Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் குத்து: ஆபாசத்தை ஒழித்து இளைஞர்களைக் காப்போம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் குத்து: ஆபாசத்தை ஒழித்து இளைஞர்களைக் காப்போம்!

spacer.png

 

இரண்டாம் குத்து என்கிற இருட்டு அறையில் முரட்டுக்குத்து - பாகம் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதல் பாகம் ரிலீஸானபோதே இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை சளைக்காமல் எதிர்கொண்ட அத்திரைப்படம் கட்டுக்கடங்காத பார்வையாளர்களை தியேட்டரிலும், சோஷியல் மீடியாக்களிலும் பெற்றது. அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான். நல்ல லாபத்தையும் சம்பாதித்தது. அப்படி இருந்தும், இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்து இந்தப்படத்தை எதிர்த்துப் பேசுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைத்த இந்த எதிர்ப்பினை, தற்போது பனங்காட்டுப் படை கட்சி கையிலெடுத்திருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பனங்காட்டுப் படை சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் புகாரில் “இரட்டை அர்த்த வசனங்களையும், ஆபாசமான வசனங்களையும் வைத்து படமெடுத்திருக்கும் இரண்டாம் குத்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் நடிகைகள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கைது செய்யப்படவேண்டியவர்கள். நம் கலாச்சாரத்தையும், இளைஞர்களையும் இவர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

 

மேலும், இந்திய திரைப்பட தணிக்கை ஆணையத்தின் வரைமுறையில் ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அப்படியெல்லாம் இந்தத் திரைப்படம் இல்லை என்பதையும் குறிப்பிட்டு, உடனடியாக படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பிரச்சினைகளை எதிர்நோக்கும் படக்குழுவினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “வெறும் டிரெய்லரை வைத்துக்கொண்டு படத்தை அளவிடுவது தவறு. டிரெய்லரில் இருக்கும் காட்சிக்கு படத்தில் வேறு அர்த்தம் இருக்கலாம். இதுவரையில் சென்சார் செய்யப்படாத இந்தப் படத்தை எப்படி சென்சார் முறைப்படி அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை” என்கின்றனர்.

படக்குழுவினர் சொல்வதன்படி, டிரெய்லரின் காட்சிக்கும் படத்தின் காட்சிக்கும் நிறைய வேறுபாடும், வேறு அர்த்தங்களும் இருக்கலாம். ஆனால், அந்த அர்த்தம் டிரெய்லரில் காட்டியிருப்பதைவிட மோசமாக இருக்குமே தவிர, குறைவாக இருக்காது என்பது முதல் பாகத்திலிருந்து நாம் அறிந்த உண்மை.

 

https://minnambalam.com/entertainment/2020/10/10/16/irandam-kuthu-movie-cinema-news

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் குத்து: எல்லா பக்கமும் குத்து!

spacer.png

 

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் டீம், இம்முறை இரண்டாம் குத்து என்ற பெயரில் களம் கண்டிருக்கிறது. முதல் பாகம் எதிர்பாராத அளவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுத்ததைப் போலவே, அதிகமான எதிர்ப்பையும் சம்பாதித்தது. இந்தக் காலத்தில் பேசப்படுவதே பெரிய விஷயம் என்று நினைத்தாரோ என்னவோ, அந்தப் படத்தின் இயக்குநர் சன்தோஷ், இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்துவிட்டார். இயக்குநரும் நானே, ஹீரோவும் நானே என்ற அழுத்தம் ஏற்பட்டதால், இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தின் போஸ்டரை விமர்சித்ததற்குக் காரசாரமாக பதில் ட்வீட்டை பதிவு செய்து, மேலும் பல எதிர்ப்புகளை சம்பாதித்துவிட்டார்.

