Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாக்டர் வசூல் ராணியை வாழ்துவோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ரதி said:

எதுக்கும் நானும் ஒரு வாழ்த்தை டாக்டர் நில்மினி அம்மாவுக்கு சொல்லி வைப்பம்...இல்லாட்டில் கொஞ்ச  பேர் எரிச்சல் என்று சொல்லுவினம்.
 

உண்மையும் அதுதானே. 😎

  • Replies 67
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உண்மையும் அதுதானே. 😎

அண்ணை , உங்கட தங்கச்சி பாவமெல்லே?

1 hour ago, Kapithan said:

உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இரதி.

தகுதியான ஒருவரைப் பாராட்டுவதற்கு எனக்கு முதலில் தகுதி வேண்டுமே... 🤔

எதற்கும் அவருக்கு எனது வாழ்த்தைத் தெரிவிப்போம். (பின்னுக்கு உதவும்)😂

நில்மினி அக்காவுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக. 💐💐

நன்றி Kapithan . பின்னுக்கு உதவுமெண்டால் என்ன எண்டு விளங்கேல🤣 நானே எந்த ஆசிரமம் நல்லம் எண்டு யோசிச்சு கொண்டு நிக்கிறன்🤔 டொக்டர் படிப்பிப்பு , ஆராச்சி எல்லாத்தையும் விட்டுட்டு  நிம்மதியாக சிவனே எண்டு இருக்கலாம் எண்டு இருக்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

வாழ்த்துக்கள் மருத்துவ சகோதரி நில்மினி.
இவர் எழுதும் மருத்துவத்துறை தாண்டி ஆழமான ஆன்மீக தேடலையும் கொண்டவர் என்பது ஒரு சிறப்பம்சம்.
உங்களின் உடல் , உள ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

மிகவும் நன்றி Sasi-Varnam . ஓமோம், ஆன்மிகம் என்னை அறியாமலேயே அப்பாவிடம் இருந்து எனக்கு தொத்திட்டுது என்று நினைக்கிறன். உங்கள் அக்கறைக்கு மீண்டும் நன்றி. நிச்சயம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்து இன்னும் பல நல்ல விடயங்களை எனக்கும், குடும்பத்தாருக்கும், மற்றவர்களுக்கும் நிச்சயம் செய்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎10‎-‎2020 at 10:56, nilmini said:

உங்களை யார் என்ன ஏது என்று தெரியாமலேயே உங்கள் ஆளுமையை ஓரளவு விளங்கி வச்சிருக்கிறன் என்று நினைக்கிறன் ரதி 🤔 என்றபடியால் இந்த திரியில் வந்து வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் மனதளவில் பாராட்டுவீர்கள்  என்று  எனக்கு தெரியும். பாராட்டுக்கு நன்றி:295_rose: 

நீங்கள் தான் என்னை சரியாய் புரிந்து வைத்து இருக்கிறீர்கள் நில்மினி...நீங்கள் யாழிற்கு வந்ததில் இருந்து உங்கள் மேல் மதிப்பும்,மரியாதையும் இருக்கின்றது ...வாழ்க வளமுடன் ...உங்கள் சேவை தொடரட்டும் .
 

On ‎08‎-‎10‎-‎2020 at 15:53, குமாரசாமி said:

உண்மையும் அதுதானே. 😎

இவ்வளவு காலமாய் இந்த தங்கையை தெரிந்தும்  புரிந்து கொள்ளவில்லையே அண்ணா ...ஐயோ என் இதயம் சுக்கு நூறாய் வெடிக்கின்றதே 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் தான் என்னை சரியாய் புரிந்து வைத்து இருக்கிறீர்கள் நில்மினி...நீங்கள் யாழிற்கு வந்ததில் இருந்து உங்கள் மேல் மதிப்பும்,மரியாதையும் இருக்கின்றது ...வாழ்க வளமுடன் ...உங்கள் சேவை தொடரட்டும்

நான் யாழில் உறுப்பினராக  சேர்ந்தது 2009 ஆம் ஆண்டு மார்கழி 31. முக்கியமாக  தூயா அவர்களின் சமையல் குறிப்புகள்,  பருத்தித்துறை தோசை செய்முறை எல்லாம் நினைவிருக்கிறது. ஆனால் பதிவு ஒன்றும் போடுவதில்லை  ரதி .

