரண்டினான் என்கிற விபரத்தை.  நான் என் நாட்டைத் தான் காட்ட முடியும். இலங்கையில் சீனாவின் அபிவிருத்திகள், கட்டுமானங்கள், கடன்கள் எல்லாம் அளப்பரியவை. இந்தியாவைவிட, இலங்கை கேட்டதை விட அதிகம். ஆனல் புள்ளிவிபரங்களின் படி ஒன்றோ, இரண்டோ இலட்சத்துக்கு மேல் சீனத் தொழிலாளரை நியமித்திருக்கிறார்கள். எதுக்கு? களை எடுக்கவா? ஏன் நம் நாட்டுக்காரருக்கு வேலை தெரியாதா? இல்லை வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னார்களா?  நம் தமிழருக்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று சொன்னீர்கள், சரி. மாண்டு மாண்டு வேலை செய்யும் சிங்களவருக்குமா விருப்பமில்லை? கடன் கடன்தான் இலங்கைக்கு. ஊதியம் என்கிற பெயரில் சீனா அதற்கு மேலால் தன் நாட்டுக்கு அனுப்பிவிடுவான்.  சீனன் நாட்டைச் சுரண்ட, சிங்களவன் தமிழனைச் சுரண்டுகிறான். அவ்வளவுதான்.

தப்பி ஓடாதீர்கள் சாத்தான்..... சிரிப்பு தாள  முடியவில்லை 😂😂

சீனன் சுறண்டினான் என்று குற்றச்சாட்டை முன்வைத்தது நீங்கள். அப்படியா..... சுறண்டிய ஒரு நாட்டைக் காட்டுங்கள் என்றவுடன்....நீயே தேடிப்பார் என்கிறீர்கள்..... 😀

போங்கள் சாத்தான்... உங்கள் குசும்பு தாங்க முடியவில்லை 😂😂

கடனுக்கும் சுறண்டலுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா நீங்கள் .. 😀

அது சரி ... எப்போது இலங்கை உங்கள் நாடானது .... 🤔

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இராவணன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சீனனிடம் உங்கள் நாடு (எனக்கும்தான் 😜) பட்ட  கடனுக்கு கலங்குகிறீர்களோ ... 😂😂

அதுசரி...

நீங்கள் என்னிடம் வேண்டிய கடனை எப்போது (வட்டியும் முதலுமாய்) அடைக்கப்போகிறீர்கள். சந்தடிசாக்கில அத மறந்துபோகவேண்டாம்..... ..

😂😂😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவதளம் அமைக்க அமெரிக்கா மட்டும் ஒருபோதும் முயற்சி செய்ததில்லையாக்கும்?

இலங்கையில் சீனாவால் ஒருபோதும் வெளிப்படையான ஒரு ராணுவதளம் அமைக்கவே முடியாது ...

அப்படி முடிந்தால் இலங்கையின் அரசியல், பொருளாதாரம், நிம்மதி, வளர்ச்சி அனைத்தையுமே இந்தியாவால் கெடுக்க முடியும்.

ஒருகாலம் சிங்கள தேசத்தின் நிம்மதியை கெடுக்க தமிழர்மேல் பாசம் கொண்டதுபோல்  தனது பிராந்திய நலனை காக்க ஆயுதமும் அழுத்தமும் கொடுத்த ஹிந்தியா,

பின்பு அதே ஆதரவை முடக்கி தமிழர்கள் ஆயுத அரசியல்  போராட்டங்களை நாசகாரம் பண்ணி சிங்களவன் கையை பலபடுத்திய ஹிந்தியா,

சீனதளம் ஒன்று தன் கொல்லை புறத்தில் வருகிறது என்றால்..

தனது பிராந்திய நலன் பாதிக்கபடுகிறது என்றால்,மறுபடியும் தமிழர்கள் தலையை பகடை காய் ஆக்கி, திடீர் பாசம் காட்டி  உருட்டி விளையாடி தன் காரியத்தை சாதிக்க முனையும்.

