Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தவறான எழுச்சி மீளமுடியாத  பெரிய அழிவுகளைத் தரும் என்ற வரலாற்றுப் படிப்பினை தெரியவில்லையா?

அப்போ எமது போராட்டம் தவறான எழுச்சி என்கிறீர்கள்! திராவிடத்திற்குள் மூழ்கிவிட்டீர்கள் என்பதற்கு இதைவிட வேறு கருத்துக்கள் தேவையில்லை!! இனி தமிழ்த்தேசியத்தை பற்றி உங்களுடன் பேசி பயனில்லை!!

  • Replies 143
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

தமிழகத்தில் எத்தனையோ அறிஞர்கள், வல்லுனர்களின் தளங்கள் உள்ளன.சாதாரணமாக கூகிளில் தேடினாலே கிடைக்கும்.  நீங்கள் நாம்  தமிழர் சீமானி  குப்பைத்தளங்களோடு நேரத்தை வீண்டிப்பதால்  நேரம் இல்லை என்பது நியாயம் தான். 

தமிழகத்திலுள்ள அத்தனை அறிஞர்களினதும் வல்லுனர்களினதும் தளங்களும், தமிழுக்கும், தமிழ்தேசியத்திற்கும் என்ன செய்தன என்று கூறுங்கள் கேட்போம்??

4 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழகத்திலுள்ள அத்தனை அறிஞர்களினதும் வல்லுனர்களினதும் தளங்களும், தமிழுக்கும், தமிழ்தேசியத்திற்கும் என்ன செய்தன என்று கூறுங்கள் கேட்போம்??

தமிழ் மக்களுக்கு அறிவை ஊட்டின. விசிலடிக்க கற்று கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

தமிழ் மக்களுக்கு அறிவை ஊட்டின. விசிலடிக்க கற்று கொடுக்கவில்லை.

அப்ப விசிலடிப்பவர்கள், நடிகர்கள் பதாகைக்கு பாலூத்துபவர்கள் அனைவரும் இந்த தளங்களை பார்ப்பதில்லை போல இருக்குதே.🤭

18 hours ago, Dash said:

நான் பொதுவக ஒரு கருத்தை வலியுறுத்தி வருகிறேன் அதாவது தமிழ் தேசியத்தின் முதல் எதிரி சிங்களவன் அல்ல திராவிடன் தான்.

இந்த கருத்தை நம்பும் அளவுக்கு எமது  ஈழத்தமிழ் மக்களின் மூளை கறள்கட்டவில்லை என்பதை தாயக பயணங்களின் போது உணர்ந்தேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

தமிழ் மக்களுக்கு அறிவை ஊட்டின. விசிலடிக்க கற்று கொடுக்கவில்லை.

அவ்வளவு அறிவை இவர்கள் இவ்வளவுகாலமும் ஊட்டினபடியால்தான் தமிழகமே இலவசங்கள், சின்னத்திரை, சினிமா, டாஸ்மார்க் என்று சீரழிஞ்சு போகிதாக்கும்!

2 hours ago, tulpen said:

இந்த கருத்தை நம்பும் அளவுக்கு எமது  ஈழத்தமிழ் மக்களின் மூளை கறள்கட்டவில்லை என்பதை தாயக பயணங்களின் போது உணர்ந்தேன்.

இதில் கறள்கட்ட என்ன இருக்கு? உண்மையையும் யதார்த்ததையும் அறிவது ஒன்றும் கறள்கட்டும் விடயம் இல்லை. இன்னமும் விரிவாக பார்த்தால் மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு வந்து விடுமோ என்பது தான் உங்களது கவலை

திராவிடத்தின் சுயரூபம் தெரியாமல் கருணாநிதி காப்பாற்றுவார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தனர் எமது மக்கள்.

11 hours ago, tulpen said:

தமிழ் மக்களுக்கு அறிவை ஊட்டின. விசிலடிக்க கற்று கொடுக்கவில்லை.

