Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் தாக்கினார்... சுடுவோம் என மிரட்டினார்: மாணவர்கள் போராட்டம், குற்றச்சாட்டு!

Featured Replies

11 hours ago, ராசவன்னியன் said:

கல்வி என்பது வேலை தேவைக்கு ஏற்ப மட்டும்தானா..?

படிப்பறிவற்ற சமூகம் கொண்ட மூன்றாம் தர நாட்டிற்கும், ஓரளவு படிப்பறிந்த சமூகம் கொண்ட நாட்டிற்கும் பாரிய வித்தியாசமுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் விதி மீறல்கள் இருந்தாலும், படித்து முன்னேறி வரும் சமூகம் என்பதால் கட்டுக்குள் கொணர்ந்து சுமூகமான மக்கள் வாழ்க்கைக்கு சூழ்நிலை அமைப்பது எளிது அல்லவா..?

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல என்றாலும் நடைமுறை உலகில் கல்வி என்பது வேலைக்கான தகுதியை மதிப்பிடும் ஒன்றாகவே பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சிறு வயதில் இருந்து பிள்ளைகளின் சமூகவியல் தகைமையை வளர்க்கும் வகையில் கல்வித்திட்டங்கள் அமையும் பட்சத்தில் பரவலாக நாட்டில் கல்வி அறிவுள்ள சமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட அறிவுஜீவிகளை உருவாக்க முடியும். பொதுவாக தெற்காசிய நாடுகளில் மாணவர்களின் துறைசார் கல்வியை ஊக்கப்படுத்தும் அளவுக்கு சமூகம் சார் கல்வியை அளிப்பதில்லை என்பதே அந்த நாடுகளில் கற்றோர்கள் கூட எவ்வளவு திறமை இருந்தாலும் இணைந்து செயற்பட முடியாமல் ஈகோ போன்ற காரணங்கள் உள்ளது என்பது எனது கருத்து.

சுவிற்சர்லாந்தில் முதலாம் வகுப்பில் இருந்து பிள்ளைகளின் மதிப்பீடு வகுப்பறைகளில் அவர்களின் செயற்பாட்டு அடிப்படையிலேயே ஆரம்பிக்கிறது. மூன்று முக்கிய விடயங்கள் கருத்தில் எடுக்கப்படுகிறன்றன.

1.   படிக்கும் பாடங்களின் திறமை(Fachkompetenz - Professional competence)

2.   பிள்ளைகளின் இயல்பான திறமை (Selbkompentenz – Self- Compentence)

3.   இணைந்து செயற்படும் சமூகத்திறமை (Sozialkompentenz – Socialskils

இந்த மூன்றிலும் Sozialkompentz மிக முக்கியமானதொன்றாக ஆரம்ப கல்வியில் இருந்து மதிப்பீடு செய்யப்பட்டு அந்த திறமை பிள்ளைகள் மத்தியில் வளர்த்தெடுக்ககப்படுகிறது. இணைந்து வேலை செய்யவேண்டிய சிறு சிறு வேலைகளை குழுக்களாக பிரிக்கப்பட்டு  பிள்ளைகளுக்கு கொடுக்கபட்டு அவற்றை எப்படி மற்ற பிள்ளைகளுடன் உரையாடி சிறப்பாக செய்கிறார்கள் என்பது அவதானிக்கப்படும். ஒரு குழுவில் மற்றய பிள்ளைகளின் ஆலோசனைகளை புறந்தள்ளி தான்தோன்றி தனமாக செயற்படுகிறார்களா என்பதும் கவனிக்கப்படும். அதேவேளை சோம்பேறித்தனத்தால் மற்றய பிள்ளைகளின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்பதும் கவனிக்கப்படும். ஒருவருக்கொருவர் எப்படி விட்டுக்கொடுத்து அந்த வேலையை செய்கிறார்கள் என்பதும் கவனிக்கப்படும். இதனால் பிள்ளைகள் வளர்ந்து சமூகத்தில் பலருடன் இணைந்து வேலை செய்யும் போது ஒருவருக்கொருவர் சமமதிப்பை கொடுக்கும் திறமை வளர்தெடுக்கப்படுகிறது. இதனால் அவர்களின் Professional Compentence, self- kompentence ஆகியவற்றின் முழு வினை திறனும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு கிடைக்க செய்வதே இந்த கல்வித்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதனால் பிள்ளைகள் வேலைக்கான கல்வியை கற்றாலும் சமூக பொறுப்பு மிக்கவர்களாக வருவதற்கான ஊக்கப்பாட்டை கல்வி முறை வழங்குகிறது.