தமிழர் தேசத்துக்கு பக்கத்தில் சிங்களவர்கள் என்ற ஒரு இனமும் ,

இந்தியா என்ற ஒரு நாடும் இருக்கும்வரை,

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெற்றியும், நிம்மதியும், தோல்வியும் எப்போதுமே நிரந்தரமில்லை என்பதே  கசப்பான யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனிசி, இந்திரா காந்தி இருக்கேக்க, பங்களாதேஸ் பிரிச்சு விட்டுது... இலங்கைக்குள்ள அமேரிக்கன் வரப்போறான் எண்டு புலிகளை உருவாக்கி, இண்டைக்கு சுருண்டு படுக்க, அமேரிக்காகாரன், வந்த சீனாக்காரன் இங்க சுருண்டு படுத்திருக்கப்போறான் எண்டு கத்துறான்.

சங்கிகள்.... சிங்கி அடித்துக் கொண்டு ஓடப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், அப்படித்தான் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு அறிக்கை அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பு சொல்கிறது.

main-qimg-b1efd39707f054a8c14a1c4b3c82ec41

அச்செய்திக்குறிப்பின் விபரங்களை கீழே பார்க்கலாம்.

இலங்கையுட்பட இன்னும் சில நாடுகளில் தனது ராணுவத் தளங்களை நிறுவும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் ( சீனா ராணுவத்தின் உத்தியோகபூர்வ பெயர்) தனது நெடுந்தூர ராணுவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், போர் ஆரம்பிக்கும் பட்சத்தில் தனது படைகளுக்கான வழங்கல்களை தடையின்றி அனுப்பவும் தனது நாட்டிற்கு வெளியேயான ராணுவத்தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அவ்வறிக்கை மேலும் குறிப்பிடும்பொழுது, விரைவான, தங்குதடையின்றிய போருக்கான ஏவுதளங்களையும், வழங்கற் தளங்களையும் நெடுந்தூர நாடுகளில் நிறுவுவதன்மூலம் சீன ராணுவம் போரில் தனக்குச் சாதகமான நிலையினை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறது.

main-qimg-f6e20d418acb2c1821a8a5be44cc60f2

ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன தளமும், உள்ளூர் கடற்படையுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடும் சீன வீரனும்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டியில் அமைந்திருக்கும் சீன பெருந்தளத்திற்கு மேலதிகமாக தனது கடல், வான் மற்றும் தரைப்படைகளுக்கான ஏவுதளங்கள், விநியோகத் தளங்கள் ஆகியவற்றை இந்நாடுகளில் அமைக்க சீனா தயாராகிவருகிறது என்று இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

main-qimg-dd4e73bda11bce6fb423d5711608cede

மக்கள் சீனக் குடியரசின் 2020 ஆம் ஆண்டிற்கான ராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள் எனும் தலைப்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வருடாந்த அறிக்கையில் சீனா இலங்கை, மியன்மார் (பர்மா), தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கிஸ்த்தான், ஐக்கிய அரபு ராச்சியம், கென்யா, சீஷெல்ஸ் தீவுகள், டன்சானியா, அங்கோலா, டஜிக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இதற்கான தளங்களை நிறுவும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

main-qimg-f1addc7c66ecf65f228a1cb1c2fd567f

இந்தியாவைச் சுற்றி இறுக்கும் சீனாவின் ராணுவத் தளங்கள்

பென்டகனின் இந்த அறிக்கையின் பிரகாரம் சீனாவின் இந்த ராணுவ விரிவாக்கம் அமெரிக்காவின் உலக ராணுவ செயற்திட்டங்களுக்குச் சவாலாக மாறிவருவதாகவும், அமெரிக்காவுடனான போர் ஒன்றின்பொழுது சீனாவுக்கு இந்தத் தளங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது.