‘வீட்டிலுள்ள பெரியவர்கள் ஏதாவது பேசினால், எப்படி கண்டுகொள்ளாமல் போவோமோ, அதுமாதிரி இல்லாமல் அவமதிப்பாக பேசியது தவறில்லையா?’ என சினிமாவில் ஏற்பட்ட எதிர்க்குரல்களால் கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்பதுபோன்ற ஒரு ஸ்டேட்மெண்டை வெளியிட்டிருக்கிறார் சன்தோஷ். அதாவது “பாரதிராஜா சார் வெளிப்படுத்திய கருத்துக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. அது ஒரு தவறான முடிவு. என்ன செய்கிறேன் என்ற புரிதல் இல்லாமல் செய்துவிட்டேன். அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகப்பெரிய ஜாம்பாவான் இயக்குநரான பாரதிராஜா, பலருக்கும் முன்னோடியாக இருப்பவர். நான் அவரது கருத்துக்கு அப்படி பேசியிருக்கக் கூடாது. இனி வெளிவரும் போஸ்டர்களில், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மாதிரி டிசைன் செய்து வெளியிடுவோம்” என்று கூறியிருக்கிறார் சன்தோஷ்.

 

சன்தோஷுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையேயான சர்ச்சை ஒரு பக்கம் என்றால், இந்தப் படத்தை தடை செய்யக்கோரி பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், நேற்று (11.10.2020) சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதுபோலவே, இந்தியாவின் முக்கியமான பைக் ரேசர்களில் ஒருவரான அலிஷா அப்துல்லாவும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டுமென தமிழக முதல்வரிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். இதுபோல, ட்விட்டரில் பல எதிர்க்குரல்கள் கிளம்பியிருக்கின்றன. இவற்றைவிட அதிகமாக சினிமாவிலேயே பேசத் தொடங்கிவிட்டனர். அதில் முக்கியமானது, இந்தப் படத்தின் சென்சார் தகவல்களில் கைவைப்பது தான். சென்சாரை இந்தப் படம் தாண்டக் கூடாது என்று முடிவெடுத்து சிலர், அந்தப் பக்கம் தலைகாட்டியபோது தான், இந்தப் படம் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டது எனத் தெரியவந்திருக்கிறது.

இரண்டாம் குத்து படத்துக்கு 10க்கும் மேற்பட்ட வெட்டுகளை செய்யச் சொல்லி, தரமான ‘A’ சான்றிதழையும் வழங்கியிருக்கிறது சென்சார் குழு. சென்சார் வேலைகளும் முடிந்துவிட்டது தெரிந்தால், படத்துக்குக் கிடைக்கவேண்டிய நெகடிவ் புரமோஷன் வேறு பக்கம் சென்றுவிடும் என்பதால் படக்குழுவுக்கு நெருங்கியவர்களுக்குக்கூட தெரிவிக்காமல் சைலண்டாக இருக்கிறது படக்குழு என்கின்றனர்.
 

 

https://minnambalam.com/entertainment/2020/10/11/4/irandam-kuthu-movie

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை | லயோலா மணி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்கார கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களுக்கு     இரண்டாம் குத்து சந்தோசத்தை தரும்.😜

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன நல்ல பப்பிளிசிட்டி குரோணா காலத்தில பசங்கள் காய்ந்துபோய்க் கிடக்கிறாங்கள் அடுத்த வேட்டைக்கு ஆயத்தம் பண்ணுவாங்க.

சரி இந்தப்படத்தின் இயக்குனர் டெஸ்ட் ரியூப்பில உருவாகி வாடகைத்தாய்க்குப் பிறந்திருப்பாரோ?  அதுசரி இப்போதுதானே குழந்தைப்பாக்கியம் பெற மருத்துவமனைகளைத்தேடும் பெண்களது கணவர்களது விந்தணுக்களில் கருவை உருவாக்குவதற்கான போதிய பலம் இல்லையெனில் தெருவில போறவங்ககிட்டையும் விந்தணு வாங்கி கருவை உருவாக்கி தமது வைத்திய சாலையின் கிரேட்டை உயர்த்தும் பல பொறுக்கி வைத்தியர்கள் காசைக்குறிவைத்து இந்தியாவின் தலைநகரின் கடைத்தெருவில் அலைகிறார்கள்.