அந்த அறிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?

12 hours ago, Eppothum Thamizhan said:

அப்போ எமது போராட்டம் தவறான எழுச்சி என்கிறீர்கள்! திராவிடத்திற்குள் மூழ்கிவிட்டீர்கள் என்பதற்கு இதைவிட வேறு கருத்துக்கள் தேவையில்லை!! இனி தமிழ்த்தேசியத்தை பற்றி உங்களுடன் பேசி பயனில்லை!!

இவர்கள் திராவிடத்துக்குள் மூழ்கவில்லை: திராவிடத்தை எம்மத்தியில் திணிக்க நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தான் இவர்கள்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

தமிழ் நாட்டு ஊழலைப்பற்றி அடிக்கடி பேசும் பலர் எமது தேசியத்தின் பெயரால் செய்த ஊழலகளை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? 

இதைப்பற்றி பலதிரிகளில் வாதாடியிருக்கிறோம். இவர்கள் திராவிட ஊழல்பேர்வழிகளை விட எம்மினத்துக்கு ஆபத்தானவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆகவே உங்களுக்கு தெரிந்தால் அவர்களது அடையாளங்களை வெளியிடுங்கள். அவர்கள் எமது சமுதாயத்திலிருந்து முற்றாக ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்களே!😡

7 hours ago, Dash said:

திராவிடத்தின் சுயரூபம் தெரியாமல் கருணாநிதி காப்பாற்றுவார் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தனர் எமது மக்கள்.

நீங்கள் என்ன மக்கள் தொடர்பற்று கனவுலகில் வாழ்கின்றீர்களா? ஆயுத போராட்டம் தொடங்கிய பின்னர்  எந்த தமிழக அரசியல் கட்சிகளையோ அதன் தலைவர்களையோ  மக்கள் நம்பவில்லை. பல வேறு இயக்கங்கள் போராடியபோதும் மக்கள் மற்ற இயக்கங்களை நிராகரித்து புலிகளை மட்டுமே நம்பினர். அதனால் தான் புலிகளின் சில அடாவடி நடவடிக்கைகளைக் கூட பொறுத்துக் கொண்டனர்.  

புலிகளுக்கு முழு ஒத்துளைப்பு கொடுத்தனர். புலம் பெயர்நாடுகளில் புலிகளுக்கு மிகுந்த நிதி உதவி அள்ளிக் கொடுத்தனர். தாயகத்தில் புலிகள் கூறிய இடங்களுக்கு எல்லாம் மக்கள் இடம் பெயர்ந்தனர். இறுதியில் துரதிஷ்ரவசமாக  தாம் நம்பிய புலிகளை நம்பியே மக்கள்  ஏமாந்தனர். அந்த உண்மையை மறைக்க தான் தேசியத்தை கூறி மக்களின்  பணத்தை  கொள்ளையடித்த புலம்பெயர் தமிழ்த் தேசிய குஞ்சுகள் திராவிடம், தெலுங்கு, திமுக, கருணாநிதி என்று புதிய கற்பனைக் கதைகளை கூறி ஏமாற்றலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர். இனி மக்கள் இவர்களிடம் ஏமாற போவதில்லை. ஏமாறப்போவது இப்படி கற்பனைக்கதைகளை கூறும் புலம்பெயர் தேசியக்குஞ்சுகள் தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

இந்த கருத்தை நம்பும் அளவுக்கு எமது  ஈழத்தமிழ் மக்களின் மூளை கறள்கட்டவில்லை என்பதை தாயக பயணங்களின் போது உணர்ந்தேன்.

குவாட்டருக்கும் பியாணிப்பொட்டலத்துக்கும் கஞ்சா சரைக்கும் அலையும் கூட்டம், குட்டித்தாச்சி ஆட்டைக்கூட வீட்டு முற்றத்தில் கட்டமுடியவில்லை,  நேற்று ஒரேயடியாக மூன்று மாட்டை அவிழ்த்துக்கொண்டு போயிட்டாங்கள், தெல்லிப்பளை வசாவிளான் பக்கத்திலை கசிப்புக்காச்சுதல் நல்லா நடக்குது. இந்த விறுத்தத்தில மூளை கறள் கட்டவில்லையாம்.