சீனாவின் தேசிய நலன்களை விரிவாக்கும் எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீன கம்மியூனிஸ்ட் கட்சி தனது ராணுவத்தை தனது நாட்டிற்கு வெளியே தொலைவான இடங்களில் தளங்களையும், வலையமைப்புக்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் நிறுவுமாறு பணித்திருக்கிறதென்றும் இவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

மக்கள் சீன ராணுவத்தின் இந்த புதிய முன்னெடுப்புக்கள் தரை, வான், கடல் போர்முனைகளுக்கப்பால் இலத்திரணியல் துறையிலும், விண்வெளித்துறையிலும் முழுமூச்சுடன் வியாப்பித்து வருகின்றன. உதாரணத்திற்கு மூலோபாய காப்புப் படை ( Strategic Support Force) மற்றும் மக்கள் சீன ராணுவத்தின் வளர்ச்சியடைந்துவரும் சைபர், விண்வெளி மற்றும் இலத்திரணியல் போர்த்திறன் ஆகியவை மூலம் எதிரிநாடுகளை பலமுனைகளில் எதிர்கொள்ளும் ஆற்றலை சீன ராணுவம் வளர்த்து வருகிறது. இத்துடன், சீனாவின் படைகள் தாயகத்திலிருந்து நெடுந்தூரத்துக்கப்பால் திறக்கக்கூடிய போர்க்களங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆற்றல்களையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது.

main-qimg-b012ae799cddabd9902aff7fd044a124

மக்கள் சீன ராணுவத்தின் மூலோபாயவாதிகள் சீனாவுக்கு வெளியே, தொலைவான முனைகளில் வான், கடல், தரைப் போர்களில் தமது கையோங்குவதற்கான திட்டங்களைப்பற்றித் தொடர்ச்சியாக சிந்தித்தும் செயற்பட்டும் வருகிறார்கள். இந்துசமுத்திர நாடுகள் மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் நிலைவைக்கப்படும் சீனத் துருப்புக்களை முன்னோடிகளாகக் கொண்டு திறக்கப்படும் களங்களில் சீனாவின் மேலதிக துருப்புக்கள் இணைந்துகொள்ளும் வழிமுறைகள் பற்றியும் சீன ராணுவம் ஆரய்ந்துவருகிறது.

பென்டகனின் அறிக்கைப்படி இவ்வாறான வெற்றிகரமான ராணுவ செயற்பாட்டிற்கு அனுபவம் மிக்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையொன்றினை உருவாக்குவதன் மூலம் சீனாவுக்கு வெளியிலான செயற்பாட்டுத்தளங்களையும், மத்திய ராணுவ கமிஷனையும், போர்க்களங்களுக்கான கட்டுப்பாட்டு நிலைகளையும் விநியோகத்தையும் அவதானிப்பதற்கு சீனா திட்டமிட்டு வருகிறதென்றும் கூறியிருக்கிறது.

மூலம் : கொழும்பு கசெட்ட்
தமிழாக்கம் : ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

நன்றி.
 
அந்த வரைபடத்தில் தெளிவாக தெற்கில் நிறமூட்டப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

US military based around the world - Geoawesomeness

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலம்புங்கடா. புலிகள் இருந்தவரை சீனா,அமெரிக்கா ,இந்தியா உட்பட யாரும் உள்நுழைய முடியாது. புலிகளை அழிக்க உதவியதன் மூலம் தனக்குத்தானே ஆப்பை இறுக்கியது. இந்தியாவும் அமெரிக்காவும்.இப்பொழுது ஆபத்து இந்தியாவின் காலடியில் வந்து விட்டது. தமித்தேசத்தை அங்கீகரிப்பதன் மூலம் இப்பொழுதாவது ஆபத்தைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 21:09, putthan said:

மருதடியான்.அட்டகிரியான் எல்லாம் யார்? சுத்த அம்பாந்தொட்ட சிங்களவர்கள்.... ...இடையில் வந்த தமிழ் குடியேற்ற வாசிகள் அவரை இந்துவாக மாற்றிவிட்டார்கள்...மருதடியானை    ஞானக்கொழுந்தானே  என சொல்லுகின்றோம் அதே போல புத்தரையும் ஞானக்கொழுந்தானே என சொல்கின்றோம் .....ஆகவே மருதடியான் சிங்கள் கடவுள் ......

தகவல் .....மானிப்பாய் மாகாநாயக்க தேரர் ரட்ணசிலி

ரட்ணசிலி அல்ல

சிலி (silly) ரட்னே 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.