அண்மையில் தமிழ்நாட்டில் கைதான கோழி இறைச்சிக்கடைக்காரன் ஒருதருடன் தொடர்பிலிருந்த குழந்தைப்பேறு மருத்தவர் கூறியதான தகவல் இன்று செய்தி ஊடகங்களில் வெளிவந்ததே 
"உன்னுடைய குழந்தை எத்தனை பெண்களின் வயிற்றில் வளர்கிரதென்று தெரியுமா" என்பதாகும்.
அப்பிடிப்பிறந்தால் இப்படித்தான் இருக்கும். பெட்டைப்பயல் அநத் இயக்குணர் தன்னிடம் இல்லாததி இப்படிப் பெரிதாகக் காட்டுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே பெரிய தலைகள் எதிர்ப்புக் காட்டுவதால் விளம்பரம் கூடி இந்தப் படம் ஓடும் போல இருக்கு!😎

அது சரி, பாரதிராஜா தானே சில ஆண்டுகள் முன்பு "மீ ரூ" இயக்கம் பற்றி பத்திரிகைக்க் காரர்கள் கேட்ட போது கொதித்துப் போய் எழுந்து சென்றவர்? தமிழ் சினிமாவில் இருப்பதாக நடிகைகள்  சொல்லும் casting couch  கலாச்சாரத்தையே தவறென்று என்று சொல்ல முடியாத பாரதிராஜாவுக்கு திடீரென்று இளைஞர்கள் பாழாய்ப் போய்விடுவர் என்ற அக்கறை எப்படி வந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை

தடை போடச் சொல்லிக்கேட்கின்றார்கள், ஆனால் இரண்டாம் குத்து படத்துக்கு 10க்கும் மேற்பட்ட வெட்டுகளை செய்யச் சொல்லி, தரமான ‘A’ சான்றிதழையும் வழங்கியிருக்கிறது சென்சார் குழு.😜

முரட்டுக்குத்து படம் அமேஸன் பிரைமில் பார்த்தேன்.😊 மோசமான இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லாத விழல் படம்😱

ஆனால் அடிக்கடி தம்பி என்று வசனம் வருவதால் “தம்பிகள்” சிலர் பார்க்கலாம். வழமைபோல எதுவும் விளங்காது🤪

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தடை போடச் சொல்லிக்கேட்கின்றார்கள், ஆனால் இரண்டாம் குத்து படத்துக்கு 10க்கும் மேற்பட்ட வெட்டுகளை செய்யச் சொல்லி, தரமான ‘A’ சான்றிதழையும் வழங்கியிருக்கிறது சென்சார் குழு.😜

முரட்டுக்குத்து படம் அமேஸன் பிரைமில் பார்த்தேன்.😊 மோசமான இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லாத விழல் படம்😱

ஆனால் அடிக்கடி தம்பி என்று வசனம் வருவதால் “தம்பிகள்” சிலர் பார்க்கலாம். வழமைபோல எதுவும் விளங்காது🤪

நான் பார்க்கவில்லை, ஆனால் முதல் படத்தை பார்த்த நண்பர்களும் இதையே சொன்னார்கள். பாகம் 2 இந்த எதிர்ப்பாலாயே கொடி கட்டும் போல தான் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாத்தும் தடை ...எல்லாத்தையும் மூடி வை .....போன்ற காரணங்களால் தான் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து இருக்கு 
 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

இப்படி எல்லாத்தும் தடை ...எல்லாத்தையும் மூடி வை .....போன்ற காரணங்களால் தான் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து இருக்கு 
 