சரிதான் போங்க சார் சீமான் வடக்கால போனால் என்ன கிழக்கால போனால் என்ன. புலம்பெயர் தேசமெங்கும் லூசுக்கூட்டங்கள் கல்யாணசுந்தரம் சீமான் என இரண்டுபட்டுக்கிடக்கினம். 
 
Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2020 at 10:09, tulpen said:

சண்டமாருதன்,   இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பொது துறை ஊழல் என்பது சர்வசாதாரணம். இதற்கும் திராவிடம், ஆரியம், தமிழ்தேசியம் என்ற கருத்தியலுக்கும்  என்ன  என்ன தொடர்பு? இந்தியா முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருந்தாலும் இப்போது நடைபெற்ற ஊழலை விட இன்னும் அதிகமான ஊழலை செய்திருப்பார்கள் என்பது தமிழராய் இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. பணமோசடியில தமிழர்கள் என்றுமே சளைத்தவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த லட்சணத்தில் இந்தியாவில் நடந்த ஊழலுக்கு உங்களுக்கு ஊட்டப்பட்ட இனவெறுப்பை வைத்து அனைத்து பழியையும் திராவிடம், ஆரியம் அடுத்தவன் மீது சுமத்தி காதில் பூ சுற்றுகின்றீர்கள்.

ஐரோப்பாவில் வாழும் ஈழ தமிழர்கள் செய்த பல மில்லியன் கணக்கான பண மோசடிகளை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல. கள்ள கடன் அட்டையில் அடுத்தவன் பணத்தை திருடியதில்  தமிழர்கள் கில்லாடிகள்.  தமிழர்கள் என்றால் பத்தரை மாற்று தங்கங்கள் போல கதையளக்கின்றீர்கள். இன்றும் மற்ற நாட்டு வியாபார நிறுவனங்களில் பயமில்லாமல் எமது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் நாம் தமிழனின் கடை என்றால் பல முறை யோசித்தே கடன் அட்டை உபயோகித்து பணம்  செலுத்தும் நிலை. இறுதி யுத்தத்திற்காக தமிழ் மக்களிடம் பணத்தை கொள்ளையிட்ட அத்தனை பேரும் தீவிர தமிழ் தேசியத்தை நேசித்த தூய  தமிழர்களே என்பதை மறந்து விட்டீர்களா? ஜெயல்லிதாவோ, கருணாநிதியோ ஊழல் செயதவர்  கள் என்று சொல்வதற்கு தமிழரின் பணத்தை தமிழ் தேசியத்தின் பெயரிலேயே திருடியதால் கறைபட்ட தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதுவும் இந்த தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு அந்த தார்மீக  உரிமை இல்லை. 

தமிழ் நாட்டு ஊழலைப்பற்றி அடிக்கடி பேசும் பலர் எமது தேசியத்தின் பெயரால் செய்த ஊழலகளை பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? 

இதற்கு பதிலாக கள்ள மெளனமே கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஏனெறன்றால் இங்கு ஊழல் புரிந்த ஐரோப்பிய தமிழ் தேசியர்கள் தமது ஊழலை மறைக்க தான் திராவிடம், தெலுங்கர் என று புதிய புனைவுகளை பேசி தாம் தப்பிக நினைக்கிறார்கள். 

தனிமனிதர்கள் களவு செய்வதுக்கும் 
நாடு வளத்தை கொள்ளையடிப்பதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 
தமிழ்த்தேசிய அரசியல் என்பது எங்கும் இல்லாத இடத்து வெறும் கற்பனை கதைகளை 
மட்டுமே பேசமுடியும். புலிகளின் சிலகால நிழல் அரசு என்பதை வேண்டுமானால் கொஞ்சம் உதாரணத்துக்கு கொள்ளலாம்  ... அதிலும் விடுதலை போர் முன்னிலையில் இருந்ததால் அதுதான் இறுதி வடிவம் என்ற முடிவுக்கு வரமுடியாது.

