Jump to content

பன்றிக் கறி செய்யும் முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Pig Eating GIFs | Tenor

பன்றி என்னத்தைத் தின்றால் என்ன பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் போதும்.......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்றிக் கறி சமைக்கும் அடிப்படை இரகசியத்தை (வீடியோ இல் உள்ளது) அவர் வெளிப்படடையாக  சொல்லவில்லை.

1. pressure cooker இல் சமைப்பது. இது அவரவர் விருப்பம் ஆயினும், இது பன்றி இறைச்சியின் கடிபடும் texure ஐயும், கறியின் சுவையையும் குறைத்து விடும். 

2. பன்றி இறைச்சியை, சிறிய துண்டுகளாக வெட்ட முன்பு, பெரிய துண்டாக தணலில் (விறகு அல்லது கரி தணல்  என்றால் இன்னும் நல்லது), grill இல், அல்லது blow torch ஆல்  தணலில் அல்லது நெருப்பில் தொடுகை இல்லாமல்வாட்டப்பட வேண்டும். குறிப்பாக பன்றி வார், அதாவது தடித்த கொழுப்புடன் சேர்ந்த தோல் வாட்டப்பட வேண்டும். இப்படி சமைப்பது  கறியோ (அல்லது தமிழ் நாடு மொழியில் வறுவல்)   வாசமாக வரும். வாட்டிய பின்பு ஆறவிட்டு, ஏற்ற அளவு துண்டுகளாக வெட்டுவது. ஏனெனினில், இது இறைச்சில் உள்ள ஊனை இறைச்சிக்குள் பிடித்து வைத்திருக்கும்.  

3. அப்படி வெட்டிய துண்டுகளை கூட  உலோகத்தாலான சட்டியில் மெலிதாக வாட்டி எடுப்பது (இதுவும்  குழம்பாக சமைக்கும் போது ஊனை பிடித்து வைத்து இருபதற்கு).  வாட்டி, ஆற விட்டு, சமைக்கவும்.

2-3  படிமுறை சமைத்த பின் துண்டுகள் உள்ளே ஈரலிப்பாக (moist) ஆக இருப்பதற்கு.         

4. சுவாலை நெருப்புள்ள அடுப்பில் சமைப்பது.

5. சமைக்கும் சட்டி. அவரை அறியாமல் cast iron pan பாவிக்கிறார் என்றே நம்ப வேண்டி உள்ளது. அது கறிக்கு சுவையூட்டும். அல்லது மண் சட்டி, இதில் சமைக்கும் போதுள்ள சுவை தனித்தன்மையானது. அல்லது சீனச் சட்டி (இப்பொது பாவனைக்கு வருகிறதோ தெரியாது). 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kadancha said:

பன்றி கறி எக்ஸ்பேற்..... உடையாருக்கு முன்னமா, துண்டைக் போட்டு ஒக்காந்திட்டார். 👍

உடையார்... ?😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

பன்றி கறி எக்ஸ்பேற்..... உடையாருக்கு முன்னமா, துண்டைக் போட்டு ஒக்காந்திட்டார். 👍

உடையார்... ?😟

உடையார் எப்படி  கடைஞ்சாலும்  அவர் உடையார்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

Pig Eating GIFs | Tenor

பன்றி என்னத்தைத் தின்றால் என்ன பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் ஆரோக்கியம் போதும்.......!  😎

ஐபீரியன் (breed) வளர்ப்பு பன்றி.  

காட்டுப் பன்றியில்  இருந்து வளர்ப்புக்காக இயற்கையாக கூர்படைவிக்கப்பட்டது.

காட்டுப் பன்றியில்  தந்தங்கள் இருக்கும் தாடைப் பகுதியில்  அதற்கு உள்ள புடைப்பு  இன்னும் அப்படியே இருக்கிறது..     

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

நான் பன்னிக்கறி சமைக்கிறதிலை பெரிய விண்ணன் எண்டதை இந்த இடத்திலை சொல்ல வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன். அதிலையும் விதம் விதமாய் சமைக்கிறதிலையும் விற்பன்னன்.😎
ஆகையால்.......
எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்:cool:

ஒத்த முனைகள் ஒன்றையென்று கவராது😎 எனவே நான் சொல்லுறது விளங்க வேண்டிய ஆக்களுக்கு இப்ப விளங்கியிருக்கும் எண்டு நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

Pin von Inge Mel auf Gif in 2020

இங்கே பன்றி அதிஷ்டம் தரும் மிருகமாக கருதப்படுகின்றது.