எதை எவ்வாறு எங்கே திறப்பது என்றும் ஒரு வரையறை உண்டு 
பெண்களின் நிர்வாணத்தில் எதுவும் இல்லை அதில் ஆபாசமோ 
அசிங்கமோ இல்லை அவர்களின் ஆடையற்ற உடல்தோற்றம் மட்டுமே 
இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களும் சில பாடல் காடசிகளும் 
அருவெறுப்பாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. பெண்கள் நிர்வாணமாக 
வரும் கோலிவுட் காடசிகளை எந்த சலனமும் இல்லாமல் எனது சகோதர்கள் 
அம்மா அப்பாவுடன் இருந்து பார்க்கலாம் போல இருக்கும் 
ஆனால் சில தமிழ் படங்களை பார்க்க முடிவதில்லை.
ஆபாசம் மட்டும் இல்லை குடும்பமாக பார்க்கும் தகவுடைமையை 
சென்சார் போட்டில் பெற்றுவரும் பல படங்களில் 
கத்தியால் கழுத்தை வெட்டுவது இரத்தம் பீச்சி அடிக்க குத்துவதை 
பல சிறுவர்கள் பார்த்து மன அழுத்தம் கொள்கிறார்கள் 

இந்த குழப்ப நிலைதான் ஆபத்தானது 
பெண் உடலுக்கான  மரியாதை என்பது 
பல ஆபாச பாடல் காட்சிகளில் மிக மோசமக இருக்கிறது 
இந்த குழாமுக்குள்தான் நாம் வளர்ந்து வருகிறோம் 
இன்றைய இந்திய பாலியல் கொடுமைகளுக்கு நீங்கள் கூறுவதுபோல 
இந்த சினிமாவும் எமது இந்துமதமும் முக்கிய காரணம் 

அழகை ஆராதிக்க  தெரியவில்லை
மாறாக ஆபாசம் செய்கிறார்கள் இந்த 
ஆபாச மனநிலையை சினிமா ஊடாக 
பெறுவதால்தான் பலர் 
இயற்கையே அதிசயிக்கும் வண்ணம் 
அழகாக இருக்கும் காஜலை அழகு இல்லை என்று சொல்கிறார்கள் 
அது அவர்கள் தப்பு இல்லை அவர்களுக்கு அழகை காணும் 
விதமாக இந்த சினிமா இதுவரை இருக்கவில்லை என்பதுதான் உண்மை. 

இந்த குத்துப்பார்த்து 
பாலியல் வன்முறை குறையும் 
என்ற கருத்து அந்த தளத்தில் இருந்து வருவதுதான் 
ஆனால் இது எதிர்வினையையே கொடுக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தடை போடச் சொல்லிக்கேட்கின்றார்கள், ஆனால் இரண்டாம் குத்து படத்துக்கு 10க்கும் மேற்பட்ட வெட்டுகளை செய்யச் சொல்லி, தரமான ‘A’ சான்றிதழையும் வழங்கியிருக்கிறது சென்சார் குழு.😜

முரட்டுக்குத்து படம் அமேஸன் பிரைமில் பார்த்தேன்.😊 மோசமான இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லாத விழல் படம்😱

ஆனால் அடிக்கடி தம்பி என்று வசனம் வருவதால் “தம்பிகள்” சிலர் பார்க்கலாம். வழமைபோல எதுவும் விளங்காது🤪

தலைப்பை பார்த்து கருத்து எழுதினால் இப்படிதான் இருக்கும்😜

மேட்டுக்குடி ரிமீன் அதே நக்கல்😜😜

“தம்பிகள்” என்று வசனங்கள் வந்தால் உங்களுக்கு ஏன் இந்த கீழ் புத்தி இப்படி விளங்காது என்று எழுத🤔

 ஓகோ நீங்கள் எல்லாம் விளங்கியவரா? கிழுடுகளுக்கு உணர்ச்சி இருந்தா தானே இவற்றைப்பார்க்க😜. என்றாலும் நாக்கை தொங்க போட்டு முரட்டு குத்து பார்த்த கிழட்டு விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன சொல்ல😜

விழுந்து விழுந்து இப்படிப்பட்ட கீழ்தரமான படங்களை பார்ப்பது, பிறகு சிலர் இதனால் பார்ப்பார்கள் என்று பதிவது

இந்த மேட்டுகுடி விளங்கிய ரீமிற்கு இந்த முதல் குத்தில் என்ன விளங்கினது என்று ஒரு மேட்டுகுடி ரீமின் பார்வையில் விமர்சனத்தை வைக்கலாமே, 

இவர் இப்படி பதிந்தவுடன் விழுந்து சிரிக்கும் சிலருக்கு என்னதான் விளங்கியதோ,  🤔

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் குத்து’ போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன் – நடிகர் சாம்ஸ் உறுதி.!