தனிமனித கொள்ளைக்கும் வழிகாட்டி அரசுகளே ஊழல் அரசுகளாக இருந்ததுதான் காரணம்.

இந்தியா சுதந்திரம்  பெற்று இன்று வரை தமிழகம் இந்த திராவிட கட்சிகளால் பெற்றது ஒன்றுமே இல்லை 
பெருமைப்பட்டு கூற  கல்வி கலாசாலைகள் உண்டு. அதுக்கு வித்து இட்டவர் காங்கிரஸ் பெருந்தலைவர் காமராசர். ராஜாஜி அவர்கள் பொறுப்பில் இருந்தபோது 500 ஆரம்ப பாடசாலைகளை மூடினார் அதை காமராஜர் எதிர்த்தார் என்றாலும் தடுக்க முடியவில்லை. பின்பு பெரியாரின் வழிகாட்டலுடன் எம்எல்லே தேர்தலில் நின்று ஜெஜித்து காங்கிரஸ் குழுவிலும் ராஜாஜியை தோற்கடித்து வெற்றிபெற்று. ராஜாஜி பூட்டிய 500 பாடசாலைகளுக்கும் இன்னொரு சைவர் போட்டு 5000 ஆயிரம் ஆரம்ப பாடசாலைகள் திறந்தார்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா  எம்ஜிஆர்  கருணாநிதி காலத்தில் வெறும் 50 கல்லூரிகள் இருந்த தமிழகத்தில் 500 வரையான இன்ஜினியரிங் கல்லூரிகள் திறந்தார்கள் இதனால் தமிழகம் கல்வியில் முன்னேறியயது ஆதலால் மிடில் கிளாஸ் சனத்தொகை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பாரிய  ஏற்றத்தை தொட்டது. இதன் காரணமாக தொழில்சாலைகள் தமிழகம் நோக்கி வந்தன .. 

நீங்கள் சான்டமருதன் எழுதிய கருத்தை விளங்காமல் எழுதுகிறீர்கள் ... அல்லது வேண்டும் என்று திசை திருப்பிக்கிறீர்கள். ஈழ விடுதலை போராடடம்  சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக முன்னிலை கொண்டதே தவிர  தமிழ்த்தேசியத்தை அடிப்படையாக கொண்டு உருவானது அல்ல. விடுதலை புலிகள் மரவுவழி இராணுவமாக  மாறிய பின்னர் தேசியம் உள்வாங்கப்பட்டது .. அல்லது தேசிய அடிப்படையில் மரபு வலி இராணுவம்  கட்டமைக்க பட்டது. 
 
21 hours ago, tulpen said:

இது செய்தி அல்ல. நாதமிழர்கட்சி செந்தில் போட்ட டுவீட்.  செந்தில் சொன்ன விடயத்தை அவரின் டுயூட்  Prints screen மூலம் தான் சொல்ல முடியும். 

அவர் சொல்வதைதானே நீங்கள் இன்று செய்கிறீர்கள்?
அது கல்லில் இருந்தால் என்ன ட்விட்டரில் இருந்தால் என்ன? 

கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
 
17 minutes ago, Maruthankerny said:

கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
 
கேட்டால் திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ந்தது என்று காட்டுக் கத்தல் வேற. தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தென் இந்தியாவின் நிர்வாக மையமாக இருந்தது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

கேட்டால் திராவிடத்தால் தான் தமிழகம் வளர்ந்தது என்று காட்டுக் கத்தல் வேற. தமிழகம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தென் இந்தியாவின் நிர்வாக மையமாக இருந்தது தான். 