Edited by tulpen

  • Replies 59
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல என்றாலும் நடைமுறை உலகில் கல்வி என்பது வேலைக்கான தகுதியை மதிப்பிடும் ஒன்றாகவே பங்கு வகிக்கிறது. இருந்தாலும் சிறு வயதில் இருந்து பிள்ளைகளின் சமூகவியல் தகைமையை வளர்க்கும் வகையில் கல்வித்திட்டங்கள் அமையும் பட்சத்தில் பரவலாக நாட்டில் கல்வி அறிவுள்ள சமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட அறிவுஜீவிகளை உருவாக்க முடியும். பொதுவாக தெற்காசிய நாடுகளில் மாணவர்களின் துறைசார் கல்வியை ஊக்கப்படுத்தும் அளவுக்கு சமூகம் சார் கல்வியை அளிப்பதில்லை என்பதே அந்த நாடுகளில் கற்றோர்கள் கூட எவ்வளவு திறமை இருந்தாலும் இணைந்து செயற்பட முடியாமல் ஈகோ போன்ற காரணங்கள் உள்ளது என்பது எனது கருத்து.

...

நல்ல கருத்து. 👍

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

கல்லூரியில் ஸ்ட்ரைக், கலாட்டா, அடிதடி எல்லாம் நடந்தது.. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடப்பது போல ஆசிரியர்களிடம் மோதுவது இல்லை. 🤔

ஏனெனில் ஒவ்வொரு செமஸ்டர் தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசான், உள்ளக மதிப்பிட்டு எண்கள் (Internal marks) வழங்க வேண்டும். அவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தின் செமஸ்டர் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையில் சேரும்.

இந்தவகை கலாசாரம்.... தென் இலங்கை சிங்கள மாணவர்கள், யாழ் பல்கலைக்கழகம் வந்து படிக்க ஆரம்பித்த (2009 க்கு) பின்னர் வந்து சேர்ந்து இருக்கிறது.

அண்மையில், கூட ராக்கிங்கில் சிக்கியவர்கள் சிங்கள மாணவ, மாணவியர்.

இந்த பிரச்சனையில் சிக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. விரைவில் தெரியலாம்.

இது வேறு கலைப்பீடம் என்கிறார்கள்.... அநேகமாக கலைப்பீடமாணவர்கள், பெரும்பாலும் சிங்களவர்கள், தான் இந்த பிரச்சனைகளுக்கு முன்னே நிற்பவர்கள். 

எனக்கும், தமிழ்சிறிக்கும் சிலவேளை நில்மினிக்கும் தெரிந்த ஒருவர்... கந்தர்மடம், அரசடி வீதி, ரவிராஜ் என்பவர்.

கண்டி பேராதனை மருத்துவ பீடத்துக்கு போனார். ஒரு பேராசிரியருடன் மோதினார்.

நான் இருக்கும் வரை நீ, படிப்பு முடித்து வெளியே போக மாடடாய் என்று நேரடியாக சொன்னார் அந்த சிங்கள பேராசிரியர்.

ஆனால் அவர் இனத்துவேசி அல்ல. எனது அக்கா அதே பாச்சில்... படித்து வெளியே வந்து அமெரிக்காவில் இருக்கின்றா.