பண உண்டியலாகவும் பாவிப்பார்கள். அந்தளவிற்கு ஒரு அதிஷ்ட பிராணி.

Warum gewinnt unser innerer Schweinehund so oft? - Diätenvergleich - die  Testsieger 2020 Hallo Schweinehund! - So setzen Sie Vorsätze erfolgreich um | UBGM 

பன்றியை.. அதிர்ஷ்ட மிருகமாக கொண்டாடினாலும்,
ஒருவரைப் பார்த்து... பன்றி (Schwein) என்று கூறினால் கோவிப்பார்கள்.
அதிலும்...  பன்றி நாய்  (Schweinehund), என்று சொன்னால்.. 
முகம் எல்லாம் சிவந்து, சரியான கோவம் வரும்.  

ஜேர்மனியில்... ஒருவரை திட்ட,
முதலில் அநேகமானவர்கள் பாவிக்கும் சொல்.. பன்றிதான்.
மற்றைய நாடுகளிலும்... இந்தச் சொல்லை பாவித்துத்தான் திட்டுவார்களா.. என்று அறிய ஆவல். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, தமிழ் சிறி said:

மற்றைய நாடுகளிலும்... இந்தச் சொல்லை பாவித்துத்தான் திட்டுவார்களா.. என்று அறிய ஆவல். :)

தமிழ் நாட்டில் திட்டுவதுண்டு..!

இப்ப சந்தோசமா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டில் திட்டுவதுண்டு..!

இப்ப சந்தோசமா..?

ஓம்... சந்தோசம், ஆனால் ஒரு சந்தேகம்...  ராஜவன்னியன். :grin:
தமிழ் நாட்டில், 🐷 பன்றியை... ஏன் பன்னி  என்றழைக்கிறார்கள்.
ஈழத்தில்... அதை, நாம்... பண்டி🐖 என்று சொல்வோம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, உடையார் said:

இதில சொல்லிப்புட்டன் நீங்களோ மருதங்கேணியோ ஒருவரும் போட்டிக்கு வரப்பிடாது😡

உங்களுக்கு ஏற்கனவே ஒரு முறை ஆகியிருக்கு 
இங்களைப்போன்ற இளையவர்களை கரை சேர்க்காது 
நீங்கள் என்னும் இந்த அநியாய எண்ணம் ஒருபோதும் ஈடேற கடவ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்... சந்தோசம், ஆனால் ஒரு சந்தேகம்...  ராஜவன்னியன். :grin:
தமிழ் நாட்டில், 🐷 பன்றியை... ஏன் பன்னி  என்றழைக்கிறார்கள்.
ஈழத்தில்... அதை, நாம்... பண்டி🐖 என்று சொல்வோம். :)

உந்த சொல் சிலம்பம், துண்டற அறியேல்லை மோனே..! 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

உந்த சொல் சிலம்பம், துண்டற அறியேல்லை மோனே..! 😜

இரண்டும் ஒன்றுதான் வன்னியர்.......நாங்கள் அதை வல்லினத்தில் பண்டி என்று  சொல்வதால் அடிபட்டு மண்டை உடையிறது உறுதி......!

Mexico Fuck You GIF by VICE Media Spain - Find & Share on GIPHY

நீங்கள் அதை இடையினத்தில் பன்னி என்று சொல்வதால் .......வெறும் டச்சிங் டச்சிங்குடன்  முடிந்துவிடும்.....!

New trending GIF online: , animated, friends, fighting, animated gif,  monica, phoebe buffay, rachel green, monica geller, flick, cat fight,  flicking, rachel friends, monica friends, monica bing, chick fight, phoebe  friends, monica

இப்ப உங்களுக்கு விளங்கி இருக்கும் ......!   😎

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீப் ப்ரை செய்வது எப்படி? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2020 at 03:03, Nathamuni said:

பீப் ப்ரை செய்வது எப்படி? 

Beef எனும் போது,, இதுவோ (அதாவது beef fry ஓ) அல்லது வேறு எந்த சமையல் முறை (கறி, roast) சமைத்தால்,  எந்த Beef  பகுதியில் நன்றாக வரும் என்பதை தெரிந்து வைத்து இருப்பது நல்லது.

ஏற்கனவே சொன்னது போலவே, pressure cooker இல் எந்த இறைச்சியை சமைத்தாலும் அதில் உள்ள வேண்டாத பாதிப்பு இறைச்சியில் உள்ள ஊனை பிதுக்கி வெளியேற்றி விடும். 