ஆடி கார் நிறுவனம், வெளிப்படையாக தமிழக அம்மாவின் அரசின் அமைச்சர்கள் பணம் நேரடியாக கேட்கின்றனர் என்று சொல்லியே ஆந்திரா போனது.

ஆந்திராவில், அமெரிக்காவில் கல்வி கற்ற அந்நாட்டு ஆங்கிலம் சிறப்பாக பேசக்கூடிய ஒருவரை வெளிநாட்டு முதலீடுகளுக்கு பொறுப்பாக நியமித்து, இன்று ஆந்திர முதலிடத்தில், தமிழகம் 14 வது இடம்.

தமிழக முதல்வர்  அஞ்சாமப்பு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

கடந்த 20 வருடங்களில் தமிழகம் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறது 
மற்ற மாநிலங்கள் முன்னேறிக்கொண்டு கொண்டு இருக்கின்றன ..
இது இன்னும் ஒரு 10 வருடம் தொடர்ந்தால் தமிழகம் பின்னோக்கி தள்ளப்படும் 
அதைத்தான் நீட் தேர்வு   ஹிந்தி திணிப்பு என்று செய்துகொண்டு இருக்கிறார்கள் 
 
மருதர், சும்மா கருத்தை பலப் படுத்த பொய்யெல்லாம் சொல்லக் கூடாது😊! தமிழ் நாட்டின் மொத்த நிகர உற்பத்தி  வளர்ந்து வரும் ஒன்று! பொருளாதாரத்தில் வேறு சில மாநிலங்களோடு சேர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு! 

எதில் பின்னோக்கிப் போகிறது என்கிறீர்கள்? 

https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-clocks-higher-growth-rate-for-third-consecutive-year/article32289214.ece

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதெல்லாம் இவ்வளவு காலமும் 2000 க்கு முன்பு இருந்ததொழில்  துறையின் வளர்ச்சிகள்  ஊடாக 
வந்து கொண்டிருப்பது. 2000 துக்கு பின்பு வளர்ச்சி  என்று சொல்ல எதுவும் பெரிதாக அரசு சார்ந்து இல்லை.
சில ஐடி கொம்பனிகள் சில புது முகாமைத்துவத்தை அமைத்து கொண்டன. இதோடு பார்க்கையில் ஹைதராபாத் பெங்களூரு போன்றவை இதன் பின்புதான் வளர்ச்சி அடைய தொடங்கின. சரியான அரசு இருந்து இருப்பின் கைதராபாத்தின் தொழித்துறையை 2000தில் கைப்பற்ற கூடிய வளம் தமிழ் நாட்டில்தான் இருந்தது. 

உண்மையை சொல்லப்போனால் நீங்கள்தந்த லிங்கில் இருக்கும் ஜிடிபி கணக்கிலும் விட 
தமிழ்  நாட்டு உண்மையான ஜிடிபி உற்பத்தி தொகை அதிகம். ஆனால் பெரும்பான்மை இந்திய 
கொம்பனிகள் கல்வியறிவு தொழிலார்களுக்காக இங்கே தொழில்சாலைகள் நிறுவனங்களை வைத்துக்கொண்டாலும் அவர்களின் தலைமை காரியாலயத்தை மகாராஷ்த்திராவில் தான் (மும்பை) வைத்து இருப்பதால் அவர்களின் வரி கணக்கு வழக்கு அங்கு இருப்பதால் அவர்களுடைய ஜிடிபி கூடிக்கொண்டு இருக்கிறது. உண்மையில் அந்த கணக்கும் இங்கு சேர்க்கப்பட வேண்டியது. 

கடந்த 20 வருட கைதராபாத் பெங்களூரூ திருவனந்தபுரம் போன்றவற்றின் வளர்ச்சியையும் சென்னையின் வளர்ச்சியையும்  ஒப்பிட்டு பாருங்கள் எங்கு பின்னோக்கி போகிறது என்பது புரியும். வளர்ச்சி குன்றுதலும்  பொருளாதார  ரீதியாக பின்னோக்கியதே. காரணம் வாய்ப்புகளை அடுத்தவர்கள் சூறையாடிக்கொண்டு இருப்பார்கள்.  