மு.கு. நீங்கள் நீங்களாகவே இருங்கள். மதிப்பவர்கள் மதிப்பார்கள், விரும்புவர்கள் விரும்புவார்கள். வெறுப்பவர்கள் நீங்கள் என்ன செய்தாலும்  வெறுக்கத்தான் போகிறார்கள்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nilmini said:

நான் யாழில் இருப்பினராக சேர்ந்தது 2009 ஆம் ஆண்டு மார்கழி 31. முக்கியமாக  தூயா அவர்களின் சமையல் குறிப்புகள், முக்கியமாக பருத்தித்துறை தோசை செய்முறை எல்லாம் நினைவிருக்கிறது. ஆனால் பதிவு ஒன்றும் போடுவதில்லை  ரதி .

மு.கு. நீங்கள் நீங்களாகவே இருங்கள். மதிப்பவர்கள் மதிப்பார்கள், விரும்புவர்கள் விரும்புவார்கள். வெறுப்பவர்கள் நீங்கள் என்ன செய்தாலும்  வெறுக்கத்தான் போகிறார்கள்.

மு.கு.: என்றால்.. என்ன, நில்மினி ⁉️
பகிடிக்கு கேட்க வில்லை.  "சீறியஸாக"  கேட்கின்றேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மு.கு.: என்றால்.. என்ன, நில்மினி ⁉️
பகிடிக்கு கேட்க வில்லை.  "சீறியஸாக"  கேட்கின்றேன். :grin:

மு.கு என்றால் முக்கிய குறிப்பு சிறி 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nilmini said:

மு.கு என்றால் முக்கிய குறிப்பு சிறி 😁

நில்மினி,  மு.கு. என்றால்.... முதுகு நோ... என நினைத்து விட்டேன்.   🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

 

இவ்வளவு காலமாய் இந்த தங்கையை தெரிந்தும்  புரிந்து கொள்ளவில்லையே அண்ணா ...ஐயோ என் இதயம் சுக்கு நூறாய் வெடிக்கின்றதே 

 

என்ரை இதயமும் சுக்கு நூறாய் சிதறிப்போச்சுது....தங்கச்சி :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  சகோதரி

வாழ்த்துகளும் நன்றிகளும்

யாழ் களம் தேக்கநிலையை அடையும்  போதெல்லாம் சிறு தடுமாற்றம் வருவதுண்டு

மெல்ல   யாழும் இனி ....???? என

ஆனால்  உங்களைப்போன்றவர்களின்  வருகை தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது

தொடர்ந்து நேரம்  கிடைக்கும்  போதெல்லாம் படையுங்கள்

பந்தியில்  காத்திருக்கின்றோம்

வாழ்க நலமுடன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இணைய தள தகவல்களில் யாரையும் எந்த தகவலையும்  எப்போதுமே நூறுவீதம் நம்புதுவதில்லை, பலருக்கும் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு அது, 

எனக்கு மட்டும் இருந்தால் அது தவறாகிடுமா என்ன?

நான் படித்தது வர்த்தகம்,

அந்த நாட்களில் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் எங்களுடன் பேசவே மாட்டார்கள்.

 ஊரே ஒதுக்கி வைத்த’ மாணவ செல்வங்கள்தான்   ..ஆர்ட்ஸ் & கொமர்சில் இருப்பார்கள்.

நில்மினி எனும்  அங்கீகாரம் பெற்ற மருத்துவர்,  தனது கல்வி திறமை, மொழி திறமை ,

Phd    படிச்சு முடிக்குறதுக்கே அவனவன் மூச்சு வாங்கும் நிலமை உள்ள நிலமையில்...

அதை தேர்வு செய்த மாணவர்களுக்கு கற்பிக்கும் தொழிலை கொண்டிருப்பதெல்லாம்,

பலபேருக்கு தலை சுற்றும் விசயம்....

 

இத்தனை  தகுதி வாய்ந்த நீங்க யாழில் எந்த பீலாவும் காட்டாமல் சக கள உறவுகளுடன்  சுத்த தமிழில் பேசுவதும்,

அபரிமிதமான மருத்துவ தகவல்கள் வழங்குவதும்...

ஒரு உண்மையான மருத்துவருடன்  /படித்தவருடன்  யாழின் சாதாரண மனிதர்கள் 

இணைந்திருப்பது  தகவல்களை  பகிர்வது  சாதரணமாக உரையாடுவது  அற்புதமான அனுபவம்...