பின்பு சமைக்கும் போது இறைச்சி காய்ந்ததாக  வரும் 

ஆனால், Beef flank எனப்படும் பகுதி, உடனடி சமையலில் மிகவும் வைரமாக வருவதால், பிரஷர் cooker இல் பெரிய துண்டுகளாக அவித்து, பின்பு வேண்டிய அளவு துண்டுகளாக  வெட்டி பாவிக்கலாம்.  

Beef இல் fry என்றால், beef ribs இல் இருக்கும் மாட்டு இறைச்சியை கேட்டு வாங்குங்கள். வெளியில்  தெரியும் எல்லா கொழுப்புக்களையும் நீக்கியும், ஒரு பகுதியை தனி தசை ஆகவும். எலும்போடு சேந்த இறைச்சியை 1/2 - 1 இஞ்சி தூண்டவும் வெட்டி தருமாறு கடையில் கேட்டு வாங்குகள்.

இந்த பகுதி இறைச்சி, வெளியில் தெரியும் கொழிப்புகளை நீங்கியவுடன், மிக குறைந்த கொழுப்பு marbleing ஓடு வருவதால் fry க்கு ஏற்ற பகுதி ஆகும்.

அனால், வேறு தசை  பகுதிகளும் கலந்து, முக்கியமாக மாட்டின் குடல் (dressed, white colour, ஒரு மணமும் குணமாகும் இல்லாதது, சேர்க்கப்படும் spice ஐ உள்ளித்து வாயில் மென்றும் பொது வெளிவிடும் ) சேர்த்தால் Beef fry, ருசியானதாகவும், வாய்க்கு இதமான மெல்லக் கூடிய துண்டுகளோடும் வரும். 

பன்றியை சொன்னது போலவே, சட்டி இரும்பு, ஸீனத் சட்டி அல்லது மண் சட்டி பாவிக்கவும்.

உங்களுடளுடைய உடல் நலத்தை கவனித்து, Beef fry செய்யலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, Kadancha said:

மாமிச சமையல் வித்தகர் அய்யா நீர். 👏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2020 at 18:50, Nathamuni said:

மாமிச சமையல் வித்தகர் அய்யா நீர்.

வித்தகரோ என்னவோ,  ஒரு பகுதி மாட்டு இறைச்சியில்  (அல்லது எந்த இறைச்சி, கடலுணவு ஆயினும்)  கறி, வறட்டிய பிரட்டல் (இதையே தமிழ் நாட்டில் fry அல்லது வறுவல் என்கிறார்கள்) போன்றவை ருசி இல்லாததாக மற்றும் இறைச்சி சாப்பிடும் திருப்தி இல்லை.

இதுவே எனது தேடலுக்கு ஓர் காரணம்.

மற்றது, இறைச்சியில், உள்ளுறுப்பு (ஈரல் போன்றவை, organ meat)  அளவாக சேர்ப்பது அவசியம்., ஒன்று சில சத்துக்களுக்காக.

மற்றது அவை எதோ ஓர் விதத்தில் உடனடி (fresh) இறைச்சியின்  saturated  fat மற்றும்  carcinogenic (by the way, this is by correlation and not causative)  என்று நம்பபப்படும் தன்மையின்  இன் விளைவுகளை சமப்படுத்துகின்றது. 

இதைப் பற்றி இப்போது விஞ்ஞான ஆய்வுகள் நடக்கிறது. 

ஆனால், இதை எனது அம்மா, மற்றும் அப்பாவுக்கு முந்தைய தலைமுறையினர் (அதாவது ஆச்சி, அப்பு மற்றும் அவர்களின் சமகாலத்தவர்) எல்லோருமே சொல்லித் தந்தார்கள். 

அவர்கள் saturated  fat மற்றும்  carcinogenic   என்று சொல்லவில்லை,  அவை இறைச்சியோடு சேர்ப்பது உடல் நலத்திற்கு அவசியம் என்றே சொன்னார்கள். 

அதனால், இறைச்சி கறியாக, பிரட்டலாக, அநேகமான roast செய்யும் போதும்,  ஒரு பகுதியாக இல்லாமல், பலத்தையும் கலந்தே சமைப்பது.

நீங்களும் சில வேளைகளில், இதை அறிந்து இருக்கலாம்.     

இங்கு நான் processed meat ஐ பற்றி கதைக்கவில்லை.    

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.