சராசரி மனிதர்களின் வாழ்வின் வருமானம் செலவீனம் 
மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி ஏழைகளின் விக்கிசாதாரம் 
பணவீக்கம் போன்றவற்றை வைத்துதான் பின்னோக்கி போகிறதா முன்னேறுகிறதா 
என்பதை எடை போட முடியும். தற்போதையை தமிழ் நாட்டு கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 
எத்தனை வீதம் கல்வி கற்கிறார்கள் பிற மாநிலத்தவர்கள் வீதம் எவ்வளவு அதிகரித்த்து இருக்கிறது போன்றவற்றை வைத்தே உள்ளூர் கல்வி வளர்ச்சியையும் எடைபோட முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தந்த லிங்கில் கூட 2012 இல் இருந்து 2020 வரை 
தமிழ் நாட்டு சராசரி வளர்ச்சி 6.73%  தேசிய சராசரி வளர்ச்சி 6.61%
இது மிக பெருத்த வீழ்ச்சி 2000ஆம் ஆண்டு முன்னைய காலத்துடன் ஒப்பிடும்போது  

இதுக்கு கடந்த 20  30 வருட திராவிட கடசிகளின் தில்லாலங்கிடிதான் முதல் காரணம் 

மக்கள் நலன் மக்கள் நலன் என்று பேசுவார் 
தம் மக்கள் நலன் ஒன்றையே கண்ணாய் கொள்ளுவார் 

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் செலவு ரீதியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்று.
உலக பணக்காரர்களையும் ஜெயலிதாவையும் ஒப்பிட்டு பாருங்கள் 

தமிழக வளர்ச்சியின் மறைக்கப்பட்ட உண்மைகள்... சாதனை தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

நீங்கள் தந்த லிங்கில் கூட 2012 இல் இருந்து 2020 வரை 
தமிழ் நாட்டு சராசரி வளர்ச்சி 6.73%  தேசிய சராசரி வளர்ச்சி 6.61%
இது மிக பெருத்த வீழ்ச்சி 2000ஆம் ஆண்டு முன்னைய காலத்துடன் ஒப்பிடும்போது  

இதுக்கு கடந்த 20  30 வருட திராவிட கடசிகளின் தில்லாலங்கிடிதான் முதல் காரணம் 

மக்கள் நலன் மக்கள் நலன் என்று பேசுவார் 
தம் மக்கள் நலன் ஒன்றையே கண்ணாய் கொள்ளுவார் 

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் செலவு ரீதியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்று.
உலக பணக்காரர்களையும் ஜெயலிதாவையும் ஒப்பிட்டு பாருங்கள் 

மருதர், ஒரு தவறைச் சுட்டிக் காட்டினால் அது தவறாக இருந்தால் ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்ச்சி வேண்டும்! எப்படி சராசரி வளர்ச்சி கண்டு பிடித்தீர்கள்? தமிழக வளர்ச்சி 8 ஆண்டுகளைக் கூட்டி எட்டால் பிரித்து பின்னர் இந்தியாவின் வளர்ச்சி வீதத்தோடு ஒப்பிட்டீர்கள் போல! பூச்சுத்துவதற்கு ஒரு எல்லையில்லா ஐயா🤔? வருட சராசரி வளர்ச்சி என்பது ஒரு ஆண்டில் வரும் நான்கு காலாண்டுகளின் வளர்ச்சி வீதத்தின் அளவேயொழிய கடந்த ஆண்டுகளைக் கூட்டி ஆண்டுகளால் பிரிப்பதல்ல! இது தமிழ் நாட்டில் அதிகரித்திருக்கிறதா இல்லையா? 