தலை கனமில்லாத உங்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள்  மருத்துவர் அக்கா.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

வணக்கம்  சகோதரி

வாழ்த்துகளும் நன்றிகளும்

யாழ் களம் தேக்கநிலையை அடையும்  போதெல்லாம் சிறு தடுமாற்றம் வருவதுண்டு

மெல்ல   யாழும் இனி ....???? என

ஆனால்  உங்களைப்போன்றவர்களின்  வருகை தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது

தொடர்ந்து நேரம்  கிடைக்கும்  போதெல்லாம் படையுங்கள்

பந்தியில்  காத்திருக்கின்றோம்

வாழ்க நலமுடன்

வணக்கம் விசுகு அவர்கள், உங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு எனது நன்றிகள். யாழ்  கள உறவுகளுக்கு எனது  பங்களிப்பு, அறிவுரைகள் எவ்வாறு உதவுகிறதோ அல்லது ஆறுதல் அளிக்கிறதோ  அதை விட மேலாக உங்கள் எல்லோரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. உங்களது அங்கீகாரம் என்னை மேலும் பல விடயங்களையும் பகிர்ந்து மகிழ்விக்கலாம் என்று தோன்றுகிறது. மருத்துவ ஆலோசைனைகள் கூறுமளவுக்கு நான் ஒரு வைத்தியர் இல்லாவிட்டாலும், மருத்துவ துறையில் படிப்பிப்பதாலும், மருத்துவர்களோடு நிறய கலந்தாலோசிப்பதாலும் எனக்கு சில விடயங்களை எழுத முடிகிறது. அத்துடன் ஆராய்ச்சி, மனித உடல்களை வெட்டி நேரடியாக பார்ப்பதாலும் என்னும் கொஞ்ச கூட தகவல்களை அறியக்கூடியதாக இருக்கிறது. தொடர்ந்து பயணிப்போம். உங்களைப்போலவே நானும் மற்ற கள உறவுகளின், படைப்புகள், பகிடிகள், பிக்கல்  புடுங்கல்களை  வாசித்து சிந்திக்க, சிரிக்க பந்தியில் காத்திருக்கிறேன் . 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

இணைய தள தகவல்களில் யாரையும் எந்த தகவலையும்  எப்போதுமே நூறுவீதம் நம்புதுவதில்லை, பலருக்கும் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு அது, 

எனக்கு மட்டும் இருந்தால் அது தவறாகிடுமா என்ன?

நான் படித்தது வர்த்தகம்,

அந்த நாட்களில் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் எங்களுடன் பேசவே மாட்டார்கள்.  ஊரே ஒதுக்கி வைத்த’ மாணவ செல்வங்கள்தான்   ஆர்ட்ஸ் & கொமர்சில் இருப்பார்கள்.

வணக்கம்  Valavan,

நானும் இணையத்தளங்களில் விடயங்களை தேடும்போது மிகவும் அவதானமாக இருப்பேன். சமையல்குறிப்பு ஏதாவது பாப்போம் என்றால் தேத்தண்ணியே ஊத்த தெரியாதவர்கள் எல்லாம் பிரியாணி  செய்முறையை இணையத்தளங்களில்  பதிவிடுகிறார்கள். எமது மாணவர்களுக்கும் நாம் படிப்பிக்கும்போது படிப்பு சம்பந்தமான குறிப்புகளை தேடுவதற்கு சில நல்ல இணையதளங்களை குறிப்பிட்டு சொல்வோம். எனக்கு தெரியாதவற்றை தெரிந்ததுபோல் எழுதுவதில் எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை . நிறைய வாசித்து, சில மருத்துவருடன் அறிவுரை கேட்டு, எனது சொந்த அனுபவம், அவதானிப்பு இவைகளை கொண்டுதான் நான் எழுதுவது.