அவ்வாறே நடந்தது. கடைசி வருட பரீடசை முடிக்க முடியாமல், பாஸ் பண்ண முடியாமல், வெளியே வந்து, காம்பவுண்டராக வாழ்வினை ஓட்டி அண்மையில் இறந்து போனார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல 'நாங்கள் அச்சாப் பிள்ளையள், சிங்களவன் வந்து கெடுத்து விட்டான்" என்ற திசையிலயும் போகுது விளக்கம்! 

இது ஆசிரியர்களை, துணைவேந்தரை வேண்டுமென்றே தாக்கிய நிகழ்வா என்பதே முதலில் சந்தேகம், ஏதோ தள்ளு முள்ளுப் பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

இது போல ஆசிரியரைத் தாக்கும் நிகழ்வுகள் சிங்களப் பகுதிகளில் இருக்கும் பல்கலை.களிலும் நடப்பதில்லை. ரவிராஜ் கேஸ் பேராதனை வரும் புதுமுக மாணவர்களுக்கு சிரேஷ்டர்கள் urban legend போல சொல்லும் ஒரு விடயம். மது ஆறாக ஓடிய நிகழ்வொன்றில் நடந்த கையோங்கலே அமரர் ரவிராஜின் சோகத்திற்குக் காரணம். இதனால், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அளவாகக் குடியுங்கள் என்பதை வலியுறுத்த   இவரை உதாரணமாகச் சொல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 05:40, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூடமே போகேல்லை..

sadhu13.jpeg?resize=480%2C272&ssl=1

சொன்னால் நம்பமாட்டியள்.....நான் பள்ளிக்கூட போகமல் பள்ளிக்கூட சீசன் காட்டில் பள்ளி கூட பஸ்ராண்டில் இறங்கி திரும்ப வீடு நோக்கி நடப்பது வழமை 6 மாத த்திற்கு மேல், பிறகு என்னுடன் என் நண்பனும் சேர செய்யாத அட்டாகாசமில்லை, பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவானென என் நல்ல காலத்திற்கு சொந்தக்கார அண்ணையிடம் பிடிபட்டு பூசை அபிஷேகம் எல்லாம் நடந்து அதற்கு பின் மந்திரிச்ச மாதிரி பள்ளிக்கு போனேன், அதிலும் 2-3 பாதுகாவலர்களுடன், அவர்களுக்கு இப்ப நன்றி சொல்லனும்😀

20 minutes ago, வாதவூரான் said:

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

வாதவூரன் நீர் வேறு இதை சீரியசாக எடுத்துக்கொண்டு, எல்லா பல்கலையிலும் இது நடந்திருக்கு😂

On 12/10/2020 at 10:55, நியாயத்தை கதைப்போம் said:

இலவச கல்வியை உதாசீனம் செய்து மற்றைய மாணவர்களின் கற்றலுக்கும் இடையூறு விளைவிப்பவர்களுக்கு துணைவேந்தர் தனது கையால் அவர்கள் செவிட்டை பொத்தி இரண்டு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.

சரியாக சொன்னீர்கள் - உணராதவர்களை வீட்டுக்கு அனுப்புவது நல்லதே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

ஜஸ்ரின் அண்ணா,
சிங்களப் பகுதிகளில் ஏன்நடப்பதில்லைஇபேராதனைப் பல்கலைக்கழகத்தில்நான் படிக்கும் போது டீன் தொடக்கம்நாலைந்து விரிவுரைடயாளர்களை அடித்து மலசலகூட தண்ணீரால் குளிப்பாட்டினார்கள் . பக்கெட்டிங் (புச்கெடிங் ) கொஞ்சம் மோசமாக போனதால் விரிவுரையாளர்கள் தடுத்த போதுநடந்தது. உங்களுக்குநிறைய விடயங்கள் தெரிந்தாலும் சிலது உங்களுக்கு தெரிய வரவில்லை என்பதற்காக அதுநடந்திருக்கவே வாய்ப்பில்லை என முடிவெடுக்காதீர்கள்.அது சிங்கள மாணவர்கள் என்பதால் மன்னிப்புடன் முடிந்தது