(வேண்டாம், பதில் சொல்லி வாசிப்பவர்களின் புத்தியை அவமதிக்காதீர்கள்! இணைப்பைப் பார்த்து வாசிப்போரே புரிந்து கொள்வர்!) 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

2012இற்கும்  2020 க்கும் இடையேயான 8 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை நீங்கள் எழுதுங்கள் 
நாங்கள் வாசிக்கிறோம் 

என்னுடைய கருத்தே கடந்த 20 வருடம் பற்றியது அது வேறு விடயம் 

பிற மாநிலங்களில் நடந்த எதிர்பாராத வீழ்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சி அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

2012இற்கும்  2020 க்கும் இடையேயான 8 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை நீங்கள் எழுதுங்கள் 
நாங்கள் வாசிக்கிறோம் 

உங்களுக்கு நான் எழுதி விளங்கி..🤦‍♂️இணைப்பில் அட்டவணை பார்த்தால் என் 10 வயது குழந்தைக்கே புரிந்து விடும், உங்களுக்கு புரிந்தாலும் பொய்களை வைத்து கருத்தை தாங்கி நிறுத்த வேண்டிய அவல நிலை! யான் என்ன பண்ணும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

உங்களுக்கு நான் எழுதி விளங்கி..🤦‍♂️இணைப்பில் அட்டவணை பார்த்தால் என் 10 வயது குழந்தைக்கே புரிந்து விடும், உங்களுக்கு புரிந்தாலும் பொய்களை வைத்து கருத்தை தாங்கி நிறுத்த வேண்டிய அவல நிலை! யான் என்ன பண்ணும்?

அட்டவணையை அது கிடக்கட்டும் சராசரி வளர்ச்சியை நீங்கள் எழுதுங்கள் 

இன்னும் பிறக்காத சிசுக்களுக்கு ஒருவேளை விளங்கலாம் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

அட்டவணையை அது கிடக்கட்டும் சராசரி வளர்ச்சியை நீங்கள் எழுதுங்கள் 

🤣அட்டவணையில் என்ன இருக்கிறதென்றே தெரியாமல் தான் இந்த அவியலா? அது தான் சொன்னேனே?  வாசித்துப் புரியக் கூடியோருக்கு உங்கள் அவியல் இப்போது தெளிவாக விளங்கியிருக்கும்!

என் வேலை இங்கே அது மட்டுமே!

(உங்களுக்கு விளங்காதென்பது வெள்ளிடைமலை, எனவே அமைதியாக அடுத்த அவியலை ரெடி செய்யுங்கள்!)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதியவனை சுரண்டி பிழைப்புக்கு நடத்துவதுக்கு  பதில் 
கருத்துக்களை பற்றி  முதலில் எழுத பழகுகுங்கள் முதுர்ச்சஹஸி பற்றி பின்பு பார்க்கலாம் 

நிலை நல்லதொரு இணைப்பை இணைத்து இருக்கிறார் கொஞ்சம் வாசியுங்கள் உங்கள் மனநிலை 
கொஞ்சம் கண்ணாடியில் தெரியும்  

1 minute ago, Justin said:

🤣அட்டவணையில் என்ன இருக்கிறதென்றே தெரியாமல் தான் இந்த அவியலா? அது தான் சொன்னேனே?  வாசித்துப் புரியக் கூடியோருக்கு உங்கள் அவியல் இப்போது தெளிவாக விளங்கியிருக்கும்!

என் வேலை இங்கே அது மட்டுமே!

(உங்களுக்கு விளங்காதென்பது வெள்ளிடைமலை, எனவே அமைதியாக அடுத்த அவியலை ரெடி செய்யுங்கள்!)

நான் கேட்டது கடந்த 8 வருட சராசரி வளர்ச்சியை எழுத சொல்லி 
எனக்கு அட்டவனை படிப்பிக்க கேட்கவில்லை 

முடியாட்டி மூடிக்கொண்டு போகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

TH07Economy-Growthcol

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.