" அந்த நாட்களில் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் எங்களுடன் பேசவே மாட்டார்கள்.  ஊரே ஒதுக்கி வைத்த’ மாணவ செல்வங்கள்தான் ஆர்ட்ஸ் & கொமர்சில் இருப்பார்கள்"
இது ஊர் அறிந்த உண்மை. நான் பள்ளிக்கூடத்தில் சராசரி மாணவிதான். நல்ல பள்ளிக்கூடங்களில் படித்திருந்தாலும் ஆசிரியர்கள் எனக்கேற்றவர்களாக இருக்கவில்லை. சிறு வயதில் மாத்தளையில் அப்பாவின் பெயரால் கொஞ்சம் செல்வாக்காக இருந்ததால் பள்ளிக்கூடத்திலும்  அதிக கவனிப்பால் படிப்பு கொஞ்சம் நல்லாவே ஏறியது. பின்னாளில் சில பல சூழ் நிலைகளால்  படிப்பில் கவனம் செலுத்த கொஞ்சம் அவ்வப்போது தடங்கலாகவும்  இருந்தது. அத்துடன் கொழும்பில் என்னுடன் நிறைய பணக்கார, அந்தஸ்து மிகவும் கூடிய  மாணவிகள் மீது ஆசிரியர்கள் அதிகம் பாரபட்சம் காட்டுவதை பார்த்து மனம் கொஞ்சம் கவலைப்பட்டதால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. ஆனால் விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வமும் அதை சக மாணவிகள், தங்கைகளுக்கு சொல்லிக்கொடுப்பதிலும் மிகவும் ஈடுபாடு இருந்தது.

இப்படி இருக்கும்போது   A/L  போகும்போது அப்பா கொமெர்ஸ் பிரிவில் படிக்கும்படி கேட்டதால் விருப்பம் இல்லாமல் அந்தப்பிரிவில் சேர்ந்தேன். அதனால் நிறையபேர் முக்கியமாக உறவினர்கள் இவ O/L  இல் நல்ல ரிசல்ட்ஸ் எடுக்கேல போல என்று குறைவாக கதைத்தார்கள். இது எமது மக்களின் பெரும் குறைபாடு. அது என்னை பாதித்தாலும் அப்பாவுக்காக படிக்கத்தொடங்கினேன் (வணிகமும் நிதியியலும்  by ஞானேந்திரன் புத்தகம் எழுதியது எனது பெரியப்பாதான்). பிறகு வேறு ஒரு காரணத்தால் விஞ்ஞான பிரிவுக்கு மாறும்படி ஆகிவிட்டது. மனதளவில் சந்தோசம் என்றாலும் வீட்டுக்கு போய் சொல்லும்போது அப்பா கவலைப்படுவாரே என்று யோசித்தேன். "மகள் தாரமும் கல்வியும்  தலை விதிப்படியே, நீயும் நானும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னார்.

நாட்டு நிலமையும் தலை கீழாக இருந்ததால் ஒருநாள் அம்மா அப்பாவுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்தபோதுஒரு சம்பந்தமும் இல்லாமல் திடீரென என்னை இந்தியாவில் விட்டு படிப்பிக்க முடியுமா என்று கேட்டது எனக்கு அவ்வளவு நினைவில்லை. ஆனால் அம்மா அடிக்கடி அதை எனக்கு சொல்லுவா. அவர்கள் என்னை நம்பி அனுப்பியதால் மிகவும் கவனமாக படித்து பிறகு அப்பாவின் ஆலோசையின்படி  MSc படிப்பும் ஸ்கொலர்ஷிப்புடன்  படிக்க அனுமதி கிடைத்து அன்று இரவு அப்பாவுக்கு சொல்லி கொண்டாடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்க அதே இரவு அப்பாவின் திடீர் மரணம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை நடப்பதெல்லாம் ஒரு கனவு மாதிரியும் மனதளவில் ஒட்டாமல் ஏனோ  தானோ என்று செய்வதுபோல்தான் இருக்கு. அப்பாவை இழப்பு என்னை மிகவும் பாதித்து விட்டது.

அப்பாவின் நற்பண்புகளை நானும் பின்பற்றி அவர் இல்லாவிட்டாலும் அவரை நினைத்தே பொதுவாக எல்லா காரியங்களையும்  செய்கிறேன். 
இந்த பீலா, பில்டப், அதிகப்பிரசங்கித்தனம்  செய்பவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக, பரிதாபமாக இருக்கும்.  அவர்கள் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள இன்னும் நிறய இருக்கு. 
உங்கள் பாராட்டுக்கு மிகவு நன்றி.

பி. கு : நான் மருத்துவர் இல்லை. அமெரிக்காவில் PhD Biomedical Science படித்து இப்போது மருத்துவ கல்லூரியில் படிப்பிக்கிறேன். அனடமி படிப்பிப்பதால் உடலை பற்றியும், நோய்களை பற்றியும் ஓரளவு தெரியும்.

Edited by nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nilmini said:

அதே இரவு அப்பாவின் திடீர் மரணம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை நடப்பதெல்லாம் ஒரு கனவு மாதிரியும் மனதளவில் ஒட்டாமல் ஏனோ  தானோ என்று செய்வதுபோல்தான் இருக்கு.
 