அதுவும் தள்ளு முள்ளுத் தானே?  பக்கெட்டிங் செய்யும் போது மாறி சப் வார்டனையும் தூக்கி ஹில்டா மண்டப நீர்ச்சுனைக்குள் போட்டதும் நடந்தது தான். இதெல்லாம் ஆசிரியர் மீதான தாக்குதலா? இல்லையென்பது தான் என் அபிப்பிராயம். 

என் பதில் ஏதோ இதெல்லாம் யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் கொண்டு வந்த வன்முறைக் கலாச்சாரம் என்ற நாதத்தின் கருத்துக்கு பதில் கருத்து. அவர் சொன்னதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?  

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி  இருந்த

எத்தனையோ புரட்சிகளுக்கு  வழிகாட்டிய பல்கலைக்கழகம்  இன்று?????

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 02:36, ராசவன்னியன் said:

தமிழ்நாட்டில் தொழில்முறை (பொறியியல், மருத்துவம், வேளாண்மை) கல்விகளுக்கு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் பள்ளி இறுதிதேர்வில் 50 சதவீதம் எடுத்தால் அவர் அக்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற கல்விகளுக்கு (கலை, பட்டயம்-Diploma முதலியன)35% சதவீதம் மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

கல்லூரியில் இறுதி அனுமதி என்பது கிடைக்கும் இருக்கைகளின் எண்ணிகையை பொறுத்து ரேங்க் (Merit List) அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கப்படும் அல்லது நாமே தெரிவு செய்து கொள்ளலாம்.

வன்னியர்,

என் அனுபவத்தில் பள்ளியில் கல்வி கற்று அதன் தொடர்சியாக அரச பல்கலை புகுவதற்கு மிகவும் கஸ்டமான நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இங்கே லண்டனில் டாக்டர், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் என காலரை தூக்கி விடும் பலரோடு வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். இவர்களில் பலர் இலங்கையில் பிறந்திருந்தால் பல்கலை கழக அனுமதியே கிடைத்திருக்காது.

அப்படி ஒரு “வடி கட்டும்” போட்டி பரீட்சை முறை அங்கே: முக்கிய காரணம் வளத்தட்டுப்பாடு. ஒரு வருடத்தில் 1000 பேரை மட்டுமே டாக்டர் ஆக்க முடியும்.  எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் 1001வது ஆள் டாக்டராக படிக்க வளம் இல்லை. 

ஆகவே வடிகட்டலில் தப்புவோருக்கு மட்டுமே இடம்.

கல்கி கிருஸ்ணமூர்தி தன் யாழ்பாண பயண கட்டுரையில் - யாழ்பாணத்தின் பிரதான கைத்தொழில் கல்வி என்கிறார். 

இது முழு இலங்கைக்கும் பொருந்தும். 94% கல்வியறிவு உள்ள நாடு. ஒரு காலத்தில் மலேசியாவிலும், நைஜீரியாவிலும் ஆசிரியர்களா போன மக்கள். 

திறமையாக திட்டமிட்டு, மேல் கல்வியை விரிவு படுத்தி இருந்தால்- அவுட்சோசிங்கில் பெங்களூர், ஹைதரபாத்துக்கே தண்ணி காட்டி இருக்கலாம்.

ஆனால் “எல்லாரும் டாக்டர் ஆகிவிட்டால் யாருக்கு வைத்தியம் பார்ப்பது” என்ற குண்டு சட்டி மனப்பான்மையால் - அதி புத்திசாலிகள், கடும் உழைப்பாளிகள் மட்டுமே அரச பல்கலை போகலாம் எனும் நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.