Screenshot-2020-10-13-12-59-05-355-org-m ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாம்ஸ் இனி அதுபோன்ற படங்களில் நடிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “இதுவரை நான் நடித்த படங்களில் கண்ணியமாகவே நடித்திருக்கிறேன். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய ஒரு நடிகனாகவே இதுவரை இருக்கிறேன். இந்த மாதிரியான ஜானர் படங்கள் இப்பொழுது சகஜமாகத்தான் வருகிறதே அந்த வயது இளைஞர்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஜாலியாக காமெடியா செய்யப்போகிறோம்.

‘A’ படம் என்று தணிக்கைச் சான்றிதழுடன் வரப் போகிறது இதில் என்ன இருக்கிறது? நடித்தால் என்ன? என்று தான் இந்தப் படத்தில் நடித்தேன். ஆனால், இந்தப் படத்திற்கு இருக்கின்ற எதிர்ப்பை மனதில் கொண்டும் என் கண்ணியத்தைக் காப்பாற்றும் பொருட்டும், இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்றாலும் இனி ‘இரண்டாம் குத்து’ போன்ற நேரடி அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதைத் தவிர்ப்பது என்று முடிவு எடுத்திருக்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்கிறேன். தனிமனித ஒழுக்கமே சிறந்தது என்பது என் கருத்து”. இவ்வாறு சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

https://vanakkamlondon.com/cinema/2020/10/87556/

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியில் ஐந்தாம் குத்து 
எந்த எதிர்ப்பும் இல்லாமல் நல்ல வெற்றிகரமாக ஓடுகிறது 
எல்லா குத்துக்கும் நல்ல இசை எதோ ஒரு நல்ல பாடல் 
அமைந்துவிடுகிறது அர்த்தம் புரிவதில்லை இனிமையான பாடல்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, உடையார் said:

தலைப்பை பார்த்து கருத்து எழுதினால் இப்படிதான் இருக்கும்😜

மேட்டுக்குடி ரிமீன் அதே நக்கல்😜😜

“தம்பிகள்” என்று வசனங்கள் வந்தால் உங்களுக்கு ஏன் இந்த கீழ் புத்தி இப்படி விளங்காது என்று எழுத🤔

 ஓகோ நீங்கள் எல்லாம் விளங்கியவரா? கிழுடுகளுக்கு உணர்ச்சி இருந்தா தானே இவற்றைப்பார்க்க😜. என்றாலும் நாக்கை தொங்க போட்டு முரட்டு குத்து பார்த்த கிழட்டு விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன சொல்ல😜

விழுந்து விழுந்து இப்படிப்பட்ட கீழ்தரமான படங்களை பார்ப்பது, பிறகு சிலர் இதனால் பார்ப்பார்கள் என்று பதிவது

இந்த மேட்டுகுடி விளங்கிய ரீமிற்கு இந்த முதல் குத்தில் என்ன விளங்கினது என்று ஒரு மேட்டுகுடி ரீமின் பார்வையில் விமர்சனத்தை வைக்கலாமே, 

இவர் இப்படி பதிந்தவுடன் விழுந்து சிரிக்கும் சிலருக்கு என்னதான் விளங்கியதோ,  🤔

தம்பி,சீமான்,பாரதிராஜா என்ற சொற்களை நீங்கள் வாய்க்குள் முணுமுணுத்தாலும் அவர்களுக்கு இடி விழுந்த மாதிரி  கேட்கும்.😜

உலகத்திலை ஆரும் பொம் எண்டு கூகுள்ளை தேடினால் அமெரிக்கனுக்கு கன இடங்களிலை சிவப்பு லைட் எரியுமாம்.....அது மாதிரி இவையளுக்கும்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.