கண்கலங்க வைத்த வரிகள் நில்மினி.

இங்கே பலருக்கும் இப்படி ஒரு மனநிலை இருக்கும் என நினக்கிறேன். எனக்கும் இதே நிலமைதான்.

நேற்று ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்சியிலும் ஒரு போட்டியாளர் சொன்னார்.  அவர் படத்தில் நடித்து அவரின் பெயர் படத்தில் எழுத்தோட்டம் வர சற்று முதல் அவர் தந்தை இறந்து விட்டதாக.

இப்படியானவரை கர்மயோகிகள் என்பார்களாம். அதாவது அவர்கள் வந்த வேலை முடிந்ததும், பலனை அனுபவிக்காமல் கிளம்பிவிடுபவர்கள்.

உங்கள் அப்பாவும் அப்படி ஒரு கர்மயோகி என்பதே என் கருத்து. 

நிச்சயமாக, மறு உலகு என்று ஒன்று இருந்தால் - நீங்கள் பார் போற்ற வாழ்வதை அவர் அங்கிருந்து பார்த்து அமைதி கொள்வார் 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

கண்கலங்க வைத்த வரிகள் நில்மினி.

இங்கே பலருக்கும் இப்படி ஒரு மனநிலை இருக்கும் என நினக்கிறேன். எனக்கும் இதே நிலமைதான்.

நேற்று ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்சியிலும் ஒரு போட்டியாளர் சொன்னார்.  அவர் படத்தில் நடித்து அவரின் பெயர் படத்தில் எழுத்தோட்டம் வர சற்று முதல் அவர் தந்தை இறந்து விட்டதாக.

இப்படியானவரை கர்மயோகிகள் என்பார்களாம். அதாவது அவர்கள் வந்த வேலை முடிந்ததும், பலனை அனுபவிக்காமல் கிளம்பிவிடுபவர்கள்.

உங்கள் அப்பாவும் அப்படி ஒரு கர்மயோகி என்பதே என் கருத்து. 

நிச்சயமாக, மறு உலகு என்று ஒன்று இருந்தால் - நீங்கள் பார் போற்ற வாழ்வதை அவர் அங்கிருந்து பார்த்து அமைதி கொள்வார் 🙏🏾

உண்மைதான் goshan_che. எல்லோருக்கும் இழப்புக்கள்  எதோ ஒரு விதத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் ஏற்று, கிடைத்ததை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும். இப்படியான தளங்களில், சிலவேளைகளில் எமது மனதில் உள்ளவற்றை பகிர்ந்தால் மனம் ஆறும். அப்படி செய்வதும் உள நலத்துக்கும் நல்லது. அப்பா உண்மையிலேயே கர்மா யோகிதான் . தனது இள வயதில் ஓரளவு வாழ்க்கையை அனுபவித்தார். அதை நினைத்து கொஞ்சம் நிம்மதி. உங்கள் பதிலுக்கு நன்றி 🙏:295_rose:

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nilmini said:

 

 அன்று இரவு அப்பாவுக்கு சொல்லி கொண்டாடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்க அதே இரவு அப்பாவின் திடீர் மரணம் எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை நடப்பதெல்லாம் ஒரு கனவு மாதிரியும் மனதளவில் ஒட்டாமல் ஏனோ  தானோ என்று செய்வதுபோல்தான் இருக்கு. அப்பாவை இழப்பு என்னை மிகவும் பாதித்து விட்டது.
 

மிகவும் மோசமான நிலமை.உங்கள் வைராக்கியமும் அப்பாவின் ஆசியும் தான் உங்களின் இன்றைய வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுவைப்பிரியன் said:

மிகவும் மோசமான நிலமை.உங்கள் வைராக்கியமும் அப்பாவின் ஆசியும் தான் உங்களின் இன்றைய வெற்றி.

இந்த வைராக்கியம் இங்க இருந்து வந்தொதோ தெரியவில்லை. அதையும் அப்பாதான்  தந்துவிட்டு போய்விட்டார் என்று நினைக்கிறன். உங்கள் ஆதரவுக்கு நன்றி சுவைப்பிரியன் அவர்கள். 

வாழ்த்துக்கள் டாக்டர், இன்னும் நிறைய சேவைகளை நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யவேணும் நீங்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.